என்னை பொறுத்தவரை இறைவன் என்பவர் ஒரு பரிசுத்தர்! அவர் பரிசுத்தராகவும் மிகவும் நல்லவராகவும் இருப்பதால்தான் அவர் இறைவன்! அவரின் பரிசுத்தம் போய்விட்டது என்றால் அவரும் ஒரு சாத்தான் தான்! எனவே இறைவன் என்று ஒருவர் இருந்தால் அவர் நிச்சயம் நல்லவராக பரிசுத்தராக நீதியுள்ளவராகத்தான் இருக்கவேண்டும் என்பதே எனது கருத்து! அதனால்தான் நான் அவரை மிகுந்தஅன்பு, கருணை, பொறுமை, நீதி மற்றும் நீடிய சாந்தமுள்ளவராகவே காண்கிறேன்! அவரின் எள்ளளவேனும் குறையில்லை, அவர் செய்வதெல்லாம் நம் நன்மைக்கே என்றே கருதுகிறேன்!
இன்று உலகில் கடவுள் என்று ஒருவர் கிடைத்தால் குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டு அனேக கேள்விகள் கேட்க அநேகர் தயாராக இருக்கிறோம்! ஏன் நானும் கூட ஒருகாலத்தில் அப்படி கேட்டவன்தான்!
நாம் ஒரு மிகபெரிய நிறுவனத்தில் ஒரு சாதாரண வேலையில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த நிறுவனத்தில் நமக்கு ஆயிரம் குறைபாடுகள் தெரியலாம்! அந்த கம்பனியின் முதலாளி நியமித்திருக்கும் சம்பள விகிதங்கள் நமக்கு பிடிக்காமல் போகலாம்! கம்பனியில் சட்ட திட்டங்கள் நமக்கு அறவே பிடிக்காமல் இருக்கலாம்! எது பிடிக்காமல் போனாலும் நமது அறிந்துகோள்ளுதலுக்கு எட்டாமல் போனாலும், முதலாளியைபற்றி அவதூறு எழுப்பி அவரை முன்னால் நிறுத்தி அனேக கேள்வி கேட்க விரும்பினால் அது சாத்தியமா? நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்துமே அந்த முதலாளியிடமிருந்துதான் பெறுகிறோம். அப்படியிருக்க, நாம் கேட்கும் கேள்விக்கு முதலாளி பதில் சொல்லவேண்டும் என்பது கட்டாயமா? அப்படி அவர் ஒரு பதிலை கொடுத்தாலும் இன்னொரு கேள்வி எழுப்பாமல் நாம் சமாதனம் அடைந்துவோடுவோம் என்பதுதான் என்ன நிச்சயம்?
ஆனால் அதே தொழிலாளி அதே முதலாளிக்கு மிகவும் விசுவாசமுள்ளவனாகவும் அவரின் எல்லா நிலைகளிலும் தானும் பங்கெடுத்து தனக்கென்று ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் அவர் எதிர்பார்ப்பையெல்லாம் நிறைவேற்றி, அவரின் நோக்கம் என்னவோ அதை செய்வதே தனது நோக்கமாக கொண்டு செய்லப்டுவானாகில் நிச்சயம் தன் வாழ்வும் சரிவர அமைத்துக் கொள்வதோடு அந்த முதலாளியே செய்யும் எல்லா செயலுக்கும் காரணத்தையும் அவரிடமிருந்தே சிறிது சிறிதாக அறிய முடியும்!
அதுபோல்தான் இறைவனும்! 'நமதறிவு பெரியது' என்று நினைத்து, அவரிடம் குறை கண்டுபிடுத்துக்கொண்டிருக்கும்வரை நம்மால் உண்மையை அறியமுடியாது! அவர் நல்லவர், அவர் எல்லாவற்றையும் என் நன்மைக்கே செய்கிறார், நான்தான் அறியவில்லை அல்லது என் அறிவுக்கு எட்டவில்லை என்ற நோக்கில் போனாலே அவர் செய்யும் எல்லா செயலிலும் உள்ள நியாயத்தின் உண்மையை அறியமுடியும் என்றே நான் கருதுகிறேன்!
முதலாளியிடம் அகம்பாகமாகவும் ஆணவமாகும் கேட்டால் பதில் கிடையாது, மாறாக வீட்டுக்கு போகவேண்டிய நிலையே ஏற்ப்படும்! அனால் நமது இறைவன் அப்படியல்ல தன்னை ஒருவன் எவ்வளவு தூற்றினாலும் போற்றினாலும் அவருக்கு கண்ணிருக்கா? காத்திருக்கா? இரக்கமிருக்கா? ஏன்தான் இப்படி சோதிக்கிறானோ? ஏன்தான் என்னை படைத்தானோ? போன்று எத்தனை கேள்விகள் கேட்டலும் அவர் நம்மை பாதுகாத்துக்கொண்டுதான் இருக்கிறார்!
எனவே அவர் மிக மிக நல்லவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!
இதில் இன்னொரு கருத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது! ஒரு முக்கியமான விஷயத்தை ஒருவருக்கு தெரியப்படுத்தும் முன் இதனால் விளையும் பயன் என்ன நன்மை தீமை என்ன? என்பதை எல்லோரும் ஆராய்வதுண்டு. கம்பனியின் நிதி நெருக்கடியயோ அல்லது போட்டியாளர்களைபற்றியோ ஒரு விசுவாசமற்ற தொழிலாளிக்கு தெரியப்படுத்தினால் அதனால் ஏதும் பயன் ஏதுமின்றி பாதகமான நிலைதான் ஏற்ப்படும் அதுபோல் ஒரு ரகசியத்தை தனது பக்தருக்கு இறைவன் தெரியப்படுத்தும் முன் அதனால் உண்டாகும் விளைவுகள்பற்றி அறிந்திருப்பதால் ஒருவர் எத்தஅளவு தன்னுடன் ஒத்துழைக்கும் ஒரு தாழ்மையான நிலையில் இருக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே பல அறிய காரியங்களை தெரியப்படுத்துகிறார்! தாழ்மை மற்றும் கீழ்படிதல் இல்லாதவர்களுக்கு எந்த ரகசியத்தை சொல்லியும் பயனில்லாத காரணத்தால் அவர்கள் உண்மையை ஒருநாளும் அறிய முடியாது என்றே நான் கருதுகிறேன்