இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனால் கூடாதது ஒன்றுமில்லை...


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
தேவனால் கூடாதது ஒன்றுமில்லை...
Permalink  
 


கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக....
 
என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இங்கு பதிவிடுகிறேன்.
 
இது அநேகர் விசுவாசத்தில் வளருவதற்கு ஏதுவாய் இருக்குமென்று நாம்புகிறேன்.
 
ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்தேன்.
நான் வேலை செய்து கொண்டிருக்கும்போது பொதுவாக என் அருகில் உள்ளவர்களிடம் பேசி கொண்டிருப்பேன்
 
அப்படி பேசி கொண்டே இருக்கும்போது பேப்பர் கட்டர் machine ல்   எதிர்பாரவிதமாக திடீரென்று என் கைவிரலை சற்று 
கவன குறைவால் நானே வெட்டி விட்டேன்.
 
என்னுடைய் இடது கையின் ஆட்காட்டிவிரல் வெட்டுப்பட்டு அப்படியே தொங்கி கொண்டிருந்து.
நான் வலி தாங்க முடியாமல் கத்தி கூக்குரலிட்டு துடித்தேன் . 
 
என்னுடைய கம்பனி ஓனர் ஓடி வந்த பார்த்து உடனடியாக ஒரு ஈர துணியால் அதை மூடி என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் நிறைய 
ரத்தம் கொட்டிகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. கொஞ்ச நேரத்தில் மருத்துவமனை அடைந்து என்னை உட்கார 
வைத்தார்கள்.
 
டாக்டர் மேலே போய் இருக்கிறார் சற்று காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார்கள் நான் வழியால் துடித்து கொண்டிர்ந்தேன்.
எனக்கு எந்த முதலுதவியும் செய்யாமல் உட்கார வைத்து விட்டு அவர்கள் மிக பிசியாக அங்கு இங்கு ஓடி கொண்டிருந்தார்கள்.
 
ஒருவழியாக ஒரு நர்ஸ் வந்த என்னை அழைத்து உள்ளே போனார்கள் அங்கு அவர்களை போல நிறைய நர்சுக்கு படிக்கிறவர்களும் இருந்தார்கள் .
 
நான் நினைத்தேன் ஏதாகிலும் செய்து வழியை குறைப்பார்கள் என்று ஆனால் நடந்ததோ அதற்கு மாறாக....
 
தொடரும்.....   


-- Edited by Stephen on Tuesday 20th of September 2011 04:12:12 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

என்னை அழைத்த நர்ஸ் என் அருகில் இருந்த மற்ற அல்ல நர்சையும் அழைத்து என் கையை பிடித்து எல்லாரையும் சுற்றி நிற்க வைத்து
பாடம் எடுத்து கொண்டிருந்தார்கள்.

இதை பாருங்கள் அதை பாருங்கள் என்று என்னன்னமோ அவர்களுக்கு சொல்லி கொண்டிர்ந்தார்கள்.

எனக்கோ வலி தாங்க முடியாமல் துடித்து கொண்டிருந்தேன். எப்படியோ ஒரு வழியாக ஒரு டாக்டர் வந்து என்னை பார்த்து விட்டு
ஸ்கேன் எடுக்கும்படி கூறினார். அதை எடுத்து விட்டு டாக்டரிடம் காண்பித்தேன்.

அவர் அதை பார்த்துவிட்டு கொஞ்சநேரம் அமைதியாய் இருந்தார் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் நர்சிடம் எனக்கு மயக்க ஊசி போடும்படி சொல்லிவிட்டு போய்விட்டார்.
அவர்கள் எனக்கு ஊசி போட்ட  பிறகு சிறிது நேரம் நான் அப்படி மயக்க நிலையில் இருந்தேன்.

ஆனால் எனக்கு வலியின் உணர்வு இருந்து கொண்டுதான் இருந்தது.
மறுபடியும் அந்த டாக்டர் வந்து என்னை பார்த்து இது எப்படி ஆயிற்று என்று விசாரித்து நிலைமையை உணர்ந்து கொண்டார்.

என்னுடைய விரலில் உள்ள ஏதோ ஒருபகுதி துண்டிக்க பட்டுவிட்டதாகவும் இப்போதைக்கு தையல் போட்டுவிடுகிறேன். 10
நாட்கள் கழித்து பாப்போம் அந்த பகுதியில் ரத்தம் ஓட்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று சொன்னார்.

பிறகு என் விரலில் தையல் போடா ஆரம்பித்தார். என்னோடு பேசிக்கொண்டே இருந்தார் நானும் அவருக்கு பதில் சொல்லி கொண்டிருக்கும்போதே அவர் தையல் போட்டு கொண்டிருதார்.

அவர் ஒவ்வொருமுறை ஊசியால் தைக்கும்போதும் எனக்கு நன்றாய் வலி இருந்தது என்னால் உணரமுடிந்தது.

நான் வலியால் கத்தியதை பார்த்து ஊசி போடவில்லையா என கேட்டார், அவர்களோ போட்டோம் என்று சொன்னார்கள் ஆனால் எனக்கோ
வலி நன்றாக தெரிந்து வேற வழி இல்லாமல் கத்தி கொண்டே இருந்தேன். அவர் எப்படியோ தையல் போட்டு முடித்து விட்டார்.

சிறிது நேரம் கழித்து அவர் என்னிடம் கூறினார், தம்பி 10 நாட்கள் கழித்து வந்து என்னை பார் இந்த விரலில் முழுவதும் ரத்த ஓட்டம்
சீராக இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை ஒருவளை அப்படி இல்லாமல் அந்த இடம் கருப்பாய் மாறிவிட்டிருந்தால் வேறே வழி இல்லை அந்த பகுதி வரை கட் பண்ணி எடுத்து விட வேண்டும் அந்த விரலில் மட்டும் முக்கால் பகுதி மட்டுமே இருக்கும் என்று சொல்லி விட்டார்கள்.

அதை கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

யாரிடமும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் வீடு வந்து சேர்ந்தேன். என்னை பார்க்க வந்த எல்லாரிடமும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தேன்.

என்னால் அன்று இரவு தூங்கவே முடியவில்லை மிகவும் எனக்கு வலி இருந்தது அதுமட்டுமில்லாமல் டாக்டர் சொன்னதை என்னால் தாங்கிகொள்ளவே முடியவில்லை.

ஒருவேளை அவர் சொல்லுகிறபடி எனக்கு நடந்து விட்டால் என் ஆயுசு முழுக்க இப்பத்தான் இருக்க வேண்டுமோ என்று நினைத்து நினைத்து மிகவும் வேதனை பட்டுகொண்டிருந்தேன்.

தொடரும்......



-- Edited by Stephen on Thursday 8th of September 2011 08:19:55 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

அன்று இரவு வலியின் நிமித்தமாகவும் டாக்டர் சொன்னதையும் நினைத்து நினைத்து என்னால் தூங்க முடியாமல் தவித்து கொண்டிருந்தேன்.

எனக்குள் ஒரு யோசனை தோன்றியது. இயேசு கிறிஸ்து குணமாக்குகிறவர் , சுகமாக்குகிறவர் என்றெல்லாம் பிரசங்கத்தில் கேட்டு இருக்கிறேன்.

ஏன் அவரால் என்னை சுகமாக்க முடியாது என்று திரும்ப திரும்ப அந்த எண்ணம் எனக்குள் வந்து கொண்டே இருந்தது.

அப்போது அந்த நள்ளிரவில் அதிக வலியின் மத்தியில் என் கண்களை திறந்து கொண்டு எனக்கு தானே பேச ஆரம்பித்தேன்.

நான் பேசுகிறதை கடவுள் கேட்பார் அல்லது பார்த்து கொண்டு இருக்கிறார் என்றே எல்லாம் எனக்கு தெரியாது நான் பேசினேன்.

நான் உம்மை ஏற்றுக்கொண்டு இதை அநேகருக்கு சொல்ல போகிறேன் ஒருவேளை நான் அப்படி உம்மை குறித்து சொல்லும்போது இயேசு
குணமாக்குகிறவர், சுகமாக்குகிறவர் என்று நான் சொல்லும்போது ஒருவேளை அவர்கள் என்னுடைய விரலை பார்த்து ஏன் உன்னுடைய கைவிரலில் ஒரு விரல் குறைவாக உள்ளது அப்படி உன் இயேசு கிறிஸ்து நீ சொல்லுகிறபடி குணமாக்குகிறவர், சுகமாக்குகிறவர் என்றால் முதலாவது நீ கேட்டு அவரிடத்தில் பெற்று கொண்டிருக்கலாமே.....!


நீ சுகமாகாமல் எங்களுக்கு அவர் சுகமாக்குகிறவர் என்று சொல்ல வந்துவிட்டாயா. என்று கேட்டால் எனக்கு எவ்ளோ அவமானமாய் இருக்கும்.

எனவே நீர் முதலாவது எனக்கு ஒரு அற்புதை செய்யுங்கள் அதை நீர் எப்படி செய்வீரோ எனக்கு தெரியாது ஆனால் நீர் எனக்கு செய்யாமால் என்னால் யாருக்கும் தைரியமாய் உம்மை குறித்து சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு படுத்து தூங்கி விட்டேன்.

அதற்குமேல் அதை குறித்து சுகமானது இல்லை , சும்மா ஏதோ சும்மா நானே உளறி விட்டு தூங்கி விட்டேனா...! என்று கூட நினைக்காமல் அதை அப்படியே விட்டு விட்டேன்.

எனக்கு டாக்டர் கொடுத் நாளும் வந்தது எனக்கு என்ன நடந்தது என்று ஏதும் அறியாதவனாய் டாக்டரிடம் சென்று நின்றேன்.

சிறிது நேரம் கழித்து அவர் என்னை பார்க்க வந்தார் என் கையில் இருந்த கட்டை கழற்றி கொஞ்ச நேரம்
முன்னும்பின்னுமாக டெஸ்ட் செய்து பார்த்து விட்டு என்னை மேலும் கீழுமாக பார்த்து அவர் சொன்ன வார்த்தை என்னை ஒரு நொடி அப்படியே திகைக்க வைத்து விட்டது.....

தொடரும்.....



-- Edited by Stephen on Friday 9th of September 2011 01:56:21 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Stephen wrote:

 

சிறிது நேரம் கழித்து அவர் என்னை பார்க்க வந்தார் என் கையில் இருந்த கட்டை கழற்றி கொஞ்ச நேரம்
முன்னும்பின்னுமாக டெஸ்ட் செய்து பார்த்து விட்டு என்னை மேலும் கீழுமாக பார்த்து அவர் சொன்ன வார்த்தை என்னை ஒரு நொடி அப்படியே திகைக்க வைத்து விட்டது.....

தொடரும்.....

 


சகோ. ஸ்டீபன் சஸ்பென்சில் முடித்திருக்கும் உங்கள் நடபடிகளை தொடர்ந்து எழுதுங்கள்.
 
என்ன நடந்தது என்று அறிய ஆவல்!  
 
இப்பொழுது தங்கள் கையில் விரல் இருக்கிறதா இல்லையா?
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

என் கையில் இருந்த கட்டை பிரித்து பார்த்து ஸ்டீபன் என்ன ஆச்சர்யம் உனக்கு எல்லாம் நார்மலாகவே உள்ளது இனிமேல்
உனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சொன்னார்.

அவர் ஆச்சரியமாய் என்னை பார்த்தார், எனக்கு மட்டுமே உண்மை தெரிந்தது இது எப்படி இப்படி நடந்தது என்று....

நான் மனதில் தேவனுக்கு நன்றி சொல்லி கொண்டிருந்தேன் அங்கு இருந்தவர்களும் என்னை ஆச்சர்யாமாய் பார்த்தார்கள்.

உண்மையாகவே தேவன் எனக்கு அற்புதம் செய்தார் , கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.

இன்றும் என் கையில் உள்ள விரல் மற்ற விரல்களை போலவே உள்ளது எந்த மாற்றமும்  இல்லாமல்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால்

எனக்கு சிறு வயதில் ஏதோ ஒரு காயத்தின் நிமித்தம் போடப்பட்ட தையல் இன்னும் அப்படியே தெரிகிறது.

ஆனால் இன்றோ..

 என் விரலில்
ஓர் சிறு அடையாளம் கூட இல்லாமல் மிக அற்புதமாக எனக்கு சுகத்தை தந்த தேவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவனாக உள்ளேன்.


தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.....



-- Edited by Stephen on Tuesday 20th of September 2011 04:04:05 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard