இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துன்பத்துக்கு அடிப்படை காரணம் என்ன?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
துன்பத்துக்கு அடிப்படை காரணம் என்ன?
Permalink  
 


என் மகன் 6 மாத குழந்தையாய் இருக்கும் போது ஒரு நாள் வீட்டில் மின்சாரம் போய் விட்டதால் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பக்கத்தில் அவனை குப்புற போட்டிருந்தோம். அந்த மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தை பார்த்தவுடன் அவனுக்கு ஒரே சந்தோசம். மெல்ல தாவி தாவி அந்த தீயை கையில் பிடிக்க முயன்றான். 

அது போல் தான் மனிதர்களும்!  தன் கண்ணுக்கு மனதுக்கு இன்பமாக தெரிவதை எல்லாம் அதை அடைவதால் வரப்போகும் துன்பங்களை அறியாமல் அவைகளை  அடைய, அனுபவிக்க கடுமையான முயற்சி செய்கின்றனர் கடைசியில்  சூடுபட்டு துன்பத்தில் மாட்டிகொள்கின்றனர்.

தீ சுடும் என்றும், மின்சாரம் ஷாக் அடிக்கும் என்பதும் பல முறை அனுபவப்பட்ட நமக்கு தெரியும் ஆனால் அந்த குழந்தைக்கு தெரியாது. அதுபோல நித்யமாக இருக்கும் இறைவனுக்கு எது யாருக்கு தீமையானது, எது நன்மையானது என்றும், எதை யாருக்கு எப்பொழுது எங்கே கொடுக்க வேண்டும் என்பதும்,  எதை யாருக்கு கொடுத்தால் அது தீமையாக முடியும் என்ற சகலத்தையும் அறிந்தவர் அவர் தரும் காலம் வரை பொருத்திராமல் இன்பத்தை அடைய வேண்டும் என்றும் எப்படியாவது பணத்தை சேர்த்துவிட வேண்டும் என்றும் ஓடுபவர்களுக்கு அவர்கள் எதிபார்க்கத துன்பம் தானாகவே வந்து சேரும்.

அதற்கு இறைவனை குறை கூறுவது கொஞ்சமும் நியாயமல்ல!
 
உலகில் உள்ள அனேக மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு அல்லது தானாகவே அதில் போய் விழுந்துவிட்டு பிறகு வெளியில் வர முடியாமல் தவிக்கிறார்கள், புலம்புகிறார்கள், ஆண்டவரை நோக்கி  அழுகிறார்கள்.
பிரச்சனையே இல்லாத மனிதன் எவருமே  இல்லை!  சிறிய பிரச்சனைகளை சமாளித்துவிடலாம்! ஆனால்   சில நேரங்களில் கொடிய நோய், விபத்து, அன்பானவர்கள் மரணம், வேலை இல்லாமை, கடன் பிரச்சனை, எதிரிகள் தொல்லை போன்ற மிக பெரிய பிரச்சனை வந்து,  இனிமேல் எதிர்காலம் என்ற ஒன்று நமக்கு உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நம்மை தாக்கி நிர்மூலமாக்கி விடுவதை வாழ்வில் பலர் உணர்ந்திருக்கலாம்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன என்பதை யாரும் அமர்ந்து ஆராய்வது கிடையாது. அநேகர் தான் ஒரு பரிசுத்தவானாகவும் இறைவன் தவறுதலாக அந்த துன்பத்தை தனக்கு கொடுத்து விட்டதாகவும் நினைக்கின்றனர்.  சிலர் ஆண்டவன் என்னை ஏன் இப்படி சோதிக்கின்றான்? என்கின்றனர். சிலர் அதற்கும் ஒருபடி மேலே போய் தனக்கு நன்னை கொடுத்த ஆண்டவனுக்கே கண் இருக்கிறதா என்று கேட்கின்றனர். அது முற்றிலும்  
தவறான ஒரு கருத்து!
 
ஒரு மிகப்பெரிய அடர்ந்த மரம் நம் கண்ணுக்கு நன்றாக தெரியும், ஆனால் அந்த மரத்தை தங்கி நிற்கும் அடிப்படையான வேர் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. மரத்தை எவ்வளவு தான் வெட்டினாலும் மீண்டும் மீண்டும் துளித்து விடும் ஆனால் வேரை கண்டு பிடித்து அகற்றினால் மீண்டும் அந்த மரம் வளராது.

அதுபோல் நமக்கு ஒரு பிரச்சனை, துன்பம் என்றால் அந்த துன்பம் யாரால் வந்தது என்று நோக்குவது தவறு, அதற்கு அடிப்படையான காரணம் நம்முடைய தவறாகதான் இருக்கும் அதை ஆராய்ந்து அகற்ற வேண்டும் . 

இறைவன் சார்பில் நான் சொல்லும் வார்த்தை என்னவென்றால், இறைவன் மகா நீதிபரர், அவர் சர்வ லோகத்துக்கும் நியாயாதிபதி, அவர் நியாயகேடு இல்லாத சுத்த தேவன் அவர் யாரையும் நியாயம் இல்லாமல் தண்டிப்பதும் இல்லை காரணம் இல்லாமல் யார் கையிலும் இருந்து எதையும் பிடுங்குவதும் இல்லை, எனவே நம்மை நாமே ஆராய்ந்துபார்த்து திருத்திகொண்டால்  துன்பத்திலிருந்து சுலபமாக விடுபட முடியும்!  __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சங்கீதம் 73:3-10 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது. ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.

பிரசங்கி 1:13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.

பிரசங்கி 8:14 பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.

பிரசங்கி 9:2 எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.

பிரசங்கி 3:9,10 வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.


நம் தவறுகளின் விளைவாகவே துன்பங்கள் நமக்கு நேரிடுகின்றன எனக் கூறும் சுந்தர் அவர்களே! ஒரு குழந்தை பிறந்தது முதல் விபரமறியும் வயதுவரை அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் காரணம்?

குழந்தைகள் பட்டினியால் வாடுவது, வியாதியால் அவதிப்படுவது, விபத்துக்களில் சிக்கி வேதனைப்படுவது இதற்கெல்லாம் யார் காரணம்?

sundar wrote in கேள்வி பதில்கள் -> ஊனமாய் பிறப்பது யார் செய்த குற்றம் ?:
//ஊனமாய் பிறந்தவன் தனது வயதில், தன நிலையை அறிந்து எல்லோரும் உலகில் பார்வையுடன் இருக்க என்னை மட்டும் இப்படி ஏன் படைத்தீர் ஆண்டவரே என்று தொடர்ந்து மன்றாடி அழுது ஜெபிக்கும்போது தேவனின் கிரியை வெளிப்பட்டு அவருக்கு பார்வை வர அதன் மூலம் அநேகர் ஆண்டவரின் கிரியை அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது! //

அப்படியானால் தன் நிலை அறியும் வயதுவரை ஒருவன் ஊனத்தால் துன்புறுவேண்டியதுதானா? அது எந்த வகையில் நியாயம்?

ஒருவேளை, விபரமறியும் வயது வரை ஒருவன் அனுபவிக்கும் துன்பங்களைக் கணக்கில் எடுக்கவேண்டியதில்லை என்கிறீர்களா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

 
anbu wrote
//சங்கீதம் 73:3-10 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை///
 
சகோ அவர்களே!  துன்மார்க்கர் வாழ்வுக்கும் தேவனுடய கரத்துக்குள் வந்தவர்கள் வாழ்வுக்கும் அனேக வேருபாடுகள் உண்டு. துன்மார்க்கரின் வாழ்க்கையின் அடிப்படையே வேறு.  

யோபு:

:20:4:4. துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
5. அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

24. 24:அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, காணாமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.

மெலும் நீதி
: 6: 12 15 சொல்வதுபோல்

15. ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

துன்மார்க்கரின் வாழ்வு நம்பிக்கை இல்லாதது ஷனப்பொளுதில் பாதாள்த்தில் இரஙகப்போகும் துன்மார்க்கர்
வாழ்வை ப்ற்றி நாம் ஆராய்வது நமக்கு அடுத்ததல்ல.

அதாவது ஸ்கூலில் மாப்பிள்ளை பெஞ்ஜ் என்று உண்டு

அதில்அமர்ந்திருப்பவர்களுக்கு எந்த கஸ்டமும் கிடயாது கஸ்டப்பட்டு படிக்க வேண்டிய தேவையில்லை. அவர்களை வாத்தியார் கண்டுகொள்ளவே மாட்டார். ஆனால் 80 மார்க் வாங்கியவனயோ இன்னும் நீ நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுருத்துவார். அதுபோல் துன்மார்க்கன் தேவனால்  தண்ணி தெளித்து விடப்பட்டவன், அவனுக்கு துன்பம் இல்லை அவன் நித்யவாழ்வை காண்பதில்லை 


ANBU WROTE; 
////பிரசங்கி 1:13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.///

அடுத்ததாக சாலமோன் ஞானி உலகின் நிலை பார்த்து புலம்பும் பல வசனஙளை குறிப்பிட்டிருக்கிரீகள் அனால் அப்படி புலம்பிய அவந்தான் ஒரே வசனத்தின்:

பிரசங்கி 8:5\ கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒருதீங்கையும் அறியான் 

என்றும்   சொல்லியிருப்பதை ஏன் நீஙகள் கருத்தில் எடுக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை.
ஆண்டவரின் கட்டளைகள் கற்பனைகளை முழுமையாக வாழ்வில் கைகொண்டு நடந்து  பார்த்தால் உண்மை புறிந்துவிடும். துன்பத்தை தவிர்க்கதான் அவர் கற்ப்பனைகள்படி நீதி நியாயஙள்படி நடப்பது அவசியம். அதாவது

சங்கீதம் 119:89

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

இவ்வாரு வானத்தில் நிலை நிற்க்கும் வசனமானது

யோபு

: 38:33, வானத்தின் நியமனஙளை நீ அறிவாயோ அது பூமியையாழும் ஆளுகையை நீ திடம்பன்னுவாயோ? என்ற வசனத்தின்படி

அந்த வசனஙகளே பூமியை ஆளுகிறது. அதை அறிந்து சரியாக‌ செயல்பட்டால் நிச்சயம் துன்பங்களை தவிர்க்க முடியும்.
 
ANBU WROTE:
///நம் தவறுகளின் விளைவாகவே துன்பங்கள் நமக்கு நேரிடுகின்றன எனக் கூறும் சுந்தர் அவர்களே! ஒரு குழந்தை பிறந்தது முதல் விபரமறியும் வயதுவரை அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் காரணம்?///


அடுத்ததாக சிறு பிள்ளைகளுக்கு வரும் துன்பம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள்
அதாவது உஙக்ள் கருத்துப்படி இந்த உலகில் என்னவென்று தெரியாத எதோ நடக்கிறது அதனால் எல்லோரும் துன்பம் உபத்திரியம் என்று அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அதை யாரும் தவிர்க்க முடியாது என்று கருதுகிரீர்கள் என்று நினைக்கிறேன்.
அதாவது சாதாரண்மாக பார்த்தால் அப்படித்தான "உலகத்தில் உபத்திரியம் நிச்சயம் உண்டு"

ஆகினும் வேதாகமத்தில் எல்லாவறிக்குமே பதில் இருக்கிறது. பதிலில்லாத கேள்வி எதுவுமே இல்லை வேதம்  சொல்வதென்ன.

சங்கீதம் 145:17
கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்

சங்கீதம் 25:12
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.

ஆமோஸ் 3:7
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

என்ற வசனஙள் அடிப்படையில் கர்த்தரிடம் மன்ட்றாடி ஜெபித்தால் எல்லா காரியங்ளுக்கும் அடிப்படை வேர் என்ன என்பதை அரிந்து கொள்ளமுடியும்
.

"என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம்தரித்தாள்" என்ற வார்த்தைபடி பூமியில் மனிதனாக பிற‌ந்தாலே ஒருவன் பாவிதான். அவனுக்கு  எவ்விதத்திலும் துன்பத்தை  சாத்தானால் கொண்டுவர முடியும் ,  ஆகினும்  அவனுக்கு விபரம் தெரியும் நாள் வரையில் கிடைக்கும் தண்டனைக்கு அவனது பெற்றோரே பொருப்பு

விபரம் அறிந்தபிறகு ஆண்டவரின் வசனத்தை அறிந்து சரியாக நடந்தால் துன்பங்ளில் இருந்து நிச்சயம் தப்பலாம்.

என்னை பொருத்தவரை வானங்களில் நிலை நிற்க்கும் தேவனின் வர்த்தைகள் பூமியில் பிறந்த‌ எல்லொர் மேலும் தானாகவே ஆளுகை செய்யும். அதை மீறும்போது தெரிந்து செய்தவர்களுக்கு பல அடி தெரியாமல் செய்தவர்களுக்கு சிலஅடி என்ற விகிதத்தில் செயல்படும். மட்றபடி அடிப்படை இல்லாத அர்த்தமற்ற காரியகள் எதுவும் இங்கு நடைபெறவில்லை.  
 
விபரம்அரியா சிறு பிள்ளைகளுக்கு வரும் துன்பத்திற்கு முக்கிய காரணம் பெற்றோர் செய்யும் பாவமே. என்பதை வலியுருத்த என் அனுபவ சாட்சி! கீழேசொடுக்கவும்.
 


 

-- Edited by SUNDAR on Monday 15th of February 2010 11:48:25 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:
//அடுத்ததாக, சாலமோன் ஞானி உலகின் நிலை பார்த்து புலம்பும் பல வசனங்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அப்படி புலம்பிய அவன்தான் ஒரு வசனத்தில்:

பிரசங்கி 8:5 கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒருதீங்கையும் அறியான்.

என்றும் சொல்லியிருப்பதை ஏன் நீஙகள் கருத்தில் எடுக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை. ஆண்டவரின் கட்டளைகள் கற்பனைகளை முழுமையாக வாழ்வில் கைகொண்டு நடந்து  பார்த்தால் உண்மை புரிந்துவிடும். துன்பத்தை தவிர்க்கத்தான் அவர் கற்பனைகள்படி நீதி நியாயங்கள்படி நடப்பது அவசியம்.//


சகோதரரே! பிரசங்கி 8:5-ன் உங்கள் புரிந்துகொள்தல் தவறானது என்றே கருதுகிறேன். இதைக் குறித்து நாம் தியானிக்கும்முன், குழந்தைகள் துன்புறுவதைப் பார்ப்போம்.

குழந்தைகளின் துன்பத்திற்கு பெற்றோர்களே காரணம் என ஒரு வரியில் மிகஎளிதாக சொல்லிவிட்டீர்கள். ஒருவேளை குழந்தைகளுக்கு வரும் நோய், நொடி போன்ற துன்பங்களுக்கு நீங்கள் சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஏழ்மையின் காரணமாக பசியில் துடிக்கும் குழந்தையின் துன்பத்திற்கும் பெற்றோர்களே காரணம் எனச் சொல்லிவிடமுடியுமா?

உதாரணமாக, உங்கள் வீட்டினருகே ஒரு ஏழை வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவரும் பட்டினியால் துடிப்பதைப் பார்க்கிற நீங்கள், அவர்களின் துன்பத்திற்கு பெற்றோரின் தவறுகளே காரணம் எனச் சொல்லி விட்டுவிடுவீர்களா? இல்லை, பசித்தவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடு எனும் கற்பனையின்படி உங்கள் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பீர்களா?

உங்கள் ஆகாரத்தை நீங்கள் பகிர்ந்து கொடுப்பீர்கள் என நான் நம்புகிறேன். அப்படி நீங்கள் கொடுக்கையில், அந்த ஏழை வீட்டுக் குழந்தையின் துன்பம் பறந்துவிடுகிறது; ஒருவேளை நீங்கள் கொடுக்காவிடில், அக்குழந்தை தொடர்ந்து துன்பத்திலேயே இருக்கவேண்டியதாகும். அதாவது, அக்குழந்தையுன் துன்பத்திற்குக் காரணம் “நீங்களே” என்றாகிவிடும். அதாவது, அக்குழந்தையின் துன்பத்திற்குக் காரணம், அதன் பெற்றோர்கள் அல்ல என்றாகிவிடும். இது, உங்கள் கூற்றுக்கு முரணாக அல்லவா இருக்கிறது?

இவ்வுலகில், நம் சக்திக்கப்பாற்பட்டு வருகிற வியாதி, ஊனம் போன்றவற்றிற்கான காரணம் யார் என்பதை திட்டமாகக் கூறமுடியாவிடினும், ஏழ்மையால் பலரும் படுகிற பட்டினித் துன்பத்திற்குக் காரணம், இச்சமுதாயத்தில் நடக்கும் அநீதியே என திட்டமாகச் சொல்லலாம்.

பூமியில் விளையும் பலன் யாவருக்குமுரியது (பிரசங்கி 5:9) என்பதை உணராமலும், சமநிலைப் பிரமாணம் (2 கொரிந்தியர் 8:15) எனும் பொதுவுடைமை பிரமாணத்தை உணராமலும் இச்சமுதாயம் சுயநலத்தில் திளைப்பதால்தான், பெரும்பாலான ஏழைகளும் அவர்களின் குழந்தைகளும் அரைப்பட்டினி, கால் பட்டினி, முழுப்பட்டினி கிடந்து துன்புறுகின்றனர்.

உங்கள் வீட்டினருகே பசியால் அவதிப்படும் ஏழையின் துன்பத்திற்கு எப்படி நீங்கள் காரணமாகின்றீர்களோ அதுபோல்தான் எல்லா ஏழைகளின் துன்பத்திற்கும், வசதி படைத்த மற்றவர்கள் காரணமாகின்றனர்.

வசதிபடைத்தவர்களின் தவறால், ஏழைகள் பட்டினி கிடப்பதை தேவன் நினைத்தால் ஒரு கணத்தில் மாற்றிவிடமுடியும். ஆனால் அதை அவர் செய்யாமல், இந்நிலை தொடர அனுமதிக்கிறார். ஏனெனில், லாசரு-ஐசுவரியவான் உதாரணத்தில் கூறப்பட்டபடி (லூக்கா 16:19-31), இன்று ஏழ்மையால் துன்பத்தில் உழல்பவர்களுக்கு மறுமையில் ஈடுசெய்ய அவர் அறிவார். அவ்வாறே, வசதிபடைத்தவர்களின் சுயநலத்திற்கான வெகுமதியை மறுமையில் கொடுப்பதற்கும் அவர் அறிவார். தரித்திரர்களை பாக்கியவான்கள் என்றும் ஐசுவரியவான்களுக்கு ஐயோ என்றும் இயேசு கூறியதற்கான காரணத்தை இப்போது புரிந்திருப்பீர்கள் (லூக்கா 6:20,24).

ஏழைகளின் துன்பத்திற்குக் காரணம் வசதி படைத்தவர்களே என்ற உண்மையின்படி பார்க்கையில், மனிதன் ஏழ்மையால் படும் துன்பத்திற்குக் காரணம், அவன் அல்ல என்பது தெளிவாகிறது.

இனி, பிரசங்கி 8:5-க்கு வருவோம்.

யோபுவை உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் என தேவன் கூறி யோபுவுக்கு நற்சாட்சி தந்துள்ளார். இதிலிருந்து நாம் அறிவதென்ன? யோபுவின் காலத்தில் கற்பனை என ஒன்று இருந்திருந்தால், அவர் அதைக் கைக்கொண்டிருப்பார் என்றுதான் அர்த்தம். கற்பனையைக் கைக்கொள்ளாத ஒருவனை தேவனுக்குப் பயந்தவன் என தேவன் கூறினால், தேவனின் கூற்று பொய்யாகிவிடும். தேவன் பொய் சொல்பவரல்ல.

எனவே, யோபுவின் நாட்களில் கற்பனை என ஒன்று இருந்திருந்தால், அதை அவர் நிச்சயமாகக் கைக்கொண்டிருப்பார். அப்படியிருக்கையில், யோபுவுக்குத் துன்பங்கள் வரக் காரணமென்ன?

கிறிஸ்தவர்களின் துன்பத்திற்கு யார் காரணம் என்ற திரியிலும், யோபுவின் சரித்திரம் சொல்லும் உண்மை என்ற திரியிலும் யோபுவின் தவறை எடுத்துக்காட்ட பலரும் எவ்வளவோ முயன்ற போதிலும், இறுதியில் காரணமில்லாமல் யாரும் துன்பப்பட தேவன் அனுமதிக்கமாட்டார் எனும் பொதுவான கருத்தைத்தான் சகோ.சுந்தரால் கூறமுடிந்தது; சகோ.எட்வின் அவர்கள், யோபுவுக்கு துன்பங்கள் வந்தபிறகு அவர் சொன்ன ஒரு வரியைச் சுட்டிக்காட்டி, அதுதான் யோபுவின் துன்பத்திற்குக் காரணம் என்கிறார். மொத்தத்தில் யாராலும் யோபுவின் துன்பத்திற்கு அவர் செய்த தவறே காரணம் என நிரூபிக்க இயலவில்லை.

என்னதான் முயன்று, யோபுவின் துன்பத்திற்கு அவரது தவறே காரணம் என யார் சொன்னாலும், அது யோபுவைக் குறித்து தேவன் சொன்ன நற்சாட்சியைப் பொய்யாக்கிவிடும்.

எனவே யோபுவின் துன்பத்திற்கு சாத்தான் காரணமா, தேவன் காரணமா எனச் சொல்வதைவிட, இத்திரியைப் பொறுத்தமட்டில், யோபுவின் துன்பத்திற்கு யோபு காரணமல்ல என்பதைத் திட்டமாகக் கூறமுடியும்.

எனவே, பிரசங்கி 8:5-ன் வாக்குத்தத்தம், இம்மைக்குரியதாயிராமல் மறுமைக்குரியதாக இருக்கிறது என நான் கூறுகிறேன்.


-- Edited by anbu57 on Thursday 18th of February 2010 05:39:44 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

anbu57 wrote:

 உதாரணமாக, உங்கள் வீட்டினருகே ஒரு ஏழை வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவரும் பட்டினியால் துடிப்பதைப் பார்க்கிற நீங்கள்,  ?

உங்கள் ஆகாரத்தை நீங்கள் பகிர்ந்து கொடுப்பீர்கள் என நான் நம்புகிறேன். அப்படி நீங்கள் கொடுக்கையில், அந்த ஏழை வீட்டுக் குழந்தையின் துன்பம் பறந்துவிடுகிறது; ஒருவேளை நீங்கள் கொடுக்காவிடில், அக்குழந்தை தொடர்ந்து துன்பத்திலேயே இருக்கவேண்டியதாகும். அதாவது, அக்குழந்தையுன் துன்பத்திற்குக் காரணம் “நீங்களே” என்றாகிவிடும். அதாவது, அக்குழந்தையின் துன்பத்திற்குக் காரணம், அதன் பெற்றோர்கள் அல்ல என்றாகிவிடும்.   


அதாவது 'ஒருவருடைய   உத்தமத்தை சோதிக்க சம்பந்தமே இல்லாத எவர் பிள்ளையையோ  தேவன் பசியால் தவிக்க விடுகிறார்' என்பது உங்கள் கருத்து அப்படித்தானே?
 
ஒருவேளை எனது பிள்ளையே பசியால் துடித்து அழுகிறது, நான் ஆண்டவரிடம் மன்றாடி "ஆண்டவரே எனக்கு ஏன் இந்த சோதனை நான் என்னால் முடிந்தவரை  உமது  வார்த்தைகளை கைகொண்டு வாழ்கிறேனே நீங்களும்
 
10. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

என்று வாக்கு கொடுததிருக்கிரீர்களே" என்று கண்ணீருடன்   ஜெபிக்கும்போது,
 
ஆண்டவர் மிக சுலபமாக "இது சகோ. அன்பு என்பவர் தனது பணத்தை ஏழைக்கு கொடுக்கிறாரா என்பதை சோதிப்பதற்காக நான்  நடத்தும்  ஒரு சோதனை உனக்கு இதில் எந்த சம்பதமும் இல்லை,  நீ என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்"  என்று சொன்னால்.
 
இது தேவனுக்கேற்ற ஒரு நீதியான செயலாக இக்கும் என்று நீங்கள் கருதுவீர்களாயின்   நீங்கள் தேவனை எவ்வளவு ஒரு கொடூரமான சோதனைகாரனாக கருதுகிறீர்கள் என்பது தெரியவருகிறது.
 
என் குழந்தை பசியால் அழுவதற்கு நீங்கள் இரங்குகிறீர்கள்  இரங்காமல் போகிறீர்கள் அது எனக்கு தேவையே இல்லாத விஷயம். ஆனால் இங்கு தவிப்பதும் துடிப்பதும் யார்?    நானல்லவா! 
 
நீங்கள் இரங்கி உதவி செய்தால் அதற்க்குண்டான பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். ஒரு வேளை அநேகர் இருதயத்தை  அடைத்துகொள்வதுபோல் நீங்களும் அடைத்துகொண்டீர்கள் என்று வைத்துகொள்வோம், நீங்கள் அதுபாட்டுக்கு போய்விடுவீர்கள் ஆனால்  இங்கு பிள்ளை அழுவதை பார்த்து துடிப்பது யார் தவிப்பது யார்?நானல்லவா!
 
இப்படி யாருக்காகவோ யாரையோ துன்பபடுத்தி பார்ப்பதுதான் சர்வலோக நியாயாதிபதியாகிய தேவனின் நியாயமா?

உபாகமம் 32:4  அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்
      
மீண்டும் சொல்கிறேன் இவ்வுலகில் நடக்கும் எவ்வித நிகழ்வுகளுக்கும்  தேவன் எவ்விதத்திலும் குற்றமற்றவர்   ஆகினும் பாவத்திலிருந்து மனிதனை மிக  தனது  குமாரனையே ஒப்புகொடுத்தவர்   "நீதியும் நேர்மையும்தான் தேவனின் சின்காசனத்தின்  ஆதாரங்கள்" என்று சங்கீதக்காரன் சொல்கிறான். அவர் நீதி  தவறுகிறவர் அல்ல! மறுமை நாளில் இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும்  யாரொருவர் கேட்கும் நியாயமான கேள்விக்கும் தேவனின் நியாயமான பதில் நிச்சயம் இருக்கும்.  மறுமை நாள் என்ன? இந்த உலகில் வாழும் காலங்களிலும் நாம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒவ்வொரு தவருதல்தான் காரணம் என்பதை விடாபிடியாக  விசாரித்தல் தேவனிடமிருந்து   விபரம் அறியலாம். 
 
உங்கள் கருத்துக்கு அடிப்படையில் இருந்தே தவறு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
 
நன்மை தீமை எதுவு தெரியாத ஒரு குழந்தை போன்ற ஆதாம் ஏவாளுக்கு இந்த பழத்தை பறித்து புசிக்காதே என்று தேவன் கட்டளையிட காரணம் என்ன?
 
ஆதாம் ஏவாளை சோதிக்க சாத்தான் எங்கிருந்து வந்தான்? 
 
ஆதாம் பாவம் செய்வான் என்று தேவனுக்கு முன்னமே தெரியுமா?  தெரியாதா?
 
போன்ற எல்லா கேள்விகளுக்குமே விடை கண்டால்தான்  தேவனின் நியாயம் புரியுவரும்!  
   -- Edited by SUNDAR on Wednesday 17th of February 2010 12:09:28 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே! யதார்த்தத்தில் நடப்பதற்கு பதில் சொல்லாமல், வேதாகமத்தின் ஒருவரியைப் பிடித்துக்கொண்டு சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்.

லாசரு-ஐசுவரியவான் உதாரணம், லூக்கா 6:20,24 வசனங்களையெல்லாம் சொல்லியிருந்தேன்; அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் ஒரே வரியை மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்.

sundar wrote:
//ஒருவேளை எனது பிள்ளையே பசியால் துடித்து அழுகிறது, நான் ஆண்டவரிடம் மன்றாடி "ஆண்டவரே எனக்கு ஏன் இந்த சோதனை நான் என்னால் முடிந்தவரை  உமது  வார்த்தைகளை கைகொண்டு வாழ்கிறேனே நீங்களும்

10. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

என்று வாக்கு கொடுததிருக்கிறீர்களே" என்று கண்ணீருடன் ஜெபிக்கும்போது,

ஆண்டவர் மிக சுலபமாக "இது சகோ.அன்பு என்பவர் தனது பணத்தை ஏழைக்கு கொடுக்கிறாரா என்பதை சோதிப்பதற்காக நான் நடத்தும் ஒரு சோதனை உனக்கு இதில் எந்த சம்பதமும் இல்லை, நீ என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்"  என்று சொன்னால்.

இது தேவனுக்கேற்ற ஒரு நீதியான செயலாக இக்கும் என்று நீங்கள் கருதுவீர்களாயின் நீங்கள் தேவனை எவ்வளவு ஒரு கொடூரமான சோதனைகாரனாக கருதுகிறீர்கள் என்பது தெரியவருகிறது.//

ஒரு மனிதனை ஏழ்மை நிலையில் வைத்து, அவனைக் கொண்டு மற்றொருவனை தேவன் சோதித்தால், அது கொடூரம் என்கிறீர்கள். ஆனால், ஒரு மனிதனின் தவறுக்காக மற்றவர்களைத் துன்புறுத்துவது மட்டும் மாபெரும் இரக்கத்தைக் குறிக்குமா?

யாத்திராகமம் 20:5 உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

ஒரு தனிமனிதனின் அக்கிரமத்தின் பலனை, 3-ம் 4-ம் தலைமுறை வரை சுமத்துவது இரக்கமான செயலா?

எகிப்தின் அதிபதி பார்வோனின் மனக்கடினத்தினிமித்தம், எகிப்தின் எல்லா மக்களையும் வாதையால் வாதித்ததும் கொன்றதும் இரக்கமான செயலா?

யோபுவுக்கு துன்பத்தைக் கொடுப்பதற்காக, அவரது வேலைக்காரர் அனைவரையும் (ஒருவனைத்தவிர) ஒரேநாளில் சாகடித்தது இரக்கமான செயலா?

யோபுவின் வேலைக்காரரில் ஒருவன் மட்டும் யோபுவிடம் தகவல் சொல்வதற்காக தப்புவிக்கப்பட்டானே, அவன் தப்பித்ததற்கு அவனது நீதி காரணமா, அல்லது மற்ற வேலைக்காரர் மரித்ததற்கு அவர்களின் அக்கிரமம் காரணமா? இரண்டும் கிடையாது. இப்படி காரணமின்றி பலரைக் கொன்றது இரக்கமான செயலா?

இஸ்ரவேலரில் சிலர் செய்த தவறுக்காக, பலரைக் கொல்வதும் வாதிப்பதுமாக எத்தனையோ சம்பவங்கள் பழையஏற்பாட்டில் உண்டு. உதாரணமாக, தாவீது செய்த பாவத்திற்காக அவரது ஜனங்களில் 70000 பேரை கொன்று குவித்தது இரக்கமான செயலா (2 சாமுவேல் 24:15)?

இப்படி ஏராளமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிச் சொல்வதால் தேவன் அநீதியானவர் இரக்கமற்றவர் என நான் சொல்லவில்லை. ஒருவரின் தவறுக்காக, அல்லது ஒருவனைச் சோதிப்பதற்காக பலரைக் கொல்வதும் வாதிப்பதும் எப்படி தேவனுக்கு நீதியானதோ, அதேவிதமாக, ஒரு மனிதனின் இரக்க குணத்தை சோதித்தறிவதற்காக வேறு சிலரை ஏழ்மைக்குள் வழிநடத்துவது தேவநீதிக்குக் உட்பட்டதே. இதைக் குறித்து கேள்விகேட்கவோ அல்லது விசாரிக்கவோ நமக்கு அதிகாரமில்லை.

லாசரு எனும் தரித்திரன் ஐசுவரியவான் வீட்டு வாசலில் இருந்ததால்தான், ஐசுவரியவானை இரக்கமற்றவன் என நியாயந்தீர்க்க முடிந்தது. லாசரு அங்கு இல்லாவிடில், ஐசுவரியவான் இரக்கமுள்ளவனா இல்லையா என்பது எப்படி அறியப்பட்டிருக்கும்?

இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு தேவன் துன்பத்தை அனுமதிக்கிறார் அல்லது கொடுக்கிறார் என்றால் அதற்கு ஒரு நன்மையான நோக்கம் அல்லது நியாயமான காரணம் நிச்சயமாக உண்டு. தவறு செய்யும் ஒருவனுக்குத் தேவன் துன்பத்தைக் கொடுப்பார் என்பது நாம் பொதுப்படையாக ஏற்றுக்கொண்ட ஒரு காரியம். ஆனால் தவறு செய்யாத ஒருவன் கூட இவ்வுலகில் துன்பம் அனுபவிக்கக்கூடும் என்பது தேவன் நியமித்த நியமனம். இதைப் பிரசங்கியின் வசனங்கள் நமக்குத் தெளிவாக எடுத்துரைத்த போதிலும் அதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனதில்லை.

கிட்டத்தட்ட யோபுவின் நண்பர்களின் நிலையில் நீங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. யோபுவின் துன்பங்களுக்கு அவரது அக்கிரமங்களே காரணம் என அவரது நண்பர்கள் நியாயந்தீர்த்ததைப் போலவே, எந்தவொரு மனிதன் துன்பம் அனுபவித்தாலும் அவன் நிச்சயமாக ஏதேனும் அக்கிரமம் செய்திருப்பான் என நீங்கள் நியாயந்தீர்க்கிறீர்கள்.

குழந்தைகள் துன்பப்படும் காரியத்திற்கு மீண்டும் வருகிறேன்.

பெற்றோர் உயிருடன் இருக்கையில், ஒரு குழந்தை துன்பப்பட்டால், அதற்குக் காரணம் அக்குழந்தையின் பெற்றோர் எனக் கூறிக் கொள்ளலாம். பெற்றோர் உயிருடன் இல்லாத அனாதைக் குழந்தையின் துன்பத்துக்கு யாரைப் பொறுப்பாக்குவீர்கள்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

BRO. ANBU WROTE:
///சகோ.சுந்தர் அவர்களே! யதார்த்தத்தில் நடப்பதற்கு பதில் சொல்லாமல், வேதாகமத்தின் ஒருவரியைப் பிடித்துக்கொண்டு சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்.//
 
நான்  ஒரு  வரியை  மட்டும்  பிடிக்கவில்லை  சகோதரரே 
வேதாகமததின் முக்கிய சாராம்சமே அதுதான் என்று நான் கருதுகிறேன்.  (அப்படியே ஒரே வரியை பிடித்தாலும் வசனம் சொல்வது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும்)   

மோசேயிடம்  கற்பனைகள் கட்டளைகளை சொன்ன தேவன் இறுதியில் சொல்வதென்ன?
 
உபாகமம் 30:19 நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்
 
உபாகமம் 28:1 இன்றுநான்உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
 
அதற்கடுத்து சொல்லப்பட்ட ஆசீர்வாதங்களை படித்தால்   தீமை தரும் யாரும் நம்முன் நிற்ககூட முடியாது என்பதை அறியமுடியும்!
 
நீதிமொழிகள் 19:23 கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
 
சங்கீதம் 121:7 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;  
 
ரோமர் 2:10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.
 
நன்மை செய்பவனுக்கு சமாதானமும்  துன்மார்க்கனுக்கு  துன்பமும் கிடைக்கும் என்பது வேதம் சொல்லும் பொதுவான கருத்து.  
 
அதன் அடிப்படையிலேயே நான் பேசுகிறேன். நீங்கள் சொல்லும் வசனங்களை  சொல்லும் அதே வேதாகமம்தானே  நான் சொல்லும் வசனங்கள் மற்றும்  
 "கற்பனையை கைகொள்கிறவன் ஒரு தீங்கையும்  அறியான்" என்றும் சொல்கிறது!  
 
எனவே  நீங்கள் உங்கள் விசுவாசத்தின்படி, எல்லோரையும் கர்த்தர் சோதிப்பார் எல்லோருக்கும் துன்பம் கண்டிப்பாக வரும் என்று விசுவாசித்தால் அது அப்படித்தான் நடக்கும் இங்கு எனது விசுவாசத்தை ஏன் மட்டுபடுத்துகிறீர்கள்?

நான் கடந்த  17 வருடங்களாக கைகொண்டு   அனுபபூர்வமாக அனுபவித்து வரும் காரியங்களை 
நீங்கள் ஒரு வசனத்தை காட்டி இல்லை என்று மறுத்தல் உடனே நான்  நம்பவேண்டுமா?    
 
அவரவர் விசுவாசத்தின்படியே அவரவருக்கு ஆகட்டும்!
எனது விசுவாசத்தை குற்றப்படுத்த வேண்டாம்!
 
வசனம் என்ன சொல்கிறது!
 
மத்தேயு 21:21 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் 
 
என்று சொல்கிறதல்லவா?  இப்படி நினைத்து  பார்க்க முடியாத பெரிய காரியம்  எல்லாம் விசுவாசத்தால் நடக்கும் என்று வேதம் சொல்லும்போது,   நான்  என் தேவனின் கட்டளைகளை கைகொண்டால் ஒரு தீங்கும் என்னை அணுகமுடியாது என்றும்  அவரது வசனம் என் கால்களுக்கு தீபம் என்று விசுவாசித்து அவற்றை கருத்தாய்   கைகொள்கிறேன் எனவே எந்த தீங்கும் என்னை அணுகுவதில்லை அணுகவும் முடியாது  அதைப்பற்றி இங்கு எழுதுகிறேன் 
 
அனால் நீங்கள், 
 
யார் எப்படி கட்டளையை கைகொண்டு நடந்தாலும் துன்பம் கண்டிப்பாக   எல்லோருக்கும் வரும் தேவன் அப்படித்தான் செய்வார் அடுத்தவர் பழியை எல்லாம் நம்மீது தூக்கிபோடுவார்  என்று ஒரு விசுவாசமற்ற நிலையை சொல்கிறீர்கள், அதற்க்கு வசன ஆதாரம் தருகிறீர்கள், நல்லது ஆதாரம் எல்லாவற்றிக்குமே இருக்கிறது ஏன் பிசாசுக்கு கூட  சொல்ல  ஆதாரவசனம்  வேதத்தில் இருந்ததே!  
 
ஆனால்   எது மேன்மையானது?
 
மேன்மயானதையே என்றும் நாடுவோம். விசுவாசிப்போம் பயன்பெறுவோம்!  
 
(அடுத்த பகுதிக்கும் விரைவில் பதில் தருகிறேன்)

 

-- Edited by SUNDAR on Wednesday 17th of February 2010 09:52:35 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:
//நன்மை செய்பவனுக்கு சமாதானமும்  துன்மார்க்கனுக்கு  துன்பமும் கிடைக்கும் என்பது வேதம் சொல்லும் பொதுவான கருத்து. 

அதன் அடிப்படையிலேயே நான் பேசுகிறேன். நீங்கள் சொல்லும் வசனங்களை  சொல்லும் அதே வேதாகமம்தானே  நான் சொல்லும் வசனங்கள் மற்றும் 
"கற்பனையை கைகொள்கிறவன் ஒரு தீங்கையும்  அறியான்" என்றும் சொல்கிறது! 

எனவே  நீங்கள் உங்கள் விசுவாசத்தின்படி, எல்லோரையும் கர்த்தர் சோதிப்பார் எல்லோருக்கும் துன்பம் கண்டிப்பாக வரும் என்று விசுவாசித்தால் அது அப்படித்தான் நடக்கும் இங்கு எனது விசுவாசத்தை ஏன் மட்டுபடுத்துகிறீர்கள்?

நான் கடந்த  17 வருடங்களாக கைகொண்டு   அனுபபூர்வமாக அனுபவித்து வரும் காரியங்களை
நீங்கள் ஒரு வசனத்தை காட்டி இல்லை என்று மறுத்தல் உடனே நான்  நம்பவேண்டுமா?   

அவரவர் விசுவாசத்தின்படியே அவரவருக்கு ஆகட்டும்!
எனது விசுவாசத்தை குற்றப்படுத்த வேண்டாம்!//

உங்கள் தனிப்பட்ட விசுவாசத்தை நான் குற்றப்படுத்தவுமில்லை, மட்டுப்படுத்தவுமில்லை சகோதரரே. திரியின் தலைப்பின் அடிப்படையில், மனிதனின் துன்பத்துக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை விவாதிக்கிறோம், அவ்வளவே.

தனிப்பட்ட அனுபவங்களை நாம் இங்கு விவாதிக்கவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள அனுபவங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களின் துன்பத்துக்கான காரணத்தை தீர்மானித்துவிடமுடியாது.

விபரமறிந்த மனிதனின் துன்பத்துக்கு அவனது தவறுகளே காரணம் எனச் சொல்லிவிட்டீர்கள்; விபரமறியா குழந்தையின் துன்பத்துக்குக் காரணம் அக்குழந்தையின் பெற்றோர்களின் தவறுகளே எனக் கூறிவிட்டீர்கள்; சரி சகோதரரே! இவ்வுலகில் அனாதைகளாக திரிந்து, அனுதினமும் அல்லல்பட்டுக் கொண்டும், தங்கள் வயிற்றைக் கழுவுவதற்காக கடைகளில் எடுபிடி வேலை பார்த்து முதலாளியிடமும் வாடிக்கையாளர்களிடமும் அடியும் மிதியும் பட்டு அன்றாடம் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கும் சிறுவர்களின் (அதாவது 10 முதல் 15 வயதிலான சிறுவர்களின்) துன்பத்துக்குக் காரணமென யாரைச் சொல்வீர்கள்?

அப்படிப்பட்ட சிறுவர்களிடம் சென்று, நீ ஏதோ தப்பு செய்துள்ளாய், அதனால்தான் இப்படி சாகாமல் சாகிறாய் என்பீர்களா? யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், உங்கள் ஒருவரின் அனுபவத்தை மட்டும் வைத்து உலகத்தையே நியாயந்தீர்க்க முற்படுகிறீர்கள்.

இரண்டுங்கெட்டான் வயதில், வளரும் வயதில், அனாதைப் பட்டத்துடன் ஒருவேளை உணவுக்காக அடிபட்டு மிதிபட்டுப் போராடுகிற ஒரு சிறுவனின் துன்பத்துக்குக் காரணம் அவனது தவறுகளே என எளிதில் சொல்லி விடுவீர்களா சகோதரரே?

விவாதம் என்றால் பல தரப்புகளையும் எடுத்து அலசிப் பார்க்கவேண்டும்.

நம் கேள்விகள் அனைத்திற்கும் வேதவசனம் சொல்வதைத்தான் பதிலாக எடுக்க வேண்டுமேயொழிய, நம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் பதில் சொல்லக்கூடாது.

நான் பேருந்தில் பயணம் செல்கையில், சாலையோரங்களில் கூலி வேலை செய்யும் பலரைப் பார்த்துள்ளேன். அவர்களில் சிலர், சுமார் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் உண்டு. மிகவும் மெலிந்த தேகத்துடன், ரவிக்கை போடாத கந்தல் ஆடையுடன் கடப்பாரையைப் பிடித்து கொளுத்தும் வெயிலில் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்துள்ளேன். அவர்களுக்கு உங்களையும் என்னையும் போல் வேதாகமத்தைப் படிக்க/கேட்க நேரம் கிடையாது. காலை முதல் மாலை வரை உடல் வலிக்க வேலைசெய்துவிட்டு கிடைக்கிற பணத்தைக் கொண்டு வயிற்றைக் கழுவி அப்பாடா என இரவில் படுத்து எழும் அவர்களுக்கு வாழ்வின் தத்துவங்களை சிந்திக்க நேரம் கிடையாது. அவர்கள் தப்பு செய்ய நினைத்தால்கூட அவர்களின் உடல் அதற்கு ஒத்துவராது.

அப்படிப்பட்ட அவர்களுக்கு பட்டகாலில் படும் எனும் பழமொழிப்படியே வியாதி/விபத்து போன்றவற்றால் மேலும் மேலும் துன்பங்களும் வருவதுண்டு. அவர்களின் துன்பத்துக்கு யாரைப் பொறுப்பாக்குவீர்கள்? அவர்களிடமும் சென்று: “நீங்களெல்லாம் தப்பு செய்துள்ளீர்கள், அதனால்தான் இப்படி கஷ்டப்படுகிறீகள், நாங்களெல்லாம் தப்பு செய்யவில்லை, அதனால்தான் தேவன் எங்களை ஆசீர்வதித்துள்ளார், நீங்களும் உங்கள் தப்பை உணர்ந்தால் உங்களுக்கும் எங்களைப் போன்ற வசதி வாழ்வு கிடைத்துவிடும்” என்று சொல்வீர்களா?

ஓர் ஏழை விதவை காணிக்கை போட்டதைப் பாராட்டின இயேசு, அந்த விதவையின் ஏழ்மையைப் போக்கினாரா?

தேவன் யாரையும் சோதிப்பதில்லை என்கிறீர்களே, மக்கெதோனியா நாட்டு சபையினர் உபத்திரவத்தினால் சோதிக்கப்பட்டதற்கு என்ன பதில் சொல்வீர்கள் (2 கொரிந்தியர் 8:2)?

அவர்கள் கொடிய தரித்திரத்தில் இருந்தபோதிலும் மிகுந்த சந்தோஷத்துடன் உதாரத்துவமாய் தர்மசகாயம் செய்ததாக பவுல் கூறுகிறார். மாத்திரமல்ல, அது தேவன் அவர்களுக்குக் கொடுத்த கிருபை என்றும் சொல்கிறார். அதாவது அவர்கள் உபத்திரவத்தினால் சோதிக்கப்பட்டபோதிலும், பிறருக்கு தர்மசகாயம் செய்ய கிடைத்த வாய்ப்பும் அதற்கான மனமும் அவர்களுக்கு இருந்ததைத்தான் தேவன் அவர்களுக்குக் கொடுத்த கிருபை என்கிறார்.

இதுதான் சகோதரரே கிறிஸ்தவ வாழ்வின் மேன்மை. நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்கையில், உபத்திரவங்களும் துன்பங்களும் ஏன் வருகின்றன என கேள்வி கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை. உபத்திரவங்களிலும் சந்தோஷமாய் இருப்பதுதான் மெய்யான கிறிஸ்தவ வாழ்வு. மக்கெதோனியா சபையார் பரிபூரண சந்தோஷத்தில் இருந்ததாக பவுல் கூறுவதைக் கவனியுங்கள். அவர்களிடம் பவுல் சென்று, நீங்கள் தப்பு செய்துள்ளீர்கள், அதனால்தான் உங்களுக்கு மிகுந்த உபத்திரவமும் கொடிய தரித்திரமும் என்று சொல்லவில்லை. மாறாக, அது தேவன் அவர்களுக்கு அளித்த கிருபை என்கிறார்.

இயேசுவின் நாட்களில் எத்தனையோ தரித்திரர்கள் இருக்கத்தான் செய்தனர். அவர்களிடம் சென்று, நீங்கள் தப்பு செய்துள்ளீர்கள், அதனால்தான் இந்த நிலையில் இருக்கிறீர்கள் என இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர்களுக்குச் சுவிசேஷம் அறிவிக்கும் பணியை மட்டும் அவர் செய்தார். மேலும் பின்வருமாறு சொல்லி அவர்களை ஆறுதல்படுத்தவும் செய்தார்.

லூக்கா 6:20-23 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

தரித்திரராகிய தமது சீஷர்களுக்கு, பரலோகத்தில் மிகுதியான பலன் இருக்கும் என்று சொல்லித்தான் அவர்களைத் தேற்றினாரேயொழிய, இப்பூமியில் உங்கள் நிலை மாறிவிடும் எனக் கூறவில்லை.

பவுலின் வாழ்க்கையை அறிவீர்களல்லவா? அவர் பசி, உபத்திரவம், சிறைக்காவல், கசையடி என பல துன்பங்களை அனுபவித்தாரே, அதற்கெல்லாம் காரணம் அவரது தவறுகள் தானா?

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என இயேசு கூறினாரே, இதன் அர்த்தம் என்ன? ஒருவன் தன் தவறினிமித்தம் மட்டுமல்ல, நீதியினிமித்தமும் துன்பப்படக்கூடும் என்பதுதானே? அதாவது ஒருவனின் துன்பத்துக்குக் காரணம், அவனது நீதியாகவும் இருக்கக்கூடும் என்பதுதானே?

ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் சகோதரரே!

தேவனைப் பொறுத்தவரை, இவ்வுலகில் மனிதன் அனுபவிக்கும் இன்பதுன்பத்தைவிட மறுமையில் அவன் அனுபவிக்கப்போகிற இன்பதுன்பத்தைக் குறித்தே அதிக கரிசனை கொள்கிறார்.
இம்மை வாழ்வைப் பொறுத்தவரை, நீங்கள் சொல்கிற காரணத்தின்படி, சிலருக்கு அவர்களின் தவறுகளினிமித்தம் துன்பம் வரலாம், சிலரை தேவன் சோதிப்பதினிமித்தமும் துன்பம் வரலாம். இன்னும் சிலருக்கு காரணமேயில்லாமல்கூட துன்பம் வரலாம். அதனால்தான் மனிதர்கள் கடுந்தொல்லையில் அடிபடும்படி தேவன் அவர்களுக்கு அதை நியமித்துள்ளார் என பிரசங்கி கூறுகிறார்.

அந்த நியமனப்படிதான் 10 வயது அனாதை சிறுவனும் 70 வயது ஏழை விதவையும் துன்பப்படுகின்றனர். ஆனால் அதே வேளையில் அவ்வித துன்பங்கள் இல்லாத மற்றவர்களுக்கு தேவன் பின்வரும் கட்டளையைக் கொடுத்துள்ளார்.

ஏசாயா 1:17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

இக்கட்டளைகளின்படி நடப்பதுதான் நம் கடமையேயொழிய, அவர்களின் பாவங்களால்தான் இப்படி துன்பப்படுகிறார்கள் என நியாயந்தீர்ப்பது நம் வேலையல்ல.

திக்கற்ற பிள்ளைகள் விதவைகள்மீது தேவனின் கரிசனை நிச்சயமாக உண்டு. பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

உபாகமம் 10:18 அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.

தேவன் இப்படிச் சொல்வதால், “கூரையைப் பிய்த்துக்கொண்டு அவர்களுக்கு அவர் அன்னவஸ்திரம் கொடுத்துவிடுவார், நாம் எதுவும் செய்யவேண்டியதில்லை” என அர்த்தமல்ல. மேலே சொன்ன வசனங்களையும் உபாகாமம் 14:29; 16:11,14; 24:17,19,20,21; 26:12 வசனங்களையும் படித்துப் பாருங்கள்.

இவ்வுலகில் ஒவ்வொருவரும் அனுபவிக்கிற துன்பங்களைப் பார்த்து நாம் மலைக்க வேண்டியதில்லை. இவ்வுலகில் அனைவரும் துன்பமில்லா வாழ்வுதான் வாழவேண்டும் என நாம் நினைக்கவும் வேண்டியதில்லை. யோபு சொன்னபடி, தேவனிடத்திலிருந்து நன்மையைப் பெறுகிற நாம், தீமையையும் பெறுவது தேவநியமனம். இதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கக் கூடும். எனவே, யாருடைய துன்பத்திற்கும் இதுதான் காரணம் என நாம் நியாயந்தீர்க்க வேண்டியதில்லை.

நமக்கு தேவன் என்ன கட்டளையிட்டுள்ளாரோ அதை முழுப்பலத்துடன் செய்வது மட்டுமே நம் கடமை. இவ்வுலகில் நாமோ மற்றவர்களோ முகாந்தரம் எதுவுமின்றி துன்பப்பட நேரிட்டாலும், அந்நிலையில் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றே வேதாகமம் போதிக்கிறது (ரோமர் 12:12; 2 கொரிந்தியர் 6:10; 7:4; 13:11; பிலிப்பியர் 3:1; 4:4; 1 தெச. 5:6; யாக்கோபு 1:3). இவ்வுலகில் நாம் அனுபவிக்கிற நன்மை/தீமைகள், செய்கிற நன்மை/தீமைகள் எல்லாவற்றிற்கும் முடிவான சரிக்கட்டுதலை மறுமையில்தான் காணமுடியும். அதுவரை பொறுமையாக இருப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

anbu wrote:
///உங்கள் தனிப்பட்ட விசுவாசத்தை நான் குற்றப்படுத்தவுமில்லை, மட்டுப்படுத்தவுமில்லை சகோதரரே. திரியின் தலைப்பின் அடிப்படையில், மனிதனின் துன்பத்துக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை விவாதிக்கிறோம், அவ்வளவே.
தனிப்பட்ட அனுபவங்களை நாம் இங்கு விவாதிக்கவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள அனுபவங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களின் துன்பத்துக்கான காரணத்தை தீர்மானித்துவிடமுடியாது.////

சகோதரரே  எனது  தனிப்பட்ட அனுபவம் என்பது ஏதோ நான் சுயமாக ஒரு திட்டத்தின் அடிப்படையில் செய்தால்தான் அது தனிப்பட்டது. வேதவசனங்கள் இருபுறமும் இருக்கின்றன அதில் நான் ஒன்றை விசுவாசிக்கிறேன், நீங்கள் ஒன்றை விசுவாசிக்கிறீர்கள்  எனது விசுவாசப்படி எனக்கு நடக்கும், உங்கள் விசுவாசப்படி உங்களுக்கு நடக்கும்! இதில் எனது விசுவாசம் தனிப்பட்டது என்று எனப்படி கூறுகிறீர்கள்?  உங்களுக்கு தேவனின் வசனம் தீமையில் இருந்து  தற்காக்கும்
என்று விசுவாசிக்க முடியவில்லை 
எனவே உங்கள் கண்ணுக்கு எல்லாமே தேவன் காரணம் இல்லாமல் தண்டிப்பதுபோல் தெரிகிறது ஆனால் எல்லாவற்றிகும் எனக்கு காரணம் தெரிகிறது அதனால் வசனம் தற்காக்கும் என்றும்   நீங்களும் அதுபோல் விசுவாசியுங்கள் உங்களையும் வசனம் பாதுகாக்கும் என்று எழுதுகிறேன்
அனுபவம்தான் தனிப்பட்டதே தவிர  மூல கருத்து வனத்தின் அடிப்படையில்தான் உள்ளது!   
 
யாருக்காகவோ யாரோ பலபேர் இறந்தார்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் அவை எல்லாவற்றிக்கும் ஒரே வசனம் பதில் சொல்கிறது
 
எரேமியா 31:30 அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்;
 
இந்த வசனத்தைதான்  நான் நம்புகிறேன். இயேசுவை தவிர  யாரும் பிறருக்காக சாகவில்லை  
 
anbu wrote
////விபரமறிந்த மனிதனின் துன்பத்துக்கு அவனது தவறுகளே காரணம் எனச் சொல்லிவிட்டீர்கள்; விபரமறியா குழந்தையின் துன்பத்துக்குக் காரணம் அக்குழந்தையின் பெற்றோர்களின் தவறுகளே எனக் கூறிவிட்டீர்கள்; சரி சகோதரரே! இவ்வுலகில் அனாதைகளாக திரிந்து, அனுதினமும் அல்லல்பட்டுக் கொண்டும், தங்கள் வயிற்றைக் கழுவுவதற்காக கடைகளில் எடுபிடி வேலை பார்த்து முதலாளியிடமும் வாடிக்கையாளர்களிடமும் அடியும் மிதியும் பட்டு அன்றாடம் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கும் சிறுவர்களின் (அதாவது 10 முதல் 15 வயதிலான சிறுவர்களின்) துன்பத்துக்குக் காரணமென யாரைச் சொல்வீர்கள்?////
 
இதற்க்கு பதில் நான் முன்னமே சொல்லிவிட்டேன் சகோதரரே தேவனின்  வசனங்கள் இந்த வானத்தில் நிலைநிக்கிறது அது பூமியை ஆழுகை செய்கிறது, மேலும்  மனிதன்  பிறக்கும்போதே பாவத்தில்  பிறக்கிரான் என்று வேதம் சொல்கிறது.  எனவே நாம் அறிந்தோ அறியாமல் செய்யும் எல்லா பாவத்துக்கும் அதிக அடி  குறைந்த அடி என்ற கணக்கில் தண்டனை கிடைக்கிறது. நாம் பூமியில் பிறந்ததே பாவம் என்று இருக்கும்போது எதன் அடிப்படையில் தண்டனை என்ற கேள்வியே இல்லை.
 
இன்றைய நிலை என்ன வென்பதை நாம்  சரியாக் புரியவேண்டும்:
 
அதாவது ஒருவன்  கடன்பட்டு ஒரு தீயவனுக்கு முழு  அடிமையாகி போனான்!  அடிமையான அவனுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே அந்த தீயவனுக்கு அடிமைகள்தான் பிறக்கும். அந்த குழந்தைகளை அந்த தீயவன் என்ன வேலை செய்ய சொன்னாலும் அல்லது எவ்வளவு தண்டித்தலும் அல்லது  என்ன துன்பம் கொடுத்தாலும்  அவனை பெற்ற தாய் தந்தையால் ஒன்றும் கேட்க முடியாது. அடிமையின் மகன் அடிமையே
 
அதுபோல் இங்கு பூமியில் பாவம்செய்த மனிதன் சாத்தான் என்னும் தீயவனின்   அடிமையாகிபோனான் எனவே அவனின் சந்ததியை எல்லாம் சாத்தான் எவ்விதத்திலும் துன்பபடுத்த முடியும்! அதற்க்கு அவன் காரணம் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் பிறக்கும் மனிதன் எல்லாமே சாத்தனுக்கு 
(பாவத்துக்கு) அடிமை. எனவே சாத்தான் மனிதர்களை அவன் இஸ்டத்துக்கு துன்பபடுத்துகிறான் அதற்க்கு அவன் காரணம் எதுவும் சொல்லவேண்டிய தேவையே இல்லை.  அடிமையான தேவனின் பிள்ளைகளை துன்பபடுத்துவதன் மூலம் தன்ன ஆகதவன் என்று கீழே தள்ளிய தேவனுக்கு  மனகஷ்டத்தை  ஏற்ப்படுத்த வேண்டும் என்பதே சாத்தனின் நோக்கம். அதற்க்கு எவ்வளவு கொடூரங்களை செய்யமுடியுமோ அவ்வளவு கொடூரங்களை செய்கிறான்.
 
இந்நிலயில் சாத்தான் பயப்படுவது தேவனுடைய வசனத்துக்கு மட்டும்தான் அது உண்மையும் ஜீவனுமாய் இருப்பதால்  அவருடைய வசனத்தை கைகொண்டால் அவர்களை  அவனால் ஒன்றும் செய்யமுடியாது. எனவேதான் தேவன் என்  வார்த்தையை கைகொள்ளுங்கள் ஏன் கற்பனையை கைக்கொண்டால் ஒரு தீங்கையும் அறியாய்   என்று திரும்ப திரும்ப கூறுகிறார்     
     
////, உங்கள் ஒருவரின் அனுபவத்தை மட்டும் வைத்து உலகத்தையே நியாயந்தீர்க்க முற்படுகிறீர்கள்.////

யதார்த்தம்/ இயற்க்கை  என்று ஒன்றுமே இல்லை சகோதரரே எல்லாமே  தேவனின் கட்டுப்பாடுக்குள் சரியாகத்தான் இயங்குகிறது  நடப்பது  
எல்லாவற்றிக்கும் சரியான காரணம் உண்டு. எனது அனுபவம் எல்லாமே வேத வசனத்தின்  அடிப்படயில்தாநேயன்றி  தன்னிச்சையானது அல்ல! பிறகு அதன் அடிப்படையில்தான் எல்லாம் நடக்கிறது என்று கருதுவதில் என்ன தவறு இருக்கிறது
  
 
////இரண்டுங்கெட்டான் வயதில், வளரும் வயதில், அனாதைப் பட்டத்துடன் ஒருவேளை உணவுக்காக அடிபட்டு மிதிபட்டுப் போராடுகிற ஒரு சிறுவனின் துன்பத்துக்குக் காரணம் அவனது தவறுகளே என எளிதில் சொல்லி விடுவீர்களா சகோதரரே?////

இதற்கும் பதில் முந்தய பதிலில் இருக்கிறது ஆனால் அவனது துன்பத்துக்கு தேவன் எவ்விதத்திலும் பொறுப்பு அல்ல.

anbu wrote: 
 ////நான் பேருந்தில் பயணம் செல்கையில், சாலையோரங்களில் கூலி வேலை செய்யும் பலரைப் பார்த்துள்ளேன். அவர்களில் சிலர், சுமார் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் உண்டு. மிகவும் மெலிந்த தேகத்துடன், ரவிக்கை போடாத கந்தல் ஆடையுடன் கடப்பாரையைப் பிடித்து கொளுத்தும் வெயிலில் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்துள்ளேன். அவர்களுக்கு உங்களையும் என்னையும் போல் வேதாகமத்தைப் படிக்க/கேட்க நேரம் கிடையாது. காலை முதல் மாலை வரை உடல் வலிக்க வேலைசெய்துவிட்டு கிடைக்கிற பணத்தைக் கொண்டு வயிற்றைக் கழுவி அப்பாடா என இரவில் படுத்து எழும் அவர்களுக்கு வாழ்வின் தத்துவங்களை சிந்திக்க நேரம் கிடையாது. அவர்கள் தப்பு செய்ய நினைத்தால்கூட அவர்களின் உடல் அதற்கு ஒத்துவராது////

நல்ல கருத்து!  நாம் ஆலயத்துக்கு போய் வரும்போது அதன் வெளியே அனேக பிச்சைகாரர்களை பார்க்க முடியும்.  என்ன ஆண்டவரே உமது ஆலாயம் இவ்வளவு அருகில் இருக்க இப்படி அனேக பேர் அதன் அருகிலேயே கஷ்டப்படுகிறார்களே என்று கேட்டபோது.  ஆலயத்தில் மட்டுமல்ல அவன் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலே இருந்து    என்னை இப்படி ஒரு நிலையில்  ஏன் படைத்தீர் ஆண்டவரே என்று மனமுடைந்து என்னை நோக்கி அழைத்தால் அவன் எங்கிருந்தாலும் அவனை நான் விடுவிப்பேன். அப்படி 
பயித்தியக்காரன் பிச்சைக்காரன் மந்திரவாதி என்று என்  கரததுக்குள் வந்தவர்கள் அநேகர் உண்டு!  

ஆனால் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு  ஏதோ தலைவிதி என்று புலம்புபார்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சாத்தான் என்னும் வேறொருவன் கரத்துக்குள் இருந்துகொண்டு  கஷ்டப்படும் ஒருவனுக்கு நான் ஆள் அனுப்பி என்னை பற்றி சொல்லும்போது அவன் சிறிதாயினும் என்னை நோக்கி ஒரு எட்டு எடுத்துவைத்தால் நான் பல எட்டுகள் வேகமாய் போய் அவன மீட்க முடியும்.  அப்படி மீட்கப்பட்டவர்கள் அநேகர்! அனால்  அவனுக்கு அறிவு மற்றும் மனசாட்சி என்று எல்லாம்  இருந்தும் என்னைப்பற்றி அறிய சற்றும் மனதில்லாமல் இருக்கும்போது என்னால் அவனை ஒன்றும் செய்யமுடியாது.
 
வேண்டுமானால் அவனுக்காக நீ ஜெபி அப்பொழுது சாத்தனின் கட்டுக்கள் தளரும் அவன் வெளியே வர வாய்ப்பு ஏற்ப்படலாம் என்று கூறுகிறார்.  
 
தான தர்மம் / இரக்கம் / சமூக சேவை எல்லாமே நல்லதுதான் அனால்  இங்கு மனிதனின் செய்ய வேண்டிய செயல் ஒன்றே ஒன்றுதான் தேவனை அறிந்துகொள்ளும் அறிவை  ஒரு மனிதனுக்கு ஏற்ப்படுத்த வேண்டும். அவனை சாத்தனின் கரத்திலிருந்து பிடுங்கி தேவனின் கரத்துக்குள் கொண்டு வதுவிட்டால் பிறகு தேவன் அவனை பார்த்துகொள்வார் எனவேதான்  அடுத்தவரை குறைகூறிக்கொண்டு இருப்பதைவிட ஒரே ஒரு ஆத்துமாவை இரட்சிப்பது மிக சிறந்தது அதன் அடிப்படையில்  சுவிசேஷம் என்பது மிக மிக முக்கியம். மற்றபடி நமது இரக்கத்தாலோ அல்லது தாராளமனதாலோ உலகில் உள்ள  ல்லோரையும்  நல்ல நிலைக்கு கொண்டு வர  முடியாது. தேவன் ஒருவரே ஒருவனை சரியான நிலைக்கு கொண்டுசெல்ல முடியும்.  எனவே அவர் கரத்துக்குள் ஒருவரை வழிநடத்துவதுதன் நமது பிரதான வேலையாக இருக்கவேண்டும். 
 
தேவனின் காரத்துக்குள் வது தேவனின் பிள்ளை ஆனவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது தேவனுக்கு தெரியும். அவர்  ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக நடத்துவார் அதற்கும் நாம் ஏனென்று கேட்கமுடியாது. தாவீதை ஒரு வழியில் நடத்தினால் சாமுவேலை ஒரு வழியில் நடத்துவார் அவரிடம் எனக்கு என் இந்த நிலை என்று கேட்கமுடியாது.      
 

சரி சகோதரரே இங்கு அடிப்படையிலேயே கருத்து வேறுபாடு இருக்கிறது முதலில் தேவன் யார்? சாத்தான் யார்?    என்ற அடிப்படை காரியங்களை சரிவர அறிந்தால்தான் நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும்.          
  
இஸ்லாம் சகோதரர்கள் சொல்லும் மறுமை நாளில் எல்லாம் கிடைக்கும் என்ற கருத்தையே நீங்கள்சொல்ல்கிறீர்கள்.  என்னை பொறுத்தவரை தேவன்  சர்வவல்லவர் மற்றும் தேவனால் எல்லாம் கூடும் எனவே  இம்மை நாளிலே தேவன் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன்.
 
எனவே இந்த உலகில் துன்பம் தீமை வர அடிப்படை கரணம் என்ன இந்த உலகில்  என்ன நடக்கிறது என்பதைபற்றிய உங்கள் கருத்தை அறிந்தபின்னே 
மற்றவற்றை விவாதிக்க முடியும்! 
 
அடிப்படை தெரியாமல் விவாதித்து மனகஷ்டத்துக்கு ஆளாவதைவிட  முதலில் அடிப்படையை என்னவென்று  பார்த்து அதில் கருத்து வேறுபாடு இருக்குமாயின் அதை  களையபார்க்கலாம்.   
 


-- Edited by SUNDAR on Thursday 18th of February 2010 11:28:56 AM

-- Edited by SUNDAR on Thursday 18th of February 2010 12:07:08 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே!

நீங்கள் புரிந்துகொண்ட அபிஷேகத்தைப் புரியாதவனும், நீங்கள் நினைக்கிற ஆவிக்குரிய நிலையில் இல்லாதவனுமாகிய நான், இவ்விவாதத்தில் தொடர்ந்து பங்களிக்கலாமா என்பதைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard