ஆண்டவராகிய இயேசு தனது ஊழிய நாட்களில் போதித்த மனம்திருந்திய மைந்தனுடைய கதை அனைவரும் அறிந்ததே. தகபபனை விட்டு தவறான வழியில் சென்று தனது ஆஸ்திகளை அழித்து இறுதியில் குறைவுண்டானபோது தகப்பனை தேடிவந்து
லூக்கா 15:21குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்
அதை கேட்ட அவனது தப்பன் அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு சந்தோஷப்பட்டான்.
24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
இவ்வாறு தனது பாவங்களைவிட்டு மனம்திரும்பி இயேசுவிடம் வருபவர்கள் ஒருவரையும் புறம்பே தள்ளுவதில்லை என்ற மிக ஆறுதலான வார்த்தையை இயேசு சொல்லியிருக்கும் அதே நேரத்தில், தேவனுடய சித்தத்தை அறிந்தபின் அதன்படி செய்யாதவர்கள் அனேக அடிக்கு பாத்திரர்கள் என்றும் சொல்லி எச்சரித்திருக்கிறார்.
லூக்கா 12:47தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
நீதிமொழிகள் 28:13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
என்று நீதிமொழிகள் சொல்கிறபோதிலும் "பாவம்செய்தேன்"என்று அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்ற சிலரை பற்றியும், , "பாவம் செய்தேன்" என்று அறிக்கயிட்டும் பயனில்லாமல் மாண்ட சில வேதாகம மனிதர்கள் பற்றியும் இங்கு சற்று ஆராயலாம் என்று கருதுகிறேன்.
பார்வோன்:
புறஜாதிக்காரனாகிய எகித்தின் ராஜாவாகிய இவன் இஸ்ரவேல் ஜனங்களை வெளியேறவிடாமல் தடுத்தபோது மோசேயின் கைகளினால் தேவன் பல வாதைகளை எகிப்த்தில் கட்டளையிடவே அதில் ஒன்றான வெட்டுகிளிகளின் சேனையினால் வந்த துன்பம் தாங்கமுடியாமல்
18. பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரை நோக்கி (மோசே) விண்ணப்பம் பண்ணினான். 19. அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை
இவனுக்கு இக்காரியத்தில் மன்னிப்பு கிடைத்தது ஆகினும் அதை பயன்படுத்தாமல் அதற்குபின் இஸ்ரவேல் ஜனங்களை விடாபிடியாய் தொடர்ந்து வந்து சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனது அடுத்த விஷயம்
ஆகான்:
இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவின் தலைமையில் எரிகோவை பிடித்தபோது, அதில் உள்ள பொருட்கள் எல்லாம் சாபதீடாக இருந்ததால்
18. சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.
என்ற வார்த்தை தேவனால் எல்லோருக்கும் எச்சரிப்பாக கொடுக்கப்பட்டது. ஆனால் அவ்வெச்சரிப்பை அறிந்தும் அதை அசட்டை பண்ணிய ஆகான், சில சாபதீடான பொருட்களை திருடி ஆயி மக்கள் முன்னே முறிந்தோடிபோகும்படி செய்து இஸ்ரவேல் மக்களை கலங்க பண்ணினான்.
சீட்டு குலுக்கல் முறையில் யோசுவாவால் பிடிக்கப்பட்டபின் மனம்திரும்பி
யோசுவா 7:25அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி(போட்டார்கள்)
சவுல்:
இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலை பார்த்து சாமுவேல் மூலம் ஆண்டவர்
I சாமுவேல் 15:3. இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
இங்கு ஆண்டவரின் சித்தத்தை சரியாக அறிந்திருந்த, சவுல் கர்த்தர் சொன்னது போல அமலேக்கியர் எல்லோரையும் மடங்கடித்தான். ஆனால் கொள்ளையின் மேல் பறந்து, முதல்தர ஆடுமாடுகளை கொல்லாமல் கொண்டு வந்து பாளையத்தில் வைத்திருந்தான்.
ஆண்டவரின் கட்டளைக்கு முழுமையாக கீழ்படியாத சவுலின் இந்த செய்கையை சாமுவேல் கண்டித்தபோது
I சாமுவேல் 15:24சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்;என்றான்
ஆகினும் இவனுடைய பாவஅறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை அவன் மன்னிப்பை பெறவில்லை கர்த்தர் அவனைவிட்டு விலகினார் இறுதியில்
தாவீது பத்சேபாளுடன் பாவத்துகுள்ளாகி அவளது கணவனான உரியவை கொலைசெய்தபோது தேவன் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பி அவனது பாவத்தை உணர்த்தினார்
II சாமுவேல் 12:13அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான்.
இந்த பாவ அறிக்கையை தேவன் ஏற்றுக்கொண்டார்!
நாத்தான் தாவீதை நோக்கி, நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார் என்று அவனுக்கு மறு உத்தரவு அருளினார்.
தாவீது-2
இங்கு தாவீது இஸ்ரவேல் ஜனங்களை தொகையிடசொன்ன பாவத்துக்குள்ளானான். பிறகு மனதில் வாதிக்கப்பட்ட அவன்
I நாளாகமம் 21:8தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்
இங்கும் சில தண்டனைகளோடு அதாவது அவனது ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள். பின்னர் அவனது பாவம் மன்னிக்கப்பட்டது தொடர்ந்து ராஜபதவியை தக்கவைத்து கொண்டான் .
பிலேயாம்:
புறஜாதியின் மிகப்பெரிய தீர்க்கதரிசியாகிய இவனுடன் தேவன் நேரடியாக பேசினார் என்று வேதம் சொல்கிறது.
எண்ணாகமம் 22:9தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்.
இவ்வாறு தேவனுடன் ஐக்கியமாக இருந்து தேவனின் சித்தத்தை நன்கு அறிந்திருந்த இவன் கூலிக்காக பாலாக் என்னும் மோவாபின் ராஜாவின் ஆலோசனைப்படி இஸ்ரவேல் ஜனங்களை சபிபதர்க்காக கழுதையில் புறப்பட்டு போகும்போது கர்த்தரின் தூதன் எதிர்பட்டு அவனை தடுக்கிறான்
எண்ணாகமம் 22:34அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்
இங்கு கர்த்தரின் தூதன் அவனை தொடர்ந்து போக அனுமதித்தான். பிலேயாமும் பாலக்கிடம்போய் அவன் விரும்பியதுபோல் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்காமல், கர்த்தரின் வார்த்தைகளை எடுத்துரைத்து அவர்களை ஆசீர்வதித்துதான் திரும்பினான். ஆகினும் அவன் அநீதத்தின் கூலியை விரும்பிபோனான் என்று வேதம் சொல்வதால் அடுத்து சில வசனங்களுக்குள் அவன் பட்டயத்தால் கொன்று போடப்பட்டான்
ஆண்டவராகிய இயேசுவுடன் அனேக வருடங்கள் சீஷனாக பிரகாசித்து அவருடைய சித்தத்தை முழுமையாக அறிந்தவன் இறுதியில் அற்ப காசுக்கு ஆசைபட்டு ஆண்டவரை காட்டிகொடுக்க துணிந்து:
மத்தேயு 26:15நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
இறுதியில் ஆண்டவர் மரண ஆக்கினைக்குள்ளாக தீர்க்கபட்டபோது மனமுடைந்துபோன அவன் மனதில் வாதிக்கப்பட்டு
மத்தேயு 27:4குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான்.
ஆகினும் அவன் மனம்திரும்புதலுக்கு பலன் கிடைக்கவில்லை அவன் மன்னிப்பை பெறமுடியவில்லை.
மத்தேயு 27:5 அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
மேலே சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பை ஆராய்ந்து பார்த்தால், மன்னிப்பை பெறாதே போனவர்கள் அனைவருக்கும் ஒருவிதத்தில் தொடர்பு இருக்கிறது! அதுதான் இங்கு முக்கிய செய்தி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"பாவம் செய்தேன்" என்று அறிக்கை செய்தும் மன்னிப்பை பெறாமல் போனவர்களின் பாவங்களுக்கிடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று கூறியிருந்தேன் அது என்னவென்று தியானித்து அறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
அந்த தொடர்பு என்ன?
பணம் மற்றும் உலக பொருட்களின் மேலுள்ளு பற்றுதான்!
தாவீது இரண்டு முறை செய்த பாவமும் பணம் மற்றும் உலகபொருள் சம்பந்தம் இல்லாதது. பார்வோன் செய்த பாவமும் பணம் மற்றும் உலகபொருள் சம்பந்தம் இல்லாதது எனவே உடனடி மன்னிப்பை பெற்றனர்.
ஆனால்
ஆகான் செய்தது - பொன்பாளம் மற்றும் பாபிலோன் சால்வை என்னும் உலக பொருட்களை கர்த்தரின் வார்த்தைகளை மீறி திருடி வைத்தது
சவுல் செய்தது - முதல்தர ஆடு/ மாடாகிய உலக பொருட்களை கொல்லாமல் விட்டு வைத்தது
பிலேயாம் செய்தது- அநீதத்தின் கூலியாகிய பணத்தின் மேல் ஆசை கொண்டு செயல்பட்டது.
யூதாஸ் செய்தது - உலக பணத்துக்காக ஆசைபட்டு பரமனை காட்டி கொடுத்தது
நான் அறிந்துகொண்ட உண்மை!
பலவித கொடூர பாவங்கள் செய்தவருக்கு கூட மன்னிப்பை அருளிய தேவன், பணம் மற்றும் உலகபோருட்கள் மேல் ஆசை வைத்து ஓடிய/ஏமாற்றிய கேயாசி, அனனியா சபீரால் போன்றோருக்கு மன்னிப்பை அருளவில்லை
ஏனெனில் இரண்டு எஜமானுக்கு ஒருவராலும் உள்ளியம் செய்ய கூடாது
மத்தேயு 6:24இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது
யார் அந்த இரண்டு எஜமான்?
1. தேவன்
2. பணம் மற்றும் உலகபொருள்
பணமும் உலகபோருளும் தேவனுக்கு விரோதமானது எதிரானது எனவே இவற்றை கையாளுவதில் மிகுந்த கவனம் தேவனை இல்லையேல் அது நம்மை நிச்சயம் கவிழ்த்துவிடும்
பணத்தின் மேல் பற்றில்லாத நிலையே தேவனுக்கு உகந்த நிலை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மற்றும் அந்த பாவத்தின் பின்னர் உரிய நபர் மரித்து போகிறார் என்றால் அது அவனின் பாவத்தின் நிமித்தம் மட்டுமா? வேறேதும் இருக்காதா? பாவம் செய்தேன் என்று ஒத்துக்கொண்டும் சிலர் மன்னிப்பை பெறவில்லை என எவ்வாறு கூறுகிறீர்கள் ?
//////////////////////////மேலே சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பை ஆராய்ந்து பார்த்தால், மன்னிப்பை பெறாதே போனவர்கள் அனைவருக்கும் ஒருவிதத்தில் தொடர்பு இருக்கிறது! அதுதான் இங்கு முக்கிய செய்தி!////////////////////////////
என்ன தொடர்பு?
////////////////////////// தாவீது இரண்டு முறை செய்த பாவமும் பணம் மற்றும் உலகபொருள் சம்பந்தம் இல்லாதது. பார்வோன் செய்த பாவமும் பணம் மற்றும் உலகபொருள் சம்பந்தம் இல்லாதது எனவே உடனடி மன்னிப்பை பெற்றனர். //////////////////////
தாவீது செய்தது உலக ஆசை தானே? அவன் உலகக்காரியமான இச்சையின் நிமித்தம் தானே விழுந்து போனான்.
நீங்கள் செய்தியை முழுமையாக படிக்கவில்லை என்று தோன்றுகிறது. உங்கள் கேள்விகளுக்கு பதிவிலேயே பதில் இருக்கிறது சிஸ்டர்.
///பாவத்தின் பின்னர் உரிய நபர் மரித்து போகிறார் என்றால் அது அவனின் பாவத்தின் நிமித்தம் மட்டுமா? வேறேதும் இருக்காதா? பாவம் செய்தேன் என்று ஒத்துக்கொண்டும் சிலர் மன்னிப்பை பெறவில்லை என எவ்வாறு கூறுகிறீர்கள்//
மன்னிப்பு பெற்றதாக வேதம் சொல்லவில்லை எனவே நான் சொல்கிறேன்
சவுல் மன்னிப்பை பெற்றதாக வேதன் சொல்கிறததா?
யூதாஸ் மன்னிப்பை பெற்றதாக வேதம் சொல்கிறதா?
ஆகான் மன்னிப்பை பெற்றதாக வேதம் சொல்கிறதா ?
என ஆராயுங்கள்.
///தாவீது செய்தது உலக ஆசை தானே? அவன் உலகக்காரியமான இச்சையின் நிமித்தம் தானே விழுந்து போனான்.///
இரண்டு எஜமான் என்பது தேவன் மற்றும் உலகப்பொருள் என்றுதான் ஆண்டவர் சொன்னார்
சரீர இச்சையை அவர் குறிப்பிடவில்லை அது வேறுவிதமான பாவம். அது தானாக எல்லோருக்கும் வருவது.
"பணம் மற்றும் உலகப்பொருள் மேலுள்ள ஆசை" சரீர இச்சையை விட கொடிய பாவம் அது மரணத்தை கொண்டுவரும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
முழுமையாக படித்தேன் அண்ணா... வேதத்தில் அவர்கள் மன்னிப்பை பெற்றார்கள் என்று கூறப்படாததால் அவர்கள் மன்னிக்கப்படவில்லை என்று நமக்கு உறுதியாக கூற முடியுமா? அவர்கள் மன்னிக்கப்படவில்லை என வேதத்தில் கூறப்பட்டிருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அவர்கள் மன்னிக்கப்பட்டார்களா? இல்லையா ? என கூறப்படாதிருக்கும் போது எப்படி நாம் அந்த முடிவுக்கு வருவது..
பண ஆசை சகலத்தையும் விட கூடியதாக இருக்கிறது சரி ...
///முழுமையாக படித்தேன் அண்ணா... வேதத்தில் அவர்கள் மன்னிப்பை பெற்றார்கள் என்று கூறப்படாததால் அவர்கள் மன்னிக்கப்படவில்லை என்று நமக்கு உறுதியாக கூற முடியுமா? அவர்கள் மன்னிக்கப்படவில்லை என வேதத்தில் கூறப்பட்டிருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அவர்கள் மன்னிக்கப்பட்டார்களா? இல்லையா ? என கூறப்படாதிருக்கும் போது எப்படி நாம் அந்த முடிவுக்கு வருவது..///
நானாக இந்த முடிவுக்கு வரவில்லை. வசனம் சொல்வதன் அடிப்படையிலேயே அந்த முடிவை எடுத்தேன்
சவுல் - படடயத்தை நட்டு அதில் விழுந்து செத்தான்
ஆகான் - கல்லெறிந்து கொல்லப்பட்டான்
யூதாஸ் - நான்றுகொண்டு செத்தான்
கேயாசி - குஸ்டரோகி ஆகிப்போனான்
பிலேயாம் - கொன்று போடப்படடான்
அவர்களின் அகால மரணமே அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை எனபதை உணர்த்துகிறதல்லவா.
(இங்கு நாம் நித்திய ராஜ்ஜியம் குறித்து பேசவில்லை உலகத்தில் நடந்ததையும் அதற்க்கான மன்னிப்பையும் பற்றியே பேசுகிறோம்)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
/////////////சவுல் - படடயத்தை நட்டு அதில் விழுந்து செத்தான் ஆகான் - கல்லெறிந்து கொல்லப்பட்டான் யூதாஸ் - நான்றுகொண்டு செத்தான் கேயாசி - குஸ்டரோகி ஆகிப்போனான் பிலேயாம் - கொன்று போடப்படடான் ////////////////////
இவர்கள் அனைவரும் மன்னிக்கப்படவில்லையாயின் இவர்கள் பரலோக ராஜ்ஜியம் போக முடியாதல்லவா? மேலும் அகாலமரணமடைந்த யாரும் தேவனிடம் மன்னிப்பை பெற்று கொள்ளாதவர்களா?
மன்னிக்கவும், கொடியதாக இருக்கிறது என்பது Type பண்ணும் போது மாறி கூடியதாக இருக்கிறது என்று வந்துவிட்டது ..
/////////பணத்தினால் வாங்கக்கூடிய எதுவுமே உலகப்பொருள்தான். அதன்மேல் அதிக பற்றுள்ளவர்களாக வாழ கூடாது. அதற்க்காக தேவனின் வார்த்தைகளை மீறி செயல்பட கூடாது. ///////////// சரி அண்ணா நன்றி