ஒரு மனிதன் நித்திய ஜீவனை அடைவது கிருபையினாலா அல்லது கிரியைகளினாலா, அது சுலபமா அல்லது கடினமா, அது ஒரு சிலருக்கா அல்லது எல்லோருக்குமா என்று பார்ப்போம்.
I. ஒரு மனிதன் நித்திய ஜீவனை அடைவது கிருபையினாலா அல்லது கிரியைகளினாலா :
ஒரு மனிதன் நித்திய ஜீவனை அடைவது என்பது அவன் இறக்கும் நேரத்தில் அவனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு அல்லது இயேசுவின் வருகையின் போது அவனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு இதை பொறுத்தே அமைகிறது. (மத்தேயு 24.13, பிலிப் 1.5 இன்னும் பல)
இரட்சிப்பு (கிருபை) - தேவ ஐக்கியம் (தொடர்ந்து முன்னேறுதல்) - தேவ ஆலோசனையின்படி கிரியை செய்தல் அல்லது கிரியை செய்யாமலிருத்தல் (தொடர்ந்து முன்னேறுதல்) - அவரவர்க்குரிய தேவ திட்டப்படி பூரணம் அடைதல் (பெற்ற இரட்சிப்பை காத்து கொள்ளுதல்) - இறப்பு - நித்திய ஜீவன்
முதலில் இரட்சிக்கபட்ட பிறகு மீட்க்கப்படும் நாளுக்கென முத்திரையாய் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கபடுகிறார். இதன் பிறகு இரண்டு காரியங்கள் தேவைப்படுகிறது.
ஒன்று - கடவுளோடு எப்போதும் தொடர்பு கொண்டிருத்தல் இரண்டு - கடவுள் ஏவுகிறபடி கிரியை செய்தல்.
1. இரட்சிக்கபட்ட பிறகு ஒருவன் கடவுளோடு தொடர்பு கொள்வதை விட்டு விட்டு என்னதான் நல்ல காரியங்கள் செய்தாலும் அவன் கடவுளோடு தொடர்பு கொள்ளததால் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்தை இழந்து விடுவதால் நித்திய ஜீவனை அடைய முடியாது. (சபைக்கு தொடர்ந்து போவது, ஜெபிப்பது, வேதம் வாசிப்பது முதலியவை இதனாலேயே அவசியம்) நியாய தீர்ப்பு நாளில் அவன் செய்த நல்ல செயலுக்கு பலன் அவனுக்கு சரிகட்டப்படும் அல்லது வாழும் போதே அதற்குண்டான பலனை அவன் அடைவான்.
2. இந்த பரிசுத்த ஆவியானவர் மனிதர்களை கிரியைகளை நோக்கி வழினடத்துகிறார். கிரியைகள் இரண்டு வகைப்படும்.
1. செய்யக் கூடாதவைகளை செய்யாதிருத்தல் 2. செய்ய வேண்டியவற்றை செய்தல்
கிரியைகள் அனேகமாக இருக்கிறபடியால், எல்லா கிரியைகளையும் எல்லாராலும் செய்ய முடியாது. அவரவர் வாழ்க்கையை பொறுத்து கிரியைகள் வேறுபடும். உதாரணமாக ஒரு டீக்கடை வைத்திருப்பவர் லஞ்சம் வாங்ககூடாது என்பதை கடைபிடிக்க எவ்வளவுதான் முயன்றாலும் யாரும் அவருக்கு லஞ்சம் கொடுகக போவதில்லை. எந்த கிரியையை, எப்போது, யாருக்கு, எங்கே, எவ்வாறு செய்ய வேண்டும் அல்லது செய்ய கூடாது என்பதை தேவ ஆலோசனையின்படி முடிவெடுத்து செய்ய வேண்டும். நாம் செய்ய வேண்டியது தேவ வசனத்தில் உள்ள கிரியைகளை பற்றிய தியானத்தோடு காத்திருத்தல், மற்றும் தேவ ஆலோசனையின்படி அவைகளை நிறைவேற்றுதலே.
தேவ ஆலோசனையின்படி கிரியைகளை நிறைவேற்றாமல் போனால் அதற்குரிய தண்டனையை பல மடங்கு அதிகமாய் பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் தொடர்ந்து செல்ல வேண்டும்.
அனேக பேரை கவிழ்க்க சாத்தான் வலை விரித்து காத்திருப்பது இந்த பகுதியிலேயே. விதவைக்கு உதவி செய்யப் போய் "வைத்துக்" கொண்டவர்களும், சிகப்பு விளக்கு பகுதியில் சுவிஷேசம் அறிவிக்கப் போய், அவர்களோடு செட்டில் ஆனவர்களும் உண்டு. எனக்கு தெரிந்த பெரிய பதவியில் இருந்த ஒருவர் லெவல் கிராசிங்கில் சைக்கிள் மாட்டிக் கொண்ட ஒருவனுக்கு உதவப் போய் ரயிலில் அடிபட்டு செத்தார்.
என் சொந்த அனுபவம் :
ஒரு வேலையாய் பெங்களூர் சென்ற நான், அங்கு தெருவோரத்தில் ஒரு பெண் (ஆண்?) மிகுந்த கோரமாய் கதறிக் கொண்டிருந்ததை பார்த்தேன். யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை. அவரின் அழுகை மனதை பிழியும்படி இருந்ததால், கடவுளே அவருக்கு உதவி செய்யும் என் கேட்டேன். நான் ஏதாவது செய்ய முடியுமா என அவரிடம் யார் மூலமாவது (மொழி தெரியாதலால்) பேசலாம் என நினைத்தேன். ஆனால் "நீ உன் வேலையை பார்த்துக் கொண்டு போ இதில் தலையிடாதே" என கர்த்தர் சொல்லவே நான் "எனக்கே நல்ல மனது வருவது கடினம் இதிலே கடவுள் வேறு இது போல் சொல்கிறாரே" என போய் விட்டேன்.
மறுனாள் அந்த பக்கமாய் செல்லும் போது அவர் னல்ல நிலைமையில் அங்கு சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்தேன். பிறகு பஸ் நிலையம் வழியாக சென்ற போது ஒரு சிறுவன் அழுது கொண்டிருப்பதை பார்த்தேன். யாருமே அவனை கண்டு கொள்ளவில்லை. நான் அருகில் சென்று விசாரித்த போது அவன் பெற்ரோரை தவற விட்டான் என் அறிந்து அவனை காவல் நிலையத்தில் அவன் பெற்றோரிடம் சேர்த்தேன்.
ஒரு விஷயத்தில் தலையிடாதே என சொன்ன தேவன், உதவி செய்ய வேண்டும் என்ற என் நல்ல மனதிற்காக அந்த சிறுவனுக்கு உதவி செய்யும் வாய்ப்பை கொடுத்தார். உதவி செய்யும் எண்ணத்தோடு இருந்தால் தேவன் நமக்கு நிறைய வாய்ப்பை காட்டுவார். னாமும் அவர் சொற்படியே செய்ய வேண்டும்.
1.இராஜாக்கள் 13 ன் சுருக்கம்
ஒரு தீர்க்கதரிசியாய், தேவ வார்த்தையை, தேவ உணர்வை வெளிப்படுத்த வேண்டியவன், தேவ உணர்வுக்கு (கோபம்) மாறாக இரக்கம் என்ற தன் சொந்த உணர்வை வெளிப்படுத்தி ராஜாவின் மேலிருந்த கோபத்தை தன் மேலே வரவழைத்துக் கொண்டான். இன்னொரு தீர்க்கதரிசியால் தேவ கோபம் அவன் மேல் நிறைவேறியது.
மத்தேயு 19 (21,22)
அனேக செல்வம் வைத்திருப்பதனால், இயேசுவால் மற்றவர்க்கு கொடு என சொல்லப்பட்டவன் அதை செய்ய விரும்பாததனால் தேவ ஐக்கியத்தை இழந்து போனான்
சந்தோஷ் எழுதியது ///I. ஒரு மனிதன் நித்திய ஜீவனை அடைவது கிருபையினாலா அல்லது கிரியைகளினாலா :////
சுருக்கமாக சொன்னால்
லாசரு பிச்சைகாரன் அவனால் நற்கிரியை செய்ய முடியாது அவனே மற்றவர்கள் கையை எதிர்பார்ப்பவன் அவன் எதினாலே கிரியைனாலையே ஆப்ரகாம் மடிலே படுத்து உறங்கினான்
இயேசு சிலுவையில் அடிக்கும் போது ஒரு கள்ளன் அவர் பக்கத்தில் இருந்தான் நற்கிரியை செய்தானோ என்று தெரிய வில்லை ஆனால் கள்ளன் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது அவன் எதினால் பரதீசியில் யேசுவோடு இருந்தான்
தொடரும் ......................................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
லாசரு பிச்சைகாரன் அவனால் நற்கிரியை செய்ய முடியாது அவனே மற்றவர்கள் கையை எதிர்பார்ப்பவன் அவன் எதினாலே கிரியைனாலையே ஆப்ரகாம் மடிலே படுத்து உறங்கினான்
இயேசு சிலுவையில் அடிக்கும் போது ஒரு கள்ளன் அவர் பக்கத்தில் இருந்தான் நற்கிரியை செய்தானோ என்று தெரிய வில்லை ஆனால் கள்ளன் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது அவன் எதினால் பரதீசியில் யேசுவோடு இருந்தான்...............\\
கர்த்தருடைய கிருபை வானத்துக்கும் பூமிக்கும் எவளவு தூரமோ அவ்வளவு தூரம் இருக்கிறது.என்பது உண்மை ஆனால் அதற்காக தேவனுடைய கிருபை தானே என்று நாம் இஷ்டம் போல் வாழ்ந்தால் கடைசி நேரத்தில் தேவன் கிருபையாய் நம்மை நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க பண்ணுவார். என்று எண்ணினால் நாம் தான் ஏமாந்து போக வேண்டும்.
நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்கையில் தேவனுடைய கட்டளைகளை கை கொண்டு நடக்கும்படி கர்த்தர் சொல்லி இருக்கிறாரே எப்படியும் நாம் என்னதான் கைகொண்டு நடந்தாலும் நம்முடைய கிரியைகளினால் நாம் நித்திய ஜீவனின் பெற முடியாது என்று எண்ணி எதற்காக பரிசுத்தமாய் வாழவேண்டும் எதற்காக நீதியை நடபிக்க வேண்டும் என்று என்ன தோணும் அல்லவா.....!
தேவனுடைய கிருபை என்பது நம்மால் முடியாத நேரங்களின் நமக்கு பெலனாய் இருப்பது.
என் கிருபை உனக்கு போதும் உன் பலவீனத்தில் என் பெலன் பரிபூரணமாய் விளங்கும் என்று கர்த்தர் சொல்லி இருகிறாரே ....!
தேவனுடைய கிருபைதான் நம்மை நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க செய்ய முடியும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று அதற்காக நாம் செய்ய வேண்டியவைகளை கட்டாயம் செய்தாக வேண்டும்.
தொடரும்.......
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
//// கிருபையும், கிரியையும் :ஒரு மனிதன் நித்திய ஜீவனை அடைவது கிருபையினாலா அல்லது கிரியைகளினாலா, அது சுலபமா அல்லது கடினமா, அது ஒரு சிலருக்கா அல்லது எல்லோருக்குமா என்று பார்ப்போம்////////////
"கிருபை" "கிரியை" இரண்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு மற்றும் இரண்டில் எது முக்கியம் என்பதை ஆராய வேண்டுமானால், நாம் இயேசு குறிப்பிட்ட கீழ்க்கண்ட சம்பவத்தை ஆதாரமாக எடுத்துகொண்டு ஆராயலாம் என்றுகருதுகிறேன்.
லூக்கா 18
10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். 11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
பாருங்கள் இங்கு இந்த பரிசேயன் மிகவும் நல்லவன்! தேவனின் வார்த்தைகளுக்கு பயந்து திருட்டு அநியாயம் விபச்சாரம் எதுவுமே செய்யவில்லை மேலும் உபவாசம் செய்தல் தசமபாகம் கொடுத்தல் போன்ற நற்கிரியைகளும் அவனிடத்தில் இருந்தது. அவனின் இந்த நற்க்கிரியைகளை எல்லாம் சுட்டிகாட்டி தேவனிடம் தான் ஒரு நல்லவன் ஏற்று நிலைநிறுத்த விரும்புகிறான்.
ஆனால் இந்த ஆயக்காரனோ தேவன் முன் தன்னை பாவியாகவும் அவர் பரிசுத்தத்திற்கு முன்னால் நிற்க தான் தகுதியற்றவனாகவும் தன்னை அறிகிறான்
13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
இவன் ஆண்டவரின் கிருபைக்காக மார்பில் அடித்து மன்றாடுகிறான்.
14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்;
இருவரின் கிருபைக்காக மன்றாடியவனே தேவனின் இரக்கத்தை பெற்று வீடு திரும்பினான் என்று வேதம் தெளிவாக சொல்கிறது.
இன்று நற்கிரியைகள் செய்பவர்களை சுலபமாக கெடுக்கும் காரியம் இந்த "சுய நீதியை" சார்ந்து நிற்பதே. நற்க்கிரியைகளும் இரக்க சிந்தனைகளும் நிச்சயம் தேவனிடம் நல்மதிப்பை பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆகினும் தேவனின் கிருபைக்கு முன் ஒப்பிட்டு பார்க்கும்போது மனிதனின் கிரியை என்பது வலுவிழந்த ஒன்றே! எந்த நற்க்கிரியையும் நம்மை தேவனிடம் சேருவதற்கு தகுதியுள்ளவர்களாக்க முடியாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். 11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான் ///////////.........
இந்த வசனத்தின் முலம் நற்கிரியை செய்தால் தேவன் நித்தியஜீவனை அளிப்பார் என்று வசனம் சொல்கிறது என்று வாதிடலாம் அதற்கு இணையாக அனேக வசனங்களை வேதத்தில் இருந்து சுட்டி காட்டி மற்றவர்கள் எழுதி இருக்கலாம்
விவாதமும் கேள்விகளும் பல எழுந்து இருக்கலாம்
ஆனால் மிக தெளிவாய் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைககை வைத்து அழகாய் சொன்னீர்கள்
சுந்தர் மிக மிக அருமையான வேத வசனத்தோடு கிருபையை பற்றி சொன்னீர்கள்
இந்த தளத்தில் தினமும் ஒன்றை நான் புதிதாக கற்று கொள்கிறேன்
நன்றி ................................................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)