இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்லாம் சகோதரரின் சில கேள்விக்கான பதில்கள்


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இஸ்லாம் சகோதரரின் சில கேள்விக்கான பதில்கள்
Permalink  
 


பைபிளின் வசனங்களை சரிவரபுரிந்துகொள்ளாமல் அதில் குளறுபடிகள் இருப்பதாக இஸ்லாம் சகோதரர்கள் ஆதாரமற்ற சில குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.  வேத வசனனகளை தேவ ஆவியின்  துணையுடன் ஆராய்ந்து புரியத்தெரியதவர்களுக்கு அதில் குளறுபடி இருப்பதுபோல் தெரியலாம்.   
 
கணித அறிவில்லாத எனக்கு கல்லூரியில் இருக்கும் "வணிக கணிதம்" என்ற புத்தகத்தை பார்த்தால் எவரோ குழப்பத்தில் கிறுக்கி வைத்தது போலவே தெரிகிறது ஆனால் அதை படிக்கும் மாணவனிடம் கேட்டால் அவன் அதற்க்கு சரியான விளக்கம் சொல்கிறான்.    
  
கேள்வி -1
///உலக மக்களின் பாவங்களைச் சுமப்பதற்காக இயேசு தம்மையே பலியாக்கிக் கொண்டதாகக்  கிறித்தவ உலகம் நம்புகின்றது./// இப்போது நாம் கேட்க விரும்புவது இயேசு விரும்பிப் பலியானாரா?  அல்லது பலிகடாவாக இழுத்துச் செல்லப்பட்டாரா?  இரண்டில் எது சரி என்பதை கிறித்தவ உலகம் விளக்குமா?/// 
 
இயேசு தம்மை தாமே பலியாக்கிகொண்டார் என்று எங்கும் வசனம் சொல்ல வில்லை சகோதரே, அவரை தேவன் பலியாக்கினார் என்றே வசனம் சொல்கிறது. 
 
ஏசாயா 53:10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்ற நிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
ஏசாயா 53:6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்
 
ஆண்டவராகிய இயேசு மாம்சத்தில் இருந்ததால்,மாம்சத்தின்  கிரியையாகிய பயமும் வியாகூலமும் அவருக்கு வந்தது ஆனால் அவற்றை எல்லாம் ஒருபுறம் தள்ளி, தேவனின் சிததத்துக்கு தனை முழுமையாக கீழ்படுத்தினார். 
 
சுருங்க சொல்லின் தேவன் அவரை  பலியாக்கினார்! இயேசு தன்னுடய சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி அவருக்கு கீழ்படிந்தார். அவர் தன்னை தானே வெருமையாக்கினார் என்பதே வசனம் சொல்லும்  உண்மை!  
 
கேள்வி -2
////ஒருவனது பாவச் சுமையை இன்னொருவன் சுமக்க முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக்
கூறுகிறது. இந்தத் தத்துவம் அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கின்றது. இதை
ஏற்றுக் கொண்டால் *"அனைவரும் பாவிகளாகப் பிறக்கின்றனர்; இயேசு வந்து அனைவரின்
பாவங்களையும் சுமந்து கொண்டார்”* என்ற கிறித்தவக் கோட்பாடு அடிபட்டுப் போய்விடும்./////
 
சகோதரே ஒரு மனுஷனின் அக்கிரமத்தை இன்னொரு மனுஷன் சுமக்க முடியாது என்றுதான் தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் ல்கிறது. ஆனால் மனுஷனால் கூடாதது தேவனால் கூடும் என்று இன்னொரு வசனம் சொல்கிறது  
 
லூக்கா 18:27 அதற்கு அவர் (இயேசு): மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
 
இவ்வசனத்தின் அடிப்படையில், தேவனுடய வார்த்தையால் உருவாகி தேவனிடத்திலிருந்து  புறப்பட்டு  தேவனால் அனுப்பபட்டு வந்த வல்லமையுள்ள தேவ குமாரனாகிய  இயேசுவால், அவராலேயே அவருக்காகவே உண்டாக்கபட்ட மொத்த மனுஷர்களின் அக்கிரமத்தை சுமப்பது என்பது கூடாதகாரியம் அல்லவே!
 
கேள்வி -3
////* நாம் இங்கே கேட்க விரும்புவது என்னவென்றால், எவரது பாவத்தையும் எவரும் எப்போதும் சுமக்க முடியாது என்று எசக்கியேல் கூறுவது சரியா? * * அல்லது ஒருவர் செய்த பாவத்தை அவரது சந்ததிகள் நான்கு தலை முறை வரை சுமக்க  வேண்டும் என்று யாத்திராகமம் கூறுவது சரியா? *////
 
இரண்டு வசனமுமே சரியானதுதான் சகோதரே!
 
பாவம் செய்த ஒரு மனுஷனோ அல்லது அவனது மகனோ  மனம்திரும்பி ஆண்டவரின் வழிகளில் நடக்காத  பட்சத்தில் அவனது அக்கிரமங்கள் நான்கு தலைமுறைக்கு தொடர்ந்துகொண்டே இருக்கும்.
 
ஆனால்  ஒரு மனுஷனின் தகப்பன் பெரிய பாவியாக இருந்தும் அவரது மகன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மனம்திரும்பி இயேசுவின் இரட்சிப்புக்குள் கடந்து வந்தால் அவன் தகப்பன் செய்த எந்த பாவமும் ஒன்றும் செய்ய முடியாது!
 
எசேக்கியேல் 18:14 ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன்செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, .......... நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
 
எனவே "தகப்பனின் பாவம் பிள்ளையை தொடரும்" என்பதும் உண்மை!  அதே நேரத்தில்  பிள்ளை மனம்திரும்பி ஜீவ வழியில் நடக்கும்  பட்சத்தில் தகப்பனின் பாவம் பிள்ளையை ஒன்றும் செய்ய முடியாது என்பதும் உண்மை!  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard