உலகம் 2012ல் அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் அடித்துக் கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவை அனைத்தும் பொய் என்றும், இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்றும் விறுவிறுப்புடன் இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார்.
உலகம் 2012ல் அழிந்து விடும் என்பதற்கு சான்றாக சில முக்கிய கூறுகள் உள்ளன.
இன்று நாம் பின்பற்றி வரும் திகதி முறைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்தவர்கள் மாயன் நாகரித்தினர். சூரியன் காலாவதியாகும் திகியையும் இவர்கள் கணித்துள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, அந்த திகதி 2012 தான். எனவே, 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பது இவர்கள் கருத்து.
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் பெரிய மூலக்கூறு இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27 கிலோ மீட்டர் ஆழத்தில், அணுக்களை வைத்து, அவற்றை ஒன்றிணைத்து மீண்டும் வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவற்றை 2012ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு நடந்தால், பூமியே நொறுங்கி விடும்.
திரு விவிலிய நூலில், உலகம் 2012ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும், சாத்தானுக்கும் கடைசி யுத்தம் நடக்கும் போது, இந்த அழிவு ஏற்படும் என்று பைபிள் கூறுகிறது. இதையே, சீனத்து நூல்களும், சில இந்து புராணங்களும் கூறுகின்றன.
இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதாகவும், அது வெடித்தால் இந்த உலகமே சிதறிவிடும் என்று அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 650000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்குமாம். அந்த ஆண்டு 2012 என்கிறார்கள் அவர்கள்.
இவையனைத்தும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.
மேற்கூறிய அனைத்தும் பொய் என்று இந்திய விஞ்ஞானி அய்யம் பெருமாள் அடித்துக் கூறுகிறார்.
விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப ஆராய்ச்சியின் படி, இன்னும் 450 ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார் அய்யம் பெருமாள்.
இன்னும் ஒரு சிலர், 2020ம் ஆண்டு பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் என்கிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், அக்னி ஏவுகணை மூலமாக அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுக் கூடத்தில் உள்ளது. எனவெ, எக்காரணத்தைக் கொண்டும் பூமி அழியாது என்கிறார் இவர்.
சூரிய சக்தி மூலமாக மின்சாரம் பெறும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. அதேபோல், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டமும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலக மக்களின் தேவைக்கு மின்சாரமும், குடிநீரும் உள்ளது. எதிர்காலத்தில் நாம் அதற்கு பயப்பட தேவையில்லை என்கிறார் அவர்.
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி செய்யலாம். அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என்று சொல்கின்றனர்
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
விஞ்ஞானிகளின் கருத்தை அடிப்படையாககொண்டு பலருக்கு பயத்தை ஏற்ப்படுத்தும் ஒரு கட்டுரையை பதிவிட்டுள்ளீர்கள்
ஆகினும் "புலி வருது" "புலி வருது" என்று எதிர்பார்த்து
ஏமாந்தது போல, இந்த உலகம் அழிவதை பற்றி எத்தனையோ முறைகேள்விபட்டு எதுவும் நடக்காமல் ஏமாந்து சலிப்படைந்துபோய்விட்ட ஜனங்கள் இனி இந்த காரியங்களை அதிகம் நம்பமாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
மணவாளனாகிய இயேசு வரும்நேரமே இந்த உலகம் அழியும் ஆனால் அவர் வருவதோ யாருமே எதிரப்பக்காத அல்லது
நினையாத நாழிகை என்று வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத் :25: 5. மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 6. நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று 10. ..... ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
எனவே இந்த பதிவை வாசிப்பவர்கள் டிசம்பர் 2012 தானே இன்னும் ஒரு வருடம் இருக்கிறது என்று நிர்விசாரமாக இருக்காமல் ஆண்டவர் எப்பொழுது வந்தாலும் அவரோடு கூட கடந்துசெல்லும் அளவுக்கு விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம் என்பது எனது கருத்து!
மத் 24:44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
இது ஒரு தொடர் பதிவு. இது யாரையும் பயமுறுத்தவோ கலவர படுத்தவோ இல்லை. நான் படித்த விசயங்களை உங்களோடு பகிர்கிறேன்.
அடிக்கடி வரும் பூகம்பம், வராது வந்த சுனாமி, குளோபல் வார்மிங் எனச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் உலக மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த ஒரு செய்தி நம்மை மிரள வைக்கிறது. அதாவது 2012, டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது
2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஏனெனில் நானும் அப்படித்தான் நினைத்தேன் அந்தச் செய்தியைப் படித்த பொழுது, ஆனால் அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி ஆதாரங்களை கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்தால் அது உண்மை தானோ என எண்ணத் தோன்றுகிறது அதாவது எந்தவொரு ஆற்றலுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதைத்தான் சின்ன வயதில் நாம் படித்திருக்கிறோம், ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற இயலும். ஆனால் ஆற்றலை அழிக்க முடியாது என. அதைத்தான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.இது 21.12.2012 அன்று நடைபெறும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது கட்டுகதை போல் தோன்றினாலும் நமது மனித வளர்ச்சியின் அடுத்த கட்டமான விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல நாடுகளில் இருந்து ஏவப்பட்ட லட்சக்கணக்கான வின்வெளி ஓடங்கள் மற்றும் செயற்க்கை கோள்கள் எல்லாம் சுற்றி கொண்டிருக்கும் வட்டத்தில் உள்ள இயற்கை சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிகின்றது. எனவே பிரபஞ்சத்தின் மையமாக நாம் கருதும் அந்த கரு வளையம் தன் சக்தியை அதிகப்படுத்தினாலோ அல்லது சக்தியை குறைத்து கொண்டாலோ அதன் சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் தங்கள் ஈர்ப்பு சக்தியை இழந்து கரு வளையத்துக்குள் இழுத்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால், மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளோ “பூமி மொத்தமாக அழியாது. தற்போது அடிக்கடி வரும் சுனாமி, பூகம்பத்தைப் போல இன்னும் பெரிய அளவில் வந்து புவியின் அடுக்குகளில் அதாவது பிளேட் என்று சொல்லப்படும் புவி கட்டமைப்பு நகர்ந்து நிலப்பரப்புகள் மாறும், அப்போது இப்போதுள்ள பல உயிரினங்கள் அழிந்து புது உயிரினங்கள் தோன்றும். சூரியன் இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதன் செயலைச் செய்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் கடலாக இருந்த பகுதிதான் இன்று இமயமலை. இது போன்ற மாற்றங்கள் தான் நிகழும். ஒரு காலத்தில் இப்பூமியில் வாழ்ந்த டைனோசரும் இந்த மாதிரியான புவி மாறுதலால் தான் அழிந்து போனது” என்கின்றனர். இப்படி இரு மாதிரியான கருத்துகள் நிலவினாலும் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது. அதாவது 2012, டிசம்பர் 21 அன்று ஒன்று உலகம் அழியும்; அல்லது உலகம் மாறும் என்பது.
இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவ மதத்தினரின் நம்பிக்கை படி காலம் நெருங்கி விட்டது என்ற வாக்குகள் அதிகம் உபயோகிப்படுகிறது. விவிலியத்தில் சுட்டிகாட்டப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறதோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். சுனாமி குறித்தும் இன்னும் பல பேரழிவுகள் குறித்தும் சில உண்மைகள் மறைந்திருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள் அப்படி அவை உண்மையாக இருக்குமே ஆனால் உலகம் என்பது அப்படியே இருக்கும் ஆனால் மனித இனமும் பிற உயிர்களும் அழிந்து புதிய பல உயிர்கள் உருவாகலாம். எப்படி இருந்தாலும் இந்த அழிவு என்பது மட்டும் அழியாமல் சுற்றி கொண்டிருக்கிறது. அப்படி உலகம் அழியாமல் உயிர்கள் அழிந்து புதிய உயிர்கள் தோன்றுவதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிற அறிவியலின் வார்த்தை உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்தான் காரணம் நம் மனித வாழ்க்கை என்பது சிதைந்து விட்டது என்றே தோன்றகூடிய அளவில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. உணவை எடுத்து கொண்டால் இயற்கை உணவுகள் என்பது போய் எல்லாமே செயற்கையான உணவைத்தான் உண்டு மகிழ்கிறோம். மனிதர்களுக்கான பல குணாதியங்கள் மாறி வேறு ஒரு ஜந்துவாக மாறி கொண்டிருக்கும் மனிதர்களை நாம் தினமும் படித்தும் கண்டும் கொண்டுதான் இருக்கின்றோம். மனிதம் செத்துவிட்டது என்பது இன்று பொதுவான வாக்காக மாறி இருக்கும் சூழ்நிலையில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் சில பகுதிகளில் மனிதர்கள் மனித வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலையில் இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.
எது எப்படியோ உலகம் அழியும் என்பது பற்றி மேலும் சந்தேகம் இருந்தாலோ, நீங்கள் End of the World Dec 21-2012 என்ற வார்த்தையைக் கொண்டு இணையத் தளத்தில் தேடி பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இது பற்றி படங்களோடு விளக்கம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதை நிரூபிக்கும் வகையில் புவியும் அடிக்கடி ஆட்டம் போடுகிறது. கடலும் கரையையும் கடந்து வருகிறது. என்னதான் நடக்கும்… பொறுத்திருந்து பார்ப்போம்!
உலக அழிவு - 2
நாம் ஏற்கனவே பார்த்த உலக அழிவு - 2 தமிழ் மொழிபெயர்ப்பு
அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள். 2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும். இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள். 1. மாயன் காலண்டர்: மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் காலண்டரில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.
2. சூரியப்புயல்கள்: சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.
3. அணுசிதைவு: ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் உலகின் பெரிய மூலக்கூறு உந்து எந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். 27 கிலோ மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் வைத்து அணுக்களை ஒன்றிணைத்து வெடிக்க வைப்பது திட்டம். எதற்காக இது? உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள இந்த சோதனையாம். 2012-ல் இந்த சோதனை நடக்கிறதாம். அப்படி நடந்தால் இந்த பூமியே நொறுங்கிவிடுமாம்.
4. பைபிளில்சொல்லப்பட்டிருக்கிறது… விஞ்ஞானிகள் கூற்று ஒரு பக்கமிருந்தாலும், திரு விவிலிய நூலில் உலகம் (2012-ல் என்று குறிப்பிடப்படவில்லை) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும் சாத்தானுக்கும் கடைசி யுத்தம் (Armageddon) நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள். யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதித் தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து. இதே கருத்தை சீனத்து நூல் ஒன்றும், சில இந்து புராண நூல்களும் கூட சொல்கின்றனவாம்.
5. சூப்பர்வல்கனோ: இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றில் வாயில் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 650000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப் பார்த்தால் இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்!
6. கணிதவியல்அடிப்படையில்… அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.
7. புவியின்காந்தப்புலம் வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப் புலம் இருப்பது தெரிந்திருக்கும். இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம். -இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.
ஆனால்நமதுஇந்தியவிஞ்ஞானிகள்என்னசொல்கிறார்கள்? இதோஒருபாஸிடிவ்பதில்: சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள், மேலே கூறப்பட்ட 7 காரணங்களையுமே உடான்ஸ் என்கிறார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? அல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது. விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவதுபோல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது. உலக மக்களின் தேவைக்காக சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்றும் முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே மின்சாரத்திற்காகவோ, குடிநீருக்காகவோ எதிர்காலத்தில் பயப்படவேண்டிய அவசியம் இருக்காது. ஒரு மனித உடலின் செல்லில் இருந்து அல்லது மிருகத்தின் ஒரு செல் அணுவில் இருந்து குளோனிங் முறை செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகள் சோதனையாக மட்டுமே உள்ளது. இதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். ஆகவே இது ஆய்வுடன் நின்று விட்டது. பூமி வெப்பமாவதை தடுக்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக மாசு கட்டுப்பாடு செய்து அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்…” என்றார். நாமும்.. சாதகமானதையே நம்புவோமே!
உலக அழிவு - 3 : மாயன் காலண்டர்
மாயன் காலண்டர்:
2012 உலக அழிவு என்றதுமே... அனைவரும் "மாயன்" களின் நாற்காட்டியைத்தான் முக்கியமாக குறிப்பிடுகிறார்கள். மாயன்கள் என அழைக்கப்படும் சாம்ராஜ்ஜம். எகிப்திய நாகரீகம் நிலவிய காலப்பகுதியில், தென்னமெரிக்க பகுதியில் வாழ்ந்த உயர்ந்த நாகரீகத்தையுடைய மக்கள் கூட்டமாகும். அவர்களால் உருவாக்கப்பட்ட கலண்டர் உலகின் பல முக்கிய சம்பவங்களை எதிர்வுகூறத்தக்கதாக இருந்ததுடன், நவீன கலண்டருக்கு மிகவும் ஒத்துப்போகக்கூடிய ஒன்றாகவுமுள்ளதாம்.
அப்போதைய காலத்தில் என்னென்று இவ்வளவு துள்ளியமாக நாற்காட்டியை வடிவமைத்தார்கள், என்பது இன்னமும் விளங்கமுடியாத புதிராகவே இருக்கிறது. சரி... இந்த மாயன்களுக்கும் 2012 இக்கும் (உலக அழிவுக்கும்) என்ன சம்பந்தம் என்பதை பார்ப்போம்.மாயன்கலால் உருவாக்கப்பட்டு பாவிக்கப்பட்டதாக கருதப்படும் நாட்காட்டியில் இறுதி நாளாக 2012. 12. 21 குறிப்பிடப்பட்டுள்ளது. ( அதாவது அதோட கலண்டர் முடியிது.) அதை முக்கியமாக வைத்துத்தான் 2012 ஓட உலகம் அழியப்போறதா சொல்லுறாங்க. ஆனால், அதுக்கு பின்னரும் ஒரு வேறு நாற்காட்டி இருக்கலாம்.அது இன்னமும் ஆய்வாலர்களால் கண்டுபிடிக்கப்படாமலிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
முதலாவதாக... மாயன் நாகரீகம் நிலவிய காலத்தில் நிலவிய எகிப்திய நாகரீகத்தில் இது பற்றி எதாச்சும் இருக்கா என்று பார்த்தால்... இருக்கிறது. எகிப்திய பிரமிட்களின் சுவர்களில் உள்ள சித்திர எழுத்துக்கள் பல எதிர்கால உலக நிகழ்வுகளைப்பற்றியவையாம்.
எகிப்திய பிரமிட்டுக்கள் கி.மு 10000 ம் தொடக்கம் 5000 ஆண்டளவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அப்போதே அவர்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்... பூமியின் விட்டமெல்லாம் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். அவ்வளவு அறிவை அந்தக்காலத்திலேயே பெற்றிருந்தவர்களுக்கு பூமியின் எதிர்கால மாற்றத்தை கணிக்கும் சூட்சுமமும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களின் எழுத்துக்களை ஆராய்ந்ததின் படி 2007 இக்கும் 2023 இக்கும் இடைப்பட்ட காலத்தில் பூமிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்பதை மட்டுமே தெளிவாக கூறக்கூடியதாக உள்ளதாம்.
அந்த ஆபத்து என்னத்தால் ஏற்படப்போகிறது என்பதில் பல மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. யுத்தம் (3ம் உலகயுத்தம்.) , சுனாமி, நில நடுக்கம், பாரிய கண்டப்பெயர்ச்சி, கடும் வறட்ச்சி, தொடர் மழை, புயல்... என பல காரணங்கள் அந்த எழுத்துக்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.
அடுத்து... நொஸ்ராடாமஸ் ( தீர்க்கதரிசி ) சொன்னதை பார்த்தால்... அவரின் கணிப்பின் படி... ஃபீக்கஸ் எனும் நட்சத்திரம்... ( 13வது ராசி) 2012 இல் தோன்றுகிறதாம். அதன் பலனாக பாரிய அழிவுகள் ஏற்படுமாம். மேலும் அவரது கணிப்புக்களின் படி 3ம் உலகயுத்தம் இடம்பெறும்காலமாக 2007 தொடக்கம் 2023,30 என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் கருத்துப்படி... "3ம் உலகயுத்தத்தில் கருவை அழிக்ககூடிய (அணு) ஆயுதங்களால் போர் கொரூரமாகும்... இந்த ஆய்தங்களின் தாக்கத்தால் கடல் அலைகள் 100 அடி உயரம் வரை எழும்... 100 கோடி பேர் சாவது என்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல. போரின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்." இதுவும் 2012 ஓடு சம்பந்தப்படுத்தி பார்க்கப்படுகிறது.
அடுத்து... புவியியலாலர்களின் கருத்துப்படி பூமியில் 2000,2100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சிறியலவிலான பனியுகம் ( உறைபனிக்காலம்) ஏற்படுமாம். இப்படியேற்பட்ட ஒரு குறுகிய பனியுகமே நீண்ட காலமாக செழிப்போடிருந்த எகிப்திய ராஜ்யியம் திடீரென வீழ்ச்சியடைந்ததுக்கு காரணம். அது ஏற்படக்கூடிய கால கட்டம் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம். அது 2012 இல் தான் ஏற்படுமென... ஊகித்து உலக அழிவுடன் ஒப்பிடுகிறார்கள். அடுத்து... சமயங்களுடன் ( மதங்களுடன்) இதை சம்பந்தப்படுத்தியும் பார்க்கிறார்கள். பொதுவாக மதங்களில் உலகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாம். அந்த புதுப்பிக்கப்படும் காலம் 2012 இலாக இருக்கலாம்... என்றும் கருதுகின்றார்கள்.
சமீபத்தில்... பூமியில் எதிர்பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்... புயல், திடீர் வறட்சி, அதீத வெப்பம், அதீத குளிர், புவி நடுக்கம், எரிமலை வெடிப்பு, அண்டார்டிக்கா உருகல்... போன்றன... ஏதோ ஒரு ஆபத்து இருக்கு என்பதை காட்டுகிறது.
உலக அழிவு - 4 : சூரியப் புயல்
சூரியப் புயல்கள் - Solar Storm
நாம் இந்த பதிவுகளில் உலக அழிவுக்கான காரணங்களை பற்றி பார்த்து வருகிறோம்.இன்று அதில் சூரிய புயல்களை பற்றி இங்கு காண்போம்.இது யாரையும் பயமுறுத்த அல்ல...
சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் இடை விடாது எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் வெப்பமும், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதேபோல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் பூமியை எட்டி வெளிச்சத்தையும் தருகிறது.பூமியில் இருந்து சூரியன் நீண்டதூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. எனவேதான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன.
பூமிக்கு வரும் சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.இந்நிலையில் ஆக.1ஆம் தேதி காலை சூரியனின் மேல்பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் முதல் வெடிப்பு பூமி உருண்டையின் அளவை விட பெரிய அளவில் இருந்துள்ளது. அடுத்து சில நிமிடம் கழித்து 2-வது வெடிப்பு ஏற்பட்டது. அது முதல் வெடிப்பை விடகொஞ்சம் சிறியதாக இருந்தது.
இதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.இதன் வெப்ப அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சூரியன் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் தடுக்கின்றன. இதில் வடிகட்டப்பட்டுதான் வெப்பம் பூமிக்கு வருவது உண்டு.
இப்போது வரும் பெரிய வெப்பத்தை வாயு மண்டலங்களால் தடுக்க முடியுமா? அல்லது நேரடியாக தாக்கி விடுமா? என்று தெரிய வில்லை. வாயு மண்டலங்கள் வெப்பத்தை தடுக்க முடியா விட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இல்லை என்றாலும் கூட வேறுவகை பாதிப்புகள் சில ஏற்பட வாய்ப்பு உள்ளன.
வெடிப்பால் ஏற்பட்ட சூரிய வெப்பத்தை சூரிய சுனாமி என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன. சூரியனில் இருந்து வரும் அதிகவெப்பம் செயற்கை கோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் செயலிழந்து விடும் அபாயமும் உள்ளது. செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தால் அது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துவிடும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மின் கிரிட் அதிகளவு வெப்பம் அடைந்தது; விமானங்களின் எலக்ட்ரானிக் கருவிகள் பழுதடைந்தன; செயற்கைக்கோள்கள், கப்பலில் உள்ள கருவிகள் செயல்படாமல் நின்றன. இதற்கு காரணம், சூரியன் தனது ஆழ்ந்த உறக்கத்தை கலைத்து விழித்துக் கொண்டதால் அதிகபட்ச மின்காந்த சக்தியை வெளிப்படுத்தியது தான். புயலாக வெளிப்பட்ட அந்த மின்காந்த சக்தி பூமியை தாக்கியது. சூரியன் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தியதால் தான் பூமியில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதேபோன்று, சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "மின்காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. "சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது.
இதனால் செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள் வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்னை ஏற்படும். "பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரிசெய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும்' என்று நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் கூறுகிறார். "விண்வெளி வானிலை' என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது.
இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ் ஷரின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டாக்டர் பிஷ்ஷர் (69) சூரிய மின்காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது.
அப்போது, சூரியனின் வெப்பம் மிக அதிகபட்சமாக, 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல், மூன்று, நான்கு முறை சூரியனில் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013ம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. இவ்வாறு ரிச்சர்ட் பிஷ்ஷர் எச்சரித்துள்ளார்.
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)