ஒருவன் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாய் இருந்தால் மட்டும் போதாது அவன் நியாயமும் நீதியும் செய்ய வேண்டும் என்பதை வேதம் நமக்கு திரும்ப திரும்ப திட்டவட்டமாக போதிக்கிறது! அநியாயகாரன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பது ஒருபோதும் முடியாது!
வெறும் விசுவாசம் மட்டும் ஒன்றுக்கும் உதவாது, அப்படி கிரியை இல்ல்லாமல் விசுவாசம் மட்டும் இருக்கு என்று சொல்பவர்கள் வீணான மனுஷர்கள் என்றும் அது ஒரு செத்த விசுவாசம் என்றுகூட தனது வசனங்களில் குறிப்பிடுகிறார்.
20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
எனவே விசுவாசத்தோடு தேவன் விரும்பும் கிரியையாகிய நீதி நியாயமும் சேரவேண்டும்
நியாயம், நீதி இவை இரண்டும் இரட்டை குழந்தைகளை போன்றது. இந்த வார்த்தைகள் கர்த்தரால் வேதத்தில் திரும்ப திரும்ப, அதாவது ஏறக்குறைய 200க்கும் மேல்பட்ட இடங்களில் நீதி நியாயம் சம்பந்தமான வார்த்தைகள் வேதத்தில் உள்ளது.
அவற்றில் பழைய உடன்படிக்கையில் இரண்டும், புதிய உடன் படிக்கையில் இரண்டு மட்டும் கீழே உள்ளது:
கர்த்தர் சொல்கிறார் நியாயத்தை கை கொண்டு நீதியை செய்யுங்கள் (ஏசா:56:1)
நியாயம் தண்ணீரைபோலவும் நீதி வற்றாத நதியை போலவும் புரண்டுவரக்கடவது (ஆமோ:5:24)
வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத் 5:20)
இவ்வளவு முக்கியமான தேவனின் வார்த்தைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். எந்த சபையிலாவது நீதி நியாயம் பற்றி விளக்கும் செய்திகள் கொடுக்கப்படுகிறதா? எனக்கு தெரிந்து ஒரு புத்தகம் கூட இந்த தலைப்பில் இருந்தமாதிரி தெரியவில்லை. இந்த நிலை ஏன்? தேவன் திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நாம் என்னத்தை பேசிக்கொண்டு இருக்கிறோம்?
இலவசமாக தேவ நீதி நமக்கு கிடைத்தது உண்மை தான். அதற்காக நான் கிடைத்த நீதியை காத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன், எந்நாளும் எங்கு இலவசமாக கிடைக்கிறதோ அதையே எதிர்பார்த்துக்கொண்டு இருப்பேன் என்பது சரியா? எதோ மழை வெள்ளம் வந்ததால் அரசாங்கம் ஒரு குடும்பத்தும் 2000/- ரூபாயும் கொஞ்சம் அரிசியும் கொடுத்தால் வாழ் நாளெல்லாம் அப்படி கிடைக்கும் இலவசத்தையே எதிர்பார்த்து உழைத்து சம்பாதிக்க சோம்பேறித்தனம்படுவது போலல்லவா இன்றைய போதனைகள் இருக்கிறது.
தேவ நீதிக்குமுன் நம் நீதி ஒன்றுக்கும் உதவாததுதான்! ஆனாலும் நம்மால் செய்ய முடிந்த நீதியை தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அதுதான் திரும்ப திரும்ப நீதி செய், நியாயம் செய் என்று சொல்கிறார். மாதம் 20000/-ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தகப்பனுக்கு தனது மகன் சம்பாதித்த 1000 ரூபாய் ஒன்றுமில்லைதான்! அதற்காக நீ வேலைக்கே போகவேண்டாம் என்றும் எனது சம்பளத்திலேயே உட்காந்து சாப்பிடு என்று எந்த தகப்பனும் சொல்வதில்லை. தன்னை போலவே தன் பிள்ளையும் வரவேண்டும் என்றுதான் எந்த தகப்பனும் எதிர்பர்ப்பான் அது போலத்தான் தேவனும் நாம் கிரிஸ்த்துவைபோல் பரிசு த்தமாய் மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்!
ஆதியில் இருந்தே நியாயத்துக்கும் நீதிக்கும் எதிர்த்து நிற்கும் சாத்தனுக்கு இன்னொருபெயரும் உண்டு அதுதான் "(நியாய) கேட்டின் மகன்" என்பது! அவனது தந்திரத்தால் கட்டுண்டு கிடக்கும் அநேகருக்கு இறைவன் எத்தனை முறை கத்தினாலும் இந்த நீதியும் நியய்யமும் காதில் விழுவது இல்லை!
நீதி, நியாயம் என்றால் என்ன?
"நியாயம் செய்தல்" என்ற பதத்தின் சரியான அருத்தம் என்னவெனில் "பிறரின் நியாயமான கோரிக்கைகளுக்கு எந்த விதத்திலும் பங்கம் வராமல் ஒருவன் நடந்துகொள்வது ஆகும்.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் ( லுக் 6:32)
பிறர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து அவர்களுக்கு அதன்படி செய்ய நமது நியாயமான கோரிக்கைகளை பிறருக்காக விட்டுக்கொடுத்தல் மற்றும் சில நேரங்களில் பிறரின் அநியாயமான செயலைகூட தாங்கிக்கொண்டு அதற்கு பதில் செய்யாமல் இருத்தல் எல்லாமே இதில் அடங்கும்.
இதற்க்கு மிக சரியான உதாரணம் நமது வேதத்தில் இல்லை என்பதால்
ஆண்டவர் எதிர்ப்பார்க்கும் நீதிக்கு உதாரணமாக அனைவரும் அறிந்த மனுநீதி சோழனின் கதையை தருகிறேன்
"தன் மகன் ஒரு கன்றை தேரை ஏற்றி கொன்றான் என்பதை கேள்விப்பட்டதும் தன் மகனையும் அதே போல் தேரை என்றி கொன்றானே மனுநீதி சோழன்" அதுதான் உண்மையான நீதி! .
ஆண்டவரை அறியாத புறஜாதியார் இப்படி நீதியும் நியாயமும் செய்திருக்க மகா நீதிபரரின் பிள்ளைகளாகிய நாம் அதற்கு ஒருபடி மேலே நீதி நியாயம் செய்ய வேண்டாமா? தன் பிள்ளையா பிறர் பிள்ளையா, தன் ஜாதிய பிறர் ஜாதியா, தன் மதமா பிறமதமா, தனக்கு வேண்டியவரா வேண்டாதவரா என்றெல்லாம் பார்த்து நியாயத்தை புரட்டாமல், பணம், அழகு, செல்வாக்கு, போன்றவற்றுக்கு மயங்காமல் பயப்படாமல் சரியான நீதி செய்ய வேண்டும்
"பரிசெயார் சதுரேயர் என்பவர்களின் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இராவிட்டால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டிர்கள்" என்று இயேசு சொன்னதை நினைவு கூறுங்கள் நீதியை செய்யுங்கள்! .
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// மாதம் 20000/-ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தகப்பனுக்கு தனது மகன் சம்பாதித்த 1000 ரூபாய் ஒன்றுமில்லைதான்! அதற்காக நீ வேலைக்கே போகவேண்டாம் என்றும் எனது சம்பளத்திலேயே உட்காந்து சாப்பிடு என்று எந்த தகப்பனும் சொல்வதில்லை. தன்னை போலவே தன் பிள்ளையும் வரவேண்டும் என்றுதான் எந்த தகப்பனும் எதிர்பர்ப்பான் அது போலத்தான் தேவனும் நாம் கிரிஸ்த்துவைபோல் பரிசு த்தமாய் மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்! //
மிகவும் அருமையான கருத்தையும்
நிதி நியாயத்தை பற்றி சொன்னதற்காக
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)