இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொய்சொல்லி ஒருவரை காப்பாற்றவேண்டிய அவசியமில்லை!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
பொய்சொல்லி ஒருவரை காப்பாற்றவேண்டிய அவசியமில்லை!
Permalink  
 


தனக்கு வேண்டியவரை காப்பாற்ற அல்லது உயர்த்த ஏதாவது பொய் சொல்லி பலர் சமாளிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  
 
உதாரணமாக மனைவியை காப்பாற்ற கணவனும் கணவனை காப்பாற்ற மனைவியும் தாயை தகப்பன் பெயரை காப்பாற்ற பிள்ளைகளும் பிள்ளைகளை காப்பாற்ற தாயும் தாராளமாக பொய் சொல்லுவது.  
 
இதை பலபேர் நியாயம் என்றுசொல்லி சாதித்தாலும் ஆண்டவரின் பிள்ளைகளுக்கு இது சரியானது  அல்ல என்றே நான் கருதுகிறேன்
 
மத்தேயு 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
 
என்று இயேசு கிறிஸ்த்து முடிவாக சொல்லியிருக்கிறார்
 
எனக்கு சிறு வயதிலிருந்தே பழக்கமுள்ள ஆத்ம சிநேகிதன் ஒருவன் உண்டு. எனக்கு திருமணமானபின் ஒரு நாள் அவனை எனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தேன். அவன் போனபின் என் மனைவி என்னிடம் "இனி அவனை நீங்கள் வீட்டுக்கு அழைத்து வரக்கூடாது, எனக்கு அவன் பார்வையே கொஞ்சமும் பிடிக்கவில்லை. நண்பன் வேண்டுமென்றால் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள், வீட்டுக்கு அழைத்து வரும் வேலையெல்லாம் வைக்காதீர்கள்" என்று  முடிவாக கூறிவிட்டர். உண்மையில் அவன் மிகவும் நல்லவன் நான் எவ்வளவோ சொல்லியும் என் மனைவிக்கு புரியவைக்க முடியவில்லை.

அதிலிருந்து அவனை நான் வீட்டுக்கு அழைப்பது கிடையாது. அனால் ஒருநாள் அவனாக நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ஒருபக்கம் மனைவியின் எச்சரிப்பு  இன்னொரு பக்கம் உயிர் நண்பன்.

அவன் என்மேல் சந்தேகப்பட கூடாது என்று எண்ணி  அவனிடம் நேரடியாக என் மனைவி சொன்னதை சொல்லி விட்டேன். அதிலிருந்து அவன் என் வீட்டுக்கு வருவதே கிடையாது. இதனால் என் நண்பனின் மனைவிக்கு என் மனைவிமீதும் என் மீதும் கோபம் நாளடைவில் அது சரியாகிவிட்டது.

நான் சொன்னது தவறு என்று பலர் என்னை கடிந்து கொண்டனர்

பலர் மனைவியை காப்பாற்ற நண்பனிடமும் நண்பனை காப்பாற்ற மனைவியிடமும் உண்மையைசொல்லாமல் மறைத்து இறுதியில் இரண்டு இடங்களிலும் பகையை வாங்கிகட்டிகொள்வதுண்டு அல்லது ஒன்றை காப்பாற்ற இந்நோற்று என்று அடுக்கடுக்காக பொய்களை சொல்லிக்கொண்டு போவதைவிட நடந்ததை அப்படியே  சொல்லிவிடுவது நல்லது என்றே கருதுகிறேன்.
 
ஒருவரின் உண்மை ரூபம் மற்றும்  நிலை என்னவென்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டு போகட்dume  யாரையும் பொய்சொல்லி காப்பாற்ற வேண்டிய தேவை நமக்குஇல்லை என்றே நான் கருதுகிறேன்

தள சகோதரர்களின் கருத்தை அறிய ஆவல்.

 

-- Edited by இறைநேசன் on Saturday 25th of September 2010 04:07:03 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: பொய்சொல்லி ஒருவரை காப்பாற்றவேண்டிய அவசியமில்லை!
Permalink  
 


திருவள்ளுவர்கூட "பொய்மையும் வாய்மையிடத்து" என்ற குறளில் "குற்றமற்ற நன்மையை தரும் என்றால் பொய் கூட உண்மை போன்றதே என்று கூறியிருக்கிறார். ஆனால் நம் கர்த்தராகிய இயேசுவோ:

.

மத்தேயு 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

.

உள்ளதை உள்ளது என்று சொல்வதற்கு மிஞ்சியது எதுவானாலும் அது நன்மை தருவதாக இருந்தாலும் அது தீமையினால் உண்டானதுதான் என்று சொல்கிறார்.

.

மேலும் பரி. யாக்கோபுவும் இயேசுவின் வார்த்தைகளை வழிமொழிகிறார்

யாக் 5:12 நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.

.

ஆக்கினை தீர்ப்பில் இருந்து தப்பிக்க உள்ளதை உள்ளது என்று சொல்வது அவசியம் எனவே யாரையும் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு பொய்சொல்லி உங்களை நீங்கள் இழந்துபோக வேண்டாம்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard