இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
Permalink  
 


பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்

தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் . பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்ளை விட்டு ஓடிப்போவான் (யாக் 4:7)

பிசாசு என்றால் என்ன? ஏன் நாம் அதற்கு எதிர்த்து நிற்கவேண்டும்.?

இக்கேள்ளிகள் இரண்டிற்கும் சரியான விடைநாம் கண்டுபிடித்தால் மட்டும்தான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக நாம் வாழமுடியும்.பிசாசு என்பதன் மறுபெயர் குற்றம் சாட்டுபவன்,அல்லது பழிசுமத்த பவன் என்பதாகும். விழுந்துபோன தூதனாகிய பிசாசின் பிரதான வேலை மனிதனுக்கும் கர்த்தருக்கும் பிரதான எதிரியாக இருப்பதேயாகும். பிசாசு என்பது அவனது பொதுவான பெயராகும்.அவன்கெட்ட ஆவியாகவே இருக்கிறான்.அவன் குற்றம் சுமத்து பவனாகவோ அல்லது ஏமாற்றுபவனாகவோ இருக்கிறான். “கெட்ட ஆவி (டெவில்)என்றசொல் கிரேக்கசொல்லில் இருந்து வந்த்தாகும். இதன் அர்த்தம் “ஒருபொய்ச்சாட்சி “ அல்லது “தொல்லை தரும் குற்றம் சாட்டுபவர்“ என்பதாகும்.

சாத்தான் பலபெயர்களால் அழைக்கப்படுகிறான். அவையாவன.

1.பழைய பாம்பு:- (வெளி. 12:9, 20 : 2) பிசாசு பாம்பிற்கூடாக ஏவளைச்சோதித்த்து.(ஆதி. 3: 1-6)

2.கெட்டவன் அல்லது தீமையானவன் :- (மத. 6: 13, 13: 19, 38: 1,யோவான. 2: 13)இந்தசொற்றொடர் பிசாசின் அடிப்படைக் குணத்தைவெளிப்படுத்துகிறது. அவன் கர்த்தரையும் அவர்செய்ய விபும்புவதையும்நேரடியாக எதிர்க்கின்றான். அவனே சகலவிதமான ஒழுக்கக் கேடான செயற்பாடு களுக்கும், அசுத்தச்செயல்களுக்கும் காரணரானவன். அதனாலேயே அசுத்தமான வனிடமிருந்து எங்களைக் காப்பாற்றும் என்று வேதம்கூறுகிறது. பிசாசிடமிருந்து விடுதலை மனிதகுலத்திறகு மிக அவசியமாகவுள்ளது.”கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமென்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.”( 1பேதுரு 5:8 )

3.பகைவன் :- ( மத். 13:25, 28, 39) பிசாசானவன் எங்களின் பயங்கர பகைவனாகும்.இந்த எதிரியின்மீது அன்புவைக்கவேண்டாமென்று இயேசுகூறுகின்றார். அவன் இயேசுவிற்கு, சபைக்கு, அத்துடன் சுவிஷேசத்திற்கு எதிரானவன், அத்துடன் நல்லவிடயங்களைவேரோடு பிடுங்கிகெட்ட விதையை விதைப்பதற்கு ஓய்வின்றி முயற்சிசெய்துகொண்டேயிருக்கின்றான்.

4.கொலைகாரன்:- ( யோவான். 8:44 “அவன்ஆரம்பம்முதல்கொரலை பாதகனாவே காரனாகவே யிருக்கிறான்” என்றகடினமான வார்த்தைகள்இயேசுவின் வாயிலிருந்து வருகின்றன. பிசாசு ஆபேலையும் தீர்க்கதரிசிகளையும் கொலை செய்தவன்.அத்தடன் இயேசுவையும்அவரதுநேரத்திற்கு முன்கொலைசெய்ய விரும்பியவன்( யோவான் 8:40 )

5.ஏமாற்றுக்காரன் :- (வெளி. 20:10) ஏவாள்தொடங்கி சகல மனித வர்க்கத்தினரையும் பிசாசு ஏமாற்றிக்கொண்டேயிருக்கின்றான்பொல்லாத மனிதர்கள் மோசம் போக்கிற வர்களால் மேலும் மோசமாகிக் கொண்டே போகிறார்கள்.(2.தமேத் 313),

6.பிசாசுகளின் தலைவன்:-( மத் 934, 12: 24)மூன்ற முறை பிசாசை “உலகத்தின் அதிபதி” என்று கூறியுள்ளார்.” என்னை வணங்கினால் இந்த உலகத்தைத் தருவேன் என்று பிசாசு இயேசிவிடம் கூறினான்.(லூக்கா 4: 5-7) ஆனால் இயேசு அந்த வார்த்தைளை நிராகரித்து “ அப்பலேபோ சாத்தனே “ என்ற கூறினார்.(4:8) கல்வாரியில் இந்த உலகத்தின் அதிபதியின் மரண அடியை இயேசு சந்தித்தார்.இது காலத்தின்தேவையாக விருந்தது ஆனால் உலகத்தின் முடிவிற்குமுன் கர்த்தர் இறுதியாகவெற்றியடைவார்.(1யோவான். 3: 8.மத் 25 :41,வெளி 12: 7)

பிசாசு வல்லமையானவன், ஆனால் கிறிஸ்தவர்கள் கர்த்தருக்குள்ளாக அதிக வல்லமையானவர்கள்.( எபேசிய6: 11, ) அவனுடைய அடிகளை தடுப்பதற்கு கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்புத்தேவை.பிசாசுசோதிக்கிறான், ஆனால் கர்த்தர் தப்பிப் போகிதற்கு வழியையும் உண்டாக்குவார். (1கொரி. 10 :13), ஜனங்ளைத் மோசம் போக்கு வதற்கு பிசாசு வகைதேடித் திரிகின்றான்.(2கொரி. 2 : 11) ஆனால் எதிர்த்து நின்றால் பிசாசு ஓடிப்போவான். (யாக. 4 :7) பிசாசு பயப்படமாட்டான், இந்த ஏமாற்றும் அசுத்னைவிட இயேசு அதிக வல்லமைகொண்டவர்.( 1யோவா. 4 : 4)

7.சாத்தான் :-கடவுளுடையதும், மனிதகுலத்தினதும் பெரிய சத்துரு, அல்லது துஷ்டன் என்பது பிசாசினுடைய சொந்தப்பெயராகும்.

சாத்தான்எனபது எபிரேயமொழியில் மனிதனின் எதிரி என்று சிலசமயங்களில் பொருள்படும். ​( 1சாமு 29 :4, சங்கீதம். 109: 6)

கர்த்தருடைய தூதன் பாலமுக்கு எதிர்து நின்றபோது இவ்வாறு அழைக்கப்பட்டார்.( எண். 22 : 22). சாத்தான் என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்ட இடமெல்லாம் கர்த்தருக்கும், மக்களுக்கும்,பெரிய சத்துரு என்று பெயர்பெறும்.(1 நாளாக.21 :1,யோபு 1-2) இந்த வார்த்தை இடையிடையே புதிய ஏற்பாட்டிலும் வருகிறது.

புதிய ஏற்பாட்டில் சாத்தானுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் பட்ட மற்றமொருபெயர் “ பிசாசு” வாகும், இதனுடைய அர்த்தம் “ அவதூறுபேசுபவன்” அல்லது “பொய்க் குற்றம் சுமத்துபவன்” என்பதாகும். புதிய ஏற்பாட்டில் இன்னுமொருபெயரில் சாத்தான் தன்னை அறிமும்செய்யும்பெயராவது “சோதனைக் காரன் “( 1தொச. 3:5,) “பெயலசெபூ” ( மத. 12: 24) “பொல்லாங்கன்”,( மத். 13: 19, 38 ), “உலகத்தின்அதிபதி”(யோவான் 12: 31), “இப்பிரபஞ்சத்தின்தேவன் “ (2கொரி. 4 :4), “பேலியாள்”( 2கொரி. 6:15), “ஆகாயத்து அதிகாரப் பிரபு”

( எபேசி. 2:2), “ குற்றம் சாட்டுகிறவன்”(வெளி. 12:10)

சரித்திரம்:- முதலாவது மனிதகுலத்து ஜோடிகளாகிய ஆதாமையும் ஏவாளையும் பாம்பின் வடிவில் வந்துசோதித்தான் என்று ஆதியாகம்ம் 3இல் வாசிக்கிறோம். பாம்பு சாத்தான் தான் என்றுவெளிப்படுத்தல் புத்தகத்தில் வாசிக்கியோம். ( வெளி. 12 :9, 20:2).

இரண்டு பழைய ஏற்பாட்டு பகுதிகள் – ஏசாயா 14: 12-15 , எசேக்கியேல் 28: 11-19 என்பன சாத்தானின்சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தெளிவாகவும் வீழ்ந்து போன தற்கான சரியான விளக்கத்தையும் கொடுக்கின்றன இவைகள் பாபிலோன் நாட்டினதும், தீருவின்(Tyre) நாட்டினதும் ராஜாக்களுக்குத்தான் கூறப்பட்டன. ஆனால் ஆராச்சியாளர்கள் இவைகள் சாத்தானுக்குத்தான் கூறப்பட்டதாக நம்புகிறார்கள்.

சாத்தானின் திய வேலைகள் குறித்துவெளிப்படுத்தல் 12 இல்மேலும் கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய அன்பிலிருந்து வீழ்ந்தவுடன், சாத்தான் மூன்றிலோரு தூதர்களை புரட்சி செய்வ தற்கு தன்னுடன் இணங்கவைத்தான்.(வெளி. 12: 3-4). பழைய ஏற்பாடு முழுவதும் அவன் மேசியாவின் வழிகளை அழிப்பதற்குப் பார்த்தான். மேசியா மனிதனாக வந்தபோது சாத்தான் அவரை இல்லாதொழிக்ப் பார்த்தான்.(வெளி 12: 4-5) உபத்திரப காலத்திற்கு முன்பாக, மேசியாவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக , சாத்தான் வானமண்டலத்திலிருந்து தள்ளப்படுவான். (வெளி. 12: 7-12) அப்போது சாத்தான் தனது கடுஙுகோபத்தைமேசியாவின் மக்கள்மீது காண்பித்தான்.(வெளி. 12: 13-17)வெளிப்படுத்தல் 20ம் அதிகாரம் சாத்தானுடைய கடைசி முயற்சியைக் காண்பிக்கிறது. அவன் ஆயிரம் வருடங்கள் கட்டிவைக்கப்பட்டு பின்பு அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவான். (வெளி. 20: 2, 10)

குணவியல்பு :- ஆதியில் சாத்தானுக்கு அதிக வல்லமையும் செல்வாக்கும் பதவியும் அதிகாரமும் இருந்தது. சாத்தான் அதிக அதிகாரமும் சக்தியுமுடைய பகைவன் என்று

பிரதான தூதனாகிய மீகாவேல் கூறினார்.(யூட்-9)

சாத்தானுடைய உலக சம்பந்தமான செல்வாக்கு சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவனுடைய பலவிதமான பெயர்கள் உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது, “ இந்த உலகத்தின் அதிபதி :(யோவான் 12 :31) “ இப்பிரபஞ்சத்தின்தேவன்” (2கொரி. 4:4) “ ஆகாயத்து அதிகாரப் பிரபு” (எபேசியர் 2:2) “ உலகம் முழுவதும் பொல்ங் கனுக் குள் கிடக்கிறது “ என்று வேதம் கூறுகிறது.( 1யோவான் 5 :19 )

சாத்தான் தனது அசுத்த வல்லமயை பேய்களுக்கூடாக செயற்படுத்துகிறார் (மத்.12:24, 25:41,வெளி. 12: 7, 9) இயேசு முதன் முதலில் உலகத்திற்குவந்தபோது மேசியாவின் தாக் குதல் சாத்தானின் இராஜ்ஜியத்திற்கு எதிராக இருந்தபடியால் பிசாசின் தாக்கம் பெரியளவில் இடம்பெற்றது .( மத். 12: 28-29, அப் 10: 38 ) இதே போன்ற,சாத்தானுடையதும் அவனது தூதர்களினதும் தோல்விக்கு காரணமாக அமையப் போகின்ற இன்னுமொரு தாக்கம் இயேசுவின் இரண்டாம் வருகைக்குமுன் எதிர்பார்க்கப் படுகின்றது.(வெளி. 9: 3-17, 12 : 12, 18:2)

சாத்தானுக்கும் அதிக அறிவுத்திறனுண்டு. இதனூடாகவே அவன் ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றி அவர்களடைய உலகத்தையும் அரசாட்சியையும் அபகரித்துக்கொண்டான்.( ஆதி 1: 26, 3:1-7, 2.கொரி 11:3) அவனுடைய மதிநுட்பம் ஏமாற்றும் செயற்பாட்டை சிறப்பாக அவனுடைய விருப்பத்திற்கு ஏற்பசெய்வதற்கு உதவியாகவிருக்கிறது.

சாத்தானுடைய தனிச்சிறப்பியல்பு,கவர்ச்சி என்பன மட்டுப்படுத்தப் படவில்லை.அவனுடைய வல்லமை கர்த்தரின் கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தன.(யோபு 1:12. லூக்கா 4 :6, ,தெசலோ 2 : 7-8)யோபுவை வேதனைப்படுத்துவதற்குசாத்தான் கர்த்தரிடம் அனுமதிபெற்ற நடப்பித்த நிகழ்வுகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. (யோபு 1:1-12)

சாத்தானுக்குதேவனுடைய பிள்ளைகளைவேதனைப் படுத்துவதற்கு அனுமதிகொடுக்கப் பட்டுள்ளது (லூக்கா 13 :16, 1தெசலோனி. 2: 18, எபிரே 2 :14), ஆனால் அவர்ளை மற்றுமுழுதாகவெற்றுகொள்ளும்படிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. (யோவான் 14 : 30-31, 16:33)

சாத்தானுடைய தொடர் ஆசையின் ஒரு பகுதியாக கர்த்தரை தள்ளி தன்னை மற்றவர்கள் ஆராதிக்கவேண்டும் என்று மனப்பூர்வமான பேரார்வம் கொண்டிருந்தான்.( மத். 4: 8-9,வெளி 13:4,12) இந்த ஆசையின்மேல் வெறுப்படைந்து சாத்தானை கீழேவிழத் தள்ளினார்,அவன் கர்த்தருக்குச் சரியான எதிராளியாக உருவானான். அவன் “பொல்லாங்கனாயிருக்கிறான்”

( மத். 13: 19, 38 ) ஆனால்தேவனோ “ நீதி மானாயிருக்கிறார்” ( ஏசா.1 :4)

சாத்தான் குரோத இயல்புடையவன்.அவன் கர்த்தரையும் அவரது பிள்ளைகளையும் எதிர்ப்ப தற்கு முயன்றுகொண்டே யிருக்கிறான், அவருடைய சத்தியம் தளர்வடைவதில்லை.(யோபு 1:7, 2: 2, மத். 13:28) அவன் எப்போதும் நல்லவிருப்பங்களுக்கு தடையாகவேயிருக்கிறான்.(1நாளா 21 :1, சகரியா 3: 1-2) மனிதகுலத்திற்குள் பாவத்தை அறிமுகம்செய்வதே அவனதுவேயைகவிருந்த்து ( அதி 3), சாத்தான் மரணத்தின்மேல் வல்லமையுடையவனாகவிருந்தான், கிறிஸ்து தன்னுடைய உயிர்த்தெழுந்த வல்லமையின் மூலம் அந்த வல்லமையை உடைத்தெறிந்தார்.( எபிரே.2: 14-15)

பலவழிமுறைகள் :-தன்னுடைய அசுத்தவேலைகளைச்செய்வதற்கு சாத்தான் பல வழிமுறைளைக்கைக்கொள்கிறான், அவைகளில் மிகவும் சக்கிவாய்ந்த்து “மயக்கி வசப்படுத்தல் “(ரெம்ரேசன்) ( மத். 4:3, 1தெசலோ: 3:5) பல கைப்பட்ட முறைகளில் சாத்தான் மனிதர்களைச் சோதகைக் குட்படுத்தி பாவம்செய்வதற்கு வழிநடத்துகிறான். யூதாஸ் ஸ்கரியோத்திற்குச் செய்தது போல சிலவேளைகளில் நேரடியான ஆலோசனைகள் மூலம்செயற்படுத்துகிறான், (யோவான் 13: 2, 27), சிலவேளைகளில் கர்த்தருடைய தூதர்கள்போல்வேஷம் தரித்து ஏமாற்றுகிறான், ( 2தெசலோ2:9, 1யோவான் 4 :1) சிலவேளைகளில் மனிதர்களின்செந்த பலவீனங்களைப் பயன்படுத்தி பாவம்செய்யவைக்கிறான், (1கொரி. 7:5)உலக ஆட்சியையும், வல்லமையையும் தருவதாக சமரசம்செய்து இயேசுசை அவன் நேரடியாகவே சோதித் தான்,( லூக்கா 4: 5-8)

மனித வர்க்கத்தை சோதிக்கும் அதேவேளை , சாத்தான் ஏமாற்றுவதிலும் அதிக விருப்பமுள்ள வனாயிருக்கிறான்.( 1 திமேத்தி 3: 6-7. 2 தமோத். 2:26,) இயேசுக்கிறுஸ்துவின் சத்தியத்துக்கு எதிராக அவனுடைய பொய்சொல்லும் சுபாவத்தினால் எதிர்த்து நிற்கிறான்.(யோவான் 8:32, 44) பெரிய வஞ்சகமான தவறகளை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் சரியானதைப் பெற்றக் கொள்கிறான்.அவனுடைய சோதனைகளில் இந்தப் பொய்கள் தெளிவாகத் தெரியும்..( அதி.3: 4-5) ஏமாற்றக் காரனாக இருப்பதுபோல், உண்மையைப் பொய்யாக்குவதில் சாத்தான் மிகவும் கெட்டிக்காரனாக விருக்கின்றான். ( 2கொரி.11: 13-15)

சாத்தானுடைய வழிமுறகள் யாவும் சுவிஷேசத்தைசொல்லவிடாமல் தடுப்பதற்காக திட்டமிடப்பட்டதாக வேயிருக்கிறது. மத். 13: 19, 1தெசலோ.2: 17-18) சுவிஷேசம் பிரசங்கிக் கப்படும்போது அந்தப் பிரசங்கத்தின் கருத்துக்களை உணர்ந்து கொள்ள முடியாதவாறு மக்களின் மனக்கண்களை சாத்தான் கட்டிப்போடுகிறான்.(2.கொரி. 4: 3-4, 2.தெசலோ. 2: 9-10) நேரத்திற்குநேரம் குழப்பங்களைச் செய்வதன்மூலம் கர்த்தருடைய வேலையைத் தடைப் படுத்து கிறான். (யோவான். 13:2, 27,பேதுரு.5:8,வெளி. 12:13-17) மனிதர்களை வேதனைப்படுத்துவ தன்மூலம் உலகத்தில் ஒழுங்கின்மையைக் கொண்டுவருகின்றான்.(யோபு.1-2: 2கொரி. 12:7, எபி.2:14). தனது பிள்ளைகளைத் திருத்தும் நோக்கத்திற்காக கர்த்தர் அவர்களை வேதனைப் படுத்தும்படி சாத்தானுக்கு சிலவேளைகளில் அனுமதிகொடுக்கின்றார்.( 1 திமே. 1: 20) இயேசுக்கிறிஸ்துவின் பாவமற்ற வாழ்க்கை எதிரியை திரும்பத்திரும்ப தோல்வியடையச் செய்வதில் இந்தச் சம்பவமே உச்சக்கட்டமாக விருந்த்து.( மத். 4: 1-11, லூக்கா 4: 1-13)

தோல்வி:-தன்னுடைய கர்த்தருக்கெதிரான யுத்தத்தில்தோல்லியடையும்படி சாத்தான் முன் குறிக்கப் பட்டுள்ளான். அவனுடைய இறுதி முடிவு புதிய ஏற்பாட்டில் முன்னுரைக்கப் பட்டுள்ளது.( லூக்கா 10:18,யோவான். 12:31, வெளி. 12:9, 2010)இயேசுக் கிறுஸ்துவின் சிலுவை மரணம்சாத்தானுடையதோல்வியின் அடித்தளமாக அமைகின்றது.(எபி. 2: 14-15, 1பேது 3:18,22 ) இயேசுக்கிறிஸ்து மீண்டும் வந்து சாத்தானை அக்கினியும் கந்தகமும் எரியும் கடலுக்குள் தள்ளும்போது இறுதிமுடிவுவரும்.(வெளி.20: 1-15)

கிறிஸ்தவர்களுக்கு பாவத்தின்மீது வெற்றி கொள்வதற்கு கிறிஸ்துவின் மரணம் பலமான வழியாக அமைகின்றது. “சமாதானத்தின்தேவன் உங்களுடைய காலின்கீழ் சாத்தானை நசுக்குவார்” என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது.(றோம. 16:20) எங்களுடைய சொந்த வெற்றியானது சாத்தானுடைய சோதனைக்கு எதிர்த்து நிற்பதிலேயே தங்கியுள்ளது.( பேசி 4: 25-27, 1பேதுரு. 5: 8-9).

இயேசுக் கிறுஸ்துவின் இரத்த்த்தின் வல்லமையால் கிறிஸ்தவர்கள் சாத்தானின் போராட்டத் திலிருந்து வெல்ல முடியும்.(வெளி. 12:11), பரலேகத்தில் கிறிஸ்தவர்களுக்காக இயேசு பரிந்து பேசிக் கொண்டேயிருக்கிறார், இதனால்வெற்றி கிடைக்கிறது( எபி.7: 25), பரிசுத்த ஆவியின் வழிநடத்தலினால் வெற்றி கிடைக்கிறது,( கலா. 5: 16) அத்துடன் பலதரப்பட்ட சர்வ ஆவியின் ஆயுதங்கள் மூலம்வெற்றி கிடைக்கின்றது( எபேசி. 6: 13-18)

உண்மை நிலை:- சாத்தான்போன்ற எதிரிகளை அனுமதிப்பதால் சிலபேருக்குதொல்லைகள் ஏற்படுகின்றன. ஆனால் அவனுடைய பிரசன்னமும்செயற்பாடுகளும் பிசாசின் தொல்லை களையும் பிரச்சனைகளையும் விளங்கப் படுத்துவதற்கு அவசியமானதாகும். ஆனால் வேதாகமம் சாத்தான் இருக்கிறான் என்பதையும், கர்த்தர் மனிதர் களுக்குச் செய்யும்செயற்பாடு களுக்கு எதிராகச் செயற்படுதும் அவனுடைய பிரதான வேலையாகும். அனேகர் சாத்தானை ஏன் ஆண்டவர் அனுமதித்தான் என்று அதிசயப்படுகிறார்கள். இந்தக்கேள்விக்கான சரியான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.

மூலம்: http://www.tamilbiblestudy.org/view.php?cid=12#


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

timothy_tni wrote:

 ஆனால் வேதாகமம் சாத்தான் இருக்கிறான் என்பதையும், கர்த்தர் மனிதர் களுக்குச் செய்யும்செயற்பாடு களுக்கு எதிராகச் செயற்படுதும் அவனுடைய பிரதான வேலையாகும். அனேகர் சாத்தானை ஏன் ஆண்டவர் அனுமதித்தான் என்று அதிசயப்படுகிறார்கள். இந்தக்கேள்விக்கான சரியான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.

மூலம்: http://www.tamilbiblestudy.org/view.php?cid=12#


தேவனை பற்றி  சொல்கையில் "அவர் தீமையை பார்க்கமாட்டாத சுத்த  கண்ணர்" என்று சொல்வதோடு  

 II கொரி 6:14 ; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
.
என்றும் வேத வசனம்  சொலும் பட்சத்தில் "பரிசுத்தரான தேவன் தானே தீமையை உலகில்  அனுமதித்தார்" என்றொரு தப்பான நிலையில் வேதத்ததையும் தேவனையும் நோக்கினால் அனேக கேள்விகளுக்கு எந்த சரியான பதிலும் கிடைக்கபோவது இல்லை. 
 
"அவரே தீமையை அனுமதித்தார் பின்னர் அவரே  தீயவர்களால் கொடூரமாக சிலுவையில் அடிக்கபட்டார்" என்ற  கருத்து எவ்விதத்திலும் பொருந்தும் என்று புரியவில்லை.  
 
நம்மிடம் பதிலில்லாமல் அல்லது பதில் தெரியாமல் இருக்கும் ஒரே ஒரு கேள்விகூட நாம் அறிந்திருக்கும்  மொத்த உண்மையையும் தவறாக்கி விட கூடும், பிறகு முழு உண்மை தெரியாத வேதபாடத்தால் என்ன பயன்? எனவே  உண்மை நிலையை அறிய, பதில் அறியாத கேள்விகளுக்கு ஆண்டவர் சமூகத்தில் அமர்ந்து முதலில் பதில் கண்டுபிடிக்க வேண்டியதுவே மிக மிக அவசியம் இல்லையேல் ஒருவர் முற்றிலும் தவறான ஒரு நிலையிலேயே  இருந்துவிட வாய்ப்புண்டு.    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard