இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


சுந்தர்:

//அன்று பாவம் செய்த  இஸ்ரவேல் ஜனங்களுக்காக மோசே தேவனுக்கு முன்னால் நின்று மன்றாடியதுபோல நானும் அவர்களுக்காக மன்றாடுகிறேன்//

இஸ்ரவேலருக்காக தேவனிடம் மன்றாடின மோசே, இஸ்ரவேலரின் பாவங்களை மன்னித்தாரா? ஆம் எனில், அதற்கான வசன ஆதாரத்தை தரவும்.

மோசேயின் மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, தேவன் இஸ்ரவேலரின் பாவங்களை மன்னித்தாரா? ஆம் எனில், அதற்கான வசன ஆதாரத்தை தரவும்.
-- Edited by anbu57 on Tuesday 15th of November 2011 07:38:10 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


anbu57 wrote:

சுந்தர்:

//மனுஷர்கள் எல்லோரையும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் மன்னிக்கிறேன்.//

இந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தது யார்? அல்லது எந்த வசனம்?


 யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

என்ற வசனத்தின் அடிப்படையில் மனுஷர்களின் எவ்வித பாவத்தை யும்  மன்னிக்க நமக்கு உரிமை உண்டு என்று கருதுகிறேன்.  

 
மத்தேயு 6:14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
 
என்ற வசனத்தின் அடிப்படையில் என்னுடய தப்பிதங்கள் மன்னிக்கப்பட, நான் எல்லோர் தப்பிதங்களையும் மன்னிக்க விரும்புகிறேன்.  
 
எபேசியர் 4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3:13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
நாம்  பாவி  என்று  அறிந்திருந்து  கிறிஸ்த்து நம்முடய எல்லா பாவங்களையும் மன்னித்தார். அதுபோல்  பாவி என்று நான் அறிந்திருக்கும் அல்லது அறியாதிருக்கும் எவரையும் கிறிஸ்த்து போல மன்னிக்க விரும்புகிறேன்.
 
 
சுந்தர்://மனுஷர்கள் எல்லோரையும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் மன்னிக்கிறேன்.//
 
Bro. Anbu: எந்தெந்த பாவங்களையெல்லாம் மன்னிக்கிறீர்கள்? நீங்கள் மன்னிக்கிற பாவங்களில், “தேவனுக்கு விரோதமான பாவங்கள்” மற்றும் “பிறருக்கு விரோதமான பாவங்கள்” ஆகியவை அடங்குமா?

எந்தெந்த பாவம் என்ற பாகுபாடு  எல்லாம் எனக்கு இல்லை சகோதரரே. என்னை பொறுத்தவரை ஒரு மனுஷன் பாவம் செய்கிறான் என்றால் அவன் சரீரத்த்தில் பாவம் வாசமா யிருப்பதாலோ  அல்லது அவனுக்குள் புகுந்திருக்கும் அசுத்த ஆவியே அவனை அவ்வாறு செய்ய தூண்டுகிறது. எனவே சாத்தானால் ஒரு கருவியாக பயன்படுத்தபட்ட அவனை மன்னிக்க சித்தமாகிறேன்.  

மத்தேயு 6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்

மனுஷர்களின் தப்பிதங்களை நாம் மன்னிக்கவில்லை என்றால் அல்லது ஒரு தப்பிதத்தை மன்னிக்கவில்லை என்றாலும்  நம் தப்பிதங்கள் மன்னிக்கப்பட மாட்டாது. எனவே எல்லாவிதமான தப்பிதங்களையும்/ பாவங்களையும்  நான் மன்னிக்க விரும்புகிறேன். 
 
மற்றப்படி தேவன் தன் பக்கத்தில் இருந்து எந்த பாவங்களை மன்னிக்க வேண்டும் எந்த பாவங்களை மன்னிக்ககூடாது என்பதெல்லாம் அவர் பார்த்துகொள்வார்.  
   

சுந்தர்://அன்று பாவம் செய்த  இஸ்ரவேல் ஜனங்களுக்காக மோசே தேவனுக்கு முன்னால் நின்று மன்றாடியதுபோல நானும் அவர்களுக்காக மன்றாடுகிறேன்//

Bro: Anbu Wrote: இஸ்ரவேலருக்காக தேவனிடம் மன்றாடின மோசே, இஸ்ரவேலரின் பாவங்களை மன்னித்தாரா? ஆம் எனில், அதற்கான வசன ஆதாரத்தை தரவும்.

மோசே தன்னை பெரிதாக் உயர்த்த விரும்பாமல் தன்னையும்  ஒரு பாவி என்ற நிலையில் சேர்த்து கர்த்தரிடம் இரக்கத்துக்கு கெஞ்சுவதால் அவன் இஸ்ரவேல் ஜனங்களை மன்னித்தான இல்லையா என்பது   ஒரு பொருட்டல்ல.

யாத்திராகமம் 34:9  எங்கள்  நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்

Bro: Anbu:///மோசேயின் மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, தேவன் இஸ்ரவேலரின் பாவங்களை மன்னித்தாரா? ஆம் எனில், அதற்கான வசன ஆதாரத்தை தரவும்.///

எண்ணாகமம் 14:19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின் படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள் வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின் படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

20. அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.  __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

என்ற வசனத்தின் அடிப்படையில் மனுஷர்களின் எவ்வித பாவத்தையும்  மன்னிக்க நமக்கு உரிமை உண்டு என்று கருதுகிறேன்.//

அன்பான சகோதரரே!

பிறரது பாவங்களை மன்னிக்கிற விஷயத்தை, சாதாரண ஒரு விஷயமாக நாம் எடுத்துவிடக்கூடாது. நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனம், “பாவங்களை மன்னிப்பதை” மட்டுமல்ல, “பாவங்களை மன்னியாதிருப்பதையும்” கூறுகிறது. ஆனால் நீங்களோ பாவங்களை மன்னிப்பதை மட்டுமே கூறுகிறீர்களேயொழிய, மன்னியாதிருப்பது பற்றி எதுவும் கூறவில்லை.

யோவான் 20:23-ன் அடிப்படையில் சகோ.சந்தோஷ் தனது தளத்தில் ஒரு பதிவைத் தந்திருந்தார்; அதற்கு நான் ஒரு பின்னூட்டம் தந்திருந்தேன். அவற்றை நீங்கள் படிப்பது நல்லது எனக் கருதுகிறேன்.

சகோ.சந்தோஷின் பதிவு:

//யோவான்.20.23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

இந்த வசனத்தை வைத்து இயேசு கிருஸ்துவின் சீடர்களுக்கு பாவத்தை மன்னிக்க அதிகாரம் உண்டு என்று பொருள் கொள்கின்றனர் (வசனத்தின்படி அது சரியே.). ஆனால் இந்த வசனம் இயேசு கிருஸ்து சொன்னதை தவறாக புரிந்து கொண்டு எழுதியிருப்பதாக எனக்கு படுகிறது. அல்லது மொழி பெயர்ப்பு கோளாறு ஏதாவது இருக்குமா என்றும் தெரியவில்லை.

இந்த வசனத்தின்படி எந்த மனிதனும் இன்னொரு மனிதனின் பாவத்தை மன்னிக்கலாம் என்று இருப்பதால் பாவத்தை மன்னிக்க இயேசு கிருஸ்துவே தேவையில்லை என்ற அர்த்தம் வருகிறது. ரோமன் கத்தோலிக சபைகளில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் பாவத்தை மன்னிப்பதும் சரியே எனற அர்த்தமும் வருகிறது.

எந்த மனிதனும் இன்னொரு மனிதனின் பாவத்தை மன்னித்ததாக சொல்லலாம். ஆனால் அதை உறுதிப்படுத்துவது மன்னிக்கப்பட்ட மனிதன் அனுபவிக்கும் மன நிலையே. அந்த வகையில் மனிதர்களால் மன்னிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பாவம் தங்களை விட்டு போன சந்தோஷத்தை அனுபவித்ததாக எனக்கு தெரியவில்லை. அந்த சந்தோஷம் ஒரு மனிதனுக்கு வராத பட்சத்தில் அவன் பாவம் மன்னிக்கப் பெற்றதாக கருத முடியாது.

ஒருவன் எந்த மனிதனுக்கு தீங்கு இழைத்தானோ அந்த மனிதனிடமே தன் பாவத்தை மன்னிக்க சொல்லி கேட்டுக் கொண்டு, அவன் மன்னித்தால் ஒருவேளை மன்னிக்கப்பட்ட நிச்சயத்தை அடையலாம். ஆனால் எதற்கும் சம்பந்தமில்லாத மூன்றாவது மனிதர்கள் பாவத்தை மன்னிக்க முடியாது (அது இயேசுவின் சீடர்களாக இருந்தால் கூட) என்பதே என் கருத்தாகும்.

இந்த வசனத்தின்படி எந்த சீடரும் இன்னொரு மனிதனின் பாவத்தை மன்னித்ததாக எனக்கு தெரியவில்லை. ஏதாவது வசனம் இருந்தால் சொல்லவும்.

தேவனிடத்தில் இந்த கட்டளையை பெற்ற பேதுரு பரிசுத்த ஆவியை காசுக்கு கேட்ட மனிதனை சபித்த போது "நீ தேவனை நோக்கி வேண்டிக் கொள் ஒருவேளை மன்னிக்கபடலாம்" என சொன்னாரே தவிர அவரே அவனை மன்னிக்கவில்லை என்பதை அறிய முடியும். அந்த மனிதனும் நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள் என சொல்லாமல் எனக்காக கர்த்தரை வேண்டிக் கொள்ளுங்கள் என்றே சொன்னான்.

அப்போஸ்.8.18. அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
19. நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
20. பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.
21. உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
22. ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
23. நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
24. அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

இந்த வசனத்திற்கொத்த வசனங்கள் மத்தேயு போன்ற அதிகாரத்திலும் இருக்கின்றன. ஆனால் அங்கு வருகின்ற வார்த்தை "பாவம்" அல்ல. "தப்பிதம்" என்பதாகும்.

மத்தேயு 6.14. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
15. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

இப்படி மற்றவர்களின் தப்பிதங்களை மன்னிக்கும் இவர்களின் பொறுமையையும் கடந்து யாரவாது இவர்களுக்கு துன்பம் விளைவிப்பார்கள் எனில் அவர்களை சபிக்கவும் இவர்களுக்கு அதிகாரம் உண்டு என்பதுதான் யோவான் 20.23 ல் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

இது எதற்கு ஒப்பானதென்றால் "நீ ஆசிர்வதிப்பவர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள், நீ  சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள்" என பிலேயாம் பெற்ற வரத்துக்கு ஒப்பானதாகும்.//

இப்பதிவுக்கு நான் தந்த பின்னூட்டம்:

//முதலாவதாக யோவான் 20:23 வசனத்தில் இயேசு வழங்கியுள்ள அதிகாரம், அவரது 11 சீஷர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வழங்கின அதிகாரமாக யாரேனும் கருதினால், அவர்கள் அப்படிக் கருதுவதில் தவறேதுமில்லை என்றே நான் கருதுகிறேன். 

ஆகிலும் அதை இயேசுவின் மற்ற சீஷர்களுக்குமான பொதுவான அதிகாரம் என எடுத்துக்கொண்டால், அந்த மற்ற சீஷர்கள் இயேசுவின் 11 சீஷர்களைப் போல இயேசுவை முழுமையாகப் பின்பற்றினால்தான் அவ்வதிகாரம் அவர்களுக்கும் உரியதாக இருக்கும்.

இனி அந்த அதிகாரத்தின் பயன்பாட்டைப் பார்ப்போம்.

மனிதரின் பாவங்களை மன்னிக்க ultimate அதிகாரமுடையவர் தேவன் மட்டுமே. அவ்வதிகாரத்தை அவர் இயேசுவுக்கு வழங்கினார் (மத்தேயு 28:18; 9:6); தமக்குக் கொடுக்கப்பட்ட அவ்வதிகாரத்தை தமது சீஷர்களுக்கு இயேசு வழங்கினார் (யோவான் 20:23).

இப்படியாக இயேசுவுக்கும் அவரது சீஷர்களுக்கும் மனிதரின் பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ளபோதிலும், அவர்களுக்கு அதில் ஓர் எல்லையும் உண்டு. அதாவது சில வேளைகளில் அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாத நிலையும் வருவதுண்டு. அம்மாதிரி சந்தர்ப்பங்கள் சீஷர்களுக்கு நேரிடுகையில் அவர்கள் இயேசுவின் வசம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்; அம்மாதிரி சந்தர்ப்பங்கள் இயேசுவுக்கு நேரிடுகையில் அவர் தேவனின் வசம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இதைத்தான் பின்வரும் வசனங்களில் நாம் பார்க்கிறோம்.

லூக்கா 23:34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

அப்போஸ்தலர் 8:20 பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. 21 உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. 22 ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். 23 நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.

மற்றபடி, இயேசுவுக்கும் சரி, அவரது மெய்யான சீஷருக்கும் சரி, மற்றவர்களின் பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என வசனம் சொல்வதை அப்படியே ஏற்கத்தான் வேண்டும்.

தேவன் இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையினால் அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கினார்; இயேசு தமது சீஷரின் மீதுள்ள நம்பிக்கையால் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கினார். தனக்குக் கொடுக்கப்படும் அதிகாரத்தை இயேசு துஷ்பிரயோகம் செய்யமாட்டார் என தேவனும் நம்பினார்; அவ்வாறே தமது சீஷர்களை இயேசுவும் நம்பினார்.

எனவே மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் என்பது தேவனுக்குரிய அதே அளவில் இயேசுவுக்கும் உண்டு; In turn அவரது சீஷர்களுக்கும் உண்டு. ஆகிலும் இயேசுவும் அவரது சீஷர்களும் தாங்களாகவே தங்களுக்குள் ஓர் எல்லையை நியமித்துக்கொண்டனர். அந்த எல்லையின் அடிப்படையில்தான் லூக்கா 23:34 மற்றும் அப். 8:22-ல் அவர்கள் அப்படியாகக் கூறினர்.

எனவே எவனொருவன் (இயேசுவின் 11  சீஷரைப்போல) இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொள்வதாகவும் இயேசுவை முழுக்க முழுக்கப் பின்பற்றுவதாகவும் தன்னைக் கருதுகிறானோ, அவன் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கிற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இயேசுவின் 11 சீஷருக்கு அவன் ஒப்பானவன் என்பதில் அவன் முழுநிச்சயமுள்ளவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதர்களை மட்டுமல்ல தேவதூதர்களையும்கூட நியாயந்தீர்க்கும் அதிகாரம் உண்டு என பின்வரும் வசனங்களில் பவுல் கூறுகிறார்.

1 கொரி. 6:2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? 3 தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?

எனவே யோவான் 20:23-ல் இயேசுவின் சீஷர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது, மற்றவர்களின் பாவங்களை மன்னிக்க தேவனுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம்தான் என நான் கருதுகிறேன்.//

 

சகோ.சந்தோஷின் கருத்துக்களிலும் பல உண்மைகள் உள்ளன. உதாரணமாக, மற்றவர்களின் எல்லா பாவங்களையும் மன்னிக்க நமக்கு அதிகாரம் உள்ளதெனில், பாவத்தை மன்னிக்க இயேசு தேவையில்லை என்றாகிறது. மேலும் கத்தோலிக்க பாதிரிமார்கள் மனிதர்களின் பாவத்தை மன்னித்து பாவமன்னிப்பு சீட்டு வழங்குவதும் சரியே என்றாகிறது.

கத்தோலிக்க பாதிரியார்களாவது, பாவத்தை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்டவர்களுக்கு மட்டுமே பாவமன்னிபு வழங்கினர். நீங்களோ, “ஒருவன் தன் பாவத்தை உணர்ந்தாலும் சரி உணராவிட்டாலும் சரி, அவனது பாவத்தை மன்னித்துவிடுவேன்” என்கிறீர்கள்.

உங்களது இச்செயல் தேவசித்தத்துக்கு உட்பட்டதாக இல்லை. யோவான் 20:23-ல் தமது சீஷர்களுக்கு இயேசு கொடுத்துள்ள அதிகாரம்: வர்கள் இஷ்டம்போல் எல்லாரது/எப்பேற்பட்ட பாவங்களையும் மன்னித்துக்கொள்ளலாம் என்பதற்காக அல்ல.

தமது சீஷர்களின் “நிதானிக்கும் தன்மையை” அவர் நன்கு அறிந்ததால், அவர்கள் தேவசித்தத்திற்கு உட்பட்டுதான் பிறரது பாவங்களை மன்னிப்பார்கள்/மன்னிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில், அந்த அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

அதே அதிகாரத்தை நீங்களும் பயன்படுத்தவேண்டுமெனில், 2 நிபந்தனைகள் உண்டு.

1. இயேசுவின் சீஷர்களைப் போல, இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொள்ளவேண்டும்.

2. தேவசித்தத்துகு உட்பட்டு மட்டுமே பிறரது பாவங்களை மன்னிக்க/மன்னியாதிருக்க வேண்டும்.

உதாரணமாக: அ, ஆ எனும் இருவரில், -வுக்கு விரோதமாக -செய்த தப்பிதத்தை, -மன்னிக்கவில்லையெனில், -வின் பாவங்களை நீங்கள் மன்னிக்கக்கூடாது. ஏனெனில் -வின் பாவங்களை தேவன்கூட மன்னிக்க மாட்டார் என வசனம் சொல்கிறது. பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

மத்தேயு 6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

இவ்வசனத்தில் “மனுஷருடைய தப்பிதங்கள்” என்பது, ஒருவனுக்கு விரோதமாக தனிப்பட்ட முறையில் மற்றவர்கள் செய்கிற தப்பிதங்களையே குறிக்கும். மத்தேயு 6:12-ன் ஒரு விரிவாக்கமாகத்தான் மத்தேயு 6:15-ஐ இயேசு கூறுகிறார். 12-ம் வசனம் தனிப்பட்ட கடன்/அல்லது தப்பிதத்தையே குறிக்கிறது. மத்தேயு 6:15-க்கு இணைவசனமான மத்தேயு 18:35-ஐயும் அதையொட்டிய உவமானத்தையும் படித்து பார்த்தால், மற்றவர்களின் பாவம்/தப்பிதம் என்பது தனிப்பட்ட முறையில் நமக்கு விரோதமாக செய்கிற தப்பிதத்தையே குறிக்கும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

எனவே -வுக்கு விரோதமாக -செய்த தப்பிதத்தை -மன்னிக்கவில்லையெனில், -வின் பாவங்களை பிதா மன்னிக்கமாட்டார். பிதா மன்னிக்க சித்தமில்லாத ஒருவனை நீங்கள் மன்னிப்பது, பிதாவைவிட உங்களைத் தயாளனாகக் காட்டுகிறதல்லவா?

எனவேதான் பிறரை மன்னிக்கிற விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள நிலை, எனக்கு சரியாகப்படவில்லை.

பிறரது எல்லா பாவங்களையும் மன்னிக்கவேண்டுமெனில், முதலாவதாக இயேசுவின் சீஷர்களுக்கு நிகராக உங்களது தனிப்பட்ட வாழ்வு இருக்கவேண்டும். அடுத்து, பிதாவின் சித்தத்துக்கு உட்பட்டுத்தான் பிறரது பாவங்களை நீங்கள் மன்னிக்கவேண்டும்/மன்னியாதிருக்கவேண்டும்.

 __________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//என்னை பொறுத்தவரை ஒரு மனுஷன் பாவம் செய்கிறான் என்றால் அவன் சரீரத்தில் பாவம் வாசமாயிருப்பதாலோ அல்லது அவனுக்குள் புகுந்திருக்கும் அசுத்த ஆவியே அவனை அவ்வாறு செய்ய தூண்டுகிறது. எனவே சாத்தானால் ஒரு கருவியாக பயன்படுத்தபட்ட அவனை மன்னிக்க சித்தமாகிறேன்.//

சாதாரண மனுஷனாகிய நீங்களே மனிதன் சாத்தானின் கருவி மட்டுமே என்பதை அறிந்து, அவனது எல்லா பாவங்களையும் தயவோடு மன்னிக்க முன்வரும்போது, தேவன் ஏன் மனிதனை மன்னிக்காமல் அவனை 2-ம் மரணத்தில் அழிக்க தீர்மானித்தார்?

மனிதன் சாத்தானின் கருவியே என்பதை தேவன் அறிவாரல்லவா? பின்னர் ஏன் மனிதனுக்கு தேவன் ஆக்கினையை நியமித்துள்ளார்?

பாவம் செய்த மனிதனுக்கு ஆக்கினையை நியமித்த தேவனைவிட நீங்கள் தயாளரோ?__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//நாம் பாவி என்று அறிந்திருந்து  கிறிஸ்து நம்முடய எல்லா பாவங்களையும் மன்னித்தார். அதுபோல் பாவி என்று நான் அறிந்திருக்கும் அல்லது அறியாதிருக்கும் எவரையும் கிறிஸ்து போல மன்னிக்க விரும்புகிறேன்.//

1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

நீதிமொழிகள் 28:23 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

தன் பாவங்களை உணர்ந்து அறிக்கையிடுபவனுக்கே பாவமன்னிப்பும் தேவஇரக்கமும் கிடைக்குமென வசனம் கூறுகிறது. ஆனால் நீங்களோ, பாவத்தை உணர்ந்தவன்/உணராதவன் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் மன்னித்து அனைவர்மீதும் இரக்கம் பாராட்டுகிறீர்கள்.

இப்படிச் செய்கிற நீங்கள் “கிறிஸ்துவைப் போல்தான் நானும் செய்கிறேன்” என்றும் சொல்கிறீர்கள். தன் பாவங்களை உணராதவனை கிறிஸ்துவோ/தேவனோ மன்னிக்கவில்லையே! அப்படி அவர்கள் மன்னித்தால் மனிதனுக்கு ஆக்கினை என்பதே இருக்கக்கூடாதே!

கொஞ்சங்கொஞ்சமாக கோவைபெரியான்ஸாரின் கொள்கைக்கு நீங்களும் வந்து கொண்டிருக்கிறீர்கள்.

மற்றவர்களின் பாவங்களை மன்னித்தால்தான் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று சொல்லி, உங்கள் பாவமன்னிப்புக்கு நிபந்தனையைச் சொல்கிறீர்கள். ஆனால் உங்களைத் தவிர மற்ற எல்லோரது பாவங்களையும் நிபந்தனையின்றி கிறிஸ்து மன்னித்துவிடுவார் என்கிறீர்கள். இது எப்படி சரியாகும்? உங்களுக்குள்ள அதே நிபந்தனை எல்லோருக்கும் உண்டல்லவா?__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//நாம் பாவி என்று அறிந்திருந்து  கிறிஸ்து நம்முடய எல்லா பாவங்களையும் மன்னித்தார்.//

//மனுஷர்களின் தப்பிதங்களை நாம் மன்னிக்கவில்லை என்றால் அல்லது ஒரு தப்பிதத்தை மன்னிக்கவில்லை என்றாலும்  நம் தப்பிதங்கள் மன்னிக்கப்படமாட்டாது.//

உங்களது இவ்விரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இல்லையா?__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே!

மோசேயின் வார்த்தையின்படியே, இஸ்ரவேலரின் அக்கிரமத்தை தேவன் மன்னித்தார் என்பதற்கு ஆதாரமாக பின்வரும் வசனங்களைத் தந்துள்ளீர்கள்.

எண்ணாகமம் 14:19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின் படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள் வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின் படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

20. அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

இவ்வசனங்களின் சரியான கருத்தை நீங்களும் தள அன்பர்களும் புரிந்துகொள்ளத்தக்கதாக, இவ்வசனங்கள் சொல்லப்பட்ட முழு வேதபகுதியையும் தருகிறேன், படியுங்கள்.

எண்ணாகமம் 14:1 அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். 2 இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். 3 நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். 4 பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
5 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்குமுன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள்.
6 தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, 7 இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். 8 கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். 9 கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.
10 அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது. 11 கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? 12 நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.
13 மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே. கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். 15 ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: 16 கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக்கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே. 17 ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, 18 என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. 19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
20 அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன். 21 பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 22 என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், 23 அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். 24 என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 25 அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பிச் சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.
26 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 27 எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன். 28 நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். 29 இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். 30 எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை. 31 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். 32 உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். 33 அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள். 34 நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள். 35 கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.
36 அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, 37 சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். 38 தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.
39 மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள்.

காலேப் மற்றும் யோசுவா தவிர கானானைப் பார்த்துவந்த மற்றவர்கள், “கானான் தேசஜனங்கள் மிகவும் பயங்கரமானவர்கள், அவர்களை நம்மால் வெல்லமுடியாது” என்று சொல்லி ஜனங்களைப் பயமுறுத்தினார்கள்.இதை நம்பிய இஸ்ரவேலர்கள், மீண்டும் எகிப்துக்கே போய்விடலாம் எனச் சொல்லி முறுமுறுத்தனர்.

இக்கட்டான இச்சூழ்நிலையில், இஸ்ரவேலர் மீது கோபமுற்ற தேவன், இஸ்ரவேலரை முழுமையாக அழித்துவிட்டு, மோசேயை ஒரு பெரிய ஜாதியாக்கப்போவதாகக் கூறினார் (வசனம் 12).

அப்போதுதான் மோசே இஸ்ரவேலருக்காக தேவனிடம் மன்றாடினார். அப்படி மன்றாடின அவர், இஸ்ரவேலரின் அழிவுக்காகப் பரிதாபப்படவில்லை (அதாவது, மோசே ஜனங்களை மன்னிக்கவில்லை); இஸ்ரவேலர் அனைவரும் வனாந்தரத்தில் அழிந்துவிட்டால், எகிப்தியர் உட்பட புறஜாதி ஜனங்கள் அதைக் குறித்து தேவனை நிந்திப்பார்களே என்பதுதான் அவரது ஆதங்கமாயிருந்தது (வசனம் 16). எனவேதான் தேவன் அப்படிச் செய்யாதபடிக்கு, அதாவது ஒரே மனிதனைக் கொல்வதுபோல் ஒட்டுமொத்த இஸ்ரவேலரையும் உடனடியாக அழிக்காதபடிக்கு (வசனம் 15), தேவனிடம் மன்றாடினார்.

அவரது மன்றாட்டில், தேவனின் மன்னிக்கும் சுபாவத்தைச் சொல்லி, கூடவே தேவனின் தண்டிக்கும் சுபாவத்தையும் சொல்லி வேண்டுவதைப் படியுங்கள்.

ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, 18 என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. 19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

ஒரு மனிதனைக் கொல்வதுபோல இஸ்ரவேலைக் கொல்லாதபடி அவர்களை மன்னிக்கவேண்டும் என வேண்டின மோசே, கூடவே அவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல் தண்டிக்கவும் வேண்டும் என்று சொல்லித்தான் வேண்டினார்.

மேலும், இஸ்ரவேலரை ஏற்கனவே பலமுறை இவ்விதம் மன்னித்துள்ளதைச் சொல்லி, அதேவிதமாக மன்னிக்கும்படியே மோசே வேண்டினார். எனவே மோசேயின் வேண்டுதல் தேவசித்தத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. எனவேதான் மோசேயின் வார்த்தையின்படியே, முழு இஸ்ரவேலரையும் உடனடியாக அழிக்காத அளவிற்கு அவர்களின் அக்கிரமத்தை மன்னித்து, கூடவே அவர்களைக் குற்றமற்றவர்களாக விடாதபடிக்கு, அவர்களுக்கான ஆக்கினையையும் தேவன் அறிவித்தார்.

இதிலிருந்து நாம் அறிவதென்ன? மோசேயும் சரி, தேவனும் சரி, இஸ்ரவேலர்மீதுள்ள இரக்கத்தால் அவர்களை மன்னிக்க நினைக்கவில்லை. புறஜாதியினர் முன்பாக தேவநாமம் தூஷிக்கப்படும் என்பதற்காகவே இஸ்ரவேலரின் அக்கிரமத்தை சற்றுப் பொறுத்துக்கொண்டனர்.

ஆகிலும் காலேப் மற்றும் யோசுவா தவிர மற்றெல்லாரும் தங்கள் அக்கிரமத்திற்கான பலனைப் பெறும்படி, அவர்கள் அனைவரையும் 40 வருஷம் வனாந்தரத்தில் அலையவிட்டு, அவர்களில் ஒருவரும் கானானை சுதந்தரிக்கவிடாதபடி தேவன் செய்தார்.

எனவே இஸ்ரவேலரின் மீது பரிதாபங்கொண்டு அவர்களைத் தப்புவிக்கும்படி மோசே வேண்டவுமில்லை; இஸ்ரவேலர் மீது பரிதாபங்கொண்டு தேவன் அவர்களை உடனடியாக அழிக்காமல் இருக்கவுமில்லை.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


anbu57 wrote:
சுந்தர்://என்னை பொறுத்தவரை ஒரு மனுஷன் பாவம் செய்கிறான் என்றால் அவன் சரீரத்தில் பாவம் வாசமாயிருப்பதாலோ அல்லது அவனுக்குள் புகுந்திருக்கும் அசுத்த ஆவியே அவனை அவ்வாறு செய்ய தூண்டுகிறது. எனவே சாத்தானால் ஒரு கருவியாக பயன்படுத்தபட்ட அவனை மன்னிக்க சித்தமாகிறேன்.//

சாதாரண மனுஷனாகிய நீங்களே மனிதன் சாத்தானின் கருவி மட்டுமே என்பதை அறிந்து, அவனது எல்லா பாவங்களையும் தயவோடு மன்னிக்க முன்வரும்போது, தேவன் ஏன் மனிதனை மன்னிக்காமல் அவனை 2-ம் மரணத்தில் அழிக்க தீர்மானித்தார்?

மனிதன் சாத்தானின் கருவியே என்பதை தேவன் அறிவாரல்லவா? பின்னர் ஏன் மனிதனுக்கு தேவன் ஆக்கினையை நியமித்துள்ளார்?

பாவம் செய்த மனிதனுக்கு ஆக்கினையை நியமித்த தேவனைவிட நீங்கள் தயாளரோ?


சகோதரர் அவர்களே!  மனுஷர்கள் சாத்தானால் தூண்டப்பட்டு பாவம் செய்தாலும் சாத்தான் யாரால் தூண்டப்பட்டு பாவம் செய்தான் என்பதும்  ஆதியில் இருந்து நடந்த அனேக காரியங்களும நமக்கு மறைவாய் இருக்கிறது. உலகம் தோன்று வதற்கு  முன்னரே  பலரை தேவன் முன் குறித்திருக்கிறார். அதற்க்கு நீதியான  காரணம் எதவது நிச்சயம் இருக்கும். சிலரை குறித்திருக்கிறார் என்றால் சிலரை குறிக்காமல் அழிவுக்கு நியமித்திருக்கலாம். அதுகுறித்த  உண்மை எனக்கு தெரியாது. யார் முன்குறிக்கபட்ட்வர்கள் யார் முன்குறிக்கபடாதவர்கள் என்பதெல்லாம் தேவனுக்கே தெரியும்தேவன் முன்குறித்த ஒருவரை  நான் மன்னிக்காமல் இருந்து தேவனுக்கு விரோதமாக செயல்பட முடியாது. எனவே எல்லோரையும் மன்னிக்கிறேன்.  

இங்கு நான் ஒரு பொருட்டே அல்ல.  என்னிடம் தேவன் எதிர் பார்ப்பது  "உன்னைநீ நேசிப்பதுபோல பிறரை நேசி" என்பதுதான்.  

எந்த தகுதியும் இல்லாத கடுமையான பாவங்கள் செய்த என்னை தேவன் மன்னித்து  நித்தியஜீவனுக்கு நியமித்தால். அதேஜீவனை பிறருக்கும் கொடுக்கும்படி என்னைபோல அவர்களையும்  எண்ணி அவர்களுக்கு மன்னிக்கிறேன். அவவளவே! நான் மன்னித்துவிட்டதால் தேவனும் மன்னித்தே ஆகவேண்டும் என்று நான் சொல்லமுடியாது. என் விண்ணப்பம் என்பது ஒன்றும் தெரியாத  ஒரு பேதையின் விண்ணப்பமககூட தேவனுக்கு தெரியலாம்.     

(கொலை குற்றவாளி என்று தீர்மானம்ஆகி தூக்கு நியமிக்கப் பட்டாலும் அவனுக்கு ஒரு கருணை மனு அனுப்பவது இல்லையா?

 நீதிமொழிகள் இவ்வாறு சொல்கிறதே  

நீதி 24:11 மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப் போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.)

மற்றபடி, அதில் யார் தகுதியுள்ளவர்கள், யார் தகுதியில்லாதவர்கள்  யாரை கட்டாயம் அழித்தே ஆகவேண்டும் யாரை மன்னிக்க வேண்டும்  என்பதெல்லாம் தேவன் அறிவார், அதுபடி அவர் செய்வார். போதிய உண்மைகளை  அறியாத  நான் அதில் எதுவும் கருத்து கூறமுடியாது.  

இதில் தேவனுக்குமேலான தயாளன் என்றெல்லாம் சொல்வதற்கு எதுவும் இல்லை. நான் பிறரை மன்னிப்பதுகூட அவருடைய தயவால்தான். இரக்கம் என்பது தேவனின் பிரதான குணம். அவர் எனக்கு ஒரு  நல்ல இரக்கமுள்ள  இருதயத்தை கொடுக்கா விட்டால் என்னால் ஒருவரைக்கூட மன்னிக்க முடியாதுஎனவே நான் மன்னித்தாலும் அது தேவனின் தயாள குணத்தைதான் காட்டுமேயன்றி  நான் அங்கு ஒன்றுமில்லை.  -- Edited by SUNDAR on Wednesday 16th of November 2011 04:03:24 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


anbu57 wrote:

 இப்படிச் செய்கிற நீங்கள் “கிறிஸ்துவைப் போல்தான் நானும் செய்கிறேன்” என்றும் சொல்கிறீர்கள். தன் பாவங்களை உணராதவனை கிறிஸ்துவோ/தேவனோ மன்னிக்கவில்லையே


இயேசு பாவங்களை எவ்வாறு மன்னித்தார் என்பதை நாம்  விபச்சார ஸ்திரி பற்றிய ஒரே ஒரு சம்பவத்தை வைத்து பார்க்கலாம். 

விபச்சாரத்தில் பிடிபட்ட அந்த ஸ்திரியை  அநேகர் சேர்ந்து  கல்லெறிந்து கொல்வதற்கு தயாராக இருந்தார்கள். (நியாய பிரமாணத்தில் தேவன் சொன்ன  வசனத்தின் அடிப்படையில்தான்).  அவள் சாவில் விளிம்பில்  இருந்தாள். அந்த சம்பவந்த்தை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:  

3. அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.

6. அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்
.

இங்கு எந்த இடத்திலும் அந்த ஸ்திரி தான் பாவத்தை உணர்ந்ததாகவோ அல்லது இயேசுவிடம் மன்னிப்பு கேட்டதாகவோ எந்த ஒரு வசனமும் இல்லை. ஆகிவும் இயேசு அவளை தயவோடு மன்னிக்கிறார்.  

11. அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

அவ்வாறு, ஆண்டவராகிய இயேசு அவளை ஆக்கினைக்குபடுத்த  மனதில்லாமல்  முதலில்  மன்னித்துவிட்டு  பின்னர் "இனி பாவம் செய்யாதே" என்று சொல்கிறார்.

நான் சொல்லும்  மன்னிப்பும் அது  போன்றதே.  

இன்றும் அநேகர் துன்மார்க்கனை அழித்துவிட வேண்டும் என்றோ நித்திய வாதைக்குள் தள்ளிவிட வேண்டும் என்றோ (வசனத்தின் அடிப்படையில்தான்) அநேகர் மும்முரமாக இருக்கிறார்கள். சாவின் விளிம்பில் நிற்கும் அவர்களை முற்றிலும் மன்னித்து விடுவிக்க எனக்கு அதிகாரம் இல்லை. ஆனாலும் நான் அவர்களை  மன்னித்து  தேவனும் மன்னிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். கர்த்தர்  தம்முடைய  பார்வைக்கு நலமானதை செய்வாராக!

      


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Bro" ANBU wrote:

/////மற்றவர்களின் பாவங்களை மன்னித்தால்தான் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று சொல்லி, உங்கள் பாவமன்னிப்புக்கு நிபந்தனையைச் சொல்கிறீர்கள். ஆனால் உங்களைத் தவிர மற்ற எல்லோரது பாவங்களையும் நிபந்தனையின்றி கிறிஸ்து மன்னித்துவிடுவார் என்கிறீர்கள். இது எப்படி சரியாகும்? உங்களுக்குள்ள அதே நிபந்தனை எல்லோருக்கும் உண்டல்லவா?////

சகோதரர் அவர்களே தேவனையும் அவர் வார்த்தைகளையும்  அறிந்தவர்களாகிய நாம்  செய்யும் பாவத்துக்கும் அதை அறியாத கோடானு கோடி ஜனங்கள்  செய்யும் பாவத்துக்கும்  நிச்சயம் வேறுபாடு உண்டு.  

லூக்கா 12:47 தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்

நானும்
நீங்களும் எஜமானரின் சித்தத்தை அறிந்தவர்கள் எனவே எஜமானரின் சித்தமாகிய பிறரது பாவங்களை மன்னித்து நம்முடய பாவங்கள் மன்னிக்கப்பட தேவனிடம் வேண்டுவது அவசியமாகிறது. ஆனால் இவ்வார்த்தைகளை அறியாமல் பாவம் செய்கிறவர்களோ சில  அடிகளோடு மன்னிப்பை பெரும் வாய்ப்பு இருக்கிறது.  இயேசுவை அறியாத காலத்தில் நான் செய்த எத்தனையோ  பாவங்களுக்கு இயேசுவை ஏற்றுக்கொண்ட மாத்திரத்தில்  மன்னிப்பு கிடைத்துவிட்டதே அதுபோன்றதுதான்.  __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//சகோதரர் அவர்களே!  மனுஷர்கள் சாத்தானால் தூண்டப்பட்டு பாவம் செய்தாலும், சாத்தான் யாரால் தூண்டப்பட்டு பாவம் செய்தான் என்பதும் ஆதியில் இருந்து நடந்த அனேக காரியங்களும் நமக்கு மறைவாய் இருக்கிறது.//

நான் இப்படி நினைக்கவில்லை.

மனுஷர்களின் பாவத்துக்கு முழுக்க முழுக்க சாத்தானின் தூண்டுதல்தான் காரணம் என்பது சரி என்றால், தேவன் மனிதனுக்குக் கொடுத்த ஆக்கினை அநீதி என்றாகிவிடும்.

எனவே மனிதன் சாத்தானின் தூண்டுதலால் அல்ல, தன் சுய இச்சையின் காரணமாகத்தான் பாவம் செய்தான் என்பதே சரி. இதையேதான் வேதாகமமும் சொல்கிறது.

யாக்கோபு 1:14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

எப்படி மனிதன் தன் சுய இச்சையினால் பாவம் செய்கிறானோ, அதேவிதமாகத்தான் சாத்தானும் தன் சுய இச்சையினால் பாவம் செய்தான். இதில் ஒளிவு/மறைவு எதுவுமில்லை.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//உலகம் தோன்று வதற்கு  முன்னரே  பலரை தேவன் முன் குறித்திருக்கிறார். அதற்க்கு நீதியான  காரணம் எதவது நிச்சயம் இருக்கும். சிலரை குறித்திருக்கிறார் என்றால் சிலரை குறிக்காமல் அழிவுக்கு நியமித்திருக்கலாம். அதுகுறித்த  உண்மை எனக்கு தெரியாது. யார் முன்குறிக்கபட்ட்வர்கள் யார் முன்குறிக்கபடாதவர்கள் என்பதெல்லாம் தேவனுக்கே தெரியும்.  தேவன் முன்குறித்த ஒருவரை  நான் மன்னிக்காமல் இருந்து தேவனுக்கு விரோதமாக செயல்பட முடியாது. எனவே எல்லோரையும் மன்னிக்கிறேன்.//

நேரடியாக மூக்கைத் தொடுவதற்குப் பதில், தலையைச் சுற்றி வளைத்து மூக்கைத் தொட முயல்கிறீர்கள்.

பிறரது எந்தெந்த பாவங்களில் மன்னிக்க வேண்டும், மன்னியாதிருக்க வேண்டும் என்பதை வேதாகமம் நேரடியாகக் கூறியிருக்கையில், அதைப் புறம்பே தள்ளிவிட்டு, முன் குறிக்கப்பட்டவர்கள் எனும் சொற்றொடருக்கு உங்கள் மனம்போல் ஒரு வியாக்கியானம் கொடுத்து, அந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் தேவன் இப்படிச் செய்துள்ளார் எனத் தீர்மானித்து, அவரைப்போல் நானும் செய்வேன் என்கிறீர்கள். இனி நான் உங்களிடம் சொல்வது எதுவும் உங்களிடம் எடுபடப்போவதில்லை.

கொடுக்கப்பட்ட நேரடியான வசனத்துக்குக் கீழ்ப்படிவதை விட்டுவிட்டு, உங்கள் தனிப்பட்ட கொள்கைக்கு ஏற்ப வசனங்களுக்கு வியாக்கியானம் கொடுத்து, நான் இப்படித்தான் செய்வேன் என்றால், அது உங்களது விருப்பம்; இது சம்பந்தமாக நான் என்ன விவாதம் செய்தாலும் அதை நீங்கள் ஏற்கப்போவதில்லை.

//என்னிடம் தேவன் எதிர் பார்ப்பது  "உன்னை நீ நேசிப்பதுபோல பிறரை நேசி" என்பதுதான்.//

மற்றவர்கள் என்ன பாவம் செய்தாலும் அதை நீங்கள் மன்னிப்பதுதான் பிறரை நேசிப்பதாகும் என்கிறீர்கள். அப்படியானால், “நீங்கள் செய்கிற எல்லா பாவங்களையும் மற்றவர்கள் மன்னிக்க வேண்டும்” என எதிர்பார்க்கிறீர்களா?__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//எந்த தகுதியும் இல்லாத கடுமையான பாவங்கள் செய்த என்னை தேவன் மன்னித்து  நித்தியஜீவனுக்கு நியமித்தால். அதேஜீவனை பிறருக்கும் கொடுக்கும்படி என்னைபோல அவர்களையும்  எண்ணி அவர்களுக்கு மன்னிக்கிறேன்.//

எந்த தகுதியும் இல்லாத கடுமையான பாவங்கள் செய்த உங்களை மன்னித்து நித்தியஜீவனுக்கு நியமித்த தேவன், அதேவிதமாக மற்றவர்களையும் மன்னித்து நித்தியஜீவனுக்கு நியமிப்பாரவல்லவா? இடையில், நீங்கள் ஏன் மற்றவர்களை மன்னிக்கவேண்டும்?

உங்கள் கூற்றில் சற்றும் logic இல்லை. நீங்கள் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்காவிட்டால், தேவன் அவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கமாட்டார் என்பதாக உங்கள் கூற்று உள்ளது. இக்கூற்று, உங்களை நீங்கள் தேவனுக்கு/இயேசுவுக்கு சமமாக உயர்த்துவதாக உள்ளது.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//நான் மன்னித்துவிட்டதால் தேவனும் மன்னித்தே ஆகவேண்டும் என்று நான் சொல்லமுடியாது.//

எந்தத் தகுதியும் இல்லாத கடுமையான பாவம்செய்த உங்களை தேவன் மன்னிக்கும்போது, அதேவிதமாக மற்றவர்களையும் மன்னிப்பார் என்ற நிச்சயம் உங்களுக்கு ஏன் இல்லை?

மொத்தத்தில் உங்கள் கூற்றுக்களெல்லாம் ஒன்றுக்கொன்று முரணாகவும் குழப்பத்தைத் தருவதாகவும் உள்ளன.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//மற்றபடி, அதில் யார் தகுதியுள்ளவர்கள், யார் தகுதியில்லாதவர்கள்  யாரை கட்டாயம் அழித்தே ஆகவேண்டும் யாரை மன்னிக்க வேண்டும்  என்பதெல்லாம் தேவன் அறிவார், அதுபடி அவர் செய்வார். போதிய உண்மைகளை  அறியாத  நான் அதில் எதுவும் கருத்து கூறமுடியாது.//

ஆனால் நீங்கள் மட்டும் எப்பேற்பட்ட கடுமையான பாவங்களைச் செய்தாலும், உங்களை தேவன் மன்னிப்பார் என்ற நிச்சயம் உண்டு, மன்னித்து நித்திய ஜீவனுக்கு நியமிப்பார் என்ற நிச்சயமும் உண்டு. இது எப்படி சாத்தியமானது சகோதரரே? சற்று விளக்குவீர்களா?

உங்களை தேவன் மன்னித்து நித்தியஜீவனுக்கு நியமித்ததைப்போல, மற்றவர்களையும் தேவன் மன்னித்து நித்தியஜீவனுக்கு நியமிப்பார் என்பதில் உங்களுக்கு ஏன் நிச்சயம் இல்லை?

ஒருவேளை நீங்கள் இப்படிச் சொல்லலாம் ....

நான் இயேசுவை ஏற்றுக்கொண்டு, பாவமன்னிப்பு கேட்டேன்; எனவே அவர் என்னை மன்னித்து நித்தியஜீவனுக்கு நியமித்தார்” என.

அப்படியானால் மற்றவர்களையும் இயேசுவை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்குத்தானே நீங்கள் முயலவேண்டும்? மற்றவர்களும் தங்கள் பாவமன்னிப்புக்காக இயேசுவை நாட அல்லவா நீங்கள் போதிக்க வேண்டும்? அதைவிடுத்து, நான் அவர்களின் பாவங்களை மன்னிப்பேன், அவர்கள் நித்தியஜீவனைப் பெற வாய்ப்புண்டாகிவிடும் என்பது சரியா?__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 4 57  >  Last»  | Page of 7  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard