இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்த தேவனின் பல்வேறு நிலைகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: பரிசுத்த தேவனின் பல்வேறு நிலைகள்!
Permalink  
 


Debora wrote:

ஒரே தேவன் தானே

திரித்துவ தேவன் தானே தாங்கள் குறிப்பிடும் மகத்துவமுள்ள தேவன் ?????


"தேவன் ஒருவரே" பாவத்தில் வீழ்ந்த மனுஷர்களை மீட்க்க  அவர் மூன்று ஆள்த்துவமாக செயல்படுகிறார்  அது திரித்துவமா அல்லது போர்த்துவமா என்று எனக்கு சரியாக தெரியாது. காரணம் அதுகுறித்து வேதத்தில் விளக்கம் இல்லை. 

ஆனால்நா நான்  சொல்லும் "ஓரே தேவன்" என்பதற்கு அநேக வசன ஆதாரம் இருக்கிறது. 
 
கொரிந்தியர் 12:6  எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
 
எதற்கு எடுத்தாலும் என்னிடம் வசன ஆதாரம் கேட்க்கும் நீங்கள் எழுதியுள்ள  "திரித்துவ தேவன்" என்ற வார்த்தைக்கு  சரியான இரண்டு ஆதார வசனம் இருந்தால் தாருங்கள்.
   
("பரலோகத்தில் சாட்சியிடுபவைகள் மூன்று" என்று சொல்லப்படும் வசனம் பிராக்கெட்டுக்குள் போடப்பட்டு பின்னாளில்  சேர்க்கப்பட்டது. மேலும் மூவர் சாட்சியிடுவார்கள் என்றால்  பரலோகத்தில் மொத்தம் மூன்றுபேர்கள் மட்டும்தான்  இருக்கிறார்கள் என்று நாம் பொருள்கொள்ள முடியாது. பரலோகத்தில் மனுஷனை  குறித்தோ அல்லாது தேவனைகுறித்தோ சாட்சியிடுபவைகள் மூன்றாக இருக்கலாம். அதற்கு மேலும் அந்த சாட்சிகளை  கேட்கிறவர் ஒருவர் இருக்கலாமே!  எனவே வசனம் தேவத்துவத்தை பற்றி இவ்வளவுதான் அறுதியிட்டு சொல்லாத பட்சத்தில், நமது
முடிவாக நீங்கள் சொல்வதுபோல் நம் இஷடத்துக்கு எதையும் அளவிட்டு தீர்மானிக்க முடியாது)  

எனவே அதை தவிர்த்து, தேவன் திரித்துவமானவர் என்பதை சொல்லும் வேறு இரண்டு அல்லது ஒரேயொரு வசன ஆதாரம் தாருங்கள்.
 
அடுத்து நாம் இக்கருத்து குறித்து தொடரலாம்.... 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

திரித்துவ தேவன் என்று தான் குறிப்பிடப்படவில்லை ஆனால் ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவங்களாக செயல்படுகிறார் என்பது விளங்குகிறது.

யோவான் 1:

1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

14:அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

மேலும் எபி 1:

8குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
9நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;
10கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
11அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகும்;
12ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
13மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?

இவைகள் ஒரே தேவனின் நிலைகளை குறிக்கிறது










__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

திரித்துவ தேவன் என்று தான் குறிப்பிடப்படவில்லை  
 


குறிப்பிடப்படவில்லைவசன ஆதாரம் இல்லை அல்லவா பிறகு ஏன் அதே வார்த்தையை என் மீது மீண்டும் மீண்டும் திணிக்க நினைக்கிறீர்கள்?    

 

Debora wrote:

////ஆனால் ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவங்களாக செயல்படுகிறார் என்பது விளங்குகிறது.//// 

தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனங்கள் மூலம் தேவன் திரித்துவமானவர் என்பதை விளங்க  வைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்  
 
ஆனால் நான் கேட்ட்து நீங்கள் எப்படி விளங்கி கொண்டீர்கள் என்பது அல்ல இதேபோல் நான் ஒரு வசனத்தை சொல்லி இப்படி புரிந்து கொண்டேன் என்று சொன்னதற்கு "குழப்பாதீர்கள்" என்று பதிலுரைத்தீர்கள். அதேபோல் நீங்கள் இப்பொழுது குழப்புகிறீர்கள்

கர்த்தர்  தன்னை பற்றி சொல்லும்போது 

 
ஏசாயா 44:24 கர்த்தர் சொல்லுகிறதாவது: நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
 
"நான் ஒருவராய்" என்று சொல்கிறார் 
 
ஆண்டவர் இயேசு சொல்லும்போது "நாங்கள் இரண்டுபேர் இருக்கிறோம்" என்று சொல்கிறார் 
 
16. நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்
17. இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே
 
இதுவரை தெளிவான வசன ஆதாரம் இருக்கிறது. நானே உங்களுக்கு சொல்லி தருகிறேன். 
 
தேவன் தன்னை நாங்கள் மூவராய் இருக்கொறோம் என்றோ அல்லது எந்த வேதாகம பக்தனாவது தேவனை மூன்றாக அல்லது திரித்துவமாக பார்த்ததாக வசனங்கள் இருந்தால் மாத்திரம் சொல்லுங்க, அதைத்தானே நான் ஆதாரமாக ஏற்க முடியும்.
 
நீங்கள் யாரிடமோ கேட்டு அல்லது யாரோ ஒருவர் சொல்லி புரிந்துகொண்ட உங்கள் புரிதல்பற்றி நான் கேட்க்கவில்லை.
 
  
தேவன் தெரியபடுத்தி நான் அறிந்துகொண்ட என்னுடைய விசுவாசம் என்ன என்பதை அறிய கீழ்கண்ட திரியை வாசிக்கவும்.
 

"பரிசுத்த ஆவியானவர்" - ஓர் விளக்கம்! 

 

 

 



-- Edited by SUNDAR on Saturday 15th of October 2016 01:04:37 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அண்ணா நான் எதையும் உங்கள் மீது திணிக்க விரும்பவில்லை ஆனால் குழப்பாதீர்கள் என்று சொன்னதட்கு மன்னித்து விடுங்கள்..

இப்போ தெளிவாக கூறுங்கள் தாங்கள் எதை ஏற்று கொள்கிறீர்கள் ?

யாரோ சொல்லிக்கொடுத்து நான் உங்களிடம் பேச வில்லை அண்ணா


1 யோவான் 5:


20. அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

இயேசுவே மெய்யான தெய்வம்


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

 
20. அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

இயேசுவே மெய்யான தெய்வம்


 /// இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.///

 
உண்மையிலும் உண்மை. இதற்க்கு எந்த மாற்று கருத்தும் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.  
 
வசனங்களுக்கு நான் எதிர் கருத்து தெரிவித்தால்  பிறகு நான் பெற்ற வெளிப்பாடுகள் தேவனிடம் இருந்து வந்தது என்று சொல்வதில் எந்த பொருளும் இல்லை.
 
இயேசு மெய்யான தேவன் அவரே நித்திய ஜீவன்.  
 
 
 
Debora wrote: 

///யாரோ சொல்லிக்கொடுத்து நான் உங்களிடம் பேச வில்லை அண்ணா ///

 
அப்படி சொல்லவேண்டாம் சிஸ்ட்டர்.
 
வேதத்தில் இல்லாத திரித்துவம் என்ற வார்த்தை யாரும் சொல்லிக்கொடுக்காமல் எப்படி உங்களுக்கு தெரிந்தது?  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அன்பான சகோதரியே நான் திரித்துவத்தை மறுப்பவன் இல்லை. தேவன் "பிதா" "குமாரன்" "பரிசுத்த ஆவியாக" செயல்படுகிறார் என்பதை தனித்தனியே அறிந்தவன்.

   
ஆகினும் தேவத்துவத்தை ஒரு முக்கோண கடடம்போட்டு இப்படித்தான் என்று யாரும் தீர்மானிப்பதை நான் விரும்பவில்லை.
 
அவர் திரித்துவத்துக்கு வெளியேயும் கிரியை செய்ய முடியும் எந்த மனுஷனாலும் அவர் இப்படித்தான் என்று தீர்மானிக்க முடியாது என்பதே எனது கருத்து.
 
யோபு 31:23 தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

நன்றி அண்ணா

தேவன் தெளிவாக இன்று காலையிலிருந்து கற்று தந்தார் காலையிலிருந்து ஒவ்வொரு பதிவாக நான் வேத ஆதாரத்தோடு வாசித்து தெரிந்து கொண்டேன்..

உங்களது கருத்து சரி

அதாவது ஒரே தேவன் 3 ஆள்தத்துவங்களாக கிரியை செய்கிறார்.

பிதா,குமாரன், பரிசுத்த ஆவி

இதட்கு மேலும் அவரால் கிரியை செய்ய முடியும்.. ஏனெனின் அவர் மகத்துவமுள்ளவர். அவருக்கு நாங்கள் எல்லை கோடு விதிக்க முடியாது..

இயேசுவும் தேவன்
பிதாவும் தேவன்
பரிசுத்த ஆவியானவரும் தேவன்

இப்படியும் நாம் சொல்லலாம்.

அதாவது ஒரே தேவன்.. மூவராய் இருக்கிறார்....

நான் கூறுவது சரியா?

இதுவா உங்களது கூற்றும்?




-- Edited by Debora on Monday 17th of October 2016 06:10:29 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

நன்றி அண்ணா

தேவன் தெளிவாக இன்று காலையிலிருந்து கற்று தந்தார் காலையிலிருந்து ஒவ்வொரு பதிவாக நான் வேத ஆதாரத்தோடு வாசித்து தெரிந்து கொண்டேன்..

உங்களது கருத்து சரி

அதாவது ஒரே தேவன் 3 ஆள்தத்துவங்களாக கிரியை செய்கிறார்.

பிதா,குமாரன், பரிசுத்த ஆவி

இதட்கு மேலும் அவரால் கிரியை செய்ய முடியும்.. ஏனெனின் அவர் மகத்துவமுள்ளவர். அவருக்கு நாங்கள் எல்லை கோடு விதிக்க முடியாது..

இயேசுவும் தேவன்
பிதாவும் தேவன்
பரிசுத்த ஆவியானவரும் தேவன்

இப்படியும் நாம் சொல்லலாம்.

அதாவது ஒரே தேவன்.. மூவராய் இருக்கிறார்....

நான் கூறுவது சரியா?

இதுவா உங்களது கூற்றும்?

-- Edited by Debora on Monday 17th of October 2016 06:10:29 PM


 

மிக சரியாக புரிந்துகொண்டீர்கள்.

 
புரிவதற்கு இருதயத்தை திறந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.
 
திறந்த மனதோடு படித்தால் தேவன் நிச்சயம் தன வார்த்தையால் உள்ளங்களை நிரப்புவார்.

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

//////////////SUNDAR



மூத்த உறுப்பினர்


Status: Offline
Posts: 1635
Date: 4 days ago
Permalink Reply Quote Printer Friendly


ஆனால் சர்வ வல்ல தேவனை திரித்துவத்துக்குள் அடைக்க கூடாது. அந்த திரித்துவ தேவனுக்கும் மேலான ஒரு வல்லமையும் உண்டு அனைத்தும் ஒரே தேவனின் மகத்துவங்களே. ////////////////////


திரித்துவத்துக்கும் மேலான ஒரு வல்லமை உண்டு என்று நீங்கள் கூறியது சற்று முரணான கருத்தாக உள்ளது

ஒரே தேவன் தான் மூவராய் செயல்படுகிறார் என்பது தான் எனது கருத்து




__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

தேவனுக்கு மகிமை

ஆனால் நான் கடைசியில் கூறியதட்கு நீங்கள் உடன்படுகிறீர்களா அண்ணா?

அதாவது ஒரே தேவன்.. மூவராய் இருக்கிறார்....

நான் கூறுவது சரியா?

இதுவா உங்களது கூற்றும்?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஒரே தேவன் மூவராய் இருக்கிறார் ஆனால் மூவராய்  மட்டும் இருக்கவில்லை அதற்க்கு மேலும் இருக்கிறார்.
 
மனுஷனுக்கு தெரிந்து அவர் மூவராய் இருக்கிறார் ஆனால் நம் கண்களை திறந்தால் அதற்க்கு மேலானதையும் அவரிடம் பார்க்க முடியும்,
 
இதுதான் நான் அறிந்தது.   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

 
திரித்துவத்துக்கும் மேலான ஒரு வல்லமை உண்டு என்று நீங்கள் கூறியது சற்று முரணான கருத்தாக உள்ளது

ஒரே தேவன் தான் மூவராய் செயல்படுகிறார் என்பது தான் எனது கருத்து



Debora wrote: 
 
///ஒரே தேவன் தான் மூவராய் செயல்படுகிறார் என்பது தான் எனது கருத்து ///
 
உங்கள் கருத்தில், தேவன்  மூவராய் மட்டும் செயல்படுகிறார்/ செயல்படுவார் / மூவராய் மட்டும்தான் செயல்பட முடியும் / அதற்க்கு மேல் அவரால் செய்லபட முடியாது என்ற உட்ப்பொருட்க்கள் அடங்கியிருக்கிறது 
 
என்னுடைய கருத்துப்படி அவர் மூவராய் செயல்படுகிறார் அதற்க்கு மேலேயும் அவரால் செயல்பட முடியும் அவர் இப்படித்தான் செயல்பட முடியும் என்பதை மனுஷன் தீர்மானிக்க முடியாது என்பது.
 
தேவனை முழுமையாக அறிய முடியாத யாரும் அவர் இப்படித்தான் இதற்க்கு மேல் இல்லை என்று எப்படி தீர்மானிக்க முடியும்.
 
தேவனுக்கு நீங்கள் வரையறை அமைப்பீர்களோ? அவர் இப்படி மட்டும்தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடடீர்களோ? 
 

யோபு 37:23 ர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது

என்று வசனம் சொல்கிறதே.   

  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

மூவராய் தானே தன்னை வெளிப்படுத்தினார்

அதட்கு மேலாகவும் அவரால் கிரியை செய்ய முடியும்

அவர் வல்லமையுள்ளவர்

ஆனால் ஒரே தேவன்

அதில் இயேசுவும் தேவன்

என்பதை தான் கூறுகிறேன்

//////தேவனுக்கு நீங்கள் வரையறை அமைப்பீர்களோ? அவர் இப்படி மட்டும்தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடடீர்களோ?///

அண்ணா பெரிய வார்த்தைகளை பேசாதீர்கள் ... சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு நான் வரையறை போட நான் யார்?





__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

நல்லது சிஸ்ட்டர். 
 
தேவதத்துவத்தின் மேன்மைகள் குறித்து அறிந்துகொள்ள வாஞ்சையோடு வந்தமைக்கு மிக்க நன்றி.
 
 
மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன்எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான் 
 
 
ஆண்டவராகிய இயேசு தாமே தங்களுக்கு மேலும் அநேக காரியங்களை வெளிப்படுத்துவாராக. 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

நன்றி அண்ணா

ஆனால் எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

எனது கருத்தை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா?

ஒரே தேவன்

அதில் இயேசுவும் தேவன்

இதை தாங்கள் ஏற்று கொள்கிறீர்களா?



__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard