இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெறி நாய்கள் ஜாக்கிரதை!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
வெறி நாய்கள் ஜாக்கிரதை!
Permalink  
 


எனக்கு சுமார் 10-12 வயது இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றுண்டு எனது நெருங்கிய உறவினராகிய   நடுத்தர வயது மாமனார் ஒருவர் வயலுக்கு செல்லுகையில் ஒரு வெறிநாய் கடித்து விட்டது. அவரை எவ்வளவோ கவனித்து  பார்த்தும் பயனில்லாமல் இறுதியில் நாய் குறைப்பதுபோலவே குறைத்து மரித்து
போனார். பிள்ளைகள் இல்லாது இருந்ததால் கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் எனது அத்தையும் சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டார்கள்.
 
ஒரு அற்ப  நாயால் ஒரு குடும்பமே அழிந்துபோன  இச்சம்பவங்களை நான் அறிந்திருந்ததால், எனக்கு சிறுவயதிலிருந்தே  நாயை குறித்து எனக்கு மிகுந்த பயம் உண்டு. அதை கண்டாலே பிடிக்காது. (நாய் போன்று அதிகம் குறைக்கும்/ உறுமும் மனிதர்களயும்தான்)
  
இப்பொழுது எனக்கு நாயை பார்த்து பெரிய பயமில்லை என்றாலும், இன்றும் கூட அப்படி தெருவில் அலையும் நாய்களை கண்டால் நான் சற்று  தூர விலகி சென்றுவிடுவேன். எதற்கு அதன் பக்கத்தில் போகவேண்டும் அதற்க்கு கோபத்தை ஏன் ஏற்ப்படுத்த வேண்டும்? 
 
அதுபோல் மாறுபாடாக நடக்கும் சில மாய்மால காரர்களிடமிருந்தும்  நான் எப்பொழுதும் விலகியிருக்கவே விரும்புகிறேன்.
 
நீதிமொழிகள் 22:5 மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்.
 
நான் இவ்வாறு நாயை பார்த்து தூர விலகி போவதால் ஒருவேளை அந்த நாய் என்னை பார்த்து  இவ்வாறு நினைத்து கொள்ளலாம் "இவன் நம்மைவிட பெரிய மனுஷனாக இருக்கிறான்! என்னை பார்த்து பயந்து இவ்வளவு தூர விலகி போகிறானே! ஆஹா! என்னை கண்டு மனுஷர்களும் பயப்படுகிறார்கள்! என்ற  மமதை சில நாய்களுக்கு  வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. அதன் குதறும் குணமறிந்தே அதைவிட்டு விலகிபோகிறேன்.
 
ஆனால் இரக்கமற்ற ஒருவன், ஒரேஒரு கல்லை தூக்கி வேகமாக எரிந்ததில் ஒரு நாயின் கால் துண்டாக  ஒடிந்து தொங்கிபோனத்தை நான் பார்த்திருக்கிறேன்.
 
எனவே  ஒரு சம்பவத்தை வைத்தோ அல்லது ஒருமனிதனின் தன்மையை வைத்தோ அடுத்தவரை எடைபோடுதல் ஆகாது. எல்லோரும் என்னைபோல  நாய்க்கு பயந்தவர்களாக இருக்கமாட்டார்கள். எப்போதாவது சிலர் எழும்பி நாயை காலை ஓடித்து விடலாம் என்பதை அறியவேண்டும். நாயின் குணம் குறைப்பதுதான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை! என்றாலும் எந்த தராதரமும் இல்லாமல் அடுத்தவர்கள் எல்லோரையும் பார்த்து அடிக்கடி  குறைக்கும் நாய்கள், ஆண்டவரிடம் அடிபட நேரிடும் என்பதை அறிந்து  தங்கள் வாய்களை சற்று அடக்கியிருப்பது  நல்லது! 
 
தன்  எஜமானர்களுக்காக  தன்னை அர்ப்பணித்து  அந்நியர்களை கண்டால் ஆதங்கத்துடன்  குறைக்கும் அருமையான  நாய்களை பற்றி இங்கு நான் எழுதவில்லை. செய்த நன்றியை என்றும் மறவாமல் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் பாசத்துடன்  வாலை ஆட்டும் பல நன்றியுள்ள நாய்களை பற்றியும் இங்கு நான் எழுதவில்லை! 
 
கொடிய வைரஸ் கிருமி என்னும் பொல்லாத  சாத்தானால் பாதிக்கபட்டு  கண்டவரையும் கடிக்க துணிந்து, எவரை கடிக்கலாம் எவரை விரட்டலாம் என்று ஏங்கி தறிகெட்டு அலையும் சில வெறிநாய்களை பற்றியே இங்கு எழுதுகிறேன். அந்நாய்களுடன்   சாவகாசம் வைத்துகொண்டாலே அதனிடமுள்ள வைரஸ் கிருமிகள் நல்லவர்களையும் தொற்றிகொள்ளும் அவர்களும் குறைக்க ஆரம்பிபார்கள் என்பதையும்  நாம் கண்கூடாக அறிய முடியும்!


-- Edited by SUNDAR on Monday 13th of June 2011 03:54:39 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard