சாத்தானின் தலையை நசுக்கபோகிறவர் தேவனாகிய கர்த்தரே. இதற்கு ஆதாரமாக கிழ்கண்ட வசனங்களை முதலில் படிப்போம்.......
வெளி 17:14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
வெளி 19:11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர்(இயேசு) உண்மையும் சத்தியமும் உள்ளவர் எனப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்
வெளி 19:19. பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய(தேவனின்) சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
வெளி 19:20. அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
வெளி 19:21. மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
மேற்கண்ட இந்த வசங்களின் மூலம் நமக்கு புரிவது என்னவென்றால் கடைசி காலத்தில் பரலோகதிற்கும், மேற்கண்ட வசனங்களில் மிருகம் என்று சொலப்படும் சாத்தானுக்கும் போர் நடக்கும் அப்பொழுது சாத்தானும் அவனது சேனைகளும் முறியடிக்க பட்டு ஆக்கினைக்கு உட்படுத்தபடுவர்கள்.ஆகையால் சாத்தானின் தலையை நசுக்க போவது திரியேக தேவனே.
********
சகோதரர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்........
(இந்த கருத்துக்கு சம்பந்தமாக இரகசிய வருகை மற்றும் இரண்டாம் வருகை சம்பந்தமான கருத்துகளை சகோதரர்கள் இங்கு எழுதுமாறு கேட்டுகொள்கிறேன் .)
(அதாவது இரகசிய வருகையில் விசுவாசிகள் எடுத்து கொள்ளபடுவதும். பிறகு 7 வருடம்அந்திகிறிஸ்துவின் ஆட்சி(சாத்தானின் ஆட்சி) நடக்க இருப்பதையும், பிறகு பரலோகத்திற்கும் , சாத்தானின் சேனைகளுக்கும் போர் நடக்க இருப்பதையும், இறுதியில் சாத்தானின் தலை நேசுக்க படுவதையும், முடிந்தால் வசன ஆதாரத்தோடு எழுதவும்.)
-- Edited by Sugumar S T on Friday 23rd of September 2011 05:27:15 PM
__________________
Sugumar Samuel T
யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
ஆவி ஜீவியாக இருக்கும் சாத்தானின் தலையை நசுக்குவது என்பது நிச்சயம் ஒரு சாதாரண மனுஷனால் நடக்க கூடிய காரியமே அல்ல! பிறகு யார் சாத்தானின் தலையை நசுக்க முடியும்? வேதம் இது குறித்து என்ன சொல்கிறது?
பழைய ஏற்பாட்டில் ஆதாம் பாவம் செய்தபோது கர்த்தர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
ஆதியாகமம் 3:15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார்,.
அதாவது "ஸ்திரியின் விதத்தில்இருந்து தோன்றும் ஒருவரே சாத்தானின் தலையை நசுக்க முடியும்" என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது. இந்த வசனத்தின் அடிப்படையில் ஸ்திரியிடத்தில் பிறந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அடக்குவார் இல்லாமல் அதிகமாக ஆட்டம்போட்டு கொண்டிருந்த ஆவிஜீவியாகிய சாத்தானின் ஆவிக்குரிய தலையை சிலுவையில் நசுக்கிவிட்டர். அதனால் இயேசுவை ஏற்றுக்கொண்டுள்ள ஒவ்வொரு மனுஷனுக்கும் சாத்தானை மேற்கொள்ளும் வல்லமை கிடைத்துள்ளது என்பதும் அவர்களை பார்த்தும்
"இயேசு"என்ற நாமத்துக்கும் சாத்தான் மிகவும் பயப்படுகிறார்என்பது அனைவரும் அறிந்ததே.
இங்கு தலை என்று சொல்லப்படுவது என்னவெனில் "எண் ஜான் உடம்புக்கு தலையே பிரதானம்" என்றொரு பழமொழி சொல்வார்கள். அதேபோல் தலை என்பது தலைமையை குறிக்கிறது. அதாவது உலகத்துக்கு தலையாக அல்லது அதிபதியாக இருந்த பிசாசு இயேசுவின் வருகை மூலம் புறம்பே தள்ளப்பட்டு புரமுதுகிட்டு போனான்.
இவ்வாறு இயேசுவின்மூலம் சாத்தானின் தன்னுடய தலைமை நிலையில் இருந்து தாழ்தபட்டு போனாலும், இன்னும் அது முற்றிலும் நசுக்கப்படவில்லை. அதற்க்கு காரணம் சாத்தான் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஆத்துமாவில் ஒன்றிய நிலையில் இருக்கிறார். எனவே மனுஷனையும் சாத்தானையும் தனித் தனியே பிரித்தால் மட்டுமே அந்த சாத்தானை முற்றிலும் நசுக்க முடியும்.
அதை முற்றிலும் நசுக்கி போடக்கூடியவர் தேவனே என்றும் வேதம் சொல்கிறது!
ரோமர் 16:20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து
வினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
ஆனால் இந்த சாத்தானையும் மனுஷனையும் எப்படி தனித்தனியாக பிரிப்பது என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய காரியம் ஆகும்! யாராவது ஒரு மனுஷன் தேவனின் வார்த்தையின்படி சரியாக வாழ்ந்து சாத்தானை ஜெயம் கொண்டால் மட்டுமே மனுஷனையும் சாத்தானையும் தனித்தனியே பிரிக்க முடியும்! அவ்வாறு ஜெயிப்பவனே வேதம் ஜெயம்கொள்பவன் என்று சொல்கிறது!
வெளி 21:7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்;
ஆகினும் தலை நசுக்கப்பட்ட நிலையில் பயம்காட்டிகொண்டிருக்கும் தந்திரக் காரனாகிய சாத்தானை இயேசுவின் வார்த்தைகள்படி சரியாக வாழ்ந்து யாராலும் ஜெயம்கொள்ள இதுவரை யாராலும் முடியாமல் இருப்பது மிகுந்த ஆச்சர்யமே! அந்த ஜெயம்கொள்பவனை எதிர்பார்த்துதான் இந்த உலகில் உள்ள சர்வ சிருஷ்டிகளும் காத்திருக்கிறது!
ஆம்! அந்த ஜெயம்கொள்பவன் வந்து சாத்தானை ஜெயித்து, மற்ற சிருஷ்டிகளையும் சாத்தானையும் தனித்தனியே பிரித்தால் மட்டுமே சாத்தானை தேவன் முற்றிலும் நசுக்கிபோடும் ஒரு நிலை வரும்! அதன் பின்னர்தான் சகோ. சுகுமார் சொல்லும் வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லியுள்ளபடி சாத்தான் நியாயதீர்ப்படைவான்!
எனவே ஒவ்வொரு மனுஷனும் இயேசுவின் வார்த்தைகளை தன்னுடய வாழ்வில் கைகொண்டு நடக்க பிரயாசப்பட வேண்டியது மிகுந்த அவசியமாகிறது
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்
-- Edited by SUNDAR on Monday 26th of September 2011 09:21:50 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோதரர் ST.சுகுமாரன்அவர்களே நீங்கள் சொல்வதுபோலசாத்தானைஅக்கினிகடலில்தள்ளபோவதுஅனைத்தும் ஆனாதேவன்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் தேவனுடைய அந்த சித்தத்தை நிறைவேற்றுபவன் தான் ஜெயம் கொள்கின்றவன்
இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெய்தார் எப்படி ஜெய்தார்
இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெய்தார் என்று நாம் வேதத்தில் வாசிக்கின்றோம் அல்லவா அவர் எப்படி மரணத்தை ஜெயித்தார்
இயேசு சாத்தானிடம் சண்டை போட்டு ஜெயம் கொண்டாரா அல்லது
இந்த பூமியிலே தேவனுடைய கற்பனைகள் கட்டளைகள் படிநடந்து சாத்தானை ஜெய்தாரா ?
இயேசு மரணத்தை ஜெய்க்க வேண்டும் என்றுஇருந்தால் சாத்தானிடம் சண்டை போட்டு ஜெய்த்துஇருக்கலாமே ?
ஏன் அப்படி செய்யாமல் இயேசு இந்த பூமியிலே தேவனுடைய கற்பனை கட்டளையின் படி வாழ்ந்து நாம் செய்த எல்லா பாவர்த்திர்காகவும்
மரிக்க வேண்டும்
சகோதரரே தேவன் நீதிய்ம் நியாயமும் ஆனவர் அவருடைய நீதியும் நியாயமும் > உண்மையும் சத்தியமும் ஆனவைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
ஒரு மனிதன் பாவம் செய்ததினால் மனிதர்கள் சாத்தானுக்கு எப்படி அடிமையாக போனார்களோ அதே போல்
ஒரு மனிதன் கீழ்படிவதின் மூலம் சாத்தானுக்கு அடிமையாய் போன அனைத்தும் தேவனுடைய கரத்தில் வந்து விடும்
சுருங்க சொல்லின்:
இயேசு இந்த பூமியில் வாழ்ந்து தேவனின் சித்தத்தை எப்படி நிறைவேற்றி வெற்றிபெற்றாரோ அதே போல் ஒரு மனிதனும் வாழ்ந்து சாத்தானை ஜெய்க்க வேண்டும்
அந்த மனிதன் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்ந்து சாத்தானை ஜெயம் கொண்ட பின் தேவனே மிருகத்தையும் சாத்தானையும்
அக்கினிகடலில் போடுவார் பின்பு அவர்கள் வாதை நீடிக்கும்
நீங்கள் சொல்வது உண்மை தான் அவர்களை அக்கினி கடலில் தள்ளபோவது தேவனாகிய கர்த்தர் தான்
ஆனால் தேவனுடைய இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க போவது ஒரு மனிதன் தான்..................
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 26th of September 2011 09:43:19 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
ஆம்! அந்த ஜெயம்கொள்பவன் வந்து சாத்தானை ஜெயித்து, மற்ற சிருஷ்டிகளையும் சாத்தானையும் தனித்தனியே பிரித்தால் மட்டுமே சாத்தானை தேவன் முற்றிலும் நசுக்கிபோடும் ஒரு நிலை வரும்! அதன் பின்னர்தான் சகோ. சுகுமார் சொல்லும் வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லியுள்ளபடி சாத்தான் நியாயதீர்ப்படைவான்!
எல்லோரும் தேவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்து தான் சாத்தானை ஜெய்க்க வேண்டும்
என்றால்இதற்க்கு முன்பு மறித்து போனவர்கள் மற்றும் நரகத்தில் இருப்பவர்களை நீங்கள் என்ன சொல்ல போகின்றீர்கள் ஏனென்றால் நீங்கள் தானே சொன்னீர்கள் எல்லோரும் தேவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் தான் சாத்தனின் தலையை நசுக்க முடியும் என்று
எல்லோரும் என்பதில் பாதி மனிதர்கள் பாதாளத்தில் அல்லவா வேதனை பட்டு கொண்டு இருக்கின்றார்கள் பின்பு தேவன் எப்படி சாத்தானின் தலையை நசுக்க முடியும் பாதி மனிதர்கள் தான் பாதாளத்தில் போய்விட்டார்களே
சகோ ST. சுகுமாரன் அவர்களே சுந்தர் அனேக முறை சொல்லியது போல
ஒரு ஆதாமினால் பாவம் எப்படி வந்து எல்லா மனிதர்களையும் ஆட்கொண்டதோ
ஒரு இயேசு கிறிஸ்து பலியானதின் மூலம் எப்படி எல்லோருடைய பாவமும் மன்னிக்கபடுகின்றதோ
மேலே சொன்ன இவை இரண்டையும் நீங்கள் நம்புகின்றீர்கள் அல்லவா எல்லோரும் இதைதான் நம்புகின்றார்கள்
இப்படி இருக்க என் சகோதரரே ஏன் ஒரு மனிதனின் முழுமையான கீழ்படிவதின் மூலம் எல்லோருக்கும் மீட்பு என்பதை ஏற்று கொள்ள மறுக்கின்றீர்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை......................
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 13th of October 2011 01:40:14 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
சகோ. சுகுமார் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
அதாவது தேவனின் வார்த்தைகள்படி கீழ்படிந்து வாழ்ந்து யாரவது ஒருவர் சாத்தனை ஜெயம்கொண்டால்தான் சாத்தானின் தலையை நசுக்க முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் பார்த்தாலும், அந்த ஒருவர் யார் என்று நமக்கு தெரியாத பட்சத்தில் நாம் ஒவ்வொருவரும் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து அவனை ஜெயிப்பதற்கு அவரவர்கள் தனித்தனியாக முயல்வது அவசியம்!
அடுத்தவர் எவராவது காரியங்களை செய்வார் என்று நாம் அலட்சியமாக இருக்க கூடாது. எல்லோருமே அவரவர் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து, உண்மையும் உத்தமமுமாக நடந்து சாதனை ஜெயம்கொள்ள முயற்ச்சிப்பது அவசியம்தான். ஒருவர் சரியான பரிசுத்த நிலையை எட்டும் பட்சத்தில் அவர்கள் ஆவியானவரின் துணையுடன் சாத்தனை ஜெயம்கொள்ள முடியும். யார் ஜெயம்கொள்கிரார்களோ அவர்கள் எல்லாவற்றையும் சுதந்தரித்து கொள்வார்கள். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
I கொரிந்தியர் 9: 24. பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
எனவே எல்லோருமே அவரவருக்கு நியமிக்கபட்ட டிராக்கில் வேத வார்த்தைகள் என்னும் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிந்து ஒட கடவோம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)