ஒரு தகப்பனின் சித்தத்தை அறிந்து செயல்படும் குமாரனே அந்த தகப்பனுக்கு மிகவும்பிடித்த மகனாக இருக்கமுடியும். தகப்பனின் சித்தத்தை அறியாமல் எவ்வளவு கடினமான வேலையை செய்தாலும் அவனால் தன் தகப்பனின் நன்மதிப்பை நிச்சயம் பெறமுடியாது!
பிதாவாகிய தேவனின் சித்தத்தை அறிந்து அதை சரியாக செய்துமுடித்த நம் ஆண்டவராகிய இயேசு, "ஒருவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க தேவனின் சித்தம்அறிந்து அதை செய்யவேண்டும்" என்று திட்டமாக போதித்துள்ளார்:
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
எனவே அன்பானவர்களே, தேவனுக்கடுத்த காரியங்களை நாம் ஏனோ தானோ என்று நமது மனம்போன போக்கில் செய்யமால் அவருடைய சித்தம் என்னவென்பதை அறிந்து அதற்க்கு கீழ்படிந்து செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது
எபேசியர் 5:17ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
சுய சித்தத்துடன்தேவ சித்தத்தை கலந்துவிடுவது பிசாசின் மிகப்பெரிய தந்திரமாகும். அதன் மூலம் தேவ சித்தம் நிறைவேறுவதை சாத்தான் சுலபமாக தடுத்துவிடுகிறான். எனவே நம்மேலான தேவசித்தம் நிரைவேற நமது சுயசித்தம் முதலில் சாகவேண்டும் அல்லதுஅவைகள் குப்பையில் தூக்கிபோடபடவேண்டும். "சுய சித்தம்" என்று எனக்கு எதுவும் இல்லை என்றொரு நிலைக்கு நாம் வர வேண்டும். ஒருபுறம் சுயசித்தத்தை நிறைவேற்றிக்கொண்டு இன்னொருபுறம் தேவ சித்தத்தையும் செய்யநினைத்தால் நம்மால் இரண்டையுமே சரியாக நிறைவேற்ற முடியாது. அதற்க்கு நல்ல உதாரணம் சிம்சோன். தேவனின் சித்தம் நிரைவேற அபிஷேகிக்கப்பட்ட சிம்சோன் தன் மாம்ச சித்தத்தையும் சேர்த்தே நிறைவேற்ற துடித்தான் இறுதியில் கண்கள் பிடுங்கபட்டு மாண்டுபோனான்.
இன்று அநேகர் தங்களிடம் அனேக தாலந்துகள் இருந்தும் தேவசித்தம் என்னவென்பதை அறியாமல் அறியவிரும்பால் தங்கள் சுயமாம்சசித்தம் நிறைவேரவும் மாம்சசித்தத்தை செய்து முடிக்கவும் துடித்துக்கொண்டு, அதற்காக யாரையும் எப்படி வேண்டுமானாலும் புண்படுத்த தயாராக இருப்பதை பார்க்கமுடிகிறது. நாம் அவ்வாறு இருக்காமல், ஆண்டவராகிய இயேசு சொன்னது போல் பிதாவின் சித்தம் செய்துமுடிப்பதே நமது போஜனமாக கருதி, இந்த உலக வாழ்வுக்கு தேவையான மற்ற எல்லா காரியங்களையும் பின்னாக தள்ளி தேவனின்சித்தம் நிறைவேர எதிர்பார்த்திருத்தல் வேண்டும்.
தேவனின் சித்தம் என்னவென்பதை வசன அடிப்படையில் நாம் மூன்று தலைப்புகளின் அடிப்படையில் நாம் சற்று விரிவாக பார்க்கலாம்.
1. ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லோரும் மீட்கப்படுதல்!
மத்தேயு 18:14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
தீமோத்தேயு 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
"எந்த ஒரு மனிதனும் கெட்டுபோககூடாது எல்லோரும் மீட்கப்பட வேண்டும்" என்பதே தேவனின் பிரதான சித்தமாக இருக்கிறது. எனவே நாமும் பிதாசின் சித்தம் நிறைவேறும் அதே நோக்கத்தோடு செயல்படுவது அவசியமாகிறது. நமது எண்ணம் சிந்தனை மற்றும் வேண்டுதல் எல்லாவற்றிலும் ஒரு மனிதனும் கெட்டுபோய்விடகூடாது, எந்த ஒருமனிதனும் நரகம் போய்விட கூடாது என்ற வேண்டுதலே பிரதானமானதாக இருப்பது அவசியம்.
நாம் பிறரை நியாயம் தீர்க்க அழைக்கப்படவில்லை பிறருக்காக வேண்டுதல் செய்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
மத்தேயு 18:11மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.
எல்லோரையும் நியாயம் தீர்த்து ஆக்கினை அளிப்பதற்கு அல்ல. அவருடைய ஆவியை பெற்ற நாம், யாக்கோபும் யோவானும் "வானத்திலிருந்துஅக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி" செய்ய விரும்பி, சுய சித்தத்தை நிறைவேற்ற ஆசைப்பட்டு இயேசுவிடம் கேட்டு இயேசுவால் "நீங்கள்இன்னஆவியுள்ளவர் களென்பதை அறியீர்கள்" என்று கடிந்து கொள்ளப்பட்டதுபோல் வாங்கி காட்டி கொள்ளாமல், நமக்கு அருளப்பட்டுள்ள ஆவியானவரின் தன்மையை அறிந்து நடந்துகோள்ளவேண்டியது அவசியம்.
"துன்மார்க்கன் தண்டனைக்கு தப்பான்" என்பதும் "துன்மார்க்கன் தன் செய்கைக்கான பலனை அடைந்தே தீருவான்" என்பதுவும் வேதம் சொல்லும் உண்மை. வசனம் தனது கடமையை செய்யும்! ஆனால் நாமோ அந்த துன்மார்க்கனும் தண்டனை அடைந்துவிடகூடாது என்று அவனுக்காக ஜெபிக்கும் நிலையில் இருப்பதுவே உண்மையான தேவஅன்புக்கும் தேவசித்தம் நிறைவேர வேண்டும் என்று நாம் கொண்டுள்ள வைராக்கியத்துக்கு அடையாளம். அந்த தேவஅன்பினால் நிரப்பபட்ட மனிதனாலேயே இயேசுவைப்போல் தன்னை கொடூரமாக துன்பபடுத்தும் மனிதனுக்காகவும் "இவர்களுக்கு மன்னியும்" என்று ஜெபிக்கமுடியும்.
மற்றபடி ஒருவனை அக்கினிக்குள் நியாயம்தீர்ப்பது என்பது இந்த உலகில் எல்லோருக்கும் கைவந்த கலை, அதை செய்வதற்கு ஒரு கிறிஸ்த்தவன் அவசியமில்லை! பரிசுத்த ஆவியானவர் என்ற மேன்மையான ஆவியானவர் தேவையில்லை.
எவனொருவன் இன்னொரு மனிதனை "நீ நரகத்துக்குதான் போவாய்" என்றோ அல்லது "நீ அப்படி அழிந்துபோவாய், இப்படி நாசமாய் போவாய்" என்று சொல்கிறானோ அவன் "ஒருவரும் கெட்டுபோக கூடாது" என்ற தேவனின் சித்தத்துக்கு விரோதமாக செயல்படுகிறான் என்பதை நாம் சுலபமாக அறிந்து கொள்ளமுடியும்.
தேவனே "ஒருவரும் கெட்டுபோககூடாது" என்று விரும்பும்போது நாம் யார் அடுத்தவர்களை நரகம்போவாய் என்று தீர்ப்பதற்கு?
எனவே அன்பானவர்களே, முடிந்தவை எல்லோருடனும் அன்பாய் இருங்கள். எல்லோருக்காகவும் ஜெபம் செய்யுங்கள். ஒருவனையும் நியாயம் தீர்க்காதீர்கள். தேவனின் இந்த பிரதான சித்தம் நிரைவேற ஜெபியுங்கள்!
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து பார்க்கலாம்....
-- Edited by SUNDAR on Thursday 3rd of February 2011 09:53:57 PM
-- Edited by SUNDAR on Thursday 10th of February 2011 04:28:49 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நாமெல்லாம் பாவத்தில் கர்ப்பம் தரிக்கப்பட்டு, தேவனின் மகிமையை இழந்து அசுத்தத்தின் பிடியில் அகப்பட்டு துன்மார்க்க ஊளையில் உழன்று கிடக்கிறோம். நாம் தேவனுக்கேற்ற பரிசுத்த நிலையை அடையவேண்டும் என்பது தேவனின் சித்தமாக இருக்கிறது.
இவ்வாறு ஒரு மனிதன் தேவனுக்கேற்ற பரிசுத்தம் அடைவதற்கு அவனின் எந்தஒரு சுய நற்கிரியையும், ஆறு குளம் மூழ்குதலும், பாத யாத்திரையும், உபவாசமும் பயன் தராது! பரிசுத்தராகிய இயேசுவின் இரத்தம் ஒன்றே நம்மை பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் முதல்படி!:
I யோவான் 1:7இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
இங்கு சுத்திகரிப்புக்கும் பரிசுத்தமாகுதளுக்கும் உள்ள வேறுபாடை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்! இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட எல்லோரும் பரிசுத்தமாகிவிட முடியாது. இயேசுவின் ரத்தம் நமது பழைய பாவங்கள் எல்லாவற்றையும் போக்கி நம்மை சுத்திகரிக்கும்.
ஒரு பொருளை அழுக்கு நீங்க கழுவுதல் என்பது சுத்திகரித்தல் என்று போருள் படுமானால், அந்த பொருளுக்கு தூபம்போட்டு வாசனை திரவியங்களைகொண்டு அபிஷேகித்து ஜோடிப்பதுவும் மீண்டும் அதுபோல் அழுக்குகள் அதன் மேல் ஓட்டிகொள்ளாமல் பத்திரப்படுத்தி பாதுகாத்தலும் பரிசுத்த படுத்துதல் ஆகும்.
யாத் 28:41நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
இன்று உலகில் மனிதர்களை தேவனுக்கேற்ற பரிசுத்த நிலைக்கு பரிசுத்தப்படுத்தும் வேலையை செய்துவருபவர் பரிசுத்த ஆவியானவரே அவரின் துணையன்றி ஒருவரும் தேவனுக்கு ஏற்ற பரிசுத்தம் அடையவே முடியாது. எனவே ஆண்டவராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்க பட்டவர்கள் தாமதமின்றி ஆவியானவரின் அபிஷேகத்த்யும் பெற்று கொள்வது அவசியமாகிறது
II தெசலோனிக்கேயர் 2:13கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும்,
I பேதுரு 1:2பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே,
நம்மை பரிசுத்தப்படுத்த அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து தங்கியிருந்து கடிந்துகொண்டு நடத்தும்போது, அவர் வார்த்தைக்கு செவி கொடுத்த்து கீழ்படிந்து நடந்தால் மட்டுமே அவர் நம்மை தேவனுடய சித்தத்துக்கு ஏற்ற பரிசுத்த நிலைக்கு நடத்துவார்.
யோவான் 16:13சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்
சகல சத்தியத்துக்குள்ளும் நாம் நடப்பதுவே பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல்.
அடம் பிடிப்பவனும், அகங்காரிகளும், வஞ்சகனும், பொறாமை பிடித்தவனும், கீழ்படியாதவனும், வஞ்சகரும்கூட ஆவியானவரை பெறமுடியும் ஆனால் அவர் அவனை கடிந்து கொண்டு நடத்தும்போது கீழ்படியாமல் இருந்தால் அவர் மௌனமாக அவரைவிட்டு வெளியேறி விடுவார். உடனே வஞ்சக ஆவி அவருள் வந்துவிடும். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு ஓன்று தெரியாது கனிகளில்தான் வேறுபாடு தெரியும்! ஆனால் அவனது பின்னிலைமை முன்னிலமையை விட மோசமாக இருக்கும்.
பரிசுத்த ஆவியானவர்போல் வேடமிட்டு "இயேசுவை விசுவாசித்தால் மட்டும் போதும் அவர் வார்த்தைகளை கைகொள்ள தேவையில்லை" என்று போதித்து திசைதிருப்பும் வஞ்சக ஆவிகள் ஒருபுறமும் "பரிசுத்த ஆவியானவரை அறியாமலேயே நற்கிரியைகள் மட்டும் செய்தால் போதும்" என்று போதிக்கும் ஆவிகள் இன்னொரு புறமும் இருந்து திசைதிருப்ப முயல்வதால், நாம் பெற்றிருப்பது சரியான ஆவிதானா என்பதை ஒருமுறைகூட சோதித்தறிவது மிகவும் அவசியம் இல்லையேல் தேவனுடய சித்தத்துக்கு ஏற்ற பரிசுத்த நிலையை எட்ட முடியாது!
இவ்வாறு பரிசுத்த ஆவியானவரை பெற்று, தேவனுக்கேற்ற பரிசுத்த நிலையை நாம் அடையவேண்டும் என்பது தேவனின் இரண்டாவது சித்தம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"தீமையை நன்மை செய்வதாலே வெல்லு" என்று வசனம் நமக்கு போதிக்கிறது. அவ்வாறு செய்து புத்தியீன மனுஷனின் அறியாமையை அடக்குவது அல்லது மேற்கொள்ளுவதுதான் தேவனின் அடுத்த சித்தம் என்றும் வேதம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
ஆனால் இன்றோ "தேவனின் சித்தம்" குறித்து வசனம் என்ன சொல்கிறது என்பதை சற்றும் கவனியாமல் அனேக விசுவாசிக மற்றும் தேவபிள்ளைகளோ "தீமையை ஒழித்தே தீருவேன், தீமையை ஒழிக்க எடுத்த அவதாரம் நானே, தீமையையும் தீயவர்களையும் தவறான வழியில் இருப்பவர்களையும் தீமையை தவறானவர்களை ஒழித்தே தீருவேன் என்பதுபோல் ஏக எக்காளத்துடன் களமிறங்கியிருப்பது யாருடைய சித்தத்தின் அடிப்படையில் என்பது தெரியவில்லை
இந்த உலகத்தில் தீமையை தீமயாலோ அல்லது அதிகாரத்தினாலோ அல்லது அடக்கு முறையாலோ யாரும் வென்றுவிடமுடியாது. அப்படி வெல்ல முடியும் என்றால் தேவனின் மகனாகிய இயேசு மனிதனாக அவதாரம் எடுத்து மரண பரியந்தம் தன்னை தாழ்த்தி கீழ்படிய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. வார்த்தையாலேயே அனைத்தையும் அடக்கும் வல்லமை மிக்க அவர் வெறும் வார்த்தையாலேயே அந்தனை தீமையையும் அடக்கிவிட முடியும்.
ஆனால் இந்த உலகின் நிலை அதுவல்ல! தீமையை தீமையாலோ அல்லது வஞ்சகத்தாலோ பொறாமையாலோ நாம் வெல்ல நினைத்தால் நாம் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு தொற்றுபோவது உறுதி!
எனவே நான் ஏற்கெனவே சொன்ன கருத்துபடி:
தீமை என்பதை -10 என்று எடுத்துகொண்டால் இன்னொரு தீமையின்மூலம் அந்த தீமையை அடக்க நினைப்பது, இன்னொரு -10ஐ சேர்ந்து, அந்த தீமை மொத்தம் -20 என்ற நிலைக்கு வலுவடைய செய்வதேயன்றி அது குறையவே குறையாது. இவ்வாறு தீமையை அகங்காரம், ஆணவம், வெறுப்பு, வஞ்சம், கோபம்,பொறாமை இவற்றின் அடிப்படையில் அடக்க நினைத்தால் அங்கு சாத்தானின் வல்லமை அதிகரித்துக் கொண்டே போகுமேயன்றி தேவனுக்கு அங்கு இடமில்லை.
அதனால் தீமை என்ற -10 ஐ நன்மை என்ற +10௦ன் மூலம் சம நிலைக்கு கொண்டுவரமுடியும் அல்லது இன்னும் அதிகமாக நன்மை செய்து +11 என்ற நிலையில் நாம் இருந்தால் தீமையை நன்மையாகவே மாற்றிவிட முடியும்.
உதாரணமாக ஒருவர் நமக்கு -10௦ என்ற நிலையில் கெடுதல் செய்து விட்டால் அவரை மனதார மன்னித்து அவரையும் நமது நண்பனாக ஏற்றுக்கொள்வது +10 என்ற நிலையில் நாம் தீமையை நன்மையால் சமன்செய்வது ஆகும். அவ்வாறு கெடுதல் செய்தவரின் சமாதானத்துக்க்காகவும் அவரது உயர்வுக்காகவும் நாம் மனதார ஜெபிக்கும்போதும் அவரின் தேவைகளுக்காக நாம் உதவி செய்யும்போதும் நாம் +11 என்ற நிலையில் தீமையை நன்மையால் ஜெயிக்கிறோம். அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட நபரால் நம்மை ஒன்றுமே செய்யமுடியாமல் போய்விடும்.
ரோமர் 12:20அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
இதுவே தேவனின் சித்தமும் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதுமாக இருக்கிறது ஆண்டவராகிய இயேசுவும் நமக்கு இந்த காரியம் குறித்து அதிகம் அதிகமாய் போதித்துள்ளார்:
மத்தேயு 5:44நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்
வீண் பேச்சுக்கள், தேவையற்ற வாதங்கள், நான் பெரியவன் என்ற போதனைகள், வரட்டு பிடிவாதங்கள் இவற்றை எல்லாம் ஓரத்தில் வைத்துவிட்டு, நம்மேலான தேவனின் சித்தம் என்னவென்பதை அறிந்து செயல்படுவதே இந்நாட்களில் மிகுந்த அவசியம் ஆகும்.
இப்படி பிதாவின் சித்தம் அறிந்து அதை நிறைவேற்றுபவனே பிதாவின் புத்திரராக இருக்கமுடியும்!
(இதுபோன்ற போதனைகள் அநேகருக்கு பிடிப்பதில்லை சொல்லப்பட்ட கருத்துக்களை சுலபமாக நிராகரித்து தங்கள் பழைய மாம்ச செய்கையை தொடர்கின்றனர். மனிதனின் இயற்க்கை மாம்சகுணம் தன்னை மேலானவனாக காட்டுவதிலும் கசப்பு வைராக்கியம் பொறாமை வஞ்சம் இவைகளால் நிறைந்ததுமாகவே இருக்கிறது. ஆவியின் கிரியையால் மாம்சத்தின் கிரியைகளை அழித்தால் மட்டுமே தேவனின் சித்தம் செய்து பிழைக்க முடியும் என்பதை கருத்தில்கொண்டு இந்த கட்டுரையை இன்னொருமுறை வாசிக்கவும்)
-- Edited by SUNDAR on Thursday 10th of February 2011 04:33:36 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நீதிமொழிகள் 25:11 ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
சகோ.சுந்தரின் மேற்கூறிய பதிவுங்கூட எனக்கு ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தையாக இருந்தது. சுந்தர் குறிப்பிட்டுள்ள வசனங்கள் யாவும் எனக்கு நன்கு தெரிந்த வசனங்கள்தான். ஆகிலும் எனது தனிப்பட்ட வாழ்வில் அவற்றை அனுபவமாக்க நானுங்கூட அடிக்கடி தவறிவிடுவதுண்டு. தற்போது தக்க சமயத்தில் அவ்வசனங்களை சுந்தர் மூலம் தேவனே எனக்குச் சொன்னதுபோலிருந்தது.
எனக்குத் தனிப்பட்ட முறையில் பயனுள்ள பதிவைத் தந்த சுந்தருக்கு நன்றி.
நமது எஜமானராகிய தேவனின் சித்தம் என்னவென்பதை வசன அடிப்படையில் விளக்கமாக எழுதிவிட்டேன். நாம் இப்பொழுது இருக்கும் நிலையிலேயே உடனடியாக அவரது சித்தத்துக்கு கீழ்படிவதையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
லூக்கா 12:47தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
என்ற வசனத்துக்கு ஏற்ப இயேசுவை அறியாத, எஜமானின் சித்தம் தெரியவதர்களுக்கோ சில அடிகள் என்றால் அவரதுசித்தத்தை அறிந்தும் அதன்படி செய்ய விருப்பம் இல்லாமல் தாங்கள் சுய மாம்ச சித்தத்தை நிறைவேற்றி, அடுத்தவர்களை அசிங்கமாக நியாயம்தீர்த்து தாங்கள் வக்கிர புத்தியை காண்பித்துக்கொண்டு இருப்பவர்கள் அனேக அடிகள் அடிக்கபடுவார்கள் என்பதை கருத்தில் கொள்க.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)