இருப்பு கூட்டுக்குள் இங்குமங்கும் அலைந்துகொண்டு கர்ச்சிக்கும் சிங்கத்தை கட்டவிழித்து கொண்டுபோய் காட்டில் விட ஆசை!
சிக்கன் கடையிலே எப்போது மரணமென்று எதிர்பார்த்து கார்த்திருக்கும் எல்லா கோழிகளையும் எங்காவது கொண்டுபோய் விட்டுவிட ஆசை!
பால் கொடுத்து பால் கொடுத்து தோலாக மாறிப்போன பசுக்களை எல்லாம் நடத்திக்கொண்டு பசும்புல் தரையிலே மேய்த்து வர ஆசை!
தாயிடம் ஓடிப்போய் பால்குடித்து விடாமல் தனித்து கட்டப்பட்ட சின்னஞ்சிறு கன்றுதனை கட்டவிழ்த்து விட்டு அதன் ஆவல் தீர்க்க ஆசை!
சோறின்றி அலையும் சொறி நாய்களை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்துவைத்து உணவு கொடுக்க ஆசை! மூன்று வயது முடிந்தவுடன் மூட்டை ஒன்றி தூக்கிக்கொண்டு பள்ளி செல்லும் பிஞ்சு தன்னை வீட்டில் அதன் இஸ்டம் போல் விளையாட விட ஆசை! என் ஆசை நிறைவேறுமா? என் இறைவா பதில் கிடைக்குமா?