இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டவர் வருகையின்போது சாத்தானின் பிடியில் சிக்கிக்கொள்ளவேண்டாம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 1998
Date:
ஆண்டவர் வருகையின்போது சாத்தானின் பிடியில் சிக்கிக்கொள்ளவேண்டாம்!
Permalink  
 


கிறிஸ்த்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
 
நம் ஆண்டவராகிய இயேசுவின் வருகை மிக சமீபமாக இருக்கும் கால கட்டங்களில் நாம் வாழ்கிறோம்.  இந்நிலையில் அவர் வரும்போது அவரோடுகூட செல்வதற்கு நாம்  ஒவ்வொருவரும் ஆயத்தமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
 
மிக முக்கியமாக கடன் வாங்கும் விஷயத்தில் நாம்  மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை இங்கு நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். கடன் வாங்குவதிலுள்ள விபரீதம்தெரியாமல் அநேகர் எடுத்தவுடன் யாரிடமாந்து கடன் வாங்கி விடுகின்றனர். அது மிகவும் தவறான ஒரு நிலை.
 
ஆண்டவர் நம்மை அழைத்து செல்ல வரும்போது இந்த உலகத்தில் உள்ள எவருக்காவது நான் கடன்பட்ட நிலையில் இருக்ககூடாது. அப்படி கடன்பட்ட நிலையில் நாம் இருந்தால் அந்த கடன்காரன்
 நம்மை ஆண்டவரோடு போகவிடமாட்டான்.
 
நீதிமொழிகள் 22:7  கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
 
என்று வசனம் சொல்வதால், அந்த கடன்காரனுக்குள் புகுந்துகொள்ளும் சாத்தான், அவனுக்கு இந்த உலகத்தில் கொடுக்கவேண்டிய பாக்கியை கொடுத்துவிட்டுதான் போகவேண்டும் என்று பிடித்து வைத்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
 
எனவே அன்பானவர்களே,
 
ரோமர் 13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்
 
வங்கியில் பணம் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியக்கூடிய DEBIT CARD மட்டுமே பயன்படுத்துவது நல்லது மற்றபடி வங்கிகளுக்கு நம்மை கடன்காரனாக்கும் CREDIT CARD களையோ தனி நபர் கடன் களையோ வாகன கடன்களையோ வாங்காமல் தவிர்ப்பது நல்லது. 
 
கடன் வாங்குவது மட்டுமல்ல முடிந்த அளவு நமது செய்கையாலோ அல்லது நமது  வாய் வார்த்தயாலோகூட பிறருக்கு வாக்கு கொடுத்து சாத்தானிடத்தில் பிடிகொடுத்துவிடாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.  
 
நீதிமொழிகள் 6:2 நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்,
 
அவ்வாறு பிறருக்கு ஏதாவது வாக்குகொடுத்து மாட்டிகொண்டால் நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டு செல்லும்படி சாத்தான் நம்மை  நிர்பந்தபடுத்த  வாய்ப்பிருக்கிறது.
 
சாத்தான் ஒரு ஏமாளியல்ல அவன் தந்திரக்காரன்! அவன் யார்மூலமாக வேண்டுமானாலும் நமக்கு கண்ணியைவைக்கலாம். எனவே ஆண்டவர் வருகைக்காக காத்திருக்கும் நாம் இந்த உலகத்தை குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்! எப்பொழுதும் தேவனோடு தொடர்பு நிலையில் ஆவியில் அனலாய் இருந்தால் மட்டுமே இதுபோன்ற காரியங்களையும் சாத்தானின் கண்ணியையும் நாம் கண்டுணர்ந்து கடத்துசெல்ல  முடியும்!
 
ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்;
  

 -- Edited by SUNDAR on Tuesday 1st of November 2011 09:52:09 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard