இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவஞ்செய்வதை நியாயப்படுத்த துணியும் கிறிஸ்த்தவ கூட்டம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பாவஞ்செய்வதை நியாயப்படுத்த துணியும் கிறிஸ்த்தவ கூட்டம்!
Permalink  
 


எபேசியர் 4:26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்
 
ரோமர் 6:15  நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.
 
என்பன போன்ற "பாவம் செய்யகூடாது" என்பதை திட்டமாகபோதிக்கும் வசனங்கள் பல  வேதாகமத்தில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் "நீங்கள் பாவம் செய்தாலும் குற்றமனசாட்சி  அடையாமல் பாவம் செய்யுங்கள்" என்னும் வசனம் வேதத்தில் எங்காவது இருக்கிறதா?    
 
இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்! ஆனால் கிறிஸ்த்தவர்கள் என்று தங்களை சொல்லிகொள்ளும் பல அதிமேதாவிகள்   "பாவம் செய்வதில் தவறில்லை, அனால் அந்த பாவத்தினிமித்தம் குற்ற மனசாட்சி  அடைவதுதான் தவறு" என்று எழுதுவதை பார்க்கும்போது மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது.
 
தேவன் பாவத்தை எவ்வளவு அதிகமாக வெறுக்கிறார் என்பதை  அறிந்துகொள்ள வேதம் முழுவதுமே அவர் பாவத்துக்கு எதிராக பேசியிருக்கும் அனேக வசனங்களை பார்க்க முடியும். இந்நிலையில் இதுபோன்ற காரியங்களை எழுதி
பாவம் செய்தலை இலகுபடுத்தி அநேகருக்கு இடரலை ஏற்ப்படுத்தும்  சிலரின் தவறான   புரிதலுக்கு நாம் பதில்சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
 
ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது  தேவன் அவர்களை வெறுக்காமல் தேடிவந்தது அழைத்தது உண்மை! அது தேவனின்முடிவில்லா இரக்கத்தினாலும் மனுஷன்மேல் அவர் வைத்த அன்பினிமித்தமாகவும்  நடந்ததேயன்றி,  தேவன் அவர்கள் செய்த பாவத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லிவிட முடியாது. 
 
சிலர் சொல்லுவதுபோல் ஆதாம் தேவனுக்கு பயந்து ஓடி ஒழிந்ததையும், அத்தி இலை என்னும் சுய நீதியால் தங்களை மறைத்துக் கொள்ள பார்த்ததுதும்  தான் தவறு என்று தேவன் எங்கும் சொல்லவில்லை. மாறாக ஆதாம்எவளை எதற்க்காக தண்டிப்பதாக தேவன் சொல்கிறார் என்று வசனம் தெளிவாக சொல்கிறது?
 
ஆதி 3:17. பின்பு அவர்(தேவன்)  ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
 
இங்கு ஆதமின் பாவம் என்னவென்பதை தேவன் மிக தெளிவாக சொல்லியே அதற்க்கு தண்டனை கொடுக்கிறார். அவன் செய்ததவறு "தேவன் புசிக்கவேண்டாம் என்று விலக்கிய விருட்சத்தின் கனியை புசித்தது"தானேயன்றி வேறு எந்த காரியத்தையும் தேவன் தவறு என்று சொல்லவில்லை என்பதை அறியவேண்டும். நாமாக தீர்மானித்து  "அவன் சுய நீதியால் தன்னை மறைக்கபார்த்தான்" அதுதான் தேவன் பார்வைக்கு தவறானது என்றுசொல்லி நாம் தேவனாக முயற்ச்சிக்க கூடாது.
 
சுருங்க சொல்லின் "ஆதாம் தேவனின் வார்த்தையை மீறிநடந்தான் அது பாவமாகி சாபத்தையும் தண்டனையையும் பூமியில் கொண்டு வந்தது"  அதை நிவர்த்தி செய்ய ஒரேவழி "தேவனின் வார்த்தைகள்/கட்டளைகளுக்கு கீழ்படிவதேயன்றி" அவர் வார்த்தையை  மீறி நடந்துவிட்டு குற்ற மனசாட்சி இல்லாமல் வாழ்வது அல்ல"   அவ்வாறு பாவத்தை செய்துவிட்டு குற்றமனசாட்சியில்லாமல் வாழ்வது பாவத்தை குறித்த சொரணை இல்லாமல்  செய்த பாவத்தை மறைப்பதுபோன்ற பெரிய  பெரிய பாவமாகிவிடும்.  
 
 
நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்
 
பேதுரு ஆண்டவராகிய இயேசுவை தெரியாது என்று சொல்லி மறுதலித்தான் ஆனால் தான்செய்த தவறால் குத்தப்பட்டு மனம் கசந்து அழுதபோதுதான் அவன் தேவனோடு மீண்டும் ஒப்புரவாக முடிந்தது. 
 
தாவீது கொடிய பாவம் செய்தவன்தான் ஆனால் அவனும்  தான் செய்த பாவத்தினால் மிகவும் குற்றமனசாட்சியடைந்து தேவனின் பாதத்தில் அழுது கண்ணீர் வடித்து தேவனோடு ஒப்புரவானான்.  
 
பாவம் செய்தால் அதற்காக மனஸ்தாபபட்டு அறிக்கை செய்து விட்டுவிடுவதுவே கிறிஸ்த்தவம் காட்டும் வழியேயன்றி, "பாவம் செய்துவிட்டு குற்றமனசாட்சி இல்லாமல் இரு" என்று வேதம் எங்கும் சொல்லவில்லை. இதுபோன்ற போதனைகள் "செய்யும் பாவங்களை விடமுடியாமல் நியாயப்படுத்த துணியும் மனுஷர்களை தன்னுடய கட்டுபாட்டிலேயே  வைத்திருக்க, ஆதிமுதல் பாவம் செய்ய தூண்டிவரும் பிசாசின் தந்திரமான  சூழ்ச்சியேயன்றி வேறல்ல!    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SUNDAR wrote:
கிறிஸ்த்தவர்கள் என்று தங்களை சொல்லிகொள்ளும் பல அதிமேதாவிகள்   "பாவம் செய்வதில் தவறில்லை, அனால் அந்த பாவத்தினிமித்தம் குற்ற மனசாட்சி  அடைவதுதான் தவறு" என்று எழுதுவதை பார்க்கும்போது மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது.
  

குற்ற  மனசாட்சியை கொண்டு வருவது சாத்தானா அல்லது தேவனா?

யூதாஸ் கூட இயேசுவை காட்டிகொடுத்தபின்னர் குற்ற மனசாட்சிக்குள் கடந்து சென்றான் என்றும் அந்த மன சாட்சியின் குரலை சகிக்க முடியாமலேயே நான்று கொண்டு செத்தான் என்றும் எண்ண தோன்றுகிறது.
 
மத்தேயு 27:3. அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
5. அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
 
இங்கு குற்றமனசாட்சியை கொண்டு வந்தது  சாத்தான் போலவே தோன்றுகிறது.
 
இன்றும் கூட நம்முடைய மனதில் சில நேரங்களில் "ஏய் நீ அந்த தப்பை செய்துவிட்டாயே, ஏய் நீ இந்த தவறை செய்து விட்டாயே" என்று குற்றம் கண்டுபிடித்து குறை சொல்லி இறைவனை விட்டு நம்மை பிரிக்க முயலும் ஒரு குரலை சில நேரங்களில் நம் மனதில் கேட்க முடியும். அது  நிச்சயம் சாத்தானின் சத்தம் என்றே நான் எண்ணுகிறேன்.    
 
"இறைவனுக்கு விரோதமாக நீ பாவம் செய்துவிட்டான் எனவே நீ இறைவனுக்கு அருவருப்பானாய்" என்பதுபோல்
சொல்லி, அது ஆண்டவரைவிட்டு நம்மை பிரிக்கவே நினைக்கிறது.
 
இயேசு நம்முடைய எல்லா பாவங்களுக்காகவும் மரித்திருக்கும் நிலையில் நாம் குற்றமான சாட்சி அடைய வேண்டியது அவசியமா? 
 
(நேரம் கிடைக்கும்போது பதில் தரலாம்)
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: பாவஞ்செய்வதை நியாயப்படுத்த துணியும் கிறிஸ்த்தவ கூட்டம்!
Permalink  
 


இறைநேசம் எழுதியது:

//இயேசு நம்முடைய எல்லா பாவங்களுக்காகவும் மரித்திருக்கும் நிலையில் நாம் குற்ற மனசாட்சி அடைய வேண்டியது அவசியமா? //

நிச்சயமாக அவசியம் சகோதரரே!

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என இயேசு சொன்னதை அறிவோமல்லவா? குற்றமனசாட்சி இல்லாமல் நம் பாவங்களைக் குறித்து எப்படி துயரப்படமுடியும்? எனவே குற்ற மனசாட்சி அவசியந்தான்.

ஆனால் குற்ற மனசாட்சி உள்ள நாம், ஆதாமைப் போல் தேவ சமூகத்தைவிட்டு விலகி ஓடாமல், தாவீதைப் போல தேவனிடம் வந்து நம் பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும். அப்போது மன்னிப்பின் நிச்சயத்தைப் பெறுகிற நாம், குற்ற மனசாட்சியிலிருந்து விடுபடுவோம்.

1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

anbu57 wrote:
1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

மன்னிப்பவர் யாருங்க ஐயா, இயேசுகிறிஸ்துவா, பிதாவாகிய தேவனா..? இயேசுகிறிஸ்து மன்னிக்கிறவர் என்றால் அவர் எந்த ஸ்தானத்திலிருந்து மன்னிக்கிறார் என்பதையும் சற்று விளக்குங்களேன்... __________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

HMV wrote:
//மன்னிப்பவர் யாருங்க ஐயா, இயேசுகிறிஸ்துவா, பிதாவாகிய தேவனா..? இயேசுகிறிஸ்து மன்னிக்கிறவர் என்றால் அவர் எந்த ஸ்தானத்திலிருந்து மன்னிக்கிறார் என்பதையும் சற்று விளக்குங்களேன்...//

சகோ.HMV அவர்களே! மன்னிப்பவர் யாராயிருந்தால் என்ன? நமக்குத் தேவை மன்னிப்பு.

சகல அதிகாரமும் உடையவர் பிதாவாகிய தேவனே! அவர் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் இயேசுவுக்குக் கொடுத்துள்ளதா மத்தேயு 28:18 கூறுகிறது. குறிப்பாக மன்னிக்கும் அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்தேயு 9:6 கூறுகிறது. மாத்திரமல்ல, இயேசுவின் சீஷருக்கும்கூட மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு கொடுத்துள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.

யோவான் 20:23  எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்.

இப்படியிருக்க, நம்முடைய பாவங்களை யார் மன்னித்தால் என்ன? ஆகிலும், உங்கள் கேள்வி தொடர்பான வேறு சில வசனங்களையும் தருகிறேன்.

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

1 யோவான் 2:1 ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

அடுத்து, “இயேசுகிறிஸ்து மன்னிக்கிறவர் என்றால் அவர் எந்த ஸ்தானத்திலிருந்து மன்னிக்கிறார்” எனும் கேள்விக்கு வருவோம்.

இம்மாதிரி கேள்விகளெல்லாம் நமக்குத் தேவையில்லை என்பது எனது கருத்து. மேலும் இக்கேள்விக்கும் இத்திரிக்கும் சம்பந்தமில்லை என்பதால், உங்கள் கேள்வியை தனி திரியில் கேளுங்கள். யாரேனும் பதில் சொன்னால் அறிந்துகொள்ளுங்கள்.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

HMV wrote:
anbu57 wrote:
1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

மன்னிப்பவர் யாருங்க ஐயா, இயேசுகிறிஸ்துவா, பிதாவாகிய தேவனா..? இயேசுகிறிஸ்து மன்னிக்கிறவர் என்றால் அவர் எந்த ஸ்தானத்திலிருந்து மன்னிக்கிறார் என்பதையும் சற்று விளக்குங்களேன்... 


இறைவன் மன்னிப்பதற்கு தயை பெருத்தவராக இருப்பதாலும் தமக்கு பயப்படுகிறவர்களுக்கு மன்னிப்பை தருகிறவராகவும் இருப்பதாலேயே அந்த மன்னிப்பை இயேசுவின் மூலம் அருளும்படிக்கு தன்னிலிருந்து இயேசுவை உண்டாக்கினார்.

ஏசாயா 55:7 துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்
 
சங்கீதம் 130:4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
 
அதாவது மனுஷ குமாரனாகிய இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம்  உண்டு.    
 
மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
 
அந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தவர் இறைவன்!
  
மத்தேயு 9:8 ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
 
மேலும் அந்த அதிகாரத்தை இயேசு தன்னிடம் மாத்திரம் வைத்து கொள்ளாமல் சீஷர்களுக்கும்  கொடுத்துள்ளார்
 
யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்
 
இவ்வாறு இறைவனின் மன்னிக்கும் தன்மையானது  இயேசு
வழியாக மனுஷர்களை வந்து அடைகிறது.


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard