நமது தளத்துக்கு புதிதாக வருகை தந்துள்ள சகோதரர் sekariam அவர்கள் கீழ்கண்ட ஒரு வினாவை முன் வைத்துள்ளார்கள் :
கடன்காரனாயிருக்கும் ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவன், கிறிஸ்துவின் ரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட முடியுமா?
என்னுடைய கருத்துப்படி:
மத்தேயு 6:12எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
என்று ஜெபிபதோடு நம்மிடம் கடன்பட்டவர்களுக்கு நாம் மனதார மன்னிப்பு கொடுத்து நமக்கு தீங்கு செய்தவர்களுக்கு ஜெபித்து, தேவனோடு ஒப்புரவான நிலையில் இருந்தால் எடுத்துகோள்ளப்பட முடியும் என்று நான் கருதுகிறேன்.
மத்தேயு 18:27அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
நம்போன்ற மனிதர்களே மனமிரங்கி சில நேரங்களில் அனைத்து கடன்களையும் மன்னிக்கின்ற்றனர் அவ்வாறு இருக்கையில் நமதாண்டவர் மன்னிக்க தயை பெருத்தவர் பாரத்தோடு கேட்டுகொள்வதநிமித்தம் நமது அனைத்து கடன்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள கூடியவர் என்றே நான் கருதுகிறேன்.
கடன் திரும்ப கொடுக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள்
(1 ) விட்டு கஷ்டம் மற்றும் ஆஸ்பிடல் செலவு மற்றும் திருமண காரியம் ஒரு சொந்த விட்டுக்காக வங்கியில் கடன் வாங்கி
விடு கட்டுதல் போன்ற காரியங்களுக்கு கடன் வாங்கி இந்த கடனை சிக்கிரமாய் கொடுத்து முடிக்க வேண்டும் என்ற எண்ணமும்
கடனை திரும்ப கொடுப்பதில் அதிக ஆர்வமும் இருந்தால் இந்த எண்ணத்தின் நிமித்தம் ஒருவேளை (இயேசுவின் வருகையில் மீட்கபடுவார்கள் ) என்று எண்ணுகின்றேன்
மத்தேயு 18:27 அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்
கடன் திரும்ப கொடுக்க கூடாது என்று விருப்பம் உள்ளவர்கள்
(2 ) தேவை இல்லாத செலவுகளை செய்து கொண்டு எல்லோரிடத்திலும் கடன் வாங்கி அந்த கடனை திரும்ப தருவதில்
ஒரு எண்ணமும் ஆர்வமும் இல்லாமல் பொய் பேசி சமாளித்து கொண்டு இருப்பவர்கள் ஒரு கடனை அடைக்க முடியாமல் இருக்கும் பொழுது அதை மறந்து விட்டு பார்பவர்கள் பழகுகின்றவர் எல்லோரிடத்தில கடன் வாங்கி அதை திரும்ப கொடுக்க முடியாமல் கொஞ்சமும் மனஸ்தாபம் கூட படாமல் இருப்பவர்கள் இயேசுவின் வருகையில் மீட்கபடமாட்டார்கள் என்று எண்ணுகின்றேன்
ஏனென்றால் நம் தேவனாகிய கர்த்தர் இருதயங்களை ஆராயிந்து அறிகின்ற கர்த்தர்
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
பெரும்பாலான கடன் அதற்கு ஈடாக எதையாவது வாங்கிக் கொண்டே கொடுக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அடகாக கொடுத்த பொருள் இருப்பதால் கடனை திருப்பி செலுத்த தேவையில்லை.
அவ்வாறு இல்லாமல் கடன் வாங்கியிருந்தால், அவன் எடுத்து கொள்ளப்படுவதற்கு முன்பாக அதை திருப்பி செலுத்தக்கூடிய நிலையில் அவன் வைக்கப்பட்டு அதை திருப்பி செலுத்தி விடுவான். ஏனெனில்
sekariamwrote:கடன்காரனாயிருக்கும் ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவன், கிறிஸ்துவின் ரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட முடியுமா?
இயேசுவின் இரண்டாம் வருகை என்றொரு வருகை மட்டும்தான் உண்டு அந்நேரம் வேதத்தில் வருகை குறித்து பதிவு செய்யப் பட்டுள்ள அனைத்து சம்பவங்களும் நடக்கும் என்பதே எனது கருத்து. (அதைப்பற்றி தனியாக பார்க்கலாம்)
எனவே தங்கள் கேள்வியை கீழ்கண்டவாறு மாற்றி விடலாம்:
கடன் வாங்கியிருப்பவனுக்கு இயேசுவின் வருகையில் மீட்பு உண்டா இல்லையா?"
புதிய ஏற்ப்பாட்டு காலத்தை பொறுத்தவரை மீட்பு என்பது கிரியையின் அடிப்படை யில் வாக்கு பண்ணப்படவில்லை என்பதை நாம் நிச்சயம் அறியவேண்டும். இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் மட்டுமே மீட்பு தீர்மானிக்கப் படும். எனவே எவ்வளவு பெரிய கடன் பட்டவராக இருந்தாலும் இயேசுவின் வருகையில் மீட்பு நிச்சயம் உண்டு.
ஆனாலும் கீழ்கண்ட காரியங்களி மனதில் கொள்வது நல்லது:
குற்ற மனசாட்சி இல்லாத தன்மை:
புதிய ஏற்பாட்டு பிரமாணத்தை பொறுத்தவரை செய்யும் எந்த ஒரு காரியத்தை குறித்து குற்றமனசாட்சி இருக்ககூடாது. குற்றமனசாட்சியோடு ஒரு காரியத்தை செய்தால் அது குற்றம் ஆகிவிடும். செய்யம் காரியம் எதுவாக இருந்தாலும் விசுவாசத்தின் அடிப்படையில், துணிந்து செய்ய வேண்டும்.
இந்த கடன் விஷயத்தை எடுத்துகொண்டால் தாங்கள் நேர்மையான நிலையில் சிந்தித்ததால் கடன்காரன் இயேசுவின் வருகையில் எடுத்துகொள்ளப்படுவானா மாட்டானா? என்பது போன்றதொரு சந்தேக நிலை தங்கள் மனதில் தோன்றி யுள்ளது. அதாவது கடன்வாங்குவது தவறு என்பது தங்களுக்கு தெரிகிறது அல்லது கடன் வாங்குவது குற்றம் என்பதுபோல் நீங்கள் உணருகிறீர்கள். இது ஒரு நல்ல நிலைதான் என்றாலும் இது ஒரு குற்ற மனசாட்சியாகும்.
இந்நிலையில் கிறிஸ்த்துவுக்குள் தாங்கள் செய்யவேண்டியது
1. எந்த கடன் காரனையும் இயேசுவால் மீட்க முடியும். அவர் எல்லாருடய பாவத்துக்கும் எல்லா கடனுக்கும் சேர்த்தே கிரையத்தை செலுத்தி என்னை மீட்டு விட்டார், எனவே எனக்கு இயேசுவின் வருகையில் நிச்சயம் மீட்பு உண்டு என்பதை சந்தேகமின்றி விசுவாசிக்க வேண்டும்.
2. கடன் வாங்குவதை குற்றமாக உணர்ந்துகொண்ட நீங்கள் புதிதாக கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வாங்கியுள்ள பழைய கடனை ஆண்டவரிடம் ஒப்பு கொடுத்து அதற்காக மன்னிப்பு கேடடு விடுபடவேண்டும்.
3. வாங்கியுள்ள கடனை எப்படியாவது முழுவதும் திருப்பி செலுத்திவிட வேண்டும் என்று மனதார ஆசியுங்கள் முயற்ச்சியில் ஈடுபடுங்கள்.அதற்காக அனுதினம் ஜெபியுங்கள்.
இவ்விதம் செய்து விசுவாசத்தின் அடிப்படையில் குற்ற மனசாட்சி இன்றி இருப்பீர்களானால்
ஓன்று சகோதரர் சந்தோஷ் சொல்வதுபோல் கடனை அடைபதர்க்கு சரியான வழியை தேவன் உருவாக்கி தருவார்
அல்லது சகோதரர் எட்வின் சொல்வதுபோல் ஆண்டவர் தங்களை மன்னித்து அந்த கடனில் விடுதலை பண்ணிவிடுவார்.
இயேசுவின் இரத்தத்துக்கு மேலான பாவம் ஒன்றும் இல்லை எனவே உறுதியாக விசுவாசியுங்கள் எந்த கடன்காரனுக்கும் இயேசுவால் வரும் மீட்பு நிச்சயம் உண்டு.
-- Edited by SUNDAR on Friday 19th of November 2010 11:19:50 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)