இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கண்ணீர்விட்ட இரண்டு சம்பவங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இயேசு கண்ணீர்விட்ட இரண்டு சம்பவங்கள்!
Permalink  
 


ஆதியிலிருந்தே தேவனோடு இருந்து, இந்த உலகின் அனைத்து ரகசியங்களையும் அறிந்த நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மாயையான இந்த உலகில் வாழ்ந்தநாட்களில் இங்கு நடத் இரண்டு சம்பவங்களுக்காக ஒரு சாதாரண மனிதனைப்போல் "கண்ணீர்விட்டு அழுதார்" என்று வேதம் பதிவு செய்துள்ளது, என்பதை பார்க்கும்போது நமக்கு மிகுந்த ஆச்சயர்யமாக இருக்கிறது.
 
சிலுவையின் பாதையில் அவர் எத்தனையோ வேதனைகளை, அவமானகளை,   துன்பங்களை சந்தித்தபோதுகூட சற்றும் கலங்காமல் எதிர்கொண்டு அனைத்தையும் ஆச்சர்யமாக வெற்றிகொண்ட   இயேசுவே  சில உலக காரியங்களுக்காக   "கண்ணீர் விட்டு அழுதார்" என்று வேதம் சொல்கிறது என்றால் அந்த காரியங்களின் ஆழமான உண்மை   மற்றும் அவர் ஆவியில் அவ்வாறு துயரமஅடைய காரணம் என்ன வென்பதை அறியவேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.   
 
மேலும் இயேசுவின் பாடுகளை கண்டு வேதனையுற்று  அழுத ஜனங்களை பார்த்து 
 
லூக்கா 23:28   எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

என்று சொன்ன வார்த்தையில் உள்ள ஏக்கத்தின் பிரதிபலிப்பு என்னவென்பதையும் சற்று ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன்.
 
இயேசு கண்ணீர்விட்ட சம்பவங்கள் இரண்டு
 
1. மனம்திரும்பாது திரும்ப விருப்பமில்லாத ஜனங்களை பார்த்து   கண்ணீர்  விட்டு அழுகிறார்.
 
லூக்கா 19:௪ அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்.
 
கிருபையின் காலத்தில் கடைசியில் இருக்கும் மக்கள், இயேசுவை விசுவாசித்து
தங்களுக்கு கிடைந்த இந்த சந்தர்ப்பத்தை 
பயன்படுத்த
மனதில்லாமல் நிர்விசாரமாக வாழ்வதை பார்த்து இயேசு  கண்ணீர்  விட்டு  அழுவதற்கு  ஒப்பாகவே இவ்வசனம் கூறப்பட்டுள்ளது.  

ஆடவராகிய இயேசுவை விசுவாசிக்காமல் வரப்போகும் 
தண்டனையில் இருந்து தப்பிக்க தீவிரிகாமல் எத்தனை முறை ஆண்டவரைப்பற்றி கேள்விப்பட்டும் எற்க்க
மனதில்லாமல்  கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் கூட்டத்தாரை
பார்த்து
கண்ணீர் வடிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்  
 
யோவான் 3:20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

இதுவே அவர்களின் நிலைமை! தங்கள் பொல்லாங்குகளை விட்டு மனம்திருப மனதில்லாமல் தேவனிடம் வர தயங்கி நிற்கின்றனர்!
 
ஆனால்:
 
எபிரெயர் 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
 
இப்படிபட்டவர்கள் தண்டனைக்கு தப்புவது கடினம் என்பதை வேதம் நமக்கு திட்டவட்டமாக சொல்கிறது.
 
வரப்போகும் தண்டனை சாதாரணமானது அல்ல அன்பானவர்களே
 
மத்தேயு 18:8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்
 
தண்டனை என்பது "நித்திய அக்கினியாக" இருப்பதாலேயே அதன் கொடூரத்தை அறிந்த  இயேசு, மனம் திரும்பாத ஜனங்களை பார்த்து ஆவியில் கலங்கி கண்ணீர்விட்டு விட்டு அழும் நிலையில் இருந்தார்.

எனவே அன்பானவர்களே மனம் திரும்பாதவர்களின் முடிவு மற்றும் அவல நிலையை நினைக்கும்போது,  இயேசுவே கலங்கி  அழும் அளவுக்கு தண்டனை மிக கொடியது என்பதை சற்றேனும் சிந்தியுங்கள். இன்றே மனம் திரும்புகள்.  
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இயேசு  கண்ணீர்விட்ட  இரண்டாவது  சம்பவம்  மரணம்! 
 
யோவான் 11:33. அவள் (மரித்த லாசருவின் சகோதரிகள் அழுகிறதையும்) அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
யோவான் 11:35 இயேசு கண்ணீர் விட்டார்.

ஆண்டவராகியே   இயேசுவையே  கண்ணீர்  விடவைத்த இரண்டாம்  சம்பவம் மரணம் ஆகும் 
 
நீண்ட காலமாக உலகில்வாழும்  அனைத்து உயிரினங்களையும்  மரணம் என்றொரு வல்ல சக்தி ஆண்டுவருகிறது! ஈரமே இல்லாத கல்நெஞ்சம் கொண்டவரையும் கலங்கவைக்கும் மாபெரும் நிகழ்ச்சியாக மரணம் திகழ்கிறது! காரணம் மரணம் என்பது மனிதர்களை இந்த மண்ணின் சூரியனுக்கு கீழே   நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் இருந்து ஒருவரை நிரந்தரமாக  பிரித்துவிடுகிறது.கைகால்கள் கண்களை இழந்தவர்களை கூட காணலாம் அனால் மரித்தவரை மனிதனால் மீண்டும் காணமுடியாத நிலை உள்ளது. 
 
இதனால் ஒரு முக்கியமானவரை இழக்கும் போது  மனித மனம் மிகவும் துவண்டு விடுகிறது. பிள்ளையை பெற்றெடுத்து சீராட்டி  பாராட்டி  பத்து பதினைந்து வயது வரை வளர்த்துவிட்டு திடீர் என்று ஒரு விபத்தில் சில நொடிகளில் பறிகொடுத்து நிற்கும்  தாய் தகப்பனுக்கு அறுதல் சொல்வதென்பது நடக்கிற காரியமா?    
 
அதுபோல்  
 
சிறு கருவாக உதித்து சிசுவாக பிறந்து காண்பவரை கவரும் குழந்தையாக வளர்த்து பல்வேறு பருவங்களை கடந்து, ஆடாத ஆட்டமேல்லால் அகங்காரத்தில் ஆடி, கொஞ்சம் கொஞ்சமாக முதுமை பருவத்தை அடைந்து, தன உடம்பே தனக்கு பாரமாகி முடிவில் மனிதனே அவன் மரணத்தை விரும்பும் ஒரு முடிவான நிலைக்கு தள்ளப்படுகிறான். ஏனெனில் அதற்குமேல் இருந்தால் அவனை விரும்புவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.

ஒரு காலத்தில் ஓங்கிய வளர்த்தியும் நிமிர்ந்த நடையும் கவர்ச்சியான உடலும் கர்வத்தோடு அகங்காரமும் சேர்ந்திருந்து பகட்டான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர், கடைசி காலத்தில் கால தேவனின் கரங்களுக்கு அகப்பட்டு, காப்பற்ற யாருமின்றி, கண்பார்வை மங்கி, நிமிர்ந்து கூட நிற்க்க முடியாமல் கூனி குறுகி ஐபுலங்களும் அடைபட்டு ஆவியை மட்டும் வைத்துக்கொண்டு அல்லல்படுவதை அநேகர் பார்த்திருக்கலாம். யாருக்கு இந்த உலகில் ஏது நடக்கிறதோ இல்லையோ ஆனால் மரணம் என்பது நிச்சயம் நடக்கும்!

இவ்வாறு உருக்குலைந்து இறுதியில் மரணமடையத்தான் மனிதன் படைக்கப் பட்டானா? என்ற கேள்வி என்னை எத்தனையோ முறை என்னை குழப்பியுள்ளது!

அதீத ஆராச்சியால் அனேக கேள்விகளுக்கும் அற்ப்புதமானபதில் கண்டுபிடித்துள்ள அறிவியலானது மரணத்தின் மர்ம முடிச்சுகளை இன்றுவரை அவிழ்க்க முடியாமல் ஆண்டாண்டு காலமாக அல்லாடிவருகிறது. தொலைந்துபோன இளமையை திருப்பி கொண்டுவரமுடியாமல் துவண்டு கிடக்கிறது! 
இந்த மரணத்தை பார்த்து சாதாரண மனிதர்களாகிய நாம் கண்ணீர் சிந்தலாம் ஆனால் இயேசுவே கண்ணீர் சிந்தினார் என்றால் அதில்  ஏதோ அழ்ந்த ஆவிக்குரிய ரகசியங்கள் அடங்கி இருக்கிறது என்பதை அறிய வேண்டும்! 
 
உண்மையில் இந்த உலகில் நடக்கும்  மரணம் என்பது ஒரு நிகழ்வு அல்ல! அது "இன்னொரு சக்தியால் நமதுஆத்துமா சிறைபிடிக்கபடுதல்" என்பதையே குறிக்கிறது என்பதை கீழ்கண்ட வசனங்களை தியானித்தல் புரிந்துகொள்ளலாம்! 
 
வெளி 6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது
 
மங்கின குதிரைமேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயராம் இவன்  (மரணத்தால்) பிடிக்கும் ஒவ்வொருவரையும் தன்னுள்ளே வைத்துகொள்ள பாதாளம் அவன்பின் சென்றதாம்!  (அதாவது தூண்டிலில் பிடிக்கும் மீனை கூடைக்குள் போடுவதுபோல இது நடைபெறுகிறது)
 
ஆம் அன்பானவர்களே மரணம் என்னும் ஒரு தூதன் இந்த உலகில் வாழும் ஒரு மனிதனை பிடிக்கும்போது அவன் மரித்துபோகிறான் மரித்த அவன் உடனே பாதாளம் என்னும் இடத்துக்குகொண்டுபோக படுகிறான்.  இவ்வாறு உலகில் வாழும் ஒரு மனிதன் சொந்த பந்தங்களில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிரிக்கப்பட்டு சத்துருவின் கரத்தால் பிடிக்கப்படுவதையும் அதை தொடர்ந்து அவன் பாதாளத்துக்கு கொண்டு போகப்படுவத்தையும்  ஆவியில் அறிந்த இயேசு  தாங்க முடியாமலேயே  கண்ணீர்விட்டார்! 
 
இந்த மரணம் என்ற கடைசிசத்துரு எப்பொழுது பரிகரிக்கப்படுகிறதோ அப்பொழுதே
முடிவு உண்டாகும்!
  
I கொரிந்தியர் 15:26 பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.
வெளி 20:14
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. 
  
இந்த சத்துருவாகிய மரணத்தை ஆண்டவராகிய இயேசு ஜெயித்ததொடு அதற்க்கு ஒரு முடிவை கொண்டுவரவுமே பூமிக்கு வந்தார், சிலுவையில் மரித்தார். அவரை பின்பற்றும் நாமும் இந்த மரணம்என்ற சத்துருவை மேற்கொள்ள முடியும் என்பதை வேதாகமம் அனேக வசனங்கள் மூலம்  நமக்கு தெளிவான  விளக்கியுள்ளது!  
 
அதைப்பற்றி மேலும் விபரம் அறிய   இந்த திரியை சொடுக்கவும்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

/////////////////////////இவ்வாறு உலகில் வாழும் ஒரு மனிதன் சொந்த பந்தங்களில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிரிக்கப்பட்டு சத்துருவின் கரத்தால் பிடிக்கப்படுவதையும் அதை தொடர்ந்து அவன் பாதாளத்துக்கு கொண்டு போகப்படுவத்தையும் ஆவியில் அறிந்த இயேசு தாங்க முடியாமலேயே கண்ணீர்விட்டார்! //////////////////////

அப்படியாயின் தேவனை அறிந்தவர்களின் மரணமும் இப்படி அவருக்கு துக்கத்தையா தரும்?

அவர்களும் பாதாளத்தில் துக்கப்படுவார்களா? பாதாளம் கொண்டு போடப்படும் போது எவ்வாறு இருக்கும்?

மரணம் என்னும் தூதன் யார்?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

/////////////////////////இவ்வாறு உலகில் வாழும் ஒரு மனிதன் சொந்த பந்தங்களில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிரிக்கப்பட்டு சத்துருவின் கரத்தால் பிடிக்கப்படுவதையும் அதை தொடர்ந்து அவன் பாதாளத்துக்கு கொண்டு போகப்படுவத்தையும் ஆவியில் அறிந்த இயேசு தாங்க முடியாமலேயே கண்ணீர்விட்டார்! //////////////////////

அப்படியாயின் தேவனை அறிந்தவர்களின் மரணமும் இப்படி அவருக்கு துக்கத்தையா தரும்?

அவர்களும் பாதாளத்தில் துக்கப்படுவார்களா?  
 


 
ஆண்டவர் கண்ணீர் விடட இந்த் சம்பவங்கள் மற்றும் அவர் பேசிய இந்த வார்த்தைகள் அவர்  பாவத்துக்காக மரிக்கும் முன்னர் நடந்தது. 
 
எனவே அந்த நேரத்தில் எல்லோருமே மரித்தபின் பாதாளத்துக்குள் இறங்கும் ஒரு நிலையே இருந்தது.
 
கிறிஸ்த்துவின் சபை கடடமைப்பு வந்தபிறகே கிறிஸ்த்துவுக்குள் மரித்தவர்ககளை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டு அவர்கள்  பரதீசு போகும் நிலை உண்டானது.
 

மத்தேயு 16:18 நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.  

 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

சரி அண்ணா

தேவனை அறிந்தவர்களின் மரணம் தேவனுக்கு துக்கத்தையா தரும்?


மரணம் என்னும் தூதன் யார்?

இவன் எங்கு இருந்து வந்தான் ?


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Answer Pls

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

சரி அண்ணா

தேவனை அறிந்தவர்களின் மரணம் தேவனுக்கு துக்கத்தையா தரும்?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிச்சயமாக இல்லை 

 

 

சங்கீதம் 116:15 கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.

 

 


Debora wrote:
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மரணம் என்னும் தூதன் யார்?

இவன் எங்கு இருந்து வந்தான் ?


 

கீழ்கண்ட வசனங்களின் முகம் "மரணம்" என்பது சாத்தானின் குழுவில் உள்ள தள்ளப்படட தூதர்களில் ஒருவன்  என்பதை அறிய முடியும்.
 
I கொரிந்தியர் 15:26 பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.
 
இவ்வசனம் மரணம் என்பது கடைசி சத்துரு என்று தெளிவாக சொல்கிறது. நமது ஒரே சத்துரு சாத்தான்தான் எனவே அவன் சாத்தானின் கையாளாகத்தான் இருக்க வேண்டும். 
 
அடுத்து, 

வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
 
இறுதி நியாயத்தீர்ப்பில் மரணம் அக்கினி கடலிலே தள்ளப்படுகிறது. 
 

 

கடைசி தீர்ப்புக்கு பின்னர் அக்கினிக்கடலுக்கு போகப்போவது சாத்தானும் அவன் தூதர்களும்தான் எனவே "மரணம்" என்பது சாத்தானின் ஒரு தூதன் என்பது புரியவருகிறது.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

சரி அண்ணா

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard