இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவியானவர் உங்களில் வாசம் செய்கிறாரா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஆவியானவர் உங்களில் வாசம் செய்கிறாரா?
Permalink  
 


இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பை பெற்றவர்களை  சத்தியத்துக்குள் நடத்துவதர்க்காக பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார்!
 
இன்று பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறேன் என்று சொல்லும் பலர்  ஆவியானவரின் செயல்பாடுகளுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் நடந்துகொள்வதால் பல சகோதரர்கள் ஆவியானவர் என்று ஒருவர் இல்லை எல்லாம்  வெறும் வேஷம் என்று சொல்லும்   அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  
   
 "எலியாவைபோல வானத்திலிருந்து அக்கினி வரவைக்கலாமா என்று கேட்ட சீடர்களிடம் "நீங்கள் என்ன ஆவியை பெற்றிருக்கிறீர்கள் என்று அறியவில்லையா? என்பதுபோல் இயேசு கடிந்துகொண்டார். பரிசுத்த ஆவியானவர் என்பவர் மிகவும் மென்மையானவர். யாரையும் எவ்விதத்திலும்  குறைகூறி பேச விரும்புவது இல்லை அடுத்தவரை புண்படுத்தும் வார்த்தைகளை அவர் ஒருபோதும் அனுமதிக்கமாடார் என்றே நான் கருதுகிறேன்.
 
இன்று உலகில் பரிசுத்த ஆவிபோல் வேஷமிட்டு மனிதர்களை இடரவைக்கும் போலி ஆவி ஒன்றும் செயல்படுவதால் உண்மை பரிசுத்த ஆவியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்தவரை விளக்க விரும்புகிறேன்.
 
1. பணத்துக்காகவோ அல்லது வேறு எந்த ஒரு காரியத்திற்காகவோ ஒரு சில தவறான காரியங்களை செய்து, அடுத்தவரை உடலளவிலோ அல்லது மனதளவிலோ புண்படுத்திவிட்டு "இந்த காலத்தில் இப்படித்தான்  வாழ முடியும் என லேசாக விட்டுவிடுகிறீர்களா?
 
2. தவிர்க்க முடியாத நேரங்களில் பொய் சொல்லிவிட்ட நீங்கள் அதை கண்ட்கொள்ளாமல் விட்டுவிடுகிறீர்களா? 
 
3. வீட்டிலோ வேலை ஸ்தலத்திலோ அடுத்தவர்பற்றி வம்பளக்கும் கூட்டத்தோடு சேர்ந்து வம்பளந்துவிட்டு அதை பற்றி கொஞ்சமும் மன வருத்தம் இல்லையா?
 
4. பிறன் மனைவி என்று தெரிந்தும் ஒரு பெண்ணை ரசித்து பார்த்துவிட்டு அதைப்பற்றி மன வருத்தம் இல்லையா? 
 
5. அடுத்தவர் பொருட்களை பயன்படுத்தும் பொது அதை தன பொருட்கள் போல் பாவிக்கும் எண்ணம் இல்லயா?
 
6. கடையிலோ வேறு இடத்திலோ யாராவது தெரியாமல் அதிகமாக பணமோ அல்லது பொருளோ கொடுத்துவிட்டால் தெரிந்தும் அதை சந்தோஷமாக வைத்துகொள்கிரீர்களா?
 
7. பிறரிடம் எதையாவது இலவசமாக பெற ஆவலோடு இருக்கிறீர்களா? இப்படி அடுத்தவரிடம் இலசவசம் வாங்கி பிழைக்கும் நிலை நமக்கு இருக்கிறதே என்ற வருத்தம் கொஞ்சமும் இல்லையா? 
 
8. தவிர்க்க முடியாத காரணத்தினால் யாரிடமாவது சண்டை போட்டுவிட்டு அதைப்பற்றி கொஞ்சமும் மன வருத்தம் இல்லயா? 
 
9. உங்களிடம் உதவிகேட்டு வரும் ஒருவருக்கு உதவி செய்ய முடிந்தும் இல்லை என்று சொல்லிவிட்டு அதைப்பற்றி மன வருத்தமில்லையா?
 
10. நீங்கள் அடிக்கடி சந்திக்கும் ஒருவருக்கு ஆண்டவரைபற்றி சொல்ல மனதில்லையா?
 
11. உங்களுக்கு மிகபெரிய கெடுதல் செய்தவரைகூட  முழு மனதோடு மன்னிக்க மனதில்லையா? 
 
12.ஸ்திரீகளே புருஷரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் நடந்துவிட்டு அதைப்பற்றி கொஞ்சமும் மனஸ்தாபம் இல்லையா? 
 
13. ஆண்டரின் இதய எதிர்பார்ப்பு என்னவென்பதை அறிந்து அதன்படி வாழவேண்டும்  என்ற வாஞ்சை இல்லையா?
 
14. உலகில் நடக்கும் கொடூரங்களையும்  மக்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் நினைத்தால் கண்ணீரும் பெருமூச்சும் வரவில்லையா?
 
மேல்சொன்ன காரியங்களை செய்துவிட்டு மனசங்கடமோ  வருத்தமோ இல்லை என்றால் உங்களிடம் பரிசுத்த ஆவியில்லை என்றே நான் கருதுகிறேன். மேலும் ஒருமுறை செய்த தவறை திரும்ப திரும்ப செய்வது ஆவியானவர் அவிந்துபோகவே வழி செய்யும்!
 
தவறே  செய்யாத உத்தமன் உலகில் யாரும் இல்லைதான். ஆனாலும் தவறு செய்தபிறகு ஆவியானவர் அதை உணர்த்தும்போது அதை அலட்சியம் பண்ணாமல்  மனஸ்தாபபட்டு  உறுதியான முடிவுடன்  மனம்திரும்புகிரோமா என்பதை வைத்துதான் ஆவியானவரின் நம்மிடம்  செயல்பட  முடியும்! 
 
பாவத்தை கண்டித்து உணர்த்துபவரே பரிசுத்த ஆவியானவர் பாவத்தை கண்டுகொள்ளாமல் விடுவது பிசாசின் வேலை! எனவே உங்களுக்குள் இருப்பது யார் என்று நிதானித்து அறியுங்கள்!
 ( இதற்க்கெல்லாம் சரியான வசன ஆதாரம் தரமுடியவில்லை மன்னிக்கவும் )
                  
 


-- Edited by SUNDAR on Thursday 28th of January 2010 08:44:55 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

நீங்கள் என்னவென்றால் இப்படி சொல்கிறீர்கள், ஆனால் இப்போது அதிகமானவர்களிடம் செயல்படும் ஆவியானவரின் செயல்பாடுகள் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.

ரோட்டில் போகும் காரை பார்த்து "இதேபோல் ஒரு காரை உனக்கு தருவேன்" என்று  சொல்கிறாராம்.
.
ஒருவீட்டில்   ஜெபிக்க போகும்போது அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை காட்டி "இங்குள்ள பொருட்கள் எல்லாமே உனக்குத்தான்" என்கிறாராம்.
.
ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினால் "நீ" இந்த வீட்டில் இருந்து போகும்போது, சொந்த வீட்டுக்குத்தான் போவாய்" என்று சொல்வதோடு சில நேரங்களில் இந்த வீடே உனக்குத்தான் என்கிறாராம்.  
.  
கவர்மென்ட் மானிய விலையில்  கொடுக்கும் மண்ணெண்ணெய் /சமயல் எரிவாயு இவைகளை வாங்கி கூடுதல் பணத்துக்கு வெளியில் விற்றால் அதைக்குறித்து ஆவியானவர் கண்டுகொள்வது இல்லையாம்.
.
சைதாபேட்டை ரோட்டில் நின்றுகொண்டு கைபேசியில் "நான் சபையில் இருக்கிறேன்" என்று பொய்சொன்னால் ஆவியானவர் அதுகுறித்து கண்டிப்பதே  இல்லையாம். 
.
ஒருபக்கம் கடன் காரனுக்கு கடனை திருப்பி கொடுக்காமல் வட்டியும் கொடுக்காமல் வைத்துகொண்டு இன்னொருபக்கம் சொந்த வீடு வாங்க நடத்துவேன் என்கிறாராம்.
இன்னும் முக்கியமாக,  வாடகைக்கு இருக்கும் வீட்டில் வீட்டு ஓணருக்கும் ஆவிக்குரிய விசுவாசிக்கும் பெரிய சண்டை வந்து, ஓணர் வீட்டை காலி பண்ண சொல்லியும் "நீ எப்படி என்னை காலி பண்ண சொல்வது? ஆண்டவர் சொல்லட்டும் நான் காலி பண்ணுகிறேன்" என்று சொல்ல வைக்கிறாராம்.     
வீட்டுக்கு வரும் ஒரு நபரை பார்க்கும் போது, இச்சையான  எண்ணம் மனதில் உருவாகியும் அவர் அந்த வீட்டுக்கு வருவதை ஆவியானவர் தடுக்க விரும்பவில்லையாம்.  
 .
அடுத்தவர்களுக்கு ஐந்து ரூபாய் உதவி செய்ய ஆவியானவர் அனுமதிப்பதில்லையாம்,  ஆனால் அடுத்தவர் எல்லோருமே ஏதாவது தருவார்களா என்று எதிர்பார்ப்பு மட்டும் குறைவதில்லையாம்.
    
இன்னும் எவ்வளவோ இருக்கிறது இறைவன் விரும்பினால் தொடர்ந்து எழுதுகிறேன். 
  


-- Edited by Nesan on Saturday 10th of November 2012 03:49:02 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

////////////////////////////////////1. பணத்துக்காகவோ அல்லது வேறு எந்த ஒரு காரியத்திற்காகவோ ஒரு சில தவறான காரியங்களை செய்து, அடுத்தவரை உடலளவிலோ அல்லது மனதளவிலோ புண்படுத்திவிட்டு "இந்த காலத்தில் இப்படித்தான் வாழ முடியும் என லேசாக விட்டுவிடுகிறீர்களா?

2. தவிர்க்க முடியாத நேரங்களில் பொய் சொல்லிவிட்ட நீங்கள் அதை கண்ட்கொள்ளாமல் விட்டுவிடுகிறீர்களா?

3. வீட்டிலோ வேலை ஸ்தலத்திலோ அடுத்தவர்பற்றி வம்பளக்கும் கூட்டத்தோடு சேர்ந்து வம்பளந்துவிட்டு அதை பற்றி கொஞ்சமும் மன வருத்தம் இல்லையா?

4. பிறன் மனைவி என்று தெரிந்தும் ஒரு பெண்ணை ரசித்து பார்த்துவிட்டு அதைப்பற்றி மன வருத்தம் இல்லையா?

5. அடுத்தவர் பொருட்களை பயன்படுத்தும் பொது அதை தன பொருட்கள் போல் பாவிக்கும் எண்ணம் இல்லயா?

6. கடையிலோ வேறு இடத்திலோ யாராவது தெரியாமல் அதிகமாக பணமோ அல்லது பொருளோ கொடுத்துவிட்டால் தெரிந்தும் அதை சந்தோஷமாக வைத்துகொள்கிரீர்களா?

7. பிறரிடம் எதையாவது இலவசமாக பெற ஆவலோடு இருக்கிறீர்களா? இப்படி அடுத்தவரிடம் இலசவசம் வாங்கி பிழைக்கும் நிலை நமக்கு இருக்கிறதே என்ற வருத்தம் கொஞ்சமும் இல்லையா?

8. தவிர்க்க முடியாத காரணத்தினால் யாரிடமாவது சண்டை போட்டுவிட்டு அதைப்பற்றி கொஞ்சமும் மன வருத்தம் இல்லயா?

9. உங்களிடம் உதவிகேட்டு வரும் ஒருவருக்கு உதவி செய்ய முடிந்தும் இல்லை என்று சொல்லிவிட்டு அதைப்பற்றி மன வருத்தமில்லையா?

10. நீங்கள் அடிக்கடி சந்திக்கும் ஒருவருக்கு ஆண்டவரைபற்றி சொல்ல மனதில்லையா?

11. உங்களுக்கு மிகபெரிய கெடுதல் செய்தவரைகூட முழு மனதோடு மன்னிக்க மனதில்லையா?

12.ஸ்திரீகளே புருஷரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் நடந்துவிட்டு அதைப்பற்றி கொஞ்சமும் மனஸ்தாபம் இல்லையா?

13. ஆண்டரின் இதய எதிர்பார்ப்பு என்னவென்பதை அறிந்து அதன்படி வாழவேண்டும் என்ற வாஞ்சை இல்லையா?

14. உலகில் நடக்கும் கொடூரங்களையும் மக்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் நினைத்தால் கண்ணீரும் பெருமூச்சும் வரவில்லையா?///////////////////


நீங்கள் குறிப்பிட்ட இந்த விடயங்களை தவறி செய்தாலும் நீங்க குறிப்பிட்டது போல மனசங்கடமும் வருத்தமும் வருகிறது. நீங்கள் சொன்ன எல்லா விடயத்திலும் மனசங்கடமும் வருத்தமும்  இருக்கிறது என்பதை நினைக்கும் போது ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. 


ஆனால் நான் அந்நிய பாஷை வரமோ வேறு எந்த வரமோ பெறவில்லை.. அநேரங்களில் எனக்குள் ஆவியானவர் இல்லையா என்று அநேக நேரம் யோசிப்பேன் .. ஆனால் தற்போது நீங்கள் சொன்னது பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

///ஆனால் நான் அந்நிய பாஷை வரமோ வேறு எந்த வரமோ பெறவில்லை.. அநேரங்களில் எனக்குள் ஆவியானவர் இல்லையா என்று அநேக நேரம் யோசிப்பேன் .. ///

சிஸ்ட்டர் முதலில் தேவனின் ஆவி உங்களுக்குள் இல்லாமல் உங்களால் இங்கு வந்து இவ்வளவு ஆழமாக இந்த வார்த்தைகளை படித்திருக்கவே முடியாது அப்படி  படித்தாலும் எதுவும் சரியாக புரியாது எனவே நிச்சயமாக தேவ  ஆவியானவரின் நடத்துதலாகவே இங்கு வந்துள்ளீர்கள்.  
 
பிறகு ஏன் உங்களுக்கு அடிக்கடி சந்தேகம் வருகிறது என்று புரியவில்லை. அகினும் பரவாயில்லை நானும் கூட சில சோர்வான நேரங்களில் ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா என்று யோசித்தது உண்டு.   
 
அந்நிய பாஷை என்பது ஆவியின் வாரங்களில் ஓன்று. ஆவியின் வரங்கள் எல்லாம் நமக்கு கண்டிப்பாக கிடைத்திருக்க வேண்டும் என்பதில்லை.
 
வசனங்களை பகுத்தறியும் மேலான வரம் உங்களிடம் இருக்கிறது.
 
எனவே சோர்ந்து போகாமல் விசுவாசத்தில் தொடருங்கள். 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

நன்றி அண்ணா

//////வசனங்களை பகுத்தறியும் மேலான வரம் உங்களிடம் இருக்கிறது.//////////// எவ்வாறு இதை கூறுகிறீர்கள்? எதை வைத்து சொல்கிறீர்கள்?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

நீங்க கூறின பின்பு தான் யோசிக்கிறேன் இந்த வேத வசனங்களை பகுத்தறியும் வரம் இருக்கிறதா என்று உண்மை தான் அண்ணா நான் வேதத்தை தியானிக்கும் போது அநேக இடங்களில் இது தேவன் சொல்லும் வார்த்தை இது இயேசு பற்றியது என்று சீக்கிரம் அறிந்து கொள்வேன்.. இது எப்படி எனக்கு இலகுவாக அறிய முடிகிறது என்று யோசித்திருக்கிறேன்.. ஆனாலும் சில நேரம் சந்தேகமும் வரும் .. இல்லை அப்படி இருக்காது இப்படி இருக்காது என்று.. நீங்க இப்போ சொல்லும் போது தான் கடந்ததை நினைத்து பார்க்கிறேன்..

தேவனுக்கு நன்றி

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

சில நேரங்களில் ஜெபிக்க முடியவில்லை, ஜெபிக்க தோணாமல் இருக்கிறது.. ஆண்டவர் என்னோடு இல்லாதது போல் இருக்கிறது..

சோர்ந்து போய் பெலனற்று இருப்பதாக உணர்கிறேன்..

தேவ பிரசன்னத்தை உணர முடியவில்லை..

தேவன் எனக்கு பதில் சொல்லாமல் இருக்கிறார் போல இருக்கிறது..

நான் என்ன செய்ய அண்ணா?


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

சில நேரங்களில் ஜெபிக்க முடியவில்லை, ஜெபிக்க தோணாமல் இருக்கிறது.. ஆண்டவர் என்னோடு இல்லாதது போல் இருக்கிறது..

சோர்ந்து போய் பெலனற்று இருப்பதாக உணர்கிறேன்..

தேவ பிரசன்னத்தை உணர முடியவில்லை..

தேவன் எனக்கு பதில் சொல்லாமல் இருக்கிறார் போல இருக்கிறது..

நான் என்ன செய்ய அண்ணா?


எலியா மற்றும்  யோனா போன்ற மிகப்பெரிய தீர்க்கதரிசிகள் சோர்வுற்று  சாவை விரும்பும் நிலை வரை சென்றபோது நாம் எம்மாத்திரம்?   
 
ஆவியின் நிறைவு இல்லாதபோது சோர்வு வந்து நம்மை மூடுகிறது. நானும் பலமுறை அவ்வாறு சோர்வடைந்துள்ளேன்.  
 
நாம் சோர்ந்து போகும் நேரங்களில் தனி ஜபம் செய்வது கடினமாக இருக்கும். அதற்குத்தான் சகோதர ஐக்கியம் என்பது அவசியமாகிறது.
 
நல்ல ஆவிக்குரிய சகோதரியுடன் ஐக்கியம் கொள்வது அவசியம் அப்படி யாராவது கிடைக்க தேவனிடம் ஜெபியுங்கள்.
 
பிரசங்கி 4: 9. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.
 
10. ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்;  
 

  

 

 

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

நன்றி அண்ணா

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard