இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ( இப்படிபட்ட ஒரு தேவனா )


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
( இப்படிபட்ட ஒரு தேவனா )
Permalink  
 


ஒரு சிறிய தேவ தரிசனம் வெளிபாடு  கண்டாலே நாம் கிறிஸ்தவர்கள் 
 
என்றும் போதகரிலும் சற்று நம்மை மேன்மையாக என்னுவேம்
 
ஆனால் நாம் ஆண்டவராகிய   இயேசு கிருஷ்துவோ  
 
 
தண்ணீர் எடுத்து  சிடர்களின் கால்களை கழுவி தாழ்மை என்ன என்பதை விள்ளகியவர்
 
யார் அவர்-?
 
 
மகத்துவமும் தேவனின் தர்சொருபமும் தேவனுக்கு சமமானவரும்
 
உலகத்தை  இரட்சிக்கிற நாயகனும் இப்படி ஒரு மகிமையை கொண்டு  இருக்கிறவர்
 
எப்படி இது ஆகும் கற்பனை கூட செய்து பார்க்க முடிய வில்லை 
 
அப்பா என்ன ஒரு தாழ்மை  இந்த செயலை படித்தும் தெரிந்தும்  கூட மனிதனுக்கு   
 
 
பெருமை மேட்டிமை எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை
எனக்கு உண்மையாகவே விவரிக்க வார்த்தைகளே  இல்லை  
 
யோசித்து பார்த்தல் இப்படி பட்ட தேவ குமாரனை நாம் ஆண்டவராக கொண்டு இருப்பதே  
 
நம்முடைய  பாக்கியமும் நமக்கு நன்மையும்  ஆகும் .......................................
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே நல்லதொரு கருத்தை  முன்வைத்தீர்கள்!
 
தேவனின் மகிமையுள்ள  தூதன்  சாத்தானாகி போனதற்கு காரணமே இந்த "பெருமை" தான்!   
 
இன்றைய உலகில் மனிதனின் மனம் பல்வேறு காரணங்களால் மேட்டின்மயாகிறது அவற்றுள் முக்கியமானது இதோ:
 
அவற்றில் மிக முக்கியமானது செல்வத்தினால் மேட்டின்மயவது:   

எசே:28
5. உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.

பணம் மனிதனை மேட்டின்மயாக்கும் ஒரு முக்கிய காரணி.  பணத்தை சரிவர கையாளாவிட்டால் அது நம்மை கயாண்டுவிடும் இறுதியில் யூதாஸுக்கு நேர்ந்த கதிதான்!
 
அடுத்து அழகு என்பது மனிதனை மேட்டின்மயாக்கும் அடுத்த காரணி:
 
17. உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்
 
ஆம் அழகு என்பது மனிதனை மேட்டின்மயாக்கும் அடுத்தகாரணி.  எனக்கு நிகர் யார் என்னை போல
தோற்றம் உள்ளவர் யார்? என்ற எண்ணம் மனிதனை மேட்டின்மயாக்கும்! இறுதியில் ஆணழகன்  அப்சலோமுக்கு நேர்ந்த கதிதான் நேரும்.
 
அடுத்து பதவி என்பது மனிதனை மேட்டின்மயாக்கும்:

தானி:  
29. பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:
30. இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.

ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த நேபுகாத்நேச்சார் பதவி தந்த மயக்கத்தில்  மேட்டின்மையானான் இறுதியில்  மிருகம்போலானான்.
 
இவ்வாறு நடந்த எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்கிறோம்!
 
ஆண்டவராகிய இயேசு எவ்வாறு மரணபரியந்தம் தம்மை தாழ்த்தினார் என்பதையும் அறிந்திருக்கிறோம் ஆனால் நாம் நம்மை பிறர் முன்னாள் தழ்த்துகிரோமா? என்றால் அதுதான் இல்லை!
 
ஒரு பத்து விசுவாச குடும்பம் வைத்திருக்கும் போதகருக்கு தான் பாஸ்டர் என்று அழைக்கப்பட வேண்டும்  தனது மனைவி பாஸ்ட்டர் அம்மா  என்று அழைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதை நான் பலமுறை அனுபவத்தில் அறிந்துள்ளேன்.    
 
ஒரு  சபையின் தலைமை போதகர்  என்றால் அங்கு உள்ள   மற்ற சிறு ஊழியக்கார்கள் எல்லாம் அவர் கண் அசைத்தாலே பயந்து நடுங்குகின்றனர் அப்படி ஒரு அரசர்போல ஆட்சி செய்கிறார்! 
 
இங்கு ஆண்டவராகிய இயேசுவின் தாழ்மையை எங்கு பார்ப்பது?  (ஒரு சில நல்லவர்கள் இருக்கலாம்)  
 
இயேசு தனது சீடர்களுக்கு கால்களை கழுவியது போல  இன்றைய போதகர்கள் தனது சபைக்கு புதிதாக வந்து சேர்ந்த ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பணிவிடை செய்வார்களா? என்று சற்று யோசித்து பார்ப்பது நல்லது?
 
"அழிவுக்கு முன்னானது அகந்தை" என்று வேதம் எச்சரிக்கிறது!  
 


-- Edited by SUNDAR on Tuesday 9th of February 2010 06:55:58 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard