ஒருவர் வேதத்தை ஆராய்ந்து அறிந்து அறிந்து கொள்வதைவிட தேவனை பற்றிய அறிவு மனுஷனுக்கு மிகமிக அவசியம். தேவனை அறியாமல் வேதத்தை மட்டும் அறிந்தால் எல்லாம் மாருபாடகவே தோன்றும். தேவனின் திட்டங்கள், அவரது எதிர்பார்ப்பு மற்றும் மனிதனின் சுயாதீனம் இவற்றுக்குள்ள தொடர்புநிலையை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லையெனில் தேவனை பற்றிய ஒரு தவறான கருத்துக்குள் நாம் செற்றுவிடக் கூடும் எனவே இவற்றை சற்று ஆராயலாம்:
தேவனின் திட்டம்:
தேவனின் திட்டம் என்பது அனைத்தும் முன் நிர்ணயிக்கபட்டது. "பாவத்தில் வீழ்ந்த மனுஷனை அழிவில் இருந்து மீட்டு எடுப்பது" என்பதுவே தேவனின் திட்டத்தின் அடிப்படை ஆகும். இதில் தீர்க்கதரிசிகளின் வருகை, இயேசுவின் பிறப்பு, அவர் சிலுவை மரணம், இயேசுவின் இரண்டாம் வருகை, நித்திய நியாய தீர்ப்பு, சாத்தானின் முடிவு நித்திய ஜீவன் அனைத்துமே அடங்கி விடும். தேவனின் திட்டங்கள் அடங்கிய புத்தகமே வேதாகமம் ஆகும். இது தேவனின் திட்டத்தின் முடிவுவரை எல்லா காரியங்களையும் முன்னறிவிக்கிறது. தேவனின் இந்த திட்டங்கள் அனைத்தும் அப்படியே நிறைவேறும்.
மத்தேயு 1:22தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
தேவனின் சித்தம் என்பது மேற்கூறிய தேவனின் திட்டத்துக்குள் நடைபெற விரும்பி தேவன் எதிர்பார்க்கும் காரியம் ஆகும். அவரின் முக்கியமான சித்தமும் எதிர்பார்ப்பும் "மேற்கூறிய திட்டம் நிறைவேறும்முன் எல்லோரும் இரட்சிக்கப் பட்டு சத்தியத்தை அறிந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
I தீமோத்தேயு 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
தேவனின் சித்தம் நிறைவேறுவதில் தடைகள் இருப்பதால் "உம்முடிய சித்தம் நிறைவேறுவதாக" என்ற ஜெபத்தை ஏறேடுக்கும்படி ஆண்டவராகிய இயேசு நமக்கு கட்டளையிட்டுள்ளார்.
தேவனின் திட்டத்திலும் அவரது சித்தத்திலும் எந்தஒரு குற்றமும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது! அவரது சித்தம் அப்படியே நிறைவேறினால் எல்லோரும் மீட்கப்படுவது நிச்சயம்.
மனிதனின் சுயாதீனம்:
இங்கு பிரச்சனையை கொண்டு வருவது மனிதனின் சுயாதீனமே! மனிதனானவன் தேவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு மேன்மையான நிலையை புரங்கணித்து, சாத்தானின் துண்டுகளில் பேரில் நன்மை தீமையை அறிந்து சுயாதீனமாக செயல்பட்டு செயல்களை செய்யும் ஞானம் உள்ளவனாக தேவனைப்போல இருக்கும் நிலையை தானே தெரிவுசெய்து பெற்றுக்கொண்டான்.
எனவே இங்கு தேவனின் மீட்பின் திட்டத்தினுள் வரவும் வராமல் விலகி யிருக்கவும் அவனுக்கு சுயாதீனம் இருக்கிறது. தேவன் ஓரளவுக்குத்தான் மனிதனை தன்பக்கம் வரும்படி அழைப்பார். அனால் திரும்ப திரும்ப அவர் அழைப்பை அசட்டை செய்து விலகி போவோரிடம் அவர் என்றும் போராடுவது இல்லை.
ஆதியாகமம் 6:3அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை;
எனவே நன்மையை செய்வதும் தீமையை செய்வதும், தேவனின் சித்தம்படி செய்வதும் அவருடைய சித்தத்துக்கு விரோதமாக சாத்தானின் சித்தம் செய்வதும் ஒரு தனிமனிதனின் சுயாதீனத்தில் இருக்கிறது.
சிலரை தேவன் படைக்கும்போதே தனது திட்டத்தை நிறைவேற்றும் ஒரு பாத்திரமாக படைக்கிறார், சிலரை அவர்கள் வாழ்நாளில் தெரிந்துக்கொண்டு தமது சித்தம் நிறைவேர பயன்படுத்திகிறார், சிலரை தேவன் கண்டுகொள்வதே இல்லை.
என்ற வார்த்தைக்கும் அடங்கிவிடுமானாலும். தேவன் இவ்வாறு செய்வதற்கு அடிப்படை நியாயமான காரணம் உண்டு. தேவன் நியாயமின்றி யாரிடமும் பட்சபாதம் காட்டமாட்டார்.
இப்பொழுது மேலே சொல்லப்பட்ட கருத்துக்கு ஒரு சிறிய உதாரணத்தை பார்க்கலாம்:
சென்னையில் இருந்து புறப்படும் ஒரு ரயில், மதுரையை சென்று அடையும் என்பது அரசாங்கத்தில் திட்டம். அதில் இந்த டிரைவர் இந்த இந்த டிக்கட் பரிசோதகர், இந்த கார்ட் பயணம் செய்வார்கள் என்பதும் அரசாங்கம் முன்குறிதது விடும்.
ஆனால் அந்த ரயிலில் யார் யார் மதுரை செற்று சேருவார்கள் என்பது தனிமனிதன் சுயாதீனத்தில் அடிப்படையில் உள்ளது. சிலர் வரவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கலாம். சிலர் பாதியில் இரங்கி ஓடிவிடலாம். சிலர் மதுரைவரை வந்து சேரலாம். இங்கு யாரையும் அரசாங்கம் கண்டிப்பாக வரவேண்டும் என்று கட்டளை இடுவது கிடயாது.
அதுபோலவே:
பாவத்துக்குள் முழ்கி அழிவை நோக்கி போய்கொண்டிருக்கும் இந்த பூஉலகத்தில் இருந்து, ஜனங்களை மீட்டு பரலோகம் என்னும் மேன்மையான இடம் கொண்டு சேர்க்க, இயேசுவின் இரத்தம் என்னும் ஒரு விசேஷ கிருபையின் மூலம் ஒரு மிகப்பெரிய பேழை ஒன்றை தேவன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளார். அந்த பேழையானது பரலோகத்தை நோக்கி புறப்பட்டுகொண்டு இருக்கிறது. எல்லோரும் அதனுள் வந்து பாதுகாக்கப்பட்டு அழிவில் இருந்து தப்பி நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்படி அழைக்கப்ப்டுகின்ற்றனர். (இது தேவனின் திட்டம்)
"இந்த பேழைக்குள் எல்லோருமே வந்து அழிவில் இருந்து தப்பிவிடவேண்டும்" என்பதே தேவனின் எதிர்பார்ப்பும் அவரது சித்தமுமாய் இருக்கிறது. எனெனில் சாகிறவனின் சாவை தேவன் விரும்பவில்லை. அவன் மனம்திரும்பி பிழைப்பதையே அவர் விரும்புகிறார்.
ஆனால் ஒரு தனிமனிதனை பொறுத்தவரை, அந்த பேழையினுள் வந்து ஏறி தப்புவதும், அதை நிராகரிப்பதும் அவனது சுயாதீனத்தில் இருக்கிறது. இங்கு அழைப்புதான் திரும்ப திரும்ப வருமேயன்றி யாரும் கட்டாயப்படுத்தபடுவது இல்லை. எனவே அந்த அழைப்பை ஏற்று இயேசுவின் கரத்துக்குள் வராமல் தவறவிட்டவனுக்கு தேவன் எவ்விதத்திலும் பொறுப்பாளி கிடையாது!
இதுவே தேவனின் திட்டம் / தேவனின் சித்தம் மற்றும் மனுஷனின் சுயாதீனத்துக்கும் உள்ள தொடர்பு.
அவனவன் சுய சித்தத்தோடு செய்யும் கிரியைக்கு தகுந்த பலனே அவனவனுக்கு கிடைக்கும்
தீமையையும் கெடுதலையும் செய்துவிட்டு அதாவது யூதாசை போல ஜீவாதிபதியையே காட்டிகொடுத்து விட்டு "இது உம்முடைய திட்டம் அதைதான் நான் செய்தேன்" என்று யாரும் தப்பிக்க முடியாது. ஏனெனில் அவரை காட்டி கொண்டுக்கவும் அவருக்காக தனது ஜீவனையேகொடுக்கவும் யூதாசுக்கு (சாய்ஸ்) தெரிவு செய்யும் சுயாதீனம் இருந்தது. ஆனால் பணத்தின்மேல் ஆசைகொண்டு சாத்தானை தன்னுள் அனுமதித்து தவறான ஒன்றை தெரிவுசெய்து கொண்டது அவனுடைய சுயாதீனமேயன்றி தேவன் அதற்க்கு பொறுப்பல்ல.
-- Edited by SUNDAR on Monday 21st of February 2011 10:27:03 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///////////////////////////சிலரை தேவன் படைக்கும்போதே தனது திட்டத்தை நிறைவேற்றும் ஒரு பாத்திரமாக படைக்கிறார், சிலரை அவர்கள் வாழ்நாளில் தெரிந்துக்கொண்டு தமது சித்தம் நிறைவேர பயன்படுத்திகிறார், சிலரை தேவன் கண்டுகொள்வதே இல்லை.
இவைகள் எல்லாமே தேவனின் வார்த்தயாகிய:
என்ற வார்த்தைக்கும் அடங்கிவிடுமானாலும். தேவன் இவ்வாறு செய்வதற்கு அடிப்படை நியாயமான காரணம் உண்டு. தேவன் நியாயமின்றி யாரிடமும் பட்சபாதம் காட்டமாட்டார்.///////////////////////////////
இப்பகுதியில் தேவன் பட்சபாதம் இல்லாதவராக இருக்கிறார் ஆனால் இந்த வசனம் யாத்திராகமம் 33:19 ; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் இவ்வாறு கூறுகிறது இவை இரண்டையும் சற்று தெளிவாக விளக்க இயலுமா?
இப்பகுதியில் தேவன் பட்சபாதம் இல்லாதவராக இருக்கிறார் ஆனால் இந்த வசனம் யாத்திராகமம் 33:19 ; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் இவ்வாறு கூறுகிறது இவை இரண்டையும் சற்று தெளிவாக விளக்க இயலுமா?
ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரத்தில் சிருஷ்ட்டித்து நம்மை முன்னமே அறிந்திருந்த தேவன், பின்னர்
இந்த மாம்சமாகிப்போன உலகத்தில் ஆதாம் சந்ததியில் ஒரு தாயின் வயிற்றில் கொண்டு வந்து வைக்கிறார்.
எனவே அவர் இந்த உலகத்தில் ஒரு தாயின் வயிற்றில் ஒருவரை வைக்கும் முன்னரே யாரை எந்த தாயின் வயிற்றில் வைக்கவேணும் என்று நன்றாகவே அறிந்திருக்கிறார்
இந்த மாம்ச உலகத்தில் ஒருவர் பணக்கார குடும்பத்திலும் ஒருவர் ஏழை குடும்பத்திலும் பிறக்க காரணமும், தேவன் சிலர்மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருக்கிறார் என்பதும் அவன் ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் சிருஷ்ட்டிக்கப்படட நிலையில் செய்த காரியங்கள் அடிப்படையிலேயே இருக்கும்.
இது பச்சபாதம் அல்ல!
நீதிமொழிகள் 12:14அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படியாயின் நாம் அனைவரும் முதல் அதிகாரத்தில் சிருஷ்டிக்கப்பட்டவர்களா? அப்பொழுது நாம் செய்த கிரியைகளின் நிமித்தம் நாம் யார் வயிற்றில் பிறக்க வேண்டும் என தேவன் தீர்மானித்தாரா?
தற்போது உலகத்தில் வாழுகிற மற்றும் பிறக்க போகிற யாவரும் முதல் அதிகாரத்தில்படைக்கப்பட்டவர்களா?
//////////////எரேமியா 1:5 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; என்ற வசனத்துக்கு பதில் தெரிய வேண்டும்.
தாயின் வயிற்றல் உருவாக்குமுன்னே ஒருவரை தேவனால் எப்படி அறியமுடியும்?
உருவாக்கிய பின்னர்தான் ஒருவரை யாரென்றும் எப்படிபடடவர் என்றும் தெரியவரும்.
ஆனால் கர்த்தர் வயிற்றில் கருவாக உருவாக்கும் முன்னரே ஒருவரை அறிந்திருப்பதாக கூறுகினார் /////////////
தேவன் வல்லமையுள்ளவர் ஆதலால் நாம் பிறக்கும் முன்னமே நாம் யாரென்று அறிந்திருக்கிறார் என்று சொல்லலாமே.
உருவாக்கின பிறகு தான் அவருக்கு எம்மை பற்றி தெரிய வேண்டியதில்லையே அவர் சகலமும் அறிந்தவர் சகல வல்லமையும் அவருடையது எனவே நாம் உருவாகும் முன் அவர் எம்மை அறிந்திருக்கலாம் தானே..
நீங்க எப்படி உருவாக்கிய பின் தான் அதை பற்றி அறிய முடியும் என கூறுகிறீர்கள் அண்ணா ?
விசுவாசிக்கிறவனுக்கே சகலமும் கூடும் என வேதம் கூறியிருக்க விசுவாசத்தை தொடங்கினவரும் அதை முடிக்கிறவருமான தேவனுக்கு அதிலும் அதிகமாக சகலமும் கூடுமே..
அப்படியாயின் நாம் அனைவரும் முதல் அதிகாரத்தில் சிருஷ்டிக்கப்பட்டவர்களா? அப்பொழுது நாம் செய்த கிரியைகளின் நிமித்தம் நாம் யார் வயிற்றில் பிறக்க வேண்டும் என தேவன் தீர்மானித்தாரா?
தற்போது உலகத்தில் வாழுகிற மற்றும் பிறக்க போகிற யாவரும் முதல் அதிகாரத்தில்படைக்கப்பட்டவர்களா?
அப்படியாயின் நாம் அனைவரும் முதல் அதிகாரத்தில் சிருஷ்டிக்கப்பட்டவர்களா? அப்பொழுது நாம் செய்த கிரியைகளின் நிமித்தம் நாம் யார் வயிற்றில் பிறக்க வேண்டும் என தேவன் தீர்மானித்தாரா?
தற்போது உலகத்தில் வாழுகிற மற்றும் பிறக்க போகிற யாவரும் முதல் அதிகாரத்தில்படைக்கப்பட்டவர்களா?
ஆம் சிஸ்ட்டர். (ஏற்பதற்கு மனத்திருந்தால் கீழுள்ளவைகளை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது விட்டுவிடலாம்)
எனவேதான் வேதம் "மாம்சமான யாவரும்" என்று சொல்கிறது.
அதாவது வேறொரு இடத்தில் வேறொரு ரூபத்தில் மகிமையாய் இருந்த நாம் இந்த வேதனை உள்ள மாம்சமாகி போனோம்.
மாம்சம் என்பது நமக்கு கிடைத்த மாபெரும் தண்டனை! இந்த் மாம்சம் எப்பொழுதும் நம்மை பாவத்த்தில் விழுவதற்க்கே வழி செய்துகொடுக்கும் ஆவிக்கு விரோதமாக போராடும்
இதனூடே எல்லோரும் கடந்து போகவேண்டும் என்பது தேவ நியமனம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படியானால் தேவனுக்கு ஒரு மனுஷனை குறித்து அவன் பிறக்கும் முன்னரோ அவன் உண்டாக முன்னரோ அறிய முடியாது என்று கூறுகிறீர்களா அண்ணா ?
சிஸ்ட்டர் ஆதாம் வழியில் மாம்சமாக பூமிக்கு வரும் ஒவ்வொரு மனுஷனும் சாத்தானை அழிப்பதற்கு தேவ திடடத்தில் ஏதாவது ஒரு பகுதியை செய்வதற்காகவே அனுப்பப்படுகிறான். அதில் சிலர் சரியாக செய்து முடிக்கின்றனர்
உதாரணம் ஆப்ரஹாம் / யோபு
சிலர் தங்கள் பொறுப்பை மறந்து தவறிவிடுகின்றனர்
உதாரணம் : சிம்சோன் / சவுல் ராஜா
இதில் யார் எப்படி செய்வார் என்பது தேவனால் முன் கூட்டியே அறிய முடியாது.
அறிந்திருந்தால் சவுலை ராஜாவாக்கியதற்கு அவர் மனஸ்தாப படவேண்டிய அவசியம் இருக்காது. சற்று சிந்தித்து பாருங்கள்.
I சாமுவேல் 15:11நான் சவுலைராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்;
தேவனே சொல்கிறார் என் மனதில் தோன்றவே செய்யாத காரியத்தை எல்லாம் இந்த ஜனங்கள் செய்கிறார்கள் என்று
எரேமியா 7:31தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என்மனதில் தோன்றவுமில்லை.
தேவன் நினைக்காத காரியத்தை எல்லாம் மனுஷனால் செய்ய முடியும் அல்லவா? பிறகு எப்படி அவன் செய்யபோவதை தேவனால் அறியமுடியும் என்று நினைக்கிறீர்கள்?
(உங்களால் ஏற்கமுடியவில்லை என்றால் உங்கள் கருத்தையே எடுத்துகொள்ளுங்கள் சிஸ்ட்டர் ஏற்கவேண்டிய கடடாயம் எதுவும் இல்லை)
////ஆதாம் பாவம் செய்வான் என்று அவர் அறிந்திருக்கவில்லையா? //
ஆதாம் குறித்த தேவனின் நிலை வேறு. இதை குறித்து முன்னவே எழுதியிருக்கிறேன.