இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனிதன் மரித்தபின் ஒன்றும் அறியானா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
மனிதன் மரித்தபின் ஒன்றும் அறியானா?
Permalink  
 


கீழ்க்கண்ட வசனங்களை சுட்டிகாட்டி சில சகோதரர்கள் பாதளம் என்று எதுவும் இல்லை மரித்தவார்கள் ஒன்றும் அறியமாட்டார்கள் என்று கருதுகின்றனர்.
 
பிரசங்கி 9:5,10 மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
 
இந்த  வசனத்தை கொஞ்சம் நன்றாக ஆராய்ந்து  பார்த்தால்  
 
1. மரித்தவன் ஒன்றும் அறியான்
2. இனி அவனுக்கு ஒரு பயனும் இல்லை
3. அவன் பெர்யர் மறைக்கப்பட்டிருக்கிறது
3. போகிற பாதாளத்தில் நடக்கும் செய்கையை அறியும் ஞானம் இல்லை.
 
இதில் முதல் வரியை  நமது தலைப்புக்கு  அடிப்படையாக எடுத்து கொண்டால் இரண்டாம் வரி பொய்யாகிவிடும். "மரித்தவனுக்கு இனி ஒரு பயனும் இல்லையா?" அவன் மீண்டும் எழுந்திருப்பான்  என்று தானியேல்  சொல்கிறார் / இயேசுவும்  சொல்கிறார் பலருக்கு  நித்திய ஜீவன் என்னும் பயன்  உண்டு என்றும் அவரே சொல்கிறார் அவ்வாறிருக்கும் போது இனி ஒரு பயனும் இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்?
 
உண்மையில் சாலமன் ஞானி  மரித்தவனைபற்றிய இந்த இவ்உலகநிலையே இவ்வசனத்தில் எடுத்து கூறியிருக்கிறார்.  அவ்வாறு பார்த்தால் இவ்வசனம் சரியாக பொருந்தும்.
 
ஒருவன் மரித்தபின் இவ்வுலகில் நடப்பதை ஒன்றும் அறியான். அவனுக்கு இவ்வுலகில் எந்த பயனும் இல்லை, அவன் பெயர் இவ்வுலகில் விரைவில் மறைக்கப்படுகிறது, அவன் மரித்தபின் போகும் பாதாளத்தில் என்ன நடக்கும் என்பதை அறியும் ஞானம் அவனுக்கு இல்லை   
 
இதுதான் இவ்வசனத்தின் சரியான பொருள்.
 
சங்கீதம் 6:5 மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

மரித்தவர்கள் யாரும் தேவனை நினைவு கூறுவது இல்லை,
பாதாளத்தில் வேதனை 
 அனுபவிக்கும்  யாரும் தேவனை துதிக்க மாட்டார்கள்  அதையே இவ்வசனம் சொல்கிறது 

தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

பூமியின்  தூளில் நித்திரை பண்ணும் அநேகரில் (இது மேல் பாதாளத்தில் இருக்கும் நித்திரை நிலையை குறிக்கும்) இதில் சிலர் நித்திய ஜீவனுக்கு சிலர் நித்திய நிந்தைக்கும் எழுவார்கள். மற்றவர்கள் இறுதி நியாயதீர்ப்பு வரை அங்கேயே இருப்பார்கள்.
  
 


-- Edited by SUNDAR on Friday 28th of May 2010 08:45:54 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பிரசங்கியில் (9: 5-10௦) கருத்துக்களில் எல்லாமே ஒரு மரணவீட்டில் அமர்ந்துகொண்டு ஒரு தத்துவஞானி மரித்தவனின் உலக நிலை பற்றி பொதுவாக சொல்வது போல்வே அமைந்துள்ளன   
 
இங்கு முக்கிய வேறுபாடை தரும் வசனம்   
 
they have no further reward,
அவர்களுக்கு அடுத்து (மரணத்துக்கு பிறகு) எதுவும் வெகுமதி கிடையாது
 
மரித்தவனுக்கு அவன் செய்கையின் அடிப்படையில் மரணத்துக்கு பின் சிலருக்கு நித்திய  ஜீவன் சிலருக்கு நித்திய நிந்தை என்ற வெகுமதி மற்றும் தண்டனை உண்டு என்பதை தானியல்  வசனம் திட்டவட்டமாக சொல்கிறது.
 
இந்நிலையில் "மரித்தவனுக்கு  வெகுமதியே இல்லை"  என்று பிரசங்கி சொல்வதால் அவ்வசனம்  நிச்சயம் "மரணத்துக்கு பின் அவனுக்கு இந்த உலகில் எந்த வெகுமதியும் இல்லை" என்றே பொருள்கொள்ள முடியும். சிலருக்கு மரித்தபின் கூட இந்த உலகம் வெகுமதி கொடுத்தாலும் அதனால் மரித்தவனுக்கு எந்த பலனும் இல்லை. எனவே அவ்வாசனம் உலகத்தில் உள்ளவர்களுக்கு மரித்தவனின் உலகநிலை என்னவென்பதை குறிப்பிடவே சொல்லப்பட்டது. .   
  
மேலும்  மரித்தவர்கள்  சிலர் உணர்வுடன்  பாதாளத்தில் நிந்தையை சுமந்துகொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர்கள்  பாதாளத்தினுள் நடுவில் இருந்து பேசுவார்கள் என்றும் கீழ்க்கண்ட வசனம் சொல்லுகிறது.  
 
எசேக்கியேல் 32:21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.

எசேக்கியேல் 32:30
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
 
இவ்வாறு இருக்கையில் மரித்தவர்கள் ஓன்று அறியாத நிலையில் மட்டுமே இருக்கிறார்கள் என்று பல சகோதரர்கள் சொல்லும்  கூற்றை ஏற்க்கமுடியவில்லை.. என்னை பொறுத்தவரை சிலர் ஒன்றுமறியா தூக்கநிலையிலும் சிலர் வேதனை அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்றே  கருதுகிறேன்    
 
காரணம்  "நரகம்" என்ற வார்த்தைக்கு  வேதனையுள்ள இடம் என்று பொருள் கொள்ளலாம் என்று கருதுகிறேன். ( Hell is a place of suffering and punishment)இங்கு நரக பாதாளத்தில் கிடக்கிறார்கள் என்று நிகழ காலத்தில் வேதம் குறிப்பிடும் இடம் எது ?   
 
நீதிமொழிகள் 9:18 ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்
 
நிச்சயமாக அது ஏதோ ஒரு வேதனையுள்ள இடமாகத்தான் இருக்க முடியும். இந்த இடத்தைதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மரித்த ஐஸ்வர்யாவான் போனஇடம் என்று குறிப்பிடுகிறார்  
  
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
 
இதற்க்கு தொடர்புடைய வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இருக்கும்போது, ஐஸ்வர்யாவான் லாசரு உவமையில் இயேசு இல்லாத ஒன்றை கற்பனைபண்ணி  சொல்லி பயம்காட்டினரா? 
 
இயேசுவின்  உவமைகளில்  எல்லாமே உலகஉண்மை  நிலைகளோடு ஒத்ததாகவும்
உலகில் நடக்கும் காரியங்களுமாகவே இருந்தது
அது போல்  லாசரு மரித்து ஆபிரகாம் மடிக்கும் ஐஸ்வர்யவன் மரித்து பாதாளத்தில் வேதனை அனுபவித்ததும் ஒரு உண்மை உவமையாகவே இருக்க முடியும் மாறாக  எந்த ஒரு அடிப்படையும் இல்லாத அர்த்தமற்ற உவமையை இயேசு சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.  எனவே மரித்தபின் மனிதர்கள்  ஒன்றுமில்லாமல் போவது இல்லை. அவர்கள் துன்பம் அனுபவிக்கும்  இடம்  மற்றும் தேற்றப்படும் இடம்  நிச்சயம் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

These days I am researching this subject more thoroughly.  I have not fully convinced eitherway. What I have came to know is when God created man He used two basic elements the dust of the earth and His own breath to make man. In this process man became a living soul. Though God used two elements man possesed a third element soul in creation. Soul is understood as man's own pesonality or his own person.  So man has three parts human spirit, soul and body.  Creator God assembled man by His hand. For man to be a living being he needs to be united with God and seperated from evil. God is his creator his source and supply.  When he leave God man will be dismantled, this process is called death.  The day Adam ate from the tree of knowledge of good and evil, the third part the spirit connected him with God became non functional in man. Man became an independant person, man joined satan. This is the death God told Adam in Gen 2:17.  By this fall man joined satan and left God. Man's saul and body still attached together and fully functional thereby he still has some life left in him until the body(dust) returned to the earth.  This will be the second dismantling event, body leaving the soul.  ECC 2:7 and the dust returns to the ground it came from, and the spirit returns to God who gave it. This shows after death man is not in his entirety. He cannot have communion with God because the spirit left him. He has no body means he cannot express himself, cannot praise God. Satan has no power over him, man's body becoming dead means even satan as the flesh(lust) is seperated from his body thus not bothered by satan.  Now the key question is what is soul and what happens to it when it detached from the body. Can a soul think without a physical brain can a soul experience pain without a body? In the scripture death is some times called as sleep. For a comparision in sleep of a living person the body is still exists though its completely unaware of whats happening.  In sleep of a dead person there is no physical body connected at all.  So I await for lord to shed more light on this subject may be through this forum! much grace , loga.   - I am sorry I could not write this in Tamil.__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே,


தங்களது கேள்வியும்,சந்தேகமும் ஆச்சர்யபடுத்துகிறது. நான் மனித ஆவியை குறித்தும், மரணத்தை குறித்தும் தியானத்தின் பொது அறிந்துகொண்டவைகளை விவரமாய் பகிருகிறேன்..

மனித ஆவியை குறித்து..

மனிதன்
ஒரு மனுஷன் என்பவன் ஆவி ஆத்துமா சரீரம் இம்மொன்றையும் உள்ளடக்கியவன். 
ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

I தெசலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

மனித ஆவி-தீபம் 

நீதிமொழிகளில் இந்த ஆவி 'தீபம்' என சில இடங்களில் சொல்லபடுகிறது..

நீதிமொழிகள் 20:27 மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.

நீதிமொழிகள் 13:9 நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.

நீதிமொழிகள் 20:20 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.
தீபம் அணைந்துபோதல் மரணத்தை குறிக்கிறது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை...

மனித ஆவி-நாசியின் சுவாசம் 
அதை போலவே.,வேதத்தில் தேவனுடைய ஆவி பல இடங்களில் தேவனின் நாசியின் சுவாசமாக சொல்லப்பட்டுள்ளது..அவர் தமது சாயலாக நம்மை சிருஸ்டித்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.. 

யோபு 27:2 என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,.
நாம் ஏந்தியுள்ள ஆவியும் நாசியின் சுவாசம் தான் என வேதம் கூறுகிறது..

ஆகவே தான் நாசியின் சுவாசத்தை போதையின் வஸ்துகளுக்கு கொடுத்து கரை படுத்தும் காரியம் அருவருப்பாக என்னபடுகிறது..புகைபிடிக்கும் காரியமும்,புகையிலை வஸ்துக்களை பயன்படுத்தும் காரியமும் அவ்வாறானது தான்..

எசேக்கியேல் 8:17 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள் 

தேவ ஆவி அளவில்லாதது
தேவ ஆவிக்கு அளவில்லை.. ஆனால் நம்முடைய ஆவிக்கு அளவு உண்டு.நம்முடைய ஆவி பரிபூரனபடாதது(இன்னும் நித்திய ஜீவனை சுதந்தரிகாதது).ஆகவே தான் மரிக்கிறோம். 

மல்கியா 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே... 

இன்னும் தெளிவாய் சொல்லவேண்டுமானால்,

ஆதியிலே தேவன் மண்ணினாலே மனுஷனை உண்டாக்கி, நாம் ஜீவாத்துமாவாக தமதாவியை நாசியில் ஊதினாரே, அதைப்போலவே மகிமையின் உயிர்த்தெளுதலுக்கு பின் தம் அப்போஸ்தலர்களுக்கும், சீஷர்களுக்கும் பரிசுத்த ஆவியை வாயினால் ஊதி, புது சிருஸ்ட்டியாகினாரே!! 

ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

யோவான் 20:22 அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;

சரி, மனிதன் முதன் முதலில் சிருஸ்டிக்கப்படும்போது,ஆவி ஊதப்படுவதர்க்கு முன்புவரை ஜீவாத்துமாவாய் இருக்கவில்லை. ஊதப்பட்ட பின் தான் ஜீவாத்துமாவானான்.

ஆனால், புதிய ஏற்பாட்டு காலத்தில்,ஜீவாதுமாவாயும், அப்போஸ்தலர்களும்,சீஷர்களுமாய் இருந்தவர்களுக்கு மீது கர்த்தர் ஊதுகிறார். ஜீவாதுமாவாய் இருக்கிறவர்கள் மீது தேவன் என் ஊதுகிறார் என அறிய முற்பட்டபோது.. அவர்களின் ஜீவன் பூரணப்படவே என அறிய முடிந்தது!!

யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

ஜீவன் உண்டானதும் ,பரிபூரப்படுவதும் கிறிஸ்துவில் தான்..அல்லேலுயா!!

ஆவியில் அனலில்லாதவர்கள்..

கிறிஸ்துவினால் உண்டாகும் மேற்கூறிய பரிபூரணப்படுதல் இல்லாதவர்கள் ஆவியில் அனலிலாதவர்கலாக இருக்கிறார்கள். இதை பற்றி தேவைபட்டால் தனியே விவரித்து பேசலாம்..

ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்..

வெளி 3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

 
ஆவியில்லாத ஜனங்கள்..

இந்த சாரார் கிறிஸ்துவின் ஆவியை பெறாமல் பாவ வாழ்க்கை வாழுகிறவர்கள்.. இவர்கள் ஆவியற்ற ஜனங்கள்!! ('தான்' என்பது 'மாம்சம்' மாத்திரம் தான் என வாழும் 'இசையின் நெறியை' உடைய சாரார்!!)

யூதா 1:19 இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.

ரோமர் 8:9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.


மரிக்கும் போது என்ன நிகழ்கிறது பற்றி வேதத்தின் படி நான் அறிந்தவைகளை தொடரபோகிற பதிவில் பகிறுகிறேன்.


GLORY TO GOD.


-- Edited by JOHN12 on Wednesday 12th of December 2012 05:06:03 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே,


மாம்சம் சீராய் இருந்தாலும்,ஆவி நமக்கு இல்லாமல் போகுமேயானால் சகோ.சுந்தர் சொல்வது போல் நாம் தேவனது பார்வையில் செத்தவர்கலாக இருப்போம் என்பது தெளிவு..
ஆனால், சகோதரர், சரீரத்தில் நிகழ்கிற மரணத்தை பற்றி ஆர்வமுள்ளவராய் இருக்கிறபடியினால் சரீர மரணத்தை பற்றியே பேசுவோம்..
வேதம் மனிதன் உருவானதை குறித்து பின்வருமாறு கூறுகிறது..

ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

மரணம் என்பது இவற்றின் தலைகீழ் நிகழ்வே!! வேதம் சொல்லும் மரண நிகழ்வை தியானிப்போம்..
மரண வேளையில் எடுக்கப்படுவது அல்லது முதலில் பிரிந்து போக கூடியவைகளாக ஆவியையும்,ஆத்துமாவையும் வேதம் கூறுகிறது..

சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

யோபு 27:5 நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.

ஆதியாகமம் 35:18 மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

லூக்கா 12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

ஆவியை விடாதிருக்க ஒருவருக்கும் அதிகாரம் இல்லை என கூறுகிற அதே வேதத்தில் மனுஷகுமாரனாகிய இயேசு தமக்கு அதிகாரம் இருப்பதாக கூறுவதும் கவனிக்க தக்கது..

பிரசங்கி 8:8 ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

யோவான் 10:18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

மேலும் தமது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றுவதாக அவர் கூறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது..

ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

நமக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்பது தெளிவு..

ஆத்துமா முதலாவதாக பிரியும அல்லது ஆவி முதலாவதாக பிரியும என்றால் ஆவியே முதலில் பிரியும்.. இதை ஏசுவின் சிலுவை மரணத்தில் இருந்து அறியலாம். அவர் மரிக்கும் முன்பாக ஆவியை பிதாவிடம் முதலாவதாக ஒப்புவித்து மரித்தார். ஆத்துமாவை முதலாவதாக ஒப்புகொடுப்பதாக கூறவில்லை. ஆனால் ஆத்துமாவையோ நமக்காக மரணத்தில் ஊற்றினார்..

லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி..

அறிவியலும் இதையே வழிமொழிகிறது.. இதய துடிப்பு நிற்கும் போது, சுவாசம் முற்றும். அப்போது மரணம் நேரிடுகிறது,இவ்வேளையில் உடனடியாக ரத்த ஓட்டம் நிற்கிறது, உடலின் வெப்பநிலை தணிகிறது.. இதனை 'Clinical death' என்கிறார்கள். பின்பு நான்கிலிருந்து ஆறு நிமிடத்திற்குள் மூளையின் செல்கள்  இறக்க ஆரம்பிக்கின்றன மரணத்தின் இந்த நிலையினை ' biological death' என்கிறார்கள்.  

மனித ஆவி என்பது சுவாசத்திற்கும்,ஆத்துமா என்பது நினைவுகளுக்கும் தொடர்புடையதாக இருக்கிறபடியால் ,இப்பூமியில் நிகழப்போகிற சரீர மரணத்தின்  இரண்டு நிலைகளான  'ஆவி' பிரிதலை 'Clinical death'-க்கும், ஆத்துமா பிரிதலை 'biological death'-க்கும் நிறுத்தி பார்த்தல் சரியானதாக இருக்கும்!! மேலும் இது படைப்பின் தலிகீல் நிகழ்விற்கு சரியாய் இருக்கிறது.. அதாவது., ஆவி முதலாவதாக பிரிந்து,பின் ஆத்துமா பிரிந்து சரீரம் மண்ணுக்கு திரும்புஇம் நிகழ்விற்கு மேற்சொன்ன அறிவியல் விளக்கம் சரியாய் இருக்கிறது.. 

ஆதியாகமம் 3:19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

யோசனைகள் அழிந்த பின் பூமியில் இறந்தவர் எவ்வாறு கிரியை நிகழ்த்த இயலும். உறங்கிய பின் நடக்கிறவர்களை போல மரணத்திற்கு பின் நடக்கிரவர்களை வேதமும் காட்டவில்லை,அறிவியலும் காட்டவில்லை. பிரசங்கி,சங்கீதக்காரர்கள் சொல்வது போல மரித்தவர்களுக்கு இப்பூமியில் எந்த கிரியையும் இல்லை. தேவன் உண்டாக்கும் புதிய பூமியிலும் வானத்திலும் மரித்த பரிசுத்தவான்களுக்கு நித்திய ஓய்வு / இளைப்பாறுதல் இருக்கும்(இதற்க்கு அடையாளமாக ஓய்வு நாள் உருவாக்கப்பட்டதும் கருத்தில் கொள்ளத்தக்கது). நரகம்/அக்கினிகடலில் இருப்போர்க்கு நித்திய பற்கடிப்பு/அழுகை/அழிவு இருக்கும். 

தேவனுக்கு மகிமை உண்டாவதாக!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

II பேதுரு 3:13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

மனிதனின் அமைப்பு மற்றும் மரணம் பற்றிய சகோதரர்களின் விளக்கங்கள் அருமை. சகோ. Loga அவர்கள்  மிக ஆழமாகவும் ஆச்சர்யப்படும் விதமாகவும் மனித அமைப்பை அலசியிருப்பது இறை வெளிப்பாடேயன்றி வேறல்ல என்று  கருதுகிறேன். சகோ ஜான்12 அவர்கள் இந்த் கருத்து சம்பந்தமான விவிலிய ஆதாரம் எல்லாவற்றையுமே பதிந்துவிட்டார்.         
 
இறைவனின் இந்த உலக படைப்பில் இரண்டு பொருட்களையோ மூன்று பொருட்களையோ ஒன்றாக ஏற்ற விதத்தில  கலக்கும்போது புதிதாக ஒரு பொருள் உருவாகிறது.
 
அதேபோல் தேவஆவியும் மண்ணாலான சரீரமும் ஒன்றாக சேரும்போது "ஜீவாத்துமா" என்றொரு புது அமைப்பு உருவாகிறது.
இவ்வாறு இருக்கையில் சரீரம் தான் எடுக்கபட்ட பூமிக்கும், தேவன் தந்த ஆவி பிரிந்து அவரிடத்துக்கும் செனறுவிடும்போது இந்த ஆத்துமா என்ற புது அமைப்பு என்ன ஆகும்? அதுவும் இல்லாமல் போய்விடுமா அல்லது அது ஜீவத்துமாவாக இருப்பதால் பாதாளம் என்று சொல்லப்படும் இடத்தில் தங்கியிருக்குமா?  என்பது இங்கு  உருவாகும் கேள்வி.
 
அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து புதிதாக ஒரு ஜீவனை உருவாக்குகின்றனர். அந்த ஆணும் பெண்ணும் மறைந்து போனபிறகும் இந்த புது ஜீவன் உயிர்வாழதானே செய்கிறது?  
 
அதுபோல் தேவ ஆவியும் மண்ணான சரீரமும் ஓன்று கூடும்போது உருவான ஆத்துமா பாதாளத்தில் தங்கியிருக்கலாம் காரணம் மரித்தவர்கள் பலர் பாதாளத்தில் இருந்து பேசுவதாக மேலேயே விவிலிய வசனம் சொல்லப்பட்டுள்ளது. 
 
///எசேக்கியேல் 32:21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.///
.
ஆத்துமா என்று சொல்லப்படும் அந்த அமைப்புக்கு எந்த திட திரவ வாயு என்ற எந்த நிலையம் கிடையாது ஆனாலும் அது ஒரு 
அமைப்பாக இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் ஆத்துமா என்பது  ஒரு மனிதனின் செயல்பாடுகளின் தொகுப்பு என்றே நான் கருதுகிறேன். அந்த தொகுப்பு  தேவனின் இறுதி நாள் நியாயதீப்புக்காக ஓரிடத்தில் காத்திருக்கிறது.  
    
 இது  குறித்த வெளிப்பாடு உள்ளவர்கள் பதில் தாருங்களேன்.
  -- Edited by Nesan on Thursday 13th of December 2012 04:59:59 PM__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

 

அன்பு சகோதரரே

உங்கள் விளக்கத்துக்கு மிகவும் நன்றி. வசனத்தை ஆழமாகப் படிக்கும் உங்களை தேவன்  ஆசிர்வதிப்பார்.

முதல் விடயம் :

ஒரு மனுஷன் ஆவி ஆத்துமா சரீரம் இம்மொன்றையும் உள்ளடக்கியவன்- நான் ஏற்றுகொள்ளுகிறேன்.

மரணம் என்பது இவற்றின் தலைகீழ் நிகழ்வே!! என்பதயும்  நான் அதிக பங்கு ஏற்றுக்கொள்ளுகிறேன்.

சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும்அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

அவர் மரிக்கும் முன்பாக ஆவியை பிதாவிடம் முதலாவதாக ஒப்புவித்து மரித்தார். ஆத்துமாவை முதலாவதாக ஒப்புகொடுப்பதாக கூறவில்லை. ஆனால் ஆத்துமாவையோ நமக்காக

மரணத்தில் ஊற்றினார்..

ஆவியை பிதாவிடம் ஒப்புகொடுத்தார் என்பது சரி அத்தோடு வசனம் சொல்லுவது போல ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார். இது மனிதர் எல்லாருக்கும் 

பொதுவானதே. 

ஆவியைப்போல ஆத்துமாவும் உடலைவிட்டுப் பிரிந்தது. உடல் செயலற்ற நிலையில் இருப்பது தெளிவு. 

எனக்கு இன்னும் விளங்காமல் இருப்பது என்னவென்றால் இறந்தவர்களின் ஆத்துமா (1) எங்கே (2) என்ன நிலையில் இருக்கின்றது என்பதே. 

ஏனென்றால் மேலே காட்டிய விளக்கம் பணக்கார மனிதன்/ லாசரஸ் கதையை உவமையாகவே காட்டும். ஆபிரகாம் மடியில் லாசரு இருப்பதாக கா ட்டாது என்ன்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது :

 

மனிதன் முதன் முதலில் சிருஸ்டிக்கப்படும்போது,ஆவி ஊதப்படுவதர்க்கு முன்புவரை ஜீவாத்துமாவாய் இருக்கவில்லை. ஊதப்பட்ட பின் தான் ஜீவாத்துமாவானான்.

ஆனால்புதிய ஏற்பாட்டு காலத்தில்ஜீவாதுமாவாயும்அப்போஸ்தலர்களும்சீஷர்களுமாய் இருந்தவர்களுக்கு மீது கர்த்தர் ஊதுகிறார். ஜீவாதுமாவாய் இருக்கிறவர்கள் மீது தேவன் என்

 ஊதுகிறார் என அறிய முற்பட்டபோது.. அவர்களின் ஜீவன் பூரணப்படவே என அறிய முடிந்தது!!

 

ஜீவாதுமாவாய் இருக்கிறவர்கள் மீது தேவன் ஏன் ஊதுகிறார் என்பதற்கு ஆவியில் இறந்து போயிருக்கும் அவர்களை மறுபடியும் ஜெனிப்பிக்கவே என்பது எனது அறிவு.

மிகவும் நன்றி 

 

 __________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard