தேவன் சர்வவல்லமை மிக்கவர்! அவர் நினைத்தால் எந்தஒரு கருப்பொருளும் இல்லாமல் ஒன்றை உருவாக்கவோ ஜெனிபிக்கவோ முடியும்! அப்படித்தான் ஒன்றும் இல்லாமையில் இருந்து தேவன் இந்த உலகையும் தேவர்களையும், தூதர்களையும் கூட உருவாக்கினார். ஆனால் இயேசுவின் ஜெனிப்பித்தல் விஷயத்தில் அவ்வாறு நடக்கவில்லை! எனவேதான் மற்ற எல்லா படைப்பகளி லிருந்தும் இயேசு வேறுபடுவதோடு தேவன் என்ற ஸ்தானத்தையும் விசேஷமாக "எனது நேசகுமாரன்" என்ற ஸ்தானத்தையும் "கன மகிமை ஸ்தோத்திரம்" பெரும் நிலையையும் அவர் பெறுகிறார்.
ஒரு "பெரிய தேவன்" அவரால் பெற்றெடுக்கப்பட்ட "சின்ன தேவன்" இயேசு என்பதோ, தேவனின் வார்த்தைகளை அப்படியே நிறைவேற்ற தேவனால் ஜெனிபிக்கபட்டவர் இயேசு என்பதோ சரியான கருத்து அல்ல! தேவன் வார்த்தையே இயேசுவாக ஜெனிப்பிக்கபட்டு குமாரனானது! எனவே இயேசு திட்டமாக "தேவனின் வார்த்தை" என்னும் கருப்பொருளால் உண்டானவர். எனவேதான் யோவான் "அந்த வார்த்தை மாம்சமானது" என்று எழுதுகிறார். அதாவது எந்த ஒரு வார்த்தை என்னும் வல்லமையின் மூலமாக தேவன் ஒன்றுமில்லாமையில் இருந்து எல்லாவற்றையும் படைத்தாரோ, அந்த வார்த்தையே மரியாள் வயிற்றில் மாம்சமானது. (இதற்க்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதை அறியவேண்டுமானால் பலிசெலுத்துதல் ஏன் உண்டானது என்பதை அறியவேண்டும் அதை பற்றி பின்னால் பார்க்கலாம்) இப்பொழுது இங்கு "தேவனின் வார்த்தை" என்னும் பதம் எதை குறிக்கிறது என்பதையும் நாம் சற்று விளக்கமாக பார்க்கவேண்டும். அதற்க்கு ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.
ஒரு பிரதமமந்திரியை எடுத்துகொள்ளுவோம். அவர்தனது உதவியாளரை பார்த்து "நீ இந்த லெட்டரை டைப்செய்" என்று கூறுகிறார் உடனே அந்த உதவியாளர் அந்த லெட்டரை டைப்செய்ய ஆரம்பிக்கிறார்.
ஆனால்
அதே உதவியாளரை பார்த்து நான் "என்னுடைய லெட்டரையும் டைப் செய்" என்று கேட்டால் அவர் செய்யமாட்டார். இங்கு நான் சொல்வதும் பிரதமர் சொல்வதும் ஒரே வார்த்தைதான். ஆனால் எனது வார்த்தைக்கு வல்லமை இல்லை, பிரதமர் வார்த்தைக்கு வல்லமை இருக்கிறது ஆகினும் இரண்டும் வார்த்தைதான்.
அதுபோல் தேவனின் வார்த்தை வல்லமை நிறைந்தது. அவர் சொல்ல அது அப்படியே ஆகும்! அவர் கட்டளையிட அது அப்படியே நிற்கும். அந்த "வார்த்தை என்னும்வல்லமை அல்லது பவர்" இப்பொழுது மரியாளின் வயிற்றில் மாம்சமாகி விட்டது. எனவேதான் இயேசுவுக்கு இந்த உலகில்உள்ள அனைத்து படைப்புகளின் மேலும் அதிகாரம் இருந்தது. வாய் வார்த்தைகளாலேயே எல்லாவற்றையும் மேற்கொள்ளும் வல்லமையும் இருந்தது.
இந்த கருத்தின் அடிப்படையில் பார்த்தால்:
இயேசு தேவத்துவத்துக்குள் ஒருவர் என்ற கருத்து சரியாக பொருந்தும். அதே நேரத்தில் ஒரே தேவன்தான் என்ற கருத்தும் மாறாது தேவனிடம் இன்னொரு பலியை செலுத்த இன்னொரு வல்லமை நிறைந்த வார்த்தை இல்லை. எனவே "வேறொரு பலி இல்லை" இயேசுவை அசட்டை செய்தவர்கள் தண்டணையடைய நேரிடும் என்ற கருத்தும் சரியானதாகும்
தேவன் வார்த்தையை மாம்சமாக்கிவிட்டார் எனவே அவர் ஊமையா? அவருக்கு பேச முடியாதா? என்று கேட்கலாம். இங்கு மீண்டும் நாம் பிரதமர் உவமையை பார்க்கவேண்டும். ஒருவேளை அதே பிரதமருக்கு பதவிபோய்விட்டது என்றால் பின்னும் அவர் "தனது உதவியாளரை பார்த்து "இந்த லெட்டரை டைப் செய்" என்று சொல்லமுடியும். ஆனால் அது நிறைவேறாது. எனவேதான் தேவன் எப்பொழுது தனது வார்த்தையை பலியாக்க தீர்மானித்தாரோ அதன் பின்னர் வேதாகமத்தில் எங்குமே அவர் புதியதாக இன்னொன்றை சிருஷ்டிக்கவில்லை அல்லது படைக்கவில்லை. (இன்னொருபடி மேலேபோய் சொல்வோமானால் ஆதாம் ஏவாள் பாவம் செய்தபின்னர் அவர்களை அப்பொழுதே அழிக்காமல் விட்டதற்கும் காரணம் அதுதான் என்றே நான் கருதுகிறேன்.)
தேவன் என்பவர் இயேசுவோடு சேரும்போதுதான் தேவத்துவம் என்பது முழுமை பெரும்! எனவே இயேசுவை தேவனாக ஏற்காமல், யகோவா தேவனைமட்டுமே தேவனாக கொள்வது ஒரு முழுமையற்ற நிலையாகிறது.
ஆகினும் தேவனிடம் இந்த ஒரே ஒரு வல்லமை மட்டும்தான் இருந்தததா இயேசுவாகிய வார்த்தை பலியாக தீர்மானித்தபின் தேவன் வல்லமயற்றவராகி விட்டாரா? என்பதை ஆராய நாம் பரிசுத்த ஆவியானவர் யார்? பிதா யார் அவர்கள் எப்படி ஒருவர் என்பதை ஆராயவேண்டும்!
-- Edited by SUNDAR on Saturday 18th of December 2010 04:44:57 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவன் தன் சாயலாகவே மனிதனை உண்டாக்கினார் என்று வேதம் சொல்கிறது! எனவே "தேவன்" மனிதனின் சாயலானவரே! மனிதனின் சிந்தித்தல் செயல்படுதல் மற்றும் அவனது கிரியைகள் என்பது கீழ்கண்ட தன்மைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது!
மூளை + சக்தி + வார்த்தை
| | |
| | |
சித்தித்தல் + ஆற்றல் + கட்டளை
மூளை அனைத்து காரியங்களையும் சித்திக்கிறது அல்லது திட்டமிடுகிறது அந்த காரியங்கள் அல்லது திட்டங்கள் கீழ்கண்ட ஏதாவது ஒருவழியில் நிறைவேற்றப்படுகிறது.
நாம் நமது சக்தியாயால் நாமே ஒரு காரியத்தை செய்யமுடியும் அல்லது சைகை அல்லது எழுத்துமூலம் பிறரை செய்ய வைக்க முடியும் அல்லது நமது வாய் வார்த்தை மூலம் நமது வல்லமையை உபயோகித்து பிறரை செய்ய வைக்க முடியும்.
இதே காரியங்கள்தான் தேவனின் மீட்பின் திட்டத்தில் செயல்பாடும். தேவன் மூவரோ நால்வரோ இருவரோ அல்ல! அவர் ஒருவரே! தன்னால் உருவாக்கபட்ட மனிதன் பாவத்தில் விழுந்தபோது, தனது மூன்றுவிதமான வல்லமைகளை தனித் தனியாக பிரித்து செயல்பட்டு மனிதனை பாவத்தில் இருந்து மீட்க சித்தமானார்.
1. மூளை - உடம்பின் அனைத்து பகுதியையும் கட்டுப்படுத்துவதோடு நமது உடம்பின் அனைத்து செய்கைக்கும் ஆதாரமாக இருப்பது மூளையே! மூளையின்றி ஒன்றும் செய்ய முடியாது அதபோல் தேவ ஆவியானவர் அனைத்திற்கும் மூளையாக செயல்படுகிறார். அவரே அனைத்திலும் அனைத்தும் ஆனவர். அவரின்றி எந்த செயலும் இங்கு இல்லை. ஆனால் இவர் ஆற்றல் எனப்படும் சக்தியுடனோ அல்லது வார்த்தை எனப்படும் வல்லமயுடனோ சேர்ந்துதான் காரியங்களை செய்யமுடியும்.
2. ஆற்றல் அல்லது சக்தி- மூளை என்னதான் ஒருசெயலை கட்டளையிட்டாலும் ஆற்றல் அல்லது சக்தி இல்லை என்றால் அந்த கட்டளை நிறைவேறாது காரியங்களை செய்யகூடிய ஆற்றலே கர்த்தரின் ஆவியானவர் என்னும் சேனைகளின் கர்த்தர் என்றும் அழைக்கபடுபவர். இவரே அனைத்துக்கு காரண கர்த்தர். பின்னாளில் கிறிஸ்த்துவின் மரணத்தின் மூலம் மனிதனுக்குள் தங்கும் வரத்தை பெற்று பரிசுத்த ஆவியானவரானார்.
3. வார்த்தை - நாமாக ஒரு காரியத்தை நமது சக்தியை பயன்படுத்தி செய்யா விட்டலும் நமது வார்த்தையை பயன்படுத்தி நமக்கு கீழ்படிந்தவர்கள் மூலம் ஒரு காரியத்தை செய்ய வைக்க முடியும்! இந்த வார்த்தையின் வல்லமையே மாம்சமாக வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து. தனது வார்த்தையால் மட்டுமே காற்றையும் கடலையும் அதட்டி சத்துருவின் சகல வல்லமையையும் வார்த்தையாலேயே மேற்கொண்டவர்.
ஆதியில் ஜலத்தின் மீது அசைவாடி வார்த்தை மூலம் அனைத்தையும் படைத்த தேவ ஆவியானவர், மனிதன் பாவத்தில் விழுந்தபோது எந்த வார்த்தையால் உலகையும் அதிலுள்ளவைகளும் படைத்தாரோ அந்த வார்த்தையே பாவத்துக்கான பலியாக்கவேண்டிய நிர்பந்தத்தில் வார்த்தயாகிய இயேசுவை தனியாக பிரித்து மாம்சமாக்க தீர்மானித்தார்.
பின்னர் காலம் நிறைவேறும்வரை பழைய ஏற்பாட்டு காலம் முழுவதும் தேவ ஆவியானவரும் கர்த்தரின் ஆவியானவரும்சேர்ந்து கிரியைகளின் அடிப்படையில் செயல்களை செய்து வந்தனர்! எனவே அங்கு கிரியைக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டு, வெறும் கிரியைகள் மட்டுமே மேலாக சொல்லப் பட்டது. எனவேதான் நியாயபிரமாண கட்டளைகள் கொடுக்கப்பட்டு அவற்றை கைகொள்ளுகிறவன் அவைகளால் பிழைப்பான் என்று எழுதி கொடுக்கப்பட்டது.
மூன்றாவதாக கிருபையின் காலத்தில் தேவனின் வார்த்தயாகிய ஆண்டவராகிய இயேசு பூமியில் மாம்சமாக பிறந்தார்! அவர் ஞானஸ்தானம் பெறும்போது தேவ ஆவியானவர் அவர்மேல் வந்து தங்கி அவரை நடத்தினார் (நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்) அவர் மரித்தபோது கர்த்தருடைய ஆவியானவ(பிதாக்களின் தேவன் அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினார்)
தற்போது வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் பெற்றுள்ள இயேசுவோடு கூடிய தேவ ஆவியானவர் மற்றும் இயேசுவின் மரணத்தால் மனிதனுக்குள் தங்கும் வரத்தை பெற்ற "பரிசுத்த ஆவியானவர்" என்றும் "தேற்றவாளர்" என்றும் பெயர்பெற்ற கர்த்தருடைய ஆவியானவர் எல்லோருமாக சத்துருவை பாதப்படி யாக்கிபோடும் பணியை செய்து வருகின்றனர்.
இவர்கள் மூவரும் ஒரே பணியை செய்யும் தனித்தனி தேவனின் வெவேறு வல்லமைகளே! ஒவ்வொருவரையும் நாம் தனித்தனி ஆளத்துவமாக அனுபவித்து உணர முடியும்!
தேவன் இங்கு பிரிந்திருக்கவில்லை! அவர் ஒருவரே!தேவனின் வல்லமைகள் மாத்திரமே பிரிந்திருக்கிறது. தேவனின் மூன்று வல்லமைகளுமே பரிசுத்தம் உள்ளது எனவே பல இடங்களில் பரிசுத்தஆவி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது தேவனின் இந்த செயல்பாடுகளுக்கு யார் எந்த பெயர் வைத்து கொண்டாலும் சரி! எனது புரிதலும் நம்பிக்கையும் இதுவே!
இந்த கருத்தின் அடிப்படையில் நீங்கள் எந்த வசனத்தை கொண்டு பொருத்தி பார்த்தாலும் சரியாகவே இருக்கும்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//இதே காரியங்கள்தான் தேவனின் மீட்பின் திட்டத்தில் செயல்பாடும். தேவன் மூவரோ நால்வரோ இருவரோ அல்ல! அவர் ஒருவரே! தன்னால் உருவாக்கபட்ட மனிதன் பாவத்தில் விழுந்தபோது, தனது மூன்றுவிதமான வல்லமைகளை தனித் தனியாக பிரித்து செயல்பட்டு மனிதனை பாவத்தில் இருந்து மீட்க சித்தமானார்.//
தேவன் விளைவை எதிபாராமல் இருந்து ஒரு காரியம் நடந்த பின்பு "அச்சச்சோ இப்படி ஆயிடுச்சே!" என்று சொல்லி எதையாவது செய்கிறவர் அல்ல!. தேவன் சிருஷ்டிப்புக்கு முன்னமே "திரியேக" தேவன். பாவத்தில் மனிதன் விழுந்தபோது அவர் முன்றாக பிரியவில்லை.
"அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்." (I பேதுரு 1:20)
//மூளையின்றி ஒன்றும் செய்ய முடியாது அதபோல் தேவ ஆவியானவர் அனைத்திற்கும் மூளையாக செயல்படுகிறார். அவரே அனைத்திலும் அனைத்தும் ஆனவர். அவரின்றி எந்த செயலும் இங்கு இல்லை. ஆனால் இவர் ஆற்றல் எனப்படும் சக்தியுடனோ அல்லது வார்த்தை எனப்படும் வல்லமயுடனோ சேர்ந்துதான் காரியங்களை செய்யமுடியும்.//
தேவத்துவம் முவருக்குள்ளும் (Father , Son and Holy Spirit) பரிபூரணமாக வாசமாய் இருக்கிறது. திரியேக தேவனை கூறுபோட முடியாது! தேவனை முன்றாக கூறு போட்டால் இயேசு அதிலே ஒரு பகுதி என்று சொல்ல முடியாது.
//ஆதியில் ஜலத்தின் மீது அசைவாடி வார்த்தை மூலம் அனைத்தையும் படைத்த தேவ ஆவியானவர், மனிதன் பாவத்தில் விழுந்தபோது எந்த வார்த்தையால் உலகையும் அதிலுள்ளவைகளும் படைத்தாரோ அந்த வார்த்தையே பாவத்துக்கான பலியாக்கவேண்டிய நிர்பந்தத்தில் வார்த்தயாகிய இயேசுவை தனியாக பிரித்து மாம்சமாக்க தீர்மானித்தார். //
தேவனுக்கு எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை அவரை யாரும் நிர்பந்திக்கவும் முடியாது. He is Sovereign !
"ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? " (ரோமர் 11:33-35 )
"இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? " (யோபு 9:12 )
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.(தானியேல் 4:35)
//பின்னர் காலம் நிறைவேறும்வரை பழைய ஏற்பாட்டு காலம் முழுவதும் தேவ ஆவியானவரும் கர்த்தரின் ஆவியானவரும்சேர்ந்து கிரியைகளின் அடிப்படையில் செயல்களை செய்து வந்தனர்!//
தேவன் எந்த சூழ்நிலையிலும் கிரியையின் அடிப்படையில் செயல்களை செய்யவில்லை. கிரியைகள் விசுவாசத்தின் வெளிப்பாடாகும். ரட்சிப்பது விசுவாசமே! (இது பழைய ஏற்பாட்டுக்கும் பொருந்தும்)
"இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை." (ரோமர் 3:20)
"ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்." (ரோமர் 3:28)
"ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை." (ரோமர் 4:2 )
ஆபிரகாமும், தாவிதும் விசுவாசத்தினாலே இரடசிக்கப்படார்கள். எபிரெயர் 11 அதிகாரம் முழுவதையும் வாசிக்கவும்
//இவர்கள் மூவரும் ஒரே பணியை செய்யும் தனித்தனி தேவனின் வெவேறு வல்லமைகளே! ஒவ்வொருவரையும் நாம் தனித்தனி ஆளத்துவமாக அனுபவித்து உணர முடியும்!//
நாம் அனுபவிப்பதற்காக வல்லமைகள் "ஆள்தத்துவம்" உள்ளவைகள் ஆக மாறவில்லை. தேவனின் சுபாவத்திலே 3 "ஆள்தத்துவம்" உள்ளவர். வல்லமைகைளுக்கு இடையில் "நான்", "நீர்" என்ற உறவு இருக்க வாய்ப்பில்லை. வல்லமைகள் ஒன்றிடம் ஒன்று ஜெபிக்காது
//இந்த கருத்தின் அடிப்படையில் நீங்கள் எந்த வசனத்தை கொண்டு பொருத்தி பார்த்தாலும் சரியாகவே இருக்கும் //
சகோதரரே நீங்கள் உங்களுடைய முழு பதிவுக்கும் ஒரு வசன ஆதாரமும் குறிப்பிடவில்லை. இது தவறான உபதேசம்! தயவுசெய்து இதை நீக்கி விடுங்கள். 2000 வருடங்களாக வேத அறிஞர்களுக்கு தெரியாத ஒன்று எனக்கு தெரிந்து விட்டது என்று நினைக்காதீர்கள் . இது ரகசியம் புரிந்தவரையில் பிடித்து கொண்டு புரியாதவகளை குறித்து "கதை" எழுதாமல் இருப்பது நமது விசுவாச வாழ்கைக்கு உதவும்.
நமது தளத்தில் உள்ள பதிவுக்கு நமது தளத்தில் பின்நூட்டமிடுவது தான் நியாயமான செயல். இங்கு யாரும் மற்றவர்களை திட்டுவதோ சாபமிடுவதோ கிடையாது. ஆகினும் சகோ. ஜான் அவர்கள் ஏன் வேற்று தளத்தில்போய் என் கருத்துக்கு பின்நூட்டமிட்டுள்ளார் என்பது புரியவில்லை. பிற தளத்தில் உள்ள பதிவை பதிவிட்டு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லைதான் ஆகினும் தாங்கள் சொல்வது என்ன வென்பதை திட்டமாக விளக்க தெரியாதவர்கள், அடுத்தவர்கள் பதிவை "தவறு" என்றும் 'அதை நீக்கு" என்றும் திட்டமாக சொல்வதற்கும் யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை.
திரித்துவம் என்ற கருத்தை நீங்கள் யாராவது விளக்கிவிட்டால் நான் ஏன் இதுபோல் பதிவுகளை தரப்போகிறேன்? அப்படி விளக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அதை நம்பாதவர்களை பிசாசு என்று தீர்க்கிறீர்களே அதுவலலவா எனக்கு வேதனையை தருகிறது.
sundar wrote:
//இதே காரியங்கள்தான் தேவனின் மீட்பின் திட்டத்தில் செயல்பாடும். தேவன் மூவரோ நால்வரோ இருவரோ அல்ல! அவர் ஒருவரே! தன்னால் உருவாக்கபட்ட மனிதன் பாவத்தில் விழுந்தபோது, தனது மூன்றுவிதமான வல்லமைகளை தனித் தனியாக பிரித்து செயல்பட்டு மனிதனை பாவத்தில் இருந்து மீட்க சித்தமானார்.//
சகோ. ஜான் எழுதியது:
////தேவன் விளைவை எதிபாராமல் இருந்து ஒரு காரியம் நடந்த பின்பு "அச்சச்சோ இப்படி ஆயிடுச்சே!" என்று சொல்லி எதையாவது செய்கிறவர் அல்ல!. ////
தேவன் அவ்வாறு செய்வதில்லைதான் , ஆனால் மனுஷர்கள் அறிவீனமான காரியங்களை செய்து தேவ திட்டத்துக்கு விரோதமாக செயல்படும்போது தேவன் மனஸ்தாபபட்டு பலமுறை தனது செய்கையை மாற்றியிருக்கிறார்.
பூமியில் மனிதர்களை படைத்த தேவன் அவர்கள் அக்கிரமம் பெருகியபோது அவர்களை படைத்ததற்காக மனஸ்தாபபட்டு அவர்களை அழிக்கிறார்
ஆதியாகமம் 6:6தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர்மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது
சவுலை ராஜாவா க்கியது தேவனே பின்னர் அவனின் மதியீனமான செயலை பார்த்து அவனை ராஜாவாக்கியதர்க்கு மனஸ்தாபபட்டார்
I சாமுவேல் 15:11 நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது
"தேவன் தான் செய்த காரியத்துக்கு மனஸ்தாபபட்டார்" என்று வேதமே சொல்லும்போது தாங்கள் எதன் அடிப்படையில் இவ்வாறு சொல்கிறீர்கள் என்பதை விளக்குங்கள்.
தங்களின் இந்த கருத்துக்கு எனக்கு வசன ஆதாரங்கள் கொடுங்கள், நான் திரித்துவம் சம்பந்தமான எனது கருத்துக்களை உடனே இந்த தளத்தில் இருந்து நீக்கிவிடுகிறேன்.
Bro. john wrote:
////பாவத்தில் மனிதன் விழுந்தபோது அவர் முன்றாக பிரியவில்லை.
"அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்." (I பேதுரு 1:20)////
மனுஷன் பாவத்தில் விழும்வரை அவர் "எலோஹீம்" என்னும் ஒரே தேவனாகத் தான் இருந்தார். ஒருவேளை தாங்கள் சொல்வதுபோல் இயேசு முன் குறிக்கப் பட்ட்வராக இருந்தாலும், தேவன் உலகை உண்டாக்கி மனிதனை படைக்கும் முன்னே "தான் படைக்கபோகும் அந்த மனுஷன் பாவம் செய்வான், அவனுக்காக தன் வார்த்தையை மாம்சமாக்கி கடைசி காலத்தில் உலகுக்கு அனுப்பவேண்டும்" என்ற தனது திட்டத்தின் அடிபடையில் இந்த வசனங்கள் சொல்லப்பட்டது.
sundar Wrote:
//மூளையின்றி ஒன்றும் செய்ய முடியாது அதபோல் தேவ ஆவியானவர் அனைத்திற்கும் மூளையாக செயல்படுகிறார். அவரே அனைத்திலும் அனைத்தும் ஆனவர். அவரின்றி எந்த செயலும் இங்கு இல்லை. ஆனால் இவர் ஆற்றல் எனப்படும் சக்தியுடனோ அல்லது வார்த்தை எனப்படும் வல்லமயுடனோ சேர்ந்துதான் காரியங்களை செய்யமுடியும்.//
சகோதரரே நான் தேவ ஆவியானவரை பற்றி நான் சொன்னால் நீங்கள் இயேசுவை பற்றி சொல்லப்பட்ட வசனத்தை காட்டி அது மஹா தவறு என்று சொல்கிறீர்கள். இயேசுவே தனது வாயாலேயே "நானும் என் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்" என்று சொன்னபடியால் மாம்சமாக இருந்த இயேசுவினுள் பிதாவாகிய தேவன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் எல்லோருமே வாசம் செய்தனர்.
யோவான் 10:38பிதாஎன்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
பிதா எதை செய்யசொன்னாரோ அதைதான் இயேசு செய்தார்.
யோவான் 14:10என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்
பிதாவாகிய தேவன் அவருள் தங்கி இருந்து கிரியை செய்தபடியால் அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் வாசமாயிருந்தது என்ற கருத்து சரியானதே. அதற்கும் நமது கட்டுரைக்கும் தொடர்பில்லை.
Bro. John Wrote:
///தேவத்துவம் முவருக்குள்ளும் (Father , Son and Holy Spirit) பரிபூரணமாக வாசமாய் இருக்கிறது.////
இது வசன ஆதாரம் இல்லாத தேவனை பற்றிய தங்களின் தவறான புரிதல்.
யோவான் 10:29அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்
இப்படி இயேசுவே தனது வாயால் "என் பிதா எல்லோரையும்விட பெரியவர்" என்று சொல்லியிருக்கும்போது , தங்கள் மனித கூற்றை நான் ஏற்க்கவேண்டிய அவசியமில்லை. வசனத்தின் அடிப்படயில் பிதாவானவர் ஏதாவது ஒரு விதத்தில் இயேசுவைவிட பெரியவர் என்றே நான் நம்புகிறேன்.
எல்லோரும் சமமானவர்கள் என்பதெல்லாம் வெறும்கற்ப்பனை. அவரவர் செய்ய வேண்டிய பணிகளை அவரவர் செய்தனர்! எல்லோரும் எல்லாவற்றையும் செய்ய முடியாது!
பிதாவின் சித்தம் செய்யாமல் யார் சித்தம் செய்தாலும் பரலோகம் இல்லை!
இயேசுவின் நாமத்திலன்றி பிதாவின் நாமத்தில் பாவ மன்னிப்பு இல்லை!
பரிசுத்த ஆவியினவரின்றி இயேசுவால் மீட்பின் நாளுக்கென்ற முத்திரை இல்லை.
ஆனால் மூன்று காரியத்தையும் செய்யும் தேவன் ஒருவரே! அவரவருக்கென்று முக்கியமான செயல்பாடுகள் இருந்தன எல்லோருமே தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகின்றனர்.
அவ்வாறு எல்லோருக்கும் எல்லாம் முடியும் என்றால் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்த நாளைபற்றி குறிப்பிடும்போது "பிதா ஒருவரே அறிவார்" என்று இயேசு சொல்லவேண்டிய அவசியமில்லை.
Bro. John wrote:
////திரியேக தேவனை கூறுபோட முடியாது! தேவனை முன்றாக கூறு போட்டால் இயேசு அதிலே ஒரு பகுதி என்று சொல்ல முடியாது. ////
சகோதரரே தாங்கள் மட்டும் சொந்த கருத்துக்களை பதிவிட்டு விட்டு என்னிடம் மட்டும் "வசன ஆதாரம் கொடு" என்று கேட்ககூடாது. தேவனை "திரியேக தேவன்" என்று குறிப்பிடும் வார்த்தை வேதத்தில் எங்கே இருக்கிறது என்று கூறுங்கள்
தேவனின் வார்த்தையாக இருந்து பின்னர் மாம்சமாக பிரிந்த இயேசு தனத பணியை முடித்தபின்னர் பிதாவின் வலது பாரிச்த்தில்தான் சென்று அமர்ந்தாரே தவிர அவரோடு ஒன்றாகவில்லை என்று வசனம் சொல்வதை தாங்கள் அறிய வேண்டும். எனவே பாவத்தில் இருந்து மனிதனை மீட்கும் திட்டத்தில், இயேசு தேவனை விட்டு பிரிந்தது பிரிந்ததுதான். இங்கு நாம்அவரை கூறுபோடவில்லை.
Sundar Wrote:
//ஆதியில் ஜலத்தின் மீது அசைவாடி வார்த்தை மூலம் அனைத்தையும் படைத்த தேவ ஆவியானவர், மனிதன் பாவத்தில் விழுந்தபோது எந்த வார்த்தையால் உலகையும் அதிலுள்ளவைகளும் படைத்தாரோ அந்த வார்த்தையே பாவத்துக்கான பலியாக்கவேண்டிய நிர்பந்தத்தில் வார்த்தயாகிய இயேசுவை தனியாக பிரித்து மாம்சமாக்க தீர்மானித்தார். //
Bro. John Wrote:
தேவனுக்கு எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை அவரை யாரும் நிர்பந்திக்கவும் முடியாது. He is Sovereign ! ////
தேவன் "சர்வவல்லவர்"என்பதும்"சர்வவியாபி" அவரால் எல்லாம்கூடும் என்பதும் உண்மை! அதை யாரும் இங்கு மறுக்கவில்லை. ஆனால் மனிதன் பாவத்தில் வீழ்ந்தபோது அவனை பாவத்திலிருந்து மீட்கும்திட்டத்தில் எப்படி ஆண்டவராகிய இயேசு பரலோக மகிமையை துறந்து அடிமைகோலம் பூண்டாரோ அதேபோல் தேவன் சில நிர்பந்தங்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்ப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது!
யோபுவை பற்றி தேவனே அவன் உத்தமன் சன்மார்க்கன் என்று சாட்சி கொடுக்கிறார் பின்னர் சாத்தான் வந்து அவனை சோதிக்கும்படி நிர்பந்திக்கும் போது அதற்க்கு உடன்பட்டு யோபுவை சோதனைக்கு ஒப்புகொடுக்கிறார்.
Sundar Wrote:
//பின்னர் காலம் நிறைவேறும்வரை பழைய ஏற்பாட்டு காலம் முழுவதும் தேவ ஆவியானவரும் கர்த்தரின் ஆவியானவரும்சேர்ந்து கிரியைகளின் அடிப்படையில் செயல்களை செய்து வந்தனர்!//
Bro. John Wrote /////தேவன் எந்த சூழ்நிலையிலும் கிரியையின் அடிப்படையில் செயல்களை செய்யவில்லை. கிரியைகள் விசுவாசத்தின் வெளிப்பாடாகும். ரட்சிப்பது விசுவாசமே! (இது பழைய ஏற்பாட்டுக்கும் பொருந்தும்)
சகோதரர் ஜான் அவர்களே இங்கு கிரியை மற்றும் கிருபை இரண்டையும் போட்டு குழப்பவேண்டாம் கிருபையை காட்டி கட்டி கிரியை ஒதுக்கவும் வேண்டாம். அதை பற்றிய தெளிவான கட்டுரைகள் கீழ்கண்ட சுட்டிகளில் உள்ளன.
பழை ஏற்பாட்டு காலத்தில் எல்லாம் கிரியையின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது என்பதற்கு பலியிடுதலில் இருந்து பத்துகற்பனைவரைஅனேக ஆதாரம்உண்டு தங்களுக்கு புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்
இயேசுவின் மரணத்துக்குபின்னரே கிருபையின்காலம் ஆரம்பமாகி விசுவாசத்தின் அடிப்படையில் நீதி உண்டானது. ஆகினும் கிரியை இல்லாத வெறும் விசுவாசம் ஒன்றுக்கும் உதவாது!
//இவர்கள் மூவரும் ஒரே பணியை செய்யும் தனித்தனி தேவனின் வெவேறு வல்லமைகளே! ஒவ்வொருவரையும் நாம் தனித்தனி ஆளத்துவமாக அனுபவித்து உணர முடியும்!//
Bro John Wrote:
////நாம் அனுபவிப்பதற்காக வல்லமைகள் "ஆள்தத்துவம்" உள்ளவைகள் ஆக மாறவில்லை.///
"அவரை தனித்தனியாக அனுபவித்து உணரமுடியும்" என்றுதான் சொன்னேநேயற்றி அதற்காகதான் அவர் அப்படி ஆள்தத்துவம் உள்ளவரானார் என்று எங்கும் எழுதவில்லை. பாவத்தில்வீழ்ந்த மனிதனை மீட்கும் திட்டத்துக்காக மூன்றாக பிரித்தார் என்றே எழுதியுள்ளேன்.
Bro.. John Wrote:
// தேவனின் சுபாவத்திலே 3 "ஆள்தத்துவம்" உள்ளவர்.//
இப்படி தேவனுக்கு மூன்று ஆள்தத்துவம் மட்டும்தான் உண்டு என்று உங்களுக்கு யார் சொன்னது? அல்லது எந்த வசனம் அவ்வாறு கூறுகிறது அல்லது அட்லீஸ்ட் தேவன் உங்களுக்கு அதை வெளிப்படுத்தினாரா சகோதரரே!
நான் சொல்கிறேன் தேவனுக்கு ஏழு ஆவிகள் உண்டு!
வெளி 4: தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன
எப்படி ஒரு ஆவியுள்ள மனிதன் ஒரு ஆளாக இருக்கிறானோ அதுபோல் ஏழு ஆவியை கொண்ட தேவன் எழு ஆள்தத்துவம் உள்ளவர் என்று நான் சொல்கிறேன். அவரின் தன்மையை குறைத்து மதிப்பிட்டு மட்டுபடுத்தும் நீங்கள் அதை மறுக்க முடியுமா?
Bro. John Wrote
/////வல்லமைகைளுக்கு இடையில் "நான்", "நீர்" என்ற உறவு இருக்க வாய்ப்பில்லை. வல்லமைகள் ஒன்றிடம் ஒன்று ஜெபிக்காது ///
சகோதரரே! வெறும் மண்ணை அள்ளி தன் சுவாசத்தை ஊதி தேவனால் உயிர் கொடுக்கப்பட்ட நாமே தனி ஆவியுள்ளவர்களாக தேவனிடம் ஜெபிபவர்களாக இருக்கும்போது, தேவன் தனது வார்த்தை என்னும் கருப்பொருளை தனியாக பிரித்து அதை மாம்சமாக்கும்போது இதுபோல் "நான் நீ என்ற உறவு இருக்காது" என்றெல்லாம் தங்கள் விளக்கம் எழுதுவது ஏற்றதா? என்று சற்று சிந்தியுங்கள்.
சுந்தர் Wrote:
//இந்த கருத்தின் அடிப்படையில் நீங்கள் எந்த வசனத்தை கொண்டு பொருத்தி பார்த்தாலும் சரியாகவே இருக்கும்//
Bro. John Wrote:
///சகோதரரே நீங்கள் உங்களுடைய முழு பதிவுக்கும் ஒரு வசன ஆதாரமும் குறிப்பிடவில்லை. ///
முடிந்தஅளவு தங்கள் மறுப்பக்கு விளக்கத்துடன் வசன சுடடுதலும் கொடுத்துள்ளேன் இன்னும் எந்த கருத்துக்கு தாங்கள் வசன ஆதாரம் கேட்கிறீர்கள் என்று தெரிவித்தல் முடிந்த வரை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
மேலும் வசன ஆதாரத்துடன் ஒரு கருத்தை சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது அதை புரட்டி அது இப்படியல்ல இப்படி என்று சொல்வீர்களா? சகோதரர் அன்பு தளத்தில் அனைத்தும் வசன ஆதாரத்துடன்தான் எழுதப்படுகிறது அதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்களா?
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 19:17நீ ஜீவனில்பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். மத்தேயு 4:10உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
இயேசுவின் வாயில் இருந்து புறப்பட்ட இந்த வசனங்களை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வீர்களா?
Bro. John Wrote
/////இது தவறான உபதேசம்! தயவுசெய்து இதை நீக்கி விடுங்கள்./////
உங்கள் உபதேசம் என்ன? திரித்துவம் என்றால் என்ன? என்பதை வசன ஆதாரத்துடன் விளக்கமாக எழுதுங்கள் அடுத்து தாங்கள் எழுதிய வார்த்தை களுக்கு நான் கேட்ட வசன ஆதாரம் கொடுத்தால் அதன்பின்னர் எனது கருத்து தவறா சரியா என்பதை ஆராயலாம்.
BRO. JOHN WROTE
////2000 வருடங்களாக வேத அறிஞர்களுக்கு தெரியாத ஒன்று எனக்கு தெரிந்து விட்டது என்று நினைக்காதீர்கள்/////
2000௦௦௦ வருடம் யாருக்கும் தெரியவில்லை என்றால் அது தெரியாமலே போய்விடுமா? அல்லது அதை யாருக்கும் தெரிவிக்ககூடாது என்று தேவன் முடிவு செய்திருக்கிறாரா? இதில் எதுவும் பெரிய ரகசியம் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை சகோதரரே. பிதா/ குமாரன்/ பரிசுத்த ஆவி இம்மூவரும் தனிதனி ஆள்தத்துவம் உள்ளவர்கள் என்பதை சந்தேகமற அறிந்தாகிவிடது அதே நேரத்தில்
I கொரிந்தியர் 12:6எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
தேவன் தாங்கள் சொல்வதுபோல் "மூவரின் தொகுப்பு" என்று எங்கும் சொல்லப் படாமல் "அவர் ஒருவரே" என்றும் வசனம் தெளிவாக சொல்கிறது. பிறகு எனக்கு அருளப்பட்டவைகளின் அடிப்படையில் நான் இவ்வாறு தீர்மானிப்பதில் எந்த தவறான உபதேசமும் இல்லை என்றே கருதுகிறேன்.
Bro. John Wrote:
////இது ரகசியம் புரிந்தவரையில் பிடித்து கொண்டு புரியாதவகளை குறித்து "கதை" எழுதாமல் இருப்பது நமது விசுவாச வாழ்கைக்கு உதவும்.////
என்ற வசனத்தை தாங்கள் வாசிக்கவில்லையா? நீங்கள் வேண்டுமானால் எந்த விளக்கமும் கேட்காமல் யாரோ சொன்னதை அப்படியே நம்பலாம் ஆனால் நான் எந்த ஒரு மனுஷனின் கருத்தையம் நம்புவதற்கில்லை மேலும் நான் அறிந்த ஒரு காரியத்தை தங்களைப்போல "புரியவில்லை" என்று சொல்வதை விரும்பாமல் எல்லாவற்றிக்கும் தன்னிடம் பதில்வைத்துள்ள தேவனிடம்வேண்டி பெற்றுகிறேன் காரணம் மாற்று கருத்துடைய சகோதரர்களுக்கும் பிற மத சகோதரர்களுக்கு நாம் சொல்லும் ஒருகருத்தை அவர்கள் பரியாசம் செய்யாதபடிக்கு அவரகளுக்கு புரியவைக்க வேண்டியது அவசியமாகிறதே!
வேதவசனத்தின்படியே பேசுவோம் என்று சொல்லும் நாம் வேதத்தில் எழுதப்படாத ஆனால் உண்மை என்று உறுதியாக நம்பும் ஒரு காரியத்தை சொல்லிவிட்டு, பின்னர் அதற்க்கு விளக்கம் தெரியாது என்று சொல்வோமாகில் அவரவர் இதுபோல் வேதத்தில் இல்லாத ஒரு கருத்தை சொல்லலாமே.
ஓன்று நீங்கள் சொல்லும் கருத்தை நீங்களே சரியாக விளக்குங்கள் அல்லது உங்களுக்கு தெரியாத ஒரு கருத்துக்கு தேவனிடம் அமர்ந்து சரியான விளக்கம் பெற்று எழுதும் என் வார்த்தையை நம்புங்கள். மற்றபடி"எழுதியதை நீக்கு" என்று தேவனைப்போல வந்து கட்டளையிட நீங்கள் தேவனல்ல!
நான் எழுதிய இந்த கருத்துக்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் திரித்துவத்தை ரகசியம் என்று சொல்லிக்கொண்டு அதன் அடிப்படையில் பிறரை நியயம்தீர்த்துகொண்டு தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்யும் சிலருக்கு வேண்டுமானால் ஐயோ உண்மை தெரிந்துவிட்டதே என்று பதறல் வரலாம். மற்றபடி என்னை பொறுத்தவரை "நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர்" எந்த கேள்விக்கு பதில் தேவை என்றாலும் அதை தேவனிடம் இருந்து என்னால் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்குஉண்டு!முடியாதவர்கள் விசுவாசத்தை மட்டும் காத்துகொண்டு விலகி போகலாம்! விபரம் தெரியாத விமர்சனம் யாருக்கும் தேவையில்லை!
(வேதத்தில் இல்லாத் திரித்துவத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, இவ்வளவு நேரம் செலவழித்து விளக்கம் கொடுப்பதுவே தேவைதானா என்பது புரியவில்லை)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வேறு தளத்தில் எழுதினதிற்கு மன்னித்து கொள்ளுங்கள் ஏனென்றால் எல்லா தளத்திலும் "Register" பண்ண விரும்பவில்லை.
//திரித்துவம் என்ற கருத்தை நீங்கள் யாராவது விளக்கிவிட்டால் நான் ஏன் இதுபோல் பதிவுகளை தரப்போகிறேன்? அப்படி விளக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அதை நம்பாதவர்களை பிசாசு என்று தீர்க்கிறீர்களே அதுவலலவா எனக்கு வேதனையை தருகிறது. //
நான் எப்போது அப்படி எழுதினேன் என்று தெரியவில்லை. வேதத்துக்கு புறம்பான காரியங்களை "Inspire" பண்ணுவது பிசாசு என்றுவேண்டுமானால் சொல்லியிருப்பேன். இயேசுவினுடைய தேவத்துவத்தை மறுப்பவர்களுக்கு பின்னே இருப்பது பிசாசு என்றுகூட சொல்லியிருப்பேன்
//தேவன் அவ்வாறு செய்வதில்லைதான் , ஆனால் மனுஷர்கள் அறிவீனமான காரியங்களை செய்து தேவ திட்டத்துக்கு விரோதமாக செயல்படும்போது தேவன் மனஸ்தாபபட்டு பலமுறை தனது செய்கையை மாற்றியிருக்கிறார்.//
அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று எழுதியிருகிறதே!. தேவனுக்கு "ஆள்தத்துவம்" உள்ளவர் ஆகையால் அவருடைய வார்த்தையை மீறும்போது அவர் மனஸ்தாபப்படுவார், விசனப்படுவார். அதற்காக அவர் "அச்சச்சோ இப்படி ஆயிடுச்சே!" என்று "Reactive" ஆக செய்தார் என்று எப்படி சொல்லுகிறீர்கள்?
ஏரோதும் , பிலாத்துவும் செய்தது தேவனுக்கு விரோதமான செயல். அதை குறித்தும் தேவன் விசனப்பட்டு இருப்பார் ஆனால் இதை முன் குறித்தது தேவனே! "He was not caught by surprise!" Infact Nobody Can surprise God.
/////தேவன் சிருஷ்டிப்புக்கு முன்னமே "திரியேக" தேவன். /// தங்களின் இந்த கருத்துக்கு எனக்கு வசன ஆதாரங்கள் கொடுங்கள், நான் திரித்துவம் சம்பந்தமான எனது கருத்துக்களை உடனே இந்த தளத்தில் இருந்து நீக்கிவிடுகிறேன்.//
சிருஷ்டிப்பின் போதும் தேவன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள்தத்துவம் உள்ளவராய் இருந்தார்
ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக..."
ஆதி என்பது நேரம் "Before Time" உருவாவதற்கு முன்னமே இருந்த நேரம்(?) அப்போதே வார்த்தை "இருந்தது". அது தேவனிடத்தில் இருந்தது Means வார்த்தை வேறு தேவன் வேறு ஆனால் வார்த்தையும் தேவனே
யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
உலகம் உருவாவதற்கு முன்னமே அவர் குமாரன் தான்.
நீதிமொழிகள் 8
22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.
24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
27. அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,
29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
30. நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
நிங்களே இது ஒன்றை நிருபித்து விட்டால் இந்த பகுதியை நீக்கி விடுகிறேன் என்றதால் இதோடு நிறுத்துகிறேன். அன்பு சகோதரரே, என்னுடை நோக்கம் குற்றம் கண்டு பிடிப்பது இல்லை ஆனால் தவறான ஒரு செய்தியை எல்லோரும் "Follow" பண்ணகூடாது என்பதால் தான்
கிறிஸ்துவுக்குள் ஜான்
-- Edited by John on Saturday 19th of February 2011 03:40:14 AM
//மேலும் வசன ஆதாரத்துடன் ஒரு கருத்தை சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது அதை புரட்டி அது இப்படியல்ல இப்படி என்று சொல்வீர்களா? சகோதரர் அன்பு தளத்தில் அனைத்தும் வசன ஆதாரத்துடன்தான் எழுதப்படுகிறது அதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்களா?//
அவர்கள் சொல்லுகிற வசன(?) ஆதாரம் புரட்டப்பட்ட ஒன்று என்பதை நீங்கள் அவருடைய தளத்திலே சென்று அறிந்து கொள்ளலாம்
///தேவன் அவ்வாறு செய்வதில்லைதான் , ஆனால் மனுஷர்கள் அறிவீனமான காரியங்களை செய்து தேவ திட்டத்துக்கு விரோதமாக செயல்படும்போது தேவன் மனஸ்தாபபட்டு பலமுறை தனது செய்கையை மாற்றியிருக்கிறார்.//
JOHN WROTE ///அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று எழுதியிருகிறதே!.///
இயேசு கிறிஸ்த்துவே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் ஆனால் தேவனோ மனிதனின் செயல்பாடுகளுக்கு ஏறப மனம் மாறக்கூடியவர்:
எரேமியா 18:8நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம்மாறுவேன்.
எரேமியா 18:10அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம்மாறுவேன்.
------------------------------------------------------------------------ JOHN WROTE////தேவனுக்கு "ஆள்தத்துவம்" உள்ளவர் ஆகையால் அவருடைய வார்த்தையை மீறும்போது அவர் மனஸ்தாபப்படுவார், விசனப்படுவார். அதற்காக அவர் "அச்சச்சோ இப்படி ஆயிடுச்சே!" என்று "Reactive" ஆக செய்தார் என்று எப்படி சொல்லுகிறீர்கள்?///
---------------------------------------------------------------------------- சகோதரரே, சவுலை ராஜாவாகினால் இதுபோன்ற காரியமெல்லாம் செய்வான் என்று தேவனுக்கு முன்னமே தெரிந்திருந்தால், அவர் எதிர்பார்த்ததை தானே அவன் செய்வான்? பின்னர் தேவனுக்கு தெரிந்த, அவர் எதிர்பார்த்த ஒன்றை சவுல் செய்யும்போது "சவுலை ராஜாவாக்கியது எனக்கு மனஸ்தாபமாக இருக்கிறது" என்று தேவன் சொல்வது, தானே ஒரு காரியத்தை செய்யவைத்துவிட்டு பின்னர் தானே அதற்க்கு மனஸ்தாபபடுவது போன்ற ஒரு சாதாரண மதியீன மனிதனின் நிலை போன்று ஆகிவிடாதா?
அப்படி, எல்லாமே தேவனின் முன்குறித்தல் என்றால் சாத்தானின் வீழ்ச்சியும் தேவனின் முன்குறித்தல் அல்லது அவருடைய திட்டம் என்றுதான் கருதுகிறீர்களா? ஒருவர் தவறுசெய்துவிட்டு தேவன்தான் என்னை இவ்வாறு தவறுசெய்ய வைத்திருக்கிறார், நான் இப்படி செய்வேன் என்று அவருக்கு முன்னமே தெரியும். அவர் செய்ய வைத்தார் நான் செய்தேன். இதில் என்ன தவறு? என்று கேட்டால் அவர் வாதம் சரியா?
-------------------------------------------------------------------------- JOHN WROTE ///ஏரோதும் , பிலாத்துவும் செய்தது தேவனுக்கு விரோதமான செயல். அதை குறித்தும் தேவன் விசனப்பட்டு இருப்பார் ஆனால் இதை முன் குறித்தது தேவனே! "He was not caught by surprise!" Infact Nobody Can surprise God.///
-------------------------------------------------------------------------- "ஆண்டவராகியஇயேசு மனிதனாக பிறந்து பாவங்களுக்காக மரித்தல்" என்பது தேவனின் முன் குறிக்கப்பட்ட திட்டம். அதுபோல் "பாவமன்னிப்பு, நித்திய நியாயதீர்ப்பு" எல்லாமே தேவனால் முன் குறிக்கப்பட்டது. அது அப்படியே சரியாக நிறைவேருவது சர்வநிச்சயம். ஆனால், அங்கு எந்த தனி மனிதன் இன்வால்வ் ஆகிறானோ அவன் குற்றவாளி யாகிறான், அங்கு தேவன் சம்பந்தப்படவில்லை
இங்கு சுயசித்தம் செய்யும் அதிகாரத்துடன் படைக்கப்பட்ட ஒரு தனி மனிதனை குறித்த் தேவனின் சித்தம் என்னவெனில் "ஒருவரும் கெட்டுபோககூடாது" என்பதுதான் ஆகினும் அவன் கெட்டுபோவதும் நித்தியத்தை சுதந்த்ரிப்பது சுயசித்தத்துடன் அவன் செய்யும் செயல்களின் அடிப்படையில்தான் இருக்கிறதேயன்றி தேவனின் திட்டத்தில் அவனின் செய்கை சேராது .
மாற்கு 14:21மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்குஐயோ!
யூதாஸ் காட்டி கொடுத்தாலும் கொடுக்ககாவிட்டலும் மனுஷகுமாரன்பற்றி எழுதியிருக்கிறபிரகாரம் மரித்தே தீருவார். அனால் அந்தகாரியத்தை யூதாஸ் செய்தது அவனது தவறு. அது யூதாஸ் மீதான தேவனின் திட்டம் அல்ல! அவன் பணத்துக்கு ஆசைபட்டு ஆசானை காட்டிகொடுத்து துரோகம் செய்தது அவனோடய குற்றம்! எனவே தான் "அவனுக்கு ஐயோ!" என்று இயேசு சொல்கிறார். ஏனெனில் அவனுக்கு அவரை காட்டிகொடுக்கவும், காட்டிகொடுக்காமல் இருக்கவும் தேவையான சுயசித்தம் உள்ளது" இதில் அவன் எதை தெரிவுசெய்கிறானோ அதன் அடிபட்யிலேயே அவனுக்கு தீர்வு. அதற்க்கு தேவன் பொறுப்பல்ல
(இது ஒரு தனி விவாதம் . இதற்கும் திரித்துவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவே இதைப்பற்றி தனியொரு திரியில் விவாதிக்கலாம்.) ---------------------------------------------------------------------------
JOHN WOROTE /////தேவன் சிருஷ்டிப்புக்கு முன்னமே "திரியேக" தேவன். ///
SUNDAR WROTE ///தங்களின் இந்த கருத்துக்கு எனக்கு வசன ஆதாரங்கள் கொடுங்கள், நான் திரித்துவம் சம்பந்தமான எனது கருத்துக்களை உடனே இந்த தளத்தில் இருந்து நீக்கிவிடுகிறேன்.//
JOHN WROTE ///சிருஷ்டிப்பின் போதும் தேவன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள்தத்துவம் உள்ளவராய் இருந்தார்
ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக..."///
தேவன் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆள்தத்துவம் உள்ளவர் என்பதை நானும் மறுக்கவில்லையே சகோதரரே! ஆனால் தாங்கள் சொலதுபோல் அவரிடம் "திரியேகம்" என்ற மூன்று ஆள்த்துவம் மட்டும்தான் இருந்தது என்று எதைவைத்து சொல்கிறீர்கள் என்பதைத்தான் கேட்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------- JOHN WROTE ///ஆதி என்பது நேரம் "Before Time" உருவாவதற்கு முன்னமே இருந்த நேரம்(?) அப்போதே வார்த்தை "இருந்தது". அது தேவனிடத்தில் இருந்தது Means வார்த்தை வேறு தேவன் வேறு ஆனால் வார்த்தையும் தேவனே
யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.///
"நான் பிறக்கும்போதே எனக்கு தலை இருந்தது அது என்னிடத்தில் இருந்தது அந்த தலைக்கு உயிர் இருந்தது" என்று நான் சொன்னால் அதற்கு என்னபொருள் சகோதரரே? நான் வேறு என் தலைவேறு என்று பொருளா அல்லது என் உடம்பினுடன் தலையும் இருந்தது என்று பொருளா?
மிக சுலபமாக "ஆதியில் தேவனிடத்தில் இருந்த வார்த்தை தேவனாக இருந்தது" அதாவது "தேவனின் வார்த்தை என்பது ஒரு தனிஆள்தத்துவம் உள்ள தேவனாக இருந்தது" என்பதே! இதன்பொருள். அது இரண்டாக மூன்றாக இருந்தது என்பது இதன் பொருள் அல்ல. ஏனெனில் தேவன் ஒருவரே என்று வேதம் திட்டமாக சொல்கிறது
தேவன் ஆதியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள்தத்துவம் உள்ளவராக இருந்தார் என்பது சரிதான், ஆனால் தாங்கள் சொல்வதுபோல் அவர் மூன்று தேவனாகவும் மூன்றும் சம வல்லமை உள்ளவராக இருதார்கள் என்பதற்கே வசன ஆதாரம் கேட்கிறேன். தாங்கள் தரவில்லை!
JOHN WROTE ////உலகம் உருவாவதற்கு முன்னமே அவர் குமாரன் தான்.////
உலகம் உருவாவதற்கு முன்னர் அவர் குமாரனாக இருந்திருக்கலாம் அனால் ஒரு காலகட்டத்தில் அவரை தேவன் மகனான ஜெனிப்பித்திருக்கிறார் . அதாவது வார்த்தையாய் இருந்த இயேசுவை,தேவன் தன்னில் இருந்து வேருபிரித்திருக்கிறார்.
எபிரெயர் 1:5, நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்
என்ற வசனத்தின்படி, தன்னுடைய வார்த்தையாக இருந்த இயேசுவை தேவன் "இன்று" என்ற ஒரு குறிப்பிட்ட நாளில் மகனாக ஜெனிப்பித்திருக்கிறார்.
JOHN WROTE ///நிங்களே இது ஒன்றை நிருபித்து விட்டால் இந்த பகுதியை நீக்கி விடுகிறேன் என்றதால் இதோடு நிறுத்துகிறேன்.///
---------------------------------------------------------------------- நான் கேட்ட எதை தாங்கள் நிரூபித்திருக்கிறீர்கள் என்று புரியவில்லை சகோதரரே. தேவன் மூன்று ஆள்த்துவம்தான் உள்ளவர் என்பதற்கு வசன ஆதாரம் கேட்டேன் தாங்கள் தரவில்லை.
JOHN WROTE ----------------------------------------------------------------------- ///அன்பு சகோதரரே, என்னுடை நோக்கம் குற்றம் கண்டு பிடிப்பது இல்லை ஆனால் தவறான ஒரு செய்தியை எல்லோரும் "Follow" பண்ணகூடாது என்பதால் தான்///
----------------------------------------------------------------------- நல்லது சகோதரரே. எனக்கும் தவறான செய்தியை பரப்பி எல்லோரையும் குழப்ப வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. சிலர் ரகசியம் என்று சொல்வதற்கு நான் அறிந்த விளக்கம் கொடுத்தேன் அவ்வளவுதான். தேவனை நீங்கள் மூன்று ஆள்தத்துவம் என்று சொல்லுங்கள் நான் "ஏழு ஆள்தத்துவம்" என்று சொல்கிறேன் இதில் யார் சொல்வது தவறான செய்தி என்பது யாருக்கும் தெரியாது. நான் சொல்வதற்காவது ஒரு வசனஆதாரம் இருக்கிறது ஆனால் தாங்கள் சொல்வதற்கு அதுவும் கிடையாது அப்படியே இருந்தாலும் தேவனையும் தேவனின் தன்மைகளையும் ஒருவரால் முழுமையாக திட்டம் செய்துவிடமுடியாது. எனவே சர்வவல்ல தேவனை வேதத்தில் இல்லாத "திரித்துவம்" என்றொரு கருத்துக்குள் அடக்குவதையும் அவருக்கு மொத்தம் மூன்று ஆள்த்துவம்தான் உண்டு என்று அனுமானித்து, அவரின் செய்கைகளை மட்டுப் படுத்துவதையும் தாங்கள் தவிர்ப்பதே நல்லது. எனபதே எனது கருத்து.
அத்தோடு "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி" என்பவர்கள் யார் என்பதற்கு நான் கொடுத்துள்ள எந்த தவறும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்
-- Edited by SUNDAR on Monday 21st of February 2011 04:22:16 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்னை பொறுத்தவரை இந்த விவாதம் தேவையற்றதாகவே நேரத்தை விரயம் செய்யும் ஒன்றாக எனக்கு தெரிகிறது. வேதத்தில் சொல்லப்படாத திரித்துவம் என்ற ஒரு கருத்தை கொண்டுவது சொல்லி "தேவன் ஒருவரே" என்று வேதம் சொல்லும் கருத்தின் அடிப்படையில் எழுதிய வார்த்தையை நீக்கும்படி ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
நான் ஒரு தான்தோன்றி கிறிஸ்த்தவன். அதாவது நான் யார் சொல்லியும் விசுவாசத்துக்குள் வரவில்லை நானாகவே அனேக போராடங்களுக்கு மத்தியில் தேவனை விடாதுதேடி அவரை முகமுகமாக கண்டதுபோல் கண்டுகொண்டேன்(அந்த உண்மை சம்பவங்களை குறித்து இங்கே எழுதியிருக்கிறேன்.)
பாரம்பரிய விசுவாசம் என்னவென்பது எனக்கு தெரியாது. திரித்துவம் திரித்தும்
என்று சொல்கிறார்கள் அதன் பொருள் என்ன? அதன் விளக்கம் என்னவென்பது இன்றுவரை எனக்கு சரியாக தெரியவில்லை. அதை புரியும் அளவுக்கு யாரும் இன்றுவரை சொல்லவும் இல்லை. அதை அறிந்துகொள்ளவும் நான் ஆசைப்பட வில்லை காரணம் இந்த காலகட்டத்தில் எத்தனையோ மிக அவசரமான ஆவிக்குரிய வேலைகள் மத்தியில் அது ஒரு முக்கியமான கருத்துபோல் எனக்கு தோன்றவில்லை.
ஆகினும் பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசு, பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளன் இவர்களை நான் அறிந்து உணர்ந்து விசுவாசிக்கிறேன் இவர்கள் மூவரும் வேறு வேறு ஆள்தத்துவம் உடையவர்களாக இருந்தாலும் இவர்கள் ஒருவரே என்பதை "தேவன் ஒருவரே" என்ற வசனத்தின் அடிப்படையில் விசுவாசிக்கிறேன்.
இப்பொழுது தாங்கள் எனக்கு சுருக்கமாக திரித்துவம் என்றால் என்னவென்று சொல்லுங்கள். என்னுடைய கருத்து அத்துடன் ஒத்து வருகிறதா என்று பார்க்கலாம். இல்லை எனில் எங்கே ஒத்துவரவில்லையோ அங்கு வசனத்தில அடிப்படையில் ஒரு முடிவுக்கு வரலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்பு சகோ. சுந்தர். உங்களுடைய சாட்சியை படித்தேன் உண்மையிலே ஆண்டவரை துதிக்கிறேன்! அந்தகார வல்லைமையில் இருந்து உங்களை ஆச்சரியமான ஒளிக்கு வரவழைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்!
//இயேசு கிறிஸ்த்துவே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் ஆனால் தேவனோ மனிதனின் செயல்பாடுகளுக்கு ஏறப மனம் மாறக்கூடியவர்:
எரேமியா 18:8 நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம்மாறுவேன்.
எரேமியா 18:10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம்மாறுவேன்.//
இயேசுகிறிஸ்துவும், பிதாவும் ஒருவரை ஒருவர் எப்போதும் "Conradict" பண்ணமாட்டார்கள். நீங்கள் தேவனின் இரு சித்தங்கள் (Two wills of God) என்ற பொருளில் தியானித்தால் இவைகளை எளிதாக விளங்கிக்கொள்ளலாம். கிழே உள்ள தளத்திற்கு சென்று வாசியுங்கள்.
திரித்துவம் என்பது ரகசியம், தேவன் எப்படி ஒன்றும் இல்லாமையில் இருந்து எல்லாவற்றையும் உருவாக்கினார் என்பதும் ரகசியம், தேவன் சர்வவல்லவராக இருந்துகொண்டு மனிதன் எப்படி அவன் பாவத்திற்கு பொறுப்பு என்பதும் ரகசியம். இவை எல்லாவற்றையும் வேதம் சொல்லும் வரை எடுத்துக்கொண்டு சொந்த அனுபவங்களை திணிக்காமல் இருப்பது நல்லது. இயேசு யார் என்று ஆராய்கிறேன் என்று கிளம்பியவர்கள் அவர் ஒரு சாதாரண "தூதன்" என்ற நிலை வரையும் வந்து இருக்கிறார்கள் (உங்களை சொல்லவில்லை )
திரித்துவத்தை குறித்து நீங்கள் உண்மையிலே தெரிந்து கொள்ள விரும்பினால் கிழே உள்ள தளத்திற்கு சென்று வாசிக்கலாம்.
ஒரு தாழ்மையான வேண்டுகோள். வேதத்தை ஆராயும்போது, தேவனை மையத்திலும் , நாம் அவரை சார்ந்து இருப்பது போலவும் வைத்து ஆராய்தல் அவசியம்.
"எல்லாரும் பரலோகள் போவர்களா" , "தேவன் எப்படி மனிதனை அழிக்கமுடியும்" என்ற கேள்விகள் மனிதன் தன்னை மையமாக வைத்து தேவனை அவனுக்காக வாழ்பவர் போல நினைத்து ஆராய்வதால் எழும் பிரச்சனைகள்.
நான் குறிப்பிட்ட Link ல் சென்று வாசித்தபின்பும் நீங்கள் இந்த பகுதியை நீக்க தேவை இல்லை என்று நினைத்தால் உங்களை தடுக்க நான்யார்?
மேலேயுள்ள சகோதரர் ஜான் அவர்களின் பதிவு, தளத்தில் ஏற்ப்பட்ட ஏதோ நிர்வாக கோளாறு காரணத்தினால் வெளியில் தெரியாமல், கடந்த 22/02/11ல் இருந்து அப்ரூவலுக்காக காத்திருந்தது இன்றுதான் நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்தது.
அதை அப்ரூவ் பண்ணி பதிவிட்டுள்ளோம். தளத்தில் யாருடைய பதிவையும் அப்ரூவல் பண்ணி பதிவிடுவது கிடையாது எனவே இது எப்படி நடந்தது என்பதை அறியமுடியவில்லை