(4 ) இயேசு -பூமியிலே உங்களுக்கு பொக்கிசத்தை சேர்த்து வைக்காதீர்கள் பரலோகத்தில் சேர்த்து வையிங்கள்
இப்படி பல வசனங்கள் இயேசு தன வாய் மொழிகளில்
கூறி இருக்க
இதை விட்டு விட்டு தனக்கு லாபமான வசதி ஆடம்பரம் பணம் என்று சொன்னால் இது போதனையா இது தான் பிரசங்கமா
இப்படி பிரசங்கம் செய்கின்றவர்களை கண்டால் புரிந்து கொள்ளுங்கள் அவர்கள் எந்த ஆவியில் இருக்கின்றார்கள் என்று ஏனென்றால் அவர்கள் உள்ளத்தில் என்ன இருக்கின்றதோ அதுவே தான் அவர்கள் வாயில் வரும்
தொடரும் ......................
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 27th of January 2011 09:11:45 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
இந்த பூமியிலே இப்பொழுது எல்லாவற்றையும் செய்ய கூடியது இந்த பணம் தான்
கடவுளை நம்புவதை விட பணத்தையே கடவுளாக எல்லோரும் நம்புகின்றனர்
கிருஷ்தவத்துகுள் பார்த்தால் போதகர்களுடைய பிரசகங்கள் எல்லாம் தலைகிலே இருக்கின்றது
பணமும் உலக பொருட்களும் தேவனின் சித்தம் நிறை வேறுவதை தடை செய்யும் முதல் காரணியாக இன்று உலகில் செயல்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. சாத்தான் தன் கையில் எடுத்துள்ள முதல் ஆயுதம் அதுதான் என்பதை அநேகர் அறிய வில்லை. பணம் சேர்ப்பதில் தவறில்லை பண ஆசைதான் கூடாது என்றொரு மாய தோற்றத்தால் அநேகரை மதிமயக்கி வைத்துள்ளான்.
சமீபத்தில் தற்ச்செயலாக போதகர் சாம். P செல்ல துரை அவர்களின் பிரசங்கத்தை கேட்க நேர்ந்தது. அவர் பேசுவதை பார்த்தால் நமக்கே தலை சுற்றுகிறது. "இயேசு நாளைக்காக கவலைப்படுவதை விட்டு சிலுவையை சுமந்து பாடுகளை ஏற்க்க சொன்னார்" என்று நாம்தான் ஏதோ தவறாக கொள்கையில் இருப்பதுபோல தோன்றும் அளவுக்கு வேத வசன அடிப்படையில் செழிப்பு வாழ்க்கையை பற்றி பிரசங்கம் பண்ணுகிறார்.
"தெரிந்துகோள்ளபட்டபர்களே அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள்" என்ற வார்த்தைக்கு ஏற்ப, ஏதோ பிரசங்கங்கள் நடக்கிறது, கிறிஸ்த்தவ உலகம் எங்கேயோ போகிறது! யார் யாரோ தங்கள் பக்கம் கூட்டத்தை கவர்ந்து ஆடுகளை கொள்ளயடித்து கொண்டு போகின்றனர். முடிவு என்னவென்பது இறைவனுக்கே வெளிச்சம்!
ஒரு ஊழியரிடம் ஒருசகோதரன் ஐயா எனக்காக ஜெபித்தி கொள்ளுங்கள் நான் ஒரு கம்பனி தொடங்க வேண்டும் என்று இருக்கின்றேன் என்று கூறினார்
அந்த ஊழியரோ அந்த நபருக்காக ஊக்கமாய் ஜெபித்தார
அந்த சகோதரன் சபைக்கும் ஊழியருக்கும் உண்மையாய் இருந்தான் அதன் பின் அந்த சகோதரன் ஐயா நான் இன்னும் ஒரு கம்பனியை வாங்கலாம் என்று எண்ணுகின்றேன் அதற்காக ஜெபித்து கொள்ளுங்கள் என்று கூறினார் அந்த ஊழியரும் அப்படியே ஜெபித்தார்
அந்த நபரோ ஐந்து கம்பனிகளுக்கு உரிமையாளரானார்
அதன் பின் அந்த சகோதரன் ஆலயத்திற்கு சரியாக வரவே இல்லை என்று போதகர் அறிந்து அவருடைய விட்டுக்கு சென்று
சகோதரனே முன்பு போல நீங்கள் ஆலயத்திற்கு சரியாக வரவில்லையே ஏன் வரவில்லை என்று அந்த சகோதரரிடம் கேட்டார்
அதற்க்கு அந்த சகோதரன் ஐயா எல்லாம் உங்களுக்கே தெரியும் எனக்கு ஒரு கம்பனி இருக்கும் பொழுது நேரம் அதிகமாய் இருந்தது
ஆனால் இப்பொழுது ஐந்து கம்பனிகள் இருக்கின்றது அல்லவா நேரம் கிடைக்க வில்லை எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் என்றார்
அதற்க்கு அந்த ஊழியர் ஆமாம் ஆமாம் சகோதரனே உங்களுக்கு ஐந்து கம்பனிகள் உண்டு அல்லவா உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கும்
நீங்கள் கவலை படாதீர்கள் நான் நிச்சயம் உங்களுக்காக ஜெபிக்கின்றேன் என்று கூறி ஊழியர் சென்று விட்டார்
அதன் பின் ஊழியர் தன் விட்டுக்கு சென்று ஆண்டவரிடம் அமர்ந்து அன்னடவரே என்னை மன்னித்து விடுங்கள் நான்தான் அவன் ஆலயதீர்க்கு ஒழுங்காக வருகின்றான் உண்மையாய் இருக்கின்றானே என்று எண்ணி அவனை ஆசிர்வதித்து பல கம்பனிகள் கொடுக்க வேண்டும் என்று உம்மிடம் மற்றாடி ஜெபித்தேன் ஆனால் இப்பொழுது அந்த உயர்வே அவன் தேவனை மறக்க வைத்து விட்டதே என்று கூறி
ஆண்டவரே இப்பொழுது நான் உம்மிடம் கேட்கின்றேன் அவனுக்கு நீர் கொடுத்த கம்பனிகளை எல்லாம் திரும்பவும் பிடுங்கி கொள்ளும் என்று ஜெபித்தார் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அந்த சகோதரன் ஆலயத்திற்கு வந்து ஐயா என் கம்பனிகள் எல்லாம் என்னை விட்டு போய்விட்டது நான் தேவனை மறந்ததினால் தேவன் என்னை மறந்தார் இனி நான் அப்படி இருக்க மாட்டேன் சபைக்கு ஒழுங்காய் வருவேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார்
மேலே சொன்ன கதையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில்
சகோதரர்களே நாம் பணத்தின் ஆசையோ அல்லது உலக பொருட்கள் மிது ஆசை வைத்து இருந்தால் அது நம்மை தேவனிடம் இருந்து
நம்மை பிரித்துவிடும் நாம் தேவனை முக முக மாய் அறிந்தவானாய் இருந்தால் கூட
பெரிய தீர்கதரிசியை போல நாம் இருந்தாலும் இந்த பணம் மற்றும் உலக பொருட்கள் நம்மை தேவனை மறக்க வைத்து விடும் என்று அறிந்து
இன்றே அந்த ஆசையை விட்டு விடுவது நல்லது
தேவன் தன் தேவைக்காக பணத்தை விடு பொருட்கள் மேல் ஆசைவைக்காதே என்று கூறவில்லை
நாம் அதில் முழ்கி இருந்தால் விழுந்து விடுவோம் என்ற காரணத்தினால் தான் அவர் சொல்கின்றார் மற்றபடி அவருக்கு இந்த பேப்பர் பணமும் இந்த அழிந்து போகின்ற பொருட்களும் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல
இந்த காரணத்தினால் தான் தேவன்
பணக்காரனாக விரும்பாதீர்கள்
பணக்காரன் தேவனுடைய ராஜ்ஜியத்தில் வர முடியாது
போதும் என்கின்ற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்
உனக்கு உண்டானதை விற்று தரித்திரனுக்கு கொடு
ஆசைகளை ஒழித்து விட்டு தேவனுடைய சித்ததீர்க்கு வாழ்வோம் அந்த தேவ சித்ததீர்க்கு நாம் ஒப்பு கொடுப்பது அதுவே எல்லா ஜெபங்களிலும் மேலான ஜெபமாகும்
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 4th of February 2011 10:03:03 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
மேலே சொன்ன கதையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில்
சகோதரர்களே நாம் பணத்தின் ஆசையோ அல்லது உலக பொருட்கள் மிது ஆசை வைத்து இருந்தால் அது நம்மை தேவனிடம் இருந்து
நம்மை பிரித்துவிடும் நாம் தேவனை முக முக மாய் அறிந்தவானாய் இருந்தால் கூட
இறைவன் நமக்கு கொடுத்ததில் திருப்தியடையாமல் அதுவேண்டும் இதுவேண்டும் என்று ஆசைபட்டு அடம்பிடித்து கேட்டு பெற்று நமக்கு நாமே கேடினை வருவித்துகொள்கிறோம் என்ற கருத்தை விளக்கும் நல்ல கட்டுரை.
இந்த கடைசி காலங்களில் மனிதனுக்கு ஆசையும் இச்சையும் பெருத்துவிட்டத்தை அறிய முடிகிறது.
இந்த ஆசையும் இச்சையும்தான் இறுதியில் பாவத்தை கொண்டுவருகிறது
தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சற்றும் யோசிக்காமல் தங்கள் வருமானத்தை பற்றி பொருட் படுத்தாமல் கடன்களை வாங்கி, அளவுக்கு அதிகமான செலவு செய்கின்றனர். பின்னர் அந்த செலவை சமாளிக்க எவ்விதத்திலாவது வருமானத்தை பெருக்க நினைக்கின்றனர். இதில் உலக மனிதர்கள் மட்டுமல்லாது கிறிஸ்த்தவ பாஸ்டர்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல! எப்பொழுது பார்த்தாலும் சபைக்க்ளில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கலக்சன் வேலை நடை பெற்றுக்கொண்டு இருப்பது ஒருவித சலிப்பை ஏற்ப்படுத்துகிறது.
சமீபத்தில் ஒரு சகோதரி சொன்னது:
"நான் கேட்ட பல காரியங்களை ஆண்டவர் எனக்கு கொடுத்தார்! ஆனால் ஆண்டவரிடம் எனக்கு "சுகமாக்கும் வரமும்" "அசுத்த ஆவிகளை துரத்தும் வரமும்" வேண்டும் என்று அதிகம் பிடிவாதமாக
ஜெபிததேன். ஆண்டவரோ "மகளே நீ அந்த வரத்தை பெற்றால் வழிதவறி போய்விடுவாய் உன்னால் சத்தியத்தில் நிலைநிற்க முடியாது, எனவே உனக்கு அந்த வரங்கள் வேண்டாம்,. இருக்கும் இடத்தில் உத்தமமாகவும் நேர்மையாகவும் இரு" என்று சொல்லிவிட்டார்.
ஆடம்பரமும் அதிக பணமும் என்றுமே ஆபத்தானது!
யாக்கோபு 5:1ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
-- Edited by இறைநேசன் on Saturday 5th of February 2011 03:49:47 PM
அதிகம் கொடுங்கள் அதிகம் பெறுவீர்கள், 1000, 2000 ஜெபிக்கும் தி்ட்டங்கள், தங்கசாவி, பரலோகத் திட்டம், கர்த்தர் சொன்னார் அதை தொடங்கு என பிதற்றும் ஊழியர்கள், எல்லாம் பணஆசையினால் விளைவது. சூரிய பெயரைக் கொண்டவரே இவற்றுக்கு மூலகாரணர். அவரின் வாரிசுக்களும் இதை தொடர்கின்றனர் அதிக பண ஆசையினால் ஏழைகளுக்கு கர்த்தர் தொடங்க சொன்ன கல்லூரியையை இன்று வியாபாரமயமாக்கி விட்டனர். எத்தனையோ பேர் எத்தனையோ தியாகங்கள், ஜெபங்கள் செய்து பணத்தினை கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஆப்பு. ஏழைகளுக்கு கதவடைப்பு. இவையெல்லாம் எதனால் என சிந்திக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஊழியர்களை குறைகூறி என்ன பயன் என சிந்திக்கின்றேன். இவர்களுக்கெல்லாம் பணம் கொடுப்பது யார? நம்மைப்போன்றவர்கள் தானே!. எனவே இப்படிப்பட்டவர்களுக்கு விசுவாசிகள் ஒருபோதும் உதவ கூடாது. இவர்களின் பணஆசையும், ஆடம்பரமும் தான் இதன் மூலம் நிறைவேறுகிறது. தவறு செய்பவர்கள் அல்ல தவறுக்கு துணை போகின்றவர்களே அதிக குற்றவாளிகள் என்பது எனது எண்ணம்.
colvin wrote: இப்படிப்பட்ட ஊழியர்களை குறைகூறி என்ன பயன் என சிந்திக்கின்றேன். இவர்களுக்கெல்லாம் பணம் கொடுப்பது யார? நம்மைப்போன்றவர்கள் தானே!. எனவே இப்படிப்பட்டவர்களுக்கு விசுவாசிகள் ஒருபோதும் உதவ கூடாது. இவர்களின் பணஆசையும், ஆடம்பரமும் தான் இதன் மூலம் நிறைவேறுகிறது. தவறு செய்பவர்கள் அல்ல தவறுக்கு துணை போகின்றவர்களே அதிக குற்றவாளிகள் என்பது எனது எண்ணம்.
சகோ. கொல்வின் அவர்களே தாங்கள் சில ஊழியர்களின் செய்கைகள் குறித்து மனத்தாங்கலாக இருக்கிறீர்கள் என்பதை தங்களின் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. எனக்கும் தாங்கள் குறிப்பிடும் ஊழியர் பணத்தை மையமாக கொண்டு அறிவித்த பல திட்டங்கள் குறித்து வருத்தம் உண்டு. ஆகினும் இது குறித்து என்னுடைய கருத்து என்னவெனில்,
"மனுஷன் முகத்தை பார்ப்பான் கர்த்தரோ இருதயங்களை பார்க்கிறவர்" என்ற வார்த்தைக்கு ஏற்ப, ஒரு ஊழியருக்கு பணம் கொடுக்கும் ஒரு விசுவாசி எந்த நோக்கத்தோடு அந்த பணத்தை அவருக்கு கொடுக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே தேவன் அதற்க்கான பலனை அவருக்கு கொடுப்பார் என்றே நான் கருதுகிறேன்.
இங்கு தேவனின் காரியங்களுக்காக கொடுப்பவர் ஒரு புறம் தேவனை காரணம் காட்டி பணத்தை வாங்குகிறவர் ஒரு புறம். இரண்டுபேரின் இருதய நிலைகளே தேவனுக்கு முன்பாக நியாய தீர்ப்புக்கு நிர்க்குமேயன்றி, என்ன கொடுத்தார்கள் எவ்வளவு கொடுத்தார்கள் யாருக்கு கொடுத்தார்கள் என்பது அல்ல என்றே நான் கருதுகிறேன்.
ஒரு வேலை சில விசுவாசிகள் அந்த குறிப்பிட்ட பாஸ்டர் குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பணத்தை அனுப்பினால் அங்கு நாம் எந்தகருத்தும் சொல்லமுடியாது. அதைகுறித்து தேவனும் எந்த கேள்வியும் கேட்கமுடியாது.
ஆனால் "தேவனுடைய ஊழியத்துக்கு" என்ற நோக்கில் கொடுக்கப்படும் பணம் தேவனுடயராஜ்யம் கட்டப்பட பயன்படுத்தப்பட்டதா? என்பதை குறித்து ஆண்டவர் குறிப்பிட்ட பாஸ்டரிடமே கணக்கு கேட்பாரேயன்றி கொடுத்த விசுவாசியிடம் அல்ல. விசுவாசி என்ன நோக்கத்தோடு கொடுத்தாரோ அதற்க்கான பலன் அவருக்கு கிடைத்தே தீரும் என்பதே எனது கருத்து.
பாத்திரம் அறிந்து காணிக்கை போடவேண்டியது நமது பொறுப்புதான் ஆனால், நான் நல்ல பாத்திரம் என்று முழுமனதோடு நிச்சயத்து போடும் பாத்திரம் தவறாகி போனால் அதை விசாரிப்பவர் தேவனே!
-- Edited by SUNDAR on Wednesday 9th of February 2011 10:15:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)