இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள்!
Permalink  
 


(நான் ஆண்டவரை அறிந்துகொள்ளும் முன்) சுமார் 18 வருடங்களுக்கு முன் ஒருநாள்:

மும்பையில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் மேற்க்கு பகுதியிலிருந்து கிழக்கு பகுதி செல்ல அமைந்துள்ள ரயில் பாலத்தை நடந்து கடந்துகொண்டிருந்தேன்.  ஆள் நடமாட்டம் அதிகம்இல்லாத காலை நேரத்தில் நான் நடந்துகொண்டிருந்த போது, எதிர்புறத்தில் சிறிது தூரத்தில் எதோ கருப்பாக மூட்டை போன்று கிடப்பது தெரிந்தது. என்னவென்று அறிய பக்கத்தில் சென்று பார்த்தபோது அது ஒரு மனித உடல்!. உடம்பில் ஆழமான புண்களுடன் கை எது கால் எது என்று அறியமுடியாத அளவுக்கு உடம்பு முழுவதும் ஈக்கள் புழுக்கள் மொய்த்து கொண்டிருக்க சதைகளு க்குள்ளே எல்லாம் ஈ புகுந்து வெளியே வந்தது வெறும் தோல் மட்டும் உடம்பில் தொங்கிகொண்டிருக்க அந்த மனிதனோ உயிரோடு கிடந்தது மரணத்தோடு போராடி துடித்துக்கொண்டிருந்தார்.

ஏதாவது உதவிசெய்யலாம் என்றுகருதினால் என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. இந்தி பாஷை சரியாகதெரியாது. உதவிசெய்யும் அளவுக்கு வசதியும் எனக்கில்லை
அந்த காட்சியை பார்த்து கையாலாகத எனக்கு அழுகையை அடக்க முடியாமல், வேகமாக பாலத்துக்கு கீழே இறங்கி வந்து:

ஒ இறைவா நீர் உண்மையில் இருக்கிறீரா இல்லையா?
ஒரு சாதாரண மனிதனான என்னாலே இதை பார்த்து சகிக்க முடியவில்லையே இறக்கம் மிகுந்தவர் என்றும் மக்களால் புகழப்படும் நீர் எப்படி இதயெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்?
என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை நான் அழுகிறேன் உம்மால் எல்லாம் செய்யமுடிந்தும் நீர் சும்மா இருக்கிறீரா? அல்லது நீர் இல்லையா? இப்படி ஒரு கடவுள் தேவையா?
நீர் இருந்து என்ன புண்ணியம்?  இல்லாமல் போய் என்ன புண்ணியம்?
உண்மையில் கடவுள் என்று ஒன்றும் இல்லை அப்படி இருந்திருந்தால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நீர் சும்மா இருக்கமாட்டீர்!


என்று மனதில்எழுந்த பல கேள்விகளோடு சுமார் பத்து பதினைந்து நிமிடம் அழுது தீர்த்தேன். எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை!

பாவம் செய்தவன் அதற்க்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை! என்றாலும்,  என்னதான் ஒருவர் பெரிய பாவம் செய்திருந்தாலும் அவர் ஒருவர் வாழ்க்கையையே கெடுத்திருந்தாலும்  அவர்  ஒரு கொடிய வேதனையில் கிடக்கும்போது அவரை காப்பற்றுவதுதானே உண்மையான இரக்கம். 
 
மகாத்மா காந்தியே தன்னை சுட்டவரை மன்னித்தார், இயேசு தன்னை சிலுவையில் அறைந்தவருக்காக மன்னிக்கும்படி இறைவனை வேண்டினார் மனிதர்களாக பிறந்த இவர்களே இவ்வளவு இரக்கமுள்ளவர்களாக இருக்க எல்லோரிலும் மேலான இரக்கமுள்ள இறைவன் அவன் என்னதான் தவறு செய்திருந்தாலும் இப்படி ஒருவரை துடிக்கவிடுவது சரியான செயலா?

என்னை பொறுத்தவரை ஒருவன் எவ்வளவுதான் தீமைசெய்திருந்தாலும் இறைவன் அவரை முற்றிலும் கைவிடுவது இல்லை. ஒரு தகப்பன் தன் பிள்ளை என்னதான் தவறு செய்திருந்தாலும் அவன் துடிப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா? நிச்சயம் எப்படியாவது காப்பாற்றவே நினைப்பார்.

இங்கு ஏன் இறைவன் அதை செய்யவில்லை? உலகில் தவறு செய்யாதவர் யார்? தவறு செய்த எத்தனையோ பேர் சுகமாக வாழவில்லையா?

மேலும் மனிதன்தான் பாவம் செய்தான் தண்டனையை அனுபவிக்கிறார் மற்ற உயிரினங்கள் என்ன பாவம் செய்தன? உயிரோடு வைத்து கழுத்தை அறுப்பதும், பிற உயிரிகளால் கடித்து தின்னப்படுவதும், அவைகள் படும் அவஸ்தையை சகிக்க முடியவில்லை. ஒரு பூனை தான் போட்ட குட்டியை வைத்து பாதுகாக்க எந்த இடமும் கிடைக்காமல் எலோரும் தங்கள் வீட்டுக்குள் வந்துவிடாதபடி துரத்தி அது எங்கு செல்வதென்று தெரியாமல் பரிதபித்து  திண்ட்டாடுகிறது. இப்படி ஒரு உயிர் தேவைதானா?  கோழிகளை எல்லாம் ஒரு உயிர்களாகவே நினைக்காமல் கையாளுவது நினைக்க நினைக்க வேதனையை தருகிறது!

சரி இந்துக்கள் சொல்வதுபோல்  பாவம் செய்த மனிதன்தான் அதுபோல் மிருக பிறப்பெடுத்து துன்பபடுகிறான் என்றால் மனிதர்களுக்கே நாம் எதற்க்காக துபபடுகிறோம் என்று சரிவர  அறிந்துகொள்ள முடியாதிருக்கும்போது இப்படி பிற உயிர்கள் எப்படி அறிந்துகொள்ளும்? இப்படிஒரு தண்டனையால் என்ன பயன்?
 
மறுமை நாளில்தான் செய்கைக்கு எல்லாம் பலன் மற்றும் தண்டனை என்றால் இந்த நாட்களில் நடப்பது என்ன?
 
இயேசுதான் எல்லார் பாவத்துக்கும் மரித்துவிட்டார் என்று சொல்கிறார்கள் பிறகு உலகில் இன்னும் எந்த துன்பமும் ஒழியவில்லையே ஏன்?
 
இரக்கமுள்ள இறைவன் எல்லாவற்றையும் பார்த்தும் ஏன் பாராமுகமாக இருக்கிறார்?
 
உண்மையில் இந்த உலகில் என்ன நடக்கிறது?  இவ்வாறு நடக்க காரணம் என்ன? என்ற பல கேள்விகள் மனதில் எழும்ப பதிலறியாது ஒருவேளை  இறைவன் என்று ஒருவரும் இல்லையோ என்ற முடிவுக்கு வந்தேன்.    
 
தொடரும்....
 -- Edited by SUNDAR on Monday 21st of March 2011 03:13:00 PM-- Edited by SUNDAR on Thursday 28th of June 2018 05:48:57 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இந்தபதிவில் நான்எழுதுவது எனதுவாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை  பற்றியே!  நான் இறைவனை  எவ்வாறு அறிந்துகொண்டேன் என்ற உண்மை சாட்சியை  அப்படியே எழுதுகிறேன்.  "நான் கணினியில் கணக்கன் வேலை பார்க்கிறேன்"  என்பதற்கு எப்படி வசன ஆதாரம் தர முடியாதோ அதுபோல் நடந்த எல்லா சம்பவங்களுக்கும் என்னிடம் வசன ஆதாரம் இல்லை. ஆகினும்  ஆண்டவர் பற்றிய காரியங்கள் வருமிடத்தில் அதற்க்கு ஆதார வசனம் தந்து எழுதுகிறேன்.
 
நடந்த இந்த காரியங்களை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்! யாரும் நம்பவதாலோ நம்பாததாலோ எனக்கு எந்த பயனும் இல்லை. பிற மத சகோதரர்கள் உண்மை அறியவேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்நிகழ்வுகளை பதிவிடுகிறேன்  எனக்கே நடந்தவைகளை உண்மையா அல்லது கனவா என்று நம்பமுடியாத நிலையில் இருக்கும்போது  அதை  அனுபவத்தில் அறியாத  உங்களுக்கு நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆகினும் அனைத்து  நடந்த உண்மைகளே!    
 
உலகில் நடக்கும் பல்வேறு கொடூரங்கள், கொலை, கொள்ளை, பணத்துக்காக மனிதர்கள் ஆடும் கோர தாண்டவங்கள், இரக்கமில்லாமல் விலங்குகள் போல நடக்கும் மனிதர்களின் மறுபக்கங்கள், படைக்கப்பட்ட பிற உயிரினங்கள் எல்லாம் உலகில் படும் அவஸ்த்தைகள், ஒற்றைஓன்று உயிரோடுகொன்று உரித்துசாப்பிடும் அகோர நிலை,  அவற்றுக்கு வேதனை ஏற்படுத்தவே படைக்கப்பட்டுள்ள இரத்தம் உருஞ்சும் உண்ணிகள் ஈக்கள் கொசுக்கள் இவை எல்லாவற்றையும்பற்றி அடிக்கடி யோசித்து. ஒரு பதிலற்ற நிலையில் இருந்தபோது, கேட்பாரற்று சாகும் தருவாயில்  துடித்து கிடந்தது சாகும் தருவாயில்  இந்த மனிதனை நான் பார்த்த காட்சி என்னை "இறைவன் என்றொருவர் இல்லை" என்று நினைக்க தூண்டி "எப்பொழுது எனக்கு எல்லா கேள்விக்கும் சரியானவிடை கிடைக்கிறதோ அப்பொழுதுதான் இறைவனை நம்புவேன்" என்று எண்ணிக்கொண்டு மனம் போன போக்கில் வாழ தூண்டிவிட்டது

கடினமாக உழைப்பேன், அத்தோடு  ஏமாற்றி பெரிய முதலாளிகளிடமிருந்து  நிறிய பணம் சம்பாதிப்பேன், ஆனால் கஷ்டம் என்று வந்து கேட்ட யாருக்கும் நான் உதவாமல் இருந்ததில்லை. எனக்கென்று நான் எந்த பணமும் சேர்த்தும் வைக்க வில்லை. என்னிடம் பணம் கடனாக வாங்கிக்கொண்டு ஓடிவிட்டபலபேர் சென்னை, கோயமுத்தூர், கன்னியகுமாரி போன்ற எல்லா  இடங்களில் இன்றும் உண்டு
.

லீவு நாட்களில் முழுவதும்  நானும் எனது கிறிஸ்த்தவ நண்பர் மத்தேயுஸ் என்பவரும் முழுக்க முழுக்க போதையில்தான் இருப்போம். சிகரெட் என்றால் எனக்கு கொள்ளை பிரியம் சும்மா ஊதி தள்ளிவிடுவேன். மேலோடி பாடல் சோக பாடல்களை அதிகம் விரும்பும் அதில் உலகையே மறந்துவிடுவேன்.  CD எல்லாம் இல்லாத அந்த காலங்களில் ஒரு சூட்கேஸ் நிறைய கேசட்டுகள் பதிந்து வைத்திருந்தேன். அதெயெல்லாம் என் உயிர் போலத்தான் நான் நினைத்து பாதுகாத்து வந்தேன். 

இறைவனை பற்றி என்னிடம் பேசவரும் யாராக இருந்தாலும், நான் கேட்கும் கேள்விகளுக்கு எந்த சரியான பதிலும்  சொல்ல முடியாமல் "உங்களை யாரும் திருத்த முடியாது" என்று சொல்லி போய்விடுவர்

நான் மும்பையில் தனியாக இருந்ததால் தட்டி கேட்க யாரும் இல்லை, எனவே என் மனதில் இன்பம் என்று தோன்றியதை எல்லாம் எந்த தயக்கமும் இன்றி அனுபவித்து, மிகமிக இன்பமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவந்தேன்.

தொடரும்...............

 

-- Edited by SUNDAR on Monday 21st of March 2011 03:18:31 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

 மும்பை பட்டணத்தில் எனது வாழ்க்கை:

1985ம் வருடம் எனது B Com பட்டபடிப்பை முடித்துவிட்டு கடந்த 22 வருடங்களாக ACCOUNTANT பணியாற்றி வரும் நான், திருமணமாகும் முன் 1991ம் வருடம் மும்பை பட்டணத்தில் ஒரு நல்ல வேலையில் இருந்தேன. கைநிறைய வருமான ம்கவலையற்ற வாழ்க்கை மற்றும் தட்டி கேட்க ஆளில்லாத காரணத்தால் நிறைய மது குடிப்பது, சூதாடுவது, மற்றும் அனேக சினிமா பாடல்கள் பதிவது போன்ற எத்தனையோ கெட்ட பழக்கம் உள்ளவனாக மனம் போல வாழ்ந்து வந்தேன்.

மாந்த்ரீக வசிய மருந்தால் பயித்தியம் ஆனேன்:

அந்த சமயம் எனது பக்கத்து வீட்டில் ஒரு திருமணமான இளம்பெண் வசித்து வந்தாள். அவளுடன் எனக்கு பழக்கம் இருந்ததால் அவள் வீட்டில் இருந்து கொடுக்கும் உணவு பதார்த்தங்களை வாங்கி உண்பது வழக்கம். அவளுக்கு என்மீது பிரியம் ஏற்ப்பட்டது, எவ்விதத்திலும் நான் அவளைவிட்டு பிரிந்து போய்விடக் கூடாது என எண்ணிய அவள் ஒருநாள் எனக்கு கொடுத்த கேசரியில் பில்லிசூனிய மருந்தை வைத்து எனக்கு தெரியாமல் கொடுத்துவிட்டாள்.

சுமார் ஒருவருடம் அவளோடு சமாதானமாக இருந்த காலம்எல்லாம் அந்த மருந்து எந்த தீங்கும் எனக்கு செய்யவில்லை. ஆனால் 1992ம் வருடம் நான் என் பெற்றோரின வற்புருத்துதலால் திருமணம் செய்ய முடிவுஎடுத்தவுடன் அந்த மந்த்ரீக மருந்து மிக கொடூரமாக தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. என்னையும் மீறிய ஒரு பேய்சக்தி என்னுள் புகுந்து, என் புத்தியை குழப்பிவிட்டது! எதையுமே பலமுறை சிந்தித்து செய்யும் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாமல், அவளை ஒருநாள் பர்கமுடியவிட்டால்கூட ரோட்டில் நின்று பலபேர் முன்னால் கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டேன். சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், வேலைக்கு போக முடியாமல் கிட்டத்தட்ட பயித்தியம் போல் ஆகிவிட்டேன்.

மும்பையில் என்னுடன் தங்கியிருந்த எனது நண்பர்கள் என்னுடைய மோசமான நிலை கண்டு வருத்தப்பட்டு, நான் வரமட்டேன் என்று எவ்வளவோ பிடிவாதம் பிடித்தும் என்னை டாக்டர்களிடமும், மந்திரிப்பவர்களிடமும் அழைத்துசென்று பார்த்தும் ஒரு பலனும் இல்லாத காரணத்தினால், எனது சொந்த ஊராகிய தூத்துக்குடிக்கு கடிதம் போட்டுவிட்டு என்னை அப்படியே விட்டுவிட்டனர். என்ன செய்கிறதென்றே தெரியாமல் யாரிடமும் சொல்ல முடியாமல் கிட்டதட்ட இரக்கும் தருவாயைஅடைந்த எனதுமனதுக்குள், திடீர் என்று எதோஒன்று பேச ஆரம்பித்தது, அது என் மனதுக்குள் அமர்ந்துகொண்டு "வரும் செவ்வாய் கிழமை 1 மணிக்கு நீ சாகப்போகிறாய்" என திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தது. மிகவும் திகிலுடன் இருந்த எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! யாரிடம் அதுபற்றி சொன்னாலும் "இவன் பயித்தியமாகிவிட்டான் ஏதோ உளறுகிறான்" என நினைத்து என்னை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.

இந்நிலையில் அந்த செவ்வாய் கிழமையும் வந்தது! எழும்ப முடியாமல் பெலனற்று படுத்துகிடந்த நான் இரவு சுமார் 10மணிக்கு மரணபயத்தோடு விழித்து கொண்டிருந்தேன். தூக்கம் இல்லாமல் பல நாள் கிடந்ததால், சிறிது கண் அயர்ந்த நான் பயங்கர பயமும் திகிலும் என்னை ஆட்கொள்ள எனது உயிர் என்னை விட்டு கொடூரமாக பிடுங்கப்படுவதை உணர்ந்தேன். என் நெஞ்சு பக்கத்திலிருந்து பிடித்து, என்னை ஏதோஓன்று தூக்கிதூக்கி போட்டது! ஒரே நடுக்கம்! உடனே துள்ளி எழுந்து எனது அறையில் என்னோடு தங்கிஇருந்த எனது ஒரேநண்பரை எழுப்பினேன். அவர் கடுமையான ஜுரத்தினால் பாதிக்கப்பட்டு கிடந்தார். அவர் ஒரு RC கிறிஸ்தவர் ஆகையால் அவரிடம் சிலுவை இருக்கும் என நினைத்து சிலுவை இருந்தால் கொடுங்கள் என கேட்டேன். ஏனெனில் நான் முன்பொருநாள் பார்த்த ஒரு பேய் படத்தில் சிலுவையை தொட்டவுடன் பேய் ஓடி விடுவதுபோல் இருந்ததால், என் உயிரை பறிக்க நினைக்கும் தீயசக்தி சிலுவையை பார்த்தாவது ஓடிவிடும் என நினைத்தேன். ஆனால் அவரால் சரியாக பேசகூட முடியவில்லை சிலுவை இல்லை என கூறிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் சுமார் 12மணிக்கு லைட்டை போட்டு வைத்துக்கொண்டு பயங்கர திகிலோடு அங்கும் இங்கும் விழ்த்துக் கொண்டிருந்த எனக்கு மேல் பலகையில் இருந்த அந்த புத்தகம் கண்ணில்பட்டது.

அந்த புத்தகம் பற்றி சில வரிகள்:
இந்த சம்பவங்கள் நடப்பதற்கு சுமார் 7-8 மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் இரவு மும்பையில் பெரிய மழை பெய்து எங்கள் வீட்டின் முன்னால் இருந்த செம்பூர்-குர்லா ரயில் தண்டவாளத்தில் வெள்ளம் ஆறு போல ஓடிக்கொண்டிருந்தது. காலையில் எழுந்து பல்துலக்கிக்கொண்டு திண்டின் மேல்நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நான், எனது காலுக்கு பக்கத்தில் ஒரு பெரிய புத்தகம் மிதந்து வருவதை பார்த்தேன். அதை காலால் தட்டிபார்த்தேன், அதுபோகாமல் என் காலுக்கு பக்கத்திலேயே கிடந்ததால். அதை கையில் எடுத்துப்பார்த்தேன். அது ஒரு பெரிய தமிழ் பைபிள். அனேக வேறு மொழி பேசும் மக்கள் வாழும் அவ்விடத்தில் தமிழ் பைபிள் வந்ததே ஒரு அதிசயமாக இருந்தது!

நான் இந்து மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் எல்லா மதத்தையும் மதிக்கக் கூடியவன், ஆகையால் அந்த பைபிளை அந்த மோசமான நீரில் திரும்பபோட மனதில்லாமல் எங்கள் வீட்டு அச்பெஸ்டாஸ் கூரை மீது தூக்கி வீசினேன் பிறகு அதை மறந்துவிட்டேன். பின்பு வெயில் காலத்தில் ஒருநாள் தற்செயலாக அந்த புத்தகம் கண்ணில் படவே அதை தூக்கி வீடில் உள்ளே உள்ள மேல் பலகை ஒன்றில் போட்டு வைத்தேன். அதை ஒருநாள் கூட மதித்து எடுத்து பார்த்ததும் கிடையாது. அந்த புத்தகம் தான் இப்பொழுது எனது கண்ணில் பட்டது.

தண்ணீரில் தத்தளிக்கும் ஒருவன் எது கையில் கிடைத்தாலும் அதை பிடித்து தப்பிக்க நினைப்பது போல, இது என்னை காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பில் உடனே அந்த பைபிளை கையில் எடுத்தேன். எத்தனையோ இந்து சாமிகள் இருந்தும் எதுவும் என்னை காக்க முடியவில்லை கிறிஸ்தவர் எல்லோரும் இதைத்தான் வேதம் என்று சொல்கின்றனர், ஆனால் எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது! ஒருவேளை இதற்கு எதாவது சக்தி இருக்குமானால் என்னை இந்த மரணத்தில் இருந்து விடுவிக்கட்டும். இல்லை இதையும் மீறி என் உயிர் போகுமானால் போகட்டும் என நினைத்து அந்த பைபிளை தலையின் கீழ்வைத்து படுத்துவிட்டேன். படுத்து சிறிது நேரத்தில் நன்றாக தூங்கியும் விட்டேன்.

மறுநாள் காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்து பார்த்த போது எனது உடம்பு மனது எல்லாம் மிகவும் லேசானது போல் இருந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு மந்த்ரீக மருந்து கொடுத்த அந்த பெண் அப்படியே ஒரு பேய் போல தெரிந்தாள். என்னோடு மிகவும் பழக்கமாக இருந்த அவள் என்னைபார்த்ததும் காரி துப்பிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டாள். எனக்கு என்ன காரணம் என்றே புரியவில்லை நான் பைபிளை எடுத்தால் இவள் ஏன் காரி துப்பிவிட்டு ஓடுகிறாள்? என்று ஒரே குழப்பமாக இருந்தது.. ஆனால் என் மனதில் எதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி மற்றும் சந்தோசம் நிறைந்திருந்ததால், அந்தபைபிளில் எதோ ஒருசக்தி இருக்கிறது என்பதை மட்டும் நன்றாக புரிந்துகொண்டேன்.

இவ்வளவு நாள் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? இருந்தால் இந்த உலகம் என் இப்படி தீமையாலும் கொடூரத்தினாலும் நிறைந்திருக்கிறது. உலகில் தீமையை அனுமதித்தது யார்? என்றெல்லாம் பல கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தேன். நோயினாலும் உணவில்லாமலும் சாகும் தறுவாயில் மும்பை ரோடுகளில் கிடந்தது மிகவும் சங்கடப்படும் பிட்சைகாரர்களை பார்த்து பலநேரம் வேதனையை அடக்கமுடியாமல் மிகவும் அழுதிருக்கிறேன். கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவர் படைத்த மனிதர்களை இப்படியெல்லாம் தவிக்க விடுவாரா? என்ற ஆதங்கத்தில், கடவுள் என்று யாருமே இல்லவே இல்லை என முடிவு எடுத்திருந்த எனக்கு நடந்த காரியங்கள் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

ஏசு கிறிஸ்துவை பற்றி என்னிடம் அநேகர் சொல்வதுண்டு அவர்களிடம் ம் நான் கேட்கும் கேள்வி "ஏசு பாவத்துக்காக மரித்தார் என சொல்கிறீர்கள் ஆனால் இந்த உலகில் பாவம் எதுவும் குறைந்த மாதிரி தெரியவில்லையே! ஏசுவை ஏற்று கொண்டவர்களும் கூட அனேக பாவம் செய்கின்றனர் அவர்களுக்கும் மற்றவர்கள் போலத்தான் நடக்கிறது விசேஷமாக என்ன இதில் இருக்கிறது? என்று கேட்டால் சரியான பதில் சொல்ல முடியாவிட்டாலும், செத்தபின் நரகம் அது இது என்று சொல்வார்கள். உடனே நான் அப்படி ஒன்று இருக்கிறதா இல்லையா என்று தெரியாத பட்சத்தில் நான் அவரை ஏற்று கொள்வதினால் என்ன பயன், சரி இயேசுதான் நமது பாவத்துக்காக மரித்தார், அவர் சீஷர்கள் பேதுரு போன்றவர்கள் யாருக்காக சிலுவையில் மரித்தனர்?.அவர்களை ஏன் இயேசுவால் காப்பாற்ற முடியவில்லை? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு நிராகரித்துவிடுவன். ஆனால் இப்பொழுதும் நான் எதையும் நம்பவிட்டலும் இந்த பைபிளில் ஏதோ சக்தி இருப்பதுபோல் மட்டும் எனக்கு தெரிந்தது!

அழுகையுடன் தொடர் வேண்டுதல்:
இவ்வளவு நடந்தும்கூட இதுஉண்மையா அல்லது எதாவது மனபிரம்மையா என ஒரே குழப்பமாக இருந்தது. அனாலும் என் மனதில் ஏற்பட்டிருந்த என்றுமில்லாத சந்தோசம் மற்றும் புத்துணர்வால் இந்த புத்தகத்தில் எதோஒன்று இருக்கிறது என்று மட்டும் தெளிவாக தெரிந்தது. எனது அறை நண்பர் காலையிலே எங்கோ வெளியே கிளம்பி பொய் விட்டிருந்தார்! உடனே நான் அறை கதவை உள்புறம் பூட்டிக்கொண்டு அந்த பைபிளை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டேன். ஆண்டவரே நீர் யார் என்று எனக்கு தெரிய வேண்டும். நீர் உண்மையில் இருக்கிறீரா? இல்லையா? அப்படி இருந்தால் உமது பெயர் என்ன இந்து சாமியில் எந்த சாமி? எங்கள் குல தெய்வம் அய்யனாரா ? அல்லது இயேசுவா? இல்லை இஸ்லாம் சகோதரர் சொல்லும் அல்லாவா? நீர் யார் என்று எனக்கு தெரிய வேண்டும் என்று வாயால் சத்தமாக சொல்லி மிகவும் அழுது கண்ணீரால் அந்த பைபிளை நனைத்தேன்.

அழுதேன் அழுதேன் அழுதுகொண்டே இருந்தேன் அரை மணி ஒரு மணி இரண்டு மணி எதுவும் தெரியவில்லை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இறைவன் இருப்பதை அறிந்தேன் !

கடைசியில் "ஆண்டவரே நீர் யார் என்று எனக்கு தெரிந்தால் நீர் சொல்லும் உமது வர்த்தைகளுக்கெல்லாம் என்னால் முடிந்த அளவு கீழ்படிந்து வாழுவேன்" என்று உறுதியளித்தேன். உடனே திடீரென என் கண்ணீர் நிறைந்த கண்களுக்கு முன்னால் ஒரு படம் போல் தோன்றியது! அதில் வலதுபுறம் இந்த பைபிளும், இடதுபுறம் கட்டுகட்டாக பணமும் இருந்தது! இந்த இரண்டில் எதுவேண்டும்? என்ற கேள்வியும் என் மனதில் கேட்கப்பட்டது. எதை வேண்டுமானாலும் என்னால் தர முடியும் பணத்தை எடுத்தால் இந்த உலகில் மிக சொகுசாக வாழ முடியும், ஆனால் வேதத்தை தேர்ந்தெடுத்தால் நீ வேறு எதையும் எதிர்பார்க்க கூடாது என்று என் மனதில் எதோ ஒன்று பேசியது. 

எனக்கு எதைதேர்ந்தெடுப்பது என்றுபுரியவில்லை. சிறிதுநேரம் மிகுந்த குழப்பத்தில் இருந்த நான், இறுதியில் பணத்தை ஒதுக்கி வேதத்தை தேர்ந்தெடுத்தேன்.

ஆண்டவரே "நீர் யார் என்று மட்டும் எனக்கு தெரிவித்து, நான் கேட்கும் கேள்விக் கெல்லாம் சரியான பதிலை தந்துவிட்டால், நீர் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்" என மீண்டும் உறுதியளித்தேன். அவ்வளவுதான் எதோ ஒன்று என் மனதுக்குள் புகுந்ததுபோல் இருந்தது மீண்டும் மனதுக்குள் பயங்கர குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை மட்டும் உறுதியாக அறிந்துகொண்டேன்.

மூன்று நாட்கள் போராட்டம் :-

அடுத்த மூன்று நாளாக என் மனதுக்குள் ஒரே போராட்டம! ஒரு புறம், "நீ ஏன் பணத்தை கேட்கவில்லை நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டாய். இப்பொழுது உனக்கு பதிலும் கிடைக்காமல் பணமும் கிடைக்காமல் போய்விட்டது பார்த்தாயா! பணம் இருந்தால் போதுமே எல்லாம் நடக்குமே! விட்டுவிட்டாயே" என்று என் மனதைபோட்டு எதோ பிழிந்து எடுப்பது போல ஒரே வேதனை. அந்த சத்தம் போராட்டம் எல்லாம் அந்த மூன்று நாளும் என்னுடன் எவ்வளவோ போராடியும் என்னுள் இன்னொரு சக்தி இருந்து அதன் சத்தத்துக்கு அடிபணிந்து, நாம் இப்படி நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டோமே என நினைக்க கூட செய்யாமல் பார்த்துக்கொண்டது.

அந்த மூன்று நாளும் நான் பட்ட வேதனையை சொல்ல முடியாது. நான் ஒரு பிணம் போல அலைந்தேன். மனதின் உள் எல்லாம் எப்பொழுதும் இரண்டுபேர் சண்டை போடுவதுபோல் ஒரே சத்தம் அதனால் ஒரே குழப்பம்.

இறைவனின் ஆவியால் நிரப்பப்பட்டேன்:
கடைசியாக மூன்றாவது நாள் அதிகாலை 4 மணிக்கு நான் எழுந்தபோது என் மன போராட்டம் எல்லாம் போய் எனக்கு மனது என்ற ஒன்றே இல்லாததுபோல ஆகி விட்டது! மின் விளக்குகள் எல்லாம் மிக பிரகாசமாக தெரிந்தது! உலகமே மிக மிக வித்யாசமாக தெரிந்தது! ஐயோ அந்த இன்பத்தையும் சந்தோசத்தையும் சொல்ல கண்டிப்பாக வார்த்தைகள் கிடையாது!

மனிதர்கள் எல்லாம் உண்மை மனிதர்களே அல்ல ஒவோருவர் உள்ளும் எதாவது அசுத்த ஆவி குடிகொண்டிருப்பதை அப்படியே என்னால் பார்க்க முடிந்தது. பொறாமை ஆவிகள், வஞ்சக ஆவிகள், பொய்யின் ஆவிகள், பெருமையின் ஆவிகள், பண பேய்கள், இரக்கமில்லா ஆவிகள் என எத்தனையோ வித விதமான ஆவிகள் ஒவ்வொருவருள்ளும் இருந்து ஆட்டிபடைப்பதை அப்படியே பார்க்க முடிந்தது

பேய்! பேய்! உலகத்தில் உள்ள எல்லாருமே இறைவனின் பார்வையில் பேய்கள் என்பதை நானே எனது கண்ணால் பார்த்தேன் எப்படியெனில் இறைவன் என் கண்களை திறந்திருந்தார். ஆம் அன்பானவர்களே நமக்கு மாமிச கண் என்று ஒன்று இருந்தாலும் அனேக காரியங்களை அதனால் பார்க்க முடியாது. ஆனால் இறைவனது கண்ணின் வழியாக இந்த உலகை பார்க்கும் போது உலகில் உள்ள ஆவிகளின் கூட்டம் மற்றும் ஒவ்வொரு மனிதனையும் ஆட்கொண்டுள்ள அசுத்த ஆவி எல்லாவற்றையும் மிக துல்லியமாக பார்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பது கூட நம் மனதில் அப்படியே தெரியும். (அதை சொல்லி விளக்க முடியாது அனுபவித்தால்தான் உணர முடியும்)

நண்பர்களின் ஆவேசம்:
எனது அறையில் என்னுடன் இருக்கும் எனது நண்பர் காலையில் எழுந்த உடனே மிகுந்த கோபத்தில் இருந்தார். என்னை பார்த்த எனது நண்பருக்கு என்மேல் கடும் கோபம் வந்துவிட்டது. அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அவர் என்னை பார்த்து "நீ என்னை கொல்லப்போகிறாய், நேற்று இரவு என்னை நீ கொல்வது போல ஒரு பயங்கர கனவு கண்டேன். இனிமேல் ஒன்று நீ இருக்க வேண்டும் அல்லது நான் இருக்க வேண்டும் என்று என்னிடம் கடும் கோபத்துடன் சண்டைக்கு வந்தார்.

என்னால் நம்பவே முடியவில்லை இவரா இப்படி? கடந்த 4-5 வருடமாக சகோதரர் போல் பழகி எப்பொழுதும் சேர்ந்து தண்ணி, சிகரெட் என சந்தோசமாக மிக மிக நெருக்கமாக நான் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்கக்கூடியவராக இருந்த இவர் நான் இந்த பைபிளை எடுத்ததும் இப்படி எப்படி மாறினார் என்று ஒரே குழப்பம். அவரிடம் அண்ணாச்சி நான் உங்களை கொல்வேனா? அது கனவுதானே மறந்துவிடுங்கள் என்று எவ்வளவோ சொல்லி அழுத்தும் அவர் கொஞ்சமும் கேட்கவில்லை உடனே நான் அந்த இடத்தை விட்டு எழுந்து பக்கத்து தெருவில் இருக்கும் இன்னொரு நண்பரிடம் சொல்ல கிளம்பிவிட்டேன்.

நான் காலையில் அந்த நண்பர் வீட்டுக்குள் நுழையும் போது (அவர் ஒரு CSI கிறிஸ்தவர்) பைபிளை வாசித்துக்கொண்டிருந்தார். என்னை கண்டதும் சந்தோசத்துடன் அருகில் அமர சொன்னார். நானும் அவர் முன் அமர்ந்து எனக்கு பைபிள் கிடைத்த விதம் முதல் அந்த நண்பர் நடந்து கொண்டது வரை சொல்ல சொல்ல அவர் மனது அப்படியே என்மேல் கோபமடைவதை என்னால் உணர முடிந்தது. நேற்று வரை பிறன் மனைவி, தண்ணி, சிகரட் என்று சுற்றி விட்டு இன்று பைபிளை தூக்கியவுடன் நல்லவன் அகிவிடுவாயா? என்று அவர் மனதில் நினைப்பது அப்படியே எனது மனதில் தெரிந்தது. அவரால் சரியாக ஒரு வார்த்தையும் என்னுடன் பேச முடியவில்லை அவரும் கோபமாக ஓரிரு வார்த்தைகள் பேசி என்னை கிளம்ப சொல்லிவிட்டார்.
.
மிகவும் வேதனையுடன் வெளியே வந்த என் மனதுள் இருந்து "யாரும் உன்னுடன் பேச மாட்டார்கள் முழுவதும் பாவத்தில் மூழ்கி அசுத்த ஆவிகளின் கோர பிடியில் உள்ள இவர்களால் பரிசுத்தமான இறைவன் முன் நிக்க முடியாது. உன்னுள் நான் இருப்பது அதற்கு தெரிகிறது அதனால் தன் கோபப்படுகிறது. நீ பைபிளை திற நான் உன்னுடனே பேசுகிறேன் என்னை கேள் நான் உனக்கு பதில் சொல்கிறேன்" என்றது (இதை எழுதும் போது இன்றும் நான் கண் கலங்குகிறேன். ஆம், அந்த இறைவனின் ஆறுதலான வார்த்தைக்கு இணையே இல்லை அன்பானவர்களே)

இறைவன் என்னோடு பேசினார்:
அதன் பிறகு இறைவன் என்னோடு பலவிதங்களில் பேச ஆரம்பித்தார். பைபிள் மூலம், விளம்பர பலகையின் மூலம், சுவரொட்டிகள் மூலம் என்று உலகில் என்னென்ன இருக்கிறதோ எல்லாமே எனக்கே எழுதியிருப்பது போல என்னுடன் பேச ஆரம்பித்தது.

நான் இறைவனிடம் "நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என கேட்ட போது நீ இந்த பிரச்சனையில் இருந்து முழுவதும் தப்பிக்க உடனடியாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும்" என்றார். எனக்கு ஒரே குழப்பம் நான் பெண்ணுக்கு எங்கே போவேன்? என நினைத்துக்கொண்டு கையில் உள்ள பைபிளை எடுத்துக்கொண்டு இங்கேயே(மும்பையில்) எனக்கு பெண் பார்க்க வேண்டுமா? என கேட்டுக்கொண்டே பைபிளை திறந்தேன். அப்பொழுது பைபிளில் உள்ள ஒரு வசனம் என்னோடு பேசியது "நீ குடியிருக்கும் இந்த தேசத்தில் உனக்கு பெண் கொள்ளாமல் உன் சொந்த தேசத்துக்கு போ" என்றது.

எனது சொந்த ஊருக்கு புறப்பட்டேன்:
உடனடியாக நான் எதையும் யோசனை பண்ணாமல் கையில் அந்த பைபிள் மற்றும் கொஞ்சம் பணம் மட்டும் எடுத்துக்கொண்டு மும்பையில் இருந்து சென்னை வர புறப்பட்டேன். கல்யாண் என்ற இடம்வரை வந்து தாதர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை பிடித்து ஜெனரல் கம்பார்ட்மெண்டில் ஏறினேன் உடனே எனக்கு சீட் கிடைத்தது உடகார்ந்து பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் அவ்வளவுதான் அடுத்த 28மணி நேரம் சென்னை வந்து சேரும் வரை நான் இந்த உலகத்திலேயே இல்லை.


இறைவன் என்னை முழுவதும் ஆவியினால் நிரப்பி இந்த உலகம் தோன்றிய திலிருந்து என்ன நடந்தது என்ற எல்லா விஷயங்களையும் அப்படியே ஒரு படம் போல என் மனகண்முன்னால் ஓடவிட்டார். மேலும் பைபிளை பற்றி ஒன்றுமே தெரியாத என்னிடம் அவர் தெரியப்படுத்தியதில் கொஞ்சம் குறைய எல்லாமே அதில் எழுதியிருப்பதையும் ஆதாரங்களுடன் சுட்டிகாட்டினார்.
.
நடந்த எல்லாவற்றையும் கேட்க கேட்க என் கண்ணில் இருந்து கண்ணீர் அடக்க முடியாமல் வந்துகொண்டே இருந்தது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்களை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றவும் ஒருவர் கூட நரகம், பாதளம் என்ற மிக கொடூரமான இடம் போய்விடாமல் தடுக்கவும் அவர் செய்திருக்கும் காரியங்கள் எத்தனையோ!! இறைவன் மனிதர்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிதபிப்பதை என்னால் அறிய முடிந்தது


ஆதியில் இருந்து பல்வேறு தூதர்களின் மூலம் நான் பேசியது உண்மை தான், ஆனால் யாருக்கும் நான் முழுமையாக வெளிப்படவில்லை. யானை பார்த்த குருடர்கள் போல ஒவொரு தூதர்களும் சொல்வதெல்லாம் என்னுடைய ஒரு பகுதி மட்டும்தான்.
நான் எதிர்பார்ப்பது வேறு உலகில் மனிதர்கள் செய்வது வேராக இருக்கிறது என்றும், ஒரு கட்டளையை சரியாக பெரிதாக்கி சொல்லும் அதே மார்க்கம் முக்கியமான இன்னொரு கட்டளையை மறைத்துவிடுகிறது. ஒருவர்கூட என் எதிபார்ப்பை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதனால் தீமையை இந்த உலகில் இருந்து விரட்ட முடியவில்லை என்றும் கூறினார் 

-- Edited by SUNDAR on Monday 21st of March 2011 03:13:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அதன்பிறகு உள்ள சம்பவங்களை தொடர்ந்து இங்கு பதிவிடுகிறேன்.
 
மும்பயிலிருந்து புறப்பட்டு  இரவு சுமார் 10மணிக்கு சென்னை வந்து சேர்ந்த நான் எனது ஊராகிய  தூத்துக்குடி போக சென்னையில்  பஸ் ஏறினேன். சென்னை To தூத்துக்குடி சுமார் 600KM.  இரவு 11.00 மணிக்கு சென்னையில் ஒரு தனியார் பஸ்ஸில்  ஏறினேன். பஸ் திருச்சி பக்கம் போகும்போது விடிந்துவிட்டது. இறைவன் என்னை பஸ்ஸில் இருந்து இறங்க சொன்னதால் இறங்கிவிட்டேன். அது ஒரு சிறிய  கிராமம் அங்கு பஸ் ஸ்டாப்பில் இருந்த பலரை பார்த்தபோது இறைவன் என்னுள் "ஐயோ இந்த ஒன்றுமறியாத ஆடுகள் என்னை அறியாமல் துன்பபடு கிரார்களே  அவர்களுக்கு என்னை பற்றி சொல் என்றார்" அங்கு நின்ற பலருக்கு இறைவனை பற்றியும் இயேசுவை பற்றியும்  சொன்னேன்.  எல்லோரும்  ஆர்வமாக கேட்டனர்.    
 
அந்த இடத்தில் என்னிடத்தில் சில மாற்றங்கள் தெரிந்தது. பல அசுத்த ஆவிகள் என்னை திசைதிருப்ப முயற்சித்தன. (வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகளோடு நமக்கு போராட்டம் உண்டு)  நான் அதிகமாக சிகரெட் குடிப்பவன். எனக்கு அங்கே சிகரெட் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை  என்னால்  கட்டுபடுத்த
முடியவில்லை. ஆண்டவர் வேண்டாம் என்று தடுத்தும் மீறிபோய்  கடையில் சென்று சிகரெட் வாங்கி புகைத்தேன். சிறிது நேரத்தில் மனதெல்லாம் ஒரே சங்கடமாக யாரோ  மனதை போட்டு பிழிவதுபோல இருந்தது.  ( என்னுளிருந்த ஆவியானவர் மிகுந்த துக்கமடைந்தார்) 
அதற்குள்  நான் நின்ற இடத்துக்கு   பக்கத்தில் ஒரு லாரி விபத்து ஏற்பட்டு எல்லோரும் அதை பார்க்க  ஓடினார்கள். என்னால் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை என்னுள்ளிருந்து  பேசிய இறைவனின் சத்தம்  சிறிது நேரம் காணவில்லை. மிகுந்தசங்கடத்தோடு ஒரு பஸ்ஸில்ஏறி மதுரைநோக்கி சென்றேன்
சிகரட் புகைத்ததால் மனது மிகவும் கஷ்டமாக
இருந்து  அந்த சங்கடம் என்மனதில் சுமார் 30நிமிடங்கள்  நீடித்தது. பிறகு ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்ட பின் மனதில் சமாதானம் வந்தது. மீண்டும் ஆண்டவரின் அபிஷேகம் நிறைத்தது 
 
திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருக்கும் முக்கூடல் என்னும் ஊருக்கு  போக வேண்டும் என்று எனக்கு முன்பே ஒரு வழிகாட்டுத்தல் இருந்தது. அதனால் மதுரை வந்து, அங்கிருந்து முக்கூடல் போய் சேர்ந்தேன். வழியெல்லாம் ஆவியானவர் என்மேல் பலமாக இருந்ததால் நான் நான் எப்படி இருந்தேன் என்ன  செய்தேன் என்பது எனக்கே சரியாக தெரியாது ஆனால் பைபிளை வாசித்துக் கொண்டும் ஜெபித்துக்கொண்டும்  இருந்தேன்  என்பது  மட்டும் தெரிகிறது.
 

முகூடலில் ஒரு புதிர்:  நான் முக்கூடல் என்னும் ஊர்  வந்து சேரும்போது இரவாகி இருந்தது. பஸ்ஸை விட்டு இரங்கும்போது மிகப்பெரிய மழை பெய்து கொண்டிருந்தது.  ஒரு  சின்னகிராமம் போல் அவ்வூர்   இருந்தது, வ்வூருக்கு இதற்கு முன் நான் போனதுஇல்லை. (அங்கு நடந்த காரியங்கள் இன்னும் எனக்கு சரியாக புரியவில்லை ஆனாலும் எழுதுகிறேன்)

அந்த கனமழையில் நனைந்து கொண்டு இருண்ட  தெருக்கள் வழியே வீடுகளை நோக்கி நடந்தபோது அங்கு  ஒரு மனிதனை பார்த்தேன். அவர் ஒரு கூன் விழுந்த குறைந்த வயது பிச்சைக்காரர். அவர்  தாடி  வைத்து  பார்ப்பதற்கு அப்படியே இயேசு போலவே  இருந்தார். நான் அவரிடம்சென்று பேசியபோது அவர் இந்தியில் பேசினார். அவர் பூனேயில்இருந்து நேற்றுதான் அங்கு வந்ததாகவும் கூறினார்.  அவரை இரண்டு கையையும் பிடித்து உயரே தூக்கி "நிமிர்ந்து நில்லுங்கள்"  என்று கூறிய போது, அவர் இயேசு எப்படி சிலுவையில் தொங்கினாரோ அப்படியே என் கண்களுக்கு  தெரிந்தார் எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.  
 
என்னுள் இருந்த ஆண்டவர்  இவ்வாறு பேசினார் "இன்று உலகத்தில் இயேசுவின் நிலையும் இதே போல்தான் இருக்கிறது. எல்லோரும் இயேசுவை  ஓரத்துக்கு ஒதுக்கி   தள்ளிவிட்டனர். ஆரம்பத்தில் கிறிஸ்தவத்துக்குள் அடிஎடுத்து வைக்கும் எல்லோரும் மிகமிக உற்சாகமாக பரிசுத்தமாகத்தான் வருகின்றனர், ஆனால் நாளடைவில் உலகத்துடன் ஒத்தவேஷம் போட ஆரம்பித்து விடுகின்றனர். அவருடைய வார்த்தைகளை கைகொண்டு நடக்க  விரும்பாமல் அவரை ஒதுக்கி
தள்ளிவிட்டு அவருடைய பெயரை மட்டும் வைத்து பூஜை செய்வதுபோல் செய்து கொண்டு இருக்கினற்றனர்.   
 
இயேசுவோ அவர் சீஷர்களோ வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டது? அவர்கள் எதையும் தங்களுக்கென்று சம்பாதிக்கவில்லை சேர்த்து வைக்கவும் இல்லை. ஒரு பரதேசிபோல வாழ்ந்து  இயேசுவுக்காய் தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.  ஆனால் இன்றைய  கிறிஸ்தவம் எதோ ஒரு காரணத்தை சொல்லி பணத்தை சேர்ப்பதிலும் நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்வதிலும் குறியாய் இருக்கிறது. அது  உலகத்தார் வாழ்க்கையை உணர்த்துகிறதே தவிர, வேறு எதுவும் இல்லை. கிறிஸ்து சொன்ன வார்த்தைபடி யாராவது வாழ்கிறார்களா என்றால் ஒருவரும் இல்லை. உண்மையான இயேசுவை புறம்பே தள்ளி விட்டார்கள்." என்றார். நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் ஆகையால் எனக்கு அதைப்பற்றி அந்நேரத்தில் ஒன்றும் புரியவில்லை!
 
அந்த பிச்சைக்காரரை ஒரு சிறிய  ஹோட்டல் ஒன்றுக்கு  அழைத்த்து போய் உணவு
வாங்கி கொடுத்தேன். அந்த கீற்று கொ
ட்டகையான 
அந்த ஹோடலினுள் நான்
 பார்த்தபோது எல்லோரும்
மிக சோகமாக தெரிந்தார்கள். அங்குள்ள ரேடியோ ஓன்று  "எல்லோர்க்கும் தலைமேல எழுத்தொன்று உண்டு என்னான்னு யார் சொல்ல கூடும், கண்ணீர கொடம் கொண்டு வடிச்சாலும் கூட எந்நாளும் அழியாமல் வாழும்" என்ற சின்னத்தம்பி படபாடலை பாடிகொண்டிருந்தது. அப்பொழுது ஆண்டவர்  என்னுள், "இந்த ஜனங்களை பார்த்தாயா அவர்கள் சோகம், துக்கம், பிரச்சனை, தலைவிதி சங்கடம்  எல்லாவற்றையும் ஒரே நொடியில் என்னால் முற்றிலும்  மாற்றமுடியும். ஆனால் யாருமே  என்னை முழு மனதோடு தேடாமல், தன் சுய பலத்தால் சாதிக்க நினைத்து அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேற, என்னை அவர்கள் வழிக்கு துணையாக நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்! என்னை வைக்க வேண்டிய இடத்தில் பணத்தை வைத்து, அதை தேடுவதிலேயே குறியாக இருக்கின்றனர்! எதிர்பார்த்தது நடக்காவிட்டால் யார் மீதிலோ அல்லது விதியின் பேரிலோ பழியை போட்டுவிட்டு குருடன்போல தடவிதிரிகிறார்கள், இவர்கள் என்று திருந்துவார்களோ"  என்று மிகவும் வருந்தினார்.
 
அந்த ஹோட்டலில் இருந்த ஒருவர் என்னை எங்கிருந்து வருகிறீர்கள் இந்தஊரில் என்ன காரியம் என்று விசாரித்தார். நானும் ஆண்டவர் சில காரியங்களை நிறைவேற்றுவதர்க்காக என்னை மும்பை பட்டணத்திலிருந்து இங்கு அழைத்து வந்துள்ளார் என்று கூறினேன். உடனே அவரும் நானும் இறைவன்மேல் மிகுந்த பற்றுள்ளவன்   அவரைப்பற்றி  நிறைய  பேசவேண்டும்  என்று  கூறினார். என்னுளிருக்கும் ஆண்டவர் "இவரிடம் ஒரு இந்து தெய்வத்தின் ஆவி உள்ளது  இவர் இப்படிதான் பேசுவார் நீ உன் காரியத்தை முடித்துக்கொண்டு கிளம்பு" என்று கூறினார். 
 
அந்த பிச்சைகாரருக்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பினேன். திருநெல்வேலி வந்து சேரும்போது இரவு மணி சுமார் 11.30.௦    
 
அடுத்து நான் செய்த ஒரு புத்தியினமான செயலால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரந்தது அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.,....     
  


-- Edited by SUNDAR on Monday 21st of March 2011 02:45:20 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

எனது புத்திஈனமான செயல்:
 
மீண்டும் திருநெல்வேலி வந்து நான் சேரும்போது இரவு 11.30. அது மழைகாலம் என்பதால்  பஸ்ஸ்டாண்டில்  ஆள் நடமாட்டம்  அரேவே இல்லை. அங்கு தனிமையில் அமர்ந்து இருந்த எனக்கு சற்றுமுன் பெய்த மழையின் தாக்காத்தால்
கொஞ்சம் குளிறேடுதத்துபோல்
இருந்தது.   
 
எனது ஊராகிய தூத்துக்குடியிலிருந்து மும்பைக்குபோய் சுமார் இரண்டு வருடங்கள் கடந்திருந்ததால் எனது மனதில்  "மும்பையில் இருந்து இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது இங்கிருந்து சுமார் 60KM தூரத்தில் உள்ள எனது ஊராகிய தூத்துக்குடி போய் எனது வீட்டில் உள்ளவர்களை பார்க்கலாம்" என்ற ஆசை ஏற்பட்டது. அதுபற்றி ஆண்டவரின் வார்த்தை எதுவென்று சற்றும்  விசாரிக்காமல் அங்கிருந்து தூத்துக்குடிபோக கருதியபோது,  உடனடியாக எனது பக்கத்தில் ஒரு பஸ் வந்து நின்றது.  அந்த  பஸ்ஸில் ஏறினேன். அதில் நான் கண்டக்டர் டிரைவர் தவிர வேறுயாருமே இல்லை. பஸ் தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டது.  

(நான் என் சுயபலத்தில் இல்லாமல் இறைவனின் ஆவியால் தாங்கப்பட்டு நடத்தப்படேன். மும்பையில் இருந்து புறப்பட்ட மூன்றாவது நாள் அது. எனக்கு பசி, தூக்கம், களைப்பு எதுவுமே சிறிது கூட தெரியவில்லை.  ஆண்டவர்  சில நேரங்களில் மட்டுமே என்னோடு தானாக பேசுவார். பல நேரங்களில், நான் எதாவது நினைத்தாலோ கேட்டாலோ, என் கண் முன்னால் இருக்கும் எந்த ஒரு பொருளும் அதற்கான பதிலை சொல்லியது. இந்த உலகத்தில் உள்ள எல்லா எழுத்துக்கள் படங்கள், உயிரினங்கள் எல்லாமே நமக்கு ஒரு இறைசெய்தியை சொல்கிறது ஆனால் நம் புத்திக்குத்தான் அந்த இறைசெய்தி எட்டுவதில்லை. ஆண்டவரின் ஆவி நம்மை பூரணமாக நிறைத்திருந்தால்  மட்டுமே எழுதப்பட்டுள்ள எல்லா காரியத்துக்கும் சரியான  பொருள் நமக்கு புரியவரும் )

நான் தூத்துக்குடி வந்து  எனது வீட்டு  கதவை தட்டும் போது சரியாக இரவு 1 மணி. கதவை திறந்த எனது அம்மா அப்படியே ஷாக்ஆகி விட்டார்கள். அந்த வீடு கட்ட ஆரம்பிக்கும் போது, சுமார் 2 வருடத்துக்கு முன் அங்கிருந்து மும்பை போன நான், திடீர் என்று எந்த முன்அறிவிப்பும் இல்லாமல், கையில் ஒரு புத்தகத்துடன் வந்து நிற்பதை பார்த்தவுடன் அம்மா மட்டுமல்ல என் தம்பி தங்கை அனைவருக்கும் ஒரே பதட்டம்.
 
நான் அவர்களிடம் "இறைவன் என்னை இதுபோல் பைபிளை மட்டும் எடுத்து கொண்டு  புறப்பட்டுவர சொன்னார் அதுதான் உடனே புறப்பட்டு வந்தேன்" என்றதும், அவர்கள் இவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என நினைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆனால் எனக்கு அவர்களை பார்த்தபோது ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு அசுத்தஆவி இருப்பது அப்படியே தெரிந்தது. ஏதோ பிசாசு கூடாரத்த்க்குள் வந்துவிட்டதாகவே தோன்றியது.  அங்கு இருக்கவே மனதில்லை. ஆனால் வந்தாகிவிட்டதே என்னசெய்ய என நினைத்துக் கொண்டு உள்ளே சங்கடத்தோடு அமர்ந்திருந்தேன். எனது அம்மா "சரி படுத்து தூங்கு காலையில் எல்லாம் பேசலாம்" என சொல்லிவிட்டு தூங்க போய்விட்டார்கள்..
 
(எனது அப்பா இரவு வேலைக்கு போய்விட்டதால் வீட்டில் இல்லை. எனக்கு இரண்டு தம்பிகள் ஒரு தங்கை மற்றும் ஒரு அண்ணன் அதில் ஒரு தம்பி மட்டும் இயேசுவை ஏற்றுக்கொண்டவன்.)
 
மறுநாள் காலை எழுந்தபோது எல்லோரும் என்னை ஒருவிதமாக பார்க்க ஆரம்பித்தனர்.  இயேசுவை ஏற்று கொண்டிருந்த எனது தம்பி மட்டும் என்னுடன் சிறிது நேரம் பைபிள் பற்றி பேசினான். நான் இறைவனை குறித்து சொன்னதை அவனால் சரியாக நம்ப முடியவில்லை சிறிது நிறத்தில் அவன் வெளியே போய்விட்டான். அவனை தவிர மற்ற எல்லோருக்குள்ளும் ஒவொரு பிசாசின் ஆவி இருப்பதை என்னால் அப்படியே பார்க்க முடிந்தது.
 
மேலும் எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே பாதாளத்துக்கு போகும் குழி ஒன்று இருப்பது என் கண்ணுக்கு தெரிந்தது. என் அம்மா சாதரணமாக இருப்பதுபோல  இருப்பார்கள்  திடீர்என அந்த பாதாளத்துக்குள் இருந்து ஒரு பிசாசின் ஆவி என் அம்மாவின் உள்வந்து புகுந்துவிடும். உடனே அவர்கள் பேச்சு செயல் எல்லாம் வேறுவிதமாக மாறிவிடும். அதுபோல் ஆவிகள் வெளியேவருவதும் மனிதனுக்குள்
புகுவதும் பிறகு தாங்கள் நினைத்த் நேரத்தில் வெளியேறுவதும் மீண்டும் பாதாளத்துக்குள் போவதும் அப்படியே என்னால் பார்க்க முடிந்தது.  என்  அம்மாவிடம் அதை பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. (சொன்னாலும் பேயின்ஆவி உங்களுக்குள் வருகிறது என்று எப்படி சொல்ல? மற்றும் நான் சொல்லபோனால் ஒரு நொடியில் அந்த ஆவி அவர்களுள் வந்துவிடுகிறது. நான் என் அம்மாவிடம் சொல்வேனா அந்த பேய் ஆவியிடமே சொல்வேனா என்று எனக்கே தெரியாது) இப்படிபட்ட ஒரு நம்பமுடியாத பயங்கர சூழ்நிலையில் ஏன் இங்கு வந்தோம் என நினைத்துக்கொண்டு இருக்கும்போது எனது அப்பா வந்து விட்டார்கள்.  2 வருடம் கழித்து வந்த மகனை ஒரு தகப்பன்  எப்படி நடத்த வேண்டும்? (எனக்கும் என் அப்பாவுக்கும் எந்த சண்டையும் கிடையாது அவர்கள் மிகவும் நல்லவர்) ஆனால் அன்று வந்தவுடன் மிகவும் கோபமாக என்னிடம் "நீ இங்கு ஏன் வந்தாய்?: என்றார்கள். எனக்கு தூக்கி வாரிபோட்டது ஏனென்றால் அவர்களுக்குள் ஒரு தலைமை  இந்து சாமியின் ஆவி இருப்பது எனக்கு தெரிந்தது அந்த ஆவி என்னை பார்த்து  "இங்கு நீ ஏன் வந்தாய்"? என கோபமாக கேட்டதோடு, "உடனே போலீசுக்கு போன் பண்ணி இவனை பிடித்துக்கொடுங்கள்" என பல்லை கடித்துக்கொண்டு என்னை பிடிக்கவந்தது. எனென்றால் போலீஸ் என்றால் எனக்கு முன்பிருந்தே கொஞ்சம் பயம் உண்டு. அதை வைத்து  என்னை பயம் காட்டிபார்த்தது.
 
நான் என் அப்பாவிடம் "நான் என்ன பண்ணினேன் என்று என்னை போலீசில் பிடித்துக்கொடுக்க போகிறீர்கள்" என்று சொல்லி அழுதபோது, எனது வார்த்தைகள் எதையுமே யாரும் பொருள்படுத்தாமல்  எல்லோருமாக சேர்ந்து என்னை எங்கும் போகவிடாமல் உள்ளேயே அடைத்து  வைத்திருந்தனர். அந்நேரம் ஆண்டவர் என்மனதில் வந்து,  என்னை வெளியில் கிளம்பிம்படி சொன்னார். ஆனால் என்னை எல்லோரும் சேர்ந்து பிடித்து வீட்டில் உள்ள ஒரு அறையில்போட்டு அடைத்து ஒருவர் மாற்றி ஒருவர் காவல்காக்க ஆரம்பித்துவிட்டனர்.

அப்பொழுது ஆண்டவர் என்னிடம் "சிறிது நேரத்தில் உன் சுயதிட்டத்தால்
என்னிடம்
விசாரிக்காமல் ஏன்  இங்கு வந்தாய் என்று கடிந்துகோண்டதோடு  
இரவுவரை இங்கேயே இரு என கட்டளையிட்டார்"  

கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அந்த நேரம் தூத்துக்குடியில் மிகபெரிய புயல் ஒன்று உருவாகி இருந்தது. அது எந்நேரமும் கரையை கடக்கும் என எதிபார்க்கப்பட்டது, அகவே சாயங்காலம் 3-4  மணிக்கெல்லாம் அதி வேகமான காற்று வீசிககொண்டிருந்தது. 
 
"நான் இங்கு வந்து மாட்டிக்கொண்டேனே!" என்று நொந்துபோய் பைபிளை எடுத்து வைத்துகொண்டு அமர்ந்திருந்தபோது திடீர் என்று கிறிஸ்த்துவை அறியாத  எனது கடைசி தம்பி கடும் கோபமாக என்னை நோக்கி வந்தான். வந்தவன் என்னிடம் "நான் என்ன  சொன்னேன் நீ என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?" என்று கத்தியபடி எனது கையில் இருந்த பைபிளை வாங்கி, அட்டை மற்றும் பல பக்கங்களை கிழித்து தூரஎறிந்துவிட்டான். அதனுள் இருந்த  அனேக ரூபாய் நோட்டுக்கள் கீழே விழுந்தது. (நான் மும்பையில் இருந்து புறப்படும்போது ஆண்டவர் "பணம் எதுவும் எடுக்காதே நான் உன்னை அழைத்து செல்கிறேன்" என்று திடமாக கூறினார். ஆனால் நான் பயந்துபோய் அவர்சொல் கேட்காமல் பல ரூபாய் நோட்டுகளை பக்கத்துக்கு ஒன்றாக பைபிளில் வைத்து எடுத்து வந்திருந்தேன். அதனால் கோபமுற்ற ஆண்டவர் என்னை விட்டுவிலகி ஒரே நிமிடத்தில் எனது தம்பி மூலம் எனக்கு கடுமையான எச்சரிப்பை கொடுத்தார். நீ இவ்வாறு சென்றால் தோற்று விடுவாய் என்று எச்சரிக்கவே, கிழிந்த பைபிளை திரும்ப எடுத்து ஒட்டி உள்ளிரிந்த ரூபாய் நோட்டுகளை எல்லாம் அகற்றிவிட்டேன். 

பிறகு பல மணிநேரம் ஆண்டவர் என்னிடம்  வரவில்லை பேசவில்லை. நான் எல்லாம் முடிந்தது  தவறு செய்து விட்டோம் என்று ஆண்டவரிடம் மிகவும் மன்னிப்பு கேடடு மன்றாடினேன்.  பயனேதும் இருக்கவில்லை.     
 
இரவில் தூங்க போகும்போது என்னை ஒரு அறையில் தனியாக போட்டு ஒரு வாசலை உள்ளே பூட்டி சாவியை  எனது அம்மா வைத்துக் கொண்டார்கள் பின்புற வாசலில் எனது தம்பி உள்ளே  பூட்டி, யாரும் வெளியே போகமுடியாதபடி கால்நீட்டி கட்டிலில் படுத்திருந்தான்.
 
நான் படுத்தவுடன் சிறிது நேரத்தில்  தூங்கிவிட்டேன். ஆனால் சுமார் 11மணிக்கு  ஆண்டவர் என்னை தட்டி எழுப்பிவிடுவது போல்  எழுப்பிவிட்டார்  " எழுந்து நட, உனக்கான துணையை இன்று நான் தருகிறேன்  என்றார்(என்னை மும்பையில் உள்ள பெண் யாரையும் திருமணம் செய்யவேண்டாம்  என்று சொன்ன ஆண்டவர் எனக்கான பெண்ணை எனது ஊரிலேயே தருவதாக சொல்லித்தான் இங்கு 
அழைத்து வந்தார் என்று முன்பு சொல்லியிருக்கிறேன்) உடனே எழுந்தேன், ஆண்டவர் தொட்டதால்  தூக்க மயக்கமோ களைப்போ சிறிதும் இல்லை. பைபிளை கையில் எடுத்துக்கொண்டு பின்வாசல் பக்கம் வந்தேன். நான் வந்ததும் எனது தம்பி கதவை மறைத்து நீட்டியிருந்த  தனது  காலை வேறு பக்கம் திருப்பி தானாக எனக்கு வழிவிட்டான். எனக்கு எந்த தடையும் இல்லை. லேசாக கதவை திறந்து வெளியே வந்துவிட்டேன். அங்கிருந்து பஸ்ஸ்டாண்ட் சுமார் 2 KM இருக்கும் நடந்து பொய் சேர்ந்தேன்மணி இரவு சுமார் 12 இருக்கலாம். அங்கிருந்த திருச்செந்தூர் பஸ்சில் ஏறும்படி ஆண்டவர் சொன்னார். ஏறினேன் பஸ் உள்ளே இருந்தவர்கள் எல்லோருமே எனக்கு மனிதனாக தெரியவில்லை எல்லோரும் பிசாசுகள் போலதான் தெரிந்தார்கள்

பஸ்
முக்காணி என்ற இடம் வரும்போது ஆண்டவர் இறங்கும்படி சொன்னார். இறங்கினேன். அந்த இடத்தில் ஒரு பாலம் உண்டு (அதாவது தாமிரபரணி ஆற்றின் கிளைஆறு ஒன்று அந்த முக்காணி வழியாக ஓடி கடலில்கலக்கும்
ஊர் கொஞ்சம் உள்ளே தூரம் தள்ளி இருப்பதால், அந்தஇடம் பெரிய காடுபோல் கும்மிருட்டாக இருந்தது. மணி சுமார் 12.30௦ இருக்கலாம்.   கொஞ்சம் முன்பு வீசிய பலமான காற்றில் மரங்கள் வாழைகள் எல்லாம் சாய்ந்து கிடந்தன. காற்று சற்று ஓய்ந்திருந்தது) புயல் மழையால் அந்த ஆற்றில் மிக அதிகமாக வெள்ளம் பயங்கர இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது. என்னை இறக்கிய பஸ், பக்கத்தில் இருக்கும் அந்த பாலத்தை கடக்கும்போது. அதன் ஹெட்லைட் வெளிச்சத்தில் சாரி உடுத்திய ஒரு இளம்வயது பெண் தனியாக பாலத்தின் மேல் என்னை நோக்கி நடந்து
வருவது தெரிந்தது.
 
தொடரும்......
 
ஆண்டவர் இப்படி எல்லாம் செய்திருப்பாரா செய்திருப்பாரா என்று எண்ணுகிறவர்கள் தேவன் தீர்க்கதரிசிகளை என்னென்னவெல்லாம் செய்ய சொல்லியிருக்கிறார் என்பதை சற்று கவனித்து பாருங்கள்.

1. எசேக்கியேலை மனித கஷ்ட வரட்டியில் அப்பம் சுட்டு சாப்பிடசொன்னார்
2 ஏசாயாவை வஸ்திரம் இல்லாமல் நடந்துபோக சொன்னார்
3. எரேமியாவை சனல்கச்சையை வாங்கி ஐபிராத்து நதியில் கொண்டு குழிதோண்டி
 வைக்க சொன்னார்.
4.ஓசியாவை   சோரஸ்திரியை கொண்டு பிள்ளை பெர்க்கும்படி கட்டளையிட்டார்.
 
அதுபோல் இதுவும் ஒரு ஆண்டவரின் முக்கிய  திட்டத்தின் அடிப்படையிலான  வழி நடத்துதலே. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.    
 
நான் இதை எழுதுவதன் காரணம் தேவன் ஒரு தனிமனிதனை எப்படி வேண்டு மானாலும் நடத்த முடியும் என்பதை தெரிவிக்கவும், இறைவன் இல்லை என்று எண்ணுபவர்களுக்கு அவர் உண்டு என்ற நம்பிக்கை வரவைக்கவும்.  தீர்க்கதரிசிகள் தங்கள் அனுபவங்களை எழுதி வைத்ததுபோல நானும் எழுதிவைக்க்கவுமேதான்.


 

-- Edited by SUNDAR on Saturday 17th of April 2010 11:01:34 AM

-- Edited by SUNDAR on Friday 7th of May 2010 07:29:38 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
என்வாழ்வில் இறைவன் இடைபட்ட இனியநேரங்கள்!
Permalink  
 


பஸ் கடந்துபோனபின் அந்த இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை. பேரிரைச்சலோடு ண்ணீர் ஓடும் சப்தம் மட்டுமே கேட்டது. அப்போது ஆண்டவர் நீ இந்த பாலம் ழியாக அந்த பெண்ணுக்கு எதிர்கொண்டு போ என்று கட்டளையிட்டார். என்னால்  அவ்வார்த்தைகளை எற்று நடக்க முடியவில்லை.

நான் மிகவும் பயந்துவிட்டேன். மிக சரியான கும்மிருட்டு அது ஒரு பெண்ணா அல்லது ஆவியா என்று கூட தெரியவில்லை. ஒருவேளை அந்த பெண் என்னை ஆற்றில் பிடித்து தள்ளி விட்டுவிட்டால் என்னசெய்வது?  தண்ணீர் என்னை டலுக்கே கொண்டு போய்விடுமே! என்ற பயம் ஏற்பட்டதால் நான் போக மறுத்து விட்டேன்.  ஆண்டவரே எவ்வளவோ சொல்லியும் அவர் வார்த்தையை அசட்டை செய்து அந்த திசையை நோக்கி  போகாமல் வேறு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 
 
(ஆண்டவர் இப்படியெல்லாம் தேவையில்லாத காரியங்கள செய்வாரா என்று யோசிக்கவேண்டாம். இங்கு நடந்தது எதுவுமே தேவையில்லாத காரியம் இல்லை. நடந்தவை எல்லாம்  மிக முக்கிய காரியங்கள் என்பதை பின்னாளில் நான் அறிந்து கொண்டேன். எனது கீழ்படிதலின்மையாலேயே பல காரியங்கள் தடைபட்டது. ஆண்டவர் எனக்குள் இருந்து செயல்பட்டாலும் சில காரியங்களை அவர் எனது சாய்ஸ்க்கே விட்டுவிட்டார். என்னை எதற்கும் அவர் கட்டாயப் படுத்தவில்லை. நான் புதியதாக அப்பொழுதுதான் ஆண்டவரை அறிந்திருந்ததால் அனேக நேரங்களில் அவரது சொல்லுக்கு கீழ்படியாமல் இடற நேர்ந்தது) 
 
அங்கிருந்து வேறு ஒரு  பஸ்ஏறி பக்கத்தில் உள்ள ஆத்தூர் என்னும் கிராமத்தில் இறங்கினேன். மணி சுமார் 2 இருக்கும். அங்கிருந்த ஒரு டீகடையின் டீ ஒன்று சொல்லி விட்டு பெஞ்சில் போய் அமர்ந்தேன். அந்த டீகடைக்காரர் பக்கத்தில் இருந்த இன்னொருவரிடம் சத்தமாக "நேற்று இரவு ஒரு வயசு பெண் தூக்கத்தில் எழுந்து நடந்துவந்து எனது கடையில் நெடுநேரம் அமர்ந்திருந்தாள், நாங்கள் அவள் வீட்டு விலாசத்தை கேட்டு காலையில் அவள் வீட்டில் கொண்டுபோய்  விட்டு வந்தோம்" என்று சொல்லிகொண்டிருந்தார். அப்பொழுது இறைவன் என்னிடத்தில் "நேற்று நீ இங்கு வரவேண்டியதாய் இருந்தது அந்த பெண்ணை உனக்க்காகத்தான் அழைத்து வந்திருந்தேன் ஆனால் நீ உன்னுடைய தவறான விருப்பத்தால் உனது வீட்டுக்கு போய்விட்டாய்.. இன்றும் நான் அந்த பாலத்தில் நடந்து வந்த பெண்ணை போய் தொடு என்று சொன்னேன் என்மீது முழு விசுவாசம் இல்லாமல் தொட மறுத்து விட்டாய்." என மீண்டும் கடிந்துகொண்டார். எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.
 
அதன்பின்  ஆண்டவர் என்னை எழுந்து நட என்றார், நடந்து சிறிது தூரம் போனதும் ஒரு இடத்தில் அனேக நாய்கள் ஒரு இருட்டில் சண்டைபோட்டுக்கொண்டு கத்திக் கொண்டு இருந்தன. அந்த நாய்களை நோக்கி போ என்றார் அந்த இருட்டில் ஒரு பாழடைந்த இந்து கோவில் ஒன்று இருந்தது அதன் உள்ளிருந்துதான் நாய்களின் சந்ததம் வந்தது. எனக்கு மிகுந்த பயமாக இருந்தாலும் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்,  இன்னொரு முறை அவர் சொல்லை தட்டக்கூடாது என்று உறுதியில் அந்த பாழடைந்த கோவில் பக்கம் போனேன். அப்பொழுது ஆண்டவர்  என்னிடம் இந்த கோவிலில்தான் சகல பில்லிசூனியங்களும், செய்வினைகளும் செய்து வைக்கப்படுள்ளது அதை ஒரு பிசாசு காவல் காக்கிறது, நீ கையில்உள்ள பைபிளை கோவில் நேரே நீட்டி பிசாசை அதட்டு என்றார். உடனேநான் சத்தமாக "ஏய் பிசாசே இங்கிருந்து உடனே ஓடு" என்று சத்தமாக  அதட்டினேன். (எனக்கு இயேசுவின் நாமத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது ஆண்டவர் சொன்னதை செய்தேன்)  நான் விரட்டியதும்  உள்ளிருந்து பல நாய்கள் வீச் வீச் என்று வவ்வால் போல சத்தம் போட்டுக்கொண்டு பல்வேறு திசையை நோக்கி ஓடின. உடனே இறைவன் என்னிடம் இந்த நாளில் பல்வேறு மந்திரகட்டுகள் முறிக்கப்பட்டன அநேகர் விடுதலை அடைந்துள்ளனர் என்றார். 
   
பக்கத்து ஊரில் இன்னொரு வீட்டுக்கு போகும்படி ஆண்டவர் வழி நடத்தினார் காலை 6  மணி, அந்த  வீடு திறந்திருந்ததால் உள்ளேயே போய்விட்டேன். நல்ல உடல் வலிமை உள்ள ஒரு பெரிய மனிதர் வந்து என்னவென்று கேட்டார்.  நான் "ஆண்டவர்  என்னை மும்பையிலிருந்து அழைத்து வந்தார் இங்கு எனக்கு  பெண் இருக்கிறது என்று சொல்கிறார்" என்று விளக்கமாக சொன்னேன். அதற்குள் பெண்ணின் அம்மா அந்த பெண் எல்லோரையும் என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் அவர் எதுவும் கோபப்படாமல் "அவன் சத்தம்போடுவன்" என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னார். நான் அவரிடம் எவன்? என்று கேட்டேன். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை, கண்ணை ஒருவிதமாக விழித்துக்கொண்டு நின்றார்.
 
ஆண்டவர்  என்னிடம் அவர்கள் கும்பிடும் ஒரு (கருப்ப) சாமி சத்தம்போடும் என்று சொல்கிறார், நீ அவரிடம் "அவன் எதுவும்  சொல்லமாட்டன் என்று சொல்" என்றார். நானும் துணித்து அவரிடம் "என்னை சர்வவல்ல இறைவன் அழைத்து வந்துள்ளார் யாரும் உங்களை சத்தம் போடமாட்டார்கள் உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள்" என கேட்டேன். சிறிது யோசித்த பிறகு "உனது அம்மா அப்பாவை அழைத்துக்கொண்டு வந்து முறைப்படி பெண் கேள்" என சொல்லி விட்டார். வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினேன். ( அது ஒரு பெரிய பணக்கார வீடு நான் ஆண்டவர் துணையில்லாமல் இப்படி போய் பேசியிருந்தால் அவர்கள் நிச்சயம் என்னை அடித்தே துரத்தியிருப்பார்கள் ஆனால் ஒருவரும் என்னை எதுவும் செய்யமுடியவில்லை) 
 
திரும்பவும் அங்கிருந்து புறப்பட்டு  ஸ்பிக் நகர் என்னும் இடத்துக்கு பக்கத்தில் வரும்போது இரட்சிக்கப்பட்ட எனது தம்பி என்னை தேடி வந்து என்னை பிடித்துக் கொண்டான். அதன்பிறகு அவன் என்னிடம், நீ எங்கு போனாலும் நானும் வருவேன் என்று பிடிவாதமாக என் பின்னே வர ஆரம்பித்தான். நான் எவ்வளவோ முயன்றும் அவனை விட்டு பிரியமுடியவில்லை. ஆண்டவர்  அவன் பின்னால் போகும்படி எனக்கு கட்டளையிட்டுவிட்டார். நாங்கள் திரும்ப தூத்துக்குடியில் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம். அவன்என்னை வீட்டில் ஒப்படைத்துவிட்டு சர்ச்போக புறப்பட்டான். வீட்டில் என்னை  நிச்சயம் உள்ளேபோட்டு அடைத்து விடுவார்கள் என அறிந்ததால், நானும்  அவனுடன்  சேர்ந்து சர்ச் போக புறப்பட்டேன்.

அது ஒரு மாரநாதா  ஒரு சிறிய பெந்தேகொஸ்தே சர்ச். நானும் எனது தம்பியும் சார்சினுள் போய் அமர்ந்தோம். சர்ச் உள்ளே இருந்த எல்லோருக்குள்ளும் பிசாசின் ஆவி இருப்பது என் கண்ணுக்கு தெரிந்ததால் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. தேவனை இவ்வளவு வாஞ்சையோடு தேடும் இவர்களுக் குள்ளும் பிசாசு எப்படி தங்கியுள்ளது என்று ஒரே குழப்பமாகஇருந்தது. அப்பொழுது நான் பைபிளை திறக்க வேத வசனம்  "இங்கு உள்ளதெல்லாம் நோவா பேழையை உண்டாக்கி ஜலப்ரளயத்துக்கு தப்பும்போது கீழ்படியாமல் அழிந்துபோன மனிதர்களின் ஆவிகள்" என்று பேசியது.  அப்பொழுது அதுபற்றி எனக்கு எதுவும் சரியாக புரியவில்லை அதனால் ஆண்டவரிடம் எதுவும் விசாரிக்கவில்லை.

ஜெபம் நடக்கும் வேளையில் மீண்டும் புயல்காற்று வீச ஆரம்பித்தது வானம் மிகவும் இருண்டு காணப்பட்டது, மின்சாரமும் இல்லாமல் போய்விட்டது. அப்பொழுத சர்ச்சில் உள்ள எல்லோரும் அந்த புயல் தாக்காமல் இருப்பதற்க்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள்
 
உடனே ஆண்டவர் என்னிடம் அவர்கள் ஜெபிப்பதை எதையும்நீ  பொருட்படுத்தாதே,
அவர்கள் ஜெபிப்பதுபோல நீயும் ஜெபிக்காதே என திட்டமாக தெரிவித்தார் அகவே நான் எதையும் பொருட்படுத்தாமல் கையில் இருந்த வேதத்தை படித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் எல்லோரும் கூட்டமாக ஜெபிக்க ஜெபிக்க என் மனம் என்னையும் அறியாமல் அவர்களோடு சேர்ந்து   வேண்டுதல் செய்ய ஆரம்பித்தது. நான் இறைவனிடம் "ஆண்டவரே இங்கு வந்து ஜெபம் பண்ணும் இந்த ஒரு கூட்ட மக்களை காபாற்றுமே"  என கேட்ட அதே விநாடி பவர் வந்து விட்டது மற்றும் வானத்தில் மேகம் கலைந்தது காற்றும் நின்றுவிட்டது. .

ஆண்டவர் என்னை மிகவும் கடிந்து கொண்டார் "நான் உன்னை என்ன சொன்னேன் நீ என்ன செய்கிறாய். இந்த ஜனங்கள் இதுபோலவே நான் எதாவது ஒன்றை செய்ய நினைக்கும் போதெல்லாம் என்னுடைய சித்தம் என்னஎன்பதை பொருட்படுத்தாமல் இப்படி ஒன்று கூடி ஜெபித்து அதை செய்ய விடாமல் தடுத்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது நடக்க வேண்டும் என்றுதான் ஜெபம் பண்ணுகிறார்களே அன்றி, உம்முடைய சித்தப்படி எல்லாம் நடக்கட்டும் என்று சொல்லி அதை முடிப்பதில்லை. மனிதனுக்கு நன்மையை தோன்றுவதெல்லாம் நன்மையுமல்ல, அவனுக்கு தீமையாய் தோன்றுவதெல்லாம் தீமையுமல்ல. அன்று கேத்சமனே தோட்டத்தில் இயேசு ஜெபித்தபோது என்னை எப்படியாவது இந்த சிலுவை மரணத்தில் இருந்து காப்பாற்றும் என்று மட்டும் ஜெபித்திருந்தால் நானும் இரக்கப்பட்டு அவரை காப்பாற்றியிருப்பேன். ஆனால் மனுகுலத்திற்கு இந்த பெரிய ரட்சிப்பு கிடைக்காமல் போய்விடும்.  ஆனால் அவர் முடிவில் உம் சித்தப்படி ஆகக்கடவது என்று சொல்லிய அந்த ஒரே வர்த்தயினால்தான் இற்று மனிதனின் இரட்சிப்புக்கு வழியே கிடைத்தது.
 
"எனது வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவை ஏன்று அவரை தன்னில்  தரித்து ண்டுள்ள எல்லோருடைய வார்த்தைக்கும் வல்லமை உள்ளது. ஆனால்  கிறிஸ்துவை உடையவர்கள் இறைவனின் சித்தம் என்ன என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், தான் நினைப்பது நடக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். அதற்குத்தான் ஜெபிக்கிறார்கள். அதுதான் நான் உன்னிடம் சொன்னேன் அவர்களுக்கு இரங்காதே என்று, ஆனால் நீயும் என் சொல்லை கேட்க வில்லை" என கோபமாக பேசினார். எனக்கு மிகவும் மனகஷ்டமாக இருந்தது. என்னுளிருந்த பாதி வல்லமை அப்பொழுதே போய்விட்டதை உணர்ந்தேன். ஆராதனை முடிந்ததும் அங்கிருந்து திரும்ப எங்கள் வீட்டுக்கு நாங்கள் போனோம். 
 
அந்த வல்லமையின்  ஆவி என்னைவிட்டு வெளியேறிவிட்டதால் என் மனம் மிகவும் கலக்கமாக இருந்தது உடனே எனக்கு மாமிச இச்சை வந்துவிட்டது. மீண்டும் சிகரெட் குடிக்கும் எண்ணம் மனதில் தோன்ற ஆரம்பித்தது. என்னால் என்னை கட்டுப்படுத்த  முடியவில்லை கடையில் ஒரு கோல்ட்பிளாக் சிகரெட் வாங்கி பற்றவைத்து புகை விட்டுக்கொண்டு இருக்கும் போது, எனது கிறிஸ்தவ தம்பி என் எதிரே வந்து "என்னண்ணா இப்படி சிகரெட் பிடிக்கிறாய் ஆவியானவர் எவ்வளவு துக்கப்படுகிறார் என்று தெரியுமா?" ஏன்று சங்கடத்தோடு கேட்டான்.   ஏற்கனவே மனகுழப்பத்தில் இருந்த நான் கொஞ்சமும் யோசிக்காமல் "ஆமாம் பெரிய ஆவியானவர்" என சொல்லிவிட்டேன்.  அதே நிமிடத்தில் என்னுள் இருந்து இன்னொரு ஆவியும்  என்னை விட்டு விலகி போவதை அப்படியே உணர்ந்தேன். அவ்வளவுதான் நான் சாதாரண மனிதனாக மாறிவிட்டேன்.  பிறகு என் கண்ணுக்கு யாரும் பேய் போல தெரியவுமில்லை எந்த ஆவியையும் என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாமே சாதாரணமாக தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகு இறைவன் என்னிடம் எதுவும் பேசவில்லை. 
 
எனக்கு எல்லாமே இழந்து விட்டதை போல இருந்தது. என்னால் தாங்கவே முடிய வில்லை. அத்தோடு அதுவரை எதை பற்றியும் கவலைப்படாமல் இருந்த எனக்கு என் வேலைஸ்தலத்தில் நான் விட்டுவந்த வேலை, பண பிரச்சனை, உடம்பு பிரச்சனை, பசி, களைப்பு  என்று எல்லாமே ஒன்றாக சேர்ந்து வந்துவிட்டது. சொர்க்கத்தில் இருந்த ஒருவன் திடீர் என அதை இழந்துபோனால் தவிப்பது போல தவித்தேன். அழுதும்  மற்றாடி  ஜெபித்தும்  எந்த பதிலும் இல்லை. நடந்ததெல்லாம் உண்மையா என்று நம்பமுடியாத ஒரு சாதாரண நிலைக்கு வந்துவிட்டேன்.

வேறு வழியின்றி மீண்டும் மும்பை போக புறப்பட்டேன். 
 
(இந்த உலகத்தின் நடந்த இந்த காரியங்களையே நம்மால் (என்னாலேயே)  நம்ப முடியவில்லை. இன்னும் ஆண்டவர் தெரிவித்த பரம காரியங்களை நான் தெரிவித்தால் அது பலருக்கு பயித்தியமாகவே தோன்றும் எனவே சில காரியங்களை நான் எழுதாமல் விட்டுள்ளேன்)    
 
இன்னும் இருக்கிறது...... 
 
 

-- Edited by SUNDAR on Friday 25th of June 2010 09:16:44 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மீண்டும் மும்பை பட்டணம்..

ஆவியின் வல்லமை எல்லாம் இழந்துபோன நிலையில் அடுத்தநாளே ஊரிலிருந்து கிளம்பி
மும்பை வந்து சேர்ந்த நான் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்தேன். சுமார் ஒரு வார காலம் ஆபீஸ் போனபோது என் மனதில் கொஞ்சமும் சமாதானம் இல்லை. நடந்ததை எல்லாம் நினைத்து நினைத்து வருந்தினேன். எனது கதையை யாரிடம் சொன்னாலும் ஏறக்குறைய என்னை பயித்தியம் போல பார்த்தனர். எனது உயிர் நண்பனே என்னை நம்பவில்லை. எனவே யாரிடமும்  இதுபற்றி சொல்வதை தவிர்த்தேன்    

எல்லாவற்றையும் இழந்து விட்டோமே என்று மிகவும் சங்கடமாக இருந்தது. இந்நிலையில், இழந்த ஆவியை எப்படியாவது மீண்டும் பெறவேண்டும் ஆண்டவர் இன்னொருமுறை இரங்கமாட்டாரா என்ற வாஞ்சையில், ஒருநாள் மும்பையில் உள்ள இருண்டு கிடந்த விளையாட்டு மைதானம் ஒன்றில் இரவு சுமார் 9 மணிக்கு போய் அமர்ந்து மீண்டும் இறைவனை நோக்கி மற்றாடஆரம்பித்தேன்.
"ஆண்டவரே
நான் அனேக தவறுகள் பண்ணிவிட்டேன், என்னை ஒரு சிறு குழந்தையை போல எண்ணி மன்னிக்க கூடாதா, உண்மையில் எனக்கு உம்மை பற்றியோ, வேதத்தை பற்றியோ ஒன்றுமே தெரியாது. திடீர் என்று உம்முடைய ஆவியில் அபிஷேகம் பெற்றேன் ஆகையால் தெரியாமல் உம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் பலமுறை தவறி விட்டேன். இன்னொரு முறை என்னை நினைத்தருளும்" என்று சொல்லி மீண்டும் மிகவும் அழுதேன். 

இரவு ஒரு மணி வரை இறைவனை வேண்டிக்கொண்டு என்னை அபிஷேகித்தால் தான் இந்த இடம்விட்டு போவேன் என்ற பிடிவாதத்துடன் அங்குள்ள ஒரு பெஞ்சில் படுத்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து, அனேக நாய்கள் குறைத்துக்கொண்டு என்னை பார்த்து ஓடிவரவே எழுந்து வீட்டிற்கு போய் படுத்துவிட்டேன். 

மீண்டும் இறை ஆவியினால் நிரப்பபட்டேன்:

காலை 6 மணிக்கு நான் எழுந்த போது மீண்டும்  ஆவி என்னை நிரப்பி இருப்பது தெரிந்தது.  ஆனால் இந்த முறை என்னை நிரப்பியிருந்த ஆவி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.  எனது கண்கள் திறக்கப்பட்டு, மீண்டும் மனிதர்கள் எல்லோரும் பேய்கள் போல தெரிய ஆரம்பித்தனர்.

நான் வெளியில் வந்தபோது ஒரு சிறுபையன் வானத்தை நோக்கி கையைகாட்டி "அங்கிள் அங்கே பாருங்கள் வானம் சிகப்பு நிறமாக தெரிகிறது"என்று சொன்னான். நான் வானத்தை பார்த்தேன், காலை மேகங்கள் சூரிய ஒளியினால் இரத்தம் போல சிகப்பு நிறமாக தெரிந்தது உடனே என்னுள் இருந்த ஆண்டவர் "அந்த பையன் சொன்னது சாதாரண காரியம் அல்ல, நீ சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டு இன்று இந்த பட்டணத்தில் இரத்தக்களறி ஏற்படப்போகிறது" என்று சொன்னார்.
உடனே நான் யாரிடமும் எதுவும் சொல்லாமல் குளித்துவிட்டு சட்டையை மாட்டி புறப்பட தயாரானபோது, காலையில் என் காதுக்கு எட்டிய முதலில் செய்தி "பாபர் மசூதி இடிக்கப்பட்டு விட்டது" என்பதுதான். (அது ஏன் இடிக்கப்பட்டது இத்தனை நாள் இடிக்க முடியாமல் இருந்த அதனை இடிக்க முடிவதற்கு ஆவிக்குரியஉலகில் நடந்த காரியம் என்ன என்பதெல்லாம் ஆண்டவர் எனக்கு விளக்கினார்)
 
மும்பை பட்டணம் முழுவதும் ஒரே கலவரம் குழப்பம் அனேக இடங்களில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பயங்கர சண்டை  கொலைகள் மரணங்கள். அப்படிஒரு மோசமான நிலையில் மும்பை இருக்கும்போது, இறைவன் எனக்கு கட்டளைஇட்டபடி காலையிலே புறப்பட்டு பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்தேன் பல இடங்களில் போலிஸ் பேரணிகள் மற்றும் மனிதர்கள் அங்கும் இங்கும் ஓடுவது என்று நடந்தது,  நான் எதையும் பொருட்படுத்தாமல் ஆண்டவர் வழி நடத்துதலில் போய்கொண்டு  இருந்தேன்  
 
ஒருநாள் முழுவதும் அலைந்தேன்  ஓரிடத்தில் தனியே போய்கொண்டிருக்கும்போது திடீர்என்று எனக்கு பயங்கர இடுப்புவலி ஏற்பட்டு மீண்டும் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலையை அடைந்தேன். "ஆண்டவரே இதுஎன்ன? வலி அதிகமாக இருக்கிறதே என்றுபுலம்பினேன். அப்பொழுது ஆண்டவர் "இதுதான் பெண்களுக்கும் பிரசவ சமயத்தில் வரக்கூடிய கடுமையான் வலி" என்றார்.  நான் "ஆண்டவரே இந்த வலி மிக கொடூரமாக இருக்கிறதே யாருக்குமே இந்த வலி வராதபடி சரிசெய்யுமே.
என்று மன்றாடியபோது ஆண்டவர் "நிச்சயம் அது ஒரு காலத்தில் நடக்கும் அதைநீ பார்ப்பாய்" என்று மட்டும் சொன்னார். உடனே எனது வலி நீங்கிவிட்டது.    

அன்று காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை ஆனால் எந்த பலகீனமும் எனக்கு இல்லை. இரவில் குர்லா என்னும் இடத்தில் உள்ள ஒரு பஸ் டெர்மினஸ் உள்ளே ஒருபயணி இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும். ஆண்டவரின்  ஆவி என்மேல் பலமாக இருந்தது, மீண்டும் ஆதியில் நடந்த பல்வேறு காரியங்களை எனக்கு ஆண்டவர் எனக்கு தெரியப்படுத்தினார்.  
 
என் கையில் கொஞ்சம் ரூபாய் மற்றும் சில்லறை இருந்தது. "அதை கையில் வைக்காதே கீழே  போட்டுவிடு" என்று ஆண்டவர் என்னிடம் சொன்னார். நான் கீழே போடுவதற்காக எடுத்தேன் அப்பொழுது அந்த இடங்களை பெருக்கிகொண்டிருந்த ஒரு பெண் என் அருகிலேயே வந்து, என்னைசுற்றியே பெருக்கிக்கொண்டு இருந்தது.
பணத்தை எடுத்த நான் அதி கீழே போடாமல், திடீர் என்று தேவைப்படாலாம்
அப்பொழுது என்ன செய்வது என்று கருதி  கையில் தானே
வைக்ககூடாது காலுக்கு கீழே வைத்துகொள்வோம் என்றெண்ணி  எனது ஷூ உள்ளே போட்டு மீண்டும் ஷூவை போட்டுக்கொண்டேன்.  
 
கடைசியில் அதுவே எனக்கு பெரிய வினையாக முடிந்தது.

 

-- Edited by SUNDAR on Friday 25th of June 2010 09:17:25 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஆண்டவரின் அதிசய வழி நடத்துதல்!
Permalink  
 


(என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அப்படியே இங்கு தொகுத்து இங்கு எழுதுகிறேன். ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல் "உள்ளதை உள்ளபடிதான் எழுத முடியும்"  எந்த ஒன்றையும் கருத்தில் கொண்டோ அல்லது  யாருக்கும் பயந்துகொண்டு நான் எதையும் மாற்றி எழுத விரும்பவில்லை. பின்னால் நான் ப்திவிடப்போகும் ஒரு பதிவுக்கு இந்த உண்மை நடவடிக்கைகள் தேவைப்படுவதால் இதை எழுதுகிறேன் நம்புகிறவர்கள் நம்புங்கள் நம்பாதவர்கள் விட்டுவிடுகள். )   
  
முந்தய  பதிவின்  தொடர்ச்சி........  
 
மும்பை - குர்லா பஸ் டெர்மினலில் நீண்ட  நேரம்  சாப்பிடாமல்  அமர்ந்திருந்ததால் எனக்கு  இரவு சுமார் 8 மணிக்கு பசிஎடுக்க ஆரம்பித்தது. அப்பொழுது அந்த பக்கம் வந்த  ஒரு போலிஸ்காரர்  என்னை அழைத்து பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தார்.  நான் அவரிடம் ஆண்டவர்  என்னை அழைத்தது நடத்தியது இங்கு அழைத்து வந்தது  பற்றி அவரிடம் சொன்னேன் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அவர்,  சாப்பிட்டாயா? என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும். ஒரு இடத்தை நோக்கி கை காட்டி அங்கு இலவசமாக சாப்பாடு போடுகிறார்கள் அங்கு  போய் சாப்பிடு என்று சொன்னார். நான் அங்கு போனேன் அங்கு இலவசமாக எனக்கு  சாப்பாடு கொடுத்தார்கள் சாப்பிட்டு வந்து அந்த பஸ் டெர்மினசில்  படுத்து விட்டேன். அன்று இரவு ஆண்டவர் ஆதியில் மனிதனின் படைப்பு பற்றிய அனேக காரியங்களை ஆவியில் வெளிப்படுத்தினார். அதில் சில காரியங்களை அவர் செய்ததுபோல என்னை செய்யவைத்து உணர்த்தினார்.  
 
மறுநாள் மும்பை பட்டணமே வெறிச்சோடிகிடந்தது, எல்லா இடங்களிலும்  வன்முறை, கடைஅடைப்பு  நகரம் எங்கும் போலிஸ் பாதுகாப்பு. காலையில் எழுந்து பார்த்தபோது எல்லா மனிதர்களும் 
என் கண்களுக்கு பிசாசுகளாகவே தெரிந்தனர். மெதுவாக எழுந்து  சுன்னாபட்டி என்னுமிடத்தில் சாலையில் நடந்து கொண்டிருந்த போது, ஒரு வீட்டில் அநேகர் சேர்ந்து பாட்டுபாடும் சத்தம் கேட்டது.  இந்தியில் இருந்த அந்த பாட்டு எனக்கு சரியாக புரியாததால், அங்கு என்ன நடக்கிறது என்று உள்ளே சென்று பாத்தேன்.அங்கு அநேகர் சேர்ந்து   இந்து சாமிக்கு பூஜை செய்து மும்பையில்  சமாதானத்துக்காக  வேண்டிக்கொண்டு இருந்தனர். 

நான் உள்ளே சென்றதும் முதலில் என் கண்களில் தென்பட்ட  அங்கே
 
சிலை வடிவில் இருந்த பெண் இந்துசாமி  என்னை பார்த்து மிகவும் அன்போடு சிரித்தது, அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. மேலும் அந்த சாமி என்னை பார்த்து "எனது ஆவியால் நிரப்பி நான் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு இந்து பெண்ணை உனக்கு மனைவியாக  தருவேன்" என்று என்னோடு பேசியது.  அது பேசுவதை என் உள்ளத்தில் அப்படியே அறியமுடிந்தது.  என்னால் அதை நம்பவே முடியவில்லை. 
   

ஒரு இந்துவாகிய நான் பல வருடங்கள் இந்து மதத்தில் இருந்து
பயம் எதுவும் இல்லாமல், எது உண்மையான கடவுள் என்று பல முறை ஆண்டவரிடம் மன்றாடி  விசாரித்து  பைபிளில் சொல்லும்  தேவன்தான் உண்மை ஆண்டவர் என்று அறிந்து அவர் நடத்துதலின் அடிப்படையிலேயே  இங்குவரை வந்துள்ளேன்.  ஆனால் இந்த இந்துசாமியும் என்னோடு பேசுகிறதே! இவர்கள் யார்?  என்ற குழப்பத்தில் எனக்கு அந்நேரங்களில் ஒன்றும் புரியவில்லை. (பின்னாளில் வேதாகமத்தை முழுவதும்  படித்தபோதுதான் "வானத்திலும் பூமியிலும் தேவர்கள் எனப்படுபவர்கள் உண்டு" என்று வேதம் குறிப்பிடும் "தேவர்கள்" இவர்கள்தான்  என்று அறிந்து கொண்டேன். இப்படி அனேக தேவர்கள் இருந்தாலும்  நம் தேவனாகிய கர்த்தரோ எல்லா தேவர்களிலும் உயர்ந்தவர்  மற்றும பயப்படத்தக்கவர் என்று வேதம் சொல்கிறது.
 
சங்கீதம் 96:4 கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
I நாளாகமம் 16:25 கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

அங்கிருந்து கிளம்பி தாதர் சிவாஜி பார்க் என்னும் இடம் சென்றேன். அங்கு பல இடங்களுக்கு போகும்படி இறைவன் சொன்னார் ஒரு நாள் முழுவது நடந்தே பல்வேறு இடங்களில்  சுற்று சுற்று என்று சுற்றினேன். சில இடங்களில் ஆண்டவர் ஓடு என்பார்  ஓடுவேன் சில இடங்களில் உட்கார் என்பார் உட்காருவேன் சில இடங்களில் நடப்பேன் சில இடங்களில் ரோட்டு ஓரத்தில் படுத்து தூங்கினேன் ஆண்டவரே என்னை எழுப்பி விடுவார், உடனே எழும்பி நடப்பேன்  சில இடங்களில் "மூச்சை பிடித்து கொண்டு ஓடு" என்பார் ஓடுவேன். அவர் இட்ட ஒவ்வொரு கட்டளைக்கும் சரியான  காரணமும் எனக்கு சொல்லப்பட்டது.  அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடம்வரை சில  குறிப்பிட்ட ஆவிகள் காவல் காப்பதாகவும் அதை கடந்துசெல்ல மற்றும் செயலிழக்க செய்ய வேண்டிய கட்டளைகளையே  தேவன் எனக்கு கொடுத்தார்) நான் வேத புத்தகத்தை கையில் எடுத்துகொண்டு தேவனை துதித்துகொண்டு ஓடியே இடமெல்லாம் உள்ள ஆவிகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
 
அவ்வளவு வேகமாக  ஓடியும் நடந்தும்  கால் வலியோ, களைப்போ கொஞ்சமும் இல்லை மெதுவாக இரவும் வந்தது.  இரவு ரோட்டில் யாரும் நடமாடக்கூடாது என்று கட்டுப்பாடு போடப்பட்டிருந்தது மேலும் பல இடங்களில் போலீஸ் கூட்டம் கூட்டமாக இரவு காவலில் இருந்தனர். நான் அன்றைய  இரவு நேரத்தில் தாதர் என்னும் இடத்தில்  மேற்கு  பக்கத்தில்  இருந்தேன்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஆவிகளின் உலகுக்குள் போனேன்!
Permalink  
 


(என் வாழ்வில் நடந்த சில  அபூர்வ  உண்மை சம்பவங்களை இங்கு தொடர்ந்து எழுதுகிறேன் இது ஆவிக்குரிய வாழ்வுக்கு எவ்விதத்தில் பயனளிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆகினும் இந்த உலகம் என்பதும், அதில்  நாம் பிறந்தது என்பதும் ஒரு சாதாரணமான அல்லது எதேட்சையான காரியம் அல்ல. இங்கு அனேக சிக்கல்கள் உண்மைகள் ஒளிந்துள்ளது. இதை காத்து  வழி நடத்தும் இறைவன் என்னும் ஒரு வல்லமை உள்ள சக்தி இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே  இதை எழுதுகிறேன்)   
 
பாபர் மசூதி இடிப்பிநிமித்தம்  மும்பையில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்  இரவு சுமார் 10௦ மணிக்கு மும்பையில் உள்ள  "சிட்டி விநாயக்" என்னும் இடத்தில் இரவு  காவலில் இருந்த  பல போலீசார்கள் சேர்ந்து என்னை பிடித்து விசாரித்தனர். நான் ஆண்டவர் என்னை அழைத்து வந்தது குறித்து அவர்களிடம் சொன்னேன். அவர்கள் "இரவுநேரத்தில் இப்படி அலையவேண்டாம்" என்று அறிவுரை கூறி, பக்கத்தில் ஒரு இடத்தில் அமரும்படி சொன்னார்கள் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தேன். ஆனால் எனக்கு பின்னால் ரோட்டில் வேறொருவர் வந்தார் அவரை அடித்து விரட்டிவிட்டனர் என்னை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் கவனிக்காத நேரத்தில்  மெதுவாக அங்கிருந்து கிளம்பி நடந்தேன்.
 
சிறிது தூரத்தில் சாலையின்  ஒருபக்கம் பரமசிவரும் இன்னொருபக்கம் கணபதியும் கோபத்தில் நிர்ப்பதுபோல படம் வைக்கப்பட்டு இருந்தது அந்த படங்கள் இங்கேயே இரு, இந்த இடத்தை கடந்துபோகாதே என்று எனக்கு பேசுவதுபோல் எனக்கு மனதில் உணர்த்தியது. நான் கேட்காமல் அதை கடந்து சென்றேன்   
 
நான் நடந்துகொண்டிருந்த சாலையில் அந்த இரவுவேளையில் மனநலம் சரியில்லாத ஒருவர் ஏதோ ஒரு பொருளை வைத்து  சாலையின் குறுக்கே எல்லை கோடுபோல்  போட்டுகொண்டு இருந்தார். அப்பொழுது என் மனதில் வந்து இந்த கோட்டை கடந்து செல்லவேண்டாம் என்று உணர்த்தப்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல்  அக்கோட்டை கடந்து சென்றேன்  
 
இரவு  சுமார் 11 மணியளவில்   தாதரில் உள்ள ஒரு RC சர்ச்சின் பக்கம் வந்தபோது. அந்த சர்ச்சில் முன்னால் இருந்த  இயேசுவின் சிலை தன் கையை விரித்து உள்ளே வந்துவிடு என்று அழைப்பது போல இருந்தது எனவே  அந்த சர்ச்சினுள்   போனேன். அங்கு நான் பார்த்த காட்சி ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. உள்ளே அநேகர் இருந்தனர் ஆனால் எல்லோருமே மனிதர்கள் போல் அல்லாமால் பேய் கூட்டமாக என் கண்களுக்கு தெரிந்தனர். அந்த இடத்திலும் என் மனதில்  "இந்த இடத்தை விட்டு கடந்துபோகாதே இன்று இரவு உள்ளேயே இரு"  என்று எனக்கு சொல்லப்பட்டது. ஆனால்  அதையும் நான் கேட்காமல்  அந்த  கூட்டத்துக்குள் உட்கார பிடிக்காத நான் அங்கிருந்து சிறிது நேரத்தில் வெளியே வந்துவிட்டேன். (நான் செய்த மிகப்பெரிய தவறு அதுதான்  அந்த மூன்று இடங்களில் நான் எந்த இடத்தினுள் அந்த இரவு தங்கி இருந்திருந்தாலும் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்)  
 
சர்ச்சை  கடந்து சிறிதுதூரம் சென்ற நான், அங்கு அனேக மனிதர்கள் போன்றவர்கள் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டு இருப்பதை பார்த்தேன். அதிகமான மின் விளக்குகள் அலங்கரிக்கபட்டு. அங்கு எதோஒரு திருவிழா நடந்ததுகொண்டிருந்தது. நுழை வாயிலில் சிர்டி சாய்பாபாவின் ஒரு மிகப்பெரிய படம் ஒன்று இருந்தது அதன் முன்னால் இரண்டு சிறு பெண் குழந்தைகள் புத்தகம் வைத்து படித்துக்கொண்டு இருப்பது போல உருவம்  செய்து வைத்திருந்தனர்.
 
அங்கு வந்து  நான் நின்று பார்த்தபோது. அந்த சாய்பாபா என்னை பார்த்து மிகுந்த சந்தோசம் அடைந்து என்னோடு பேசினார் அவர் பேசுவது என் மனதில் கேட்டது!  அவர் என்னிடம் "இயேசுவை போல உலகில் உள்ள எல்லா அசுத்த சக்திகள் மேலும், அதாவது நோய். நொடி, மரணம் இவற்றின்மேல் வல்லமை உள்ள இன்னொருவரை இந்த உலகுக்கு தரும்படி இறைவனிடம் வேண்டும்படி என்னிடம் அவர்  கூறினார். மேலும் நான் அந்த இடத்தில் வேண்டினால் அதுபோல் ஒருவரை இறைவன் கொடுப்பார் என்றும், அதுவும் நமது இந்திய நாட்டுக்கு கொடுப்பார்" என்றும் சொன்னார். ஆனால் நான் அவர் சொல்லை கேட்கவில்லை ஆண்டவரும் அவர் சொன்ன எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை கடந்து நான் அந்த விழா  நடக்கும் இடத்தினுள்  போனபோது (அது ஆவிகளின் உலகம் என்று எனக்கு உணர்த்தப்பட்டது. இந்த ஆவிகள் சாதாரண கண்ணுக்கு தெரிவதில்லை.)  அங்கு நடு ரோட்டில் மிகப்பெரிய விருந்து மற்றும் விழா   நடை பெற்றுக்கொண்டு இருந்தது. அநேகர் ஓடியாடிஅங்கு விருந்து  பரிமாறிக்கொண்டு இருந்தனர் அவர்கள் உணவின் வாசனை மிகவும் மோசமாக இருந்தது என்னால் சகிக்க முடியவில்லை. நீண்டநேரம் அங்கு அமர்ந்து அவர்கள் விசித்திரமான செயல்களை பார்த்துகொண்டு இருந்தேன்  உள்ளே எவ்வளவு நேரம் இருந்தேன் என்று சரியாக தெரியவில்லை நான் அந்த இடந்தை கடந்து வந்த வழியாகவே வெளியில் வந்தபோது  லேசாக விடிந்துவிட்டது.
 
சரியாக விடியாத அந்த அதிகாலை நேரத்தில் குட்டி பிசாசுகள் போல இருந்த இரண்டு  கருப்பு பிள்ளைகள் என்னிடம் ஓடி  வந்து கையைநீட்டி பிச்சை கேட்டது. எனது  பையினுள் கைவிட்டபோது ஏதோ இரண்டு நாணயங்கள் கையில் கிடைக்கவே அதை எடுத்து  கொஞ்சமும் யோசிக்காமல் அவர்கள் கையில் போட்டுவிட்டேன் அதை வாங்கிய உடனேயே ஓடுவதுபோல் தெரிந்த அந்த பிள்ளைகள் இரண்டையும் காணவில்லை. 
 
அவைகள் எங்கே ஓடினார்கள் என்று பின்னால் திரும்பி பார்த்த எனக்கு ஒரே
ஆச்சர்யம்! அங்கு சிறிது விடிந்திருந்த  அந்த
வெளிச்சத்தில் நான் இரவில் பார்த்த சாய்பாபா படமோ விழாவோ எதுவும்  நடந்த அறிகுறியே அங்கு இல்லை  ஒரு சாதாரண ரோடு தான் இருந்தது.
 
ஆண்டவர் என்னை மிகவும் கடிந்து கொண்டார். "நான் அப்பொழுதே உன்னை பணத்தை கீழே போட்டுவிடு என்று சொன்னேன் நீ கேட்கவில்லை. இப்பொழுது உன்னையும்  கடந்து  பணம் என்னும் மிகப்பெரிய பிசாசு முன்னால் போய்விட்டது
இனி அதை பிடிப்பது மிகவும் கடினம் அது அனைவரையும் வெகுசீக்கிரம் கெடுத்து விடும்" என்று கூறினார்  
 
(அவர் எனக்கு தெரியப்படுத்தியத்தின் பொருள் என்னவென்றால் மனித உலகம் ஆவிகள் உலகம் இரண்டினுள்ளும் சென்று வெளியே வந்த என்னிடம் இருந்த பணத்தை பிசாசுகள் வாங்கிச்சென்ற காரணத்தால் பணம் என்னும் வல்லமையுள்ள ஆயுதத்தை எடுத்துக்கொண்டு பிசாசு எனக்கு முன்னால் போகிறது என்பதுதான்.)
 
பணம் என்னும் பிசாசை தொடர்ந்தேன்:

அதுமுதல் எனக்கு சோர்வுகள் வர ஆரம்பித்தன. பணம் என்னும் ஆயுதத்துடன் பிசாசு போகும் வழியை ஆண்டவர்  எனக்கு ஆவியில் உணர்த்தியதால் அதை பிடிக்க ஓடினேன். எத்தனை மைல் ஓடினேன் என்று எனக்கே தெரியாது. கடைசியில் சோர்வாகி பகல் நேரத்தில் பிளாட்பாரத்தில் பைபிளை தலையின் கீழ்வைத்து படுத்துவிட்டேன். படுத்த சிறிது நேரத்தில் காகம் ஒன்று எச்சில் இலை ஒன்றை தூக்கி கொண்டுவந்து என் தலைக்கு பக்கத்தில் போட்டுவிட்டு சென்றது. அப்பொழுது என் மனதில் "உன்னுடைய உண்மை மனைவி பணம்
என்னும் பிசாசினால் எச்சில் ஆக்கப்பட்டாள். அவள் பணத்தினால் பிடிக்கப்படடாள்" என்று கூறினார். அப்பொழுது எனக்கு அது பற்றி ஒன்றும் புரியவில்லை.
 
இந்த சம்பவங்களுக்கு பிறகு எனது மனநிலையில் கொஞ்சம் கொஞ்சமாக் பாதிப்பு ஏற்பட்டு குழம்ப ஆரம்பித்தது. என்னுள் இருந்து என்னை வழி நடத்திய சக்தியை காணவில்லை. ஆம்! அவர்சொல்லும் ஒவ்வொரு சின்ன வார்த்தைக்கு கீழ்படியாமல் போனாலும் அதன் விளைவு மிக பெரியதாக இருந்தது. ஆண்டவர்  என்னிடம் கையில் இருக்கும் பணத்தை கீழே போட்டுவிடு என்று சொன்னபோதே நான் போட்டிருந்தால் என் நிலைமையே வேராக இருந்திருக்கும் ஆனால் "ஏதாவது அவசிய  தேவை என்றால் பணம் வேண்டுமே" என்று அதை கீழே போட மனதில்லாமல் வைத்திருந்ததால் இரண்டாவது முறையாக அவர் சொல்லுக்கு கீழ்படியாமல் கடவுளின்  பிரசன்னத்தை இழந்தேன்.

"பணம்" இன்று உலகில் எல்லோரையும் ஆட்டி வைக்கும் பேய்" என் பிடியில் இருந்து நழுவி என்னையும் கடந்து போய்விட்டது" இன்று உலகில் பிரதான பிசாசின் ஆயுதமாக அதுவே இருக்கிறது.
 
எல்லாவற்றையும் இழந்து, மூளை குளம்பியவனாக என்ன செய்வதென்று தெரியாமல் மும்பையில் எங்கோ ஒரு இடத்தில் நின்று கொண்டிருத்தேன்.  எனக்கு அத்தனை நாள் சாப்பிடாமல் இருந்ததற்கும் சேர்த்து வயிர்பசி எடுக்க ஆரம்பித்தது. கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை கழற்றி ஒரு கடையில்
கொடுத்து சாப்பிட பணம் வேண்டும் என்று கேட்டேன், அவரோ அது திருட்டு செயின் என்று கருதி வாங்க மறுத்துவிட்டார் கோபமடைத்த நான் பசியை தீர்க்க உதவாத  அந்த செயின எதற்கு என்று  தூரே வீசிவிட்டேன். (இது என்னால் தவறவிடப்பட்ட மூன்றாவது தங்க செயின். சிலுவையுடன்கூடிய தங்கசெயினை நான் அணிந்திருப்பது வழக்கம்)   பசி குழப்பம் மற்றும்  சோர்வில் இருந்த நான் செய்வது என்னவென்று அறியாமல் ஒரு சிறு பையனை போய் பிடித்து விட்டேன். அங்கு பக்கத்தில் நின்ற ஒரு மராட்டி வாலிபன் "அவனை ஏன் பிடித்தாய்? நீ குழந்தை திருடுபவன் தானே" என்று சொல்லி என் கன்னத்தில் வெகு வேகமாக ஒரு அறை கொடுத்தான் அவ்வளவுதான் என் ஒரு காதில் விர் என்று ஒரே சத்தம். (அத்த காது இன்று வரை சரியாக கேட்பது இல்லை).
(ஆண்டவரால் அபிஷேகம் பண்ணப்பட்டு நடத்தப்படும்  எவரும் அவருடைய வார்த்தைகள் எதுவானாலும் அப்படியே கீழ்படியுங்கள் இல்லையேல் "மோசே"க்கு நடந்ததுபோல சிறு தவறுக்கும்  தண்டனை கடுமையாக இருக்கும்)


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்.......


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)இளையவர்

Status: Offline
Posts: 11
Date:
RE: என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள்!
Permalink  
 


அப்புறம் என்ன ஆச்சு? உங்க மனைவியை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? Suspense இல் நிறுத்திட்டீங்க.

ஆரம்பத்தில் தேவ ஆவியால் எப்பொழுதும் நிரப்பப்பட்டும் நடத்தப்பட்டும் இருந்ததாக சொல்லியிருக்கீங்க. இப்பவும் உங்க வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறதா?__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

நீண்ட இடைவெளிக்கு பிறகு சகோதரி  அவர்களின் பதிவை பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!
 
தேவனின் வெளிப்பாடுகளையும் அவரது தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் உண்மை என்று நம்பும் நீங்கள், தவறான இடங்களில் பதிவுகளை கொடுத்து
அநேகரின் எதிப்புக்குள்ளாகிறீர்கள்  என்பதை என்னால் அறியமுடிகிறது.
 
தேவனின் பேச்சு எப்படியிருக்கும் என்பதை ஒருமுறையாவது கேட்டு அனுபவ படாதவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை. எனவே அவர்களை குறைசொல்லி எந்த குற்றமும் இல்லை. ஆகினும் மீண்டும் மீண்டும் அவர்களோடு எதிர்த்து வாதிடாமல் விலகி நமது வார்த்தைகளை  நபுவோர்களுக்கு தேவையானதை எழுதுவதே சிறந்தது என்பது எனது கருத்து. 
 
அதிமேதாவிகள் ஆண்டவரை அனுபவத்தில் அறியமுடியாது. அடைக்கபட்ட கொழுத்இருதயம் உள்ளவர்களிடம் தேவன் எப்பொழுதும் இடைபடுவதில்லை. ஆண்டவரை நோக்கி அழவேண்டும், கண்ணீரால் அவர் பாதத்தை நனைக்கவேண்டும் அப்பொழுது தேவன் நமக்கு வெளிப்படுத்தலாம்.
 
ஆண்டவரை பற்றி சரியாககூட அறியாத அடிமை பெண்ணாகிய  ஆகார்! பிள்ளை சாகிரதை பார்க்கவிரும்பாமல் சத்தமிட்டு அழுதாள்!  ஆண்டவர் அவளது கண்களை திறந்தார்   
 
ஆதியாகமம் 21:16 பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
 
19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு,
போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
 
தேவன் நம்முடைய ஒவ்வொரு அசைவையும், நமது மனதில் உருவாகும் ஒவ்வொரு எண்ணங்களையும் ஆராயந்துகொண்டே இருக்கிறார். நாம் வாஞ்சையோடு  கேட்கும் எந்த ஒரு காரியத்துக்கும் அவரிடமிருந்து நிச்சயம் பதில் கிடைக்கும் என்பதற்கு நான் 100௦௦% உத்திரவாதம் அளிக்க முடியும்!
 
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
சங்கீதம் 91:15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்;
 
ஆனால் இது எதையும் விசுவாசிக்காதவர்களுக்கு ஒன்றும் தெரியவும் செய்யாது,
அவர்களால் தேவனின் வார்த்தைகளை உணரவும் முடியாது. 
 
நாள் எழுதியுள்ள உண்மை சம்பவங்கள் எல்லாமே சுமார் 3 வருடங்களுக்குமுன் எழுதி  முடிக்கப்பட்டதுதான். முதலில் பிளாக்கர் ஒன்றி முழு கட்டுரையாக எழுதி வைத்திருந்த நான், பல கிறிஸ்த்தவர் இஸ்லாமிய சகோதரர்களின் எதிர்ப்பால யாருக்கும் இடறல் வரக்கூடாது என்று பல பகுதியை HIDE  பண்ணிவிட்டேன்.
 
உண்மையை உண்மையாக எழுதினேன். ஆனால் அவர்களோ அது வேதத்துக்கு இசைந்ததாக இல்லை என்று வாதிடுகின்றனர். நடந்ததை மாற்றி எழுதி ஆண்டவருக்கு பெயர் ஏற்ப்படுத்தவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. தேவன் எது செய்தாலும் அது ஏதாவது ஒரு நன்மைக்குதான் இருக்கும்.
 
இப்பொழுதும் இந்த கட்டுரையை தொடர்ந்து வெளியிடும்படி பலர் கேட்டுவிட்டனர். அனால் நான்  ஆரம்ப நாட்களில் எழுதிய அந்த கட்டுரையில் அனேக பிழைகள் மற்றும் முழுமையற்ற நிலையில் இருப்பதால். அதை திருத்தி வெளியிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால் இதுகுறித்து ஜெபித்து விட்டு வெளியிட ஆசிக்கிறேன்.
 
அடுத்து என்னுடய தற்போதைய நிலை என்னவென்பதையும் தாங்கள் விசாரித்திருந்தீர்கள்.
 
ஆண்டவர் அபிஷேடித்த தொடக்க நாட்களில் இருந்த அந்த ஆவியானவரின் வல்லமை என்னிடம் இப்போது இல்லை. அதற்க்கு ஆண்டவரிடம் விசாரித்தபோது "இந்த உலகில் என்ன நடக்கிறது, நீ என்ன செய்யவேண்டும் என்ற எல்லாவற்றையும் உனக்கு தெளிவாக சொல்லிவிட்டேன், இனி நான சொன்னவைகளை செய்யவேண்டிய கடமை உன்னிடம்தான் இருக்கிறது,  என்னுடய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றும்வரை, நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை" என்று வாக்கு கொடுத்து அவர் என்னோடுதான் இருக்கிறார் என்பதை நான் எப்பொழுதும் உணர்கிறேன்.  ஆனால் அந்த பழைய வல்லமையோ கண்கள் திறக்கப்பட்ட நிலையோ இப்பொழுது இல்லை. அப்படி ஒரு மனிதனின்  கண்கள் திறக்கபட்ட நிலையிலேயே  இருந்தால்  அவனால் பிசாசுகள் நிறைந்துள்ள இந்த பூமியில் நார்மலாக வாழவும் முடியாது"
 
உதாரணமாக நான் சாலையில் செல்லும்போது இந்த ஏதாவது ஒரு காரணத்துக்காக அங்கே ஒரு கைகாட்டியோ  அல்லது அம்புகுறியோ வைத்திருப்பார்கள். நமது கண்ணும் இருதயமும் திறந்திருந்தால் அந்த அம்புகுறி அங்கு வைக்கபட்டிருக்கும் ஆவிக்குரியகாரணம் என்னவென்பது நமக்கு தெரியும். அதாவது அந்த அம்புகுறி காட்டும் வழியில் நாம் போனால் அங்கு ஏதாவது பிசாசின் வல்லமை கிரியை செய்யும் இடத்தையும் அதை எவ்வாறு ஜெபித்து அடக்கவேண்டும் என்று தேவன் தெரிவிப்பார். ஆனால் வேலை முடிந்து செல்லும் நமக்கோ வீட்டுக்கு போகும் வழி எதிர் புறத்தில் செல்லும் சாலையாக இருக்கும். அங்கே போவதா  இங்கே போவதா என்ற குழப்பத்தால் நம்மால் எதையும் உருப்படியாக செய்முடியாது. அதெல்லாம் நான் மும்பையில்  தனியாக இருந்தது போல்,  எங்கேபோனாலும்  எந்தனைமணிக்கு வந்தாலும் நம்மை கவனிக்க யாரும்  இருக்ககூடாது, அப்பொழுதே அது சாத்தியமாகும். ஆனால் குடும்பம் பிள்ளைகள் என்று ஆகிவிட்ட இன்று சிறிது லேட்டாகிவிட்டாலே சிறியதில் இருந்து பெரியது வரை கேள்விகேட்பதால்,அவ்வாறு தேவன் காட்டிய வழியில்எல்லாம் ஓடுவதற்கு சாத்தியங்கள் குறைவு. மேலும் தேவனும் அதில் பிரியப்படவில்லை. அதிகமாவல்லமை அது இது என்று எதுவும் கேட்காமல், எனக்கு கொடுத்திருக்கும் அவரது
பணியை சரியாக அவரது சித்தபடி  செய்யும்படிக்கே அடிக்கடி கண்டித்து உணர்த்துகிறார். எனவே அந்த கண்கள் திறக்கப்பட்ட நிலயை நானும்  அதிகம் விரும்பவில்லை.
 
நான் எத்தனை முறையோ என்னுடைய மனைவியிடம் இந்த காரியங்களை குறித்து பேசியிருக்கிறேன் ஆனால் எதையுமே நம்பாத அவள், ஒருநாள் முழு இரவு ஜெபத்துக்கு சென்று அழுது மன்றாடி ஜெபித்து "உம்மை நான் பார்க்க வேண்டும் உம்முடையவார்த்தைகளை நான் கேட்க வேண்டும்" என்று பிடிவாதமாக இரவுமுழுவதும் ஜெபித்துவிட்டு வந்திருக்கிறாள். மறுநாள் ஆண்டவர் அவளோடு பேசி "நான் உன்னுடய கண்களை திறக்கிறேன், அனால் இது குறித்து நீ யாரிடமும் பேசக்கூடாது. உன் கணவனிட,ம கூட இது குறித்து சொல்லாதே" என்று சொல்லி ஒரே ஒருநாள் முழுவதும்  அவளது ஆவிக்குரிய கண்களை திறந்திருக்கிறார்.
 
எனக்கு தெரிந்தமாதிரியே ஒவ்வொரு மனுஷனுக்குள் இருந்து கிரியை செய்யும் அசுத்த ஆவிகள் இந்து சாமியின் ஆவிகள் எல்லாம் அப்படியே அவளது கண்ணுக்கு தெரிந்ததால், மிகவும் பயந்து ஆச்சர்யமாகிபோன அவள், ஆண்டவரின் எச்சரிப்பை மீறி அன்று இரவே என்னிடம் சொல்லிவிட, உடனேயே அந்த ஆவிக்குரிய  கண்கள் அடைபட்டு போனது.  ஆனால் நான் சொல்வது எல்லாம் உண்மை என்பதை அவளால் அப்பொழுதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.
 
உண்மையை உண்மையாக அப்படியேதான் எழுத முடியும். திறந்த இதயம் உள்ளவர்கள் உடனே நம்புவார்கள் "இது இப்படித்தான்" என்று தீர்மானித்து விட்டவர்கள் எதையும் நம்பமாட்டார்கள். வசன ஆதாரம் கொடுத்தாலும் அவர்கள் ஏற்க்கபோவது இல்லை! 


-- Edited by SUNDAR on Friday 22nd of July 2011 02:51:16 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)இளையவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

SUNDAR wrote:
 "இது இப்படித்தான்" என்று தீர்மானித்து விட்டவர்கள் எதையும் நம்பமாட்டார்கள். வசன ஆதாரம் கொடுத்தாலும் அவர்கள் ஏற்க்கபோவது இல்லை! 

 
 
உண்மைதான்.

நான் அபிஷேகம் பெற்ற போது, தேவ பிரசன்னம் எப்போதும் என்னுடனிருப்பதையும், ஏதாவது விஷயத்தில் கீழ்படியாமல் போனால் உடனே தேவ பிரசன்னம் விலகுவதையும் என்னால் நன்கு உணர முடியும். அந்த ஆதி நிலை , ஆதி அன்பு அப்புறம் குறைந்து விட்டது.

இப்பதான் உங்க தளத்திலுள்ள இது போன்ற பதிவுகள் என் கண்ணில் பட்ட்து.

வாசித்தபின் திரும்ப முன்புபோல் எப்போதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பி, தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்கும் ஆவிக்குரிய நிலை அடைய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு அதிகம் உண்டாகி விட்டது!

உங்களுக்கு ஆண்டவ்ர் வெளிப்படுத்திய காரியங்களை, ஆவிக்குரிய அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Golda wrote:

நான் அபிஷேகம் பெற்ற போது, தேவ பிரசன்னம் எப்போதும் என்னுடனிருப்பதையும், 


ஒருவர் பெற்ற அபிஷேகம்  அவருக்குள்தான் தங்கியிருக்கும்.

ஆனால் முதல் முறை உணர்ந்ததுபோல் நம்மால் ஒவ்வொரு முறையும் உணரமுடிவது இல்லை என்பதே என் கருத்து.     

I யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது
 
இறைவன் தன்னுடயஅபிஷேகத்தை நம்மைவிட்டு நீக்கினால் மட்டுமே ஆவியானவர் இல்லாத ஒருநிலை எப்படி இருக்கும் என்பதை அறியமுடியும் என்றே நான் கருதுகிறேன்.
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

(சில அருமை சகோதர சகோதரிகளின்  கேட்டுகொண்டதன் பேரில் இந்த உண்மை சம்பவங்களை தொடர்ந்து எழுதுகிறேன். நம்புகிறவர்கள் நம்பலாம். நம்பாதவர்கள் ஒரு காமெடி என்று எண்ணிக்கொண்டு விலகிபோகலாம்)    
 
எனது முந்தய பதிவின் கடைசி பகுதி!
////பசி குழப்பம் மற்றும்  சோர்வில் இருந்த நான் செய்வது என்னவென்று அறியாமல் அங்கு பூங்காவில் நின்ற ஒரு சிறு பையனை போய் பிடித்துவிட்டேன். அங்கு பக்கத்தில் நின்ற ஒரு மராட்டி வாலிபன் "அவனை ஏன் பிடித்தாய்? நீ குழந்தை திருடுபவன் தானே" என்று சொல்லி என் கன்னத்தில் வெகு வேகமாக ஒரு அறை கொடுத்தான் அவ்வளவுதான் என் ஒரு காதில் விர் என்று ஒரே சத்தம். (அத்த ஒரு காது இன்று வரை சரியாக கேட்பது இல்லை)////
 
இரவெல்லாம் எங்கு படுத்தேன் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. என் சுயபுத்தியை கிட்டதட்ட இழந்துவிட்டேன். கையில் காசுஎதுவும் இல்லாததால் காலை 4 மணியளவில் டிக்கட் இல்லாமல் ரயிலேறி, நானே செம்பூர் வந்து சேர்ந்தேனா அல்லது ஆண்டவர்  என்னை சேர்த்துவிட்டாரா என்பது எதுவுமே எனக்கு தெரியவில்லை, என் வீட்டில் நண்பர்களிம் வந்து சேர்ந்தபோது, நான் பாதி சுயநினைவற்ற ஒருவித குழந்தை  நிலையில் இருந்தேன். 
 
ஆண்டவர் என்னை நடத்தியவிதம் பற்றி அடிக்கடி எல்லோரிடமும்  உளறியதால், எதையுமே நம்பாதே என் நண்பர்கள் எனக்கு "எதோ"ஆகிவிட்டது என்று நினைத்து,  ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றார். ஆனால் அந்த டாக்டர்  ஒரு  பிசாசின் கைஆள் என்றும், என்னிடம் சேகரிக்கும் தகவலை எல்லாம் GULF கண்ட்ரியில் இருக்கும் சாத்தான் உலகத்துக்கு  அனுப்பிவிடுவான்  என்றும்,  என் மனதுள் சொல்லப்பட்டதால், அவர் முகத்தை ஊடுருவிபார்க்கும்போது  அவருக்குள் சாத்தான் ஒளிந்திருப்பத்தையும் என்னால் பார்க்கமுடிந்தது (நாம் நினைப்பதுபோல் சாத்தான் ஒரு வௌவால் போன்றோ அல்லது  ஒனிடா TV  கொம்புகளோடோ இல்லாமல் மிகவும் டீசண்டாக, மனதை   கவரும் அழகோடு இருக்கிறான்)  
 
அவர் சாத்தானின் ஆள் என்று அறிந்ததும் நான் அவருக்கு கொஞ்சமும் ஒத்துழைக்கவில்லை. அவருக்கும் சாத்தானின் தலைமையகத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதையும் நான் பேசும் எந்த ஒரு வார்த்தையும் உடனே சாத்தானின் தலைமையகத்துக்கு  தெரியும் நிலையும் இருப்பதை என்னான் அங்கு உணர முடிந்தது. (மொபைல், வெப் கேமரா,  வீடியோ கான்பிரன்ஸ், வீடியோ கவரேஜ்
எல்லாமே மனுஷன் அறியும்முன்னமே  சாத்தானிடம் இருக்கிறது)      
 
அந்த டாக்டர்  என் கண்ணில் டார்ச்அடித்து  பார்த்துவிட்டு  "வாயை திறந்து காட்டு" என்று சொன்னார். என்னுள் ஒரு சத்தம் "வாயை திறக்காதே" என்று கட்டளையிட , நான் வாயை திறக்கவில்லை. உடனே  கோபமான  அவர்  என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்.      

பிறகு என்னை ஒரு இஸ்லாமிய மந்திரிப்பவரிடம் "சீதாகேம்ப்" என்ற இடத்துக்கு அழைத்து சென்றார்கள். அது இஸ்லாம் சகோதரர்கள்  அதிகம் வசிக்கும் ஏரியா எனவே அங்கும் போகும்போது வரிசியாக அனேக மாட்டுஇறைச்சி கடைகள் இருந்தன. அன்று ஞாயிற்றுகிழமை ஆகையால் எல்லா கடைகளிலும் வியாபாரம் படுஜோராக நடந்துகொண்டு இருந்தது. அநேகர் மாட்டு இறைச்சியை  கட்டையில் வைத்து அரிவாளால் கொத்துகொத்து என்று கொத்தி வெட்டிக்கொண்டு இருந்ததன. அங்கு என் கண்களை திறந்த ஆண்டவர் "பார் அந்த சாத்தான்கள்  தேவன்மேலுள்ள தன் கோபத்தை எல்லாம்  தேவனால் படைக்கபட்ட அந்த உயிரியின்  மாம்சத்தின் மீது காட்டி அதை வெட்டி  கூறுபோட்டு ஆற்றிக் கொள்கின்றன" என்று சொன்னார். (என் கண்கள் திறந்தால்  எல்லோருமே  பிசாசாகவே தெரிந்ததனர் எனவே நான் இங்கு இஸ்லாம் சகோதரர்களை மட்டும் தனியே குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்) 
 
அங்கு ஒரு இஸ்லாம் தாயார் என்னை மிக அன்போடு கவனித்து ஏதோ மந்திரித்தும் ஏதேதோ செய்தும்  எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை! ஆனால் அங்கு முதல் மாடியில் நான் தங்கியிருந்த போது ஒரு ஒரு அதிசய காட்சியை பார்த்தேன்:
 
அதாவது இந்த உலகமானது ஒரே உலகமாக இல்லாமல்  மூன்று தனிதனி உலகங்களாக பிரிக்கப்பட்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. 
 
1. ஆதாம் காலத்தில் இருந்து ஜலப்பிரளயம் வரை உள்ள காலத்தில் 
இருந்த  உலகம் 
2. நோவாவின் காலத்தில் இருந்து இயேசுவின் உயிர்தெழுதல் வரை 
உள்ள  உலகம். 
3. ஆவியானவரின் பொழிதலுக்கு பிறகு இன்றுவரை உள்ள உலகம். 
 
இந்த மூன்று உலகமும் தனிதனி உருண்டைகளாக இருப்பதையும் கீழே முதல் உலகத்தில்  இருக்கும் மனுஷர்கள்  மேலேயுள்ள உலகத்துக்கு போக முயர்ச்சித்து கொண்டு இருப்பதையும் ஆவிக்குரிய கண்களால்  என்னால் பார்க்க முடிந்தது!  
   
அங்கிருந்து புறப்பட்டு நாங்கள்  ஆட்டோவில் திரும்பி வரும் போது, மிக பயங்கரமான ஒரு காட்சியை கண்டேன் (இது உண்மை!  நம்பினால்  நம்புங்கள் நம்பாவிட்டால் எனக்கொன்றும் இல்லை)
 
என்னை அழைத்து வந்த இரண்டு நண்பர்கள் ஒருவன் கொஞ்சம் கருப்பு இன்னொருவர் நல்ல சிகப்பு. இரண்டுபேரும்சேர்ந்து என்னை ஆட்டோவின் நடுவில் உட்காரவைத்து, நான் ஆட்டோவில் இருந்து குதித்துவிடக்கூடாது என்று எண்ணி  என்னை இருக்க பிடித்துகொண்டு வைத்திருந்தனர். அப்பொழுது திடீர் என்று எனது ஆவிக்குரிய  கண்கள் திறக்கபட்டு, ஒரு பக்கத்தில் இருந்த கருப்பு நண்பர் "பரம சிவனாகவும்" இன்னொருவர் "விழுந்து போன தூதனாகவும்" என் கண்ணுக்கு தெரிந்தனர். இருவரும் கூட்டு சேர்ந்து என்னை கட்டாயப்படுத்தி பாதாளம் என்ற ஒரு முடிவில்லா குழிக்குள் எப்படியாவது  தள்ளவிட முயர்ச்சிப்பதை அப்படியே பார்த்தேன். உடனே "ஐயோ என்னை விடுங்கள்" என்று சத்தம்போட்டு கத்திவிடேன் உடனே  ஆட்டோகாரன் நின்றுவிட்டார். அது "செம்பூர் டையமண்ட கார்டன்" என்ற இடம். அங்கு நாங்கள்  இரங்கி விட்டோம். பின்பு என் நண்பர்களை பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது. 
 
(இந்த காரியம் குறித்தும், மூன்று உலகங்கள் குறித்தும் ஆண்டவர் பல ரகசியங் களை எனக்கு பிறகு தெரியப்படுத்தினார் அதற்க்கு வசன ஆதாரமும் இருக்கிறது ஆனால் அதை எழுதினால் யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் அதை  எழுத விரும்பவில்லை)
 
எனது நண்பர்கள் என்னுடய நிலை சரியாகவில்லை என்பதை அறிந்து எனது சொந்த ஊருக்கு கடிதம் போட்டிருந்ததால், எனது கிறிஸ்த்தவ தம்பி என்னைதேடி மும்பை வந்துவிட்டான். அவன் என்னை கட்டாயபடுத்தி தூத்துக்குடிக்கு அழைத்து போனான்! ரயிலில் வரும் போது ஓரளவு சரியாகி, தூத்துக்குடி வந்ததும் எல்லாமே சரியாகி நல்ல நார்மல் நிலைக்கு வந்துவிட்டேன். வீட்டில் யாரும் என்னிடம எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாததால்  அடுத்து சில நாட்களிலேயே  மீண்டும் மும்பைக்கு அனுப்பிவிட்டனர்.  
 
 
(இடையில் நடந்து முடிந்த  சில தேவையில்லா காரியங்களை தவிர்த்து கர்த்தருக்கு சித்தமானால் மீண்டும் தொடர்கிறேன்.)   


-- Edited by SUNDAR on Wednesday 27th of July 2011 10:37:40 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard