இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சத்தியத்தை தேடி வரும் அன்பு சகோதரர்களுக்கு!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சத்தியத்தை தேடி வரும் அன்பு சகோதரர்களுக்கு!
Permalink  
 


சத்தியத்தை அறியவேண்டும் என்று ஆவலில் அங்கும் இங்கும்  தேடி கொண்டிருக்கும் அன்பு சகோதரர்களே, இந்ததளத்துக்கு உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் ஒரு தளமல்ல. நீங்கள் சத்தியத்தை எங்கும்போய் தேடவேண்டிய அவசியமும் இல்லை.
 
காரணம் 
 
யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

என்று வசனம் சொல்வதால், அனைத்து சத்தியமும்  அடங்கிய வேத புத்தகம் நமது கையில் ஏற்கெனவே இருப்பதால்  வேத புத்தகத்தை விட்டு வேறு ஒரு இடத்தில் சத்தியத்தை தேடினால் அது உங்களுக்கு எங்குமே  கிடைக்காது.
 
அடுத்ததாக ஆண்டவராகிய இயேசு
 
யோவான் 14:6   நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
 
என்று தெளிவாக  சொல்லியிருப்பதால் இயேசுவை அறிந்துகொள்வதே சத்தியத்தை அறிந்து கொள்ளும் வழி. இயேசுவை அறிந்துகொண்டவர்கள் சத்தியத்தைதேடி அலைய வேண்டியது இல்லை. 
 
பிறகு நாம் இப்பொழுது  செய்யவேண்டியது என்ன?
 
சத்தியம் அடங்கிய வேத புத்தகத்தை நாம் வைத்திருப்பதன் மூலமும் ஆண்டவராகிய இயேசுவை  அறிந்துகொண்டதன்  மூலமும் நாம் ஏற்கெனவே சத்தியம் என்னவென்பதை அறிந்துகொண்டு விட்டோம்.  இப்பொழுது நமது அவசரதேவை  அறிந்த சத்தியத்துக்கு கீழ்படிதலேயன்றி இன்னும் ஒரு புதிய சத்திய தேடல் அல்ல! அறிந்த சத்தியம் சற்று கடினமாக இருப்பதால் வேறு ஏதாவது சுலபமான சத்தியம் கிடைக்காதா என்று ஏக்கத்தில் பலர் தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கலாம். ஆனால்  அதனால் எந்த பயனும் இல்லை என்பதை இங்கு தெரிவித்துகொள்கிறேன்.
 
நாம் அறிந்த சத்தியத்துக்கு கீழ்ப்படியவேண்டும் என்பதுவே நம்மேல் விழுந்த முக்கிய  கடமை. எழுதப்பட்டுள சத்தியமாகிய வேதத்துக்கும் ஆண்டவராகிய இயேசுஎன்னும் சத்தியமானவர்  சொல்லும்  கற்பனைகளுக்கும் நாம் கீழ்படிவதால் மட்டுமே ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற முடியும் அடுத்த நிலையை எட்ட முடியும்.   
 
ஒவ்வொரு படியாக ஏறினால்தான் உச்சத்தை செற்றடைந்து  உண்மையை உணர முடியும். கண்ணுக்கு தெரியும்  படியில் ஏறாமல் பைனாக்குலரை வைத்து  உச்சியில் என்ன இருக்கிறது என்று பாப்பது இந்த உலகத்தில் வேண்டுமானால் சாத்தியமாகலாம் ஆனதால் தேவனை பொறுத்தவரை அது சாத்தியமல்ல. அவர் உனக்கு தெரியப்படுத்தியிருக்கும் காரியங்களுக்கு நீ முழுவதும்  கீழ்படிந்தால் மட்டுமே அடுத்த காரியத்தை குறித்த வெளிச்சம் உனக்கு கிடைக்கும்!      
  
ஆண்டவரின் பெயரில் அரட்டை அடிக்க விரும்புகிறவர்களும், "ஏதோ நான் ரட்சிக்கபட்டுவிட்டேன்  அது  எனக்கு போதும்" " இயேசுவை அறிந்துகொண்டு விட்டேன் என்னை இனி யாரும் அசைக்க முடியாது"  " இயேசுவை  அறிந்து கொண்டால்மட்டும் போதும் வேறுஎதுவும் தேவையில்லை"  என்ற நோக்கத்தோடு போட்ட அஸ்திபாரத்தையே திரும்ப திரும்ப போடும் ஞானிகளுக்கு இந்த தளத்தில் எந்த வேலையும் இல்லை. 
 
எபிரெயர் 6:2 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.

திரும்ப திரும்ப குழந்தைகள் உண்ணும் பாலையே உண்பவர்களாக இருக்காமல்,
இயேசுவுக்குள் அதிகமதிகமாய் பூரணப்பட விரும்புவோரும், மகிமையின்மேல் மகிமை அடைய விரும்பு வோர்களுக்கு  மட்டுமே இந்த தளம் பயன்படும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.  
 
வாஞ்சை உள்ளவர்கள் வந்து பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்!


-- Edited by SUNDAR on Saturday 12th of February 2011 11:07:31 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: சத்தியத்தை தேடி வரும் அன்பு சகோதரர்களுக்கு!
Permalink  
 


எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் பொதுவாக நமது தளத்தில்  ழுதப்பட்ட இந்த பதிவுக்கு சிலர்  உருண்டு, புரண்டு, துடித்து அரத்தமற்ற விமர்சனமாக ஏதோதோ எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது! 

அவர்களுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு தேவகட்டளை இல்லை! அவரைப் போல தரம்கெட்ட வார்த்தைகளை எழுதி தரம்கெட்டுபோக எனக்கு விருப்பம் இல்லை.  அனைவரிடமும் "ஒரு கிறிஸ்த்தவன் இப்படி இருக்கவேண்டும்" என்றொரு முன்மாதிரியை ஏற்ப்படுத்தி வைத்துள்ள எனக்கு, ஒரு பிறமத நல்ல நண்பனிடம் நமது தளத்தை சுட்டி படிக்கசொல்லவே  அவமானமாக இருக்கிறது. நமது தளம் மட்டுமல்ல "தமிழ் கிறிஸ்தவதளம்" கூட அப்படியொரு  நிலையை எட்டியுள்ளது.     

முக்கியமாக நான் எப்போதெல்லாம்,  வேதத்தில் திரும்ப திரும்ப வலியுறுத்தப் படும் "வேத வார்த்தைகளை கைகொண்டு நடக்க வேண்டும்" என்ற காரியங்களை திட்டமாக எழுதுகிறேனோ அப்போதெல்லாம் சிலர் அதிகமதிகமாக வாதிக்க படுவதுபோல் எனக்கு புலனாகிறது.
 
இதற்க்கு முன் இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு நடக்கவேண்டும் என்று எழுதியதற்கு "இரத்த வியாதி வந்து சாவாய்" என்று எழுதியிருந்தார்.  இப்பொழுது நாமறிந்த சத்தியத்துக்கு  கீழ்படிய வேண்டும் என்று எழுதியதற்கு அவ்வாறு கீழ்படிந்தால் "மிருகம் போல மறுரூபம் ஆவோம்" என்று எழுதுகிறார். தேவன் எழுதிகொண்டுத்த வார்த்தைகளுக்கு இவர் கொடுக்கும் மதிப்பை பாருங்கள்!
 
அவருக்குள்  இருந்து "கிரியை செய்யும் ஆவி" எது என்பது எனக்கு சர்வ நிச்சயமாக புரிந்துவிட்டதால். இவரைப்பற்றி எழுதி பயனிலை. ஆரோக்கிய உபதேசத்தில் இருக்கும்அவர் ஆரோக்கியம் குறையாமல் இருக்க ஆண்டவரிடம் வேண்டிகொள்கிறேன்.
 
"நான் எழுதும் எந்த ஒரு கருத்து சம்பந்தமான விளக்கங்களுக்கும் அல்லது மாறுபாடுபோல் தோன்றும் காரியங்களுக்கும் நமது தளத்தில் விளக்கம் கேட்போருக்கு நிச்சயம் சரியான விளக்கம் தரப்படும், அல்லது அது தவறு என்று தெரியவருமாகில் அதற்க்கு மன்னிப்பு கேட்கப்படும்" என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
 
காட்டை கெடுக்கும் குள்ளநரிகள்போல் வலைத்தளங்களை கெடுக்கும்  அகங்கார ஆவிகள் இந்ததளத்தை கெடுத்துவிடாவண்ணம் ஆண்டவர்தாமே வேலியடைத்து  பாதுகாப்பாராக!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சத்தியத்தை தேடி வரும் அன்பு சகோதரர்களுக்கு!
Permalink  
 


ஆண்டவராகிய  இயேசு தன் ஊழிய நாட்களில்  ஒருமுறை சற்று கடினமான உபதேசத்தை போதிக்கும்போது அநேகர் அதை ஏற்க்க மறுத்து  அவரை விட்டு பின்வாங்கி போனார்கள்.  
 
யோவான் 6:60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
 
அதேபோல் நமது தளத்திலும் சொல்லப்படும் உபதேசங்கள் நேரடியாக ஆண்டவரிடமிருந்து பெறப்பட்டு, யாரோடும் இசைந்து  போகாமால்  சற்று கடினமாக இருப்பதாலும், சாத்தானின் தொடர்  வஞ்சகத்தாலும்  பலர்  தளத்தை விட்டு விலகி போகின்றனர் என்றே நான் கருதுகிறேன். மாய்மாலமும்,  வஞ்சக பேச்சும், வம்பிழுக்கும் கூட்டமும்தான், யாருடனாவது எதையவாது சொல்லி மோதிக்கொண்டு இருப்பதும்தான் பலருக்கு அதிகமாக  பிடிக்கும்.

சத்தியம் என்பது யாருக்கும் எப்பொழுதும் சர்க்கரையாக இனிப்பதுஇல்லை. எனவே அதை விரும்பி அநேகர்  ஏற்ப்பதும் இல்லை. 
 
நமது தளத்தில் கவர்ச்சிகள் கிடையாது. அதை காட்டிகொண்டிருக்கும் கணககன்ற தளங்கள் உள்ளன.

நமது தளத்தில் பாவத்துடன் சமரசம் கிடையாது  அவ்வாறு சமரசம் செய்து கொண்டுள்ள பல தளங்கள் உள்ளன. 

நமது தளத்தில் வெறும் வெத்துவேட்டு  வாய்பேச்சுகள் கிடையாது. சொல்வோம் சொல்வதை  செய்வோம், செய்வதற்கு முயல்வோம்.     

நமது தளத்தில் வெறும் அறிவால் எழுதப்படும் அலப்பல் வார்த்தைகள் கிடையாது. ஆண்டவருடன்  அமர்ந்து சரிபார்த்தே காரியங்கள் எழுதப்படுகின்றன.

இங்கு உபதேச பாகுபாடுகள் எதுவும் பார்ப்பது இல்லை. ஆண்டவரின் வார்த்தைகளில் நடக்கிறோமா என்பது மட்டுமே  சரி பார்க்கப்படும்!  

நமது தளத்தில் சக சகோதர உளியர்களை தரம்கெட்ட விதத்தில் தாக்குவது கிடையாது அதையே விருபி செய்யும் அநேகர் இங்கு இருகின்றனர். .  

நமது தளத்தில் பாரம்பரியத்தின் தொடர்ச்சி இல்லை ஆனால் பண்படுத்தும் வார்த்தைகளோ  அதிகம்  உண்டு.

எல்லாம்  இலவசம்தான். வேண்டியவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளலாம்

ஆண்டவராகிய இயேசுவின் பின்னால் ஒளிந்துகொண்டு அவரின் வார்த்தைக்கு சற்றும் செவிகொடுக்காமல் சாத்தானின்  வேலையை சரியாக செய்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கும், "நோகாமல் நொங்கு திங்கவேண்டும்" என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இந்ததளத்தில் உள்ள செய்திகளால் எந்தபயனும் இருக்காது! 

அப்படிப்பட்டவர்கள் 
விலகிப்போகலாம்.  
 
ஆண்டவராகிய இயேசு சொன்ன உபதேசத்தைவிட கடினமான உபதேசம் வேற எதுவும் கிடையாது என்றே நான் கருதுகிறேன்.  
 
மத்தேயு 16:24 , இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் 
 
மாற்கு 10:21  உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
 
இவ்வளவு கடினமான உபதேசங்ககளை  கஷ்டப்பட்டு கைகொள்ள விரும்பாத மனுஷர்கள்,  சாத்தனோடு சமரசம் செய்து கொண்டு சங்கடமின்றி வாழ பழகி விட்டனர்.  நாம் இயேசுவின் அடிச்சுவடை பின்பற்றி நடக்க விரும்பி அதற்கு ஏற்ற வார்த்தைகளை எழுதுவதால் சாத்தானால் சகிக்க முடியவில்லை. அடிக்கடி  சீறுகிறான்.   
 
அன்பு சகோதரனே, சகோதரியே, நண்பனே, அன்பனே நீ தேவனின் பார்வையில் மேன்மையானவர்.  உன்னால் நிச்சயம் முடியும்!  உன்னைத்தான் ஆண்டவர் தேடிக்கொண்டு இருக்கிறார்!  ஆவியானவர் துணையுடன் அதிகமாக  முயற்சி செய், எல்லாமே நிச்சயம்  முடியும்!
 
ஏசாயா 43:4 நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன்    
 
என்று கர்த்தர் சொல்கிறார்!


-- Edited by SUNDAR on Saturday 5th of March 2011 03:06:39 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: சத்தியத்தை தேடி வரும் அன்பு சகோதரர்களுக்கு!
Permalink  
 


தேவனை நேசிக்கும் அன்பர்களே,
 
இங்கு வந்திருக்கும் தங்களை  என்னுடைய போதனையை ஏற்க்கவைக்க வேண்டும் என்பதோ அல்லது நான் சொல்வதுதான் சரியானது அதை நம்புங்கள் என்பதோ  அல்லது  என்னை பின்பற்றுங்கள் என்று போதிப்பதோ எனது நோக்கமல்ல அவ்வாறு  போதிக்கவும் நான் விரும்பவில்லை. நானும்ஒரு சாதாரண மனிதன்தான்.
 
நான் உங்களுக்கு சொல்வதெல்லாம் "சரியான சத்தியத்தை சரியான முறையில் அறிந்துகொள்ள, தேவனிடம் நேரடியாக தொடர்புகொண்டு பழகுங்கள்" என்பதே.

தாய்  விலங்கிடம்  இருந்து  பிரிக்கபட்ட குட்டியை எதிரிகள் விலங்குகள்  சுலபமாக சூரயாடிவிட முடியும்.   அதுபோல் நமது பரமதகப்பனிடம் தொடர்பு நிலையில் இல்லாமல் பிரிந்து இருக்கும் ஒவ்வொருவரையும் "எவனை கவிழ்க்கலாம்" என்று அலையும் சாத்தான் சுலபமாக கவிழ்த்துவிடுவான்.

தேவனிடமிருந்து வார்த்தையை பெற்றுத்தரும்
எந்த இடைத்தரகரும் உங்களை ஏமாற்றிவிடலாம். ஆனால் நீங்கள் நேரடியாக தேவனுடன் தொடர்பு நிலையில் இருந்தால் ஒருபோதும் உங்களை யாருமே திசைதிருப்பிவிட முடியாது. எந்த கள்ள உபதேசமும் உங்களை அசைத்துவிட  முடியாது.  அவ்வாறு ஒவ்வொரு தேவ பிள்ளையும் எந்த இடைதரகள் மூலமாகவுள் அல்ல  நாமே தேவனுடன்  நேரடி தொடர்பில்  இருக்கவேண்டும் என்ற நோக்கிலேயே ஆவியானவர் நமக்கு அருளப்பட்டு, நம்முள்  வந்து வாசம் செய்ய சித்தம் கொண்டுள்ளார். எனவே என்றும் அவரையே  சார்த்து நில்லுங்கள்.  
 
அடுத்ததாக  நீங்கள் பல மனிதர்கள் மூலம் கண்டு கேட்டு அறிந்த உங்களின் பாரம்பரிய  கருத்துக்களை அடிப்படையாககொண்டு தேவனை தேடாமல், தேவன் என்ன வெளிப்படுத்தினாலும் அதற்க்கு வசன ஆதாரம் இருக்கும் பட்சத்தில் அதை ஏற்கும் மனப்பக்குவத்துடன் தேவனை தேடுங்கள்.    
 
வலை தளங்களில் வரும் எவரும் உபதேச குழப்பங்களுக்குள் சிக்கி, எது உண்மை எது பொய்? என்று குழம்பி வழி தவறிவிடாதபடிக்கு ஒவ்வொருவரையும் தேவனை நோக்கி திருப்பி, அவரது கரத்தை  பிடித்துளளும்படி அறிவுறுத்தவே நான் இங்கு போராடுகிறேன். ஆண்டவரின்  கரத்தை உறுதியாக பற்றிக்கொண்டால் அவர்
உங்களை "கர கர" என்று  இழுதுகொண்டு போயாவது நித்தியத்துக்குள்  சேர்த்து விடுவார். ஆனால் எந்த மனிதனின் கைகளை நீங்கள் பற்றினாலும் நாளை உங்கள் வாழ்வுக்கு உத்திரவாதம் இல்லை எனபதை நான் மீண்டும் மீண்டும் இங்கு தெரிவித்துகொள்கிறேன்.
  
ஆமோஸ் 5:4 கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
 
உங்கள் ஒவ்வொருவர் மீதும் தேவனுக்கு தனிப்பட்ட ஒரு திட்டம் உண்டு. அதை உங்களிடம் மட்டுமே தேவன் தெரியப்படுத்துவார். ஆவியானவரிடம் கேட்டு அறிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்!
    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard