எனக்கு ஒரு நபரை தெரியும்! அவர் எந்த ஒரு செயலை செய்தாலும் மிக மிக அக்கறை எடுத்து, மிகவும் சுத்தமாக சரியாக அந்த செயலை செய்து முடிப்பார். அவர்தான் அதை செய்தார் என்பது, அந்த பொருளை பார்த்த உடனே தெரிந்துவிடும்! ஆனால் அந்த செயலை செய்ய அவர் எடுக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால் அவரின் பல கடமைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு பல நேரம் தவிப்பதுண்டு!
உதாரணமாக
குளித்தால் சுமார் அரை மணிநேரத்துக்கு மேல் எடுத்து, உடம்பை நன்றாக சுத்தம் செய்து குளிப்பார் இல்லை என்றால் இரண்டு நாட்களுக்கு குளிக்கவே மாட்டார்!
அவரிடம் பலமுறை இது சம்பந்தமாக நான் வாக்குவாதம் செய்ததுண்டு, அனால் அவர் "செய்வன திருந்த செய்ய வேண்டும் இல்லை என்றால் அதை செய்யாமல் இருப்பதே மேல் என்ற ஒரே பதிலில் முடித்து விடுவார்
என் நிலைமை இதற்க்கு நேர் எதிரானது.
நான் என் வாழ்க்கையில் பொதுவாக எதையுமே முழுமையாக செய்து முடிக்கவில்லை.
பட்டம் படித்த நான் அதில் மாஸ்டர் அக முடியவில்லை தட்டச்சு படித்த நான் லோயர் கூட எழுதவில்லை சுருக்கெழுத்து படித்த நான் அதில் எந்த தேர்ச்சியும் பெறவில்லை அதுபோல் கணினி சரிசெய்தல், எலக்ட்ரிகல் வேலை எல்லாவற்றிலுமே சிறிது சிறிது அறிவை மட்டும் தக்க வைத்துக்கொண்டேன். இது என் வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. எந்த ஒரு சிறு வேலைக்கும் யாரையும் தேடி ஓடுவது இல்லை. மருந்து மாத்திரை கூட எல்லாமே முன் அனுபவத்தின் அடிப்பட்யில்தான்.
இதுபோன்ற இரண்டு நிலையில் எது சிறந்தது?
ஒரு குறிப்பிட்ட துறையை மட்டும் மிக ஆழமாக அறிந்து கொள்வதா? அல்லது எல்லா துறையிலும் தேவையான அடிப்படை அறிவுடன் இருப்பதா?
என்னுடைய கருத்துப்படி ஒரு பாத்திரத்தை எவ்வளவு நேரம் அமர்ந்து சுத்தம் செய்து எடுத்தாலும் அது அப்படியே வைக்கப்பட போவது இல்லை மீண்டும் அது அழுக்காக போவது உறுதி. அதுபோல் எவ்வளவுதான் அழுக்கு தேய்த்து குளித்தாலும் நமது உடம்பு அழுக்கை முழுமையாக போக்க முடியுமா?
கத்தரிக்காயை எவ்வளவுதான் நேரம் செலவு செய்து ஆராய்ந்து எடுத்தாலும் அதிளுள் சில சொத்தைகள் வந்து விடுவதுண்டு எனவே ஏன் நாம் அதற்க்காக அதிக நேரத்தை விரயம் செய்யவேண்டும் ஓரளவு நேரம் செலவு செய்தால் போதும் என்பதுதான்!
ஒரு துறையை நாம் எவ்வளவுதான் ஆழமாக கற்றாலும் அதில் மேலும் மேலும் விரிவடைந்துகொண்டே இருக்கும். எது ஒன்றையுமே ஒருவர் முழுமையாக அறிந்துகொள்வது என்பது முடியாத நிலையில் எல்லாவற்றையும் பற்றிய அடிப்படை அறிவோடு இருப்பதுதான் சிறந்தது என்று நான் கருதுகிறேன்.
செய்யும் வேலையே திறம்பட/திருந்த செய்வது என்பது எல்லோரும் ஏற்கக்கூடிய ஒன்றுதான்! ஆனால், நாம் செய்யும் செயலின் தன்மை, அதற்க்காக நமக்கு கிடைத்திருக்கும் கால அளவு மற்றும் கருவிகள் அடிப்படையில் அதை எப்படி செய்து முடிக்கவேண்டும் என்பதை முன்கூட்டி தீர்மானித்து செயல்படுவது நல்லது.
எதற்குமே ஒரு கால அளவு நிச்சயம் உண்டு ஒருவர் எவ்வளவுதான் திருந்தமாக பரீட்சை எழுதினாலும் அதை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்கவில்லை என்றால் அதனால் பயனில்லாமல் போய்விடும். எனவே குறிப்பிட்ட கால நேரத்துக்குள் மிக அழகாக எழுதவில்லைஎன்றாலும் சுமாராகவவவது எழுதி எல்லா வினாக்களுக்கும் விடை அளிப்பதுதான் நல்லது
இரண்டாவதாக நாம் செய்யும் செயலின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அதை எப்படி செய்து முடிக்கவேண்டும் என்பதையும் நாம் நிச்சயம் தீர்மானிக்க வேண்டும் வங்கியில் உள்ள ஒரு கேசியர் தனது கணக்கை மிகவும் பெர்பெக்ட்டாக நிச்சயம் வைத்திருக்க வேண்டும் எனவே அதற்க்காக அவர் அதிக நேரம் செலவிடுவதில் தவறில்லை அதுபோல் வேத வசனங்களை ஆராய்வதையும் எடுத்துகொள்ளலாம். அனால் ஒரு ஆசிரியராக இருந்தால் ஒரு பாடத்தை நன்றாக நடத்த வேண்டும் என்று கருதி ஒரே பாடத்துக்கு அனேக நாட்களை செலவுசெய்து கடைசியில் சிலபசை முடிக்க முடியாமல் போவதற்கு பதிலாக, முடிந்த அளவு வேகமாக பாடங்களை நடத்தி செல்வதுதான் நல்லது.
மூன்றவதாக ஒரு வேலையே செய்வதக்காக நமக்கு கிடைத்திருக்கும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் அடிப்படையில் அதை நாம் திருந்த செய்வதா அல்லது சுமாராக செய்வதா என்பதையும் தீர்மானிக்க வேண்டும். பைக்கில் கடக்கும் தூரத்தை சைக்கிளிலும் சைக்கிளில் கடக்கும் தூரத்தை நடந்து கடப்பது கடினம் எனவே அதன் அடிபடையில் நேரத்தை அளவிட்டு செயல்களை செய்து முடிப்பது நல்லது.
எதையுமே ஆராயாமல், செய்வதை திருந்ததான் செய்வேன் மற்றதை செய்யாமல் விட்டுவிடுவேன் என்ற நோக்கில் இருந்தால் அது நிச்சயம் பிரச்சனைக்குதான் வழி வகுக்கும் என்றே நான் கருதுகிறேன்!