இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுயநீதியின் அடிப்படையிலான தேவநீதி!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சுயநீதியின் அடிப்படையிலான தேவநீதி!
Permalink  
 


வேத  புத்தகத்தில்  சொல்லப்பட்டுள்ள எல்லா வசனங்களுக்கும்  பல  இணைவசனம் மற்றும் எதிர்மறை வசனங்கள் வேதத்தில் நிச்சயம் உண்டு.  வேதத்தில் உள்ள அனைத்து  பகுதிகளையும் படித்து அதை அப்படியே ஒருவர்  வாழ்வில் கைகொண்டு நடந்துவிட முடியுமா?  
 
நிச்சயமாகவே முடியாது!
  
செய்ய முடியாத அனேக சிறிய பெரிய காரியங்கள் உண்டு என்பது   அனைவருக்கும் தெரியும்.  நான் பூமியில் வாழும்வரை  கிறிஸ்த்துவைபோல்  பரிசுத்தராக முயற்ச்சிக்கிறோம் அவ்வளவுதான் ஒருவரும் அவரைப்போல முழுமையான  பரிசுத்தராக முடியாது.
 
அப்படி முழுமையான பரிசுத்தவானாகி  தனது கட்டளைகள்படி நடப்பவனை மட்டுமே  தேவன் நித்திய ஜீவனுக்கென்று தேர்ந்தெடுத்தால் ஒருவருமே தப்பிக்க முடியாது. 
 
I யோவான் 1:8 நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

ஏதாவது ஒரு வசனத்தின் அடிப்படையில் நம்மை குற்றவாழி  என்று தேவனால்  தீர்த்துவிட  முடியும்!
  
இதை நிச்சயம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.  
 
இங்குதான் கிரியையின்   பனற்றநிலை தெரியவரும்.
  
இவ்வாறு ஏதாவது ஒரு வசனத்தின் அடிப்படையில் எவருமே பரிசுத்தர் இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அதேபோல்   எல்லோரையும் மீட்கும்படி தன்னை ஒப்புகொடுத்த இயேசுவின் மூலம்   ஏதாவது ஒரு வசனத்தின் அடிப்படையில் தேவன் எல்லோரையுமே மீட்டுவிடவும் முடியும் என்பதையும்  கருத்தில் கொள்க.
 
I தீமோத்தேயு 2:6 எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;
  
இங்குதான் கிருபையின் மேன்மை தெரியும்.   
 
ஒருவரின்  நன்னடத்தைகளும் நற்கிரியைகளும்  அவசியமே அதற்க்கு பலன் நிச்சயம்  உண்டு. ஆகிவும் அதற்காக நல்லவன் மட்டும்தான் நித்தியஜீவனை பெறுவான் தீயவன் எல்லோரும் அழிந்துபோக  வேண்டுமென்று எண்ணுவது  தேவனின் இரக்கத்துக்கு எதிரான செயல்.  தேவன் அவ்வாறு பலமுறை வேதத்தில்  சொல்லியிருக்கிறார் அதை சொல்லி எச்சரித்திருக்கிறார்  எனவே அதை சொல்லி வாதிடுவதில் பிறரை எச்சரிப்பதில் தவறேதும் இல்லை. ஆகினும் தேவனின்  இறுதி   இருதயநிலை என்ன?

"ஒருவரும் கெட்டுபோக கூடாது
்"  "ஒருவரின் மரணத்தையும் அவர்  விரும்பவில்லை" "இந்த சிறியரில் ஒருவரும் கெட்டுபோவது  பிதாவின் சித்தமல்ல"  என்பதுதான். 
 
இதை தேவனால் நிறைவேற்ற முடியாதா?
 
தேவன் எல்லோரையும் மீட்டுவிடுவார் என்றுசொல்லி தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட காரியங்களை கவனியாது கீழ்படிய விரும்பாத  நண்பர்களை நான் ஏற்ப்பதில்லை அதேநேரத்தில் தேவன் எல்லோரையும் மீட்ககூடாது நியாயம் நீதி செய்பவர்களை மட்டும்தான் மீட்கவேண்டும் என்று விரும்புகிறவர்களும் தேவனின் இருதய நிலைக்கு ஏற்றவர்கள் அல்ல என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். 
 
தேவனின் எதிர்பார்ப்பு என்ன என்பதை ஆராய்ந்து அவரின் சிந்தை நமக்கும் உண்டார்யிருக்க வேண்டும். "ஒருவரும் கெட்டுபோக கூடாது என்பதுதான் தேவனின் விருப்பம்" அதுவே நமது விருப்பமாகவும் அது நிறைவரவேண்டும் என்று வாஞ்சிப்பவர்களாகவுமே எந்நாளும் இருக்கவேண்டும்.  நாம் எடுக்கும் ஒவ்வொரு முயர்ச்சியும் எல்லோருடய மீட்புக்காகவே  இருக்கவேண்டும்.  
 
ஒரு தகப்பன் தன் மகனை பார்த்து  "நீ நன்றாக படிக்கவில்லையென்றால் நாளை துன்பபடுவாய்" என்று சொல்வது இயற்க்கை. அதற்காக தன் மகன் சரியாக படிக்காமல் துன்பப்படும்போது அந்த தகப்பன் "நான் சொன்னேன் நீ கேட்கவில்லை இப்பொழுது அனுபவி" என்று சொல்லி வாளாதிருப்பாரா?   தன்னால் முடிந்தஅளவு அவன் துன்பத்தை தீர்த்துவைக்க முயர்ச்சிப்பார் அல்லவா? அதே போன்றதுதான்  தேவனின் அன்பும்.
 
அவர் எச்சரிக்கிறார் அது உண்மைதான் அதற்காக அவர்  கீழ்படியாதவர்களை எல்லோரையும் அப்படியே  அழிவில்   விட்டுவிடுவார் என்று கருதுவதும்  தவறு!  அதே நேரத்தில் அவர் இப்படித்தான் எச்சரிப்பார் ஆனாலும்  நாம் துன்பப்படும்போது எப்படியும் நம்மை காப்பாற்றுவார்  என்றெண்ணி அவர் எச்சரிப்பை  கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு.  இரண்டியிலும் ஒரு சமநிலை வேண்டும். முக்கியமாக எல்லோரும் மீட்கப்படவேண்டும் ஒருவரும் கெட்டுபோககூடாது என்று எதிர்பார்ப்பும் ஏக்கமுமே  ஒரு நல்ல தேவமனிதனுக்கு அடையாளம்.    
 
சிலர்  ஏதாவது சில வசனங்களை ஆதாரமாக  காண்பித்து மற்றவர்களை குற்றவாழி என்று தீர்ப்பதில்யேயே குறியாக  இறக்கின்றார்கள் அது சரியான செயல் அல்ல! .
 
எசேக்கியேல் கீழ்க்கண்ட வசனங்களை பாருங்கள்  
 
எசேக்கியேல் 4:5 அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்.

எசேக்கியேல் 4:6 நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

பரிசுத்தமான தீர்க்கதரிசி எசேக்கியேலை கர்த்தர் அழைத்து எவரோ இஸ்ரவேலரும் யூதாவினரும்  ஆண்டுகணக்கில் செய்த அக்கிரமத்தை சுமக்க சொல்கிறார். அக்கிரமம் செய்தவன் எவனோ அனால் இங்கு அவர்களுக்கான சுமையை சுமப்பவன் எவனோ. இங்கு எசேக்கியேல் "எவன் அக்கிரமத்தையோ என்னை சுமக்க சொல்கிறீர்களே ஆண்டவரே, அவனவன் அக்கிரமத்தை அவனனவன் தலையில் சுமத்தும்"  என்று சொல்லவில்லை அதே நேரத்தில்  "உமக்குத்தான் ஒருவரும் கெட்டுபோவது விருப்பமில்லையே நீரே எல்லாவற்றையும் பார்த்துகொள்ளும் என்றும்"  தேவனுக்கு எதிர்த்து பெசவில்லை. கேள்வியேதும் கேட்காமல் சுமந்தான். அங்கு தேவனின் மிகபெரிய திட்டம் நிறைவேறியது.  
 
இதுதான் ஒரு உண்மையான கீழ்படிதல்!  இதில் இரண்டு விஷயங்களை நாம் அறியமுடியும். 
 
1. தேவன் தனக்கு ஏனென்று கேட்காமல் கீழ்படியும்  ஒரே ஒருவரை வைத்து  எல்லா காரியங்களும் சாதித்துவிட முடியும்  
 
2. நம்மை பயன்படுத்தி அல்லது நம்மை துன்பத்துக்கு ஒப்புகொடுத்து அதனால்  ஒரு ஆத்துமாவை மீட்க தேவன் சித்தமாக இருந்தாலும் அதற்க்கு நாம் மகிழ்ச்சியோடு உடன்படவேண்டும்.
 
தேவனிடம் நியாயம் பேசிக்கொண்டு இருப்பது சரியானது அல்ல!
 
இவ்விதத்தில் ஒருவர்  தேவனின் வார்த்தைகள்படி நடப்பதும் பிறரை  அவ்வாறு நடக்கும்படி எச்சரித்து  தேவனுக்கேற்ற பரிசுத்தராக வேண்டும் என்று போதிப்பதோ  சரியான காரியங்களே 
 
ஆகினும் இவற்றி அடிப்படை நோக்கம் என்ன?  
 
நாம் மட்டும் தப்பித்துவிட வேண்டும், அல்லது அவர் வார்த்தைகள்படி  நடப்பவர் மட்டுமே   தப்பிக்க  வேண்டும் என்று இருக்குமாயின் அது சுய நீதி அடிப்படையில் தேவநீதியை   தேடுவதே  அதனால் பயனேதும் இல்லை!

 


-- Edited by SUNDAR on Friday 12th of March 2010 01:09:28 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

ஒரு யோபை போல முதலாவது உத்தமனாய் வாழ்ந்து,தேவனிடம் சாட்சியைப் பெற்று பின் நண்பர்களிடம் இப்படி ஒரு சாட்சியை பெற வேண்டும்.

3. இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.
4. விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.

யோபு 4

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் எழுதியது
////////// "ஒருவரும் கெட்டுபோக கூடாது்"  "ஒருவரின் மரணத்தையும் அவர்  விரும்பவில்லை" "இந்த சிறியரில் ஒருவரும் கெட்டுபோவது  பிதாவின் சித்தமல்ல"  என்பதுதான். ///
 
உண்மைதான்...................
 
ஒரு நபர் மிகவும் வியாதி பட்டு சாகின்ற  நிலைமையில் இருக்கும் பொழுது 
அந்த நபரின்  மனைவி கிறிஸ்தவர்களாய் இருந்ததனால் ஒரு போதகரை அழைத்து வந்து தன் கணவருக்காக தேவனிடம் ஜெபிக்க சொன்னார்கள் அந்த ஊழியர் வந்து அந்த மனிதனுக்கு ஜெபிக்கும் பொழுது  ஆண்டவர் அவன் செய்த எல்லாம் பாவத்தையும் அவருக்கு தரிசனமாய் கட்டி அவன் செய்த பாவத்தினால் தான் இவன் வியாதி பட்டு மரிக்கிறான் என்றார் அதன் பின் தேவன் அந்த ஊழியரிடம் எண்ணையை எடுத்து அவன் செய்த பாவத்திற்காக ஜெபி என்று கட்டளை கொடுத்தார் அவர் ஜெபித்த பிறகு அந்த நபர் மறித்து விட்டார்
அந்த போதகர் ஆண்டவரே ஐயோ மறித்து விட்டாரே நீர் தானே என்னை பூசி ஜெபிக்க சொன்னீர் என்று கூறினான்  அதற்க்கு தேவன் அவன் செய்தபாவம்  மன்னிக்க பட்டு
அவனுடைய ஆத்துமா இப்பொழுது மீட்கப்பட்டது என்று தேவன் உரைத்தார்
 

எல்லோரையும் மீட்க்க தம்மையே ஒப்பு கொடுத்த கிறிஸ்து இயேசு அவரே..........................
 


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 12th of March 2010 07:20:42 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

ஒருவர் என்னதான் கீழ்படிதல் உள்ள வாழ்க்கையை  வாழ்ந்தாலும்  நம்மை நிலை நிருத்துகிறவர் கர்த்தரே என்ற உண்மையை அறியவேண்டும். அவராலே எல்லாம் ஆகும் அவரின் கிருபை இல்லாமல் நம்மால்  நிற்க முடியாது அவரின்  துணையின்றி நான் ஒன்றுமில்லை  என்று கருதுவதே ஏற்றது! 
  
நம்முடைய நன்னடத்தயிநிமித்தம் நாம் எங்கும் மேன்மை பாராட்டுதல் தகுந்ததல்ல,  நான் சரியாக நடக்கிறேன் எனவே சரியாக நடக்காதவர்கள் தகுதியற்றவர்கள் என்று கருதாமல் அனைவரின்  மீட்புக்காகவும் ஜெபிபதோடு,  தேவன் எல்லோரையும் மீட்டுவிட வேண்டும் ஒருவரும் கெட்டுபோககூடாது  என்றும்  கண்ணீரோடு மன்றாடுவதே " தேவ அன்பு" என்ற சொல்லுக்கு வரும் பொருள் என்று நான் கருதுகிறேன். 
 
தன்னை அடிப்பவனையும் மிதிப்பவனையும் துன்மார்க்கமாய் நடப்பவனையும்கூட மன்னித்து அவர்களுக்கும் எதுவும் தீமை நடந்துவிடகூடாது என்று   கெஞ்சுவதுதான் உண்மையான அன்பு. அதைதான் இயேசு செய்தார்.  
 
லூக்கா 23:34 அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே  
 
ஒருபுறம் துன்மார்க்கமாய் நடந்துகொண்டவர்களை கடிந்துகொண்டு எச்சரித்தாலும்  இன்னொருபுறம் அவர்களுக்காக   கண்ணீர்விட்டு  அழுதார். அதுதான்  உண்மை  இரக்கம் என்பது    
 
லூக்கா 19:41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,

துன்மார்க்கன் அழிவான் என்று வசனம் சொல்கிறது எனவே அவன்  நிச்சயம்  அழித்தே  ஆகவேண்டும்  என்று  மனதில் எண்ணிக்கொண்டு  நான் அன்பு நிறைந்தவன் என்று சொல்வது  எவ்விதமான அன்பு நிலையை காட்டுகிறது என்று புரியவில்லை.     
 
உண்மையான் அன்பு என்ன செய்யும்? தன்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கும்!. தான் எவ்வாறு மீட்கப்படவேண்டும் என்று விரும்புகிறோமோ அதே போல் எல்லோரும் எவ்விதத்திலாவது மீட்கப்படவேண்டும் என்றுதான் நினைக்கும் அதற்காக அது தேவனிடம் மன்றாடும் . 

மற்றபடி (வேதவார்த்தையின் அடிப்படையில்கூட)பிறரை நியாயம்தீர்க்க   நினைக்கும் நிலையென்பது  தனைப் போல் பிறரைநேசிக்க சொல்லும்  இயேசுவின் முதல் கட்டளையே  சரியாக கைகொள்ளாத  நிலை என்றுதான் பொருள்படும்  என்றே நான் கருதுகிறேன்.       
 
உபாகமம் 32:35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; 
 
என்று  கர்த்தர் சொல்கிறார்! 

அவர் பரிசுத்தர் அதை செய்ய அவர் தகுதியுடையவர் அவர் செய்ய நினைத்தது  நிச்சயம் தடைபடாது.  அவரை ஏனென்று நம்மால் கேட்கமுடியாது.  ஆனால் மனிதர்களாகிய  நாம்  நம்மைபோன்ற  சகமனிதர்களை ஒரு புறம் வேத வசனங்களை காட்டி தீர்க்கமாக எச்சரித்தாலும்  மறுபுறம் அவர்களை மனதார மன்னிப்பதும் அவர்களையும் மன்னிக்கும்படி தேவனிடம் மற்றாடுவதும் மட்டுமே  தகுதியானது. 
 
I தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

முரட்டாட்டம் செய்த இஸ்ரவேல் ஜனங்களால்  கோபமடைந்த தேவன்

12. நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

இதை கேட்ட மோசே ஆ! ஆண்டவரே சொல்லிவிட்டார், அப்படியே செய்யும் இதில்  இடையில்  நான் சொல்ல என்ன இருக்கிறது எனக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தால் போதும் என்று  விலகிவிடவில்லை  
 
19. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். 20. அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

என்றார். இங்கு மோசே மிகுந்த சாந்த குணம் உள்ளவன் என்று பெயர்பெற்றான். அதுபோல் அழிப்பதும் அழிக்காதிருப்பதும்  தேவனின் விருப்பம்.  மனுஷனாகிய நம்மை  பொறுத்தவரை  எப்பொழுதும்   தாழ்மையோடு  தன் ஜனங்களுக்காக மன்றாடும்   நிலையிலேயே இருக்கவேண்டும் அதுதான் உண்மையான அன்பு என்று நான் கருதுகிறேன். தானியேல் நெகேமியா  சாமுவேல்   போன்றவர்கள் அதைதான் செய்தார்கள்.  
 
மத்தேயு 6:14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார் 
 
இவ்வசனத்தின்படி ஒருவன் என்ன பெரிய குற்றம் தவறு  செய்திருந்தாலும்  அவனுக்கு முழு மனதோடு மன்னிப்பை வழங்கி அவனும்  நித்யஜீவனை பெற்றுகொள்ளும்படி தேவனிடம் மன்றாடுவதுதான் மன்னிப்பை வழங்கும் முறை. அவ்வாறு மன்னிக்காமல் வசனத்தைகாட்டி நான் மன்னிக்கிறேன் ஆனால் வேத வசனத்தின்படி அவன் அபாத்திரன் என்று போதித்தால், பிதாவும் நான் உன்னை மன்னிக்கிறேன் நீயும் ஏதோ ஒரு  வேதவசனத்தின் அடிப்படையில் அபாத்திரன் என்றே நியாயம்தீர்ப்பார். ஏனெனில் 
 
பிரசங்கி 7:20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.-- Edited by SUNDAR on Saturday 13th of March 2010 01:57:49 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard