இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்!
Permalink  
 


(இந்த கட்டுரையானது "இயேசுவே பிதாவாகிய தேவன்" என்ற ஒருத்துவ கொள்கையுடைய சகோதரர்களுக்காக எழுதப்பட்டது)
 
நான்  ஒருத்துவமாகிய "தேவன் ஒருவரே" என்ற கொள்கை  உடையவனும்  அதன் அடிப்படையிலேயே கருத்துக்களை தருகிவனாகவே இருக்கிறேன். அனால் என்னுடைய  கருத்து இவ்வாறு உள்ளது 
 
                                              |  கர்த்தராகிய இயேசு
பிதாவாகிய தேவன் ------------ |
                                              | பரிசுத்த ஆவியானவர்  
 
அதாவது தேவனே அனைத்துக்கும் அடிப்படையும் ஆதாரமுமானவர் சகலத்திலும் சகலமுமானவர். அவரால் அனுப்பபட்ட கர்த்தராகிய இயேசுவும், "வேறொரு தெர்ற்றவாளர்" என்று இயேசுவே  குறிப்பிடும் பரிசுத்தஆவியானவரும் தேவனால் அனுப்பபட்டவர்கள். எனவே நடக்கும் அனைத்துக்கும் அடிப்படை பிதாவாகிய தேவனே! 
 
சுருங்க சொல்லின் "தேவன் தன் வார்த்தையை மாம்சமாக்கி அதனுள் தானேவந்து வாசம் செய்தார்" எனவே "தேவத்துவம்  முழுவதுமே இயேசுவுக்குள் வாசமாய் இருந்தது" என்பது உண்மை!  ஆகினும் தேவன் நினைத்தால் மாம்சத்தில் இருந்த இயேசுவை விட்டு பிரிந்து சென்றுவிட முடியும். இயேசு தனியொருவராகவே பாவத்தின் கொடூரத்தை சுமக்கவேண்டிய நிர்பந்தத்தின் அடிப்படையில்  சிலுவையின் இறுதி நேரத்தில்  தேவன் இயேசுவை விட்டு பிரித்து சென்றுவிட்டார். 
 
மத்தேயு 27:46 ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

எனவே பிதாவானவர்  முற்றிலும் சுதந்திரமாக செயல்படும் தன்மை உடையவர். அவர் சகலத்திலும் சகலத்திலும் சகலமாக இருப்பவர் கிறிஸ்த்துவோ  பிதாவுக்கு சதா காலங்களிலும் கீழ்படிந்து இருப்பவர்:   
 
I கொரிந்தியர் 15:28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

மேலும் தேவனின் வார்த்தையே மாம்சமாகி  கிறிஸ்த்துவாக  உலகுக்கு வந்திருந்த போதும்,  தேவனும் இயேசுவும் தனிப்பட்ட ஆள்தத்துவம்  உள்ளவர்கள் என்பதை
நிரூபிக்கும்  பல்வேறு  வசனங்கள் வேதத்தில் உள்ளன.  
 
உதாரணமாக ஆண்டவராகிய இயேசு பூமியில் இருந்த காலங்களில் பிதாவாகிய தேவன் வானத்தில் இருந்து பலமுறை அவரைகுறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்.  
 
மத்தேயு 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
லூக்கா 9:35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
யோவான் 12:28 பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
 
இவ்வாறு இயேசு பூமியில் மனுஷனாக திரிந்த காலங்களில் உன்னதத்தில் இருந்து உண்டான் சத்தம் பிதாவினுடயது. தாங்கள் சொல்வதுபோல்  "இயேசுவே பிதா" என்று சொல்பவர்கள் அந்த சத்தம் யாரால் உண்டானது என்று சற்று விளக்கவும்.
 
 
அடுத்து ஆண்டவராகிய இயேசுவை பாடுகளுக்குட்படுத்தினவரும், அவரை மரித்தோரிலிருந்து எழுப்பியவரும் "தேவனாகிய கர்த்தர்" என்று வேதம் தெளிவாக சொல்கிறது. அது கர்த்தரின் சித்தம் என்றும், தேவனாகிய கர்த்தரின் அந்த சித்தத்துக்கே கெத்சமனே தோட்டத்தில் இயேசு தன்னை ஒப்புகொடுத்து ஜெபித்தார் என்பதை அறியமுடியும்.  
 
ஏசாயா 53:10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்;
........... கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
 
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவர் தேவனே!
 
அப்போஸ்தலர் 5:30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,
அப்போஸ்தலர் 2:32 இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்;
அப்போஸ்தலர் 13:30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
 
எத்தனையோ வசனங்கள் சொல்கின்றன "தேவனே இயேசுவை எழுப்பினார்" என்று பிறகு எல்லோருமே இயேசுவே என்று சொல்பவர்களின்  கொள்கை  எவ்வாறு சாத்தியம்?  
 
எனவே கீழ்கண்ட அடிப்படை காரியங்களை அனேக  வேதவசனங்கள் மிக தெளிவான ஆதாரத்துடன்  சாட்சி பகருகின்றன :
 
1. "பிதா ஒருவர்" "அவரே  தேவன்"!   குமாரன் ஒருவர் அவரே  கர்த்தராகிய இயேசுகிறிஸ்த்து!  
 
கொரி 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,  இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு;
 
2.  மனுஷர்கள் ஒருவரும் கண்டிராத ஒளியில் வாசம்பண்ணும் தேவன் ஒருவரே! அவருக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே அவரே இயேசு!
 
I தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
 
3. பிதா சகலத்திலும் சகலமுமானவர்! இயேசு அவருக்கு கீழ்படிந்திருப்பவர்.
 
கொரி 15:28   தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்
 
4. பிதா இயேசுவை அனுப்பியவர் இயேசு பிதாவால் அனுப்பபட்டவர் 
 
யோவான் 8:42 ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

யோவா10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான்

4. இயேசு பாவங்களுக்காக மரித்தவர். தேவன் அவரை மரித்தோரிலிருந்து
எழுப்பியவர்.
 
ரோமர் 6:10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்;
 
அப் 13:30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
 
5. தேவன் இயேசுவை உயர்த்தியவர்! இயேசு தேவனால் உயர்த்தபட்டவர்.      
 
எபி 5:5 அந்தப்படியே கிறிஸ்துவும் .........தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.
 
6. "பிதா எல்லோரிலும் பெரியவர்" இயேசு பிதாவிலும் பெரியவர் அல்ல!
 
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும்
பெரியவராயிருக்கிறார்
 
யோவான் 14:28  என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான் 13:16 ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
 
7. தேவன் அனாதியானவர்! இயேசு ஆதியும் அந்தமும் ஆனவர்
 
நெகே 9:5  அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்
ஏசாயா 40:28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன்  
 
வெளி 22:13 நான் (இயேசு)  அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்
 
8. உன்னதங்களில்  சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் தேவன்! 
 
வெளி 19:4 ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்
மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்
 
அவரது வலது பரிசத்தில் சென்று அமர்ந்திருப்பவர் இயேசு

 I பேதுரு 3:22 அவர் (இயேசு) பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்
 
அவரை அமர வைத்தவர் தேவன்! 
    
எபேசியர் 1:21 அவரை (இயேசுவை)  உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
  
11௦. தேவனுக்கு தெரிந்தது இயேசுவுக்கு தெரியாமல் இருக்கலாம்
 
மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
 
ஆனால் பிதாவின் கட்டளையையே இயேசு நிறைவேற்றியதால்  இயேசுவுக்கு தெரிந்தது அவர்  சொன்னது செய்தது அனைத்துமே பிதாவுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை.   
 
யோவான் 5:19 பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்;
 
11. பிதா தம்மில் தானே ஜீவனுள்ளவர். இயேசுவோ  தம்மில்தாமே ஜீவனுள்ளவராக இருக்கும்படி தேவனால் அருள் செய்யப்பட்டவர்! 
 
யோவான் 5:26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.
 
12. தேவனை மட்டுமோ அல்லது  அவர் அனுப்பிய இயேசுவை மட்டுமோ அறிவது  அல்ல!  இருவரையும் அறிவதே நித்திய ஜீவன் 
    
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
  
இப்படி அனேக தெளிவான  வசனங்கள் இருக்கும் பட்சத்தில் ஒருத்துவ கொள்கைடைய சிலசகோதரர்கள் "இயேசுதான் பிதா" என்று தீர்மானிப்பது சரியான கருத்துபோல் எனக்கு தோன்றவில்லை. மூவர் என்று சொல்லும் திரித்துவத்தை ஏற்காவிட்டாலும் இரு ஆள்த்துவங்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது!
 
சகோதரர்களே "தேவனும் இயேசுவும் வெவ்வேறு ஆள்தத்துவம் உள்ளவர்கள்" என்பதை தெரிவிக்கவே மேலேயுள்ள வசனங்களை  திரட்டி எழுதியிருக்கிறேன். மற்றபடி என்னுடய அடிப்படை கருத்து  "தேவன் தன்  வார்த்தையை  மாம்சமாக்கி, அவரை தனி ஆள்தத்துவம் உள்ளவராக்கினார் அவரே ஆண்டவராகிய இயேசு என்பதே!   
 
அது  எப்படியெனில் "ஆதாம் உடம்பில் இருந்து ஒரே ஒரு  எலும்பை எடுத்து  ஏவாள் என்னும் தனி ஆள்தத்துவம்உள்ள ஒரு ஸ்திரியை தேவன் உருவாக்கினார். இருவரும் தனித்தனியாக இருந்தாலும் ஒரே மாம்சம் என்று வேதம் சொல்கிறது! அதேபோல், தேவனின் வார்த்தையே மாம்சமானது அவரே இயேசு என்னும்  தனி   ஆள்தத்துவம் உள்ள தேவன். இருவரும் தனிதனி ஆள்தத்துவம் உள்ளவர்களாக இருந்தாலும்  இருவரும் ஒருவரில் ஒருவரே" என்பதே எனது கருத்து! 
 
ஆதாமின் எலும்பில் உருவாக்கப்பட்ட ஏவாளுக்கு ஆதாம் தலையாக இருக்கிறான் அதாவது "ஸ்திரிக்கு புருஷன் தலை" அதுபோல் கிறிஸ்த்துவுக்கு தேவனே தலை!
 
I கொரிந்தியர் 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
 
தலை என்னும் தேவன் இல்லாமல்  சரீரமாகிய  கிறிஸ்த்து இல்லை!  அதே போல் சரீரமாகிய கிறிஸ்த்து இல்லைஎனில் தேவத்துவத்தில் முழுமை இல்லை!
 
(குறிப்பு: இந்த கட்டுரையில் நான் சுட்டியுள்ள அனேக வசனங்கள் இயேசுவின்  வாயில் இருந்து  புறப்பட்ட வார்த்தைகளே! இதை மறுக்க நினைப்பவர்கள்,  இயேசுவின் வார்த்தைகளையே  பொய்யாக்குகிறார்களேயன்றி என்னுடய கருத்தை அல்ல! என்பதையும், இயேசுவைவிட அவர்கள் அதிக ஞானவான்கள் என்பதையும்
இங்கு தெரிவித்துகொள்கிறேன்)     


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard