இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெளிப்படுத்தின விசேஷதின் விளக்கமும், சுருக்கமும். (re -TL )


இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
வெளிப்படுத்தின விசேஷதின் விளக்கமும், சுருக்கமும். (re -TL )
Permalink  
 


வேதத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றும் புரிந்துகொள்ளுவதற்கு கடினமான ஒரு புத்தகமல்ல.அதன் சீரான அமைப்பை மட்டும் நாம் அறிந்துகொண்டாலே இன்னும் ஆழமாக அதை நாம் படிக்கலாம்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ”கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும்” காட்டிக்கொடுக்கிறார்.(வெளி:1:19). அதாவது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கிறார்

அவர் கண்டவை என்ன? அவை முதலாம் அதிகாரத்தில் வருகிறது.
சீஷனாகிய யோவான், மரித்து உயிரோடெழுந்த இயேசுவை அவர் மகிமையிலும் வல்லமையிலும் காண்கிறார்.இது கடந்தகாலம்.

இருக்கிறவை என்ன? அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் வருகிறது.போதகரான யோவான் தன் சபைகளுக்கு கடிதங்களை எழுதுகிறார். இது சபையின் காலம்.ஏறத்தாழ கிபி 33ல் தொடங்கி இன்றுவரைக்கும் அது நீடிக்கிறது. சபை இரகசிய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படும் வரை அது தொடரும்.இது நிகழ்காலம்.

இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கப்போகிறவை என்ன?
நான்காம் மற்றும் ஐந்தாம் அதிகாரத்தில் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையை நாம் பரலோகத்திலே காணலாம். ஏழு வருட காலம் இது நீடிக்கும்.

அதே வேளை பூமியிலே முதல் மூன்றரை வருட உபத்திரவ காலமும் பின்பு இன்னும் மூன்றரை வருட மகா உபத்திரவகாலமும் நடைபெறும்.அதுவே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலம்.இதை ஆறாம் அதிகாரம் முதல் பத்தொன்பதாம் அதிகாரம் வரை நாம் காணலாம்.

அந்த ஏழு வருட முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறும். இஸ்ரேலுக்கு எதிராக வரும் அர்மகெதோன் யுத்தத்தில் கர்த்தர் வெற்றி சிறப்பார், சாத்தான் பாதாளத்திலே அடைக்கப்படுவான். இயேசுகிறிஸ்து பூமியிலே ஆயிரம் வருடம் அரசாட்சியை செய்வார். இதை இருபதாம் அதிகாரத்தில் காணலாம்.

ஆயிர வருட முடிவில் சாத்தான் பாதாளத்திலிருந்து வெளியே விடப்படுவான். அவன் உலக ஜாதிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வர கோகு மாகோகு எனும் இறுதி யுத்தம் நடைபெறும். சாத்தான் எரிகிற நரகத்திலே தள்ளப்படுவான். இந்த பழைய வானமும் பூமியும் ஒழிந்துபோம்.

இருபத்தி ஒன்று மற்றும் இருபத்தி இரண்டாம் அதிகாரத்தில் புதிய வானம் புதிய பூமி உருவாக இனி அங்கே மரணமில்லை. கண்ணீர் இல்லை. என்றென்றும் கர்த்தரோடே கூட இருப்போம்.ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

(1 ) நாம் சந்தோசமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பது   நமக்கு எப்படித்  தெரியும்?
(2 ) வெளிப்படுத்தல் புத்தகத்தின்  மூலமாக சந்தோசத்தைக் கண்டடைய நாம் என்ன செய்ய வேண்டும்?

யோவானுக்கு  வெளிப்படுத்தின விசேஷம் - பைபளின் இந்தக் கிளர்ச்சியூட்டும்  புத்தகம் தெய்வீகப் பதிவை ஒரு  சந்தோஷகரமான  உச்சக்கட்டத்துக்கு கொண்டுவருகிறது. ஏன் நாம் ''சந்தோசகரமான'' என்று சொல்கிறோம்? ஆம், பைபளின் ஆசிரியர் ''சந்தோஷமுள்ள  கடவுளாக'' விவரிக்கப்படுகிறார். தம்மில் அன்புகூருகிரவர்களிடம் ''மகிமையான சுவிஷ்சத்தை''  இவர் ஒப்படைக்கிறார். நாமுங்கூட சந்தோசமுள்ளவர்களாக  இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எனவே வெளிப்படுத்தல் புத்தகம் ஆரம்பிக்கையில் நமக்கு இவ்வாறு உறுதியளிகிறது: 'இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்கிறவன் சந்தோசமுல்லவன்.'  அதனுடைய கடைசி அதிகாரமும் இப்படியாக நமக்கு சொல்லுகிறது: இந்தப் புஸ்தகச் சுருளில் உள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை கைக்கொள்ளுகிறவன் ......  சந்தோஷமுள்ளவன்''.


1 திமோத்தேயு 1 :11  ''
நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது:''


வெளிப்படுத்தல் 1 :3 '' இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது''.

வெளிப்படுத்தல் 22 :7 '' இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.''

வெளிப்படுத்தல் புத்தகத்தின் மூலமாக நாம் எப்படி சந்தோசத்தைக் கண்டடைகிறோம்? அதில் உள்ள உயிர்புள்ள அடையாளங்களுடைய அல்லது அறிகுறிகளுடைய பொருளைக் கண்டாராய்ந்து அதற்கிணங்க நடப்பதன் மூலமே நாம் அப்படிச் செய்கிறோம். கடவுளும் இயேசுகிறிஸ்துவும் தற்போதுள்ள பொல்லாத ஒழுங்குமுறையின் மீது நியாயத் தீர்ப்பை நிறைவேற்றி, அதை ''இனி மரணமுமில்லாமல் போகும் ''ஒரு புதிய வானத்தையும் ஒரு புதிய பூமியேஉம்'' கொண்ட ஒழுங்குமுறையாக மாற்றியமைக்கும் போது; கொந்தளிக்கும் மனிதவர்க்க சரித்திரம் விரைவில் அளிவுகுறிய உச்சக் கட்டத்தை அடையும்.

வெளி 21 : 1. பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை,

அப்படிப்பட்ட ஒரு புதிய உலகில் மெய் சமாதானத்தோடும் வாழ்வதற்கு நாம் எல்லோருமே விரும்புவோம் அல்லவா? நாம் கடவுளுடைய வார்த்தையே, வெளிப்படுத்தல் புத்தகத்தில் உள்ள இந்தக் கிளர்ச்சியூட்டும் திர்கதரிசனதோடு சேர்ந்து படிப்பதன் மூலம் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவோம்மானால், அதில் நாமும் வாழக்கூடும்.

பின்குறிப்பு: வெளிப்படுத்தல் அடுத்த அதிகாரங்களை பார்க்கமுன் நியாயதீர்ப்பு நாள்- அப்படி என்றால் என்ன?  என்பதை எனது அடுத்த பகுதியில் பார்த்துவிட்டு வெளிப்படுதலில் உள்ள முக்கிய அம்சங்களுக்கு செல்வோம்.
கேள்விகள் கேட்டு ஆராய்ந்து படித்தால் இன்னும் சுலபமாக விளங்கிக்கொள்ள முடியும்.... தொடரும்-- Edited by Roshan on Tuesday 5th of April 2011 01:14:55 AM

__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
RE: வெளிப்படுத்தின விசேஷதின் விளக்கமும், சுருக்கமும். (re -TL )
Permalink  
 


"மகா பாபிலோனை அடையாளம் காணுதல்"

வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள சில வார்த்தைகளை அப்படியே சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
வெளி 1 : 1 ''சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்''.


உதாரணத்துக்கு, நெற்றியில் ''மகா பாபிலோன்'' என்ற பெயர் எழுதப்பட்டு இருந்த ஒரு வேசியைப்  பற்றி வெளிப்படுத்துதல்  சொல்கிறது.  அந்த வேசி, 'கூட்டங்கள் மீதும் ஜாதிகள் மீதும்'  உட்கார்ந்து இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

வெளி 17 : 1 ,5 ,15   ''1. ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
5. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
15. பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.


இங்கே குறிப்பிட்டுள்ளபடி சொல்லர்த்தமான எந்தப் பெண்ணாலும் அப்படி உட்கார முடியாது; ஆக, மகா பாபிலோன் அடையாள அர்த்தமுடையவையாகவே இருக்கவேண்டும். அப்படியானால்,  அந்த வேசி எதற்கு அடையாளமாக இருக்கிறாள்?

அடையாளபூர்வமாக அந்தப் பெண், ''பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம்'' என்பதாக வெளிப்படுதல் 17 :18 விமர்சிக்கிறது. ''நகரம்'' என்ற வார்த்தை ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் தொகுதியையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த ''மகா நகரம்'' ''பூமியின்  ராஜாக்கள்'' மீது அதிகாரம் செய்வதால், மகா பாபிலோன் என்ற பெயருடைய அந்தப் பெண் மிகுந்த செல்வாக்குள்ள உலகளாவிய ஊர் அமைப்பாகத்தான் இருக்கவேண்டும். அதனால், மகா பாபிலோனை ஓர் உலகப் பேரரசு என்று மிகச் சரியாகவே நாம் அழைக்கலாம்.

எத்தகைய பேரரசு அது? 

அது ஒரு மதப் பேரரசு. இந்த முடிவுக்கு வர வெளிப்படுதல் புத்தகத்தில் உள்ள சில வசனங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன என்பதை அடுத்த பதிவில் கவனிப்போம் .......

வெளிப்ப 17 :1 ,2 ''1. ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
2. அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி'';

யாக்கோபு 4 :4 ''விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்''.

ஒரு பேரரசு என்பது அரசியல் பேரரசாகவோ, வர்த்தகப் பேரரசாகவோ, மதப் பேரரசாகவோ இருக்கலாம். மகா பாபிலோன் என்ற பெயருள்ள அந்தப் பெண் ஓர் அரசியல் பேரரசாக இருக்க முடியாது. ஏனெனில் ''பூமியின்  ராஜாக்கள்'' அதாவது இவ்வுலக அரசியல் அமைப்புக்கள், அவளோடு ''வேசித்தனம் பண்ணியதாக''  கடவுளுடைய வார்த்தை தெரிவிக்கிறது. வேசித்தனம் செய்தது இவ்வுலக ஆட்சியாளர்களோடு அவள் கூட்டுச் சேர்ந்து இருப்பதைக் குறிக்கிறது. அதோடு, அவள் ''மகாவேசி'' என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தையும் அது அளிக்கிறது.

வெளி 18 அதிகாரம்  3. அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.

9. அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,
10. அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
15. இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;
16. ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.
17. மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,

மகா பாபிலோன் ஒரு வர்த்தகப் பேரரசாகவும் இருக்க முடியாது. ஏனெனில் ''பூமியில் வர்த்தகர்'' அதாவது வணிக அமைப்புக்கள், அவளுடைய அழிவின் போது அவளுக்காகத் துக்கித்து அழுது கொண்டிருப்பார்கள். சொல்லப் போனால், ராஜாக்களும் வர்த்தகர்களும் மகா பாபிலோனை ''தூரத்திலிருந்து'' பார்த்துக் கொண்டிருப்பது போல விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, மகா பாபிலோன் என்பது ஓர் அரசியல் பேரரசும் அல்ல, வர்த்தகப் பேரரசும் அல்ல, ஆனால் அது ஒரு மதப் பேரரசு என்ற முடிவுக்கு வருவதே நியாயமானது.

**மகா பாபிலோன் எல்லா ஜாதிகளையும் தனது ''சூனியத்தால்'' மோசம் போக்கிறாள் என்ற வசனம், அவள் ஒரு மதப் பேரரசு தான் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது**.

வெளிப் 18 :23   '' விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே''.

எல்லா விதமான சூனிய வேலைகளும் மத சமந்தமானவை என்பதாலும், அவற்றிற்குப் பேய்கள் தான் காரணம் என்பதாலும் மகா பாபிலோன் ''பேய்களுடைய குடியிருப்பு''  என்று பைபிள் அழைப்பதில் ஆச்சரியமே இல்லை. ( வெளிப்  18 :2 /  உபாகமம் 18 :10 -12 ) இந்தப் பேரரசு  'தீர்க்கதரிசிகளையும்' 'பரிசுத்தவான்களையும்'' துன்புறுத்துவதன் மூலம் மெய் வணக்கத்தைச் தீவிரமாய் எதிர்த்து வருகிறது எனவும் விவரிக்கப் பட்டுள்ளது:

 வெளி 18: 24. தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.

உண்மையில், மெய் வணக்கத்தை மகா பாபிலோன் அந்தளவு அதிகமாக வெறுப்பதால், ''இயேசுவினுடைய மணவாட்டிகளை'' அவள் கொடூரமாகத் துன்புறுத்தி, கொலைகூட செய்கிறாள். வெளி 17 : 6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
ஆகையால், மகா பாபிலோன் என்ற பெயருள்ள அந்தப் பெண் பொய் மத உலகப் பேரரசே அடையாளப்படுத்துகிறாள். யேகோவா தேவனை எதிர்த்து நிற்கிற எல்லா மதங்களுமே அந்தப் பொய் மதங்களில் அடங்கும்...... __________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
வெளிப்படுத்தின விசேஷதின் விளக்கமும், சுருக்கமும். (re -TL )
Permalink  
 


சகோதரர் ரோஷான் அவர்களே வெளிப்படுத்துதல் விசேஷம்  குறித்த விளக்கமாகிய இந்தகட்டுரை அருமையாக இருக்கிறது ஆகினும் இது தங்கள் சொந்த கட்டுரையா  அல்லது மற்றவர்கள எழுதியது இங்கு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளதா?

காப்பி பேஸ்ட் செய்யும் பட்சத்தில் அது ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் எழுதியவர் பெயரை நிச்சயம் அறிய தாருங்கள்.   __________________


இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
RE: வெளிப்படுத்தின விசேஷதின் விளக்கமும், சுருக்கமும். (re -TL )
Permalink  
 


சகோதரர் இறைநேசன் அவர்களே,  பைபளில் உள்ள எசேக்கியேல், தானியேல், எரேமியா,  ஏசாயா மற்றும் வெளிப்படுத்தல் போன்ற  திர்கதரிசனங்களை ஆராய்ந்து பார்க்க, அறிய  முற்பட்ட நிமித்தமாக பல வேத வல்லுனர்கள் எழுதிய புத்தகங்களை அடிப்படையாக கொண்டே இந்த (அடிப்படை) தகவல்களை பெற்றேன்.  இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பதிவுகளே.  எனக்கு என்று சொந்த தளம் உண்டு. அதில் தீர்க்கதரிசனம் சம்மந்தமான முழுத்தகவலும் என் சொந்த அறிவிலே எழுதியது. நான் இந்த தளங்களில் பதிவது அனைத்தும் என் தளத்திலும் பதிந்துகொண்டு வருகிறேன். ''அந்த தளத்தின் பெயர் வேதமானாக்கர் ஐக்கிய சபை ஜெர்மனி''  என்ற பெயரல் உள்ளது. காலப் போக்கில் அந்த தளத்தை  எனது சொந்த விவாதத்துக்கு பயன்படுத்துவேன். நன்றி__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Roshan wrote:

சகோதரர் இறைநேசன் அவர்களே,  பைபளில் உள்ள எசேக்கியேல், தானியேல், எரேமியா,  ஏசாயா மற்றும் வெளிப்படுத்தல் போன்ற  திர்கதரிசனங்களை ஆராய்ந்து பார்க்க, அறிய  முற்பட்ட நிமித்தமாக பல வேத வல்லுனர்கள் எழுதிய புத்தகங்களை அடிப்படையாக கொண்டே இந்த (அடிப்படை) தகவல்களை பெற்றேன்.  இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பதிவுகளே.  


தங்களின் விளக்கத்துக்கு நன்றி சகோதரரே!  தாங்கள் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களை ஆராய்ந்து உண்மையை அறிந்து கொண்டுள்ளதால் எனக்கு தங்களிடம் இருந்து ஒரு சிறு விளக்கம் தேவைப்படுகிறது

அதாவது தேவன் ஆதியில் மனிதனை படைத்ததில் இருந்து முடிவு நிலை வரையிலான தேவனின் திட்டத்தை மிக சுருக்கமாக ஒரு  தனி பதிவில் தரமுடியுமா? (வசன  ஆதாரம்  இல்லை  என்றாலும்  பரவாயில்லை)     
 
அதாவது தேவன் மனிதனை படைத்த நோக்கம், பிசாசு எவ்வாறு உருவானது? தீமையை தேவன் ஏன் அனுமதித்தார் தேவனின் இறுதிதிட்டம் என்ன? து எவ்வாறு நிறைவேறும்?  அதில் ஒரு கிறிஸ்த்தவனின்  கடமை என்ன? என்பது போன்ற கருத்துக்களை சுருக்கமாக புரியும்படி தந்தீர்கள் என்றால் எம்போன்றவர்களுக்கு ஒரு முழுமையான கருத்தை அடைய  பயனுள்ளதாக இருக்கும் என்று  கருதுகிறேன்.
 
மனுஷன் பாவம் செய்தான் சாவு வந்தது என்ற கருத்து
சரியாக இருக்கலாம்  
 
ஆனால்  "மான்" "ஆடு" போன்ற  சாதுவான விலங்கை தேவன் ஏன் படைத்தார்?  மானை சிறுத்தை பிடித்து கொன்று தின்பதற்கும்  ஆட்டை மனுஷன் உயிரோடு வைத்து கழுத்தை அறுத்து கொல்வதற்கும் ஏற்புடைய சரியான காரணம் என்ன?
 
ஆட்டை ஒரு மட்டனாக பார்க்காமல் அதுவும்  மனிதனைப் போல வலியை உணரக்கூடிய ஒரு ஜீவன் என்ற நோக்கில் பார்த்து பதில் தாருங்கள்.  
 


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard