கும்மிருட்டில் நடந்துகொண்டிருந்த ஒருவர் அவரைபோலவே இருளில் நடந்து வந்துகொண்டிருந்த இன்னொருவரை இருட்டில் சந்தித்தார். இரண்டு பேரும் உலககதைகளை மிகவும் சுவராஸ்யமாக சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
மிகவும் பிரகாசமான வெளிச்சம் உள்ள ஒரு இடத்துக்கு இரண்டுபேரும் வந்தபோது, ஒருவரை வெளிச்சத்தில் பார்த்த மற்றவர் நான் உன்னுடனா இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்தேன்? என்று அருவருத்தார்! மற்றவரும் அவரைபோலவே அலுத்துக்கொண்டார்!
ஏனெனில் அவர்கள் அருவருக்கும் அளவுக்கு துர்நாற்றம் உள்ள சேரும் சகதியும் அவர்கள் உடம்பில் பூசியிருப்பது அவர்களுக்கு இருட்டில் தெரியவில்லை. இரண்டுபேர் மேலும் துர்நாற்றம் இருந்ததால் ஒருவரின் நிலயை இன்னொருவர் உணர முடியவில்லை வெளிச்சத்தில் வந்தபோதோ எல்லாம் தெளிவாக தெரிந்தது!
அதுபோல்
இன்றும் அனேக மக்கள் குடியிலும் கூத்தடிப்பிலும் கும்மாளமிட்டு பாவசேற்றில் புரண்டுகொண்டு தாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை சற்றும் உணராமல் அற்ப்ப சந்தோசத்தில் அகமகிழ்ந்து வாழ்கின்றனர். மறைவான காரியங்கள் அனைத்தையும் இருளிலேயே செய்ய விரும்புகின்றனர். இதுதான் இன்பம், இதுதான் உல்லாசம் என்று கருதி இருளில் இருக்கும் அவர்களுக்கு தங்களின் உண்மை நிலை தெரிவதில்லை.
ஆனால் பேரொளியாய் இருக்கும் இறைவனிடம் வரும்போதோ அதன் பிரகாசமான வெளிச்சத்தின் தங்களின் உண்மை நிலயை துல்லியமாக அறிய முடிகிறது! அப்பொழுது தங்கள் முன்பு வாழ்ந்த வாழ்க்கையையையும் தாங்கள் நியாயம் தர்மம் என்று கருதியதெல்லாம் இறை நியாயத்தின் முன் ஒன்றுமில்லை என்று புரிந்து, தங்களை தாங்களே அருவருக்கும் நிலை ஏற்றப்படுகிறது!
அனேக அறிவுரைகளை கேட்டாலும், தனது கிரியைகளை யாரும் பார்த்துவிடாதபடி வெளியரங்கமாக்கும் வெளிச்சமாகிய இறைவனிடத்தில் வரவிரும்பாதொரின் நிலை, அந்தகார இருளில் அகப்பட்ட கப்பலாக கரையை காணாதே போகும் என்பதில் ஐயமில்லை!