இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை பற்றிய சுவிசேஷமும் கிறிஸ்த்தவர்களும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இயேசுவை பற்றிய சுவிசேஷமும் கிறிஸ்த்தவர்களும்!
Permalink  
 


இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பையும் அவர் பாவிகளுக்காக சிலுவையில் மரித்து தான் சிந்தியஇரத்தத்தின் மூலம் எல்லோருக்கும் மீட்பை ஏற்ப்படுத்தி இருப்பதும் அதன் மூலம் மனிதன் ஜன்ம பாவத்தில் இருந்து விடுபட்டு மரித்தபின் நித்திய ஜீவனை (பரலோக வாழ்வை)  சுதந்தரிப்பது பற்றிய செய்தி  கடந்த 2000 ஆண்டுகளாக சுவிசேஷமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
மாற்கு 13:10 சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.
மாற்கு 16:15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

என்ற இயேசுவின் கட்டளைகளின் அடிப்படையில் இயேசுவின் சீஷர்களில் ஆரம்பித்து இன்றுவரை
அநேகர் சுவிசேஷத்தை பிரசங்கித்து  வருகின்றனர். .  
 
லூக்கா 9:6 அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.
அப்போஸ்தலர் 8:4 சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
 
இயேசுவை பற்றிய சுவிசேஷத்துக்கு முதலில் எங்குமே கடுமையான எதிர்ப்புதான் இருந்து வந்தது. நாளடையில் ஒவ்வொருவராக மனம்திரும்ப ஆரம்பித்து அந்த ஒருவர் இன்னும் பலரை வழி நடத்தை இவ்வாறு சுவிசேஷத்தின் மூலம் இன்று
உலகில்உள்ள மிகப்பெரிய மதம் கிறிஸ்த்தவம் என்னும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
 
அதற்க்கு முக்கிய காரணம் தேவனின் ஆவியானவர் சுவிசேஷகர்களுடன் இருந்து அவர்களை பெலப்படுத்தி அவர்கள் வேண்டுதலுக்கு செவிகொடுத்து  பலஅற்ப்புத அடையாளங்களை செய்வதாலேயே இவ்வித பெரும் வளர்ச்சியை கிறிஸ்த்தவம் கண்டது எனலாம். அதாவது ஜீவனுள்ள தேவன் உடன் இருப்பதால்தான் கடந்த 2000௦௦௦ ஆண்டுகளில் கிறிஸ்த்தவம் இப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். மேலும் பவுல்  என்னும் ஒரே ஒரு மனிதனின் முழு அர்ப்பணிப்பாலும்  அவர்களின் தன்னலமற்ற பணியினாலும்  ஆத்துமா கரிசனை யாலும் கடும் உழைப்பாலும் அவரோடு இயேசுவே இணைந்து செயல்பட்டதாலும் அனேக நாடுகளில் கிறிஸ்த்தவம் வேரூன்றி வளர்ந்துள்ளது
 
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில்  அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கிறிஸ்த்தவர்கள் இன்று நாட்டின் எல்லா இடங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை கண்டுள்ளனர். குறிப்பாக தென் தமிழகத்தில் கிறிஸ்த்தவம் மிக வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. இயேசுவை பற்றியே கேள்விப்பாடாத வட இந்தியாவுக்கு அனேக மெஷிநெறிகள்  இங்கிருந்து அனுப்பபட்டு வட இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும்  இய்சுவை பற்றிய செய்தி மிக வேகமாக அறிவிக்கப்படுகிறது.
 
எவரொருவரும் இயேசுவை கேள்விப்பட்ட உடனேயே அவரை ஏற்றுக்கொள்வது இல்லை. அவர்களின் பலகேள்விகளுக்கு சரியான பதிலை நாம் கொடுக்கவேண்டும் மற்றும் அப்பதில்கள் அவர்களின் இருதயத்தில் சென்று தங்கவேண்டும் மேலும் ஜீவனுள்ள தேவன் அவர்கள் இருதயத்தை  திறந்து அவர்களோடு பேச வேண்டும் இவ்வாறு நடந்தால் மட்டுமே ஒருவர் உண்மையான மனம்திரும்புதலை காண முடியும்.
 
ஓரளுக்கு அறிவுள்ளவர்கள் ஒருசில கேள்விகளோடு நிறுத்திகொண்டு எதவாது ஒரு சம்பவம் அல்லது வேண்டுதலின் நிறைவ்ருதல் அல்லது நோய்/ கடன் போன்ற எதாவது ஒன்றிலிருந்து விடுதலை போன்றவற்றின் அடிப்படையில் இயேசுவை ஏற்றுக்கொண்டுள்ளனர் ஆனால் கொஞ்சம் வசதி படைத்த அதிமேதாவிகள் மற்றும் அதிகம் படித்த ஞானிகளுக்கு அவர்களின் அறிவு ஏற்கும் வகையில் சரியான பதிலை கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. எப்படி பாரத்தாலும் இயேசுவை அறியாத ஒரு பிறமார்க்க  நண்பர்கள்  கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் நான் சரியான பதிலை கொடுக்க அறிந்திருக்க வேண்டியது மிகுந்த அவசியமாகும்.
 
நான் ஆண்டவரை அறியாத காலங்களில் என்னிடம் பலர்  சுவிசேஷம் சொல்ல வந்ததுண்டு. ஆனால் ஒருவராலும்  என்னுடைய கேள்விகளுக்கு ஏற்ற பதிலை தரமுடியவில்லை. அதாவது அவர்கள் ஆண்டவரை அறிந்து உணர்ந்த அனுபவத்துக்குள் கடந்து சென்றிருந்தனர்.  ஆனால் அதற்க்கான சரியான விளக்கம் கொடுக்க அவரகளால் முடியவில்லை.  அதனால் அவர்களின் வார்த்தைகளை
நான் நிராகரிக்கும் நிலையில் இருந்தேன்.
 
(சுவிசேஷம் சொல்ல வந்தவர்களிடம் எனது கேள்விகள் மற்றும் அவர்கள் பதில்களை பற்றி தொடர்ந்து பார்க்கலாம் )  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

நான் ஒரு இந்துவாக இருந்தபோது கேட்ட அனேக விடை தெரியா  மற்றும் பலரால் விடை சொல்லமுடியா கேள்விகளை, இன்று ஒரு இந்து தளத்தில் கட்டுரையாக பதிவிட்டு கிறிஸ்த்தவம் மற்றும் பாவம் குறித்த  உண்மை தன்மையை அறியாமல் கிறிஸ்தவ கொள்கைகளே தவறு என்று மறுதலிக்கும் நோக்கில் எழுதியிருக்கிறார்கள்.
 
தொடுப்பு இங்கே...
 
 
அதாவது  எனது அறிவுக்கு புரியவில்லை எனவே அதில் உண்மை இல்லை என்பது இவர்கள் கருத்து. அதாவது தேவாதி தேவனின் திட்டங்கள் எல்லாம் இவர்கள் அறிவுக்கு புரியும்படி இருக்கவேண்டும் என்பது இவர்கள் எதிர்ப்பார்ப்பு. ஆனால தேவன் எதிர்பார்க்கும்படி இவர்கள் இருக்கிறார்களா என்பதை பற்றி இவர்களுக்கு துளியும் கவலை இல்லை. தேவன் எவருக்கு அதை புரியவைக்க வேண்டுமோ அவர்களுக்கு உண்மையை  நிச்சயம் புரியவைப்பார்.  
 
வேதாகமத்தில் அடிப்படையில் உள்ள அங்கே உண்மைகளை  ஒரு மனிதனின் அறிவால் புரிந்து  விளக்குவது என்பது நிச்சயம் முடியாத காரியம். அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்து கேள்விக்கும்  நிச்சயம் பதில் இருக்கிறது  ஆனால் சொன்னதேயே திரும்ப திரும்ப சொல்லி சாதிக்கும் அனேக கிறிஸ்த்தவர்களே அந்த பதில்களை  ஒத்துகொள்ள மாட்டார்கள். அப்படியே ஒருவருக்கு  அதை  விளக்கினாலும் அதை புரியும் அளவுக்கு ஒரு மனிதனின் இருதயம் தேவனால் திறக்கபபட வேண்டும்,  மற்றபடி சாதாரண   மனித அறிவுக்கு ஆதி காரியங்கள் எட்டாது.
 
எனவே ஒவ்வொரு சகோதரர்களுக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால் உண்மை என்பதும்/ வேதத்தில் உள்ள  மறைபொருள்களுக்கெல்லாம் விளக்கமும் தேவனிடத்தில் இருக்கிறது. நீங்கள் உண்மையை அறிய வாஞ்சை உள்ளவர்களாக இருந்தால் உங்கள் இருதயம் அதை அறிந்து கொள்வதற்கு ஏற்ப திறக்கப்படும் படிக்கும் அதை அறிவதற்கான பாதையில் உங்களை அழைத்து செல்லும்படியும் தேவனிடம் கேட்டுகொண்டே இருங்கள் ஒருநாள் அனைத்து தேவ ரகசியங்களும் நிச்சயம் அறியமுடியும்!

தேவனின் இருதயத்துக்கு ஏற்றவனாக வாழ  பழகுங்கள் உங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிவிக்கப்படும் என்பதுதான் எனது பதில்  
 
 
 
பிழை  திருத்தப்பட்டது


-- Edited by இறைநேசன் on Thursday 16th of September 2010 10:48:07 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard