இந்தியர் ஒருவர் ஜெர்மன் விசாவுக்காக விண்ணப்பம் செய்வதற்காக விண்ணப்ப படிவம் வாங்கி, மிக சரியாக நிரப்பி அதற்க்கு தேவையான வரயோலையும் எடுத்துக்கொண்டு விசா வழங்கும் நிலையத்துக்கு சென்றார். அதை சரிபார்த்த விசா அதிகாரி அவரது விண்ணப்ப படிவத்தை நிராகரித்துவிட்டார்! காரணம், முன்பு இருந்த விசாகட்டணம் இப்போது மாறியிருந்தது அதை அவர் இனையதளத்தில் சரியாக கவனிக்காததால் அவரின் முயற்சி எல்லாம் வீணானது!
என்றோ உள்ள விண்ணப்ப படிவத்தையும் என்றோ நிர்ணயிக்கப்பட்ட விசா கட்டணத்தையும் எடுத்துக்கொண்டு வெளிநாடுபோக நினைத்தல் எங்கும் போக அனுமதி கிடைக்காது.
அதுபோல்
எக்காலத்திலோ எழுதப்பட்ட வேதங்களை கரங்களில் வைத்துக்கொண்டு அதையே பிடித்துக்கொண்டு அதன் அடிப்படையில் மட்டுமே உண்மைகளை தேடினால் இறை ராஜ்யத்தின் இன்றைய உண்மை நிலயை கண்டறிய முடியாது!
இயேசு கிறிஸ்த்து வாழ்ந்த காலத்தில் அவரை வெறுத்து ஒதுக்கியவர்கள் வேறுயாருமல்ல. இறைவன் வழங்கிய "பழைய ஏற்பாட்டு' என்னும் புத்தகத்தின் கையில் வைத்துகொண்டு அதில் அதிக ஞானம் பெற்ற வேதபாரகார்களே! என்றோ எழுதப்பட்ட வேதத்தை நன்றாக அறிந்திருந்தும் இறைவனுடன் நேரடி தொடர்பு இல்லாத காரணத்தால் இயேசு சொன்ன மாற்றங்களை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை எனவே அவரை சிலுவையில் அடித்தனர்!
உண்மை என்னவென்பதை அறிய கம்புட்டராகிய மனிதன் தயாரான நிலையில் இருந்தால் மட்டும் போதாது, எப்பொழுதும் ஆன்லைன் ஆகிய இறைவனுடன் தொடர்புகொண்ட நிலையில் இருக்க வேண்டும்!
உலகம் எத்தனையோ யுகங்களைதாண்டி போய்க்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் பல்வேறு தேவமனிதர்கள் மூலம் எதவாது ஒரு வழியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். நன்றாக கவனித்து பார்த்தால் எல்லா செய்திகளுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருந்தாலும் ஒருகாலகட்டத்தில் பேசியதற்கும் மறு காலகட்டத்தில் பேசுவதற்கு பல வேறுபாடுகள் இருப்பதை காணமுடியும்.
உதாரணமாக பைபிளிலேயே ஒரு காலத்தில் பலியிட சொன்ன தேவன் இன்னொரு காலத்தில் பலியை அல்ல இரக்கத்தை விரும்புகிறேன் என்று உரைக்கிறார். ஒரு குறிப்பிட்டஇடத்தில்தான் தொழவேண்டும் என்றுரைத்த தேவன் எங்கும் பிதாவை தொளுதுகோள்ளலாம் என்று மாற்றினார்
எனவே இறைவனிடம் அன்றாடம் நேரடி தொடர்பில் இல்லாத ஆன்மீக வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கையாய் மாறிப்போகும் என்பதில் சந்தேகம் இல்லை!
-- Edited by இறைநேசன் on Wednesday 13th of January 2010 06:14:40 PM