இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தன் பார்வைக்கு நல்லவனெல்லாம் தேவனின் பார்வையில்..???


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தன் பார்வைக்கு நல்லவனெல்லாம் தேவனின் பார்வையில்..???
Permalink  
 


I சாமுவேல் 16:7; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்!

எனது இந்து  நண்பர் ஒருவரிடம்  நீண்டநாளாக ஆண்டவரை பற்றி எடுத்து சொல்லி இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தி வந்தேன். அவரும் "ஆண்டவர் எனக்கு ஒரே ஒருமுறை  "நான்தான் கடவுள்" என்று லேசாக தெரியப்படுத்தினால் கூட போதும் நான் உடனடியாக அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்" என்று சொல்லிவந்தார். 
 
இந்நிலையில் கடந்த வாரம்  என்னோடுகூட சபைக்கு வந்திருந்த அவரிடம் "நீ உடனடியாக இயேசுவை ஏற்றுக்கொள் இல்லேயேல் நீ மரித்தால் பாதாளம்போக நேரிடலாம்" என்று எச்சரித்தேன். ஆனால் மிகுந்த நீதி நேர்மையுள்ள அவரோ, "நான் என்னுடைய வாழ்வில் முடிந்த அளவு நீதியாக நடக்கிறேன். யாரையும்  ஏமாற்றுவதோ, திருட்டுதனமோ எந்த  ஒரு கெட்டபழக்கமோ என்னிடம் கிடையாது. என்னை பற்றி அந்த கடவுளுக்கு நன்றாக தெரியும். என்னிடம்வந்து ஒரே ஒருமுறை "நான்தான் உண்மை கடவுள்" என்னை ஏற்றுக்கொள் என்று சொல்லகூடாதா?"என்ற கேள்வியை முன்வைத்தார். அத்தோடு "எந்தஒரு அனுபவமும் இல்லாமல் வெறும் விசுவாசத்தில் மட்டும் நான் இயேசுவை ஏற்றுக் கொண்டால் என்னால் உறுதியாக நிலை நிற்கமுடியாது உனக்கு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தினார். எனவேதான் நீ  இவ்வளவு உறுதியாக ஆண்டவரை பின்பற்றுகிறாய். அவரின் அன்பு பற்றி என்னிடம் சொல்கிறாய். பவுல் என்பவருக்கு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தினார் அவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அவருக்கு அர்ப்பணித்தார். அதேபோல் நானும் உறுதியாக ஆண்டவரை பின்பற்றவேண்டுமெனில்  எனக்கும் அவர் தன்னை  வெளிப்படுத்த வேண்டும்" என்றும் அவர் ஒரேஒரு முறைமட்டும்  எனக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னை வெளிப்படுத்துவாராகில்  நான் அவரை உடனே ஏற்றுக் கொள்வேன். மற்றபடி  அனுபவபூர்வமாக உண்மை எதுவென்று அறியாமல்  நான் தற்ச்சமயம் என் பிறப்பின் அடிப்படையில் நம்பிக்கொண்டு இருக்கும் சாமிகளை எப்படி உடனடியாக தள்ளமுடியும்.  என்று பேசிக்கொண்டு இருந்தார்.
  
யார் யாருக்கெல்லாமோ தன்னை வெளிப்படுத்திய ஆண்டவரிடம்,  மிகவும் நேர்மையான நடத்தையுள்ள அந்த நண்பனுக்கு ஒரே ஒருமுறை மட்டும் தம்மை வெளிப்படுத்தும்படி நானும் பலமுறை ஆண்டவரிடம் மன்றாடிவிட்டேன் ஆனால் எந்த பலனும் இல்லை.
 
நானும் ஆண்டவரை ஏற்றுக்கொள்வதன் உடனடிஅவசியத்தையும் நமது பாவத்தின் தன்மையையும் எல்லாம் மிகவும் விளக்கமாக எடுத்து சொல்லிவிட்டேன் அவரும் நான் சொல்லும்  எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார். ஆனால் உண்மையை நான் அனுபவபூர்வமாக அறியும்வரை  ஆண்டவரை ஏற்ப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார்.
 
கடந்த ஞாயிறு சபைக்குவந்திருந்த அவரிடம் மீண்டும் ஒருமுறை ஆண்டவரை பற்றி சொல்லிவிட்டு "ஆண்டவரே நான் இவ்வளவு மன்றாடி கேட்டும் நீர் ஏன் அவருக்கு உண்மையை உணர்த்த தயங்குகிறீர்? எந்தகடவுளையும் நம்பாத எனக்கு
நீர்தானே  உண்மையை உணர்த்திநீர், அவன் மிகவும் நல்லவன் அப்படியொருவன் பாதாளம் போவதை என்னால் தாங்கமுடியாது. தயவு செய்து அவனுக்கு நீர்தான் உண்மை தெய்வம் என்பதை உணர்த்தும்  அல்லது ஏன் அவனுக்கு உம்மை  வெளிப்படுத்தவில்லை என்ற காரனத்தயாவது எனக்கு தெரிவியும் " என்று ஆண்டவரிடம்  பலவிதமாக புலம்பியவாறு  வீட்டுக்கு போய்கொண்டு இருந்தேன். 
  
அப்பொழுது, அவனால் என் ஆண்டவரை இன்னும் அறியமுடியவில்லை என்பதற்கு ஆண்டவர் எனக்கு தெரிவித்த சில உண்மைகளைஇங்கு எழுதினால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன் தொடர்ந்து பார்க்கலாம்.......     


-- Edited by SUNDAR on Tuesday 22nd of March 2011 03:44:10 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
RE: தன் பார்வைக்கு நல்லவனெல்லாம் தேவனின் பார்வையில்..???
Permalink  
 


 sundar wrote :
__________________________________________________________
அப்பொழுது, அவனால் என் ஆண்டவரை இன்னும் அறியமுடியவில்லை என்பதற்கு ஆண்டவர் எனக்கு தெரிவித்த சில உண்மைகளைஇங்கு எழுதினால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன் தொடர்ந்து பார்க்கலாம்.......     
______________________________________________________________________________
 
 
சகோதரரே பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லிவிட்டு பாதியிலேயே நிறுத்தி விட்டீர்களே
 
 
இந்த பதிவை தொடரும் படி அன்புடனும் ஆவலுடனும் 
கேட்டுகொள்கின்றேன்....


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard