இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


anbu57 wrote:
இத்திரியை துவக்கியவர் சுந்தர். மனிதர்களின் சரீரப்பிரகாரமான வேதனை சம்பந்தமாக அவரது கருத்தை வைத்தார். அக்கருத்துக்கு எதிராக நான் எனது விவாதத்தை வைத்தேன். இடையில் நீங்கள் புகுந்து, மனிதர்களின் பாவம் சம்பந்தமாக விவாதத்தை திசைதிருப்பி விட்டீர்கள்.

அப்படியே விவாதம் சென்று கொண்டிருக்கையில், மனிதர்களின் எல்லா பாவங்களையும் நாம் மன்னிக்க வேண்டும் என்ற கருத்தை சுந்தர் சொன்னதால், மீண்டும் விவாதம் திசை திரும்பியது. மனிதர்களின் எல்லா பாவங்களையும் நாம் மன்னிக்கவேண்டும் என்பதோடு, தேவனும் அவர்களை மன்னிக்கும்படி ஜெபிக்கவேண்டும் எனச் சொல்லி, ஜெபித்தல் சம்பந்தமாகவும் விவாதத்தை திசை திருப்பி விட்டார் சுந்தர்.

இப்படியாக நீங்கள் இருவரும் விவாதத்தை திசை திருப்பி, விவாதத்தின் ஒழுங்கை குலைத்துப்போட்டுவிட்டு, நான் ஒழுங்காக விவாதம் செய்யவில்லை என்கிறீர்கள்.


 ஐயா, கொஞ்ச வயதுள்ள எனக்கே இந்த மானிட்டரை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் தலை வலிக்கிறது, எதையும் முழுமையாக படிக்கமுடியவில்லை, எப்படியோ மனதில் மாறாத விசுவாசம் இருப்பதால் அதுகுறித்து மட்டுமே யோசித்து எதையோ எழுதுகிறேன்.

ஆனால் நீங்களோ இத்தனை நேர்த்தியாக வாதத்தை நடத்துவதுடன் வரிக்கு வரி வாசித்து கிரகித்து நாகரீகமான முறையில் விமர்சிக்கிறீர்கள், உங்களிடம் என்னைப் போன்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன்.

வாதத்தின் போக்கு திசை திரும்பியதை மிக அழகாக சுட்டிக்காட்டியதற்கு நன்றி, ஐயா. நான் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் என்னை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.HMV:

//நான் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் என்னை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.//

//இருவரில் ஐயா அன்பு அவர்களிடமே விஷயம் அதிகம்; சுந்தரிடமோ விஷம் அதிகம்.//

இம்மாதிரி விமர்சனம் வேண்டாம் சகோதரரே!

சுந்தரின் நோக்கங்கள் மேன்மையானது என்பதை நான் அறிவேன். அவரது பலகீனங்களை தற்போது இங்கு சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை. அவரும் நானும் இணைந்து கோவை பெரியன்ஸ் தளத்தில் நீண்ட நாட்களாக பங்களித்ததை என்னால் மறக்க இயலாது. நானும் அவரும் பெரும்பாலான விஷயங்களில் ஒத்த கருத்துடையவர்களாகத்தான் இருந்தோம். உண்மையில் அவருடனான இணைப்பு, எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.

ஆனால் எப்போது பாதளத்தில் வேதனை, மறுபிறவி, வெளிப்பாடு, பிற மத தெய்வங்கள் மற்றும் வெற்றியாளன் பற்றி பேசத் தொடங்கினாரோ அப்போதுதான் அவருடனான உறவில் தொய்வு உண்டானது.

ஆகிலும் அவரது நோக்கங்கள் மேன்மையானது என்பதில் எனக்குள்ள நம்பிக்கையை நான் இன்னமும் இழக்கவில்லை.

விவாத மேடைகளில் தனிப்பட்டவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசவேண்டிய அவசியமில்லை என நான் கருதுகிறேன். அதிலும் ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பேசுவது இருவருக்குமே சங்கோஜத்தைத்தான் தரும். எனவே இம்மாதிரியான விமர்சனங்களை இனிமேல் தவிர்க்கும்படி வேண்டுகிறேன்.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

Hmv Wrote :
________________________________________________________________________________________
எட்வின் உங்களுக்கு ஒரு வார்த்தை: நீங்கள் ஐயா அன்பு அவர்களைவிட நீங்கள் புத்திசாலியாக இருந்திருந்தால் முதலில் உங்களுடைய எழுத்துக்களில் பணிவும் தாழ்மையும் இருந்திருக்கும். அது இல்லாத உங்களிடம் எதுவுமே இருக்காது என்று நம்புகிறேன்
_____________________________________________________________________________________________________________
 
 
சகோ : anbu   அவர்களே நான் உண்மையாகவே நான் உங்கள் மனம் புண்படும்படி   எழுதவில்லை 
அதுவும் சகோ : அன்பு போன்றவர்களை அலட்சியமும் நான் படுத்தவே  மாட்டேன்  என்று உண்மையாக சொல்கின்றேன்
யார் மனதையுன் புண் படுத்த கூடாது என்பது தான் என் நோக்கமாகும்
 

ஆனால்  வேதத்தை குறித்து வாக்குவாதம் வந்ததினால் அதை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வைராக்கியமாக எழுதினேனே தவிர என் பெருந்தன்மைக்கோ சகோ : அன்புவை அலட்சியபடுதுவத்ர்க்கோ அல்ல

 
 
ஏற்கனவோ நான் இரண்டு மூன்று நபர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கின்றேன் என் வார்த்தை கடினமாய் இருக்கின்றது
என்று உண்மையாக சொல்கின்றேன் நான் ஆட்களை பார்த்து எழுதவில்லை அவர்கள் எழுத்தை பார்த்து தான் எழுதினேன்
இருந்தாலுன் என் வார்த்தைகள் யார் மனமும் புண்படும் படியாக இருந்துயிருந்தால் இப்பொழுதே உங்களிடத்தில்
மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்
 
 
திரும்பவும் சொல்கின்றேன் நான் ஆட்களை மனதில் வைத்து கொண்டு இங்கு பதிவுகளை தரவில்லை
அவர்கள் எழுதும் வார்த்தைகளை வைத்து தான் நான் இங்கு பதிவுகளை இடுகின்றேன்
 

சகோ : அன்பு அவர்களே  இந்த தளத்தில் எனக்கு பிடித்த 3  நபர் நீங்கள்  தான் (சுந்தர், சந்தோஷ்,அன்பு)

 

இப்பொழுதும் சொல்கின்றேன் உங்கள் வார்த்தை மீது தான் எனக்கு வருத்தமே தவிர உங்கள் மீது அல்ல

நாம் எல்லோரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்பதே என் ஆழ்ந்த எண்ணமும் என் ஆசையுமாய் இருக்கின்றது__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!

இந்த தலைப்பில் ஆரம்பித்த விவாதமானது பல்வேறு கோணங்களில் பயணித்துள்ளது.

சகோ: சுந்தர் எழுதிய வரிகளில் உள்ள நோக்கமானது அவர்கள் வேதனையில் உள்ளபோது நாம் அதை காண நேர்ந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே
என்று ஒரு ஆதங்கத்தினால் எழுந்த வரிகளே என்று எனக்கு என்ன தோனுகிறது.

அவருடைய மனதில் தோன்றிய விதமானது அவர்களுக்காக இரக்கபட்டு தேவனிடத்தில் அவர்களுக்காக வேண்டி கொள்ளுகிறார் அதோடு என்னால் எதாகிலும் செய்யா முடிந்தால் அவர்களுக்காக
வேதனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று அவர் நினைபதைபோல்தான் எனக்கு தோன்றுகிறது.

சகோ : அன்பு அவர்கள் அவருடைய பார்வையில் மனிதர்கள் தான் அவர்களுடைய எல்லா பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லி விவாதத்தை துவக்கி உள்ளார்....

என்னுடைய் கருத்து என்னவெனில் தவறுக்கு காரணம் மனிதனோ...அல்லது சாத்தானோ யார இருந்தாலும் கடையிசில் வேதனையை அனுபவிப்பது மனிதன்தானே...

ஒரு சகமனிதன் வேதனையில் இருக்கும்போது இரக்கபடுவது இயல்புதானே.....

அதற்கு காரணம் அவனாகவே இருந்தாலும் அவனுக்காக வேண்டிகொள்வது நம்கடமை அல்லவே அவனுக்கு இரக்கம் கிடைக்கிறதோ இல்லையோ
அது நம்முடைய கரத்தில் இல்லை தேவனே முடிவு செய்கிறவர்....

ஒருவேளை தேவன் நம்முடைய கிரியைகள் சரி இல்லை நாம் திருந்தவே மாட்டோம் என்று எண்ணி தம்முடைய குமரனை அனுபாதிருந்தால்
நாம் இப்படி இரக்கம் பெற்று இருக்க முடியுமா....

அவர் நமக்கு இரங்கி இருக்க நாமும் மற்றவர்களுக்கு இரங்குவதுதானே நியாயம்.....

நம்முடைய கிறிஸ்துவ மார்கத்துக்கு அடிப்படையே அன்புதானே.....

எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கிறேன்...

என் சகோ: அந்த சூழ்நிலையில் இருந்தால் அவன் எப்படிபட்டவனை இருந்தாலும் கட்டாயம் என்
மனம் அவனுக்காக அழத்தான் செய்யும் அவன் தவறுக்கு யார்காரணம் என்றெல்லாம் நான் யோசித்து இருக்க மாட்டேன்.

அவனுக்காக தேவனிடத்தில் வேண்டி கொள்ளத்தான் செய்வேன்...

ஏனென்றால் நான் தேவனுடைய இரக்கத்தை பெற்ற ஒரு சாதரணமான மனிதன். நான் பெற்ற இரக்கத்தை அவனிடத்தில் காட்டுகிறேன். அவ்வளவே.... -- Edited by Stephen on Wednesday 23rd of November 2011 12:24:13 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


சகோ.ஸ்டீபன்:

//சகோ: சுந்தர் எழுதிய வரிகளில் உள்ள நோக்கமானது அவர்கள் வேதனையில் உள்ளபோது நாம் அதை காண நேர்ந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே
என்று ஒரு ஆதங்கத்தினால் எழுந்த வரிகளே என்று எனக்கு என்ன தோனுகிறது.//

அன்பான சகோதரரே! விவாதத்தில் ஒருவர் கூறும் கருத்தை நாம் சரியாக relay செய்யாததால்தான், அதிக வார்த்தைகளில் பதிவு தரவேண்டியதாயுள்ளது. அது சகோ.எட்வின் போன்ற சிலருக்கு சலிப்பைத் தந்துவிடுகிறது. சுந்தர் தனது முதல் பதிவில் என்ன எழுதியுள்ளார் என்பதைத் தருகிறேன், படியுங்கள்.

//தேவனால் படைக்கபட்ட மனுஷர்களை கொடூரமான துன்பத்துக்குள் கொண்டு சென்று அதன்மூலம் தன்னை ஆகாதவன் என்று தள்ளிய தேவனுக்கு மன வேதனையை உண்டாக்க வேண்டும் என்பதே சாத்தனின் நோக்கம். அவன் பிடியில் கீழ் இருக்கும் ஜனங்களை அவன் எப்படி வேண்டுமானாலும் துன்புருத்த்தி சித்திரவதை செய்து கொல்கிறான்.  அதை பார்த்து தேவன் ஒவ்வொருநாளும் பரிதபிக்கிறார்.
 
எரேமியா 14:17 என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
 
சாத்தானின் இந்த கொடூர ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதே தேவனின் எதிர்பார்ப்பு!//

ஏதோ சாத்தான்தான் பூகம்பத்தைக் கொண்டுவருகிறான், வெள்ளத்தைக் கொண்டுவருகிறான், ஜனங்களைத் துன்புறுத்தி கொல்கிறான்; அதைத் தடுக்க இயலாமல் தேவன் தவிக்கிறார் என்பதுபோல் சுந்தர் கூறுகிறார். தனது கருத்துக்கு ஆதாரமாக சம்பந்தமில்லாத ஒரு வசனத்தையும் போடுகிறார். அந்த வசனத்திற்கு முந்தின சில வசனங்களைத் தருகிறேன், படியுங்கள்.

எரேமியா 14:11  கர்த்தர் என்னை (எரேமியாவை) நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம். 12 அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.

13 அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.

14 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். 15 ... இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள். 16 அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம் பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

வசனங்களை நன்றாகப் படியுங்கள். ஜனங்களின் அக்கிரமத்தினிமித்தம் தேவன்தான் அவர்களை பட்டயம், பஞ்சம், கொள்ளைநோயால் நிர்மூலமாக்குவேன் என்கிறார். மாத்திரமல்ல, ஜனங்களை அழிவிலிருந்து தப்புவிக்கும்படி அவர்களுக்காக விண்ணப்பம் பண்ண வேண்டாம் என்றும் எரேமியாவிடம் கூறுகிறார்.

ஆனால் தேசத்திலுள்ள கள்ளத்தீர்க்கதரிசிகளோ, ஜனங்களுக்கு சமாதானம் உண்டென்கிற ஆறுதல் வார்த்தைகளையே கூறினர். இதுபோல்தான் சுந்தரின் வார்த்தைகள் ஜனங்களின் அக்கிரமத்தை உணர்த்தாமல், அவர்களை ஆறுதல் செய்வதாக உள்ளது.

என்னதான் கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய் வார்த்தைகளைச் சொல்லி ஆறுதல்படுத்தினாலும், தேவன் அவர்களின் பொல்லாப்பை அவர்கள்மீது வரப்பண்ணுவது நிச்சயம் (வ 16). இப்படியிருக்க நாம் என்ன செய்யவேண்டும்? ஜனங்களின் அக்கிரமத்தை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். அதைச் செய்யாமல், ஏதோ தேவனை மீறி சாத்தான் தான் ஜனங்களுக்குத் துன்பத்தைக் கொண்டுவருவதாகவும், அதைப் பார்த்து ஒன்றும் செய்யமுடியாமல் தேவன் கண்ணீர் விடுவதாகவும் சுந்தர் சொல்கிறார்.

தேவன் கண்ணீர் விடுவதன் காரணம்: ஜனங்கள் அறிவில்லாமல் இப்படிக் கேட்டுப்போகிறார்களே என்பதற்காகத்தான்.

இப்படியாக வசனங்களைப் புரிய வைப்பதற்கு அதிக வசனங்களும் தேவைப்படுகிறது, அதிக வார்த்தைகளும் தேவைப்படுகிறது. ஆனால் அது எட்வின் போன்ற சிலருக்கு வருத்தமாயுள்ளது. நான் மனிதரைப் பிரியப்படுத்துவேனா? தேவனை பிரியப்படுத்துவேனா? தேவனை மட்டுமே பிரியப்படுத்துவேன் (கலாத்தியர் 1:10).

இவ்வுலகில் மனிதர் படுகிற துன்பங்களைப் பார்த்து ஏதோ சுந்தர் மட்டும் தான் பரிதாபப்படுகிறார் என்பதல்ல. அன்புள்ளம் கொண்ட எல்லோருமே பரிதாபப்படத்தான் செய்கின்றனர். பரிதாப்படுகிற எல்லோருமே இம்மாதிரி துன்பங்களைப் போக்க எதுவும் செய்யாத நிலையில்தான் உள்ளனர். ஆனால் நாம் செய்யவேண்டியதென்ன?

துன்பங்கள் நேரிட நாம் எப்படிக் காரணமாயுள்ளோம் என்பதை ஆராய்ந்தறிந்து, அவற்றை நம்மைவிட்டகற்றுவதற்கான முயற்சியை எடுத்துவிட்டு, அதோடுகூட தேவனின் இரக்கத்திற்காக ஜெபிக்கவும் வேண்டும். அதைச் செய்யாமல், “அய்யோ, சாத்தானால் இப்படி நான் துன்பப்பட நேரிடுகிறதே” என்று சொல்லி அங்கலாய்ப்பதாலோ, நம் பிழைகளை உணராமல் தேவனிடம் ஜெபிப்பதாலோ பயன் எதுவுமில்லை என்பதே என வாதம்.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.ஸ்டீபன்:

//சகோ : அன்பு அவர்கள் அவருடைய பார்வையில் மனிதர்கள் தான் அவர்களுடைய எல்லா பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லி விவாதத்தை துவக்கி உள்ளார்....//

எனது விவாதத்தையும் சற்று மாற்றித்தான் relay செய்துள்ளீர்கள் சகோதரரே!

மனிதர்களின் எல்லா பிரச்சனைக்கும் அவர்கள்தான் காரணம் என நான் எழுதவில்லை. மனிதர்களின் பல துன்பங்களுக்கு அவர்களே காரணம் என்றுதான் எழுதியிருந்தேன். சில துன்பங்களுக்கு சாத்தானும் காரணமாயிருக்கக்கூடும் என்பதற்கு பக்தன் யோபு ஓர் உதாரணமாயுள்ளார். ஆனால் மனிதர்களின் பல துன்பங்களுக்கு/பிரச்சனைகளுக்கு மனிதர்களே காரணம் என்பதுதான் எனது வாதம்.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

ஸ்டீபன்:

//ஒரு சகமனிதன் வேதனையில் இருக்கும்போது இரக்கபடுவது இயல்புதானே.....//

நிச்சயமாக.

//அதற்கு காரணம் அவனாகவே இருந்தாலும் அவனுக்காக வேண்டிக்கொள்வது நம்கடமை அல்லவா//

ஆம், அவனுக்காக வேண்டலாம்தான். ஆனால் அதற்கு முன்னதாக அவனது பிழைகளை அவனுக்கு உணர்த்த வேண்டும். அவன் தன் பிழைகளை உணர்ந்தால் அவனுக்காக வேண்டலாம்தான். ஆனால் அவன் தன் பிழைகளை உணராமல், “நான் இப்படித்தான் செய்வேன்” எனக் கூறினால் அவனுக்காக வேண்டுவதில் அர்த்தமில்லை. வேண்டுமானால், அவனுக்கு தேவன் நல்ல புத்தியைக் கொடுக்கும்படி ஜெபிக்கலாம்.

ஒருவேளை எங்கோ தொலைவில் உள்ள ஒருவர் துன்பத்தில் கிடந்தால், “தேவனே, அவர்களின் துன்பங்களைப் போக்கும்; அவர்களின் துன்பங்களுக்குக் காரணம் அவர்களின் பாவம் என்றால், அவர்கள் தங்கள் பாவங்களை உணரும்படிச் செய்யும்” என ஜெபிக்கலாம். ஆனால், “அவர்களின் துன்பத்துக்கு சாத்தான் தான் காரணம் என்றும் சாத்தானை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தேவன் இருக்கிறார் என்றும்” சுந்தர் நினைப்பது போல் நாம் நினைத்தால், நாம் என்னதான் ஜெபித்தாலும் அதில் பயனில்லை. ஏனெனில், ஜனங்கள் சாத்தானின் பிடியில் இருப்பதாக அல்லவா சுந்தர் கூறுகிறார்? சாத்தானின் பிடியில் இருக்கும் ஜனங்களைக் காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் தேவன், நம் ஜெபத்தைக் கேட்டு என்ன செய்ய முடியும்?__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

anbu57 wrote:
 சாத்தானின் பிடியில் இருக்கும் ஜனங்களைக் காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் தேவன், நம் ஜெபத்தைக் கேட்டு என்ன செய்ய முடியும்?

 அதானே....சரியான கேள்வி..! (சுந்தரின் ?) தேவன் முதலில் தன்னை சாத்தானிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடிவந்து நமக்கு உதவி செய்வதற்காக நாம் ஜெபிக்கலாமா..? எனக்கென்னமோ அன்பு அவர்கள் சொல்வதிலேயே நியாயம் இருப்பதாக தெரிகிறது, சுந்தர் ஏமாற்றுகிறார்..!

அதாவது பூகம்பம் என்பது இறைவனின் கோபமே.ஆனால் அது இயற்கையின் சீற்றம் என்பது உலகத்தாரின் கூற்று, சாத்தானுக்கு இயற்கையின் மீது எந்த அதிகாரமும் இல்லை என்பதே நான் அறிந்த உண்மையாகும். விஞ்ஞானத்தின்படி பூகம்பம் என்பது இயல்பானதொரு நிகழ்வாகும், பூகம்ப ஆபத்துள்ள பகுதியில் மக்கள் வாழ்வதே பேரழிவுக்குக் காரணமாகிறது.

இதையெல்லாம் விட்டுவிட்டு இது முழுக்க முழுக்க சாத்தானின் சதி என்று சுந்தர் போன்றவர்கள் சொல்லுவார்களானால் சாத்தான் என்பவன் இறைவனைக் காட்டிலும் வல்லமையுள்ளவன் என்று ஆகும்.

இது சரியல்ல.__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


anbu57 wrote:

வசனங்களை நன்றாகப் படியுங்கள். ஜனங்களின் அக்கிரமத்தினிமித்தம் தேவன்தான் அவர்களை பட்டயம், பஞ்சம், கொள்ளைநோயால் நிர்மூலமாக்குவேன் என்கிறார். மாத்திரமல்ல, ஜனங்களை அழிவிலிருந்து தப்புவிக்கும்படி அவர்களுக்காக விண்ணப்பம் பண்ண வேண்டாம் என்றும் எரேமியாவிடம் கூறுகிறார்.

 


சகோ. அன்பு அவர்களே. சகோ. ஸ்டீபன் சுர்க்கமாகவும் தெளிவகவும் உண்மையை எழுதிவிட்டார். மேலும் மன கஷ்டங்கள் வராமல் தவிர்க்க நானும் இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என்றுதான் கருத்தின்  ஆனால தங்களின் கருத்தை மீண்டும் வலியிறுத்தி தேவனை ஏதோ அழிவுபிரியர் போல காட்டி  எழுதுவதை என்னால் ஏற்க்க முடிய வில்லை.  தேவனை பற்றியும் ஜெபம் மற்றும்  இரக்கத்தின்  மேன்மையை பற்றியும் சரியாக அறியாத தங்களுக்கு இன்னும் எவ்விதத்தில் நான் புரியவைப்பது என்பது புரியவில்லை. 

"வேதனை துன்பத்தில் வாடும் மனுஷனுக்கு  இரக்கபடாதே, சாத்தானை குறைகூராதே, மனம்திரும்புகிறாயா என்று கேட்டு தான் ஜெபிக்க வேண்டும்  என்பதுபோல் சொல்லும் ஒருவரை  நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன். தன்னை சிலுவையில் அறைந்த ஜனங்களை  நிபந்தனை இன்றி மன்னித்த இயேசுவுக்கும் இதை சொல்லியிருக்கலாம்.

மனுஷன் பாவம் செய்வதால் தேவன் தேசத்தையும் ஜனங்களையும்  அழிக்கிறார் என்பது உண்மைதான் ஆனால் அவர் விரும்பியோ அல்லது  அதை  கண்டிப்பாக செய்தே ஆகவேணும் என்றோ  செய்ய வில்லை. அப்படி செய்வாராகில் கீழ்கண்டவசனத்தை அவர் கூறியிருக்க மாட்டார்.     
 
எசேக்கியேல் 22:30 நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
 

தேசத்தை அழிப்பேன் என்று சொல்லும் அவரே அழிக்காதபடி  திறப்பில் நின்று ஜெபிக்கும் மனுஷர்கள் இல்லை என்று அக்கலாய்கிறார். இதிலிருந்து தேவனின் இருதய நிலை தங்களுக்கு புரியவில்லையா?
 
வைரஸ் கிருமியால் காற்றில் பரவும் ஒரு கொடிய தோற்று நோய்  வந்தவர்களை உடனே கொன்றுவிட வேண்டும் என்று  என்றொரு  நியமணம் வந்தால், அந்த நோய் அடுத்தவரையும்  பாதித்துவிட கூடாது
என்றநோக்கிலேயே அவர்கள் கொல்லப்படுவார்களேயன்றி ஆசையோடு யாரும் அவர்களை  கொல்லுவது இல்லை.
 
"பாவம்" என்பது சாத்தானால் பரவும் மரணத்தை கொண்டு வரும்  ஒரு மிக கொடிய தொற்றுநோய்! அது ஒருவரை பீடித்தால் அவர் கொல்லப் படவேண்டும் இல்லையேல் அதுஇன்னும் அநேகரை பீடித்து அநேகரை மரணத்துக்கு நேராக நடத்திவிடும்.  எனவே இரக்கமுள்ள தேவன் வேறு வழியின்றி அவர்களை கொல்வதோடு அவர்களுக்காக கண்ணீரும் சிந்துகிறார். இங்கும் அந்த கொலைக்கும் சாவுக்கும் காரணம் மனுஷ கொலை பாதகனாகிய சாத்தானேயன்றி தேவன் அல்ல!
 
நோயை பரப்ப்பும் அடிப்படை வைரசை கண்டுபிடித்து ஒளிக்காமல் நாம் எந்தனைபேரை கொன்றாலும் அது அழுகைக்கும் வேதனைக் கும்தான் வழி செய்யுமேயன்றி எந்த ஒரு முடிவும் வராது. அதேபோல் பாவத்தை உலகுக்குள் கொண்டுவந்த மனுஷ கொலைபாதகனாகிய சாத்தானை ஒழித்தால் மட்டுமே இந்த அனைத்து காரியத்துக்கும் முடிவு வருமேயன்றி பாவம் செய்தவனை மாத்திரம் தண்டித்தல் இதற்க்கு ஒருமுடிவை கொண்டுவராது. அதற்காக பாவம் செய்தவனை தேவன் தண்டிக்காமல் விடுவதும் இல்லை.  
  
ஒருமரத்தில் இருக்கும் விஷகாயை பார்த்து இந்த மரத்தின் கிளையை வெட்டிவிட்டால் அதனால்  ஆபத்தில்லைஎன்று தாங்கள் சொல்கிறீர்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை! ஆனால் அது ஒரு முடிவான நிலை அல்ல! அந்த மரத்தை வேரோடு பிடுங்கி போட்டால்தான் அதினால்வரும் ஆபத்து முற்றிலும் நீங்கும் என்று நான் சொல்கிறேன்.
     
கண்ணுக்கு தெரியும் காரியத்தை மேலோட்டமாக மட்டுமே பார்க்கும் தங்களுக்கு அதிலுள்ள அடிப்படை ஆவிக்குரிய உண்மை புரியப் போவது இல்லை. எழுத்தை வைத்து தேவனை அறிய முரப்படாமல் தேவனை அறிந்து அதன்பின்னர் எழுத்தை ஆராய்ந்தால் மட்டுமே உண்மைகள் புரியவரும்!
 
கண்ணீர் என்பது இயலாதவனுக்கு மட்டுமே வரும். காரியங்களை உடனடியாக செய்ய முடிந்தவர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள். அப்படி பாவத்தில் அழியும் ஜனங்களை பாத்து தேவன் கண்ணீர் விடுகிறார் என்றால் பாவத்தி பூமிக்குள் அனுமதித்தது யார்?அப்பொழுதே தேவனுக்கு தெரியாதோ இதுபோன்று தான் கண்ணீர் விடும் நிலை வரும் என்பது?  
 
தேவனால் கூடாதது என்று எதுவும்இல்லை அனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது அதுபோல் சாத்தானின் முடிவுக்கும் ஒரு காலம் இருக்கிறது அதுவரை  சாத்தானின்  செயல்களிநிமித்தமே  தேவன் கண்ணீர் சிந்துகிறார். மற்றபடி தானே அழித்துவிட்டு  தானே கண்ணீர் சிந்திகொண்டு இருக்கவில்லை.
  


-- Edited by SUNDAR on Wednesday 23rd of November 2011 04:36:48 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


சகோதரர் சுந்தர் அவர்களே,

எல்லா துன்ப‌த்துக்கும் கார‌ண‌ம் சாத்தானே என்றும், அவ‌னுக்கு முடிவு க‌ட்ட‌ முடியாத‌தால் தேவ‌ன் துன்ப‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை பார்த்து க‌ண்ணீர் சின்துகிறார் என்கிறீர்க‌ள்.

அவர் க‌ண்ணீர் சின்துவ‌து போல‌வே நாமும் துன்ப‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்காக ப‌ரித‌விக்க வேண்டும் என‌ சொல்கிறீர்க‌ள்.

அத‌ற்கு பிறகு எத‌ற்கு தேவ‌னிட‌ம் நாம் ஜெபிக்க‌ வேண்டும்?அதான் கொண்ச‌ கால‌த்துக்கு தேவ‌னால் எதையும் செய்ய‌ முடியாது என்றும், அதற்கு ஜெயம் கொள்கிறவன் ஒருவன் வர வேண்டும் என சொல்கிறீர்க‌ளே. 

இப்ப‌டி இருக்க‌ தேவ‌னிட‌த்தில் ஜெபித்து ஆக‌ போவ‌து என்ன? இதை கொன்ச‌ம் விள‌க்குவீர்க‌ளா?

இதே திரியில், நான் முன்பு கேட்ட‌ கேள்விக்கும் ப‌தில் சொல்லும்ப‌டி கேட்டு கொள்கிறேன்.__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


anbu57 wrote:

ஸ்டீபன்:

//ஒரு சகமனிதன் வேதனையில் இருக்கும்போது இரக்கபடுவது இயல்புதானே.....//

நிச்சயமாக.

//அதற்கு காரணம் அவனாகவே இருந்தாலும் அவனுக்காக வேண்டிக்கொள்வது நம்கடமை அல்லவா//

ஆம், அவனுக்காக வேண்டலாம்தான். ஆனால் அதற்கு முன்னதாக அவனது பிழைகளை அவனுக்கு உணர்த்த வேண்டும். அவன் தன் பிழைகளை உணர்ந்தால் அவனுக்காக வேண்டலாம்தான். 


இயேசுவின் ஊழியப்பாதையில் நடந்த ஒரு சம்பவம்:

யோவான் 5: 5. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
6. படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்
 
இதுபோன்று எத்தனையோ நோய்களை குணமாக்கி எத்தனையோ அற்ப்புதங்களை ஆண்டவராகிய  இயேசு செய்தார் யாரிடமும்  நீ மனம் திரும்புகிறாயா? என்று கேட்டதாகவோ, உன் பிழைகளை  உணர்ந்தால் தான் உனக்கு குணமாக்குவேன் என்று சொன்னதாகவோ  தெரிய வில்லை.  முதலில் பாதிக்கபட்டவருக்கு  இரக்கபட்டு மனதுருகி குணமாக்கிய பிறகுதான் இனி பாவம் செய்யாதே என்று சில இடங்களில் கூறியிருக்கிறார் ஆகினும் எல்லோருக்கும் அல்ல!   
 
யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்
 
என்று ஆண்டவர் சொல்லியிருப்பதால் நாங்கள்  அவரை பின்பற்றி காரியங்களை செய்கிறோம். தாங்கள் யாரை பின்றி காரியங்களை  சொல்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை சகோதரரே. இயேசு வின் மாதிரியை தவிர வேறு யாரையும் பின்பற்ற நாங்கள் தயாராக இல்லை!
 
 


-- Edited by SUNDAR on Wednesday 23rd of November 2011 08:14:29 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


சகோதரர் சுந்தர் அவர்களே,

//இதுபோன்று எத்தனையோ நோய்களை குணமாக்கி எத்தனையோ அற்ப்புதங்களை ஆண்டவராகிய  இயேசு செய்தார். //

//யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்
 
என்று ஆண்டவர் சொல்லியிருப்பதால் நாங்கள்  அவரை பின்பற்றி காரியங்களை செய்கிறோம்.//

நீங்களும் இயேசு கிருஸ்துவை போல அற்புதங்கள் செய்திருக்கிறீர்களா? அதை பற்றி உங்கள் அனுபவங்களையும் கொன்சம் எழுதுங்கள்.__________________
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

SANDOSH wrote:

சகோதரர் சுந்தர் அவர்களே, நீங்களும் இயேசு கிருஸ்துவை போல அற்புதங்கள் செய்திருக்கிறீர்களா? அதை பற்றி உங்கள் அனுபவங்களையும் கொன்சம் எழுதுங்கள்.


 சந்தோஷ் அவர்களே, நீங்க ரொம்ப பிரச்சினை பண்றீங்க... உங்களுக்கு பதிலளிக்க இங்கு யாருமில்லை....ஸாரி..!__________________
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

// இந்தியாவில் தேவன் பயன்படுத்திய மனிதர்களில் பாலாசீர்லாறி போன்று எவரையும் பயன்படுத்தவில்லை என்று உறுதியாகக் கூறுவேன். சாம்பிளுக்கு ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். இவருடைய கூட்டங்களில் திரளாய் அற்புதம் நடைபெறுவதுண்டு. இவருடைய நிழல் படும் இடங்களில் எல்லாம் அற்புதம் நடந்தது. அதற்காக இவருடைய நிழல் அனேகம் பேர் மீது பட வேண்டும் என்பதற்காக பெரிய விளக்குகள் மூலம் ஏது செய்தனர். ஆனால் இவரின் முடிவு என்ன? திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறினார். பின்பு சிறிது காலத்தில் கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒன்றே என்றார். அதன்பின்பு நானே கலியுகக் கல்கிபகவான் என்று கூறினார். தனக்கு மரணம் கிடையாது என்று கூறினார். சொல்லி சில நாட்களிலேயே மரித்தும் போனார். //

மேற்கண்ட வரிகளை வாசித்தபோது நமக்கு அருமையான நண்பர் சுந்தர் அவர்களின் ஞாபகமே வந்தது;ஒருவேளை அதே ஊர்க்காரர் என்பதால் பாலாசீர் லாறி அவர்களின் பாதிப்பும் இன்னும் அதே ஊரைச் சேர்ந்த யாகவா முனிவரின் பாதிப்பும் சுந்தர் அவர்களிடம் இருக்கிறதோ என்று யோசிக்கிறேன்.

சுந்தர் அவர்களிடம் பேசும் அதே ஆவி மேற்கண்ட மனிதர்களிடமும் பேசியது;அவர்கள் மூலம் அற்புத அதிசயங்களைச் செய்தது. சுந்தர் அவர்களின் தன்னடக்கம் காரணமாக இங்கே இரகசியமாக பணிபுரிகிறார், ஒருவேளை அவருக்கு கோபம் வந்துவிட்டால் அவரும் ஒரு முனிவரே..! biggrin__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


இத்தளத்தின் மற்றொரு திரியில் சகோ.நேசன்:

//நம்மை உருவாகிய நோக்கம் மற்றும் இந்த உலகில் நியதியை முழுமையாக அறிந்த இறைவன், மனிதன் இந்த உலகில் சமாதானமாக துன்பங்களை தவிர்த்து வழவேண்டும் என்ற நோக்கில், பொய் சொல்லாதே, திருடாதே, பிறரை ஏமாற்றாதே, தகாத உறவு வைக்காதே, லஞ்சம் வாங்காதே போன்ற பல்வேறு அட்வைஸ்களை பல்வேறு இறைவேதங்கள் மூலம் கூறியிருக்கிறார்! ஆனால் நாமோ, இவற்றையெல்லாம் கடைபிடித்து ஒரு இன்பமான வாழ்க்கை வாழ்வதைவிட, இறைவனிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்ற ஏக்கத்திலேயே அவரை தேடுகிறோம்!

இறைவனிட்ட கட்டளைகளை சரியாக கடைப்பிடித்து நடந்தால் நமக்குத்தான் நல்லதே தவிர, அவருக்கு எந்த பலனும் கிடைக்கபோவது இல்லை! காசு கொடுத்து கட்டளையை வாங்கி கடைப்பிடிக்கும் மனிதர்கள் இலவசமாக இறைவன் சொன்ன கட்டளைகளை கடைபிடிக்க கவனம் செலுத்துவதில்லை. இதனால் கொடூர நோயிலும், குறையுள்ள வாழ்விலும், குற்றத்தின் பிடியிலும் அகப்பட்டு அல்லோலப்படுகின்றனர்.
//

இத்தளத்தின் மற்றொரு திரியில் சகோ.சுந்தர்:

//அதாவது நம்முள்ளேயே நீதிக்கு எதிராக போரிடும்  பாவபிரமாணம் ஒன்று இருக்கிறது! அது எப்பொழுதும் பாவ சந்தோஷத்தையே தேடும் நிலையில் நம்மை கொண்டு செல்கிறது என்று அறிகிறோம்.

அதே நேரத்தில் சில நிர்கதியான நிலைகளை தவிர, பொதுவான சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட பாவத்தை செய்வதும் அதை  செய்யாமல் தவிர்ப்பதும் நமது சுய தெரிவின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. இக்கருத்தின்  அடிப்படையில் கொடுக்கப்படும் எச்சரிக்கையை ஏற்று மனம்திரும்பாமல் அலட்சியம் பண்ணுகிறவனின்  இரத்த பழிக்கு அவனேதான் பொறுப்பு  என்றும் வேதம் சொல்கிறது.//

மற்றொரு திரியில் சுந்தர்:

//விபரமறியா சிறு குழந்தைகளுக்கு வரும் துன்பத்திற்கு காரணம் அவர்களது பெற்றோரே!//

மற்றுமொரு திரியில் சுந்தர்:

//இந்தத் திரியின் தலைப்பை பொறுத்தவரை "வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்" என்பதாகும். இவ்வுலக வாழ்வை பொறுத்தவரை "பாவம் செய்தவன்" அல்லது தேவனின் வார்த்தைகளை மீறி செயல்படுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் துன்பமடைய நேரிடும் என்பது நடைமுறை  உண்மை!//

இத்திரியில் சுந்தர்:

//தங்கள் போன்றவர்கள் (தேவன் அனுமதித்தால்)  அவரிடம் போய் நின்று  இப்படிபட்டவர்களுக்கு தண்டனைகொடுத்தே தீரவேண்டும் என்று வாதிடலாம். ஆனால் எங்கள் தேவன் தங்களை போன்றவர் அல்ல! அவரிடம் இரக்கங்களும் மன்னிப்பும் உண்டு என்று வேதம் சொல்கிறது.

சங்கீதம் 130:4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
தானியேல் 9:10 ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.

அந்த இரக்கம் மற்றும் மன்னிப்பை நம்பியே நாங்கள் வாழ்கிறோம்.//

மற்றொரு திரியில் சுந்தர்:

//இங்கு அன்புள்ள தேவன் இவ்வாறு அக்கினியில்போட்டு மனுஷர்களை வதைப்பாரா என்ற கேள்வி எழலாம்!  அன்பானே தேவனை  பட்சிக்கும் அக்கினியாகவும் அன்பை கட்டாமல் அடித்து கொல்பவராகவும் கூட வேதம் நமக்கு கட்டுகிறது.//

மற்றுமொரு திரியில் சுந்தர்:

//ஆண்டவர் ஒருவரை பார்த்து "இந்த காரியத்தை நீ எதன் அடிப்படையில் செய்தாய்" என்று கேட்கும்போது "அவன் சொன்னான்" "இவன் சொன்னான்' என்று ஆண்டவரிடம் பதில் சொல்ல முடியாது என்பதை ஒவ்வொருவரும் நிச்சயம் அறிய வேண்டும். ஒரே ஒரு வசனத்தை எடுத்து ஒன்பது விதமான வியாக்கீனம் செய்துகொண்டு, தாங்கள் தாங்கள் செய்கைகளை  மனிதர்கள் நியாயப்படுத்தி வருவதால், ஒரு வசனத்தின் உண்மை தன்மையை ஆண்டவரிடம் உள்ள தொடர்பின் மூலம் மட்டுமே அறியமுடியும். //-- Edited by anbu57 on Friday 25th of November 2011 08:30:11 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  15 6 7 | Page of 7  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard