கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் நம்மை மீறிய
சக்தி ஓன்று உள்ளது என்று பலர் கூறுவதை நாம் கேட்கமுடியும்!
அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால்
நம்மை மீறிய ஒரே சக்தி மட்டும் இல்லை அன்பர்களே இரண்டு சக்திகள் இருக்கிறது என்பது தான் உண்மை.
அதனால் தான் "காடுகளை அழிப்பது அழிவை கொண்டுவரும் என்று நன்றாக தெரிந்தும் பணத்துக்காக அதை செய்ய வைக்கிறது"
"சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும் என்று தெரிந்து அதை பிடிக்க வைக்கிறது"
"தான் வாழ பிறரை கெடுக்கவும், திருடவும், பொய், கொலை செய்யவும் வைக்கிறது"
"அடுத்தவனுக்கு கை போனதா, கால் போனதா என்று கவலைபடாமல் அப்பாவி மக்கள் இருக்கும் இடங்களில் குண்டு வைக்க செய்கிறது"
இவை எயல்லாம் தீமை என்று யாருக்கு தெரியாது?
ஆனால் செய்கின்றனர், காரணம் என்ன? அவர்களுக்கு மேலே ஒரு தீயசக்தி இருந்து இதை எல்லாம் செய்யத்தானே வைக்கிறது. அதாவது அந்த தீயசக்தி மனிதன் மூலமாக, இறைவன் படைத்த உலகை அழிக்க நினைக்கிறது. மனிதன் அதன் கை கருவியாக செயல்படுகிறான் என்று தான் சொல்லவேண்டும்.
இந்த உலகில் ஒவ்வொன்றுக்கும் எதிர்மறையான ஒன்று இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே!
நன்மைக்கு தீமை எதிரி அன்புக்கு கோபம் எதிரி நட்புக்கு பகை எதிரி
நல்லவனுக்கு தீயவன் எதிரி
ஒருவர் நம்மை அடித்தால் அவரை திருப்பி அடிக்கவும் செய்யலாம் அல்லது அவருக்காக இறைவனிடம் பிராத்திக்கவும் செய்யலாம்.
எது நல்லது என்று கேட்டால், பிராத்திப்பது தான் நல்லது என்றும் உண்மை பேசுவது பொய் பேசுவது இரண்டில் எது நல்லது என்று கேட்டால் உண்மை பேசுவதுதான் நல்லது என்றும் எல்லோருக்கும் தெரியும்
ஆனால் எத்தனை பேர் தன்னை அடித்தவனுக்கு பிராத்திப்போம் எத்தனைபேர் எந்த சூழ்நிலையிலும் உண்மை சொல்வோம்.
ஆக, நம் மனதுக்கு தீமை என்று நன்றாக தெரிந்திருந்தும் நாம் அதை விருப்பமுடன் செய்கிறோம். காரணம் நம்மால் நாம் விரும்பியதை கூட செய்ய முடிவதில்லை. அப்படிப்பட்ட நிர்பந்தத்தில் நமக்கு மேல் ஒரு தீய சக்தியும் இருந்து ஆட்டிப்படைக்கிறது.
அதே நேரத்தில் ஒரு நல்லசக்தியானது உண்மை பேசுவதும் தன்னை அடித்தவனுக்கு பிரத்திப்பதும் நல்லது என்றும் நம் மனதில் எழுதிவைத்துள்ளது!.
இந்த நல்ல மற்றும் தீய இரண்டு சக்திகளுக்கு இடையில் நடக்கும் ஒரு போராட்டம் தான் இந்த உலக வரலாறும் புராணங்களும்.
இறைவன் தீமையை அழிப்பதற்காக மனிதனை படைத்தார், ஆனால் மனிதர்கள் எல்லோரும் தீமைக்கு அடிமையாகி விட்டனர்.
இப்பொழுது இறைவன் நல்ல மனிதன் ஒருவனாவது கிடைக்க மாட்டானா என்று தேடிக்கொண்டு இருக்கிறார்.