இயேசுவானவர் சர்வலோக பாவத்தையும் நிவர்த்தி செய்யும் கிருபாதார பலி என்று வேதம் சொல்கிறது.
I யோவான் 2:2நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
அந்த அடிக்கபட்ட ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறித்து, தானாக முன்வந்து பாவங்களுக்காக மரிக்கவில்லை என்பதை அவர் கெத்சமனே தோட்டத்தில் ஜெபித்த ஜெபம் மூலம் அறியமுடிகிறது.
ஆகினும் அவர் பிதாவின் சித்தம் நிறைவேற தன்னை ஒப்புகொடுத்து பிதாவுக்கு மரண பரியந்தம் கீழ்படிதலின் அடிப்படையிலேயே தன்னை பலியாக்கினார்
ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். .
தேவனாகிய கர்த்தர் தான் இயேசுவை பாடுகளுக்குபடுத்தினார்என்றுதான் வசனம் சொல்கிறது. (அநேகர் "கர்த்தரும் இயேசுவும் ஒருவரே" அதாவது பலியாக அனுப்பியவரும் பலியானவரும் ஒருவரே என்ற தவறான கோட்பாடு உடையவர்களாகவும் இருக்கின்றனர்)
ஏசாயா 53:10கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்
அதாவது "இறைவன் மனமுவந்து தன்னுடைய ஒரே பேரான குமாரனை உலகுக்கு பலியாக தந்தார்". இயேசுவும் பிதாவுக்கு கீழ்படிந்து தன்னுடைய விருப்பங்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் இறைவனின் சித்தம் நிறைவேற்றுவதே தன் போஜனமாக நினைத்து செய்துமுடித்தார் என்ற கருத்தே சரியானதாக அமையும் என்று கருதுகிறேன். .
இவ்வாறு இயேசுவை பலியாக அனுப்பியதும் அவரை பலியாக ஏற்ப்படுத்தியதும் தேவனே.
தேவன்தான் ஆண்டவராகிய இயேசுவை பாவங்களுக்கு பரிகார பலியாக அனுப்பினார் என்பது உண்மையே! என்றாலும் பலியாக வந்த அந்த 'தேவாட்டு குட்டியாகிய' இயேசு யார்? எனற உண்மையை அறிவது அவசியம்.
தேவன் இயேசுவை மனுஷனை படைத்ததுபோல் மண்ணினாலோ அல்லது வேறு எந்த கருப்பொருளின் மூலமோ படைத்து அனுப்ப வில்லை தன்னுடைய "வார்த்தையையே மாம்சமாக்கினார்" என்று வேதம் சொல்கிறது
யோவான் 1:14அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்
எனவே இயேசு தேவனுக்குள்ளாக அனாதியாய் தேவனாகவே என்றும் இருந்தவர் என்பதை அறியவேண்டும்.
இவ்வாறு மாம்சமாகி அனுப்பபட்ட இயேசுவினுள் ஆவியாயிருக்கும் தேவன்தாமே வந்து தங்கியிருந்தார். இருவரும் ஒருவராய் இருந்தனர்.
யோவான் 10:30நானும்பிதாவும்ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
சுருங்க சொல்லின் தேவனே மாம்சமாக பூமிக்கு இரங்கி வந்து மனுஷனால் செய்ய கூடாதிருந்த நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார்
ஆம்! தேவனை தவிர வேறு எந்த மனுஷனோ அல்லது தூதனோ கூட இந்த பாவ உலகத்துக்குள் மாம்சத்தில்வந்து இயேசு கீழ்ப்டிந்ததுபோல் கீழ்படிவது பரிசுத்தராக வாழ்வது என்பது நடக்கிற காரியம் அல்ல என்றே நான் கருதுகிறேன். எனவே இங்கு பலியாக வந்த இயேசு என்னும் தேவனின் குமாரன் 'தேவனின் இன்னொரு ஆள்த்துவமே" என்பதை நாம் அறிய முடியும்! எனவே "தேவனே இயேசுவை பலியாக அனுப்பினார்" என்று வசனம் சொன்னாலும், 'தேவன் வேறு, அவரால்
அனுப்பபட்ட பலியாகிய இயேசு வேறு' என்று பொருள்கொள்வது சரியான ஒரு
நிலை அல்ல என்றே நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)