3 வயது குழந்தையும் தாயும் ஒரு லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிர் போய் இருந்க்கின்றது
ஒரு முறை யோசித்து பாருங்கள் அந்த 3 வயது குழந்தை எப்படி துடித்து இருக்கும்
ஐயோ அந்த குழந்தை மேல் அவ்வளவு பெரிய லாரி
ஏறும் பொழுது என்ன ஒரு கொடுமை பாருங்கள் நம்மால் யோசிக்க கூட முடியவில்லை
இன்னும் எத்தனை கொடூரமான சம்பவங்கள் இந்த பூமியிலே நடக்கின்றது
இதே சம்பவம் நம் குழந்தைக்கு நடந்து இருந்தால் நாம் எப்படி துடித்து இருப்போம்
சகோதரர் எட்வின் அவர்களே நம்மைப்போல ஒரு சிலர் மட்டும்தான் இதுபோன்று காரியங்களை யோசித்து குழம்பிகொண்டு இருக்கிறோம். அநேகர் இதெல்லாம்தான் தேவனின் சித்தம் என்றும், தேவனே சாத்தானை இதுபோலெல்லாம் செய்ய வைக்கிறார் என்றும் தீர்மானித்து எதைபற்றியும் கவலையின்றி இருக்கின்றனர்.
அனைத்துக்கும் அடிப்படை காரணகர்த்தாவாகிய தேவனை பற்றியே சரியாக அறியாதவர்களுக்கு எதை எழுதி என்னபயன் என்று தெரியவில்லை.
தேவனை "அனுபவபூர்வமாக" அறிவதற்கும் "அறிவுபூர்வமாக" அறிவதற்கு அனேக வேறுபாடுகள் உண்டு.
சாலமோன் தேவனை அறிவுபூர்வமாக அறிந்தவன் ஆனால் தாவீதோ தேவனை அனுபவபூர்வமாக அறிந்தவன். இருவருமே ஒரு நிலையில் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள் ஆனால் தாவீது தேவனின் இருதயநிலையை அறிந்திருந்ததால், ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடி மீண்டும் தேவனுடன் நல்லுறவை வளர்த்துகொண்டான். ஆனால் சாலமொனோ கர்த்தர் பல முறை எச்சரித்தும் மதியீனமாக நடந்துகொண்டான். அறிவை வைத்து வேத வசனத்தை ஆராய்ந்து தேவனை அறிந்துகொண்டவர்கள் ஏறக்குறைய சாலமோனை போலவே
பிரசங்கி 1:13வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
என்று சொல்லி தேவன்மேல் பழியை போட்டு காரியத்தை முடித்துவிடுவார்கள்.
ஆனால் தேவனை அனுபவபூர்வமாக அறிந்த தாவீது போன்றவர்களோ:
சங்கீதம் 32:7 ; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.) என்றும்