இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் ஒரு 'யகோவா" தேவனின் சாட்சியா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நான் ஒரு 'யகோவா" தேவனின் சாட்சியா?
Permalink  
 


என்னுடைய எழுத்துக்களை படிக்கும் அநேகர் என்னை "யோகோவா சாட்சி" என்ற அமைப்பை சார்ந்தவனாக  இருக்குமோ என்று சந்தேகிப்பதாலும், சிலர் நேரடியாகவே என்னை யோகோவா சாட்சி அமைப்புடன் ஒத்துபோகிறவன் என்பது போன்று விமர்சிப்பதாலும் இங்கு என்னுடய நிலை பற்றிய தன்னிலை விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியத்தை அறிந்து இந்த பதிவை தருகிறேன்.
 
மிக முக்கியமாக நான் இங்கு தெரிவித்துகொள்வது என்னவென்றால் நான் யாருடைய போதனையை கேட்டும் கிரிஸ்த்தவத்துக்குள் வரவில்லை எந்த ஒரு பிரிவினருடனும் எனக்கு கூட்டு இல்லை. சிறு வயதில் நான் படித்த பள்ளியில், அந்நேரத்தில் பிரதானமாக இருந்த CSI சபை டீச்சர் மூலம் ஆண்டவராகிய இயேசுவை நான் ஓரளவு அறிந்திருந்தாலும், எந்த மனமாற்றமும் இல்லாமல்  எந்த சாமியையும் வணங்காமல் மனம்போன போக்கில் வாழ்ந்தவன். 
 
இந்நிலையில் என் வாழ்வில் நான் சந்தித்த  ஒரு முக்கியமான நிகழ்ச்சி என்னை தேவனை அறியும்படி வழி நடத்தியது. அந்த கால கட்டங்களில் நடந்த
உண்மையையும் தேவன் என்னை வழிநடத்திய விதத்தையும் அப்படியே கீழ்கண்ட திரியில் எழுதிவருகிறேன். விரும்பினால் பொறுமையாக படித்து பார்க்கவும்:
 
 
இவ்வாறு இரண்டு மூன்று முறையாக சுமார் ஆறு ஏழு  நாட்கள் முற்றிலும் தேவனின் அபிஷேகத்தால் நிரம்பி என்னை அறியாது அலைந்து திரிந்தபோது
தேவனால் எனக்கு வெளிப்படுத்தபட்ட சில உண்மைகளை அடிப்படையாககொண்டு அதை வேத வெளிச்சத்தில் ஆராய்ந்து  இங்கு என்னுடைய கருத்துக்க்களை எழுதி வருகிறேநேயன்றி நான் எந்த ஒரு பிரிவையும் சார்த்து இங்கு எழுதவில்லை. ஆகினும் நான் தற்பொழுது AG சபைக்குத்தான் செல்கிறேன்.
   
என்னுடய கருத்துக்களில் சில "யகோவா சாட்சிகளின்" கருத்துக்கு ஒத்து இருப்பதால என்னை பலர் தவறான உபதேசகாரன் என்று ஒதுக்குகின்றனர்.  அதை
பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை காரணம் தேவன் தெரியப்படுத்திய உண்மை எதுவாக இருந்தாலும் அதை கூட்டாமல் குறைக்காமல் அப்படியே சொல்லவேண்டியதே எனது கடமை. அது யகோவா சாட்சியை சேர்ந்ததா? அல்லது கத்தோலிக்கத்தை சேர்ந்ததா? அல்லது வேத மாணவர் குழுவை சேர்ந்ததா? என்பது எதுவுமே எனக்கு தெரியாது. யாருக்கும் பயந்துகொண்டு உண்மையை புரட்டி எழுத வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எனவே நடந்ததை அப்படியே இங்கு எழுதுகிறேன்.
 
நான் ஒரு யகோவா தேவனின் சாட்சிகாரனா? என்று கேட்டால் ஆம் என்று பதில் சொல்வதில் மிகுந்த சந்தோசம் கொள்கிறேன்:
 
ஏசாயா 43:12 நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
ஏசாயா 43:10  என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
 
என்ற கர்த்தரின் நியமனத்துக்கு அல்லது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நான் கர்த்தராகிய யகோவா தேவனின் சாட்சியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
 
அதே நேரத்தில் ஆண்டவராகிய இயேசுவின் இரட்சிப்பை பெற்று  பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில்  நிறைந்து  இயேசுவின் இரட்சிப்பை சாட்சியாக அறிவிப்பதன் மூலம் நான் கர்த்தராகிய இயேசுவுக்கும் சாட்சியாக இருந்து வருகிறேன்.  
 
யோவான் 15:27 நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் 
 
அப்போஸ்தலர் 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
 
இந்நிலையில் நமது தளத்தில் உள்ள கருத்துக்களளை  படிக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு   நம்மை குறித்து ஒரு தவறான அபிப்ராயம் அல்லது சந்தேகம் வருவதை தவிர்க்க "யோகோவா சாட்சிகள்" என்ற பிரிவை சார்ந்த சகோதரர்களின் கொள்கைக்கும்,  நான்  எழுதிவரும்  கருத்துக்களுக்கும்  உள்ள ஒன்றுமை வேற்று மைகளை வசன அடிப்படையில்  நான் இங்கு சற்று விளக்கி கூற விரும்புகிறேன்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

முதலில் யகோவா சாட்சிகளின் கருத்தோடு ஓரளவுக்கு  ஒத்துபோகும் என்னுடய சில  கருத்துக்களை பற்றி இங்கு விளக்க விரும்புகிறேன்.
 
1.  பிதாவாகிய தேவன் ஆண்டவராகிய இயேசுவைவிட பெரியவர்!
 
இந்த கருத்தை நான் இயேசுவின் வார்த்தைகளில் அடிப்படையிலேயே நம்புகிறேனேயன்றி மற்றபடியல்ல.
 
யோவான் 14:28  என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்;
 
இவைகளை சொன்ன இயேசு நான் அனுப்பபட்டவர் என்னை அனுப்பியவரைவிட நான் பெரியவர் அல்ல என்றும் கூறுகிறார். 
 
யோவான் 13:16  அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.

இந்த நேரடியான வசனங்களின் அடிப்படையிலேயே ஆண்டவராகிய இயேசுவை விட
தேவன் பெரியவர் என்ற கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்இந்த வசனங்களை மாற்றி, தேவனும் பிதாவும் சமமானவர்கள் என்ற திரித்துவ கருத்தை நிலைநாட்ட அனேக கட்டுரைகள் எழுதபடுகின்றன. அனால் அவைகளை என்னால் ஏற்க்க முடியவில்லை.
 
"பிதா பெரியவர்" என்பதை வசனத்தின் அடிபடையில்  ஏற்கும் நான் அதற்காக இயேசுவை ஒரு தூதன் என்ற நிலைக்கோ "இயேசுவும் தேவனால் படைக்கபட்டவர்" என்ற நிலைக்கோ அல்லது "இயேசு தொழதக்கவர் அல்ல" என்ற நிலைக்கோ, நான் சற்றும் தாழ்த்த வில்லை. இயேசு தேவத்துவமானவர். அவரை "வல்லமையுள்ள தேவன்" என்றே வேதம் சொல்கிறது.      
 
இயேசு தொழதக்கவரா என்று ஆராய்ந்தால். ஆதி அப்போஸ்தலர்கள் அவர் நாமத்தை தொழுதுகொண்டதாக வேதம் கூறுகிறது:
 
I கொரிந்தியர் 1:2  தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
 
அப்போஸ்தலர் 9:14 இங்கேயும் உம்முடைய (இயேசுவினுடைய) நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.
 மேலும் சகல ஜனங்களும் அவரையே சேவிக்கும்படி அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வேதம் சொல்கிறது
 
தானியேல் 7:13. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். 14 சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; 
 
இவ்வசனங்களின் அடிப்படையில் இயேசுவின் நாமத்தை தொழுது கொள்வது அல்லது சேவிப்பது ஏற்றதே.  அத்தோடு இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்பட்டு வாழ விரும்புகிற  நமக்கு  ஆண்டவராகிய இயேசு நமக்கு கட்டளையிட்டபடி "ஆவியாயிருக்கும் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதே சிறந்தது"   
 
யோவா 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்
ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
 
வெளி 22:9    தேவனைத் தொழுதுகொள் என்றான்.
சுருங்க சொல்லின் "ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை" (I கொரி 8:4) என்ற ஒருத்துவ கொள்கையையே எனது புரிதல்!  
   
பிதாவாகிய தேவனும் அவரே! சேனைகளின் தேவனாகிய கர்த்தரும் அவரே தேவாட்டுகுட்டியாகிய பலியும் அவரே! தேவனுக்கும் மனுஷனுக்கும்  மததியஸ்தரும் அவரே! பிரதான ஆசாரியரும் அவரே! பரிசுத்த ஆவியானவரும் அவரே! 
 
அவரவர் மேற்கொள்ளும் பணியின் அடிப்படையில் சில உயர்வு தாழ்வுகள் இருக்கலாம்! ஆகினும் தேவனின் இந்நிலைகள் எல்லாமே பாவத்தில் வீழ்ந்த மனுஷனை  மீட்பதற்காக கிரியைசெய்யும் ஒரே தேவனின் பல்வேறு நிலைகள் என்பதே எனது கருத்து! 
 
"தேவன் ஒருவரே அவரே "இயேசு கிறிஸ்த்து" என்பதல்ல எனது நிலை!  பாவங்களுக்கு பரிகார பலியாக வந்த,  ஒன்றான மெய் தெய்வத்தின் இன்னொரு நிலையே ஆண்டவராகிய   இயேசு!  
 
சாத்தானே "மிருகம்" "கள்ள தீர்க்க தரிசி" "வலுசர்ப்பம்" "பிசாசு" போன்ற பல்வேறு நிலைகளில் தன்னை வெளிப்படுத்தும்போது, அந்த சாத்தானையே உருவாக்கிய தேவன் அவனைவிட அதிகமான நிலையில் தன்னை வெளிப்படுத்துவதில் ஆச்சர்யம் ஏதுமில்லையே!  
 
(மேலே சொல்லப்பட்டுள்ள எனது கருத்தின் அடிப்படையில் பார்த்தால் எனக்கும் யகோவா சாட்சிகளின்  கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை
அறிந்து கொள்ள முடியும்)  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

யோகோவா சாட்சிகளின் கருத்தோடு சற்று ஒத்துபோகும் என்னுடய இரண்டாம் கருத்து!
 
2. ஒருவரும் கெட்டுபோகாமல்  மீட்க விரும்பும் தேவனின்  திட்டம்!  
 
"எல்லோருக்கும் மீட்பு" என்ற திட்டம் யகோவா சாட்சிகளின்  உறுதியான நம்பிக்கை! இந்த கருத்து பற்றி  காரசாரமான  அருமையான விவாதத்தை  அனேக வசன ஆதாரங்களுடன்  சகோதரர்கள் நடத்தி முடிவை எட்டாத அல்லது, ஒருவரின் பதிலை இன்னொருவர் ஏற்றுக்கொள்ளாத ஒரு நிலையில்  நின்றுபோவதை நாம் அறிய முடியும்! காரணம் இரண்டுதரப்பினருமே வேத வசனங்களையே ஆதாரமாமுன்வைக்கின்றனர்.
 
வசனம் இவ்வாறு சொல்கிறது:   
 
II பேதுரு 3:9 கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
 
அதாவது தேவனுடய விருப்பமே "ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லோரும் மனம் திரும்பவேண்டும்" என்பதுதானாம். அதற்காகத் தான் இவ்வளவு பொறுமையாக தேவன் காத்திருக்கிறாராம்!
 
இதே கருத்தை  உறுதிபடுத்தும் வேறு சில  வசனங்களும் வேதத்தில் உள்ளது: 
 
I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
 
மத்தேயு 18:14 இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல
 
போன்ற வசனங்கள் "எல்லோரும் மீட்கப்படவேண்டும்" என்று தேவன் விரும்புகிறார் அல்லது சித்தம் கொண்டுள்ளார் என்பதை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன!
 
இங்கு என்னுடைய கேள்வி என்னவெனில் "ஒருவரும் கெட்டுபோக கூடாது"
என்று  தேவன்  விரும்பும் பட்சத்தில், அவரது அந்த சித்தத்தை  நிறைவேற்ற அவர் ஏதாவது ஒரு  திட்டம் நிச்சயம் வைத்திருப்பார் ஏனெனில் தேவன் தன்னுடய சித்தத்தை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார்!   
 
தேவனின் சித்தமே நம்முடைய சித்தமாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிற பட்சத்தில்,  தேவனின் சித்தப்படி எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்றே நானும் விரும்புவதால்  "எல்லோருக்கும் மீட்பு" என்னும் திட்டம் தேவனிடம் நிச்சயம் உண்டு! என்றே  நானும் கருதுகிறேன்!  
 
இன்னொருபுறம் அனேக வேத வசனங்கள் இவ்வாறு சொல்கிறது!
 
சங்கீதம் 37:38 அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டு போவதே துன்மார்க்கரின் முடிவு.
 
சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
 
மத்தேயு 25:41  இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். .... அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்
 
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
 
அதாவது, துன்மார்க்கன் மற்றும் மனம்திரும்பாத பாவிகள் தேவனை மறுக்கிறவர்கள் எல்லோருமே அறுப்புண்டு நரகத்தில் தள்ளப்பட்டு ஆக்கினை அடைவார்கள் என்றும் வேதம்  திட்டமாக சொல்கிறது.   
 
இந்த இரண்டு கருத்துக்களில் எது சரியானது? இரண்டில் ஏதாவது ஒன்றுதான்  நடக்கமுடியும்!   
 
அதாவது, ஒரே ஒருவன் கெட்டு நித்திய ஆக்கினைக்கு  போனால்கூட  "ஒருவரும் கெட்டுபோக கூடாது" என்ற தேவனின் சித்தம் நிறைவேறாமல போய்விடுமே!  அல்லது தேவனின் சித்தபடி  எல்லோருமே  மீட்கபட்டு விட்டால் "துன்மார்க்கன் அறுப்புண்டு போவான்" அல்லது "நரகத்திலே தள்ளப்படுவான்" என்ற வசனம்  நடக்காமல் போய்விடுமே!  
 
எனவே இங்கு எது சரியானது?  
 
இந்த இருவேறுபட்ட வசனங்களை ஆராய்பவர்கள் தேவன் இருவேறு  சித்தம் உடையவர் என்று  கருதுகின்றனர். அதாவது  "துன்மார்க்கர் அறுப்புண்டு போவதும்"  "நீதிமான்கள் மீட்கப்படுவதும்" தேவனின்  இருவேறு சித்தங்கள் என்று வாதிடுவோரும் உண்டு!
 
ஆனால் "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்"
 
என்று சொல்லும் வசனமானது எங்காவது "துன்மார்க்கர் எல்லோரும் அறுப்புண்டு மரணமடைய தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" என்று வேதம் சொல்கிறதா?
 
துன்மார்க்கன் அறுப்புண்டு போவான்
அக்கினி கடலிலே பங்கடைவார்கள்  
நரகத்திலே தள்ளப்பட்டார்கள்
 
போன்ற வாக்கிய அமைப்பிலேயே வசனங்கள் இருக்கிறதேயன்றி "அவர்கள் நரகத்திலே தள்ளப்பட தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" என்று எங்கும் வசனம் சொல்வது போல் தெரியவில்லை! மாறாக
 
எசே 18:32 மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
 
எனவே "ஒருவரும் கெட்டுபோககூடாது, ஒருவனும் இரண்டாம் மரணமாகிய சாவில் விழக்கூடாது"  என்பதுதான் தேவனின் ஒரே சித்தமேயன்றி  "துன்மார்க்கன் தண்டனை அடைவது தேவனின் விருப்பமோ அல்லது சித்தமோ அல்ல"  அது தேவனின் நியமணம்!
 
"சித்தத்துக்கும்" "நியமனத்துக்கும்"  உள்ள வேறுபாட்டை 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard