இந்த உலகமும் உலகிலுள்ள எல்லாமே இறைவனால் மனிதனுக்க்காகவே படைக்கப்பட்டது என்பதே உண்மை.
இந்த உலகம் உருவானதற்கு அறிவியலில் ஒரு காரணம் இருக்கலாம் அது உண்மையா என்று யாருக்கும் சரியாக தெரியாது காரணம் அறிவியலால் ஒரு குறிப்பிட்டநிலை வரைதான் உண்மையை அறியமுடியும்!
மிக பெரிய மழை வரப்போகிறது என்று சொல்லி விடுமுறை விட பரிந்துரை செய்துவிட்டு, அன்று முழுவதும் வெயில் அடித்த சோகங்களும் உண்டு. இதற்க்கு காரணம் கேட்டால், புயல் வேறுபக்கம் திரும்பிவிட்டது என்று பதில் சொல்வார்கள். இது தான் அறிவியல். அதை திருப்புவது யார் ஏன் அது திரும்புகிறது என்பதை அறிவியலால் முடிவு செய்யமுடியாது அதுதான் ஆண்டவரின் செயல்.
கர்பவதி வயிற்றில் எலும்பு உருவாகிறது என்பதை அறிவியலால் அறிய முடியும் ஆனால் ஒரு திரவம் எப்படி உடைக்க முடியாத எலும்பாகிறது என்பதை அறிவியலால் அறியமுடியாது அதை அறிந்தது ஆண்டவர் ஒருவரே!.
சோதனை குழாயில் குழந்தையை உருவாக்க அறிவியலால் முடியும் ஆனால் அங்கு உருவாகும் குழந்தைக்கு உயிர் மற்றும் சுவாசம் எப்படி வருகிறது என்பதையோ அந்த சுவாசத்தை தங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்கவோ அறிவியலால் முடியாது அது ஆண்ட்வராலேயே முடியும்!
ஒருவருக்கு ஆயுள் முடிவை தீர்மானித்துவிட்டால் நம் கண்களுக்கு தெரிந்த எதாவது ஒரு வழியில் அவர் மரணம் அடைவார். எப்படி மரித்தார் என்பதைத்தான் அறிவியல் சொல்லமுடியும் ஏன் மரித்தார் என்பதையோ அவர் சுவாசம் எதற்க்காக அவரை விட்டு பறிக்கப்பட்டது என்பதையோ அறிவியலால் சொல்ல முடியாது!.
எனவே அறிவியல் சொல்லும் கருத்துக்களை முழுமையாக ஏற்க்கமுடியாது!
எத்தனையோ விதமான உயிரினங்கள் உலகில் இருந்தபோதும் இந்த உலகை முழுமையாக அனுபவிக்க மனிதன் ஒருவனுக்கே தெரியும். இயற்கையை ரசிக்க தெரியும், இன்பத்தில் சிரிக்க தெரியும், துன்பத்தில் அழத்தேரியும், வித விதமான உணவுகளை தயாரித்து உண்டுகளிக்க தெரியும், உயிரினங்களை கட்டுப்பாட்டினுள் வைத்து தனக்கு உதவியாக பயன்படுத்த தெரியும், வானத்தில் பறக்கவும், கடலில் மிதக்கவும், எல்லாவற்றயும் விட வேகமாக இடம் பெயரவும் மனிதனால் முடியும் இன்னும் என்னெனவோ முடியும்..
அதுபோல் இந்த உலகத்தின் அத்தனை பயனையும் அனுபவித்து இன்புற்று இருப்பது மனிதனே! எனவே மனிதனுக்க்காகத்தன் உலகம் படைக்கப்பட்டது என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை என்றே கருதுகிறேன்.