இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிதாவாகிய தேவன் மீதும் அன்பு வேண்டும்


இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
பிதாவாகிய தேவன் மீதும் அன்பு வேண்டும்
Permalink  
 


பிதாவாகிய தேவன் மீதும் நாம் அன்பு வைக்க  வேண்டும். 
சில சபைகள் இயேசு கிருஸ்துவை மட்டும் மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றது. 
இது போன்ற சபை பிதாவாகிய தேவனை நாம் எட்டமுடியதவரகவே  சித்தரிக்கிறது. சில சபைகள் பிதாவை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. ஜெபம் செய்யும்போது மட்டும் இயேசுவின் நாமத்தில் பிதாவே என்று கூறுகிறார்கள். இது  போன்ற காரியங்கள் மிகவும் பாவமான ஒன்று.
 
உண்மையில் பிதாவாகிய தேவன்,அவரிடத்தில் நாம் அன்பாக இருபதையே விரும்புகிறார்.அவர் நம்மிடத்தில்  
எல்லையில்லா அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக தம்முடைய ஒரே குமாரனை நம்முடைய
பாவ நிவாரண பலியாக தந்தருளினார். வேதத்தில் இதற்கு ஆதாரமாக பின்வரும் வசனங்களும்  உண்டு.
 
ரோமர் 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

I யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

I யோவான் 4:16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
 
இயேசு கிறிஸ்துவை மட்டும் விசுவாசித்து,   அவரிடத்தில் மட்டும் அன்பு கூர்ந்து, அவரை அனுப்பின தேவனை மறந்தால் இரட்சிக்க பட்டும் யாதொரு உபயோகமும் இல்லை. இக்காரியத்தை ஆண்டவராகிய இயேசுவும்
மிகவும் கடுமையாக கண்டிக்கிறார். இதற்கு ஆதாரமாக வேதத்தில் பின்வரும் வசனமும் உண்டு.

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
 
பிதாவாகிய தேவன் நம்மை தெரிந்து கொண்டே நம்மை அவரிடத்தில் கொண்டு வந்து இரட்சித்திருக்கிறார். இயேசுவை அல்லாமல் பிதவினடத்தில் வர இயலாது. அதே போல பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் இயேசுவிடத்தில் வர இயலாது.
வேத வசனம் இவ்வாறு கூறுகிறது.....
 
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
 
ஆகையால் ஆண்டவராகிய இயேசு கிருத்துவை அனுப்பின பிதாவையும், இயேசு கிறிஸ்து அளித்த
பரிசுத்த ஆவியானவரையும் அன்பு கூருவோமாக. 


-- Edited by S T Sugumar on Monday 29th of August 2011 06:38:01 PM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

திரு.சுகுமார் அவர்களே,ஏற்கனவே இருக்கும் குழப்பங்கள் போதாதென்று நீங்கள் வேறு புறப்பட்டிருக்கிறீர்களோ..? தாங்கமுடியாதையா..!__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

HMV wrote:

திரு.சுகுமார் அவர்களே,ஏற்கனவே இருக்கும் குழப்பங்கள் போதாதென்று நீங்கள் வேறு புறப்பட்டிருக்கிறீர்களோ..? தாங்கமுடியாதையா..!


சகோ. HMV  அவர்களே, சகோ. சுகுமார் அவர்கள் 3 வசன
ஆதாரத்துடன்தானே தன்னுடய பதிவையே தந்திருக்கிறார். இதில் தங்களை குழப்புவது எது? .
 
வேத வசனங்களை நம்புகிறீர்கள் அல்லவா?
 
கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
 
தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

இந்த வசனங்கள் இரண்டுமே அவர் கருத்துக்கு சரியாக  ஒத்துபோகும் வசனம்தானே? இயேசுவை தேவனுடைய குமாரன்/ மனுஷ குமாரன் என்றுதானே வேதம் சொல்கிறது. குமாரனில் அன்புகொள்வதுபோல் தேவனிலும் அன்புகூற வேண்டும் என்பதே அவர் எழுத்தின் கருத்து என்று நான் கருதுகிறேன்.     
 
வலைதளங்களில் எத்தனையோபேர் என்னெல்லாமோ  கேவலமான வார்த்தைகளை எழுதி  குழப்பிக் கொண்டிருக்கும் போது "தேவனிடத்தில் அன்புகூறவேண்டும்" என்ற இந்த கருத்தில் குழப்பம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றே நான் கருதுகிறேன்.
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இன்று  அனேக  கிறிஸ்த்தவர்களுக்கு போதிய உண்மை தெரியாமல் போவதற்கு  முக்கிய காரியம் அவர்கள் சர்வ வல்லமை மிக்க  தேவனையும் ஆணடவராகிய இயேசுவையும்  யாரென்று சரியாக அறியவில்லை என்பதே.
 
ஆண்டவராகிய இயேசுவிடம் அன்பு செலுத்துவதோடு அவரை அனுப்பிய தேவனிடமும் அன்பு செலுத்தவேண்டும் என்ற உண்மை அநேகருக்கு புரியாமல்,  இயேசுதான் முதலில் பிதாவாக கர்த்தராக இருந்தார் பின்னர் மனுஷனாகி  பூமிக்கு வந்தார் என்பதுபோன்ற ஒரு கொள்கையை பலர் கொண்டிருப்பதாலும், இதற்க்கு நேர் மாறாக சிலர் இயேசு தேவனே  இல்லை அவர் ஒரு தூதன் என்று கருதுவதாலும்  அவர்களால் மேலான உண்மையை அறியமுடியாமல் போகிறது என்றே நான் கருதுகிறேன்.
 
இயேசுவின் நாமத்தை பற்றி வேதம் சொல்லும்போது: 
 
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
 
ஆம்! இயேசுவின் நாமமேயன்றி வேறொரு நாமத்தாலும் மனுஷனுக்கு இரட்சிப்பு என்பது இல்லை என்பதும்,  மனுஷனின் இரட்சிப்பு என்பது  இயேசுவாலே கூடும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இந்த இரட்சிப்பை இயேசு வழியாக மனுஷனுக்கு வழங்கியவர் யார்?
 
தானியேல் 6:27 தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் 
 
சங்கீதம் 68:19  நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே.
 
ஏசாயா 45:22 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை
 
யாக்கோபு 4:12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்;       
 
ஆம்! நம் தேவனாகிய கர்த்தர் மனுஷனுக்கு இரட்சிப்பை அருள சித்தம் கொண்டார்  அதை இயேசுமூலம் நிறைவேற்றினார்.  இயேசுவின் நாமம்  இரட்சிப்பை அருளக்கூடியது ஆனால் கர்த்தரின் நாமம் பற்றி சொல்லப்படும் போதோ!!
 
மல்கியா 1:14 ; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
 
மல்கியா 1:11 சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்;  .
 
இன்று ஒரு மனுஷனின் இரட்சிப்புக்கு தேவையான அனைத்தும் ஆண்டவராகிய இயேசுவிடம் இருப்பதோடு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்கு இருக்கிறது. அத்தோடு பிதாவுடையது எல்லாமே இயேசுவுடையதுமாக இருக்கிறது. எனவே ஒரு மனுஷன் ஆண்டவராகிய இயேசு மூலம்தான் ஆன்மீக தேவைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்துகொள்ள  முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 
 
ஆனால்
 
லூக் 22:69 மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.
 
என்று இயேசுவே சொல்லும் பட்சத்தில்,  இங்கோ பலர் சர்வ வல்லமை யுள்ள  தேவனின்  வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் ஆண்டவராகிய இயேசுவையே  சிங்காசனத்தில்  வீற்றிருக்கும் தேவனாக்கிவிட துணிகின்றனர்.  இருவரையும் அறிய வேண்டிய முறையில் அறிவதே நித்திய ஜீவனை தரும்!   
 
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
 
ஒருவர் பிதாவாகிய தேவனை பற்றி அறியவேண்டுமா வாஞ்சையுடன் இயேசுவிடம் விடாப்பிடியாக கேழுங்கள் அவர் நிச்சயம் பிதாவாகிய தேவனை பற்றி வெளிப்படுத்துவர்:
 
மத்தேயு 11:27   பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
 
மற்றபடி  பிதாவையும் குமாரனையும்  அறியவேண்டிய முறைப்படி சரியாக அறியாதவர்களுக்கு வேத ரகசியங்கள் குறித்த போதிய உண்மைகள் தெரியாத காரணத்தால், உண்மை அறிந்தவர்களை  அவமதிக்க துணியாமல், அங்கும் இங்கும் ஓடி ஆர்ப்பாட்டம் பண்ணாமல் மெளனமாக இருந்து தன்னை காத்து கொள்வதே சிறந்தது என்பதே எனது கருத்து!   
 


-- Edited by SUNDAR on Monday 28th of November 2011 10:01:58 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard