தேவன் எரேமியாவை தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே தெரிந்து கொண்டேன் என்று எரேமியாவிடம் கூறுகிறார்
தேவன் தாயின் கர்ப்பத்தில் எரேமியாவை மட்டும் மல்ல இந்த உலகில் பிறந்த அணைத்து மனிதர்களையும் தாயின் கர்ப்பத்தில் தான் தெரிந்து கொண்டார்
ஆனால் எரேமியாவை மட்டும் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் பொழுது தீர்கதரிசியாக அபிஷேகம் செய்திருந்தார் அது தேவனின் திட்டம் அது எல்லோருக்கும் அல்ல அவர் சித்தமானவர்களுக்கே
விஞ்ஜான ரீதியாக
ஒரு ஆணுடைய விந்து அணுக்கள் ஒரு பெண்ணின் உறுப்புக்குள் செல்லும் பொழுது ஆயிரக்கணக்கான லட்சகணக்கான அணுக்கள் செல்லுமாம்
ஆனால் அந்த பெண்ணின் கர்ப்பபைக்குள் ஏதாவது ஒரே ஒரு அணு தான் செல்ல முடியும் எனவே பல அணுக்கள் போட்டி போட்டு கொண்டு கர்ப்பபைக்குள் செல்ல முயற்சிக்கும்
கடைசியில் ஒரு அணு மட்டும் கர்ப்பபைக்குள் சென்று அந்த கர்ப்பபையை சுற்றி வேர் எந்த அணுவும் நெருங்க முடியாத படி கர்ப்பபையை சுற்றி வெளி அடைத்து கொள்ளும் பிறகு வேர் எந்த அணுவும் திரும்பவும் அதற்குள் பிரவேசிக்க முடியாது
அந்த ஆயிரம் லட்சகணக்கான அணுக்களில் ஏதோ ஒரு அணு தான் இன்று நீங்களும் நானுமாக இந்த பூமியில் பிறந்து இருக்கிறோம்
இப்பொழுது சொல்லுங்கள் தேவன் நம்மை அந்த லட்சகணக்கான அணுக்களில் இருந்து தெரிந்து கொள்ளவில்லையா
வேதமும் அதைதான் சொல்கிறது
கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்
கர்ப்பத்தின் கனி கர்த்தரால் உண்டாகும் ஈவு
யாக்கோபே உன்னை உண்டாகினவரும் தாயின் கர்ப்பத்தில் உன்னைதெரிந்து கொண்டவரும் என்று கர்த்தருடைய வார்த்தை மிக தெளிவாய் சொல்கிறது
இந்த பூமியில் பிறந்த அனைவரும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
ஒருவரும் சாதாரணமானவர்கள் அல்ல............
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 23rd of August 2011 05:38:59 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
சகோ. எட்வின் அவர்களே தாங்கள் கூறியிருப்பதுபோல இறைவன் நம்மை தாயின் கர்ப்பத்தில் உருவாததற்க்கு முன்னமே அறிந்திருக்கிறார் என்பதும் இந்த தாயின் வயிற்றில்தான் நீ பிறக்கவேண்டும் என்று நிர்ணயம் செய்து நம்மை தாயில் கர்ப்பத்தில் உருவாக்கியவரும் அவரே எந்பது ஆச்சர்யமான உண்மை.
ஏசாயா 44:24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது
ஆகினும் தாயின் கர்ப்பத்தில் உருவாவதற்கு எத்தனை காலத்துக்கு முன்னர் அவர் அறிந்திருக்கிறார்? என்பதற்கான பதில் கீழ்கண்ட வசனத்தில் உள்ளது.
எபேசியர் 1:4 அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
உலகம் தோன்றியபிறகுதான் ஒரு தாய் தோன்றமுடியும். அந்த தாயின் வயிற்றில் நம்மை உருவாக்கும் முன்னர் எவ்வளவோ காலங்களுக்கு முன்னமேயே அவர் நம்மை தெரிந்துகொண்டிருக்கிறார். எனவே நான் தேவனுக்கு முன்னமே பரிட்ச்சயமானவர்கள் என்பதும், ஏதோ ஒரு காரணத்துக்காக நம்மை தாயின் வயிற்றில் உருவாக்கி இந்த பூமியில் பிறக்க வைத்திருக்கிறார் என்பதையும் அறியமுடியும்.
எனவே தாயின் கர்ப்பத்தில் நம்மை உருவாக்கியவர் என்பதைவிட, உலக தோன்றத்துக்குமுன்னமே தேவன் நம்மை தெரிந்துகொண்டார் என்ற உண்மையை அறிவதே சிறந்ததும் மேலானதும் கூட. இந்த உண்மை அறிந்து கொண்டால் பல தேவையற்ற குழப்பங்கள் நீங்கள் வாய்ப்புண்டு.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எரேமியா 1 : 5. நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;
தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே தேவன் உன்னை அறிந்தேன் என்கிறார்.
இதன் பொருள் என்னவென்பதை நாம் சரியாக ஆராய்ந்தால் நாம் இந்த உலகத்தில் பிறக்கும் முன்னரே எங்கோ ஓரிடத்தில் இருந்திருக்கிறோம் அங்கிருந்தே தேவன் நம்மை அறிந்திருக்கிறார் என்பதை சுலபமாக அறிய முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எரேமியா 1 : 5. நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;
இந்த வசனத்தின் அர்த்தம் நாம் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே தேவன் நாம் இப்படிப்பட்டவர்கள் தான் இப்படித்தான் இருப்போம் என்று அறிந்திருப்பதை தான் அந்த வசனம் கூறுவதாக கூட இருக்கலாம் தானே?
-- Edited by Debora on Friday 17th of February 2023 04:48:03 PM
எரேமியா 1 : 5. நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;
இந்த வசனத்தின் அர்த்தம் நாம் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே தேவன் நாம் இப்படிப்பட்டவர்கள் தான் இப்படித்தான் இருப்போம் என்று அறிந்திருப்பதை தான் அந்த வசனம் கூறுவதாக கூட இருக்கலாம் தானே?
-- Edited by Debora on Friday 17th of February 2023 04:48:03 PM
ஆக மொத்தம் ஒருவன் இப்படித்தான் கேடும் தீவினையும் செய்வான் என்று அறிந்தும் அவனை தடை செய்யாமல் வேண்டுமென்றே அவனை படைத்து தீமைகளை அரங்கேற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?
அல்லது
அல்லது அவன் எப்படியோ format பண்ணப்பட்டு தீயவனாக வருகிறான் அவனை தேவன் அறிந்தும் தாயின் கர்ப்பத்தில் பிறக்க அனுமதிக்கிறார் என்று சொல்கிறீர்களா?
அல்லது
தேவனுக்கும் இவனுக்கும் சம்பந்தம் இல்லை இவன் தானாக உருவாகி அப்படி வருகிறான் தேவன் அவனை தாயின் வயிற்றில் அனுமதிக்க மாத்திரம் செயகிறார் என்று சொல்கிறீர்களா?
அல்லது
இப்படி விளங்காத மனுஷர்களை பூமியில் உருவாக்கும் கடடாய நிலையில் தேவன் இருக்கிறார் என்று சொல்கிறீர்களா?
///////////////////தேவனை அறியவேண்டிய முறையில் சரியாக அறியாத ஓர் நிலையே இப்படி எல்லாம் பலரை சிந்திக்க வைக்கிறது என்றே நான் நினைக்கிறேன். /////////////////////
தெரியாததை கேக்கும் போது நீங்க இப்படி பதில் சொல்கிறீர்கள் ஏன் அண்ணா ?