இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்துவுக்குள் பாடனுபவித்தலும் நோய்/வியாதிகளும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கிறிஸ்த்துவுக்குள் பாடனுபவித்தலும் நோய்/வியாதிகளும்!
Permalink  
 


யோவான் 16:33  . உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்
II தீமோத்தேயு 3:12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

வசனம் குறிப்பிடும் இந்த  உபத்திரியம் மற்றும்  துன்பம் என்பது எதை குறிக்கிறது?   
 
சபைக்கு சென்று அமரும்போது அங்கு வரும் ஜெபவிண்ணப்பங்களில்  கிறிஸ்தவர்களுக்கு வரும் நோய்களையும் விபத்துக்களையுமா குறிக்கிறது?
 
எனக்கு தெரிந்து பல பாஸ்டர்கள் கொடூர நோயால் பாதிக்கபட்டு கதறி துடித்து இறந்திருக்கிறார்கள். வாயில் கேன்சர் காட்டி வந்து வதைத்து வதைத்து இறந்திருக்கிறார்கள். சொற்ப வயதில் கணவனை இழந்து கைம்பெண் ஆகியிருக்கிறார்கள், இருபது வயது மகனை வீட்டின் முன்னேயே தரையோடு நசுங்கிபோகும் அளவுக்கு விபத்தில் பலி கொடுத்திருக்கிறார்கள்  இன்னும் நமது சபை பாஸ்டருக்கும் அவர் மனைவிக்கும் உடலில் இல்லாத வியாதியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு  வியாதி என்பது கிறிஸ்த்தவர்களை பிடித்து ஆட்டுகிறது. அநேகர்  கட்டிடம் கட்டவும் வீடுகட்டவும் கடன்வாங்கிவிட்டு அதை அடைக்கமுடியாமல் அவதிப்படுகிறார்கள். இன்னும் சிலர் அளவுக்கு அதிகமான செலவு செய்து  மகன் மகள் திருமணத்தை முடித்துவிட்டு பணம் பணம் என்று பரிதபித்து அலைகின்றனர்.       
 
இத்தகைய காரியங்களையா இயேசு "கிறிஸ்த்துவுக்குள் அனுபவிக்க வேண்டிய உபத்திரியம்" என்றும் துன்பம் என்றும் குறிப்பிட்டார்?  
 
இயேசுகூட  நம்போன்ற மாமிசத்தில்தான் வந்தார்! அவர் எந்த இடத்திலாவது நோயில் படுத்து கிடந்தார் என்றோ  வயித்தியரை பார்த்து மருந்து வாங்கி சாப்பிட்டார் என்றோ ஒரு  வார்த்தை வேதத்தில் இருக்கிறதா?  காரணம் என்ன?  அவர் பாவமில்லாத பரிசுத்தராக இருந்தால் எனவே எந்த நோயும் அவரை அணுகமுடியவில்லை.
  
எனவேதான்  அவர் சுகமாக்கிய அநேகரை பார்த்து "இனி பாவம் செய்யாதே" "உன் பாவம் மன்னிக்கப்பட்டது" போன்ற வார்த்தைகளை உபயோகித்தார்.  
 
இன்றோ அநேகர் டாக்டரிடம் பொய் ஸ்கேன் பண்ணுவதையும்  ஊசி போட்டு கொள்ளுவத்தையும்  பதினைந்து ஆப்பரேசன் பண்ணி கொள்ளுவதையும் பெரிய தியாகமாகவும் கிறிஸ்த்தவ வாழ்க்கையில் வரும்  பாடுகள்  என்று சொல்லிக் கொண்டு பரவசத்தில் அலைகிறார்கள்!   அதனால் பாவத்துக்கு வரம் தண்டனை எது கிறிஸ்த்துவுக்குள் வரும் பாடு எது? என்பதே அநேகருக்கு  தெரியாமல் போய்விட்டது
 
இதை பற்றி பேசினால், பவுல்  அப்போஸ்தலருக்கு உள்ள முள்ளை குறிப்பிட்டு பலர் பேசுவது உண்டு. 
 
நமக்கு இயேசு முன்மாதிரியா? அல்லது பவுல் பவுல் முன்மாதிரியா? 
 
இயேசுவுக்கு அடுத்த முன்மாதிரியாக அவரை எடுத்துகொண்டாலும் பவுல் அந்த முள்ளை குறித்து சொல்லும்போது 
  
II கொரிந்தியர் 12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது

அந்த முள்ளை குறித்து பவுல் குறிப்பிடும்போது "பெருமை" எனக்கு 
வந்துவிடும் நிலையில் நான் இருப்பதால்,   அது சாத்தானின் தூதனாக இருந்து என்னை குட்டி வருகிறது என்று குறிப்பிடுகிறார். எனவே அது தேவனின் செயல் அல்ல, அதுவும் பாவத்துக்கு உண்டான தண்டனை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 
 
எனவே இங்கு நோய் நொடிகள் என்பது ஒருபோதும் தேவனால் வருவது அல்ல தேவன் உபத்திரியம் என்ற பெயரில் யாருக்கும் நோய் நொடிகளை  கொண்டு வருவதும் இல்லை. சில தப்பான பிரசங்கி மார்கள் தாங்கள் செய்த பாவங்களி னிமித்தம் வரும் தண்டனையை  மறைக்கவே இதுபோன்ற தவறான உபதேசத்தை போதித்து வருகிறார்கள். இது போன்ற செயலால் பல விசுவாசிகள் வேத வெளிச்சத்தில் தங்களை தாங்களே ஆராய்ந்து  தாங்கள் செய்யும் பாவத்தை உணர்ந்து திருந்தமுடியாமல் போய்விடுகிறது.
 
 

-- Edited by SUNDAR on Wednesday 15th of December 2010 03:00:48 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
RE: கிறிஸ்த்துவுக்குள் பாடனுவித்தல் என்றால் என்ன?
Permalink  
 


BROTHER SUNDAR WROTE :

IN ONE PLACE :

//"நம்முடைய தேவன் எங்கும் நிறைத்தவர் அவர் கட்டளையிடாமல் எந்த காரியமும் சம்பவிக்காது" என்பதை ஏற்றுக்கொண்டாலே பாபர்மசூதி இடிப்புக்கும் தேவனுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை அறியமுடியும். தேவனுக்கு சம்பந்தம் இருந்தால் தேவனை அறிந்த தேவ பிள்ளைகளாக மாற்றப்பட்டுள்ள  நமக்கும் அத்தோடு நிச்சயம் சம்பந்தம் இருக்கத்தானே செய்யும்.?   இதில் என்ன குழப்பம். //

IN  ANOTHER PLACE

//அந்த முள்ளை குறித்து பவுல் குறிப்பிடும்போது "பெருமை" எனக்கு வந்துவிடும் நிலையில் நான் இருப்பதால்,   அது சாத்தானின் தூதனாக இருந்து என்னை குட்டி வருகிறது என்று குறிப்பிடுகிறார். எனவே அது தேவனின் செயல் அல்ல, அதுவும் பாவத்துக்கு உண்டான தண்டனை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இங்கு நோய் நொடிகள் என்பது ஒருபோதும் தேவனால் வருவது அல்ல தேவன் உபத்திரியம் என்ற பெயரில் யாருக்கும் நோய் நொடிகளை  கொண்டு வருவதும் இல்லை. சில தப்பான பிரசங்கி மார்கள் தாங்கள் செய்த பாவங்களி னிமித்தம் வரும் தண்டனையை  மறைக்கவே இதுபோன்ற தவறான உபதேசத்தை போதித்து வருகிறார்கள். //

நோய் நொடி வருவது என்பது தேவனுடைய செயல் இல்லை என்றால் யாருடைய செயல்? நோய் நொடி வருவது என்பது தேவன் கட்டளையிடாமல் வரும் காரியமா?

என்பதை விளக்க வேண்டுகிறேன்.__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கிறிஸ்த்துவுக்குள் பாடனுபவித்தல்!
Permalink  
 


சகோதரர்  சந்தோஷ்  அவர்களே  தங்கள்  கேள்வி  நியாயமானது அதற்க்கான பதில்
எளிதானஓன்று. இதை சுலபமாக விளக்க ஒரு உவமையை கூற விரும்புகிறேன்
 
உதாரணமாக நமது இந்திய ஜனாதிபதியை எடுத்துகொள்ளுங்கள். ஒரு தூக்கு தண்டனை  கைதிக்கு இறுதி நிலையை முடிவு செய்வது இந்த ஜனாதிபதி கையில்தான் இருக்கிறது. அவர் கட்டளையின் அடிப்படையிலேயே அந்த காரியம் நடைபெறுகிறது. எனவே அவருக்கு தெரியாமலோ அல்லது அவருடைய அனுமதியில்லாமலோ அரசால் ஒருவரையும் தூக்கில் போட முடியாது. எனவே ஒரு தூக்கு தண்டனை நிறைவேறியது என்றால் அதை கட்டளையிட்டவர் அவர் என்றொரு நிலை உருவாகிறது.    
 
அதேநேரம் இன்னொரு நிலையில் இருந்து பார்த்தால் அந்த தூக்குக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அந்த தூக்குதண்டனையை நிர்ணயிப்பது நாட்டின் சட்டம்தான். சட்டத்தின் அடிப்படையில் அவன் தூக்கு தண்டனை பெற்ற
கைதி. அதை நிறைவேற்ற அனுமதிப்பது மட்டுமே  ஜனாதிபதி. அந்த சட்டத்தில்  அடிப்படையிலேயே அவரும்கூட இறுதி  தீர்மானம் செய்யவேண்டும்
அந்த தண்டனையை நிறைவேற்றுவதும்கூட அந்த ஜனாதிபதி கிடையாது.   
 
இதே நிலையை அப்படியே தேவனோடு பொருத்தி பாருங்கள்.
 
தேவனுக்கு தெரியாமல் தேவனின் அனுமதியில்லாமல் எந்த ஒரு காரியமும் இங்கு நடைபெறாது! அவர் அனைத்திலும் அனைத்துமாய் இருக்கிறவர். "அவர் கட்டளையிடாமல் காரியம் சம்பவிக்காது" எனபதை புலம்பல் புத்தகம் சொல்கிறது.  
 
ஆனால் இன்னொருபுறம் பார்த்தால் அவர் "சர்வலோக நியாதிபதி" "நீதி நேர்மை என்னும் சிங்காசனத்தில்  வீற்றிருக்கும் மகா பரிசுத்தம் உள்ளவர்"  வேத வார்த்தைகளை சட்டமாக எழுதிகொடுத்து அதன்படி நடவுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லிவைத்துவிட்டார். 
 
இப்பொழுது ஒருவன் தேவனின் வார்த்தை என்னும் வட்டத்தில் இருந்து வெளியில் வரும்போது அவன் தேவபாதுகாப்பை இழந்துவிடுகிறான் எனவே சத்துரு அங்கு வியாதியாகிய  தண்டனையை  கொண்டு வருகிறான். இங்கு தேவனுக்கு எல்லாமே தெரியும்! மற்றும் வேதத்தை எழுதி கொடுத்ததும் அவர்தான் அதன் வெளியேபோனால் தண்டனை உண்டு என்று சொன்னவரும் அவர்தான், பாதுகாப்பு வளையத்துக்கு வெளியேபோனவனுக்கு என்ன தண்டனை என்பதை  தீர்மானிப்பதும் அவர்தான். அனால் வெளியில்  போனவனை பிடித்து தண்டிப்பது மட்டும்தான் சாத்தான்.
   
பழைய  ஏற்பாட்டு காலத்தில் பலஇடங்களில் தேவன் தானே நேரடியாக செயல்பட்டு பாவம் செய்தவனுக்கு பட்டயம் பஞ்சம் கொள்ளைநோய்  போன்ற  வாதைகளை அவரே  அனுப்பினார் என்று வசனம் உள்ளது.  அனால் புதிய உடன்படிக்கையின் கிறிஸ்த்து நமக்காக சாபமாகி சாபத்தைஎல்லாம் தொலைத்து விட்டதால் தேவன் நேரடியாக தண்டிப்பது இல்லை!.பாவம் செய்த மனிதனை விட்டு தனது பிரசன்னத்தை மாத்திரம் குறிப்பிட்டகாலம் விலக்குகிறார், ஆகினும் அவருடைய கிருபை  நம்மைவிட்டு விலகுவது இல்லை. அங்கு சாத்தான் தனது செயல்களை காண்பிக்கிறான் நோய்கள் வியாதிகள் வருகிறது.   
 
வேதவசனங்களை பொறுத்தவரை அனேக இடங்களில் பாவத்துக்கு தண்டனையாகவும் சாத்தானின் செயலாலும்தான் வியாதி வருவதாக  எழுதப்பட்டுள்ளது.
 
அடுத்ததாக பரிசுத்தம் இல்லாமல் கர்த்தரின் பத்தியில் பங்குபெறுவதால் வியாதி வருகிறது என்று  எழுதப்பட்டுள்ளது. இருதயத்தில் குடிகொண்டுள்ள பாவத்தால் தானே பரிசுத்தம் இல்லாமல்போகிறது எனவே அதுவும் பாவத்தின் அடிப்படையில் வரும் வியாதிதான்       
 
மேலும் கீழ்கண்ட வசனத்திலும் பாவத்தினால் வியாதி வரும் என்று அறிய முடிகிறது.
 
யாக்கோபு 5:14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.15.அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

இது எனது அனுபவபூர்வமான  புரிதல்! வியாதிக்கு வேறு ஏதாவது காரணம் வேதத்தில் சொல்லப்பட்டிருந்தால் (யோபுவின் சம்பவத்தின் தவிர்க்கவும்) அல்லது இதற்க்கு  மாற்று கருத்து எதுவும்  இருக்குமாயின் வசன ஆதாரத்துடன் தெரியபடுத்தவும்.     

"வியாதி" என்பது கிரிஸ்த்துவுக்குள் பாடனுபவிப்பதில் அடங்காது என்பது எனது கருத்து.
கிறிஸ்த்துவுக்குள்  பாடனுபவித்தல் என்றால் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

பழையஏற்பாட்டுக் காலத்தில் மட்டுமின்றி, புதியஏற்பாட்டுக் காலத்திலும் பாவத்தின் விளைவாகத் தேவனே வியாதியை வருவிக்கிறார் என நான் கருதுகிறேன். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தண்டனையாக வியாதியை வருவித்தார், ஆனால் புதிய ஏற்பாடுக் காலத்தில் தண்டனையாகவும் சிட்சையாகவும் வியாதியை வருவிக்கிறார் என நான் கருதுகிறேன். இவ்வசனத்தை சற்று படிப்போம்.

வெளி. 3:19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

தேவன் எவர்களை நேசிக்கிறாரோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறார். அந்த சிட்சையில் வியாதியும் அடங்கும் என நான் கருதுகிறேன்.

கிறிஸ்துவின் வசனங்களின்படி நடப்பதினிமித்தம் வருகிற பாடுகளே கிறிஸ்துவுக்குள் பாடனுவித்தலாகும்.


-- Edited by anbu57 on Tuesday 14th of December 2010 04:19:39 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கிறிஸ்த்துவுக்குள் பாடனுபவித்தலும் நோய்/வியாதிகளும்!
Permalink  
 


anbu57 wrote:

கிறிஸ்துவின் வசனங்களின்படி நடப்பதினிமித்தம் வருகிற பாடுகளே கிறிஸ்துவுக்குள் பாடனுவித்தலாகும்.சகோ. அன்பு அவர்கள் பாடனுபவித்தல் பற்றிய ஒரு சரியான பாயண்டை குறிப்பிட்டிருந்தாலும்  கிறிஸ்த்தவத்தில் "பாடனுபவித்தல்" அல்லது "துன்பப்படுதல்" என்பது எதை குறிக்கிறது என்று இரண்டு தலைப்புகள் அடிப்படையில் சற்று  விளக்கமாக பார்க்கலாம். அது நிச்சயம்  அநேகருக்கு பயனுள்ளதாக அமையும் என்றே நான் கருதுகிறேன்.    

1. நீதியினிமித்தம் துன்பப்படுதல்! 
 
மத்தேயு 5:10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
 
"யாக்கோபு 3:6  அநீதி நிறைந்த உலகம்" என்று வேதம் சொல்கிறது எனவே இந்த அநீதியான  உலகில்  நீதியிநிமித்தம் துன்பங்கள் வரும் அந்த துன்பங்களை  அனுபவிப்பவர்களே  பாக்கியவான்கள் என்று ஆண்டவராகிய இயேசு சொல்கிறார் 
 
இந்த நீதியினிமித்தம் வரும் துன்பங்களை மேலும் இரண்டுபிரிவாக பிரிக்கலாம்
 
i. நீதியாய்  நடப்பதிநிமித்தம் வரும் துன்பங்கள்  
 
அதாவது ஒருவர் இந்த உலகில் நீதியான் நடக்கவேண்டும் என்று தீர்மானித்தாலே இந்த உலகம் அவனை சும்மா விடாது! அவருக்கு அனேக பாடுகள் மற்றும் துன்பங்கள் கொண்டு வரும். 
 
ஒரே ஒரு உதாரணம்:  எல்லோரும் லஞ்சம் வாங்கும் இடத்தில் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதியாக நின்று நேர்மையான காரியங்களை செய்தால் தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றல் வரலாம். அதபோல் பல அதிகாரிகள் வேலைகளைகூட இழக்கவும் அரசியல்வாதிகளால் துன்புறுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது.  இதுபோல் இன்னும் அனேக காரியங்கள் உண்டு! அவரவர் தாங்கள் தாங்கள் நிலைமையில் நீதியை நடப்பதால் வரும் எந்த துன்பமும் இந்த பாடனுபவித்தலில் அடங்கும்.
 
ii. பிறருக்கு நீதி செய்வதிநிமித்தம் வரும் துன்பங்கள் பாடுகள்! 
 
நான் நீதியாய் நடக்கிறேன் மற்றவன் எப்படி போனால் எனக்கு என்ன என்ற நோக்கில் செயல்படாமல் நமக்கு கீழேயுள்ள அல்லது நீதிக்காக ஏங்கி தவிக்கும் ஒருவருக்கு உண்மையாய் நீதி கிடைக்காத பட்சத்தில் அவருக்கு  நீதி கிடைக்க பாடுபடுவதிநிமித்தம் வரும் துன்பங்களே இந்த வகையை சார்ந்தது.
 
உதாரணமாக நமக்கு கீழே வேலை பார்ப்பவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளமோ அல்லது லீவோ அல்லது எந்த ஒரு காரியத்தை குறித்தோ சம்பந்தப் பட்டவர்களிடம் எடுத்து சொல்லி வாதிட்டு அதனால் அவர்களின் வெறுப்பை வாங்கி கட்டிகொள்வது. இது பிறருக்காக பரிந்து பேசுதல் வகையை சார்ந்தது இதில் கூட அனேக துன்பங்கள் மற்றும் வேலையை அல்லது வருமானத்தை கூட  இழக்க கூட  வாய்ப்பிருக்கிறது. 
 
இவ்வித துன்பங்கள் நீதியினிமித்தம் வரும் துன்பங்கள்! இவற்றை
அனுபவிப்பவர்கள் பாக்கியவான்கள்  
     
2. கிறிஸ்துவிநிமித்தம்  வரும் துன்பங்கள்!
 
மத்தேயு 5:11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்ஈ
II தீமோத்தேயு 3:12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
 
இங்குநாம் ஒரு கிறிஸ்த்தவனாக இருப்பதால்  அல்லது கிறிஸ்த்துவை பிறருக்கு அறிவிப்பதால் வரும் பாடுகள் துன்பங்களை அனுபவிப்பதை வசனம் குறிப்பிடுகிறது.  "என்னிமித்தம்" என்று ஆண்டவராகிய இயேசு சொல்லும் இந்த துன்பங்கள் இரண்டு வகைப்படும்.
 
1. கிறிஸ்த்துவை பிறருக்கு அறிவிப்பதால் வரும் துன்பம்.
 
ஆண்டவராகிய இயேசுவை பற்றி உலகுக்கு  அறிவிப்பதில் வரும் துன்பங்கள் அனைத்தும் இதில் அடங்கும் சுவிசேஷம் சொல்வதில் கைப்பிரதி வழங்குவதில், மெசினரி ஊழியம் செய்வதில் மற்றும் பத்திரிகை ஊழியம், சபை ஊழியம் வலைதள ஊழியம் மற்றும் ஆண்டவரின் நாமத்தினிமித்தம் நாம் எடுக்கும் ஒவ்வொரு பிரயாசத்திநிமித்தம் வரும் எந்த உபத்திரியமும் இதில் அடங்கும். 
 
2. கிறிஸ்த்துவின் வசனத்தை கைகொள்ளுவதில் வரும் துன்பம். 
 
மத் 13:   21.  வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
 
இங்கு ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளை நமது நடைமுறை வாழ்வில் கைகொண்டு நடக்க பிரயாசம் எடுக்கும்போது அதனிமித்தம் துன்பங்கள் உண்டாகும். 
 
உதாரணமாக "உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லது" என்றும் சொல்லுங்கள் என்ற இயேசுவின் வார்த்தையை என்வாழ்வில் நடைமுறைப்படுத்த நான் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதுபோல் நம்மை நேசிப்பது போல் பிறரையும் நேசித்து அவர்களுக்கு இரங்கி உதவி செய்வது கேட்பவனுக்கு கடன்கொடுப்பது போன்ற ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தையும் கைகொள்ளுவதினால் உருவாகும் துன்பங்கள் இவ்வகை பாடுகளை சேரும்.

இத்தோடு தொடர்புடன இன்னொரு பாடு பிறருக்கு  நன்மை செய்தவத்தால் வரும் துன்பங்கள்!
 
I பேதுரு 3:17 தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
 
ஆண்டவராகிய இயேசுவால் வார்த்தைகளை கைகொள்ளும்போது இந்த பாடுகள் நமது வாழ்வில் தானாக நிறைவேறுகிறது.  இயேசுவின் கற்பனைகளை கைகொள்ளும்போது நமது வாழ்க்கை அநேகருக்கு பயனுள்ளதாகவும்   நன்மை நிறைந்ததாகவும்  அமைகிறது  அவ்வாறு நன்மைசெய்து பாடனுபவிப்பதே மேன்மையானது
  
எனவே அன்பானவர்களே! ஆண்டவருக்கள்ளான  பாடுகள் என்பவை எவை? தீமை செய்வதாலும்  பாவத்துக்கு தண்டனையாக வரும் பாடுகள் எவை? என்பதை சரியாக பகுத்து அறிந்து  தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள்  நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்பேதுரு4:19 
 
மற்றபடி வியாதி என்பது ஒரு மனிதனின் பாவங்களுக்கு  வரும் தண்டனையே அன்றி கிறிஸ்த்துவுக்குள்ளான பாடுகள் லிஸ்ட்டில் அது சேராது! 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

ஐயா சுந்தர் அவர்களே..

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
எனது போதகரை போலவே உங்களுடைய கருத்தும்
ஆவிக்குரிய வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக
உள்ளது .

மேற்கோள் வசனங்கள் மிக மிகச் சரியானது....

__________________

"கர்த்தர் நல்லவர்வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
கிறிஸ்த்துவுக்குள் பாடனுபவித்தலும் நோய்/வியாதிகளும்!
Permalink  
 


அப்படியானால் யோபுக்கு அனுமதித்தது போல தேவன் யாருக்கும் அனுமதிப்பது இல்லையா?

சற்று தெளிவாக விளக்கவும்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கிறிஸ்த்துவுக்குள் பாடனுபவித்தலும் நோய்/வியாதிகளும்!
Permalink  
 


யோபுவுக்கு அனுமதித்ததுபோல் வேறு யாருக்கும் தேவன் அப்படியொரு சோதனை நிலையை அனுமதிப்பது கிடையாது. அதற்க்கு அவசியமும் இல்லை.
 
முழு மனு குலத்துக்கும் யோபு ஒரு representative போல என்றுதான் சொல்ல வேண்டும்.
 
அவனிடம் சாத்தான் தோற்றுப்போனான் அதாவது "நோயினாலும் வதையினாலும் மனுஷனை தன வசப்படுத்திவிடலாம்" என்ற சாத்தானின் எண்ணம் அங்கு தகர்ந்துபோனது. 
 
எப்படி ஆதாம் ஒருவன் மூலம் பாவம் உலகில் உள்ள எல்லா மனுஷனுக்கு வந்ததோ அதேபோல் யோபு என்னும் ஒருவன் மூலம் "நோயினாலும் வாதையினாலும் மனுஷனை தேவனுக்கு விரோதமாக செயல்பட வைக்க முடியாது" என்பது உறுதியானது பிறகு இன்னொருவருக்கு அதே சோதனை தேவையில்லை.
 
அதேபோல்தான் இயேசு பாவத்துக்காக மரித்த பிறகு பாவத்துக்காக  இன்னொருவரின் மரணம் தேவையில்லை 
 
பாவத்தில் வீழ்ந்தாலும் தேவன் மேலுள்ள பற்றுதலால் மீண்டும் தேவ சமூகத்தை எட்டிவிடமுடியும் என்பதற்கு தாவீதின் நடப்படிகள் போல இன்னொரு மனுஷனின் நடப்படிகள் தேவையில்லை 
 
வேதத்தில் உள்ள ஒவ்வொரு சம்பவம் ஒவ்வொரு நிகழ்வும் சத்துருவுக்கு எதிரான செயற்பாட்டின் ஒவ்வொரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
 
ஒரே ஒரு பழத்தை சாப்பிட்டு சத்துருவிடம் தோற்றுப்போன மனுஷன் இன்று அவனை ஜெயிப்பதற்கு ஒவ்வொரு நிலையாக கடந்து வர வேண்டியுள்ளது. அது  ஒவ்வொரு பகுதியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.  
 
(எப்பொழுது முழுவதும் எல்லா நிலையிலும்  சத்துரு மனுஷனிடம்  தோற்கிறானோ அல்லது மனுஷனை  எந்த ஒரு செயல்பட்டின் மூலமும் மேற்கொள்ள முடியாத ஒரு நிலையை அடைகிறானோ  அப்பொழுதுதான் தேவன் அவனை பாதாளத்துக்கு அனுப்பி முத்திரை போடுவார்) 
 
வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.  
 
 
எனவே ஒரு முறை அவன் தோற்றுப்போனால் அந்த விஷயத்தை அவன் மீண்டும் பயன்படுத்தி ஜெயிக்க முடியாது. எனவே இன்னொருவருக்கு அதேபோல் சோதனை கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை.
 
தற்போது மனுஷனுக்கு வரும் நோய்க்கு எல்லாவற்றிக்கும் காரணம் தேவனின் வார்த்தைகளை மீறும் பாவமே அன்றி வேறு எதுவும் இல்லை. தேவனின் வார்த்தைகள் என்பதில் பழைய ஏற்பட்டு வார்த்தைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 
 
உபாகமம் 7:11. ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக.12. இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால் 15 கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்;   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
கிறிஸ்த்துவுக்குள் பாடனுபவித்தலும் நோய்/வியாதிகளும்!
Permalink  
 


Amen.. thanks na

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard