மாணவன் ஒருவன் ஆற்றில் குளிக்க சென்றான். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவன் நீரில் மூழ்க ஆரம்பித்தான்.
அந்த மாணவன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்போது அவ்வழியாக அவனது வாத்தியார் ஒருவர் வந்தார். அவரை பார்த்த மாணவன் "ஐயா காப்பாற்றுங்கள்" என்று கதறினான்.
அவனை திரும்பி பார்த்த வாத்தியார் "நான் ஒரு வாத்தியார் என்னை பார்த்ததும் "ஐயா வணக்கம்:" என்று சொல்லாமல் "ஐயா காப்பாற்றுங்கள்" என்று சொல்கிறாரே இவனெல்லாம் ஒரு மாணவனா? என்ற கோபத்தில் அவனை திட்டிக்கொண்டே போய்விட்டார்!
ஆம் இன்று உலகில் அனேக மனிதர்களின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது!
எதிரில் இருந்து பேசுபவன் என்ன நிலையில் இருக்கிறான் அவனது தேவை என்ன அவனுக்கு நம்மால் என்ன உதவி செய்யமுடியும் என்ற எந்த ஒரு மனபாண்மையும் கொஞ்சமும் இல்லாமல், நமக்கு கிடைக்க வேண்டியது சரியாக கிடைத்ததா நமது வயிறு முழுவதும் நிரம்பிவிட்டதா என்பதிலேயே நோக்கமாக இருக்கின்றனர்.
ஏன் கணவன் மனைவிகள்கூட பலர் அப்படித்தான் இருக்கின்றனர்! . கணவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதை சற்றும் அனுசரிக்காமல் தனது தேவைகளை அடுக்கும் மனைவியும், மனைவி என்ன வேதனையில் இருக்கிறாள் என்பதை சற்றும் பொருட்படுத்தாமல தனது தேவை நிறைவேறவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும் கணவனும் மனிதனாக இருந்தாலும் அவர்கள் விலகுகளுக்கு சமம் என்றே நான் நினைக்கிறேன்.
இறைவனைதேடும் மனிதர்கள் கூட, தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை குறித்து சிறிதும் சட்டை செய்வதே இல்லை. இறைவன் நம்மை ஏன் படைத்தார், அவருக்காக நாம் என்ன செய்யவேண்டும், நம்மிடம் அவர் எதை எதிர்ப்பார்க்கிறார் என்பது குறித்த எந்த ஒரு சிந்தையும் இல்லாமல், இறைவனை தேடினால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற நோக்கத்திலேயே தேடுகின்றனர். தான் தேடியது கிடைக்கவில்லை என்றால் அதற்க்கு காரணம் நமது செயல்பாடுதான் என்பதை அறியாமல் இறைவனே குறைசொல்லும் நிலைக்கு வருகின்றனர்.
மற்றவர்க்களிடமிருந்து பல காரியங்களை எதிர்ப்பார்க்கும் நாம், அவர்களுக்கு நம்மிடம் எதிர்பார்ப்பு ஏதாவது இருக்கிறதா? நம்மிடம் எதையாவது எதிர்பர்ப்பர்களின் தேவையை நாம் பூர்த்தி செய்துள்ளோமா? என்பதையும் சற்று அராய்ந்து அதை முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டும்! அதுவே ஒருவனை மனிதனாகும்!