இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வார்த்தைகளை உபயோகிக்கும் விதத்தின் மேன்மை!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
வார்த்தைகளை உபயோகிக்கும் விதத்தின் மேன்மை!
Permalink  
 


சமீபத்தில்  நான்  படித்த  ஒரு செய்தி:   
 
பார்வையிழந்தவர் ஒருவர் தெருமுனை ஒன்றில் அமர்ந்து   "நான் பார்வை இழந்தவன் எனக்காக உதவுங்கள்" என்ற வாசகத்துடன்கூடிய  பெரிய போர்ட் ஒன்றை  வைத்து  பிச்சை எடுத்துகொண்டு இருந்தார். அவ்வழியே வந்த சிலர் காசு போட்டுவிட்டு சென்றனர் சிலர் கண்டுகொள்ளாமல் சென்றனர். 
 
சிறிது நேரம் கழித்து அவ்வழியே வந்த பெரியவர் ஒருவர் அந்த போர்டை பார்த்தார், பிறகு வேறு ஒரு வாசகம் எழுதிய போர்டு ஒன்றை கொண்டுவந்து வைத்து அந்த பார்வயிழந்தவரின் அனுமதியுடன் பழைய போர்டை மாற்றி விட்டார்.
 
அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த பார்வயிழந்தவரிடம் பணம்
குவிந்திருந்தது   
 
அவர் அப்படி என்னதான் எழுதிவைத்தார் என்றால்
 
"இந்த நாள் உங்களுக்கு மிகவும் அருமையான ஒருநாள் ஆனால் அதை பார்ப்பதற்குதான் எனக்கு கண்கள் இல்லை"
 
என்பதே அந்த வாசகம்!  இந்த அருமையான  வார்த்தைகள் உங்கள் மனதையும் தொடுகிறதல்லவா?  
 
"நான் பார்வையிழந்தவன் எனக்கு காசு போடுங்கள்" என்ற பழைய  வாசகமும் இந்த புதியவாசகமும் ஏறக்குறைய ஒரு பொருளைத்தான் தருவதாக இருந்தாலம் இந்த புதியவாசகம் அநேகரின் மனதைதொட காரணம் வார்த்தைகள் சொல்லபட்ட விதமே!
 
வார்த்தைகளை சொல்லும் விதம் என்பது மிகமிக முக்கியமாகிறது!.
 
நீதிமொழிகள் 25:11 ற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
 
என்ற அருமையான வார்த்தை அதனால்தால் சொல்லப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன்!  
 
நம்முடய எந்த ஒரு காரியத்தையும் பிறரிடம் திணிக்க முயல்வதை விட, அதை சொல்லவேண்டிய விதமாக சொன்னால். நிச்சயம்  ஒருநாளில் இல்லையென்றால் இன்னொரு நாளிலாவது அவருடய  மனதுக்குள் உறுத்துதலை ஏற்ப்படுத்தும்.
 
உதாரணமாக இயேசுவைபற்றி போதிக்கும் ஒருவர் இன்னொரு மததெய்வங்களை "பேய் பிசாசு" என்றும் "நீ பாவி நான் உத்தமன்" என்றும்  சொல்லி போதித்தால் அவருக்கு கிறிஸ்த்துவின் மேலும் கிறிஸ்த்தவ மதத்தின் மேலும் எரிச்சலும் கோபமும்தான் வருமேயன்றி பாசமோ நேசமோ வாராது.
 
அவர்களின் உணர்வுகளை மதித்து அதற்க்கு ஏற்றாற்போல் நம்முடைய சொல்லும் விதத்தை மாற்றி சொல்வோமாகில் அவர் ஏற்றுக்கொள்கிராரோ இல்லையோ  அட்லீஸ்ட் அவர் நமது கருத்தை கொஞ்சமாவது கேட்பார். நாம் விதைத்த வசன விதைகள்  ஒருநாளும் வீணாக போகவே போகாது.  என்றாவது ஒருநாள் அந்த வார்த்தைகள் மூலம் ஆண்டவர் அவருடன் இடைப்படும்போது நிச்சயம் அது அவரது உள்ளத்திரையில் இருந்து வெளிப்படும்.
 
இதற்க்கு மாறாக!
 
"நாங்கள் மட்டும்தான் சரியானதை கண்டுகொண்டோம்"  என்ற தொனியில் பேசி,
பிறரது   நம்பிக்கையையும அவர்களது
உணர்வுகளையும்  புண்படுத்தும் விதமாக விவாதித்துக்கொண்டே போனால் அதற்க்கு முடிவே இருக்காது. இங்கு காழ்ப்புணர்ச்சியும் விரோதமும்தான் வன்மமும் வளருமே தவிர அதனால் எந்த பயனும் ஏற்ப்படாது.
 
பிலிப்பியர் 2:16 எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
 
என்று வசனம் நமக்கு போதிக்கவில்லையா?  அவர்கள் தங்கள் தளங்களில் அவ்வாறு எழுதுகிறார்களே  என்றால் அவர்கள் ஆண்டவரை அறியாதவர்கள் அவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள் அதுபோல் நாமும் செய்வது ஏற்றதல்ல என்றே நான் கருதுகிறேன்   
 
அவர்கள் அறியாமல் செய்கிறார்கள் நாமும் ஒரு காலத்தில் இப்படித்தான் எதையோ பிடித்துகொண்டு ஜீவனுள்ள தேவனை விட்டு தள்ளி இருந்தோம் என்பதை கருத்தில் கொள்வது அவசியம். மேலும்நாம் என்னதான் முயன்றாலும் பிதா ஒருவரை இழுக்காவிட்டால் அவர் இயேசு வண்டை வரமுடியாது என்ற வார்த்தையையும் கருத்தில்கொண்டு முதலில் அவர்களுக்காக மனதார  ஜெபித்து விட்டு பின்னர்  வாதிடுவது நல்லது என்பது எனது கருத்து!   
 
இயேசு வாழ்ந்ததற்கு சம்பவ ஆதாரத்தை நம்மால் தரமுடியாமல் போகலாம் அனால் அவரை பின்பற்றி நடப்பதன் மூலம்  நாமே ஜீவனுள்ள சாட்சியாக நிச்சயம் வாழ்ந்து காட்ட முடியும்!  
 
 

-- Edited by SUNDAR on Friday 26th of November 2010 10:02:41 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard