இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோவான் தான் எலியாவா..?

புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
யோவான் தான் எலியாவா..?
Permalink  
 
இரண்டாம் வருகைக்கு முன் எலியா வருவாரா ? 
அல்லது யோவான் தான் எலியாவா..?

__________________

MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 
Valan wrote:

இரண்டாம் வருகைக்கு முன் எலியா வருவாரா ? 

அல்லது யோவான் தான் எலியாவா..?சகோதரர் அவர்களே, தாங்கள் கேட்டிருக்கும் இந்த கேள்வி ஒரு முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கு பல வேத பண்டிதர்கள் பலவிதமான விளக்கங்களை  எழுதியிருக்கின்றனர். 

நமது தளத்தில் சொந்தமாக தியானித்து இந்த கருத்தை விவாதிக்கலாம் முதலில் கேள்வி எழுவதற்கான சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்  வசனங்களை  இங்கு  பதிவிடலாம்:   
 
ஆண்டவராகிய இயேசு யோவான் ஸ்நானனை பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு சொல்கிறார்:    
 
மத்தேயு 11:14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.

ஆனால் யோவான் ஸ்நானனை நோக்கி ஜனங்கள் கேள்விகள் கேட்டபோது அவரோ இவ்வாறு சொல்கிறார்
 
யோவான் 1:21 அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான்.
 
இந்நிலையில் ஏற்கெனவே வந்த "யோவான்ஸ்நானன்"
தான் எலியாவா?அல்லது எலினா இன்மேல்தான்  வருவாரா?
    
__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
Valan wrote:

இரண்டாம் வருகைக்கு முன் எலியா வருவாரா ? 

அல்லது யோவான் தான் எலியாவா..?யோவான்தான்  எலியாவா  என்பதை  நாம்  அறிந்துகொள்வதற்கு   முதலில்  எலியாவை பற்றி சொல்லபட்ட தீர்க்க தரிசனங்களை

ஆராயலாம்:  
 
ஏசாயா 40:3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4. பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்........... என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
 
மல்கியா 3:1 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான் 
 
மல்கியா 4:5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
 
இம்மூன்றில் முதல்  இரண்டு வசனங்களில் எலியாவின் பெயர்  குறிப்பிடப்படாமலும்
மூன்றாம் வசனத்தில் அவன் பெயர் குறிப்பிடப் பட்டும் சொல்லப்பட்டுள்ளது. அதானால் என்னை பொறுத்தவரை எலியாவின் பணி இரண்டு தவணைகளில் நடைபெறும் ஒன்றாக இருக்கிறது ஓன்று ஆவிக்குரிய பணி இன்னொன்று மாம்சத்துக்குரிய பணி. 
  
இந்த மூன்று வசனத்தில் முதல் இரண்டு தீர்க்கதரிசனமும் நடந்து முடிந்ததும் யோவானைபற்றியே சொல்லப்பட்டது என்பதற்கு புதிய ஏற்பாட்டில் தெளிவான வசனங்கள் உள்ளன
 
யோவானே தன்னைப்பற்றி இவ்வாறு சொல்கிறான்:
 
யோவான் 1:23 அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்
 
அடுத்து யோவானைபற்றி இயேசு  இவ்வாறு சொல்கிறார் :  
 
மத்தேயு 11:10 அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
 
ஆகினும் பழய ஏற்பாட்டில் யோவானைபற்றி  எழுதபட்டு புதிய ஏற்பாட்டில் உறுதி செயபட்ட  இந்த இரண்டு வசனத்திலும் எலியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே இது தேவனால்நிர்ணயிக்கபட்ட  ஒரு தனிப்பட்ட ஊழியம் என்றும்  இந்த ஊழியத்துக்கும் மல்கியா 4:5ல சொல்லப்பட்ட எலியாவின் ஊழியத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
 
ஆகினும் இயேசு யோவானை பாற்றி மேலும் சொல்கையில்
 
மத்தேயு 11:14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
 
இதற்க்கு காரணம் என்னவெனில்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து முற்றிலும் ஆவிக்குரிய  கண்ணுடையவர். அவர் தேவன்! எனவே வெளித்தோற்றத்தை பார்ப்பதைவிட அந்த மனிதனுக்குள் எந்த ஆவி இருந்து கிரியை செய்கிறது என்பதே வருடைய கண்ணுக்கு தெரியும். வேதபாரகர்கள் வெளி தோற்றத்தில்  எப்படியிருந்தாலும் அவர்களின் உள்ளே என்ன ஆவிகள் கிரியை செய்கிறது என்பதை அவரால் அறியமுடிந்தது. அதுபோல் நிக்கேதேமுவை பார்த்ததும் நீ 
மறுபடி பிறக்கவேண்டும் என்றும்.  நித்திய ஜீவனை கேட்ட வாலிபனிடம் உள்ள குறையும் அவரால் அறிய முடிந்தது  மனிதனையும் பார்த்தபோது அவன் பாவியா நல்லவனா? அவன் உள்ளான குணம் என்ன? அவனுக்குள் கிரியை செய்யும் ஆவி எது? என்பதைஎல்லாம் தானாகவே அறிந்திருக்கும் வல்லமையுடன் இயேசு இருந்தார் என்பதற்கு அனேக ஆதாரங்கள் வேதததில் இருக்கிறது
 
யோவான் 2:25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதா யிருக்கவில்லை.
 
யார் என்ன நோக்கத்தோடு அவரிடம் பேசவந்தாலும் அவர்களிடம  கிரியைசெய்யும் ஆவியை அடையாளம் கண்டு அதற்க்கு ஏற்ப பதில் கொடுக்கும் வல்லமை  நிறைந்தவர் இயேசு. அவ்வாறு இயேசுவுக்கு யோவானின் வெளி தோற்றத்தைவிட அவனிடம்  கிரியை செய்த ஆவியைதான் அடையாளம் காண முடிந்தது. 
 
அதாவது யோவான் என்பவன் "தேவனால் அனுப்பபட்ட வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தமாக இருந்தான்" ஆனால் அவனுக்குள் கிரியை செய்ததோ "எலியாவின்  ஆவியும் வல்லமையும்" அதை இந்த வசனம் தெளிவாக சொல்கிறது.
 
லூக்கா 1:17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்
 
அதாவது வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தமாய் அனுப்பபட்ட யோவானுக்கு கொடுக்கப்பட்டதோ "எலியாவின் ஆவியும் பெலமும்". யோவானுக்கு தான் "வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தம்" என்பது தெரிந்தது, ஆனால் "ஆவிக்குரிய  கண்ணுடன் பார்த்த இயேசுவுக்கு அவனிடம் எலியாவின் ஆவி பெலம்"  இருப்பது  தெரிந்தது. எனவே இயேசு அவனை எலியா என்றார். அதாவது எலியாவை தேவன் அப்படியே திரும்ப அனுப்பாமல், வழியை ஆயத்தபடுத்தும பணிக்கு  அவனது ஆவியையும் பெலத்தையும்  யோவானுக்கு கொடுத்திருந்தார்.  ஆனால் யோவான் என்பவர் மரிக்காமல் பரலோகம் எறிசென்ற  எலியாவின் முழுநிலை அல்ல! (தேவன் "மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாக(எண்:16:11 இருப்பதால் அவரால் அவ்வாறு செய்யமுடியும்.
 
மரூரூப மலையில் நடந்த சம்பவமும் அதை நமக்கு நிரூபிக்கிறது   
 
மறுரூப மலையில் இயேசுவை  மோசேயும் எலியாவும் சந்திக்கின்றனர். ஒருவளை யோவானாக வந்திருந்தவர்தான் எலியா என்றால், அங்கு மோசேயும் யோவனும்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் பழைய நிலையிலேயே  எலியா அங்கு தோன்றுகிறார். எனவே அவர் இன்னும்   மல்கிய 4:5 ல சொல்லபட்டதை நிறைவேற்ற வரவில்லை என்றே நான் கருதுகிறேன்.   
 
ஆனால் எலியாவின் ஆவியும் பெலமும் யோவானுக்கு அளிக்கப்பட, அவன்  தேவனுக்கு வழியை ஆயத்தபடுத்தும் தன்னைபற்றிய தீர்க்க தரிசனத்தை நிறை வேற்றினார். அவனுள் இருந்து கிரியை செய்த எலியாவின் ஆவியின்  பெலத்தை  அறிந்த இயேசு அவனை "எலியா" என்று குறிப்பிட்டார் என்பதே எனது கருத்து..
 
எலியா மரிக்காமல் அப்படியே பரலோகம் ஏறி சென்றதால் அவன் இன்னொரு முறை பூமிக்கு வந்து மரிததே ஆகவேண்டும். அது கர்த்தருடைய  சங்காரத்தின் நாளுக்கு முன்னதாக இருக்கவேண்டும்.    
 
வெளிப்படுத்தின விஷேஷம்  சொல்லும்     
 
வெளி 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்
 
என்ற வசனத்தில் ஒருவர் எலியாவாக இருக்க வாய்ப்புண்டு!  
 
(இவைகள் வேதத்தை ஆராய்ந்ததில் உருவான எனது சொந்த கருத்து)

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 
Good work Sundar. Thank you.

__________________

வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 
மத்தேயு 11:14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.

sundar  wrote .....
_____________________________________________________________________________________
அதாவது வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தமாய் அனுப்பபட்ட யோவானுக்கு கொடுக்கப்பட்டதோ "எலியாவின் ஆவியும் பெலமும்". யோவானுக்கு தான் "வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தம்" என்பது தெரிந்தது, ஆனால் "ஆவிக்குரிய  கண்ணுடன் பார்த்த இயேசுவுக்கு அவனிடம் எலியாவின் ஆவி பெலம்"  இருப்பது  தெரிந்தது. எனவே இயேசு அவனை எலியா என்றார். அதாவது எலியாவை தேவன் அப்படியே திரும்ப அனுப்பாமல், வழியை ஆயத்தபடுத்தும பணிக்கு  அவனது ஆவியையும் பெலத்தையும்  யோவானுக்கு கொடுத்திருந்தார்.  ஆனால் யோவான் என்பவர் மரிக்காமல் பரலோகம் எறிசென்ற  எலியாவின் முழுநிலை அல்ல! (தேவன் "மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாக(எண்:16:11 இருப்பதால் அவரால் அவ்வாறு செய்யமுடியும்.
____________________________________________________________________________________
 
சகோ : சுந்தர் அவர்களே நீங்கள் யோவானை எலியாவின் முழு நிலை  அல்ல எலியாவின் ஆவியும் பலனும் யோவானுக்குள் இருந்தது என்று சொல்கின்றீர்கள் எனக்கு ஒரு சிறு சந்தேகம்
 
நீங்கள் சொன்னது போலவே
 
sundar  wrote 
_______________________________________________________________________
மரூரூப மலையில் நடந்த சம்பவமும் அதை நமக்கு நிரூபிக்கிறது  
______________________________________________________________________
 
ஆனால் யோவான் தான் முழு நிலையாகிய எலியா  என்று தெரியவரிகின்றது
 
எப்படியெனில்
 
மத்தேயு : 17
 
3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள் 
 
சீஷர்களுக்கு  காணபட்டார்கள்  அவர்கள் பார்த்து பயந்து விழுந்தார்கள்
 
அப்பொழுது இயேசு அவர்களை பார்த்து சொல்கின்றார்
 
மத்தேயு : 17
 
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்
 
அதாவது நான் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் நீங்கள் பார்த்ததை யாரிடமும் சொல்லாதே என்று சீஷர்களுக்கு கட்டளையிடுகின்றார்
 
இயேசு நான் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் என்று சொன்ன உடனே சீஷர்கள் அவரிடம் கேட்கின்றார்கள்  
 
மத்தேயு : 17
 
10 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்
 
சீஷர்கள் யேசுவிடம் என்ன கேட்கின்றார்கள் என்றால்
 
மல்கியா 4:5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்
இதை தான் சீஷர்கள்  யேசுவிடம் கேட்க்கின்றார்கள்

மத்தேயு : 17
 
11 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்
 
மத்தேயு : 17
 
12 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
 
மேலே உள்ள வசனமும் கிலே உள்ள வசனமும் யோவான் தான் எலியா என்று திட்ட தெளிவாய் தெரிகின்றது
 
எலியாவின் ஆவி, எலியாவின் பெலன் என்று எந்த ஒன்றும் சந்தேகத்துக்குரியது போல இங்கு வரவில்லை
 
மத்தேயு : 17
 
13 அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்
 
sundar  wrote ...
__________________________________________
(இவைகள் வேதத்தை ஆராய்ந்ததில் உருவான எனது சொந்த கருத்து)
_____________________________________________________________________________
 
எனக்கும் இவைகள் வேதத்தை ஆராய்ந்ததில் உருவான எனது சொந்த கருத்து
 
மற்ற சகோதரர்கள் கருத்தை பார்க்க ஆசையாய் இருக்கின்றேன்
 
ஆனால் உண்மை எதுவென்று இன்னும் தெரியவில்லை...........

-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 15th of September 2011 08:00:16 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 
மல்கியா 4:5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

இங்கு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் இயேசு கிறிஸ்து  பூமியில் பிறந்தபொழுது

லூக்கா : 2

10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

14.உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

இயேசு கிறிஸ்து பூமிக்குள் பிறந்த  நாளை தூதர்கள்

 10 ம்  வசனத்தில் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி என்றும்

14 ம்  வசனத்தில் பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்கின்றார்கள் 

மேலே சொன்ன வசனத்தின் படி பார்த்தால்  எலியா இங்கு வரவேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் அவன் வரவேண்டிய நாள் பெரிதும் பயங்கரமுமான  நாள் என்று வேதம் குறிப்பிடுகின்றது

மல்கியா 4:5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

ஆனால் இயேசு கிறிஸ்து வந்த நாளையோ சந்தோஷமான நாள் என்று மனிதர்கள் அல்ல தேவ துதர்கள் சொல்கின்றார்கள்

sundar  wrote  :
___________________________________________________________________
இம்மூன்றில் முதல்  இரண்டு வசனங்களில் எலியாவின் பெயர்  குறிப்பிடப்படாமலும்
மூன்றாம் வசனத்தில் அவன் பெயர் குறிப்பிடப் பட்டும் சொல்லப்பட்டுள்ளது. அதானால் என்னை பொறுத்தவரை எலியாவின் பணி இரண்டு தவணைகளில் நடைபெறும் ஒன்றாக இருக்கிறது ஓன்று ஆவிக்குரிய பணி இன்னொன்று மாம்சத்துக்குரிய பணி. 
அதாவது வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தமாய் அனுப்பபட்ட யோவானுக்கு கொடுக்கப்பட்டதோ "எலியாவின் ஆவியும் பெலமும்". யோவானுக்கு தான் "வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தம்" என்பது தெரிந்தது, ஆனால் "ஆவிக்குரிய  கண்ணுடன் பார்த்த இயேசுவுக்கு அவனிடம் எலியாவின் ஆவி பெலம்"  இருப்பது  தெரிந்தது. எனவே இயேசு அவனை எலியா என்றார். அதாவது எலியாவை தேவன் அப்படியே திரும்ப அனுப்பாமல், வழியை ஆயத்தபடுத்தும பணிக்கு  அவனது ஆவியையும் பெலத்தையும்  யோவானுக்கு கொடுத்திருந்தார்.  ஆனால் யோவான் என்பவர் மரிக்காமல் பரலோகம் எறிசென்ற  எலியாவின் முழுநிலை அல்ல! (தேவன் "மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாக(எண்:16:11 இருப்பதால் அவரால் அவ்வாறு செய்யமுடியும்.
 
வெளி 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்
 
என்ற வசனத்தில் ஒருவர் எலியாவாக இருக்க வாய்ப்புண்டு!  
_______________________________________________________________
 
சகோ:சுந்தர் அவர்களே நீங்கள் சொல்லியுள்ள  கருத்தையே  நான்  எற்றுகொள்கின்றேன்
 
இந்த பகுதியை  பற்றி நான்  வேதத்தை தியானிக்கும் பொழுது உங்கள் கருத்துதான் சரியானது என்று நான் அறிந்துகொண்டேன்

-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 20th of September 2011 07:14:09 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard