இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தலைவிதி என்று ஒன்று உண்டா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தலைவிதி என்று ஒன்று உண்டா?
Permalink  
 


சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாத சில நிகழ்வுகளுக்கு "அது அவன் தலை விதி" என்று சொல்லி மனிதர்கள் முடித்துவிடுவர். இந்து மதத்தில் "ஊள்வினையின் பலன்" என்று இதற்க்கு பெயரிடப்பட்டு பரவலாக எல்லோராலும் நம்பப்படுகிறது.  கிறிஸ்த்தவத்தில் விதியை பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லப்பட வில்லை என்றாலும்"நாள் பார்க்காமலும், குறி கேளாமலும் இருப்பாயாக"என்று சொல்வதன்
மூலம், நாளை என்ன நடக்கும் என்பதை அறிய முயலாதே அது இறைவனின் கையில் உள்ளது என்று முடித்துவிட்டது. "இஸ்லாத்தில் விதியை பற்றி சர்ச்சை எழுப்பக்கூடாது" என்று சொல்லி அதற்கு எந்த விளக்கமும் இல்லாமலே விடப்பட்டுள்ளது. 

உண்மையில் விதி என்று ஒன்று உண்டா?

ஒருமுறை நான் எனது நண்பர் ஒருவரிடம் ஆண்டவரை பற்றி விளக்கி சொல்லி "நேர்மையான வழியில் ஆண்டவரின் கட்டளைகள்படி  வாழ முயற்சிக்க வேண்டும், இல்லையேல் துன்பமடைய நேரிடும்"  என்று சொல்லிகொண்டிரந்தேன்.
அப்பொழுது அவர் என்னிடம் "நான் உங்களை ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்" என்றார். சரி  என்ன கேள்வி  என்றேன் "நாம் இருவரும் இன்று இந்த இடத்தில் நிற்று இப்படி  இறைவன் பற்றி பேசுவோம் என்பது இறைவனுக்கு முன்கூட்டியே தெரியுமா தெரியாதா?" என்றார். நானும் சிறிது யோசித்துவிட்டு "நான் நினைத்தால்  உங்களிடம் இறைவனைப்பற்றி சொல்லவும் முடியும், அதே நேரத்தில் நமக்கு ஏன் வம்பு  என்று எண்ணி  ஒன்றும்  சொல்லாமலும் போக முடியும், அது என்னிடத்தில்தான் இருக்கிறது, எனவே அது ஆண்டவருக்கு தெரியாது என்றேன்.

உடனே அவர் "என்னசார் கடவுளை இவ்வளவுகுறைவாக எடைபோட்டு விட்டீர்கள் நாளை என்ன நடக்கும் என்று தெரியாதவரா ஒரு வல்லமை உள்ள கடவுள்? அவர் மிகமிக பெரியவர், அவர் அனைத்தும்அறிந்தவர் எப்பொழுது எங்கு என்ன நடக்கும் என்பது எல்லாமே அவருக்கு முன்கூட்டியே தெரியும்!  நீங்கள் அவரை சரியாக அறியவில்லை அதுதான் இப்படி சொல்லுகிறீர்கள் என்று சொல்லி என்னை வாயடைத்துவிட்டார்.   

உடனே நான் அவரிடம்  "சரி ஐயா! அவர் பெரியவர், எல்லாம் அறிந்தவர்தான், நாம் இங்கு நின்று அவரை பற்றி பேசுவோம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியும் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கும் என்  சொல்லை கேடடு  நீங்கள் நேர்மையாக நடப்பதற்கும் என்ன சம்பத்தம்? என்றேன்.

உடனே அவர். "நாளை எங்கு என்ன  எப்படி நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த கடவுளுக்கு, நான் எங்கு பிறப்பேன், எப்படி
வாழ்வேன், என்னென்ன செய்வேன்,
எங்கு  என் வாழ்க்கை முடியும் என்பது எல்லாமே முன்கூட்டியே அவருக்கு தெரியும். நான் இப்படித்தான் இருப்பேன் என்று முன்கூட்டியே தீர்மானித்து  அவர் என்னை இங்கு படைத்து விட்டார், எனவே நான் இப்படித்தான் இருப்பேன். அதே போல்  உங்களை இப்படித்தான்  கஷ்டப்பட நேர்மையாக வாழ்ந்து 
ஒவ்வொரு வரிடமும் இறைவனைப் பற்றி சொல்லிக்கொண்டு அலையவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்து படைத்துவிட்டார் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்" கடவுள் படைத்ததை யார்  மாற்ற  முடியும்?  எனவே உங்கள் அறிவுரையால் என்னை ஒருபோதும் மாற்றமுடியாது,  நான் இப்படி இருக்கவேண்டும் என்று இறைவனால் படைக்கப்பட்டதால் இப்படித் தான் இருப்பேன் என்னை மாற்ற முயலாதீர்கள்  என்று சிம்பிளாக சொல்லி முடித்து விட்டார்

எனக்கு இரண்டு நாளாக ஒரே மனகுழப்பம்! கடவுள் எல்லவற்ற்யுமே
முன்கூட்டி தீர்மானித்து படைத்து விட்டால் பிறகு "நீ இப்படி வாழ், நன்மை செய், நியாயம் செய் என்று நம்மை பார்த்து ஏன் கூற வேண்டும்? பெரிய வேத புத்தகத்தை எழுதிக் கொண்டு கற்பனைகள் கட்டளைகளை கொய்கொள் என்று ஏன் போதிக்கவேண்டும்?
என்று ஒருபுறமும்  இன்னொரு புறம், இறைவன் அனைத்தையும் படைத்து ஆண்டு நடத்தும் மிகப்பெரியவர்  அவருக்கு தெரியாத ஒரு எதிர்காலம்
இருக்கமுடியாதே" என்று மறுபுறமும் மிகவும் குழம்பிவிட்டேன்.

கடைசியில் எனது வழக்கப்படி ஒருநாள் இரவு தனிமையில் சென்று இறைவனிடம் கேட்க ஆரம்பித்தேன் "விதி என்று ஒன்று உள்ளதா? அவர் கேட்ட கேள்விக்கு சரியான பதில் என்ன என்பஹ்தை எனக்கு
விளக்க வேண்டும் என்று மணிக் கணக்கில் மன்றாடினேன்.

அப்பொழுது ஆண்டவர் எனக்கு தெரிப்படுத்தியது!  

ஒவ்வொரு மனிதன் படைக்கப்படும் போதும், அவன் இந்த உலகம் தோன்றுவதற்கு
முன்னே நடந்த சில பூர்வ காரணங்களின் அடிப்படையில் 
 "இங்கு, இந்த தாய் வயிற்றில் பிறந்து, இப்படி போய், இங்கு வாழ்ந்து,  இவ்வாறு மரணமடைவான்" என்ற விதி என்னும் ஒரு தலைஎழுத்து எழுதப்பட்டுதான் பிறக்கிறான். அவன் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளவேண்டி இறைவனை தேடாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றும் உலக வாழ்க்கை வசதிகளுக்காக மட்டுமே இறைவனை தேடியும், வாழ்வான் என்றால் அவன் தனக்கு நிர்ணயிக்க பட்ட விதியின் கோட்டிலேயேசரியாக சென்று அதை போலவே மரணமடைவான்.

ஆனால் அதே விதிக்கொட்டில் போய் கொண்டிருக்கும் ஒருவன் "உலகில் நடக்கும் புரியாத புதிரான  காரியங்களை பார்த்து,  பாதிக்கப்பட்டு,  பல்வேறு பதில்லா கேள்விகளால் குழம்பி,  ஒரு இடத்தில் நின்று "கடவுளே இங்கு என்ன நடக்கிறது, நான் எதற்க்காக இந்த பூமியில் படைக்கப்பட்டேன் உண்மையை விளக்க மாட்டீரா" என்று கதறினால் அவனுக்கு அனைத்தையும்
வெளிப்படுத்தி எனது வழிகளை தெரியப்படுத்துவதொடு மட்டுமல்லாமல் அவனுக்கு எழுதப்படுள்ள விதியையே மாற்றும் வல்லமை எனக்கு உண்டு அப்படி உண்மையை அறிந்தவர்கள் அநேகர் இருக்கின்றனர்" என்றும் பதில் தந்தார். 

மறுநாள் என் நண்பரிடம் சென்று"நண்பரே நீங்கள் சொன்னது
சரிதான் உங்களுக்கு ஒரு விதி எழுதப்பட்டுள்ளது, அந்த  எழுதப்பட்ட விதியின் பாதையில் கொடூரமான நித்திய அழிவை நோக்கி  போகும் உங்களை திருப்பத்தான் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்! இந்த நிலையில் நீங்கள் இறைவனை நோக்கி கெஞ்சினால் உங்கள் விதியை மாற்றி அமைத்து  தனது வழியை உங்களுக்கு போதித்து, நித்திய ஜீவனை தருவார். ஆனால் அவர் எனக்கு வழியை நியமித்து விட்டார், நான் அவ்வழியிலேயே போவேன் என்று வாழாதிருப்பீர்களானால் உங்கள் முடிவு மிகமோசமானதாக  இருக்கும் என்று சொன்னதோடு எழுதியவிதியை  மாற்ற அவருக்கு வல்லமை உள்ளது என்று நினைக்கிறீர்களா இல்லையா என்று கேட்டேன். உடனே அவர் எழுதிய விதியை எல்லாம் யாராலும் மற்ற முடியாது என்றார்.

"ஏன் நண்பரே கடவுளை இவ்வளவு குறைவாக மதிப்பிட்டுள்ளீர்? அவர் மிக மிக பெரியவர் அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள்தான் சொன்னிர்கள் அவர் எழுதியதை அவரால் மாற்றமுடியாதா?" என்று அவர் சொன்ன பதிலையே சொல்லி திரும்ப கேட்டேன்  
உடனே அவர் "சரி உண்மைதான்,அவரால்
எல்லாம் முடியும் அவர் எழுதிய விதியைகூட மாற்ற அவரால் நிச்சயம்  முடியும் என்றார்
 
அப்பொழுது நான், "அவரால் உங்களுக்கு எழுதிய விதியை மாற்றமுடியும் என்றால் உங்கள்  நடத்தையின்  அடிப்படையில்  உங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் எதையும் அவரால் மாற்றி அமைக்க முடியும் அகவே இறைவனை இன்றே  தேடி இயேசுவை  ஏற்றுக்கொண்டு நேர்மை வழியில் நடவுங்கள்' என்று சொன்னேன் அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
 

(இது வேறுஒரு இடத்தில் பதியப்பட்டுள்ள எனதுபதிவின் சில மாற்றங்கள் செய்யப்பட்ட மீள்பதிவு)
 


-- Edited by SUNDAR on Monday 10th of May 2010 05:41:09 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)இளையவர்

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

உண்மையிலே நல்ல பதில்தான்.

விதியைப்பற்றி கதைப்பவர்கட்கு நல்ல பதில்

__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 22:12
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard