இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோதனையை ஜெயிக்கிரவனே பாக்கியவான்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சோதனையை ஜெயிக்கிரவனே பாக்கியவான்!
Permalink  
 


இந்த உலகம் ஒரு சோதனை களம்!  நமக்கு வரும் ஒவ்வொரு சோதனையையும் நாம் எதிர்கொண்டு வெற்றிபெற்றால் மட்டுமே ஜெயம்கொள்ளமுடியும், அடுத்த படியில் ஏரி முன்னேற முடியும்  என்று ஏற்கெனவே பார்த்தோம். அதற்க்கு சாட்சியாக ஒரு உண்மை சம்பவத்தை இங்கு  கூற விளைகிறேன்.
 
சில மாதங்களுக்கு முன்னர் நான் வேலை பார்க்கும் கம்பனியில் ஒரு பெண் வந்து வேலைக்கு சேர்த்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஓரிரு மாதங்களில் திருமணம் என்ற நிலையில் எங்கள் கம்பனிக்கு உடனடி ஆள் தேவைபட்டதால் வேலைக்கு எடுத்திருந்தோம். எனது சீட்டுக்கு நேர் எதிர் சீட்டில் அமர்ந்திருக்கும் அந்தப்பெண் பார்வை மற்றும் எதுவுமே சரியில்லை, என்னிடம் தனியாக ஐஸ்க்ரீம் வாங்கி தரும்படி  கேட்டு வேறு தொந்தரவு செய்து எனக்கு மிகப்பெரிய இடறலாக இருந்தது.
 
பிறனுக்கு நிச்ச்யிக்கபட்டபெண் பிறருடைய மனைவி போன்றவள் என்று வேதம் சொல்கிறது, எனவே அவளை இச்சையுடன் பார்த்தாலே அது பிறன் மனைவியுடன் விபச்சாரம் செய்த பாவம் போன்றதாகிவிடும் என்றகாரணத்தால் நான் எவ்வளவோ தவிர்த்தேன். ஆனால் மனிதனின் மாமிசமானது நாம் சிந்தனைக்கு என்றுமே உடன்படுவது இல்லையே ஏனெனில் மாமிசம் ஆவிக்கு விரோதமான பகையாக அல்லவா இருக்கிறது!   எனவே அடிக்கடி அப்பெண்ணை பார்க்கும் நிலை ஏற்ப்பட்டது. எனக்கு மிகவும் மனகஷ்டமாக இருந்தது.
 
இறுதியாக ஒருநாள் ஆண்டவரிடம் "ஆண்டவரே அந்த பெண் எனக்கு மிகுந்த இடறலாக இருக்கிறாள். இது ஒருவேளை என்னை இடரவைக்க சாத்தான் கொண்டு வந்த பெண்ணாக இருந்தால் தயவுசெய்து அந்த பெண்ணை இவ்விடம்விட்டு போய்விட உதவி செய்யும்" என்று ஜெபித்தேன். 
 
உண்மையில் என்ன ஆச்சர்யம்! ஓரிரு நாட்களில் அந்த பெண்ணுக்கு டைபாய்ட் காய்ச்சல் வந்து, விடுமுறை எடுத்து போனது போனதுதான்!  பின்னர் அதன் முகத்தையே பார்க்க முடியாமல் அவளது தம்பி வந்து குறைமாத சம்பளத்தை வாங்கி சென்றார்.
 
இவ்வாறு என் ஜெபத்தை கேட்டு அந்த இடரலை தேவன் என்னைவிட்டு எடுத்து போட்டார்!
 
இது நல்லது, நான் ஆண்டவரிடம் ஜெபித்து சோதனையில் ஜெயித்துவிட்டேன் என்று அந்நேரத்தில்  நான் பெருமையாக நினைத்தேன். ஆனால் உண்மையில் அது ஒரு  சரியான செயலோ அல்லது சோதனையில் வெற்றியோ அல்ல என்பதை பின்னாளில் புரிந்துகொண்டேன்.  அதற்க்கு காரணம் தொடர்ந்து நடந்த சம்பவங்கள்தான்.
 
அதை  அடுத்த பதிவில் பார்க்கலாம்....  


-- Edited by SUNDAR on Wednesday 7th of July 2010 09:23:03 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சில  நாட்கள்  கழித்து அதே இடத்தில் மீண்டும் வேறுஒரு பெண் வந்து வேலைக்கு சேர்ந்தது. இந்த பெண்ணுக்கும் அதன் உறவு பையனுடன்  நிச்சயதார்த்தம் முடிந்து, சுமார் ஒரு  வருடங்கள் ஆகியும் சில காரணங்களால் திருமணம் ஆகாத நிலை. மீண்டும் அதே இச்சையின்  ஆவியுடன் போராட்டமும் சோதனையும்  ஆரம்பமானது. எனக்கு நேர் எதிர்புறத்தில் இருப்பதால் என்னதான் எனது கண்ணை கண்ட்ரோல் பண்ணினாலும் பல நேரங்களில் அந்த பெண்ணை நோட்டமிடும்  நிலை ஏற்ப்பட்டது.
 
இந்த முறை நான் ஆண்டவரிடம் ஜெபித்து 'என்னால் முடியவில்லை ஆண்டவரே இந்த பெண்ணை இந்த இடத்தை விட்டு  அகற்றும் என்று புலம்ப விரும்பவில்லை. அப்படியே ஜெபித்து, அந்த பெண் இந்த இடத்தை விட்டு  போனாலும் வேறு ஒரு பெண் அதே இடத்துக்கு கொண்டு வரப்படலாம் எனவே இந்த இச்சையின் ஆவி என்னிலிருக்கும் வரை நிச்சயம் சோதனை உண்டு என்று அறிந்த நான் போராட்டத்தில் போராடி மேர்க்கொள்ளுவதுதான் சிறந்தது என்று அறிந்து    'ஆண்டவரே, என் கண்களை பரிசுத்தப்படுத்தவும் இந்த இச்சையின் போராட்டத்தில் போராடி வெற்றிபெறவும் வேண்டிய பெலத்தை தாரும்" என்று  ஆண்டவரிடம் மன்றாடி ஜெபித்தேன்.
 
எனது முயற்ச்சியும் ஆண்டவரின் அனுகூலமும் கூடிவரவே சில நாட்களிலேயே அந்த பெண்ணை சற்றும் பொருள்படுத்தாமல் எனது வேலைகளை செய்யும் சாதாரண  நிலையை அடைந்தேன்.  நமந்து மாமிசமும் மனமும் பெலகீனமானது தான் ஆனால் எதுவும் முடியாது என்று கருதினால் அதை செய்ய  முடியாது 
 
பிலிப்பியர் 4:13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.
 
என்ற வார்தைகள்படி எந்த ஒரு சோதனையையும் ஜெயிக்க கிறிஸ்த்துவின் பெலத்தால் முடியும் என்று விசுவாசித்தால் நிச்சயம் முடியும்!
 
எனவே சோதனையை நம்மை விட்டு கடந்துபோகும்படி ஜெபிப்பதை விட அந்த சோதனைகளை   எதிர் கொண்டு  வெற்றிபெற தேவையான பெலத்தை தரும்படி ஆண்டவரிடம் ஜெபிப்பதே அடுத்த படிகளுக்கு  நம்மை முன்னேற்றி செல்லும் வழிமுறை.
 
ஆண்டவராகிய இயேசு பரிசுத்தராக இருந்த போதும் அவர் மாமிசத்தில் வந்த காரணத்தால் சோதிக்கப்படுவதற்காக  ஆவியானவவரே  அவரை  வநாந்திரத்த்க்கு கொண்டு சென்றார்  என்று வசனம் சொல்கிறது 
 
மத்தேயு 4:1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்
 
அவ்வாறு கொண்டுபோகப்பட்டு  சோதனைகளை எதிர்கொண்டு எல்லாவற்றையும் வெற்றிகொண்ட பின்னரே
 
11. பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.  என்று எழுதப்பட்டுள்ளது. 

எனவே அன்பானவர்களே, சோதனையை கண்டு விலகி ஒடுபவனல்லை, அதை எதிர்கொண்டு ஜெபிப்பவனே பாக்கியவான் என்பதை கருத்தில் கொள்க.
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard